அவளை இடையோடு தூக்கி நிறுத்தியவன், அவளின் பெண்மை உணர்வுகளை மதித்து,
“சாரிடி...” என்று சொன்னவன், தன் தாயை கூப்பிட்டு அவளுக்கு வைத்தியம் பார்க்க ஏற்பாடு செய்து விட்டு போனவன் தான். அதன் பிறகு அவள் இருக்கும் திசை பக்கமே பிரபாகரன் வரவில்லை.
சின்ன தங்கைக்கு கை ஒடிந்துப் போனதில் இன்னும் துயரப்பட்டவள் அவளுடனே மருத்துவமனையில் இருந்துக் கொண்டாள் தயாழினி.
தயாகரன் அதை தடுக்கவில்லை. வீட்டில் கறிவிருந்து நடந்துக் கொண்டு இருந்ததால் பொன்மாரி தன் கணவனோடு கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டார்.
“இரவு ஏற்பாடு தம்பி” என்று அவர் கேட்க,
“நாளைக்கு பார்த்துக்கலாம் ம்மா” என்று விட்டு மருத்துவமனை வராண்டாவில் போட்டு இருந்த இருக்கையில் கால் நீட்டி அமர்ந்துக் கொண்டான் தயாகரன்.
குணாவும் குறிஞ்சியும் வீட்டில் மேற்பார்வை செய்துக் கொண்டு இருந்ததால் மருத்துவமனைக்கு வரவில்லை. முதல்நாள் அவளை அறையில் தள்ளி விட்டதில் நெற்றியில் ஏற்பட்ட காயத்துடன் அலைந்துக் கொண்டு இருந்தவளை அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டு தான் இருந்தான் குணா.
ஆனாலும் அவள் அவன் இருக்கும் பக்கமே வராமல் எவ்வளவு தூரம் ஒதுங்கி இருக்க முடியுமோ அந்த அளவுக்கு ஒதுங்கி இருந்துக் கொண்டாள்.
தனக்கு இனி விடிவு காலமே இல்லை என்று அயர்ந்து போய் இருந்த சமயம் தான், பொன்மாரி அவளின் குடும்பத்தோடு குணா வீட்டுக்கு வந்து அவளை அழைத்துக் கொண்டு இங்கே வந்தது.
எப்படியோ இவனிடம் இருந்து தப்பித்தோம் என்று எண்ணி மகிழ்ந்தவளுக்கு தான் இன்னும் அதிகமாக சிக்கி இருக்கிறோம் என்று புரிந்தது.
அக்காவை இவனின் அண்ணனுக்கு கல்யாணம் செய்துக் குடுத்த பிறகு இவனிடம் இருந்து இனி எப்படி தப்பிப்பது.. என்ன நிகழ்வு என்றாலும் இந்த மூஞ்சியை பார்த்து ஆகணுமே..
கண்டதையும் போட்டு யோசித்துக் கொண்டு இருந்தவள், கீழே கிடந்த கத்தியை பார்க்காமல் கால் வைக்க, அவளை ஒரு சுழற்று சுழற்றி தன் நெஞ்சோடு இழுத்தவன்,
“ஹேய் அறிவு இல்ல.. கண்ணை எங்க வச்சுக்கிட்டு வர்ற.. கீழ கத்தி இருக்கு. அது கூட தெரியாம என்ன பட்ட பகல்ல கனவு கண்டுக்கிட்டு இருக்க” காட்டமாக கேட்டான் குணாதரன்.
அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள், அவனிடம் இருந்து வேகமாய் விலகி,
“என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்காதீங்க சார். அது உங்களுக்கு கொஞ்சம் கூட செட் ஆகல.. இப்படி நடிக்கிறதுக்கு பதிலா அதே கத்தியை எடுத்து என்னை குத்தி இருந்தா கூட இந்த அளவுக்கு பதட்ட பட்டு இருக்க மாட்டேன்.. நம்பியும் இருப்பேன். ஆனா இப்போ உங்க நடிப்பு செம்ம ப்ளாப்..” கட்டை விரலை கீழே கவிழ்த்து காண்பித்தவள்,
“நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்ணுங்க.. நம்ப முயற்சி பண்றேன்” அவ்விடத்தை விட்டு வேகமாக விலகி ஓடினாள்.
அவள் பேசிய பேச்சை கேட்ட போலீஸ்காரன் தன் தொடையிலே குத்திக் கொண்டான். அவ்வளவு ஆத்திரம் வந்தது. முயன்று அதை அடக்கிக் கொண்டு வந்தவர்களை கவனிக்கத் தொடங்கினான். ஆனாலும் உள்ளுக்குள் நெருப்பாய் கனன்றுக் கொண்டு இருந்தது குறிஞ்சி பேசிய பேச்சு.
தயாழினியின் பெற்றவர்களும் மருத்துவமனையில் தான் இருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லியபடி இருந்தாள் தயாழினி. அவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.. நேற்று இரவு நடு சமத்துக்கு மேல் பொன்மாரி வந்து அவர்களை எழுப்பி விசயத்தை சொல்லி அழைத்துக் கொண்டு போனவர்,
பிரபாகரனையும் குணாதரனையும் மிரட்டி எச்சரித்து விட்டு போனார்.
பிரபாகரனின் வீட்டுக்கு தான் முதலில் வந்தார் பொன்மாரி. அதன் பிறகு தான் குணாவின் வீட்டுக்கு சென்றார். தயாழினிக்கும் தயாகரனுக்கு தான் ஏற்பாடு செய்து இருந்த நிச்சயத்தை பற்றி தயாளினியின் பெற்றவர்களுக்கும் சொன்னார்.
அவர்கள் மறுக்க,
“இந்த கல்யாணம் நடந்தா மட்டும் தான் உங்க பொண்ணுங்களை என்னால காப்பாற்ற முடியும். இல்லன்னா உங்க பொண்ணுங்க நிலை என்னன்னு சொல்ல கூட என்னால முடியாது” என்று அவர்களை சரி கட்டியவர்,
தன் கடைசி மகனிடம் திரும்பி, “குணாவோட சேர்ந்து இதுல நீ ஏதாவது குட்டி கலாட்டா பண்ண.. உங்களை என் பிள்ளைன்னு கூட பார்க்காம ரெண்டு பேரையும் குத்தி கொலை பண்ணி போட்டுட்டு, பழியை தூக்கி உங்கப்பன் தலையில போட்டுட்டு போயிட்டே இருப்பேன். செய்ய மாட்டேன்னு நினைக்காதீங்க.. கண்டிப்பா செய்வேன்.. இங்க இருந்து ஒரு மூச்சு கூட பெரியவன் காதுக்கு போகக்கூடாது புரிஞ்சுதா...” என்றவரிடம் தெரிந்த உறுதியில் அண்ணன் தம்பி இருவரும் மௌனமானார்கள்.
“அடிப்பாவி அப்ப கூட என்னை விட மாட்டியாடி.. நீ தானே கொலை பண்ண.. அப்போ நீ தானே சிறைக்கு போகணும். அப்பாவி என்னை ஏன்டி கோத்து விடுற?” புலம்பினார் சிவலிங்கம்.
“இப்படி வீட்டுக்கு அடங்காத பிள்ளைகளை பெத்து போட்டது நீர் தானே.. அப்போ உம்மை தானே உள்ள தள்ளனும். அது தான் இவனுங்க மூணு பேரையும் போட்டு தள்ளிட்டு உம்மையும் சிறையில அடைச்சிட்டு நான் ப்ரீ பேர்டா சுற்றலாம்னு இருக்கேன்” என்றவரின் பேச்சில் வாயை மூடிக் கொண்டார் லிங்கம்.
பொன்மாரியின் திட்டத்தின் படி, அவர் முதலில் போய் தயாகரனை சரி கட்டுவார். அதன் பிறகு அவரின் கணவன் சிவலிங்கம் எல்லோரையும் அழைத்துக் கொண்டு வருவது என ஏற்பாடு ஆனது. அதே போல எல்லாமே நடந்து ஏறியது.
பொன்மாரியை எதிர்க்க முடியாமல் தயாகரனும் அவருக்கு ஒத்துப் போனான். அவன் அடங்கும் ஒரே இடம் அவனின் தாய் தானே.. அவரை மீறி அவனால் எதுவும் செய்ய இயலாதே..
இதில் எதிர்பாராத ஒன்று பிறையின் கை முறிந்துப் போனது தான். மற்றபடி பொன்மாரி போட்ட எல்லா திட்டமும் கச்சிதமாய் அரங்கேறி இருந்தது.
“ஒரு நாள் மட்டும் அப்செர்வேஷன்ல இருக்கட்டும்.. அது கூட அவசியம் இல்ல. இப்பவே கூட நீங்க கூட்டிட்டு போகலாம். பட் தயாகரன் சார் சொல்லவும் தான் இந்த ஏற்பாடு.. மத்தபடி பயப்பட ஒன்னும் இல்ல.. ஜஸ்ட் சின்ன ப்ராக்ஷர் தான்..” மருத்துவர் கூறிய பிறகே மூவருக்கும் நிம்மதியானது.
ஆனால் இன்னி அடுத்து என்ன செய்வது என்று தான் தயாழினியின் பெற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
பெரிய பெண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஓகே.. ஆனா இப்போ நாங்க என்ன பண்றது.. பழைய மாதிரி எல்லோரும் ஆளுக்கு ஒரு மூலையில் இருக்கிறதா? இல்ல ரெண்டு பெண்ணுங்களையும் கூட்டிக்கிட்டு சொந்த வீட்டுக்கே போறதா? பெரும் குழப்பமாக இருந்தது. தயாழினியும் அந்த குழப்பத்தில் இருந்தாள். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
எதுவா இருந்தாலும் பொன்மாரியும் தயாகரனும் முடிவு எடுக்கட்டும். பிறகு அதை ஏற்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கலாம் எண்ணிக் கொண்டாள்.
மத்திய நேரம் என்பதால் மூவரையும் சாப்பிட அழைத்தான்.
தயாழினி அவனை கண்ணுற்றுப் பார்த்தாள். பொன்மாரி சொன்னதை நினைவுக் கூர்ந்தாள்.
“என் மகன் நல்லவன்னு நான் சொன்னாலும் உனக்கு புரியாது.. நீயாவே ஒரு நாள் உணர்வாய்” என்ற சொற்கள் எல்லாம் அவளின் நினைவில் எழ உற்றுப் பார்த்தான்.
காலையில் கட்டிய பட்டு வேட்டி சட்டையில் தான் இப்பொழுது வரை இருந்தான். அதே கம்பீரம் கொஞ்சமும் குறையவில்லை. அவனது முகம் எப்பொழுதும் போல இறுக்கமாக தான் இருந்தது. அதிலிருக்கும் உணர்வுகளை அவளால் படிக்க முடியவில்லை.
“என்னடி மூஞ்சை மூஞ்சை பார்த்துக்கிட்டு இருக்க.. எழுந்து வா.. உங்க அப்பா அம்மாவை சாப்பிட வை” என்றான்.
“பாப்பா” என்று தயக்கமாக இழுத்தாள்.
“நர்ஸ் இருக்காங்க.. நீ வா” என்றவன் முன்னாள் போக, அவனை தொடர்ந்து இவள் தன் தாய் தகப்பனை அழைத்துக் கொண்டு சென்றாள் அவர்கள் மறுக்க மறுக்க.
தயாகரன் கண்ணை காட்ட, அவனது உதவியாளர்கள் அந்த அறையின் முன்பு காவலர்கள் போல நின்றுக் கொண்டார்கள்.
“பாப்பா நல்லா ஆகிடுவா... அவளை கவனிக்க நீங்க தெம்பா இருக்க வேணாமா? வாங்கப்பா சாப்பிட்டுட்டு வந்திடலாம்” என்று அழைத்துச் சென்றாள்.
அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை உதவியாளர்கள் மூலம் வாங்கி வர வைத்தவன் அவர்களை சாப்பிட வைத்து அனுப்பினான்.
மூவரும் சாப்பிட அவன் மட்டும் சாப்பிடவில்லை. “நீங்க சாப்பிடலையா?” என்று கூட அவள் கேட்கவில்லை. அவன் அதை சட்டை செய்யவும் இல்லை. தன் வேலை முடிந்த உடன் பெற்றவர்களோடு கிளம்பி விட்டாள். ஆனால் தனியாக அமர்ந்து இருந்தவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் தயாழினி. அந்த பார்வையில் என்ன இருந்தது என்று அவளுக்கே புரியவில்லை.
எதார்த்தமாக தயாகரன் நிமிர்ந்துப் பார்த்தான். தன்னை பார்த்துக் கொண்டே போகும் பெண்ணவளை புருவம் சுறுக்கி பார்த்தாவன், ஒற்றை புருவத்தை உயர்த்தி என்னடி என்பது போல கேட்டான். அதில் பதறிப் போனவள் வேகமாக பார்வையை விலக்கிக் கொண்டாள்.
அவளின் செய்கையில் சின்னதாய் ஒரு முறுவல் எட்டிப் பார்த்தது அவனது முரட்டு இதழ்களில். ஆனால் அதை காற்று கூட அறியும் முன்பு தனக்குள் புதைத்துக் கொண்டவனின் சிந்தனை மிக மோசமாக இருந்தது.
குணாவுக்கு போனை போட்டான்.
“குணா நைட் ஒரு மணிக்கு ரெடியா இரு...” என்று மட்டும் சொன்னான். அவனது சுருக்கமான பேச்சில் ஏன் எதற்கு என்று எதுவும் கேட்கவில்லை தம்பி. “சரிண்ணா” என்றான்.
“போர்ஸ் ரெடியா?”
“எல்லாமே பக்காவா இருக்கு ண்ணா. நாம போனா தட்டி தூக்க வேண்டியது தான்”
“குட்” சொன்னவன், “குறிஞ்சிய பிடிச்சு இருக்கா?” கேட்டான்.
அண்ணனின் அதிரடியில் திகைத்துப் போனவன்,
“அப்படி எல்லாம் எதுவும் இல்லண்ணா” என்றான் அவசரமாக.
“நீயாவது மனசை இழக்காம கவனமா இருடா” என்றான்.
“சரிண்ணா” என்றவனுக்கு உள்ளுக்குள் குற்ற குறுகுறுப்பு.
“அந்த பெண்ணை விட்டு சின்னவனை தள்ளி இருக்க சொன்னனே.. சொன்னியா இல்லையாடா... ஏன்டா அவன் இப்படி இருக்கிறான்.. இப்ப அவனால இந்த பொண்ணு கையை உடைச்சுக் கிட்டு இருக்கு. எத்தனை முறை சொல்றது மேல கை வைக்க வேணான்னு..” கடுகாய் பொரிந்தான்.
“நான் சொன்னேன் ண்ணா.. ஆனா ஏன் இப்படி பண்றன்னு எனக்கும் ஒன்னும் தெரியல.. நான் அவன் கிட்ட பேசுறேன்” என்றான்.
“ம்ம் பேசி அவனை ஒழுங்கா சொல்லு. இல்ல அவனோட கன்னம் பழுத்திடும்னு சொல்லு” என்றவன் வைத்து விட்டான். குணா சின்னவனை தேடி சென்றான். அவனோ இலக்கு இல்லாமல் எங்கேயோ வெறித்துக் கொண்டு இருந்தான். அவனின் சிந்தை எங்கும் பிறையை முத்தமிட்ட நினைவுகள் தான் நிறைந்துப் போய் இருந்தது.
அவளின் உதடுகள் தான் எவ்வளவு மென்மையா இருக்கு.. பஞ்சு மிட்டாய் போல அப்படியே கரையுதே.. என்ன மாயமா இருக்கும்.. இது நாள் வரை பெண் வாசனையே படாமல் இருந்தவனுக்கு அவளின் மணம் தூங்க விடாமல் படுத்தி எடுத்தது. மீண்டும் அந்த இதழ்களை சுவைக்க தோன்றியது.
அவளின் பித்தம் அவனின் நெஞ்சில் ஒட்டிக் கொண்டது. இனி எங்கிருந்து விடுதலை கிடைக்கும்..
அவளை தூக்கி வந்த நாளில் இருந்து அவன் பேசிய பேச்சுக்கு எல்லாம் வாய் வலிக்க வலிக்க பதில் கொடுத்தவள், முத்தம் அவன் குடுத்த பொழுது மௌனமாய் கண்ணீர் விட்டதை எண்ணி அவனின் மனம் ஊமையாய் வலித்தது. நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்.
அந்த நேரம் தான் அவனை தேடி குணாதரன் வந்தான்.
நீயும் இழக்காதே அப்படினா என்ன அர்த்தம்.....
Already தயா, யாழி கிட்ட சரண்டர் அப்படினு தானே அர்த்தம்.....
யாரை பிடிக்க போறாங்க இப்ப???
அவ அண்ணகளையா?????
நீயும் இழக்காதே அப்படினா என்ன அர்த்தம்.....
Already தயா, யாழி கிட்ட சரண்டர் அப்படினு தானே அர்த்தம்.....
யாரை பிடிக்க போறாங்க இப்ப???
அவ அண்ணகளையா?????
கிட்ட தட்ட டா..
அது சஸ்பென்ஸ்