இரண்டு பெண்களின் நிலை மிகவும் கவலைக்குரிய நிலையில் இருந்ததை இரு ஆண்களும் கொஞ்சமும் கண்டுக் கொள்ளவில்லை. வீட்டுக்கு வெளியில் நெற்றியில் வழிந்த உதிரத்துடன் தயாழினி நின்று இருக்க, குறிஞ்சியோ வீட்டுக்குள் இருந்தாள் அவ்வளவு தான் வித்யாசம். மத்தபடி அவளின் நெற்றியில் இருந்தும் உதிரம் கொட்டிக் கொண்டு இருந்தது.
இவர்களின் நிலை இப்படி இருக்க, பிறை நிலாவின் நிலை வேறு மாதிரி இருந்தது.
இரண்டு கன்னங்களும் பிரபாகரனின் கை வண்ணத்தில் புஸ்சென்று வீங்கி, கன்னிப் போய் சிவந்து இருந்தது. பற்கள் குத்தி உதடுகள் கிழிந்து உதிரம் துளிர்த்து நின்ற அவளின் நிலையை பார்க்க பார்க்க பெற்றவர்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.
“ஏன் பிறை அந்த ஆள் கிட்ட வாயை விடுற.. பாரு எப்படி அடிச்சு வச்சு இருக்கான்னு” என்று தாய் அவளின் வாயோறோம் வழிந்த உதிரத்தை துடைத்து விட்டார்.
“அதுக்காக அவனை சும்மா விட சொல்றீங்களா ம்மா... என்ன பேச்சு பேசுறான். இவான் கிட்ட கை நீட்டி காசு வாங்கிட்டா இவனுக்கு அடங்கி போகணுமா என்ன... எவன் காசி வாங்கினானோ அவனை பிடிக்க துப்பு இல்ல இப்ப தான் நம்மக்கிட்ட வீரத்தை காட்டுறான் பொறம்போக்கு” என்று அவ்வளவு வலியிலும் பிரபாகரனை கரித்துக் கொட்டினாள்.
“கொஞ்சம் சும்மா இரு சின்ன பாப்பா... அந்த தடியனுக்கு கேட்டா மறுபடியும் வந்து அடிச்சு வச்சிடப் போறான்” என்று சந்தானம் தன் மகளை அடக்கினார்.
“ஏன் வரட்டுமே என்ன பயமாம்..” என்று சீறினாள்.
“வாயை அடக்குடி” என்று மலர் மகளை அடக்கினார்.
“சும்மா சும்மா என்னையே அடக்காதீங்க ம்மா” எரிந்து விழுந்தவள் தாயின் மடியில் படுத்துக் கொண்டாள்.
படுத்து கொஞ்ச நேரம் கூட இருக்காது உடனே அவளை அழைக்க ஆள் வந்து விட்டது.
“வாம்மா உன்னை சின்ன அய்யா கூப்பிடுறாங்க”
“வரமுடியாதுன்னு போய் சொல்லு” என்றாள் திமிராக.
“அப்போ உங்க அம்மாவை வர சொன்னாரு” என்று அந்த பணிப்பெண் சொல்ல, பத்திக் கொண்டு வந்தது பிறைக்கு.
“இவனோட...” பல்லைக் கடித்தவள், எழுந்து விறு விறுவென்று பிரபாகரனின் அறையை நோக்கி சென்றாள்.
“எதுக்கு கூப்பிட்டீங்க?” என்று கொக்கொரிதுக் கொண்டு நின்றாள்.
“என்னடி ரொம்ப துள்ளுற.. துள்ளுற உடம்பை வெட்டி போட்டுடுவேன். என்கிட்ட கவனமா இரு” என்று எச்சரித்தான்.
“அப்படி தாண்டா துள்ளுவேன்.. என்னடா பண்ணுவ?” என்ற நேரமே ஓங்கி அவளது காலில் முட்டிக்கு கீழே ஒரு உதை விட்டான். அதை எதிர் பாராதவள் அப்படியே மண்டியிட்டு முன்னாள் சரிந்தாள். அது சரியாக அவனது காலில் விழுந்தது போல ஆகிவிட, அவமானத்தில் முகம் சுருங்கிப் போனது பிறக்கு.
“என்னடி கால்ல எல்லாம் விழற, எங்க போச்சு உன் வீரம்?” நக்கல் பண்ணினான்.
“டேய்...” பல்லைக் கடித்தவள்,
பட்டென்று எழப்பார்க்க, அவளின் முதுகில் தன் காலை வைத்து தரையோடு அமுக்கிக் கொண்டான். அவளுக்கு அதில் மூச்சு முட்டிப் போக,
“டேய் விடுடா பரதேசி. மூச்சு முட்டுது” என்றவளின் பேச்சை கொஞ்சமும் காதிலே வாங்கிக் கொள்ளாமல் இன்னும் அவளை தரையோடு தரையாக அழுத்தி பிடித்தவன்,
“என்னை எதிர்த்து பேசுன மகளே சாவடி அடிச்சுடுவேன்டி” உறுமினான்.
“போடா டேய் போடா பொம்பளை பொறுக்கி.. உன் வண்டவாளம் எல்லாம் எனக்கும் தெரியும். நீ என்னை கொடுமை படுத்துற எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு உன்னை ஒரு நாள் பழி வாங்குவேன்டா.. அப்போ தெரியும் இந்த பிறை யாருன்னு” என்றவளின் திமிர் இன்னும் குறையாமல் இருக்க, தன் ஒட்டு மொத்த பலத்தையும் வைத்து அவளை தரையோடு தரையாக நசுக்கிப் பிடிக்க, துடித்துப் போனாள் பெண்ணவள்.
தரையில் அடித்து தன் எதிர்ப்பை அவள் காட்ட, அவளை இன்னும் துடிக்க வச்ச பிறகே அவள் மீது இருந்து காலை எடுத்தான் பிரபாகரன்.
அவன் விடவும் எழுந்து அமர்ந்தவள் நெடு மூச்சுகளை நாலு வாங்கி வெளியே விட்ட பிறகே இயல்புக்கு வந்தாள்.
“என்ன இப்பவாவது புத்தி வந்துச்சா இல்லையா?” நக்கலுடன் கேட்டான்.
“ஓ... நல்ல வந்ததே” என்று சொன்னவளின் பேச்சில் இருந்த ஏகத்தாலும் அவனுக்கு கடுப்பை கிளப்ப,
“இந்த திமிருக்கு தான்டி என்கிட்டே வாங்கி கட்டுற..” என்றவன்,
“அறையை சுத்தம் பண்ணு” கட்டளை போட்டான்.
“வெளிய போ.. சுத்தம் பண்றேன்” என்றாள் அவள்.
“நான் இங்க தான்டி இருப்பேன்” என்றான் திமிராக.
“அப்போ என்னால சுத்தம் செய்ய முடியாது” என்றாள் உறுதியாக.
“ஓ... இந்த அழகு சிலையை சைட் அடிப்பேன்னு நினைச்சியோ... போடி கருப்பாயி.. உன்னை எல்லாம் சீண்ட கூட மாட்டான் இந்த பிரபாகரன்..” என்றவன் அவளிடம் ஒரு புகைப்படத்தை காட்டி,
“பார்த்தியா இவ தான் என் கேர்ல் பிரெண்ட்.. எப்படி சும்மா நச்சுன்னு இருக்காளா.. பால் கலர்டி அவ.. அவளை விட்டுட்டு உன்கிட்ட போய் வருவானாடி.. த்தூ” என்று துப்ப, பெரும் அவாமானமாய் உணர்ந்தவள்,
“போடா பொறுக்கி... உன்னை சும்மா குடுத்தா கூட எனக்கு வேணாம்.. அந்த வெள்ளை பணியாரத்தையே கட்டிக்க” என்று பதிலடி கொடுத்தவள் கூட்டி பெருக்க ஆரம்பித்தாள். அவாள் கூட்டிய இடத்தில் வேண்டுமென்றே இவன் குப்பையை போட்டு அவளை மேலும் வேலை வாங்க,
ஒரு கட்டத்தில் போருக்க முடியாமல் கையில் வைத்து இருந்த துடைப்பத்தாலே அவனை ஓரடி போட, அவ்வளவு தான் பொங்கி எழுந்து விட்டான்.
அவள் அடித்த மாரை பிடுங்கி அவளை குனிய வைத்து மளார் மளார் என்று வெளுத்து கட்டி விட்டான்.
“ஐயோ அம்மா.. விடுடா பொறுக்கி” என்று கத்தி கதறி துடித்து பான் விட்டாள். இவள் சும்மா சின்னதாய் தான் அடித்தாள். ஆனால் விளக்குமாறால் அடிக்கவும் அவனின் ஈகோ சீண்டி போய் விட, அவளை அடி பின்னி எடுத்து விட்டான்.
எல்லாத்துக்கும் அடி போடுவது பிறை தான். பிறகு அவனை குற்றம் சொல்லுவது எந்த விதத்திலும் சரி இல்லையே..
இவளுக்கு வாயும் கையும் நீளம். அதற்கு ஏற்றார் போல தான் இவளும் வாங்கி கட்டிக் கொண்டு இருக்கிறாள். முதுகு கை கால் என எல்லா இடமும் கன்னிப்போய் வந்த மகளை பார்த்து துடித்துப் போனார்கள் பெற்றவர்கள்.
“என்னடி பண்ணி தொலைச்ச? இப்படி வந்து நிக்கிற” என்று மலர் கண்ணீர் வடிக்க,
“விளக்குமாறள அடிச்சா எவன் சும்மா இருப்பான். அது தான் நாலு காட்டு காட்டிட்டான்.. நீ அழுவாத விடு.. தூக்கம் வருது” என்று அவர்களுக்கு என்று ஒதுக்கி இருந்த அறைக்குள் படுத்து விட்டாள்.
படுத்தவளுக்கு மருந்து போட்டு விட்டார் மலர் கண்ணீருடன். சந்தானமோ பிரபாகரனின் அறைக்கு போய் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இருந்தார்.
“சாரிங்க தம்பி என் பொண்ணு பண்ணி இருக்கிறது எவ்வளவு பெரிய குற்றம்னு எனக்கு நல்லாவே தெரியும்.. அவளை மன்னிச்சு விட்டுடுங்க” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தவரை முறைத்துப் பார்த்தவன்,
“இன்னும் என் முழு சுய ரூபத்தை நான் காட்டி இருக்கல. அதை மட்டும் காட்டுனன்னா உன் பொண்ணு இன்னைக்கு செய்த செயலுக்கு உயிரோடவே இருந்து இருக்க மாட்டா... பொண்ணாய்யா வளர்த்து வச்சு இருக்க சரியான பஜாரியா இருக்கா” என்று அவருக்கும் இரண்டு திட்டை போட்டவன்,
“ஒழுங்கா உன் பெண்ணை இருக்க சொல்லு.. இல்ல அவளை சாவடிச்சுடுவேன்.. நாங்க யாரு என்னன்னு தெரியும் தானே..” என்று சொன்னவனை கண்டு கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பை கேட்டவர் தளர்ந்து போய் வந்தார்.
மலருக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. தாய் தந்தையுடன் இருக்கும் மகளே இந்த பாடு படுகிறாள் எனில், தனியாக சிக்கி இருக்கும் மற்ற இரு மகளும் என்ன பாடு பாடுகிறார்களோ என்று மனம் கலங்கி போய் கண்ணீர் சிந்தினார்.
“கடவுளே என் பெண்களை நீ தான் காப்பாற்றனும். அவர்களுக்கு உன்னை விட்டால் யாரும் துணை கிடையாது. என் மகனுங்க செஞ்ச தப்புக்கு என் பொண்ணுங்க பாரம் சுமக்குறாளுங்க..” வேதனையுடன் புலம்பியவரை கொஞ்சம் கொஞ்சமாக சந்தானம் தேற்றினார். அவராலும் இங்கிருந்து எங்கும் செல்ல முடியாத நிலை.
தன் மகள்களின் நிலை என்னவோ ஏதோ என்று மறுகிப் போனார்.
குறிஞ்சிக்கு தலையில் அடிபட்டு உதிரம் கொட்டவும் அப்படியே மயங்கிப் போய் விட்டாள். கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்த குணாதரன் அவள் மயக்கமாகி இருப்பதை பார்த்து விட்டு மீண்டும் கதவை சாற்றி விட்டு போய் விட்டான்.
வெளிவாசலில் கிடந்த தயாழினியோ குளிரில் நடுநடுங்கிக் கொண்டு இருந்தாள். நெற்றியில் வழிந்த உதிரத்தின் மீது தன் முந்தானையை வைத்து பிடித்துக் கொண்டவள், அப்படியே கதவில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.
உயிரை உறைய வைக்கும் குளிரோடு சேர்ந்து சன்னமாக சாரலும் வீச ஆரம்பிக்க அவளின் தேகம் மொத்தமும் நடுநடுங்கிப் போனது. குளிர் வாட்டி எடுத்தது.
தயாகரனிடம் கெஞ்சி கேட்டு உள்ளே போய் விடலாம் தான். ஆனால் அவளுக்குள் இருக்கும் சுயமரியாதை அதை தடுக்க, அவ்வளவு குளிரையும், வலியையும் தாங்கிக் கொண்டு கால்களை தன் கைகளால் கட்டிக் கொண்டு குறுகி அமர்ந்துக் கொண்டாள்.
அவளின் மன வலிமையை பார்த்துக் கொண்டு தான் இருந்தான் தயாகரன். கால் வலிக்க குறுங்கண் ஓரம் நின்றபடியே அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். இரவு முழுவதும் அவன் அங்கே தான் நின்று இருந்தான்.
தொடரும்..
ரொம்ப பண்றீங்க டா எல்லாரும்....
பிறை நீ உன் வாயை வெச்சிட்டு சும்மா இருந்தாலே....உனக்கு அடி விழாது......
ரொம்ப பண்றீங்க டா எல்லாரும்....
பிறை நீ உன் வாயை வெச்சிட்டு சும்மா இருந்தாலே....உனக்கு அடி விழாது......
அவனுங்க குணமே அப்படி தானேடா..
பிறையால தான் அதை செய்ய முடியாதே..
வாயடக்கமே கிடையாது அவளுக்கு