போகும் அவனையே தொண்டையடைக்கப் பார்த்தவள் கலங்கிய விழிகளை கட்டுப் படுத்திக்கொண்டு தன் ஸ்கூட்டியில் அலுவலகத்துக்கு கிளம்பி விட்டாள். பேபி பேக்கில் பிள்ளையையும் சுமந்துக் கொண்டு அவள் போக போனவளை வெறித்துப் பார்த்தான் பஞ்சவன்.
பஞ்சவன் அவ்வளவு தூரம் சொல்லியும் திமிரெடுத்துப் போய் போனவளின் மீது கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது... அது அலுவலகத்தில் மகராவின் மீது நன்றாகவே எதிரொலித்தது.
ஊரிலிருந்து வந்த மகரா கொஞ்சம் கூட ஓய்வே எடுக்காமல் அலுவலகம் கிளம்பி வர மனமும் உடலும் அதிக சோர்வு கண்டது. குழந்தைக்கு மட்டும் உணவு தயார் செய்தவள் தன் வயிற்று பாட்டை பார்க்கவே இல்லை.
இன்னைக்கு மிக முக்கியமான மீட்டிங் என்பதால் அதை ஸ்கிப் பண்ணவும் முடியாது. இல்லை என்றால் விடுமுறை கூட எடுத்து இருப்பாள். அதுவும் முடியாமல் போக அரக்க பறக்க பிள்ளையை காப்பகத்தில் விட்டுவிட்டு அலுவலகம் வந்து சேர்ந்தாள். இடையில் ட்ராபிக் வேறு...
மூச்சு திணறிப் போனது அவளுக்கு. தன்னுடைய கேபினில் பொருள்களை எல்லாம் வைத்து விட்டு டேபை கையில் பிடித்துக் கொண்டு மீட்டிங் ஹாலுக்கு வர எப்பொழுதும் போல இவள் தான் தாமதமாக வந்து இருந்தாள்.
கதவை திறந்துக் கொண்டு அவள் உள்ளே நுழைய, அவளை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான் பஞ்சவன். மீட்டிங் வழக்கம் போல ஆரம்பித்து இருந்தது. இவள் மட்டும் தான் தாமதம்.
கூர் விழிகளால் அவளை முறைத்துப் பார்க்க அவனது பார்வையை எதிர்நோக்காமல் தன் இடத்துக்கு சென்று அமர, காலையில் தன்னை அவள் உதாசீனப்படுத்தி விட்டு சென்றது கண் முன் எழ,
“ஹேய் இடியட்... அறிவில்ல... இப்படி தான் திறந்த வீட்டுக்குள்ள ஏதோ மாதிரி வருவியா... பேசிக் சென்ஸ் கூட இல்லையா..?” என்று அவளை திட்டினான்.
முதல் நாள் திட்டிய அதே சொற்களால்... விக்கித்துப் போய் நின்றாள் மகரா.
“உனக்கு ஒவ்வொரு முறையும் சொல்லணுமா? டைமை கீப்பப் பண்ண மாட்டியா? அதெப்படி ரெகுலரா லேட்டா வர்ற... இதென்ன உன் அப்பா வீட்டு கம்பெனியா? உன் இஷ்ட்டத்துக்கு வர்ற..” என்று காய்ச்சு காய்ச்சு என்று பஞ்சவன் காய்ச்ச,
மேனேஜர் தான் உதவிக்கு வந்தார்.
“இந்த ஒரு முறை மட்டும் விட்டுடுங்க சார்.. அந்த பொண்ணு பாவம்.. கைப்பிள்ளையை வச்சுக்கிட்டு தனியா இருக்காங்க” என்று அவர் சொல்ல,
“அதுக்காக இங்க தனி சலுகை எல்லாம் எதிர்பார்க்க கூடாது மிஸ்டர். யாரா இருந்தாலும் ஒரே ரூல்ஸ் தான்.” என்று அவளின் சோர்ந்த முகத்தை பெருமூச்சு விட்டுப் பார்த்தவன்,
“தட்ஸ் ஓகே.. பட் இந்த இந்த நாள் ரொம்ப கவனமா இருக்க சொல்லுங்க. எனக்கு லேட்டா வர்றதோ எல்லாரோட கவனத்தையும் திசை திருப்புறதோ இருக்க கூடாது. இந்த ப்ராஜெக்ட்டு இன்னைக்கு அடுத்த லெவலுக்கு போகப்போகுது. இதை வச்சு தான் நாம டெவலப் பண்ணனும்” என்று அந்த மேனேஜரிடம் சொன்னவனின் பார்வை என்னமோ அவடம் தான் இருந்தது.
“இது வரை செய்து இருந்த உங்க ப்ராஜெக்ட்டை எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க.. வேலையாவது ஒழுங்கா பண்ணி இருக்கங்களான்னு பார்க்கலாம்” என்று வேண்டுமென்றே அவளை வம்பிழுத்தான்.
அது புரிந்தும் அவனை நோக்கமல், நேராக ப்ரோஜெக்டரிடம் சென்று அவள் செய்த வேலைகளை எல்லாம் போட்டு காட்டி எக்ஸ்ப்ளைன் பண்ணினாள்.
“இதெல்லாம் பார்த்தா நீ செய்தது போல இல்லையே...” என்று மேலும் வம்பிழுக்க, கைகளை அழுந்த மூடி திறந்தவள்,
“இல்ல சார் நான் தான் செய்தேன்” என்று அவள் சொல்ல,
“நான் இங்க இருக்கேன்” என்று அவன் சொன்னான். ஏனெனில் அவள் அவனை பார்த்து சொல்லவில்லை. அவளது கண் பார்வை ப்ரோஜெக்ட்டரிலே இருந்தது.
அவனை பார்க்க முடியாமல் தான் அவள் அங்கும் இங்கும் பார்வையை வைத்து இருக்கிறாள். அது தெரிந்தும் அவளை இவன் வம்பிழுக்க அவன் மீது லேசான கோவம் வந்தது.
ஆனாலும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை.
“ஹலோ..” என்று அவன் சொடக்குப் போட்டு அழைக்க, எல்லோரின் முன்னிலையிலும் தேவையில்லாத சீனாக போய் விட வேண்டாம் என்று எண்ணியவள் அவனை நிமிர்ந்துப் பார்த்த்தாள்.
அதற்காகவே காத்து இருந்தவன் போல அவளது பார்வையை மிக வேகமாக கவ்விக் கொண்டான். அதில் அவளின் அடிவயிற்றில் பிரளையம் வெடிக்க கால்களை அழுந்த ஊன்றி தன்னை நிலை நிறுத்திக் கொண்டாள்.
அவள் விழிகளில் இருந்த சிவப்பு அவனை கவலை கொள்ள வைத்தது. இப்பவே அவளை அணைத்து “என்னடி ஆச்சு உனக்கு? என் மகரா இவ இல்லடி... என் மகரா என்னை தவிர்க்கவே மாட்டா... எனக்கு அவ தான் வேண்டும்” என்று அவளிடம் புதைந்துக் கொண்டே அவளிடம் கேட்க எண்ணம் பிறந்தது.
ஆனால் இருக்கும் சூழல் அதை செய்ய விடாமல் பண்ணியது.
ஆனால் அவளை அப்படியே விட்டால் அவன் பஞ்சவன் இல்லையே...
கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து எடுத்தான். எல்லாவற்றிற்கும் பதில் சொன்னவளுக்கு மயக்கம் வருவது போல இருக்க, அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு அவளிடம் ஏற்படும் மாற்றங்கள் அப்பட்டமாய் தெரிய,
“மகரா” என்று அவளிடம் இவன் நெருங்கும் பொழுதே அவள் வேரிழந்த மரமாய் கீழே சரிய ஆரம்பித்தாள். இரண்டே எட்டில் அவளை இடையோடு தாங்கிப் பிடித்தவன் அவளை தன் நாற்காலியில் அமரவைத்து,
“டூ மினிட்ஸ் ப்ரேக்” என்று அனைவருக்கும் அறிவித்தவன், அவளை கவனிக்க வந்த சக ஊழியர்களை தடுத்து விட்டு தானே அவளுக்கு எல்லாம் செய்தான்.
அவளின் முகத்தில் லேசாக தண்ணீர் அடித்து அவளை முழிக்க செய்தவன், பிரெஷ் ஜூஸ் வர வைத்துக் கொடுத்தான்.
அவள் வேண்டாம் என்று மறுக்க,
“நீயா குடிக்கிறியா இல்ல நான் குடிக்க வைக்கவா” என்று உறுமினான்.
“ப்ளீஸ் வேணாங்க” என்று அவள் மறுக்க, பட்டென்று ஜூசை தன் வாயில் சரித்துக் கொண்டவன் அவளின் இதழ் நோக்கி குனிந்தான்.
அடுத்த நிமிடம் அவனின் வாய் வழியாக அவளின் வாய்க்கு சென்றது பழச்சாறு. அதிர்ந்து மகரா விழிக்க,
“நீயா குடிச்சா நோ ப்ராப்ளம். என்கிட்டே முரண்டு பண்ணிக்கிட்டு இருந்தா இது தான் நடக்கும்” என்றவன் அடுத்த வாய் ஜூசையும் அதை போலவே அவளுக்கு புகட்ட,
மிரண்டுப் போனவள் “இல்ல நானே...” என்று சொன்னாள்.
“அது நான் சொல்லும் பொழுதே நீயா எடுத்து குடிச்சு இருந்தா விட்டு இருப்பேன். இப்போ முடியாதுடி. இப்படி தான் குடிச்சு ஆகணும்” என்று சொல்லி அவளின் இதழ்களில் தன் முரட்டு இதழ்களை வைத்து புதைக்க மகராவுக்கு மூச்சு முட்டிப் போனது.
அலுவலகத்தில் செய்யிற வேலையா இது... யாராவது வந்தா என்ன ஆகும் என்று அவள் பதற, அந்த பதற்றம் பஞ்சவனுக்கு கொஞ்சம் கூட இல்லை.
மேலும் இரண்டு வாய் அவளுக்கு புகட்டியவன் அவள் மிகவும் பயந்துப் போவதை பார்த்து,
“ஓகே டென்ஷன் ஆகாத.. எல்லோருக்கும் ப்ரேக் விட்டு இருக்கேன். யாரும் வரமாட்டாங்க...” என்று அவளை ரிலாக்ஸ் செய்தவன்,
“நீயே குடி” என்று மீதமிருந்ததை அவளையே குடிக்க வைத்தான்.
“எதுக்குடி இவ்வளவு அனிமிக்கா இருக்க.. காலையில சாப்பிட்டியா? இல்லையா? பிள்ளைக்கு பீட் பண்ணிட்டு இருகன்ற அறிவு கூடவா இல்லை... உன் உடம்பை நீயே குடுதுக்குறடி” என்று அடிக்குரலில் உறுமினான்.
கண் விழித்த மகரா அதிலிருந்து அவனை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. குனிந்தபடியே இருந்தாள். அதில் கடுப்பானவன்,
“ஹேய் லுக் மை ஐஸ்டி” என்றான் கட்டளையாக. அவள் நிமிரவே இல்லை. அதில் இன்னும் கடுப்பானவன்,
“இவ்வளவு தூரம் சொல்லிட்டே இருக்கேன் நீ உன் மனசுல என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க” என்று அவளின் மோவாயை பற்றி நிமிர்த்தி தன் கண்களை பார்க்க வைத்தவன்,
அவள் கண்களில் எண்ணத்தை கண்டானோ அப்படியே குனிந்து அவளின் இரு கண்களிலும் அழுந்த முத்தமிட்டான். அவனது மீசை முடியும் அவளது கண்களை அழுத்தி முத்தமிட அந்த மெல்லிய உணர்வில் அவளுக்கு கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது. அதை அவனிடமிருந்து மறைக்க தலையை திருப்பிக் கொண்டாள்.
ஆனால் அவன் விட வேண்டுமே... பின்னந்தலையை பற்றி தன் கண்களை நேருக்கு நேராக பார்க்க வைத்தவன்,
“என்னடி பிரச்சனை உனக்கு... ஏன் என்னை காலையில தவிர்த்துட்டு வந்த... பேபியையும் யுவன் கிட்ட விட்டுட்டு வர சொன்னேன். அதையும் பண்ணாம உன் மனசுல என்ன தான்டி இருக்கு” என்று ஆதங்கப்பட்டான்.
அவனது சட்டையை பற்றி நீ தான்டா இருக்க... நீ மட்டும் தான் இருக்கன்னு கத்தனும் போல இருந்தது அவளுக்கு. ஆனால் அதை செய்ய முடியாமல் அவளின் மன இறுக்கம் வந்து தடை போட,
“எனக்கு ஒன்னும் இல்லையேங்க.. நான் எப்பவும் போல தான் இருக்கேன்” என்றாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“தென் ரைட்” என்று விட்டு அவளிடம் இருந்து எழுந்துக் கொண்டவன் எல்லோரையும் உள்ளே வர சொன்னான். மீட்டிங் ஆரம்பம் ஆனது.
அதன் பிறகு அவன் அவள் புறம் திரும்பவே இல்லை. ப்ராஜெக்ட் பத்தின பேச்சுகள் மட்டுமே அந்த அறை முழுவதும் எதிரொலித்துக் கொண்டு இருந்தது.
ஒவ்வொரு முறையும் தன்னை தழுவி செல்லும் பஞ்சவனின் பார்வை இப்பொழுது இல்லாமல் போக தவித்துப் போனாள் மகரா.
எதையோ இழந்த உணர்வு அவளை ஆட்டிப் படைக்க கண்கள் கலங்கியது. அதை துடைத்துக் கொண்டவள் வேலையில் கவனம் வைக்க முயன்றாள். அவளால் இயலவில்லை.
கொஞ்ச நேரத்திற்கு முன்பு பஞ்சவன் தன் இதழ்களில் அவனது இதழ்களை வைத்து அழுத்தியது நினைவுக்கு வர அந்த இதழ் சூடு வேண்டும் போல தோன்றியது.
மூச்சடைக்க செய்யும் அவனின் நெருக்கம் வேண்டும் போல இருந்து. எல்லாவற்றையும் விட தன்னை நோக்கிக்கொண்டே இருக்கும் அவனது விழி தழுவல்கள் வேண்டும் என்று மனம் பேயாட்டம் போட இது எதுவுமே கிட்டாமல் போக மனம் சோர்ந்துப் போனாள்.
அவளால அங்கு இருக்கவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவன் கவனமாக அவளை காணாமல் தவிர்க்க ஆரம்பிக்க விழிகளில் நீர் திரண்டு டேபிளே விழ ஆரம்பித்தது.
அதுவரை அது இது என்று போக்குக் காட்டிக் கொண்டு இருந்தவன் அவள் கண்ணீரை பாரத்தவுடன் இயல்பாய் அவளை கடந்துப் போக முடியவில்லை.
அவளின் அருகில் ஒரு இருக்கை காலியாக இருக்க சட்டென்று அவளை லேசாக உரசியபடி அவ்விடம் அமர்ந்துக் கொண்டான்.
அவன் அமரவும் திகைத்துப் போய் அவள் திரும்பிப் பார்க்க அவனோ ப்ரோஜெக்ட்டரையே இடது கைக்காட்டி பேசிக் கொண்டு இருந்தான். வலது கை மகராவின் இடது கையை அழுந்தப் பற்றிக் கொண்டு இருந்தது மேசைக்கு அடியில்.
அவனது அந்த பிடியில் மனம் கரைந்துப் போக விம்மல் தெறிக்க பார்த்தது. இதழ்களை கடித்து தொண்டைக் குழியில் அழுந்தப் புதைத்துக் கொண்டவள் தானும் அவனது கையை அழுந்தப் பற்றிக் கொண்டாள்.
அவளது கை இறுக்கம் அதிகமாவதை உணர்ந்தவன், இவனும் இன்னும் அழுத்திப் பிடித்தான் அவளது கையை. அதில் அவளது மென்மையான கை சற்றே சிவந்துப் போனது. ஆனாலும் விலக்கிக்கொள்ள அவளால் முடியவில்லை.
அப்படியே அவனது தோளில் சாய்ந்து விட அவளின் பெண் மனம் துடிக்க அதை அடக்க படாத பாடு பட்டுப் போனாள்.
“ஓகே இதோட மீட்டிங் ஓவர்... லஞ்சுக்கு பிறகு மீண்டும் மீட் பண்ணலாம்..” என்று பஞ்சவன் சொல்ல எல்லோரும் எழுந்துக் கொண்டார்கள்.
போகும் பொழுது மற்ற கொலிக்ஸ் மகராவை தங்களுடன் அழைத்துக் கொண்டு செல்ல பஞ்சவன் பட்டென்று தன் கையை அவளிடம் இருந்து உருவிக் கொண்டான்.
அதில் மகராவின் மனம் அடிபட்டுப் போனது. அடிபட்ட பார்வை ஒன்றை அவன் மீது வீசினாள்.