அத்தியாயம் 19

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அய்யய்யோ.. ஒத்தையா மாட்டிக்கிட்டமோ.. அப்படியே நைசா கிளம்பிடலாம்” என்று உள்ளுக்குள் முணகிக் கொண்டே கை பையை பற்றியவள் கதவை திறந்துக் கொண்டு வெளியே போக பார்க்க, கதவு பூட்டி இருந்தது.  

பக்கென்று ஆனது தமிழுக்கு. திரும்பி அவனை பார்த்தாள். அவனோ தன் கணினியில் இருந்த கேம்களை பார்த்து டென்ஷன் ஆகி விட்டான்.

“யூ இடியட்” என்று ஆரம்பித்து சில பல நல்ல வார்த்தைகளை போட்டு அவளின் காதை புண்ணாக்கி இருந்தான்.

“சாரி” என்று அவள் பம்ம,

“அறிவு இருக்கா இல்லையாடி... நீ கேம்ஸ் விளையாட என் ஆபிஸ் சிஸ்டம் தான் கிடைச்சதா... சரியான யூஸ்லெஸ்.. ஒண்ணுத்துக்கும் ஆகாத மரமண்டை” என்று அவளை சரமாரியாக திட்ட, தமிழுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.

“அழுது சீன் போட்டு இன்னும் என்னை எரிச்சல் ஆக்காத சொல்லிட்டேன்” என்று கடுகாய் பொரிந்தான்.

“இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இந்த குதி குதிக்கிறீங்க? கேம்ஸ் விளையாண்டது தப்பா?” மூக்கை உறிஞ்சிக்கொண்டே கேட்டாள்.

“தப்புன்னு யாரும் சொல்லல.. ஆனா அதை எதுல விளையாடுறதுன்னு ஒரு வரைமுறை இருக்குல்லடி”

“ஏன் உங்க சிஸ்ட்டம்ல விளையாண்டா என்னவாம்?” முறைத்துக் கொண்டே கேட்டாள் தமிழ்.

“இதுல எவ்வளவு முக்கியமான பைல்ஸ் எல்லாம் இருக்கு தெரியுமா..? நம்மளோட ஒட்டு மொத்த கம்பெனி டீட்டையில்ஸ், ஷேர்ஸ், பராபிட் டாக்குமெண்ட்ஸ், கிளைன்ட் டீட்டைய்ல்ஸ், அசெட்ஸ் எல்லாமே இதுல தான் இருக்கு. அது மட்டுமா மார்க்கெட் டீலிங்ஸ், டெண்டர் டீடைல்ஸ்னு ஏகப்பட்டது இதுல தான்டி இருக்கு. அதுல நீ இப்படி இஷ்டத்துக்கு கண்டதையும் இதுல டவுன்லோட் பண்ணி விளையாண்டா கோவம் வருமா வரதாடி...” அவனது கோவம் நியாயமானது என்று புரிந்துக் கொண்டவள்,

“சாரி... எனக்கு அதை பத்தி எதுவும் தெரியாது” என்றாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “எதுவும் தெரியாதா?” அவனது குரலில் முன்பிருந்த கோவம் எதுவும் இல்லை.

“ம்ஹும்.. மாமானார் எதுவும் சொல்லல” சிறு பிள்ளையாய் சொன்னவளை இரசனையுடன் பார்த்தவன்,

“இங்க வா” என்றான்.

அவள் “ம்ஹும்” என்று தலையை ஆட்டிவிட்டு வெளியேற இருந்த சமயம் அவனின் அறை கதவு தட்டப்பட்டது.

ரிமோட் மூலமாக கதவை திறந்து விட்டவன்,

“எஸ்” என்று குரல் குடுத்தான்.

அவனின் பியே வந்து நின்றாள்.

“குட் மார்னிங் சார்” என்று விஷ் பண்ணியவள், “என்ன ஆச்சு சார் ஆபிஸ் பக்கமே வரல..? எனிதிங் இம்பார்டன்ட்?” அவனையே கேள்வி கேட்க சுல்லேன்று கோவம் வந்தது.

அதுவும் அவனுக்கு மிக நெருக்கமாக வந்து நின்று கேட்டதில் ஆத்திரம் வந்தது அவனுக்கு.

“ஸ்டே அவே” அந்த பெண்ணை பார்த்து கூர்மையாக சொன்னவன்,

“தமிழ்” என்றான் தன் மனைவியை பார்த்து.

அவள் திரும்பி அவனை பார்க்க,

“கம்” என்றவன் தனக்கருகில் ஒரு இருக்கையை இழுத்து போட்டவன் அவளை அமர சொல்லி சொல்லிவிட்டு,

“வாட் யூ சே?” என்றான் அழுத்தமாக பிஏவை பார்த்து.

“இல்ல சார்.. அது” அவனது முறைப்பான பார்வையை தடுமாறினாள் அவள்.

“மைன்ட் யுவர் பிசினெஸ்.. இல்லன்னா உன் சீட்டுக்கு வேற யாரையாவது எடுக்க வேண்டியது வரும்” எச்சரித்தவன்,

“இன்னைக்கு என்ன செட்யூல்?” கேட்டான். அவள் பம்மிக்கொண்டு எல்லாவற்றையும் சொன்னாள். அவனது அறையில் இருந்த பெண்ணை பார்த்து இவளுக்கு பொசசிவ் வந்தது.

அதனால் அகத்தியனை நெருங்க பார்த்தாள். ஆனால் அகத்தியன் விடுவானா? அவன் தான் ஏகபத்தினி விரதன் ஆயிற்றே. எங்கிருந்து அவனை நெருங்க.

அவள் சொல்ல சொல்ல “இது இருக்கட்டும், இத கேன்சல் பண்ணிடு” என்று வேலையில் ஆழ்ந்துப் போனான்.

தமிழுக்கு தான் என்ன செய்வது என்று புரியவில்லை. பேசாம வீட்டுக்காவது போகலாம். இல்லன்னா பள்ளிக்கூடத்துக்கு போகலாம். இங்க வெட்டியா இருந்து என்ன பண்றது என்று எண்ணியவள்,

“ஏங்க நான் ஸ்கூலுக்கு போகட்டுமா?” அவனிடம் அனுமதி கேட்டாள்.

“வெயிட் பண்ணு” என்றவன் பியே உடனான வேலைகளை முடித்துக் கொண்டவன், அவள் போன பிறகு அவளிடம் திரும்பினான்.

“ஏன்டி? இப்போ அங்க போய் என்ன பண்ண போற?”

“அத்தை உங்களை விட்டு தள்ளி இருக்க சொன்னங்க”

“ஓ... உன் மாமியார் பேச்சை கேட்ப கட்டுன புருசன் பேச்சை கேட்கமாட்ட அப்படி தானே?”

“இல்லல்ல” பதறினாள்.

“அப்போ இங்க வா” என்று அழைத்தான். அவள் தான் ஏற்கனவே அவனுக்கு அருகில் தானே இருந்தாள்.

“இதுக்கு மேல எங்க வரது?” என்று எழுந்து  நின்றாள்.

நின்றவளை தன் மடியில் இழுத்து அமரவைத்தவன் அவளின் இடையோடு இரண்டு கையை கொடுத்து தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

“ஆபிஸ்” என்று அவள் நெளிய,

“ம்கும் வீட்டுக்கு வந்தா மட்டும் அப்படியே வாரி சுறுட்டிக்குவ பாரு. சும்மா கடுப்பை கிளப்பாம இருடி” என்று பல்லைக் கடித்தான். அவனது கோவத்தில் அமைதியாகிப் போனாள்.

அவளின் அமைதியை பார்த்து மீசைக்கு அடியில் சிரித்துக் கொண்டவன், அவளின் பின்னங்கழுத்தில் முகம் புதைத்தான். அவளின் தலையில் இருந்த மல்லிகை பூவின் மனம் அவனை மிகவும் ஈர்த்தது.

அந்த வாசத்தை அவன் ஆழ்ந்து நுகர, அதில் தமிழுக்கு தேகம் சிலிர்த்தது. அவளின் மெல்லிய உணர்வுகளை உணர்ந்தவனுக்கு பெருமூச்சு வந்தது.

திருமணம் ஆனா பொழுது அவளின் மெல்லிய உணர்வுகளை அவன் இரசிக்கவே இல்லையே.. ஏதோ காஞ்ச மாடு கம்பங்கொல்லையில புகுந்த மாதிரி தானே அவளிடம் பாய்ந்து இருந்தான்.

“சாரிடி” என்றான் தனக்குள்ளே. அவளிடம் அந்த சாரியை கேட்க ஈகோ தடுத்து போல.

அவளின் சிலிர்ப்பை உள்வாங்கியவன் தன் இதழ்களை அவளின் புறமுதுகில் பதிக்க தமிழின் வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தது.

“என்ன பண்றீங்க?” அவளால் பேசவே முடியவில்லை.

“ம்ம் ஆராய்ச்சி நடத்துறேன்” என்றவனின் மீசை அவளின் பின்னங்கழுத்தில் குத்தி குத்தி நகர, அதில் வலிக்கு பதிலாக கூச்சமே வந்தது. அதோடு அவனின் கைகள் அவளின் இடையில் ஆராய்ச்சி செய்ய, அவனது கையின் மீது தன் கையை வைத்து தடுத்தவள், கழுத்தில் முகம் புதைத்து இருந்தவனின் தலையை பின்னால் கைவிட்டு பற்றிக் கொண்டாள்.

அவளின் கைகளில் ஒரு நிமிடம் மட்டுமே சிறை இருந்தவன் அடுத்த நிமிடம் அவளின் கைக்கு முத்தம் வைத்து அவளின் கையை எடுத்து தன் தலையில் முடியை பிடிக்க கொடுத்து விட்டு அவளின் கழுத்தில் இன்னும் ஆழமாக முகம் புதைத்தான்.

“சாரிங்க” என்றாள் மீண்டும்..

“இதெதுக்கு?” என்றவன் தன் முரட்டு இதழ்களால் அவளின் கழுத்தில் சின்ன சின்ன முத்தமாய் வைத்தான். கூசி சிலிர்த்தவள்,

“ஸ்கூல்ல நான் அபப்டி நடந்து இருக்க கூடாது... அபப்டி பேசி இருக்கவும் கூடாது. ஐ ஆம் வெரி சாரிங்க” என்றவளை திருப்பி மேற்கொண்டு பேசவிடாமல் அவளின் இதழ்களை வன்மையாக சிறை எடுத்து விட்டான் அகத்தியன்.

விழிகள் இரண்டும் அதிர்வில் விரிந்துக் கொண்டது.. அதுவும் வன்மையாக தொடங்கியவன் போக போக நிதானமாக தேட தமிழின் நெஞ்சம் ஏகத்துக்கும் படபடத்தது.

ஏனெனில் அவனிடம் பேச்சுக்கு கூட மென்மை இருக்காது அல்லவா... ஆனால் இன்று எவ்வளவு நிதானமாக முத்தமிட முடியுமோ அந்த அளவுக்கு நிதானமாக முத்தம் வைத்தான். அவனது இதழ் ஒற்றுகள் முற்று பெறாமல் தொடர்ந்துக் கொண்டே இருந்தது.

தமிழுக்கும் அவனிடம் இருந்து விலகவே தோன்றவில்லை. அவனது மடியில் ஜம்மென்று அமர்ந்து இருந்தாள். முத்தங்கள் தொடர்வண்டியாய் நீண்டுக் கொண்டேபோனது. மென்மையான இதழ் ஒற்றுதல் என்றாலும் அவனது பற்கள் பதிந்துப் போனதில் வலி எடுக்கவே செய்தது பெண்ணவளுக்கு.

“ஸ்ஸ்” என்று மெலிதாக முணக, அவளின் பின்னந்தலையை இறுக பற்றியவன்,

“பொறுத்துக்கோடி” என்றவன் வன்மையில் இறங்க தவித்துப் போனாள். மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது.

“ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச,

“ஐ கான்ட்” என்றவன் பெண்ணவளின் உணர்வுகளை தூண்டிவிட்டான்.

அதில் திகைத்துப் போனவள்,

“சீட்டிங்” என்றாள்.

“அப்படி தான்டி பண்ணுவேன்” என்றவன் அவளின் முந்தானையை பற்றி இழுத்தான்.

“ஹைய்யோ என்ன பண்றீங்க?” பதரிப்போனவள் தன் தோளோடு இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

“ப்ச் கையை எடுடி” கண்கள் சிவந்துப் போனான் மோகத்தில். அவனது கண்களில் தெரிந்த உணர்வில் அடி வயிற்றில் பயம் வர,

“நோ... நான் ஸ்கூலுக்கு போறேன்.. ப்ளீஸ்ங்க...” கெஞ்சியவளுக்கு அவனுடன் படுக்கையில் சேர பயமாக இருந்தது. முன்பு போல முரட்டு தனமாக தன்னை தேடுவானோ என்று. அவன் தரும் அதிரடி முத்தங்கள் எல்லாத்தையும் ஏற்றுக் கொள்ள பழகியவளுக்கு உள்ளுக்குள் இந்த பயம் மட்டும் மிச்சம் இருந்தது.

அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,

“போகவா?” என்று அவனிடம் அனுமதி கேட்டாள். அவளின் முகத்தை பார்த்தவன்,

“ம்ம்ம்” என்று மட்டும் சொன்னவன் ஏனோ அவளிடமிருந்து விலகிக் கொண்டான்.

பட்டென்று தன்னை இப்படி விடுவான் என்று எண்ணி இராதவளுக்கு உள்ளுக்குள் சற்றே ஏமாற்றம் தான். ஆனாலும் தன்னை சமாளித்துக் கொண்டு வெளியே போக பார்க்க,

“டிராப் பண்ணவா?” என்று கேட்டான்.

தன் காதுகளையே அவளால் நம்ப முடியவில்லை. திகைத்துப் போனவள் சொன்னது நீ தானா? என்பது போல பார்த்தாள்.

“என்னடி?” என்று முறைத்தான்.

“ம்ஹும் ஒண்ணுமில்ல” என்று அவசரமாய் தலையை ஆட்டியவள்,

“உங்களுக்கு வேலை இல்லையா?” கேட்டாள்.

“அத அப்புறம் பார்த்துக்கலாம்”என்றவன் கார்சாவியை எடுத்துக் கொண்டு அவளுடன் நடந்தான். அகத்தியனிடம் இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என்று கனவில் கூட எண்ணி இராதவளுக்கு அவனின் மாற்றம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

தமிழின் மனம் நிறைவாய் இருந்தது. அதுவும் போகிற வழியில் ஹோட்டலில் நிறுத்தி மத்திய உணவை இருவரும் சேர்ந்து உண்டது எல்லாம் கனவில் நடப்பது போல இருந்தது.

இந்த மகிழ்ச்சி எனக்கு நீடிக்குமா இறைவா? என்று தான் அவளுக்கு எண்ணம் தோன்றியது. நீடிக்கும் என்பது போல அவளின் கையை அழுந்த பிடித்துக் கொண்டான் அகத்தியன்.

அவனது தோளில் சாய்ந்துக் கொள்ள மனம் துடிக்க, அவனது முகத்தை அடிக்கடி நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னன்னு சொல்லுடி. இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா என்ன பொருள்?”

“இல்ல ஒன்னும் இல்ல” என்று தலையை ஆட்டினாள்.

“ப்ச் சொல்லுடி”

அவள் எதுவும் சொல்லாமல் அவனது தோளை மட்டும் சுட்டிக் காட்டினாள் ஒற்றை விரலில். அதில் மெல்லிய புன்னகை வர, தன் தோளில் அவளை இழுத்து சாய்த்துக் கொண்டான். தமிழுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

இது காதலா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் கணவன் என்கிற பிடிப்பு அதிகம் வந்து இருந்தது.

அவனது புஜத்தொடு இரு கையையும் விட்டு கட்டிக் கொண்டவள் அவனது வலிமை மிகுந்த தோளில் சாய்ந்துக் கொண்டாள். அவளின் தலையோடு தன் தலையை வைத்து அழுத்தி அவளின் உச்சந்தலையில் முத்தம் வைத்தான் அகத்தியன்.

அந்த நிறைவான பொழுதை இருவரின் மனமும் அதிகம் நேசித்தது. ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விடவெல்லாம் இல்லை. ஆனால் “இது நல்லா இருக்கு அது நல்லா இருக்கு... சாப்பிடுங்க, சாப்பிட்டு பாருடி” என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டார்கள்.

அதை கெடுக்க வென்றே அவர்களுக்கு முன்னாடி வந்து அமர்ந்தார் தாமரை.

Loading spinner
Quote
Topic starter Posted : March 7, 2025 11:41 am
Akila reacted
(@gowri)
Eminent Member

Aww நல்லா இருக்கு😁😁😁😁😁

ச்சைக் கண்றாவி, இது எங்க இங்க வந்தது😤😤😤😤😤

Loading spinner
ReplyQuote
Posted : March 7, 2025 12:21 pm
Admin
(@ramya-devi)
Member Admin

Posted by: @gowri

Aww நல்லா இருக்கு😁😁😁😁😁

ச்சைக் கண்றாவி, இது எங்க இங்க வந்தது😤😤😤😤😤

 

ஹாஹாஹா நன்றி டா😍😍 தாமரை வராமல் கதையை முடிக்க முடியாது அதற்கு ஒரு என்டு கார்டு போடணும் இல்லடா🤣😜

 

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : March 8, 2025 3:05 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top