அலுவலகத்திற்கு வேக வேகமாக வந்து சேர்ந்தாள் மகரா... மடிப்பு எடுத்து கட்டிய காட்டன் சேலை.. நீண்ட முடியை அழகாக பின்னலிட்டு முன்புறம் விட்டு இருந்தாள். கண்களில் மையிட்டு மாடன் மங்கையாகவும் அதே சமயம் தமிழ் நாட்டு பெண் என்று சொல்லக் கூடிய அளவில் அவளது நளின தோற்றம் இருந்தது.
சென்னையில் இருக்கும் பல கிளைகளை கொண்ட ஐடி நிறுவனத்தில் அசிஸ்டென்ட் போஸ்ட்டில் இருக்கிறாள். மாதம் இரண்டு நாட்கள் மட்டும் நேரடியாக அலுவலகத்துக்கு வர வேண்டியது இருக்கும்.
அல்லது தேவை பட்டால் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையில் மட்டும் வர வேண்டி இருக்கும் அவளுக்கு.
கைநிறைய சம்பளம். இளமையான தோற்றம்... அதிகம் சிரிக்காத இதழ்கள். ஆனால் அவளின் மகனிடம் மட்டும் கொஞ்சி பேசி சிரித்து மகிழ்ந்து வாய் நிறைய மனம் விட்டு புன்னகைப்பாள்.
கைப்பிள்ளை வைத்து இருந்ததால் அவள் வீட்டிலிருந்தே பணி புரிய ஆவணம் செய்துக் கொண்டாள்.
இன்றைக்கு புதிய ப்ராஜெக்ட் எடுத்து இருப்பதால் அதனுடைய தகவல்களை சேகரித்து வாங்கிக்கொள்ளவே நேரடியாக அலுவலகம் வரவேண்டி இருந்தது.
புது டீம் லீடர் இன்னைக்கு வரப் போவதாக சொல்லி இருந்த போதிலும் அவளால் வேகமாக கிளம்பி வர முடியவில்லை.
ஆறுமாத குழந்தைக்கு காய்ச்சல்... அவனை விட்டுட்டுவரவே மனமில்லை. நை நை என்று ஒரே அழுகை. காய்ச்சல் வந்தாலே அவன் தனியாக படுக்க மாட்டான்.
அம்மாவின் மடியிலோ அல்லது மார்பிலோ தான் இருப்பான். அம்மாவின் உடம்பு சூடு அவனுக்கு இருந்துக் கொண்டே இருக்கணும். அப்படி இருந்துமே அவன் அழுதுக் கொண்டும் சிணுங்கிக் கொண்டும் இருப்பான்.
அப்படி இருப்பவனை க்ரஸில் விட்டுவிட்டு வர கொஞ்சம் தாமதமாகி இருந்தது. அதற்குள் காண்பரன்ஸ் ஆரம்பித்து இருக்க தன் லேட்டஸ்ட் டேபோடு உள்ளே நுழைந்தாள் முரலா...
அங்கு அனைவரும் மகராவை தான் திரும்பி பார்த்தார்கள். அதில் கடுப்பான பஞ்சவன்,
“ஹேய் இடியட்... அறிவில்ல... இப்படி தான் திறந்த வீட்டுக்குள்ள ஏதோ மாதிரி வருவியா... பேசிக் சென்ஸ் கூட இல்லையா..?” என்று அவளை திட்டினான்.
அவன் டீம் லீடர்க்கே டீம் லீடர்... மிகப்பெரிய பதவியில் இருப்பவன். அவனே இன்னைக்கு வந்து இந்த புது ப்ராஜெக்ட் பத்தி டீட்டையில் சொல்ல இருப்பதால் அனைவருக்குமே ஒரு பதட்டம் இருந்தது. அந்த பதட்டம் கொஞ்சம் கூட இல்லாமல் தன் முன் வந்து நின்றவளை பார்த்து அவ்வளவு கோவம் வந்தது. அதை விட அவனுக்கும் நேரம் தவறாமை ரொம்ப முக்கியம். அதை அவள் சரியாக கடை பிடிக்கததால் ஆத்திரம் வந்தது.
அதோடு அவன் அவ்வளவு முக்கிய ப்ராஜெக்ட்டை பத்தி சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது அதை விட்டுட்டு அனைவரும் உள்ளே வந்தவளின் மீது கவனத்தை வைக்க சுல்லேன்று கோவம் வந்தது பஞ்சவனுக்கு. அதை அவளிமே காட்டவும் செய்தான்.
அவன் அத்தனை பேரின் முன்னிலையிலும் கோவத்தை காட்டியதில் கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது... அவளின் அந்த அழுகையை அடக்கிக்கொண்டு நின்ற தோற்றத்தை கண்டு மேனேஜர் உதவிக்கு வந்தார்.
“பேபிக்கு உடம்பு சரியில்ல.. பெர்மிஷன் கேட்டு இருந்தாங்க சார்..” என்று பவ்யமாக சொல்ல,
“தட்ஸ் ஓகே.. பட் இந்த த்ரீ டேஸூம் கவனமா இருக்க சொல்லுங்க. எனக்கு லேட்டா வர்றதோ எல்லாரோட கவனத்தையும் திசை திருப்புறதோ இருக்க கூடாது. இந்த ப்ராஜெக்ட்டுக்கு இந்த மூணு நாள் தான் முக்கியம். இதை வச்சு தான் நாம டெவலப் பண்ணனும்” என்று அந்த மேனேஜரிடம் சொன்னவன் தன் வேலையை ஆரம்பித்தான்.
யூசெர்ஸ் கொடுத்த டீட்டையிலை அனைவருக்கும் விவரித்து சொல்ல ஆரம்பித்தான்.
“அவங்களோட எதிர்பார்ப்பு இது... சோ அதுக்கு ஏற்றார் போல நாம இதை ரெடி பண்ணனும். டைம் டூ மந்த்ஸ்...” என்று அவன் எல்லாவற்றையும் உணவு இடைவேளை வரை விளக்கி விட்டு, “இதை எந்த எந்த மாதிரி செய்யலாம்னு ஒரு சாட் லிஸ்ட் போடுங்க... தென் டிஸ்கஸ் பண்ணிட்டு நான் என்னோட ஒபினியன சொல்றேன்” என்று கிளம்பி விட்டான்.
பஞ்சவன் சொன்னதை எல்லாம் நோட்ஸ் எடுத்துக் கொண்டவள் அலுவலகத்தில் டிஸ்கஸ் பண்ணாமல் மேனேஜரிடம் சொல்லிவிட்டு குழந்தையை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு போய் விட்டாள்.
இனி அடுத்த நாள் தான் மீட்டிங். சோ அலுவலகத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே கிளம்பி விட்டாள்.
அவள் வந்தவுடன் அவளிடம் தாவிய குழந்தை மிகவும் சோர்வு உற்று இருந்தான். அவனை அள்ளி எடுத்து பேபி பேக்கில் வைத்து தனக்கு முன்புறமாக லாக் பண்ணிக் கொண்டவள் தன் இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கி பயணித்தாள்.
சிங்கிள் மதர்.. கணவனை விவகாரத்து செய்து விட்டு ஒற்றை பிள்ளையோடு தனித்து நிற்கிறாள். கணவனை விவகாரத்து செய்ததால் எங்கே தங்களுக்கு பாரமாக வந்து விடுவாளோ என்று அஞ்சி பெற்றவர்கள் அவளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
எவ்வளவோ வாழ்க்கையில் பார்த்து விட்டதால் இதையும் சுலபமாகவே கடந்து வந்து விட்டாள். அவளுக்கு என்று துணை இருப்பது அவளின் மகன் மட்டுமே...
இந்த பக்கம் மீட்டிங்கை முடித்த பஞ்சவன் மேனேஜரை அழைத்து மேற்கொண்ட விவரங்களை எல்லாம் பகிர்ந்தவன் வீட்டுக்கு கிளம்பி விட்டான்.
தனக்கு எதிரில் இருந்த உயர்ந்த கட்டிடத்தை பார்த்தான் பஞ்சவன்.
“சார் இந்த பில்டிங்கல மூணாவது ப்ளோர். வாங்க சார் நான் லகேஜ் தூக்கிக்கிறேன்” என்று செக்யூரிட்டி பஞ்சவனின் லக்கேஜ் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு முன்னே சென்றான். அவனின் பின்னோடு அந்த பில்டிங்கை கண்களால் அலசியபடியே வந்தான் பஞ்சவன்.
இதற்கு முன்பு மும்பையில் இருந்தவன் இப்பொழுது சென்னையில் வசிக்க வந்து இருக்கிறான் நிரந்தரமாக. அதனால் தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்வையாலே முழுவதும் அலசி எடுத்தான். ஏற்கனவே பார்த்து முடிவு செய்து சொந்தமாக வாங்கி விட்டான் ஒரு பிளாட்டை. அவனது பார்வையில் எப்பொழுதும் ஒரு கூர்மை இருக்கும். தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் உள்ளுக்குள் வாங்கிக் கொள்வான்.
அதனால் இந்த இடத்தையும் நன்றாக பார்த்து கவனத்தில் பதிய வைத்துக் கொண்டான். அந்த நேரம் அவனது கையில் இருக்கும் பிள்ளை அழ ஆரம்பித்தாள்.
பிறந்து மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தை...! அவள் வாய் விட்டு அழுவதை பார்த்தவனுக்கு, “அச்சுக் குட்டிக்கு பசி வந்துடுச்சோ...” என்று செல்லம் கொஞ்ச,
“சீக்கிரம் டா... பிள்ளை பாவம்” என்று அவனின் அருகில் வந்துக் கொண்டு இருந்த யுவன் பரபரத்தான்.
“வந்துட்டோம்டா... வீடு எல்லாம் பக்காவா கிளீன் பண்ணி தான் இருக்கு. பொருட்கள் எல்லாம் வாங்கி வைக்க சொல்லிட்டேன் அதனால நீ படபடக்காத...” என்று யுவனை சமாதனம் செய்தவன் தன் பிள்ளையை தூக்கி கொஞ்சம் சிரிப்பு காட்டி அவளோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் பஞ்சவன்.
யுவன் சுடு தண்ணி வைக்க அடுப்படிக்கு ஓடினான். அதென்னவோ அந்த பிள்ளை மீது அவனுக்கு அப்படி ஒரு பாசம். இருக்காதா பின்ன உயிர் நண்பனின் பிள்ளையன்றோ அவள்.
பால் கலக்கி எடுத்துக் கொண்டு வந்தவன் பஞ்சவனிடம் கொடுக்க அதை பதம் பார்த்து பிள்ளைக்கு கொடுத்தான்.
பஞ்சவன் பிள்ளைக்கு பால் கொடுக்க “நான் போய் நமக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரேன்டா” என்று வெளியே போனான் யுவன்.
அவன் போனதுக்கு பிறகு கொண்டு வந்த தொட்டிலை செட் செய்தவன் அதில் விரிப்பு விரித்து விட்டு குழந்தையை படுக்க வைத்து லேசாக ஆட்டி விட்டான். கொஞ்ச நேரம் விழித்துக் கொண்டு இருந்தவள் தந்தையின் ஆலாபனையில் தூங்கிப்போனாள் குட்டி இளவரசி.
குழந்தை தூங்குவதை பார்த்து பெருமூச்சு விட்டவன் பிள்ளைக்கு தாய் பால் கிடைக்குமா என்று நெட்டில் சேர்ச் செய்து பார்த்தான்.
அதில் அவனது அப்பார்ட்மெண்டிலே லொகேஷன் காண்பிக்க எந்த வீடு என்று பார்த்தான்.
அவனுக்கு பக்கத்து பிளாட் தான்... இவன் டி, அந்த வீடு பி.
“பரவாயில்லையே...” என்று வியந்தவன் அதில் கொடுத்து இருந்த நம்பருக்கு போன் செய்தான் டீட்டையில் கேட்க.
“ஹலோ” அந்த பக்கம் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது.
“யாரு சொல்லுங்க” என்று மேலும் அந்த குரல் கேட்க,
“ஐ ஆம் பஞ்சவன்.. எனக்கு ஒரு பெண் குழந்தை. அம்மா இல்ல... சோ என் பேபிக்கு மதர் பீடிங் வேணும்” என்றான் தன் தயக்கத்தை உதறி.
“நோ ப்ராப்ளம்.. மார்னிங் ஒரு நேரம், ஈவினிங் ஒரு டைம் வந்து கலெக்ட் பண்ணிக்கோங்க. வரும் பொழுது கண்ணாடி பாட்டில் மஸ்ட். பிளாஸ்டிக் பாட்டில் எடுத்துட்டு வந்தா நான் அக்சப்ட் பண்ண மாட்டேன்” என்று காரராக சொன்னாள்.
அதில் பஞ்சவனுக்கு கொஞ்சம் சுர்ரென்று ஏறியது.. ஆனாலும் அவள் சொன்ன நல்லது புரிய “ஓகே... பட் இன்னைக்கு முடியாது.. நாளையில இருந்து வாங்கிட்டு வரேன்” என்றான்.
“நோ ப்ராப்ளம் என்கிட்டே அடிஷ்னலுக்கு வச்சு இருப்பேன். அதுல குடுக்குறேன்” என்றவள்,
“நீங்க எப்போ வருவீங்க?” என்று கேட்டாள்.
“நா... நான்” என்று ஒரு கணம் தடுமாறியவன்,
“இங்க உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற வீடு தான்” என்றான்.
“ஓ...! அடுத்த பிள்டிங்கா” என்று கேட்டாள்.
“இல்ல உங்க பிளாட்டுக்கு பக்கத்துல இருக்கிற டி பிளாட்” என்றான்.
அதில் ஒரு கணம் அந்த பக்கம் மௌனம் நிலவியது.
“தட்ஸ் ஓகே...” என்றாள்.
“இப்போ தான் பேபி தூங்குனா. அவ எழுந்துக்க இன்னும் ஒன்னவர் ஆகும்... சோ நான் ஒரு ஹபனவர் கழிச்சு வரேன்” என்றான்.
“ம்ம்” என்று வைத்து விட்டாள். என்னவோ அந்த பெண்ணிடம் இயல்பாக பேச முடியவில்லை அவனால். இவ்வளவு அருகில் அவன் எதிர்பார்க்காதது ஒரு காரணமாக இருந்தாலும் ஏதோ ஒரு தடுப்பு இருக்கிறது என்று அப்பொழுதே உணர்ந்தான்.
பெருமூச்சு விட்டவன் தன் பிள்ளையை ஒரு பார்வை பார்த்தான். அவனது நீண்ட விரல்கள் அவளது தலையை மெல்ல கோதி விட்டது. “நீ தான் தங்கம் என்னோட ஆதாரமே...” என்று குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.
அதற்குள் யுவன் வந்து விட இருவரும் உண்டு விட்டு எழ “பக்கத்து வீடு வரைக்கும் போயிட்டு வரேன்டா” என்று சொல்லி விட்டு இயல்பான தோற்றத்துடன் பக்கத்துக்கு வீட்டு கதவை தட்டினான்.
கொஞ்ச நேரம் கழித்தே கதவு திறக்கப்பட்டது. அதிலே அவனது முகத்தில் ஒரு ஒவ்வாமை எழுந்தது. ஆனால் தன் பிள்ளையின் ஆரோக்கியத்துக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டான்.
கதவு திறந்த உடன் நிமிர்ந்து பார்த்தான். எதிரில் மகரா அலுவலகத்துக்கு வந்த தே புடவையில் நின்று இருந்தாள்.
இருவருமே அதை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. மகரா தன் அதிர்வை கொஞ்சம் வெளிப்படையாக காட்டினாள் என்றாலும் சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டாள்.
ஆனால் பஞ்சவன் மிக அழுத்தமாக நின்று இருந்தான் தன் உணர்வுகளை எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல். சுதாரித்துக் கொண்டவள்,
“நீங்க..” என்று அவள் கேட்க,
“போன்ல பேசினேனே...” என்றான்.
“ஓகே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றவள் கதவை சாத்திக் கொண்டாள்.
அதில் அவமானமாக உணர்ந்தவன் பல்லைக் கடித்துக் கொண்டான்.
“என் பிள்ளைக்காக மட்டும் தான்...” என்று வெளி புறம் வேடிக்கை பார்க்க அந்த காரிடாரில் போய் நின்று கொண்டான். சிறிது நேரம் பார்த்தவன் பின் அவனது வீட்டுக்கு போய் விட்டான்.
யுவனை அழைத்து வாங்கி வர சொல்லி விட்டு போய் படுத்து விட்டான்.
யுவன் காத்திருந்து வாங்கி வந்தான்.
பிள்ளை அழும் சத்தத்தில் கண் விழித்த பஞ்சவன்,
“வாங்கிட்டு வந்துட்டியாடா?” கேட்டுக் கொண்டே அறையை வெளியே வந்தான்.
“ஆமாம் மச்சான். இந்தா” என்று எடுத்துக் கொடுக்க பிள்ளையை மடியில் போட்டு புகட்டினான் பஞ்சவன்.
“பாவம்டா அந்த பொண்ணு” என்று சொன்னான் யுவன்.
“ஏன் என்னவாம்?” என்பது போல பார்த்தான்.
“டைவர்ஸ் ஆகிடுச்சு போல... உதவிக்குன்னு யாரும் இல்ல. அந்த பொண்ணும் ஒரு கைக்குழந்தையும் தான் இருக்காங்க” என்று சொன்னான்.
“அதுக்குள்ள எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கிட்டியா?”
“ம்ம்ம் கீழ உணவு வாங்க போனேன்ல அப்போ செக்யூரிட்டி தான் சொன்னாப்ல”
“ம்ம்ம்” என்ற பஞ்சவனுக்கு அவளின் செயலில் இருந்த பொருள் புரிந்தது. தனியாக இருப்பதால் தான் தன்னை உள்ளே கூப்பிடவில்லை அந்நிய ஆடவனை எப்படி உள்ளே கூப்பிடுவாள்... என்று எண்ணியவனுக்கு இதழ்களில் ஓரம் சிறு மலர்வு உதித்தது.
அதன் பிறகு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“அடுத்து எப்போ வர சொல்லி சொல்லி இருக்கா” என்று கேட்டான் யுவனிடம்.
“ஏழு மணிக்கு வரச் சொல்லி சொன்னாங்க” என்றான்.
“ம்ம்ம்” என்று கேட்டுக் கொண்டவன் மெலிந்து போய் இருந்த பிள்ளையை பார்த்தான். நெஞ்சில் வலி சுருக்கு சுருக்கு என்று எழுந்தது. அதை அடக்கியபடி தன் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு வேலை செய்ய அமர்ந்தான்.
யுவனும் அவனது வேலையை பார்க்க ஆரம்பித்தான். “உங்க வீட்டுக்கு போன் பேசுனியாடா..?” என்று கேட்ட யுவனை முறைத்து பார்த்தான்.
“இல்ல மச்சான் அம்மா தான் உன்னை ரொம்ப தேடுறாங்க” என்று சொல்ல, பஞ்சவனிடம் பெருமூச்சு மட்டுமே எழுந்தது.
“ஒரே ஒரு முறை மட்டும் ஊருக்கு போயிட்டு வந்துடலாம் டா” என்றவனை மீண்டும் முறைத்துப் பார்த்தான் பஞ்சவன்.
அவனது பார்வையில் அனல் வீச வாயை கப்பென்று மூடிக்கொண்டான் யுவன். அதன் பிறகு அவன் அதை பற்றி எதுவும் பேசவில்லை. பேச ஆரம்பித்தால் பஞ்சவனிடம் யார் வாங்கிக் கட்டுவது... அதனால் உத்தமமாக வாயை மூடிக் கொண்டான்.
படித்து விட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே