தயாகரனின் வக்கிரத்தில் கிலி பிடித்தது தயாழினிக்கு.
“ச்சீ நீயெல்லாம் மனுசனே இல்ல.. அரக்கன். அரக்கன கூட ஒரு விதத்துல சேர்த்துக்கலாம். ஆனா நீ எல்லோரையும் விட ஈன புத்தி உள்ள பிறவி. உனக்கு எல்லாம் கேடு காலம் மட்டும் தான்டா.. நல்ல வாழ்வே வாழ மாட்ட” என்று சொன்னவளின் தலை முடியை பிடித்து அப்படியே சுவரில் தள்ளி விட, அவளின் நெற்றி உடைந்துப் போனது.
உதிரம் அப்படியே கொட்டியது.
“ஐயோ அம்மா” என்று அவள் அலறி துடிக்க கொஞ்சமும் இறக்கம் காட்டாமல் அவளை தரதரவென்று இழுத்து வந்து கொட்டும் பனியில் போட்டவன் கதவை அழுந்த சாற்றி விட்டான்.
கடும் பனி காலமாக இருந்ததால் அவளால் குளிரை தாங்க முடியாமல் நடுநடுங்கிப் போனாள்.
விழிகளில் கண்ணீர் வழிய, நெற்றியில் உதிரம் வழிய அவள் இருந்த கோலம் நெஞ்சை கசக்கி பிடிக்கும் யாருக்காக இருந்தாலும். ஆனால் தயாகரனுக்கு எந்த உணர்வும் வரவில்லை போல...
குறுங்கண் வழியாக ஷம்பெயினை குடித்தபடி பார்த்துக் கொண்டு இருந்தான் எந்த சலனமும் இல்லாமல்.
இங்கே இந்த நிலை என்றால் குணாதரன் காவலர் குடி இருப்பில் இருந்த குறிஞ்சியின் நிலை அந்தோ பரிதாபம்.
--
அக்கா தயாழினி சொன்னதை கேட்காமல் கையில் இருந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு, தயாகரனின் வீட்டை விட்டு தப்பித்து வெளியே வந்தவளின் காதில் அந்த பக்கமாக வந்துக் கொண்டு இருந்த போலீஸ் வாகனத்தின் சத்தம் கேட்க, உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்த வாகனத்தை நோக்கி ஓடினாள்.
அவள் ஓடி வருவதை பார்த்துக் கொண்டு இருந்த குணாதரனுக்கு இதழ்களில் ஏளன சிரிப்பு வந்தது.
அதே நேரம் அவனின் போனுக்கு ஒரு கால் வர, எடுத்துப் பார்த்தான் அவனின் அண்ணன் தயாகரன் தான்.
“அண்ணா” என்று சொல்ல,
“ஆடு வந்துட்டு இருக்கு” என்றான் அவன்.
“நான் பார்த்துக்குறேன் ண்ணா.. கசாப்பு போட வேண்டியது என்னோட வேலை” என்று சொல்ல வைத்து விட்டான் அவன்.
போனை வைத்து விட்டு கண்ணாடியை ஒரு பார்வை பார்த்தான். “இன்னும் கொஞ்சம் இவளை ஓட விடலாமே..” என்று அவனின் உள்ளம் குறுகுறுக்க வண்டியை வேகமாக ஓட்ட சொன்னான் ஓட்டுனரிடம்.
முன்பை விட வேகமாக வண்டி செல்லுவதை பார்த்த குறிஞ்சிக்கு அய்யோ என்று வந்தது. ஆனாலும் தன் முயற்சியை கை விடாமல் தொடர்ந்து ஓடினாள்.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி வருபவளை வஞ்சனையுடன் பார்த்தவனின் விழிகளில் அவளை பழிவாங்க வெறி கூடிப் போனது.
“சார் ஒரு பொண்ணுக்கு வேகமா நம்ம ஜீப்பை பின் தொடர்ந்து ஓடி வருது.. அந்த பொண்ணுக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். ஜீப்பை நிறுத்தவா சார்” என்று ஓட்டுனர் பவ்யமாக கேட்க, திரும்பி அவரை ஒரு முறை முறைத்தான்.
அதில் வேகமாய் காரை ஓட்ட ஆரம்பித்தார். இல்லை என்றால் வயசு வித்யாசம் எல்லாம் எதுவும் பார்க்காமட்டான் ஓங்கி ஒரே அரை தான். அதில் நான்கு நாட்களுக்கு ஒரு பக்க காது கேட்காமலே போய் விடும். எனவே தன் வாயை மூடிக் கொண்டு வண்டியை ஓட்டும் வேலையை மட்டும் பார்த்தார் அவர்.
இங்கு மூச்சிரைக்க ஓடி வந்த குறிஞ்சிக்கு அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கிட்டத்தட்ட கால் மணி நேரமாகவே விடாமல் ஓடிக் கொண்டு இருந்தாள். இயல்பாக அவளால் அவ்வளவு வேகமாகவும் தூரமாகவும் ஓட முடியாது தான். ஆனால் ஆபத்து காதலத்தில் இயல்பாகவே வெளிப்படும் ஹிஸ்டாரிக்கல் ஸ்ட்ரெந்த் என்று ஒன்று வெளிப்படுமே.. அதோடு சேர்த்து ஒரு வைராக்கியமும் வெளிப்படுமே.. அந்த உந்துதல் மட்டும் தான் அவளை இவ்வளவு நேரமும் ஓட வைத்து இருந்தது.
அந்த உந்துதல் அவளின் உடலுக்கு இவ்வளவு நேரமும் வழு கொடுத்தது. ஆனால் உடல் தன் சக்தியை இழக்க, இப்பொழுது மனதுக்கு மட்டும் தான் அதால் வழு கொடுக்க முடிந்தது. மனது இடும் கட்டளைக்கு உடல் அடி பணியாமல் போக தளர்ந்து போய் விட்டாள்.
அவள் தளர்வதை கண்ணாடி வழியாக பார்த்த காவலன் வண்டியை மெதுவாக ஓட்ட சொன்னான்.
ஓட்டுனரும் மெதுவாக நகர்த்த, வண்டி மெதுவாக போவாதை உணர்ந்த குறிஞ்சி மறுபடியும் முயற்சி செய்யலாம் என்று எண்ணி ஓடி வந்து வண்டியை தொட்டு விட்டாள்.
“சார்.. சார்..” என்று மூச்சிரைக்க இரைக்க கத்தினாள்.
“வண்டியை கொஞ்ச நேரம் கழிச்சு நிறுத்து” என்று கட்டளை இட்டவன் சொகுசாக அவள் கத்துவதையும் பின்னாடி ஓடி வருவதையும் பார்த்துக் கொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான்.
வியர்த்து விருவிருவித்து வந்தவளை காண காண அவளை இன்னும் அலைக்கழிக்க அவனது உள்ளம் துடித்தது.
“இங்க இந்த ஆட்டம் போதும். மீதியை வீட்டுல போய் பார்த்துக்கலாம்” என்று மீசையை முறுக்கி விட்டவன்,
“ம்ம்” என்று கட்டளை போட்டான். வண்டி நின்று விட்டது.
“யாருமா நீ .. இந்த ராத்திரியில இப்படி ஓடி வந்துட்டு இருக்க?” கம்பீரமாய் கேள்வி கேட்டவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டவளுக்கு மூச்சு தான் வந்தது. அவளால் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை.
அவள் படும் அவஸ்த்தையை பார்த்து, தண்ணி குடிக்கிறியா? என்று கேட்டான்.
ம்ம்என்று அவள் தலையை ஆட்ட,
“அச்சச்சோ தண்ணி இல்லையே” என்று வெறும் பாட்டிலை தூக்கி காட்டினான்.
ஆனால் அவனின் காலுக்கு கீழ் ஜில் தண்ணி பாட்டில் இரண்டு இருந்தது. குடுக்க மனசு வரவில்லை கிராதகனுக்கு.
ஓட்டுனர் பாவமாய் அந்த பெண்ணை பார்த்தார். ‘போயும் போயும் இந்த மனுசன் கிட்டியா வந்து மாட்டுவ.. உனக்கு வேற போலீசே கிடைக்கலையா.. உன்னை இனி என்னென்ன பாடு படுத்த போறானோ தெரியலையே’ மனதுக்குள் கவலை பட்டுக் கொண்டார். அவரால் அது மட்டும் தான் எண்ண முடிந்தது.
“பரவாயில்ல சார்...” என்று தட்டு தடுமாறி பேசியவளுக்கு ஆசுவாசம் ஆக நேரம் கொடுத்தான். இவன் ஜீப்பை விட்டு வெளியே வரவே இல்லை. தெனாவட்டாக அமர்ந்து இருந்தான்.
“சொல்லுமா உனக்கு என்ன பிரச்சனை ஏன் இந்த ராத்திரி பொழுதுல இப்படி ஓடி வர்ற” என்று விசாரித்தான்.
“அது வந்து சார்... இன்கா ஒரு பொருக்கி” என்று அவள் ஆரம்பிக்கும் பொழுதே,
ஓட்டுனரை ஒரு பார்வை பார்த்தான். அதில் பயந்துப் போனவர்,
“சார் எனக்கு டியூட்டி முடிஞ்சிடுச்சு.. நான் இப்படியே கிளம்பவா?” என்று பம்மிக் கொண்டு கேட்டார்.
“சரி சரி போ” என்று பெருந்தன்மையாக தலையை ஆட்டியவன்,
“ஆங்.. நீ சொல்லும்மா.. என்ன பிரச்சனை?” என்று கேள்வி கேட்டான்.
“சார்..” என்று ஆரம்பித்து ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் சொல்லியவள்,
“என் அக்கா அந்த அரக்கன் கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கா சார். நீங்க தான் என் அக்காவை காப்பாற்றனும்” என்று கைக்கூப்பி கெஞ்சினாள்.
“கண்டிப்பா காப்பத்திடலாம்.. நீ எதுக்கும் கவலை படாத.. ஆமா கம்ளைன்ட் எங்கயும் குடுத்து இருக்கியா?” தூண்டில் போட்டான்.
“இல்ல சார். ஆனா இதோ லெட்டர் எழுதி வச்சு இருக்கேன்” என்று தன் கையில் இருந்த கடிதத்தை அவனிடம் நீட்டினாள் குறிஞ்சி.
“பரவயில்லையே...” என்று பாராட்டியவன், அதை வாங்கி வைத்துக் கொண்டான்.
“சரி நீ வண்டியில ஏறு.. இந்த இரவு நேரம் இங்க நிக்கிறது பாதுகாப்பு இல்ல.. பெரிய உயர் அதிகாரியிடம் பேசிட்டு போலீஸ் போர்சோட போய் உங்க அக்காவை காப்பத்திடலமா” என்று நயவஞ்சகமாக பேசி அவளை தன்னுடைய வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டான்.
அங்கே வைத்து தன்னுடைய முழு சுய ரூபத்தையும் காட்டினான் குணாதரன்.
வீட்டுக்குள் அழைத்து வந்த மறுநிமிடம் அவளின் தலை முடியை கொத்தாக பிடித்து சுவரில் முட்டியவன்,
“யார் மேலடி புகார் குடுக்க பார்த்த.. அவர் யாருன்னு தெரியுமா என் அண்ணன்..” என்றன் நிமிடமே குறிஞ்சியின் தலையில் இடி வந்து விழுந்தது.
“கடவுளே” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
அக்கா சொன்ன பேச்சை கேட்டு இருந்து இருந்தா இந்நேரம் நானும் சின்ன தங்கையும் தப்பிச்சு இருந்து இருப்போமே.. இப்போ இப்படி மாட்டிக்கிட்டேனே.. என்னை நம்பி தானே அக்கா மொத்த குடும்பத்தையும் பார்த்க்துகுற பொறுப்பை குடுத்தாங்க... இப்போ இப்படி ஆகிப்போச்சே.. என்று கண்ணீர் வடித்தாள்.
எதுக்காக போலீசுக்கு போனோம் என்று நொந்துக் கொண்டாள்.
“என்னடி நீலி கண்ணீர் வடிக்கிற?” என்று அவளின் முடியை கொத்தாக பிடித்து மேலே தூக்கியவன்,
“இன்னொரு முறை என் அண்ணன் மேல புகார் குடுக்க நீ யோசிக்கணும். அந்த அளவுக்கு உன்னை கவனிச்சு விட்டா தான் அந்த எண்ணமே உன் மனசுல வராது” என்று சொன்னவன், அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான்.
அவனது பார்வையில் பயந்துப் போனவள்,
“சாரி சார் எங்களை மன்னிச்சு விட்டுடுங்க.. இனி யார் மேலையும் கம்ளைன்ட் பண்ண மாட்டேன்.. இந்த ஒரு முறை மன்னிச்சுடுங்க” என்று அவள் கைக்கூப்பி கேட்க, கொஞ்சமும் மனம் இறங்கவில்லை குணாதரன்.
“செய்யிறதையும் செஞ்சுட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? உன்னை எல்லாம் மன்னிக்க முடியாதுடி.. போ போயி எனக்கு சமைச்சி கொண்டு வா” என்றான்.
“எனக்கு சமைக்க தெரியாது சார்” பாவமாக சொன்னவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டவன்,
“அப்போ படுக்க தெரியுமா?” நக்கலாக கேட்டவனின் கேள்வியில் உயிரே போய் விட்டடது. கன்னம் ஒரு பக்கம் திகு திகுவென்று எரிந்தது.
கண்களில் கண்ணீருடன் அவனை பார்த்த குறிஞ்சிக்கு கன்னம் பன் போல வீங்கியது.
“அடி வாங்கி சாகாம சொன்னதை செய்” என்றான்.
“ப்ளீஸ் சார் என்னை விட்டுடுங்க.. நான் யார் கிட்டயும் போய் கம்ளைன்ட் பண்ண மாட்டேன்.. என்னை நம்புங்க சார்” என்று கெஞ்சியவளை பார்த்தவன்,
“உன்னை வெளில விட நான் என்ன முட்டாளா? உனக்கு இனி வெளி உலகமே கிடையாதுடி.. உன் வாழ்நாள் முழுக்க இங்க தான். இந்த நாலு சுவரு மட்டும் தான் உனக்கு. எங்களை பகைச்சிக்கிட்டா என்ன நடக்கும்னு உங்க குடும்பத்தை பார்த்து தெரிஞ்சுக்கட்டும்” என்று சொன்னவனை தள்ளி விட்டுட்டு அந்த வீட்டில் இருந்து வெளியே வரப் பார்த்தாள். ஆனால் எல்லா இடமும் இரும்பு கேட் போட்டு பூட்டி இருந்தது.
“ஐயோ கடவுளே” என்று பூட்டிய கதவை தட்டு தட்டு என்று தட்டிப் பார்த்தாள். உலுக்கிப் பார்த்தாள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அவளின் வேகத்துக்கு பூட்டு மட்டும் தான் அசைந்தது.
“என்னை தாண்டி உன்னால எங்கயும் போக முடியாதுடி.. என்னையவே தள்ளி விட்டுட்டு போறியா.. உன்னை என்ன பண்றேன்னு பாருடி” என்று தன் காலால் அவளை எட்டி உதைக்க வந்தவன் பின் என்ன நினைத்தானோ அவளின் கூந்தலை பற்றி உள்ளே அழைத்துச் சென்றவன் ஒரு அறையின் உள்ளே அவளை தள்ளி விட்டு கதவை பூட்டினான்.
அவன் தள்ளி விட்ட வேகத்துக்கு அங்கு இருந்த பெரிய மேசையின் மீது மோதி நெற்றியில் இருந்து உதிரம் கொட்ட ஆரம்பித்தது குறிஞ்சிக்கு...
--