தன் தாயை விழுந்து விழுந்து கவனித்தவளை முறைத்துப் பார்த்தான் தயாகரன்.
“இப்படி அருமையா பொண்ணை பார்த்துட்டு தான் இவ்வளவு நாளா மறைச்சு மறைச்சு வச்சு இருந்தியா தயா.. சும்மா சொல்லக்கூடாது என் மூத்த மருமவ கெட்டிக்காரி.. அப்படியே என்னாட்டாம் கருத்தா இருக்கா” என்று பொன்மாரி அவளின் கன்னத்தை வழித்து நெட்டி முறிக்க, ஏகத்துக்கும் கடுப்பு ஏறியது அவனுக்கு.
“சும்மா லூசு மாதிரி நீயா கண்டதையும் நினைச்சுக்கிட்டு உலராத ம்மா” என்ற நேரமே,
“என்ன மாமா அத்தையை போய் இப்படி பேசுறீங்க.. அவங்க வயசுக்கு மரியாதை குடுத்து பேசுறது இல்லையா? இப்படியா தலையில தட்டுன மாதிரி பேசுறது” என்று மிக உரிமை உள்ளவளாய் கண்டித்தவளை கொலை வெறியுடன் பார்த்தான்.
“இப்படி முறைக்காதீங்க மாமா.. பெரியவங்களுக்கு மரியாதை குடுத்து பேசுனா உங்க ஆயுசு இன்னும் நீளும்.. எனக்கு உங்க கூட ரொம்ப நாள் வாழணும்னு ஆசை.. அதுக்காக தான் சொல்றேன்” என்று மேலும் அவனை ஒட்டி உரசிக் கொண்டு பேசியவளின் பேச்சில் கோவம் எல்லை மீறியது. அதோடு அவளாக வந்து ஒட்டி உரசுவதில் ஏகக் கடுப்பு ஏறியது.
“என்னடி டபிள் கேம் ஆடுறியா? இவ்வளவு நாளா என்கிட்டே இருந்து தப்பிக்க தானே பார்த்த. இப்போ என்ன கல்யாணத்துக்கு தயார் ஆகிட்ட” கண்கள் இடுங்க அவளை அழுத்ததுடன் பார்த்தவனை கண்டு அடி வயிற்றில் பயம் தொற்றிக் கொண்டது.
ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு, அவனுக்கும் மட்டும் கேட்கும் படி இன்னும் நெருங்கி நின்றவள்,
“ஆமா டபிள் கேம் தான். இப்போ அதுக்கு என்ன பண்ண போறீங்க? உங்களால உங்க அம்மாவை எதிர்த்து எதுவும் செய்ய முடியாதுன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அதனால தான் நேற்று இரவு உங்க அறையில இருந்து வந்த உடனே உங்க அம்மா போன் நம்பரை திருட்டு தனமா வாங்கி அவங்களுக்கு போன் போட்டேன்”
“மகன் இப்படி ஊர் பேர் தெரியாத பொண்ணு கூட குடும்பம் நடத்துரான்னு கொளுத்தி போட்டேன். அவங்களும் குடும்ப மானம் போயிடும்னு என்னை அடிச்சு இந்த வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டுடுவாங்க.. நானும் விடுதலை கிடைச்சிடுச்சுன்னு ஓடிடலாம்னு நினைச்சி ப்ளான் போட்டேன். ஆனா இங்க எனக்கே ட்விஸ்ட் குடுத்துட்டாங்க உங்க அம்மா.. உங்க வீட்டு மருமகளா ஆக்கிக்கப் போறாங்க என்னை” என்றவளின் பேச்சில் இருந்த எகத்தாளம் கண்டு பல்லைக் கடித்தான்.
“என்ன மாமா கோவம் கோவமா வருதா? வரணுமே... வந்து ஆகணுமே.. என் பொணத்தை வச்சு கூட பணம் பார்க்க நினைச்ச உன் கையாள நான் தாலி வாங்குறது எனக்கு பெரிய அசிங்கம் தான். நான் எங்க போனாலும் நீ என்னை விட மாட்ட, என் கற்புக்கு விலை பேசி அதையும் விக்க துணிஞ்ச உன் கூட ஒரு வாழ்க்கையை நினைச்சு கூட பார்க்க முடியல.. உடம்பெல்லாம் பத்திக்கிட்டு வருது.. மனசெல்லாம் அரிச்சு எடுக்குது. ஆனா உன் கையாள தாலி வாங்குனா என்னை எப்படி விபச்சாரியா ஆக்குவ.. உன் அம்மாவை மீறி உன்னால என்னை எப்பொழுதும் நெருங்க முடியாது. அப்படியே என்னை விக்க நினைச்சாலும் நீ தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டியை தான் கூட்டி குடுக்க போற.. அதுக்கு நீ தான் வெட்கி தலை குனியனும்.. உனக்கு தான் பெருத்த அவமானம் நேரும். அதனால நீ என்னை விலைக்கு விற்க மாட்ட.. எப்படி என் யோசனை.. ஒரே கல்லுல ரெண்டு மாங்க..” என்றவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன், உதட்டை பிதுக்கி,
“நாட் பேட்” என்று சொன்னவன்,
“ஆனா எனக்கு எந்த மான மரியாதையும் பெருசு இல்லடி. எனக்கு என்னோட ஆசை மட்டும் தான் பெருசு.. இந்த மஞ்ச கயிறால எந்த மாயாஜாலமும் நடக்காது. என் அம்மாவை ஏமாத்துறது அவ்வளவு பெரிய விசயமே இல்லை..” என்றவன்,
அவளை கூர்ந்து பார்த்து ஏளனமாக சிரித்தவன்,
“உன் ப்ளான் எல்லாம் ஓகே தான். அதை அப்படியே எக்சிகியூட் பண்ணு.. எனக்கு என்ன வேணுமோ அதை நான் சாதிச்சுக்குவேன்” வில்லத்தனமாக சொன்னவனின் வார்த்தையில் அடி மனதில் பயம் அப்பியது.
“நோ” என்று அவள் சன்னமாக அலற,
“எஸ்.. ஐ வான்ட் திஸ் மேரேஜ்” என்று சொன்னவன், அவாளை இன்னும் நெருங்கி நின்று,
“கல்யாணம் செய்துக்க ஆசை பட்டல்ல.. எல்லாத்துக்கும் தயாரா இருட்டி” சொன்னவன்,
“ம்மா உன் மருமக முத்தம் கேக்குறா.. கண்ணை ஒரு நிமிடம் மூடு” என்று சொல்லிய கணம் தயாழினி வேகமாக அவனை விட்டு விலகப் பார்க்க, அவளின் இடையோடு தன் கைக் கொடுத்து இறுக்கிப் பிடித்தவன் அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான் கோவமாக.
அந்த இதழ் முத்தத்தில் அதிகம் இருந்தது எல்லாம் கோவம் கோவம் மட்டும் தான். அவனது கோவத்தில் இவள் தான் தடுமாறிப் போனாள்.
“ச்சீ பொறுக்கி” என்று சன்னமாக திட்டினாள்.
அவளது வசவில் ஏளனமாக பார்த்தவன்,
“கல்யாணம் ஆகிடுச்சுன்னா இதை விட அதிகமா தொடுவேன்டி.. எல்லா ரைட்சும் எனக்கு வந்திடும். அப்போ கத்தி கூச்சல் போட்டா கூட உன்னை விட மாட்டேன்” எச்சரித்தான். அதை கேட்டு அதிர்ந்துப் போனாள். எப்படியும் அவன் தன்னை விடப்போவது இல்லை என்று புரிய,
தானே அவனுக்கு லைசென்ஸ் வாங்கி விட்டதை எண்ணி நொந்துப் போனாள்.
“நீ மொத்தமும் இனி எனக்கு மட்டும் தான்.. இந்த ஒண்ணரை வாரமா என்கிட்டே இருந்து தப்பிச்ச இல்ல.. இனி என் கிட்ட இருந்து உன்னால தப்பிக்கவே முடியாதுடி..” கொக்கரித்தவனின் கையில் தானே போய் விழுந்த கதையாகிப் போனதை எண்ணி மறுகிப் போனவளின் காதில்,
“அக்கா” என்ற அழைப்பு விழ, திகைத்துப் போனவள் குரல் வந்த திசையை திரும்பி பார்த்தாள். அங்கே அவளின் இரண்டு தங்கைகளும் கூடவே அவர்களின் அப்பாவும் அம்மாவும்..
ஓடிப் போய் அவர்களை கட்டிக் கொண்டவளின் விழிகளில் ஏகத்துக்கும் கண்ணீர் நிரம்பி வழிந்தது.
“குறிஞ்சி, பிறை, அப்பா, அம்மா” என்று ஒவ்வொருவராக சொல்லி கட்டிக் கொண்டவளை நால்வரும் சேர்ந்து கட்டிக் கொண்டார்கள்.
“எங்க உங்களை பார்க்கவே முடியாதோன்னு நினைச்சு பயந்துட்டேன்” என்றவளுக்கு ஷாக் அடித்தது போல இருந்தது.
“நீங்க நாலு பேரும் பெங்களூர் போகலையா? இங்க எப்படி வந்தீங்க?” என்று கேட்டவளை வேதனையுடன் பார்த்தார்கள்.
“என்ன மருமவளே.. வந்தவங்களை நிக்க வச்சு பேசிக்கிட்டு இருக்க.. அவங்க உன் குடும்பம் தான். ஆனா நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மட்டு மரியாதை இருக்குல்ல.. முதல்ல அவங்களை உட்கார வச்சு உபசரி” பொன்மாரி சொல்ல, தன் குடும்பத்தை அவளால் பிரியவே முடியவில்லை. எங்கே பிரிந்தால் மறுபடியும் பார்க்க முடியாமல் அந்த அரக்கன் செய்து விடுவானோ என்று பயந்துப் போனாள்.
விழிகளில் கண்ணீர் வழிந்தது. அதை துடைக்க மறந்து நின்றவளின் கன்னம் தொட்டு,
“எதுக்குடி அழற.. அது தான் நம்ம கல்யாணத்துக்கு இரண்டு வீட்டு பெத்தவங்களும் ஒத்துக்கிட்டாங்களே.. அப்புறமும் ஏன் அழுதுக்கிட்டே இருக்க.. கண்ணை துடை..” அவளுக்கு அருகில் நெருங்கி நின்றான் தயாகரன்.
திகைத்துப் போய் அவனை பார்த்தாள்.
“நீ அடிச்ச அதே அந்தர் பல்டி” என்றான் ஏளனமாக.
தான் விதைத்த விதை.. தனக்கே விளைகிறதே நொந்துப் போனாள். இவர்களின் குடும்பத்தோடு பொன்மாரி மற்றும் சிவலிங்கத்தின் உற்றார் உறவினர்கள் எல்லோரும் வந்து இருக்க, ஆளாளுக்கு ஒவ்வொரு வேலையை இழுத்து போட்டு செய்ய ஆராம்பித்தார்கள்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் கல்யாணம் என்று முடிவாக, அந்த இடமே பரபரவென்று ஆனது. சிவலிங்கம் வரும் பொழுதே கையோடு ஐயரை கூட்டிட்டு வந்து இருந்தார். அவர் சொல்படி அனைத்தும் அங்கே நடைபெற்றது.
தன் குடும்பத்தினரோடு ஒரு வார்த்தை பேசக்கூட அவளுக்கு நேரம் கொடுக்கப் படவில்லை.
பொன்மாரி எடுத்து வந்து இருந்த கூரைப் புடவையை குடுத்து கிளம்பி வர சொல்லி சொன்னவார், தன் கழுத்தில் கிடந்த அத்தனை நகைகளையும் எடுத்து அவளுக்கு போட்டு விட்டு அழகு பார்த்து தானே அவளை அழைத்து வந்து மணமேடையில் அமரவைத்தான் தன் மகனின் அருகில்.
தயாகரன் வெள்ளை வேட்டி சட்டையில் மிடுக்கான தோற்றத்தோடு மாப்பிள்ளை கம்பீரத்தோடு வணங்கா தலையோடு அமர்ந்து இருக்க, அவனுக்கு அருகில் வாழ்க்கையை வெறுத்துப் போய் அழகான அலங்காரத்தோடு தேர் போல அமர்ந்து இருந்தாள் தயாழினி.
நிச்சயம் என்று சொல்லி இருக்க, கடைசி நேரம் கல்யாண்த்துக்கே ஏற்பாடு செய்து விட்டார் பொன்மாரி. அவரை தடுக்க யாராலும் முடியவில்லை.
தயாகரன் எவ்வளவோ எடுத்து சொல்லி விட்டான். ஆனால் அவர் கொஞ்சமும் கேட்கவில்லை. ஏன் குணாதரன், பிரபாகரன் என மற்ற இரண்டு மகன்களுமே சொல்லி பார்த்து விட்டார்கள். ஆனால் அவர் தன் முடிவை விட்டு குடுக்கவே இல்லை.
பொன்மாரியின் விருப்பம் படி கல்யாணம் நல்லபடியாக நடந்தேறியது. தயாகரன் பசும்பொன் கோர்த்த தாலியை தயாழினியின் கழுத்தில் கட்டினான்.
தலைகுனிந்து வாங்கிக் கொண்டாள் அவள். விபச்சாரியா இவனுடன் இருப்பதற்கு இந்த திருமணம் எவ்வளவோ மேல் என்று எண்ணிக் கொண்டவள் மிகவும் அமைதியாகி விட்டாள். அவனோடு எதுவும் பேசவில்லை. அவனும் எந்த பேச்சும் வைத்துக் கொள்ளவில்லை.
இடையில் பிரபாகரனுக்கும் பிறைக்கும் அடிக்கடி முட்டிக் கொண்டது.
குறிஞ்சியோ நெற்றியில் அடிபட்ட காயத்தோடு மிகவும் அமைதியாக இருந்து விட்டாள். குணாதரனோடு போட்டிக்கு போட்டி அவளால் நிற்க முடியவில்லை. அவளின் உடம்பிலும் சரி மனத்திலும் சரி வழு இல்லாத காரணத்தால் அவனை விட்டு ஒதுங்கி நின்று விட்டாள்.
கல்யாண பரபரப்பில் அதை கண்டுக் கொள்ளவில்லை என்றாலும் அவள் மீது தன் தனி கவனத்தை வைத்து இருந்தான் குணாதரன். ஏனெனில் இந்த கல்யாணத்தை சாக்காக வைத்துக் கொண்டு தப்பித்து போய்ட கூடாதே அதனால் கவனமுடன் இருந்தான்.
அதே போல இன்னும் சில ஆட்களை போட்டு இருந்தான் தயாகரன். தயாழினியின் குடும்பத்தில் இருக்கும் ஒருவர்கூட எந்த விதத்திலும் இங்கிருந்து தப்பித்து போய் விடக்கூடாது என்று.
படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே
சூப்பர் சூப்பர்....சரியான போட்டியா இருக்கு ரெண்டு பேருக்கும்.....
தயா ஓட நோக்கம் வேற ஏதோ....
சூப்பர் சூப்பர்....சரியான போட்டியா இருக்கு ரெண்டு பேருக்கும்.....
தயா ஓட நோக்கம் வேற ஏதோ....
ஆமாம் டா 😍