அவனை இங்க கொஞ்சம் கூட எதிர் பார்க்காதவள் ரொம்பவே தடுமாறிப் போனாள். சுவரை பிடித்து நின்றவளுக்கு பேயறைந்த உணர்வு தான் வந்தது.
தன்னை கண்டு மிரண்டு முழிப்பவளை காண காண ஆத்திரம் சுழன்று எழ, அவளை ஒரே அடியில் நெருங்கியவன் அவளின் கழுத்தை இறுக்கமாக பற்றி அப்படியே சுவரோடு தூக்க அதிகமாக பயந்துப் போனாள் தமிழ்.
தன் கைகளால் அவனை தள்ளி விட பார்த்தும் முடியாமல் போனது தமிழுக்கு. அவனது தோளிலே அடித்து காயம் செய்தாள். ம்ஹும் அவனை அசைக்கவே முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. தொண்டையில் சுவாச குழாய் அடைத்துப் போக விழிகள் இரண்டும் சிவந்து வெளியே பிதுங்கும் நிலைக்கு வந்தாள். கால்கள் இரண்டும் துள்ளியது.
அவளை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன் அவள் படும் அவஸ்த்தைகளை கண்குளிர இரசித்தான். பிறகு என்ன நினைத்தானோ அவளை அப்படியே கீழே விட பொத்தென்று எந்த பிடிமானமும் இல்லாமல் தரையில் விழுந்தாள். விழுந்ததில் அவளுக்கு நெற்றியில் காயமேற்பட்டது.
போதாதற்கு சுவாசத்தை தடைசெய்து வைத்திருந்த காரணத்தால் இருமல் வேறு வந்தது.
அவள் படும் துயரங்களை கண்ணெடுக்காது பார்த்து இரசித்த அகத்தியன், அவள் ஏற்படுத்தி இருந்த தன் காயத்தை தொட்டு பார்த்தான். அந்த காயம் இப்பொழுது அழியாத வடுவாகிப் போய் இருந்தது.
அரக்கனாய் தன்முன் நின்றிருப்பவனை முறைக்க கூட முடியாமல் தொண்டையை அழுத்தி அழுத்தி நீவிக் கொண்டு இருந்தாள். தொண்டையில் அப்படி ஒரு வலி. பிடித்து நன்றாக நசுக்கி இருந்தான். சுத்தமாக அவளால் முடியவில்லை.
இருமல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. தண்ணீரை எடுத்து கொடுப்போம் என்று இல்லாமல் அவள் படும் சிரமத்தை ஆசையாக பார்த்து இரசித்தான் அகத்தியன்.
தண்ணீர் தாகம் எடுத்தது.அவளது தேவை தண்ணீர். ஆனால் அதை அவனிடம் வாங்கி குடிக்க வேண்டுமா என்கிற வீம்பு இவளிடம் இருக்க தட்டு தடுமாறி எழுந்தவள் தண்ணீர் இருக்கும் இடத்துக்கு போய் குடிக்க பார்க்க வேகமாய் அதை தள்ளி விட வந்தான் அகத்தியன்.
அவனது நோக்கம் புரிந்துக் கொண்டவள் அவனை அற்ப புழுவாய் பார்த்தாள். அவளது பார்வையில் இவனுக்கு இன்னும் சினம் எழ,
“வாங்குனது பத்ததாடி?”
தமிழால் கொஞ்சமும் பேசமுடியவில்லை. அவனுக்கு பதிலடி குடுக்க நினைத்தாலும் முடியவில்லை. ஏக கடுப்பு வந்ததுதான். ஆனால் என்ன செய்வது.
தண்ணீரை அவனுக்கு முன்னாடி பற்றிக் கொண்டு கொஞ்சம் வேகமாகவே வாயில் சரித்துக்கொண்டாள். அவள் குடித்த தண்ணீர் பாதி வாயிலும், மீது அவளது மார்பிலும் சிந்தியது.
அதை பற்றி எல்லாம் அவள் கவலை கொள்ளவேயில்லை. எங்கே அகத்தியன் மீண்டும் தண்ணீரை பறித்து விடுவானோ என்ற காரணத்தினாலே அதிக வேகமாக தண்ணீரை குடித்தாள்.
அதில் கொஞ்சம் ஆசுவாசம் ஆனவள் நீண்ட மூச்சை எடுத்து விட்டாள். அகத்தியனை தீர்க்கமாக பார்த்தாள். அவளது பார்வையை பார்த்தவன்,
“என்னடி கண்ணகியா நீ? பார்வையிலையே எரிக்கிற?” நக்கல் செய்தான்.
“நான் மட்டும் கண்ணகியா இருந்து இருந்தா மதுரையை எரிச்சு இருக்க மாட்டேன். உன்னை தான் எரிச்சு இருப்பேன்” என்று சீறினாள்.
“ஓ.. அந்த அளவுக்கு தைரியம் வந்துடுச்சோ அம்மணிக்கு” நக்கலாக கேட்டவன்,
“சரி உனக்கு ஒரு வாய்ப்பு தரேன். இப்பவே என்னை எரிச்சுட்டு நீ போ... உன் வாழ்க்கையை காப்பாத்திக்க” என்றான்.
அவனை எரிச்சலுடன் பார்த்த தமிழ்,
“லூசா நீங்க... உங்களை கொலை பண்ணிட்டு நான் போய் களிதிங்கவா. எதுவும் வேணாம் சாமி ஆளை விடுங்க” என்றவள் வெளியே போக பார்க்க, அவளின் கையை சுண்டி இழுத்தவன் அவளின் முகத்துக்கு நேராக தன் முகத்தை கொண்டு வந்து அவளை கூர்மையாக பார்த்தான். அவனது பார்வையில் திக்கென்று வந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அவனது கண்களில் இருந்து தன் பார்வையை விலக்கிக் கொண்டாள்.
“அப்போ என்னோட டார்ச்சர் நீ எங்க போனாலும் தொடரும்” என்றான்.
“வாட்?” என்று அதிர்ந்துப் போனாள்.
“எஸ். ஒன்னு நீ என்னை கொலை பண்ணிட்டு சுதந்திரமா இரு. இல்லன்னா நீ எங்க போனாலும் என் டார்ச்சர் உன்னை தொடர்ந்துக் கொண்டிருக்கும். சாய்ஸ் இஸ் யுவர்” என்றான்.
அவனது பேச்சில் ஏகத்துக்கும் மிரண்டு போனவளுக்கு அகத்தியன் லூசு போலவே தெரிந்தான்.
“சரியான லூசுக்கிட்ட மாட்டிக்கிட்டேனே” மனதுக்குள் புலம்பிக் கொண்டவள்,
“எனக்கு ரெண்டு நாள் டைம் குடுங்க சார்.. யோசிச்சு சொல்றேன்” என்றவள் விட்டால் போதுமென்று வெளியே போய் விட்டாள்.
“மூஞ்சியா அது.. கர்ண கொடூரமா பார்க்குறப்பவே பயமா இருக்கு... கல்யாணத்தப்ப கூட கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருந்தாரு. இப்போ ச்சீ... காட்டு கரடி மாதிரி இருக்கிறாரு. சின்ன பிள்ளைங்க மட்டும் இவரை பார்த்தா நிச்சயம் வேப்பிலை தான் அடிக்கணும்” வாய்க்குள் அவனை திட்டிக் கொண்டு வெளியே வந்தவளுக்கு நிதர்சனம் புரிய சட்டென்று தூக்கிவாரிப் போட்டது.
“அப்போ பூவரசி ஆன்டி தான் இவரோட அம்மா இல்லையா.. இது தான் அவரோட குடும்பம் இல்லையா?” தலைவலி எடுத்தது.
திட்டம் போட்டு தன்னை ஏமாற்றிய பூவரசியின் மீது அவ்வளவு கோவம் வந்தது. அதுவும் தன் தாத்தா பாட்டியே இதற்கு உடைந்தையாக இருக்கும் பொழுது யாரை நொந்து என்ன செய்வது.
தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்ப பார்க்க,
நாச்சியார் வேகமாய் வந்து அவளை தடுத்தார். “இங்க பாரு பொண்ணே... ஊருல இருக்குற எல்லோரையும் வர சொல்லியாச்சு. குறிப்பா உங்க தாத்தா பாட்டியும். இந்த நேரம் நீ இங்க இருந்து கிளம்புறது சரி இல்ல. ஒழுங்கா உள்ள போ” என்று அதட்டல் போட்டார்.
அவரின் அதட்டலில் கொஞ்சம் பயம் வந்தாலும்,
“இல்ல ஒரு நொடி கூட நான் இந்த வீட்டுல இருக்க மாட்டேன். நான் போகணும்” என்று நின்றவளை, நாச்சியார் கடுமையாக முறைத்தார்.
“இங்க பாரு இது என் குடும்பத்தோட கௌரவம். இந்த கௌரவத்தை குழைக்க நினைக்கிற யாரையும் நான் சும்மா விட மாட்டேன் தமிழ். இது பரம்பரை பரம்பரையா கட்டி காத்துக்கிட்டு வர்ற சடங்கு. அதுல இந்த வீட்டு மருமகளா நீ கலந்துக்குறது முக்கியம்” என்றார்.
“என் கழுத்துல தாலியே இல்லை. அதோட உங்க பேரனுக்கும் எனக்கும் இடையில டைவேர்ஸ் ஆகிடுச்சு மறந்துடாதீங்க” என்றாள் கோவமாக.
பின்ன இப்படி கார்னர் பண்ணி தன்னை இருத்தி வைப்பது முறையில்லையே.. எல்லாமே முடிஞ்ச பிறகு மீண்டும் துளிர வைப்பது வீண் தானே...
“அதெல்லாம் எனக்கு தெரியும் நீ போய் வந்தவங்களை கவனி... நீ ஒன்னும் சின்ன பிள்ளை இல்ல.. இப்படி மூஞ்சை தூக்கி வைக்காம இந்த வீட்டோட மருமகளா நடந்துக்க பாரு. என் மருமகளுக்கு பிறகு இந்த வீட்டுல எல்லாத்தையும் பார்த்துக்க போறவ நீ தான். அதை மனசுல வச்சுக்கிட்டு நட” என்று போட்டார் ஒரு அதட்டல்.
அதில் அவளுக்கு பயம் வந்து விட்டது.
“ஏதே நானா?” ஏகத்துக்கும் அதிர்ந்துப் போனாள்.
“தன்னை சுற்றி என்ன நடக்குது...” என்று ஒன்றும் புரியாமல் தவித்துப் போனாள். வேகமாய் பூவரசியிடம் வந்தாள். அவள் வந்த வேகத்தை வைத்தே புரிந்துக் கொண்டவர்,
“இப்ப எதுவும் பேச வேண்டாம். நிகழ்ச்சி முடியட்டும். பிறகு ஆற அமர பேசலாம் தமிழ்” என்று அவளிடம் சிக்காமல் ஓடிவிட்டார் பூவரசி.
அவளுக்கு இந்த வீட்டில் தெரிந்தது அவர் மட்டும் தான். அவரே விலகி போன பிறகு யாரிடம் அவள் நியாயத்தை கேட்பது. வேறு வழியில்லாது வேலுநாச்சியார் சொன்னதை செய்ய வேண்டி இருந்தது.
இங்கே அறையில் இருந்த அகத்தியனுக்கு எரிமலையை உடம்பில் பூசியது போல அப்படி ஒரு தகிப்பு. யாரால் அவனது ஒட்டு மொத்த வாழ்க்கையும் பரி போனதோ இன்று அவன் கண்ணுக்கு முன்னாடி எந்த பாதிப்பும் இல்லாமல் வந்து நின்றவளை காண காண அவனது மனம் எரிந்துப் போனது.
மதுவின் பக்கம் போகாதவன் இப்பொழுது இருபத்தி நாலுமணி நேரமும் அதன் பிடியில் தான். நீட்டாக இருப்பவன் இப்பொழுது எல்லாம் கசங்கிய சட்டையில் தான். நாள் தவறாமல் தினமும் சேவ் செய்பவனின் முகம் முழுக்க முடி தான். புதருக்கு பத்தியில் அவனது கண்களும் மூக்கும் எட்டி பார்த்துக் கொண்டு இருந்தது.
நெற்றியை மறைக்கும் அளவுக்கு தலை முடி... தன் கோலத்தை கண்ணாடியில் கண்டவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. எந்த நிலையில் தன்னை தள்ளி விட்டு இருக்கிறாள் என்பது புரிந்தவனுக்கு அவளை தன் கையாலே அடித்து கொள்ள வேண்டும் போல தோன்றியது.
அந்த வீடே அதிர “தமிழ்” என்று அழைத்தான். அவனது கர்ஜனையில் திகைத்துப்போன தமிழ் வீட்டி விட்டே ஓடிப்போக பார்க்க நாச்சியார் அவளை இழுத்து வந்து அவனது அறையில் தள்ளி விட்டு சென்றார்.
“என் பேரன் உன்னை திருமணம் முடிச்ச பிறகு இன்னைக்கு தான் வந்து இருக்கான். மறுவீட்டு சடங்குக்கு கூட அவன் இங்க வரல. இனி அவன் இந்த வீட்டை விட்டு போகக்கூடாது. நீ தான் அவன்கிட்ட சொல்லி இங்கயே இருக்க வைக்கணும். பார்த்தியா அவன் எப்படி இருக்கான்னு... என் பேரனை எனக்கு திருப்பி குடுத்துட்டு இங்க இருந்து போ” என்று சொல்லி விட்டு அவர் வெளியே போக கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.
மறுபடியும் ஒத்தியில் அவன் கிட்ட மாட்டிக்க மனம் முழுக்க அச்சமாக இருந்தது.
“பாட்டி அதெல்லாம் எனக்கு தெரியாது. என்னை விட்டுட்டுங்க நான் இப்படியே போயிடுறேன். உங்க பேரன் இருக்கிற பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன்” என்று அவள் கெஞ்சிய கெஞ்சல்களை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் வெளியே தாள் போட்டு விட்டு போய் விட்டார் நாச்சி.
அந்த கதவை தட்டி தட்டி பார்த்தவள் அது திறக்காமல் போக சோர்ந்துப் போய் விட்டாள். ஏற்கனவே அவனிடம் அகப்பட்டு குற்றுயிரும் குழைஉயிருமாக வெளியே வந்ததை அவளால் இன்று வரை மறக்க முடியவில்லை. இதில் மீண்டும் இப்படி சம்பவம் என்றால் அவள் என்ன செய்வாள் பாவம்.
தமிழின் நிலை யாதோ...
இவன் ஏண் இப்படி ஆகிட்டான்????
முதலில் விரும்பியே கல்யாணம் செய்து இருப்பானா????
அவ தாத்தா பார்த்த பையன் தானே இவன்....
கண்டிப்பா அவன் இப்படி இருக்க காரணம் ஏதும் இருக்கும்....
தமிழ், நா முன்னாடி சொன்னது தான்...
ஒன்னு நீ அப்படி இருக்க....அதாவது..உன் பாட்டி பேச்சை கேட்டு, எதுக்கும் உன் எதிர்ப்பை காட்டமா இருந்த...
உன் சித்தி பேசும் போதே, அவங்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கணும் நீ....
அப்ப அவனுக்கு உன் மேல ஒரு understanding வந்து இருக்கும்....
இப்ப இப்படி இருக்க....அவன் பக்கம் என்னனு கேட்காம அவனை தூக்கி போட்டுட்ட🤷🤷🤷🤷🤷
அவளை கை பாவையாக வைத்திருந்த தாமரையை அவளால்என்ன செய்து இருக்க முடியும். அமைதியாக கடந்துவிட எண்ணினாள். ஆனால் அது அவனின் பார்வைக்கு தவறாக பட்டது.
இருவருக்குமே புரிந்துணர்வு வந்தால் மட்டுமே சுலபமாகும் டா♥️
நன்றி 😍♥️