“பிரபா” என்று வந்த தன் இரண்டாவது அண்ணனை திரும்பி பார்த்தான்.
“பெரிய அண்ணா கிட்ட பேசுனியா? அவ எப்படி இருக்கா.. கை நல்லா ஆகிடுமா? மேஜர் ப்ராப்ளமா? இல்ல மைனர் ப்ராக்ஷரா?” கவலையுடன் கேட்டவனை பெருமூச்சு விட்டு பார்த்தவன்,
“நான் விசாரிக்கலாடா..” என்றான்.
“ஏன்டா? அவ பாவம். எல்லாம் என்னால தான்” என்று மறுகினான்.
“ப்ச் அதுக்கு தான் அண்ணன் உன் மேல கோவமா இருக்காரு”
“இல்லடா நான் தெரிஞ்சு எதுவும் செய்யல.. அவ கை பின்னாடி இருக்கவும் ரெண்டு பேரோட வெயிட்டும் அவ கை தாங்காம உடைஞ்சிடுச்சு” என்றான் அவசரமாக.
குணா அவனை முறைத்தான்.
“இல்லடா வேணும்னே அவ மேல விழல”
பெருமூச்சு விட்ட குணாதரன்,
“இனி அந்த பொண்ணுக்கிட்ட தள்ளியே இருக்க சொன்னாரு அண்ணன்” சொன்னான். தலையை மட்டும் ஆட்டினான் சின்னவன்.
அவனின் தோளை தட்டிக் கொடுத்தவன்,
“சரி வா விருந்தை பார்ப்போம்” என்று அழைத்து சென்றுவிட்டான்.
மாலை முற்றிய உடனே, “கிளம்புங்க” என்று மூவரையும் மருத்துவமனையில் இருந்து கிளம்ப சொன்னான் தயாகரன்.
“இல்ல பாப்பா இப்படி இருக்கும் பொழுது எப்படி விட்டுட்டு போறது? நாங்க இங்க இருந்து பார்த்துக்குறோம். நீங்க கிளம்புங்க” என்றாள் தயாழினி.
“எதுக்கு நான் அந்த பக்கம் போன உடனே நீங்க நாலு பேரும் தப்பிச்சு போறதுக்ககா. ஒரு ஆணியும் தேவையில்லை. எல்லாம் நான் பார்த்துக்குறேன்.. ஏற்கனவே மருத்துவமனைக்கு தெண்ட செலவு.. இதுல தப்பிச்சு வேற ப்ளான் போடுறியாக்கும். வகுந்திடுவேன் வகுந்து. ஒழுங்கா உன் பெத்தவங்களை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போ” பல்லைக் கடித்து துப்பினான் வார்த்தைகளை.
கொஞ்ச நேரத்துக்கு முன்பு வரை இருந்த இணக்கம் இப்பொழுது அவனிடம் இருக்கவில்லை. அதை உணர்ந்துக் கொண்டவள்,
“சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொள்ளாது” என்று முணகினாள். அது அப்படியே அவன் காதில் விழ, முறைத்துப் பார்த்தான். அதில் வாயை மூடிக் கொண்டவள்,
“அம்மா அப்பா நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. நான் இங்க இருந்து தங்கச்சியை பார்த்துக்குறேன். யாரையும் நம்பி தங்கச்சியை விட முடியாது இல்லையா?” என்று சாடையாக அவனை தாக்கியவள், அவனது சினத்தை பொருட்படுத்தாமல் இருவரையும் காரில் அனுப்பி வைத்து விட்டு வந்தாள் தயாழினி.
“என்னடி சொன்ன?” என்று அவள் வந்த உடனே எகிறினான்.
“ஏன் இல்லாததையா சொன்னேன்.. நீங்க அப்படி பட்டவர் தானே.. முதல் நாள் என்னை பார்த்த அன்னைக்கே நீங்க என்கிட்டே நடந்துக்கிட்ட முறையே சாட்சி” என்றாள் ஏளனமாக.
“என்னை ரொம்ப அசிங்கப்படுத்துன உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுடி.. ஓரளவுக்கு தான் லிமிட்” கர்ஜித்தான்.
அவனது கர்ஜனைக்கு எந்த பதிலையும் கொடுக்காமல் இருக்கையில் அமர்ந்து பின்னால் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். இரவு கவிழ்ந்து இருந்தது.
அவளின் முகத்தில் இருந்த சோர்வை பார்த்தாலும் பார்க்காதவனாய் அந்த மருத்துவமனையில் ஸ்பெஷல் அறையை புக் பண்ணி போய் படுத்து விட்டான். படுத்த உடனே தூங்கவும் செய்தான். இவளை வா என்று கூட அழைக்கவில்லை. அதை தயாழினியும் எதிர் பார்க்கவில்லை.
என்னை தனியா விடு எனக்கு அது போதும் என்று இருந்தாள் அவள்.
பிறைக்கு மருந்து மாத்திரை கொடுத்து விட்டு நர்ஸ் போய்விட, தயாழினி எழுந்து தங்கையை போய் பார்த்தாள். மருந்துக்களின் வீரியத்தைல் தூங்கிக் கொண்டு இருந்தாள். அவளின் தலையை வருடிக் கொடுத்தவள் நெற்றியில் முத்தம் வைத்தாள்.
“எல்லாமே சீக்கிரம் சரியா போயிடும்.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. உங்க ரெண்டு பேரையும் நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என்னோட கடமை. அதுல என்ன சிக்கல் வந்தாலும் நான் எதிர் கொள்வேன்” மனதுக்குள் சொல்லிக் கொண்டவளுக்கு தங்கையை விட்டு நகர்ந்து வர மனமே இல்லை. ஆனால் நர்ஸ் “அவங்களை தொந்தரவு பண்ணாதீங்க மேடம். நல்லா தூங்கட்டும். இல்லன்னா வலி எடுத்துக்கும். ஓரளவுக்கு தான் மருந்து வேலை செய்யும். அவங்க தான் முழு வலியையும் தாங்கி ஆகணும். அதனால எவ்வளவுக்கு எவ்வளவு தூங்குறாங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. நீங்களும் போய் தூங்குங்க” என்றார்.
தலையை ஆட்டி விட்டு வெளியே வந்தாள். அந்த காரிடர் முழுக்க யாருமே இல்லை. அங்கும் இங்குமாய் சின்னதாய் விளக்கு வெளிச்சம் மட்டுமே இருந்தது.
கொஞ்சம் பயமாக இருந்தாலும், அந்த தயாகரனோடு தனியாக இருப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை எண்ணியவள், அங்கு போட்டு இருந்த நீள் இருக்கையில் கால் நீட்டி படுத்து விட்டாள்.
காலையில் இருந்த மன உளைச்சலுக்கு தூக்கம் நன்றாகவே வந்தது. படுத்த சிறிது நேரத்திலே நன்றாக தூங்கிப் போனாள். கொஞ்ச நேரத்திலே எங்கோ காற்றில் பறப்பது போல இருந்தது, யாரோ கைகளில் அள்ளிக் கொண்டது போல இருந்தது அவளுக்கு. சுகமாகவும் இருந்தது.
“ம்ம்ம்” என்று சொல்லி இன்னும் வாகாக அந்த கைகளில் படுத்துக் கொண்டாள். அதன் பிறகு அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆழ்ந்து தூங்கிப் போனாள்.
ஒரு மணி வாக்கில் என்னவோ ஏதோ என்று தூக்கத்திலே அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. குப்பென்று வியர்க்க கண்களை கடினப்பட்டு பிரித்து தான் எங்க இருக்கிறோம் என்று அவதனிக்க முயன்றாள். என்ன முயன்றும் அவள் எங்கு இருக்கிறாள் என்று புரியவே இல்லை.
“அய்யய்யோ என்னை கடத்திட்டானா அந்த தயாகரன்” பயந்துப் போனவள், அறையை சுற்றி முற்றி பார்த்தாள். அந்த அறையில் அவளை தவிர வேறு யாரும் இல்லை.
அந்த அறையை இதற்கு முன்பு பார்த்தது போல அவளுக்கு கொஞ்சமும் நினைவு இல்லை. என்ன இது என்று கதவை தேடிப் பார்த்தவள் வேகமாய் கதவை திறந்துக் கொண்டு வெளியே ஓடி வந்தாள்.
“என்ன ஆச்சு மேடம்?” என்று அந்த அறையின் வெளியே இருந்த ஆட்கள் கேட்க, யாரையும் மதிக்காமல் அவ்விடத்தை ஓடப்போனவளை தடுத்து நிறுத்தினார் ஒரு பெண்மணி.
“மேடம்.. ப்ளீஸ் உள்ள போங்க..” என்றாள் அந்த பெண். ஜீன்ஸ், காட்டேர்ன் சேர்ட், போனிடெயில் என இருந்தாள் அந்த பெண்.
“ப்ளீஸ் என்னை போக விடுங்க.. நான் என் தங்கச்சியை பார்க்கணும்” என்றாள் கதறலாக.
“மேடம் இந்த டைம் நீங்க இப்படி வெளியே வர்றது சேப் இல்ல. எதுவா இருந்தாலும் சார் வந்த பிறகு நீங்க போய்க்கோங்க”
“சாரா எந்த சார்..?” என்று எரிச்சலில் கத்தினாள் தயாழினி.
“தயாகரன் சார் தான். அவங்க தான் உங்களை இங்க வச்சு போனாரு.. எதுவா இருந்தாலும் விடிந்த பிறகு பேசிக்கலாம். இப்போ உள்ள போங்க” என்று சொன்ன பெண், தயாழினியின் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவர் அவளை உள்ளே விட்டு வெளியே கதவை பூட்டிவிட்டாள்.
“ஹேய் இந்தாம்மா கதவை திற” என்று இவள் கதவை எட்டி உதைத்தாள். தட்டிப் பார்த்தாள். ஆனால் கதவு கொஞ்சம் கூட அசையவே இல்லை.
“ச்சீ என்னை இப்படி கொடுமை பண்றானே... இவனெல்லாம் நல்லாவே இருக்க மாட்டான். என் தங்கச்சி அங்க என்ன பாடு படுறாளோ.. ஏற்கனவே வலி எடுக்கும்னு நர்ஸ் வேற சொல்லி இருந்தாங்களே.. காய்ச்சல் எதுவும் வந்தா நடு ராத்திரியில அவ என்ன பண்ணுவா.. கடவுளே உனக்கு கண்ணு இல்லையா? ஏன் இப்படி என்னை சித்தரவதை செய்யிற” இரவு முழுவதும் தூங்காமல் கண்ணீர் விட்டு கதறினாள் தயாழினி.
கதவு, குறுங்கண் என எல்லா வழியையும் தேடி பார்த்தாள். ஆனால் அவளால் அங்கிருந்து தப்பிக்கவே முடியவில்லை. வேறு வழியில்லாது தான் ஒரிடத்தில் அமர்ந்தாள்.
விட்டியற் காலை நேரம் அவள் இருந்த அறையின் கதவு திறக்கப்பட, வேகமாய் எழுந்து நின்றாள். அவளின் கண்கள் அழுகையில் ஏகத்துக்கும் சிவந்துப் போய் இருந்தது.
அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் தயாகரன். அவனின் விழிகளும் சிவந்துப் போய் இருந்தது.
வெடுக்கென்று அவனை பார்த்தவள்,
“நீயல்லாம் மனுசன் தானா? ஏன் இப்படி என்னை அடைச்சி வச்சு டார்ச்சர் பண்ற? சின்ன பொண்ணு அவ.. அவளை பார்க்க விடாம இப்படி கொடுமை படுத்துறியே நீயெல்லாம் நல்லாவா இருப்ப... அவ அங்க வலியில என்ன பாடு படுறாளோ.. உன் தம்பியால தானே என் தங்கச்சி இப்ப இந்த பாடு படுறா.. அது போதாதா.. இன்னும் உங்க வெறி அடங்கலையா? ஏன்டா இப்படி அந்த சின்ன பெண்ணை போட்டு படுத்துறீங்க.. பக்கத்துல இருந்து பார்த்துக்க கூட அவிடாம சாகடிக்கிறீங்க” அவனின் சட்டையை பிடித்து கேள்வி கேட்டவளை ஆழ்ந்துப் பார்த்தான் தயாகரன். அவனிடம் எந்த அசைவும் இல்லை. அப்படியே நின்று இருந்தான்.
ஏன் அவன் அப்படி நிற்கிறான் என்று எதையும் யோசிக்காமல்,
“உங்களுக்கு ஏன்டா இப்படி ஒரு வெறி.. எங்களை இப்படி கஸ்ட்டப்படுத்துற ஒவ்வொரு செயலுக்கும் நீங்க எல்லாம் பதில் சொல்லியே ஆகணும்” அவனின் சட்டையை பிடித்து கிழித்தவள் வேகமாய் வெளியே ஓடினாள்.
அப்பொழுது தான் தான் இருப்பது மருத்துவமனை என்றே தெரிய வந்தது. வேகமாய் தன் தங்கை அனுமதித்து இருந்த அறைக்கு ஓடினாள்.
அங்கே அவளின் தங்கை இன்னும் தூங்கிக்கொண்டு தான் இருந்தாள். அவளை பார்த்துக் கொண்ட செவிலியரிடம் “பாப்பா இடையில எழுந்தாளா..? என்னை கேட்டாளா?” என்று பதறிக்கொண்டு கேட்டவளை அன்புடன் பார்த்தவர்,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மேடம். உங்க தங்கச்சி நிம்மதியா தூங்குனாங்க.. நீங்க இந்த மாதிரி கவலை படுற அவளுக்கு அவங்களுக்கு எதுவும் ஆகல” என்ற பிறகே அதன் பிறகே நிம்மதி வந்தது.
“எப்போ எழுந்துக்குவா? ரொம்ப நேரமா தூங்கிக்கிட்டே இருக்காளே” கவலையாக கேட்டாள்.
“மருந்து போட்டதுனால தான் இப்படி தூங்குறாங்க.. அவங்க எழ எப்படியும் எட்டு மணி ஆகிடும். நீங்க அதுக்குள்ள குளிச்சுட்டு அவங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வர்றதுன்ன வாங்க மேடம்” என்றார்.
“ஒன்னும் பிரச்சனை இல்லையே சிஸ்டர்.. அவ நல்லா தானே இருக்கா” கலக்கமாக கேட்டவளுக்கு ஆறுதல் சொன்னவர்,
“தயாகரன் சார் அவங்களை நல்லா பார்த்துக்க சொல்லி எங்க எல்லோருக்கும் ஆர்டர் போட்டு இருக்காங்க மேடம். அதனால பேஸ்ட் ட்ரீட்மென்ட் தான் குடுத்துட்டு இருக்கோம். உங்க தங்கையை பத்தி கவலை படாதீங்க” என்றார்.
“ம்கும் பெரிய தயாகரன் சார்...” நொடித்துக் கொண்டவள், வெளியே வந்து அமர்ந்தாள்.
அமர்ந்த சிறிது நொடியிலே ஒரு காட்சி கண் முன் வர திகைத்துப் போனவள் வேகமாக தன்னை அடைத்து வைத்து இருந்த அறைக்கு ஓடினாள்.
அங்கே தயாகரனை நெருங்கி நின்றுக் கொண்டு இருந்தாள் ஒரு பெண். நேற்று இரவு இவளை அறைக்குள் தள்ளி கதவை பூட்டிய பெண் தான் அவள்.
இருவரும் நெருக்கமாக நிற்பதை பார்த்து முறைத்தவள்,
“இங்க என்ன நடக்குது?” கடுப்புடன் கேள்வி கேட்டாள் தயாழினி.
இவளுக்கு எல்லாம் பொறுமையே இல்ல....
என்ன இடம் ஏதுன்னு ஏதும் யோசிக்கிறது இல்ல....
உன் தங்கச்சி வாய்க்கு தான் இப்படி ஆகிட்டு....
ஒத்த ரோசா தங்கச்சியை நல்ல வளர்த்து வெச்சி இருக்கீங்க....
இவ சண்டை போடறதா இருந்தா...முதலில் இவ அப்பா கிட்ட போடணும்.....
அவ அண்ணன்களை கண்டுக்காம விட்டதுக்கு.....
அவனே ரவுடினு தெரிஞ்சி...ஓவரா வாய் விட்டு வாங்கி கட்டிக்க போறா....
இவளுக்கு எல்லாம் பொறுமையே இல்ல....
என்ன இடம் ஏதுன்னு ஏதும் யோசிக்கிறது இல்ல....
உன் தங்கச்சி வாய்க்கு தான் இப்படி ஆகிட்டு....
ஒத்த ரோசா தங்கச்சியை நல்ல வளர்த்து வெச்சி இருக்கீங்க....
இவ சண்டை போடறதா இருந்தா...முதலில் இவ அப்பா கிட்ட போடணும்.....
அவ அண்ணன்களை கண்டுக்காம விட்டதுக்கு.....
அவனே ரவுடினு தெரிஞ்சி...ஓவரா வாய் விட்டு வாங்கி கட்டிக்க போறா....
அதென்னவோ உண்மை தான் இவ வாங்கி கட்டலன்னா தான் ஆச்சரியம். அப்பாவை கேள்வி கேட்கிறதா நெஞ்சை பிடிச்சுக்குவா. இவ ஒரு தியாக செம்மல்
.