அத்தியாயம் 17

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அந்த பேச்சு வேணாம் ஆன்டி.. ஏற்கனவே ரொம்ப புண்ணா போய் இருக்கு மனசு... மேற்கொண்டு மேற்கொண்டு அதையே பேசி இன்னும் ரணம் ஆக்கிக்க நான் தயார் இல்ல..” அழுத்தமாக சொன்னவள்,

“கையை குடுங்க முதல்ல... இந்த பள்ளிக்கூடத்துக்கு வைரவிழா வந்து இருக்கு.. அதை சிறப்பா கொண்டாடணும். உங்க மகன் என்கிட்ட என்னென்ன செயல்லாம்னு பட்டியல் போட சொன்னாரு. நாம ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணி எது எது பெட்டரா இருக்கும்னு முடிவு பண்ணலாம் ஆன்டி” என்று பேச்சை மாற்றினாள்.

தமிழ் பேச்சை மாற்றுவதை பார்த்த பூவரசியும் மேற்கொண்டு தன் மகனை பற்றி பேசாமல் பள்ளிக்கூட விழாவை பற்றி பேச ஆரம்பித்தார்.

“எனக்கு இதை பத்தி ஒன்றுமே தெரியாது ஆன்டி... இதுக்கு முன்னாடி எனக்கு எந்த முன் அனுபவமும் இல்லை. நீங்க தான் உதவி செய்யணும்”

“அதுக்கென்ன தாராளமா செய்யிறேன்..” என்றவர், “ஒவ்வொரு வருடமும் ஆண்டு விழா கொண்டாடுவோம். ஆனா அதுவே சில்வர் ஜூப்ளி, கோல்டன் ஜூப்லின்னா வேற மாதிரி இருக்கும். ரொம்ப மெனக்கெட்டு ஏற்பாடு செய்வோம். வெளில இருந்து டான்செர் வரவச்சு டான்ஸ் ப்ராக்டீஸ் குடுப்போம். இதுல மாணவ, மாணவிகள் மட்டும் இல்லாம ஆசிரியர்களும் பங்கு வகிப்பாங்க. இந்த முறை யார் யாரு ஆர்வமா இருக்காங்கன்னு கேட்டு ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு டிப்பார்ட்மென்ட் பிரிச்சு குடுத்துடலாம். ஒரு மாதம் அதுலையே போயிடும். பசங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்” என்றார் பூவரசி.

“ஆமா ஆன்டி ஸ்கூல் டேய்ஸ்ல நானும் இதை எல்லாம் அனுபவித்து இருக்கேன்” என்றாள். அதன் பிறகு இருவரும் பள்ளிக்கூட விழாவை பற்றி பேசி சில முடிவுகளை எடுத்துக் கொண்டார்கள்.

மாலை நேரம் பள்ளி முடிந்து பூவரசியோடு வீட்டுக்கு வந்து விட்டாள். வரும் பொழுது எப்பொழுதும் போல ஐஸ்க்ரீம் பார்லருக்கு போய்விட்டே வீட்டுக்கு வந்தார்கள்.

வந்தவள் அவளுடைய அறைக்குள் நுழைந்துக் கொள்ள,

“இங்க பாரு பொண்ணே” என்று நாச்சி ஆரம்பித்து விட்டார். இவளுக்கு அலுப்பாக இருந்தது. ஆனால அதை அவரிடம் காட்டிக் கொள்ளாமல் “சொல்லுங்க பாட்டி” என்றாள்.

“உன் மாமியாரை பாரு.. பள்ளிக்கூடம் போயிட்டு வந்த உடனே அறைக்குள்ள போய் நுளைஞ்சுக்க மாட்டா.. வீட்டு வேலையை பார்த்துட்டு வீட்டு ஆட்களோட கலகலத்து பேசி சிரிச்சுட்டு தூங்க தான் அறைக்கு போவா. நீயும் இனி அப்படி தான் இருக்கணும்” என்றார் கறார் குரலில்.

தலையை ஆட்டினாள்.

“முதல்ல இப்படி தலையை ஆட்டுரத்தை விட்டு நல்லா வாய் விட்டு பேசி பழகு” என்றார் மீண்டும் அதே கறார் குரலில்.

“சரிங்க பாட்டி” என்று சொன்னவள்,

“முகம் மட்டும் கழுவிட்டு வந்திடுறேன்” என்று தன் அறைக்குள் நுழைந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி துடைத்தவள், கூந்தலை அவிழ்த்து கொண்டையாக சுற்றிக் கொண்டவள் நெற்றியில் போட்டு வைத்துக் கொண்டு வெளியே வர,

“வகிட்டுல யாரு குங்குமம் வைப்பா?” பாட்டியின் கெடுபிடியான குரல் கேட்க, முகத்தை சுழித்துக் கொண்டு சாமியறைக்கு போய் குங்குமத்தை எடுத்து வகிட்டில் வைத்துக் கொண்டு வெளியே வர அவளுக்கு எதிரில் வந்து நின்றான் அகத்தியன்.

அவனை பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது. “ச்ச முதல்ல இவரை பார்த்து பயப்படுறதை நிறுத்து தமிழ்” தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் கூடத்துக்கு வர,

“உன் புருசன் வந்து இருக்கான் பாரு.போ போய் டீயும் பக்கோடாவும் எடுத்து குடு” என்றார் நாச்சி.

“முதல்ல இந்த கிழவி தலையில கல்லை தூக்கி போடணும்.. ரொம்ப தான் அதட்டுது” வெளியே தெரியாமல் முணுமுணுத்துக் கொண்டே அகத்தியனுக்கு டீயும் ஸ்நேக்ஸும் எடுத்து வந்தாள்.

ஆனால் அவன் அங்கு கூடத்தில் இல்லை. “எங்க போனாரு இந்த மனுசன்” விழிகளால் அவனை தேடினாள்.

“இங்க என்ன பண்ணிட்டு இருக்க. உன் புருசன் மேல போயாச்சு. போ போய் அவனை கவனி” என்று சொன்னார் நாச்சி.

“ம்கும்... அவரு மூணு மாசத்து பிள்ளை.. மடியில போட்டு கவனிக்க” வாய்க்குள் திட்டிக் கொண்டே மாடிக்கு ஏறினாள்.

கதவை தட்டி விட்டு வெளியே நின்றாள்.

“ம்ம்ம்” என்று உள்ளிருந்து குரல் வந்தது.

“பெரிய துரை.. ம்ம் கொட்டுறாரு” திட்டிக் கொண்டாள். உள்ளே வந்து,

“இந்தாங்க பாட்டி குடுக்க சொன்னாங்க” என்று அவனிடம் குடுக்காமல் மேசை மீது வைத்து விட்டு நகர பார்க்க, வேகமாய் கதவை தாழிட்டு அதன் மீது சாய்ந்து நின்றான் அகத்தியன்.

அவனது இந்த செயலில் திகைத்துப் போனவள், “என்ன பண்றீங்க? கதவை முதல்ல திறங்க. ஸ்கூல்ல வம்பு பண்ண மாதிரி இங்க வம்பு பண்ணீங்க, பிறகு உங்க பாட்டிக்கிட்டயே சொல்லுவேன்” மிரட்டினாள்.

“ம்ஹும்..” என்று நக்கல் செய்தவன், “சொல்லேன்... சொல்லிப்பாரு உன்னை தான் திட்டுவாங்க... புருசன் கூட குடும்பம் நடத்தாம அவன் மேலையே கம்ப்ளைன்ட் பண்றன்னு” சொன்னான் திமிராக.

அந்த கிழவி சொன்னாலும் சொல்லும் என்று எண்ணியவள்,

“இல்லல்ல நான் யார் கிட்டயும் எதுவும் சொல்லல.. நீங்க முதல்ல நகருங்க. நான் கீழ போறேன்” என்று படபடத்தாள்.

“போய்க்கலாம் என்ன அவசரம்” என்றவன் அவளை நிதானமாக பார்வையிட்டான்.

காலையில் கட்டிய சேலையின் மடிப்பை எடுத்து விட்டு அப்படியே அள்ளி தோளில் போட்டு இருந்தாள். கண் மை சற்றே கலைந்து இருந்தது. நெற்றியில் வைத்து இருந்த குங்குமம் அவளுக்கு பளிச்சென்ற அழகை கொடுத்தது.

இடையில் இருந்த சேலை சற்றே நெகிழ்ந்து அவளது இடுப்பை அப்பட்டமாய் காட்டி கொடுத்தது. கையில் நேற்றைக்கு பூவரசி கட்டாயப்படுத்தி அணிவித்து இருந்த கண்ணாடி வளையல்களோடு அவள் அணிந்து இருந்த தங்க வளையல்களும் அவளுக்கு இன்னும் அழகை கூட்டி இருந்தது.

திருமணமான பொழுதி கூட அவளை இந்த அளவு ரசித்து இருக்க மாட்டான். ஆனால் இப்பொழுது இந்த கணம் அவனை மிகவும் ஈர்த்தாள் தமிழ். அதை நன்கு உணர்ந்துக் கொண்டான் அகத்தியன்.

ஈரத்தில் மினுமினுத்த அவளின் இதழ்களின் ஓரம் சின்னதாய் ஒரு காயம் இருந்தது. அதை பார்த்தவனுக்கு காலையில் நடந்தது நினைவுக்கு வர, மீண்டும் அவளின் இதழ்களை சுவைக்க மனம் துடித்தது. அதுவும் அவளின் மெல்லிய இடை அவனை மிகவும் உசுப்பி விட,

அதற்கு மேல் தாமதிக்காமல் அவளை வளைத்துக் கொண்டான். அவனது முரட்டு பிடியில் திணறிப் போனவள் “விடுங்க விடுங்க” என்று துள்ளி அவனது பிடியில் இருந்து வெளியே வர முயன்றாள். ஆனால் அகத்தியன் அவளை அப்படியே கைகளில் அள்ளியவன் படுக்கையில் கிடத்தி அவள் மீது பரவி படர்ந்தான்.

“நோ... ப்ளீஸ்” என்று அவள் தலையை அந்த புறம் இந்த புறம் நகர்த்த, அவளின் மோவாயை கையால் பற்றி அசைய விடாமல் செய்தவன் அவளின் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாக புதைத்தான்.

அதில் விக்கித்துப் போனாள். அவனை அடித்து காயம் செய்தாலும் அவன் நகராமல் போக தளர்ந்துப் போனாள் தமிழ். அவளது தளர்வில் இன்னும் மோகம் கொண்டவன், சற்றே மென்மையாக அவளை கையாள திகைத்துப் போனாள்.

விழியை நன்றாக விரித்து அவனை பார்த்தாள். ஏனெனில் இது வரை அவனிடம் அவள் மென்மையை உணரந்ததே இல்லையே.. எடுத்த உடனே வன்முறை தான். வேகம் தான். ஆனால் இப்பொழுது முத்தமே மிக மென்மையாக பொறுமையாக கொடுக்கவும் அவளையும் அறியாமல் அவனுக்கு ஒத்துழைத்தாள்.

அதில் அகத்தியனின் விழிகளில் மின்னல் வந்து போனதை உணராதவள், கண்களை மூடிக் கொண்டாள் இறுக்கமாக. ஏனோ அவளால் அவனை பார்க்க முடியவில்லை.

நாணமோ வெட்கமோ.. அவளை திரை போட வைக்க அவனை அதன் பிறகு பார்க்கவே இல்லை. வெறும் ஒற்றை முத்தம் மட்டுமே அவளை அவ்வளவு நெகிழ வைத்து இருந்தது.

அதை உணர்ந்தவன் இன்னும் இன்னும் மெதுவாக அவளின் இதழ்களை கொய்தான். அவனது கைகள் மெல்ல மெல்ல அவளின் இடையை இறுக்கிப் பிடிக்க தமிழின் தேகம் முற்றும் குழைந்துப் போனது. தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டவளுக்கு அவனை ஏறிடவே முடியவில்லை.

அவளின் இதழ்களில் இருந்து நழுவி அவளின் கழுத்தில் முகம் புதித்தவனின் மீசை அவளை கூசி சிலிர்க்க செய்தது.. அவன் கொஞ்சம் கொஞ்சமாய் அறிமுகப் படுத்தும் உணர்வுகளில் முற்றிலும் தொலைந்துப் போனாள்.

இன்னும் கொஞ்சம் கீழிறங்கி அவளின் மார்பில் முகம் புதைத்தான். துடித்துப் போனாள் தமிழ். அவளின் துடிப்பை பார்த்தவனுக்கு அவளை இன்னும் துடிக்க வைக்க எண்ணி அவளின் சேலை மாராப்பை விலக்கி முகம் புதைக்க தலையணையில் இன்னும் அழுத்தமாக முகம் புதைத்துக்கொண்டாள்.

“ப்ளீஸ்” என்று அவளின் உதடுகள் முணுமுணுக்க, தலையை நிமிர்த்தி அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான். அந்த முத்தத்தில் திகைத்துப் போனவள் சட்டென்று விழிகளை திறந்தாள்.

அதில் மோகமோ காமமோ எதுவுமே இல்லை. “கீழ போ” என்று சொன்னவன் அவளை விட்டு எழுந்துக் கொண்டான்.

அகத்தியனிடமா இந்த மாற்றம் என்று எண்ணிக் கொண்டவள், கீழே விழுந்து இருந்த முந்தானையை எடுத்து போட்டுக் கொண்டவள் கதவை திறந்து வெளியே சென்றாள். போகும் முன்பு ஒருமுறை அவனை திரும்பி பார்த்தாள். தலையை அழுந்தக் கோதிக் கொண்டு இருந்தான்.

அதுவே அவனின் தவிப்பை உணர்த்த பெருமூச்சு விட்டு கீழே வந்து விட்டாள்.

இரவு பொழுது வரை கூடத்திலும் சமையல் கட்டிலும் நின்றவள் எல்லோருக்கும் முன்னாடி உண்டு விட்டு வேகமாய் அவனின் அறைக்குள் நுழைந்து கதவை இறுக்கமாக சாற்றிக் கொண்டாள்.

எங்கே அவன் அறைக்குள் வந்து விட்டால் என்ன செய்வது என்று கதவை சாற்றிக் கொண்டாள். அவள் எதிர் பார்த்தாள். வந்து கதவை தட்டுவான் என்று. ஆனால் கதவு தட்டும் சத்தம் மட்டும் கேட்கவே இல்லை.

உள்ளுக்குள் ஏமாற்றம் சிறிதே பரவியது.. அதில் தன்னை தானே குட்டிக் கொண்டவள் ஆழ்ந்து தூங்கிப் போனாள். நடு சாமத்தில் அவளின் வெற்று இடையில் ஒரு கை பட தட்டி விட்டுட்டு மீண்டும் தூங்கிப் போனாள்.

அந்த கை மீண்டும் அவளின் இடையில் அழுத்தமாக வந்து விழ திடுக்கிட்டுப் போனவள் பதறி பக்கத்தில் பார்க்க அகத்தியன் தான் அவளின் பின்னாடி கட்டிக்கொண்டு படுத்து இருந்தான். அவனது முரட்டு கை அவளின் இடையை இறுக்கிப் பிடித்து இருந்தது.

“கதவு தாழ் போட்டு இருந்தனே... எப்படி இவரு வந்தாரு?” திகைத்துப் போனாள்.

“உப்பரிகை பக்கமா வந்தேன்” என்றவன் அவளை புரட்டி போட்டு அவள் மீது படர்ந்தான்.

Loading spinner
Quote
Topic starter Posted : March 5, 2025 11:55 am
(@gowri)
Eminent Member

Again & again அக prove பண்ணிட்டே இருக்கான்.....

அவன் மாறி இருக்களைனா அவளை எப்படி handle பண்ணி இருப்பான்?????

சோ அக .....சோ ஸ்வீட்🤩

I think, அவனோட ரியல் கேரக்டர் இது தான் போல....

அக அப்படி நடக்க காரணம்....ஏதும் ஹெவியா இருக்கு🤷🤷🤷🤷🤷

Loading spinner
ReplyQuote
Posted : March 5, 2025 1:21 pm
Admin
(@ramya-devi)
Member Admin

@gowri 

 

அடேய் அவனுக்கு கொடி புடிக்கிறதை விடவே மாட்டீங்களா 😁 😂 

அக அக.. ஏதோ கொஞ்சமா மாறி இருக்கான் ஒத்துக்குறேன்🙈

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : March 5, 2025 2:18 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top