“அப்போ எதுக்கு பள்ளிக்கூடத்துல வச்சு என்னை கிஸ் பண்ணீங்க?” கோவமாக கேட்டாள்.
படுகையில் எழுந்து சம்மனங்கால் போட்டு அமர்ந்தவன்,
“சீ மிஸ்செஸ் அகத்தியன்... உன் கழுத்துல என் தாலி இருக்கிற வரை என் தொடுகையை நீ ஏற்றுக் கொண்டு தான் ஆகணும். அதுக்கு விருப்பம் இல்லன்னா நீ இப்பவே கிளம்பலாம்” என்றான் அழுத்தமாக.
அதில் அவளுக்கு முகம் மாறியது. கண்களில் நிறைந்த கண்ணீர் கன்னத்தில் இறங்கியது. பட்டென்று திரும்பிக் கொண்டாள் தன் முகத்தை அவனுக்கு காட்டாமல்.
“என்ன திரும்பிக்கிட்ட... என் தொடுகை உனக்கு பிடிக்கலையா?” அழுத்தமாக கேட்டான். அவனது கேள்விக்கு பதில் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தவளுக்கு,
“கொஞ்சம் நேரம் வேணும்” என்றாள்.
“ஓகே.. பட ரொம்ப நேரம் காக்க வைக்காத.. நீ தான் ஏன் மனைவின்னு என் மனசுல பதிய வச்சுட்டேன். அதே போல நீயும் நான் தான் உன் கணவன்னு பதிய வை.. என் தொடுகையை ஏற்றுக் கொள்ள ஈஸியா இருக்கும்” என்றான். தலையை ஆட்டிக் கொண்டாள்.
அவளின் முதுகை பார்த்து சிரித்தவன் தன் சிரிப்பை அவளுக்கு காட்டா வண்ணம், “வா வந்து படு... எனக்கு குட் நைட் கிஸ் வேண்டும்” என்றான்.
அவனது அடாவடியில் திணறல் வந்தது. இப்போ தான் எதுவுமே இல்லைன்னு சொன்னான். ஆனா முத்தம் மட்டும் எப்படி குடுக்குறாரு என்று மலைத்துப் போனவள் அவனுக்கு அருகில் வந்து படுத்தாள்.
அடுத்த நிமிடம் அவள் மீது படர்ந்தவன் அவளின் கழுத்தில் முகத்தை புதைக்க,
“நீங்க கிஸ் மட்டும் தானே சொன்னீங்க?”
“ஆமா இப்பவும் கிஸ் தான் பண்ண போறேன்” என்றவன் கேள்வி கேட்கும் அவளது இதழ்களை சிறை எடுத்தவன் மெதுவாக முத்தமிட அதில் மயங்கிப் போனாள் தமிழ்.
அகத்தியனிடம் தென்பட்ட மென்மையில் இவளுக்கு இன்னும் அவன் மீது மயக்கம் கூடியது.
“கொல்றாரு” என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டாள்.
இரவு அப்படி இப்படி என்று ஒரு வழியாக ஓட்டியவர்கள் அடுத்த நாள் காலையில் அவரவர் வேலைக்கு கிளம்பினார்கள். கிளம்பு முன்பு அவளை இழுத்து அணைத்து டீப் கிஸ் செய்து விட்டே கிளம்பினான் அகத்தியன்.
“ம்கும் இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று முணகிக்கொண்டே பள்ளிக்கூடத்துக்கு சென்றாள். ஆனுவேல்டே நிகழ்ச்சிகளை பூவரசியோடு சேர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவள்,
“என்னால தான் அத்தை” என்றாள் மொட்டையாக.
“எப்பவும் ஆன்டின்னு தானே கூப்பிடுவ.. இன்னைக்கு என்ன ஆன்டியில இருந்து அத்தைக்கு மாறி இருக்க” திரும்பாமலே கேட்டார். அவரின் முகத்தை பற்றி தன் பக்கம் திருப்பியவள்,
“கூப்பிடணும்னு தோணுச்சு” என்றாள்.
“இதை நான் நம்பணும்”
“நீங்க நம்பலைன்னாலும் அது தான் உண்மை” என்றவள், தலையை குனிந்துக் கொண்டு,
“உங்க மகன் கிட்ட பேசலையா?” என்று கேட்டவளை முறைத்து பார்த்தார்.
“சாரி அத்தை.. நீங்க எனக்கு இந்த அளவுக்கு லாயலா இருப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கல அத்தை.. எனக்கு ஒரு அம்மா இருந்து இருந்தா என்ன செய்து இருப்பாங்களோ அதை எனக்கு நீங்க செய்து இருக்கீங்க.. உண்மையாவே நீங்க ரொம்ப கிரேட். மகன்னு கூட பார்க்காம அவரை தள்ளி வச்சு இருக்கீங்க..” என்று முடிக்கும் முன்பே,
“அதுக்காக நான் நல்லவளா உனக்கு தெரியுறனா?” ஆணித்தரமாக கேட்டவரை கட்டிக் கொண்டவளுக்கு நன்கு புரிந்துப் போனது. அன்றைக்கு தான் பேசிய பேச்சை இன்னும் மறக்கவில்லை என்று. தன் மீது தானே தவறு. அதனால் இறங்கி வந்தாள்.
“உண்மைக்கும் அன்னைக்கு உங்களை நோகடிக்கணும்னு நான் நினைக்கல. எதிர்பாரா நேரத்துல அப்படி ஒரு ஷாக் குடுத்தா நான் என்ன பண்ணட்டும்? என் இதயம் ரொம்ப சாப்ட். இவ்வளவு அதிரடிய எல்லாம் தங்காது அத்தை. அந்த நிமிடம் எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல. அது தான் உண்மை. ஆனா உங்களை பேசிட்டு உங்களை விட அதிகம் வருத்தப் பட்டது நான் தான்” என்றவளுக்கு கண்ணீர் முகிழ்த்து விட்டது.
அவளின் தலையை வருடி விட்டவர்,
“அது எனக்கும் தெரியும் தமிழ். ஆனாலும் சின்ன ஒரு உரசல் மனதுக்குள் இருந்தது. இன்னைக்கு சரியா போயிடுச்சு” என்று கண் சிமிட்டினார்.
அதன் பிறகே தமிழின் முகத்தில் புன்னகை வந்தது.
“இன்னைக்கு நீயும் நானும் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?” என்று ஆர்வமாக கேட்டார்.
“உங்க மாமியாருக்கு தெரிஞ்சா என்னாகும் மேடம்?” என்று சிரித்தாள்.
“ஏய்... என் வீக்னெஸ் பாயின்ட்ட கையில எடுக்குற பத்தியா?” என்று சிணுங்கியவர் அதன் பிறகு அவளை வம்பிழுத்து என நேரம் நன்றாக சென்றது.
“உங்க மகன் கிட்ட பேசலாமே அத்தை” என்று கேட்டாள்.
“ம்ம் பேசணும்.. ஆனாலும் ஒரு தாயா அவனை ஒதுக்கி வச்சுட்டேன் இல்லையா? கொஞ்சம் கில்ட்டியா இருக்கு தமிழ்” என்றவருக்கு குரல் கரகரத்தது. அவரின் கையை பற்றி கொண்டவளுக்கு மனம் கனத்துப் போனது.
இதை பற்றி கணவனிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அவனோ அவளை பேசவே விடவில்லை.
“இத பத்தி பேசாதடி.. நான் கடுப்பாகிடுவேன்” என்று அவளை முறைத்து விட்டு வெளியே சென்று விடுவான். எத்தனையோ நேரம் முயன்று விட்டாள் ம்ஹும்... அவன் அசையவே இல்லை.
பொறுத்து பொறுத்து பார்த்தவள் ஒரு நாள் தாங்க முடியாமல், “உங்க மனசுல நீங்க என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? ஒரு தாயா உங்களை நல்வழிக்கு கொண்டு வர முயன்றது தப்பா?” கோவமாக கேட்டாள்.
அப்பொழுது தான் அலுவலகம் முடிஞ்சு அறைக்குள் நுழைந்தான் அகத்தியன். காலையில் இருந்து இவனது அடமென்ட் குணத்தை யோசித்துக் கொண்டே இருந்தவளுக்கு இவன் நேராக வரவும் வெடித்து விட்டாள்.
“ஏன் சொன்னா என்ன பண்ண போற?”
“ப்ச் விதாண்டாவாதம் பேசாதீங்க ங்க”
“யாருடி விதாண்டவாதம் பேசுறது. நீ தான் விதாண்டாவாதம் பண்ணிட்டு இருக்க.. கொஞ்ச நேரம் கேட்ட... இப்ப ஒரு வாரத்துக்கு மேல ஆகிடுச்சு. இன்னும் என்னை காயப்போட்டுட்டு இருக்க” என்று கத்தினான்.
அவனுக்கு தானே இந்த ஒரு வார அவஸ்த்தையும். அவளை காணும் போதெல்லாம் அவனின் உணர்வுகள் ஏகத்துக்கும் அல்லவா முறுக்கேறுகிறது.
அவளை காணும் நேரமெல்லாம் தன் ஆளுகைக்கு கொண்டு வந்து முத்தாட தோன்றுகிறது. ஆனால் அவளோ அவனது உணர்வுகளை பற்றிய சிந்தை இல்லாமல் கண்டதையும் போட்டு அவனை வதைக்கிறாள்.
அவனுக்கு வெறும் இதழ் முத்தங்கள் மட்டும் போதவில்லை. அவன் போதாமையால் நிரம்பி நிற்கிறான். அவனது போதாமை எல்லாம் நிறைவாகக் கூடியவள் அவள் தானே.. ஆனால் அதை பற்றிய சிந்தை எதுவும் இல்லாமல் இருப்பவளை காண காண எரிச்சல் வந்தது.
அதனால் அவனும் கத்த ஆரம்பித்து விட்டான். அவனின் பொறுமை பறந்து விட்டது. தமிழுக்கு பூவரசியின் நினைவு மட்டுமே இருந்தது. கணவனின் உணர்வுகளை பற்றி அவள் கொஞ்சமும் அறியவில்லை. மறந்து போய் இருந்தாள்.
அதுதானே அகத்தியனின் கோபமும். என் உணர்வுகள் உனக்கு பெருசா படல.. இதே இது எங்க அம்மா சோகமா இருக்குறது மட்டும் உனக்கு பெருசா போச்சா என்று கருவியவன் அவளிடம் விசயத்தை போட்டு உடைக்க திகைத்துப் போனாள்.
“ஏங்க நான் என்ன சொல்றேன். நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க?”
“எனக்கு இது தான் முக்கியம்... சே எஸ் ஆர் நோ” விடா காண்டனாக நின்றவனை சலிப்புடன் பார்த்தவள்,
“அங்க அத்தை எவ்வளவு மன வேதனையில இருக்காங்க தெரியுமா? உங்களுக்கு அது கண்ணுக்கே தெரியலையாங்க?” ஆதங்கமாய் கேட்டவளின் கழுத்தை இறுக்கிப் பிடித்து சுவற்றில் சாய்த்தவன்,
“உனக்கு நானோ ஏன் உணர்வுகளோ பெருசாவே தெரிய மாட்டோமாடி..” என்று பல்லைக் கடித்தான்.
“உங்க உணர்வுகளை இங்க யாரு மதிக்காம இருந்தா... அடுத்தவங்க உணர்வுகளையும் பாருங்கன்னு தானே சொன்னேன்” என்றவளை முறைத்துப் பார்த்தான்.
“முறைக்காதீங்க ங்க.. நீங்க இப்படி முறைக்கிறதை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு” என்றாள். அந்த வார்த்தைகளை கேட்டவனுக்கு இன்னும் அதிக கோவம் வந்தது.
“என்ன பார்த்து பயந்து பயந்து சாவுடி.. செத்துப் போ” என்று ஆத்திரமாக அவளை கட்டிலில் தள்ளி விட்டுட்டு வெளியே போய் விட்டான்.
அப்பொழுது தான் வீட்டுக்கு வந்தான். மறுபடியும் வீட்டை விட்டு அதுவும் அவ்வளவு கோவமாக போன பேரனை யோசனையுடன் பார்த்த நாச்சி தமிழை அழைத்தார்.
அவளும் கீழே வர,
“என்ன பண்ணுன என் பேரனை.. இப்ப தான் வீட்டுக்கு வந்தான். அதுக்குள்ள அவ்வளவு கோவமா கிளம்பி போறான். உன்னால உன் புருசனை ஒழுங்காவே கவனிச்சுக்க முடியாதா? என்ன பொண்ணு நீ... வேலைக்கு போயிட்டு வர்ற மனுசனை இப்படி தான் விரட்டி அடிப்பியா? அவன் மத்தியம் சாப்பிட்டானா என்னன்னு கூட தெரியல... என்னைக்காவது அதை எல்லாம் கவனிச்சு பார்த்து இருக்கியா” என்று எடுத்த எடுப்பிலே பாட்டி கத்த,
வீட்டில் இருந்த எல்லோரும் கூடி விட்டார்கள். தமிழுக்கு சுருக்கென்று இருந்தது. “ஆமாம் தானே அவரை நான் நல்லாவே பார்த்துக்கல.. இன்ன வரைக்கும் ஒரு வாய் சோறு என் கையாள அவருக்கு பரிமாறியது இல்லையே. சாப்பிட்டாரா என்னன்னு விசாரித்தது இல்லையே.. அலுத்து கலைத்து வீட்டுக்கு வந்த மனுசனை நிற்க விடாம துரத்தி அடிச்சிட்டனே” என்று கலங்கிப் போனாள்.
“அவர் கிட்ட இருந்து காதலை எதிர் பார்த்தனே... அவரே சொல்லுவாருன்னு பார்த்தனே... ஆனா நான் எந்த விதத்திலயும் அவருக்கு சரியான மனைவியா நான் இருக்கலையே... நான் முதல்ல என் அன்பை வெளிப்படுத்தினனா.. இல்லையே.. பிறகு அவர் கிட்ட மட்டும் எப்படி எதிர் பார்க்கிறேன்..” என்று வேதனை கொண்டாள்.
“என்ன ஆச்சு ஏதாச்சு?” என்று எல்லோரும் விசாரிக்க அவர் அகத்தியன் கோவமாய் போனதை சொல்லி,
“எல்லாம் இந்த பொண்ணால வந்தது... எங்க இருந்து தான் இவளை பார்த்து மயங்கினானோ தெரியல. கட்டுனா இவளை தான் கட்டுவேன்னு ஒத்தை காலில நின்னு கட்டிக்கிட்டான். அப்படி என்ன தான் இவ மேல ஆசையோ பாசமோ.. ஆனா இவளை கட்டுன நாள்ல இருந்து என் பேரன் சந்தோசமா இருந்து நான் பார்க்கல. ஒரு நாள் ஒரு பொழுது கூட ரெண்டு பெரும் சிரித்து பேசல... ஏன் பேரன் வாழ்க்கையே போச்சு” என்று ஆதங்கப்பட்டவரின் பேச்சில் நிலை குலைந்து போனாள் தமிழ்.
“என்ன சொல்றாங்க பாட்டி?” என்று கதை தீட்டிக் கொண்டு கேட்டாள். “என்ன பார்த்து ஆசை பட்டாரா? என்ன பார்த்து மயங்குனாரா?” நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.
“நான் தான் சொன்னேன் உன் பேரன் தான் கேட்கல..” என்று தாத்தா முனகிவிட்டு போய்விட, பூவரசியும் சிவலிங்கமும் பாவமாய் அவளை பார்த்தார்கள்.
அவர்களால் நாச்சிக்கு முன்னாடி எதுவும் பேச முடியாதே... கண்ணை காட்டி அவளை போக சொன்னவர்கள்,
“தம்பிக்கு வேலையில ஏதோ டென்ஷன் போல ம்மா. அதுக்கு இந்த பொண்ணு என்ன பண்ணுவா... நீங்க முதல்ல டென்ஷன் ஆவதை விடுங்க.. பாருங்க எப்படி படபடத்து வருதுன்னு” என்று சிவலிங்கம் நாச்சியை திசை திருப்பி விட,
பூவரசி தமிழை கூட்டிக்கொண்டு சென்றார்.
“என்ன ஆச்சு தமிழ்?” விசாரித்தார்.
“அது ஒன்னும் இல்ல அத்தை...” என்று தலையை குனிந்துக் கொண்டாள்.
இவளை வெச்சிட்டு ஒரு ஊறுகாய் கூட போட முடியாது🤦🤦🤦🤦🤦
இவ மென்மை, பெண்மைனு இருப்பா....அவனும் உடனே விழுந்து கிடக்கணும் என்ன????
பாட்டி கேட்டது, கரெக்ட்....
கணவனுக்கு சேவை செய்ய வேணாம்...ஆன ஒரு அக்கறை கூடவா காட்ட கூடாது????
அவனே அம்மா பேசுல அப்படினு இருக்கான்....ஆன இவ இவன் கிட்டவே சண்டை போட்டுட்டு இருக்கா????
ரைட்டர்.... வெரி சாரி....
இப்ப வரை படிச்ச உங்க ஹீரோயின்கள்ள...இவளை எனக்கு துளியும் பிடிக்கவே இல்ல.....
நீ உன் அன்பை எப்பவாது காட்டி இருக்கியா என்ன அவன் கிட்ட????
எதிர் மட்டும் பார்ப்பா.....