அத்தியாயம் 27

 
Admin
(@ramya-devi)
Member Admin

 

காற்றில் படபடத்த காகிதத்தில் இருவரின் கவனமும் சற்றே கலைந்தது. தலையை தூக்கி நிமிர்ந்து பார்த்தார்கள். மேசை மீது விவாகரத்து பத்திரம் பறந்துக் கொண்டு இருந்தது. அதை பார்த்தவர்கள் தங்களுக்குள் பார்வை பரிமாற்றம் செய்துக் கொண்டார்கள்.

சங்கவைக்கு மனம் சற்றே உளைச்சலாக இருந்தது அதில் கை எழுத்து போட்டதால். இருந்தாலும் தன்னை செஞ்சன் விட மாட்டான் என்று அவளுக்கு தெரியும். தரையில் மீண்டும் சரிந்து படுத்து விட்டாள்.

அதனால் அவளிடம் ஏற்பட்ட அசைவில் திரும்பி அவளை பார்த்தான் செஞ்சன். தரையில் சரிந்து படுத்து இருந்தாள். அவன் எந்த கோலத்தில் விட்டானோ அதே கோலத்தில் இருந்தாள். புடவை முந்தானை விலகி, தலை லேசாக கலைந்து, பற்றி அழுத்திய அவளின் இடையை கன்னி போய் இருக்கும் அழகோடு அவள் இருப்பதை பார்த்தவன்,

“ரொம்ப அழகா இருக்கடி” என்றான் கரகரத்த குரலில். அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

பெரும் அமைதி அவளிடம். அவள் பதில் மொழி கூறாததை பார்த்து,

“என்னடி பேச மாட்டிக்கிற?” நெற்றி சுருக்கினான். அவாள் அப்பொழுதும் பதில் பேசவில்லை. “ஓஹோ.. பேச மாட்டியா? பேசாத.. எனக்கென்ன வந்தது...” என்றவன், அவளை சற்றே முரட்டு தனமாக கையாள ஆரம்பித்தான். அதில் திகைத்துப் போய் அவனை கண் திறந்துப் பார்த்தாள்.

அதில் வெற்றி சிரிப்பை அவன் உதிர்க்க, சங்கவை முறைத்துப் பார்த்தாள்.

“என்னடி முறைப்பு..” பல்லைக் கடித்து அடிக்குரலில் உருமியவன், அடுத்து அவளிடம் நடந்துக் கொண்டது எல்லாம் வன்முறை மட்டும் தான்.

இது நாள் வரை அவளை எவ்வளவு மென்மையாக கையாள வேண்டுமோ அந்த அளவு மேன்மையயாக கையாண்டு, காதலிலும் மோகத்திலும் திளைக்க விட்டு இருந்தான்.

இடையில் ஒன்று இரண்டு நாட்கள் மட்டும் தான் சற்றே வன்மையாக அவளை நாடுவான். ஆனால் இன்று முழுவதுமாகவே அவளை வன்மையாக கையாள, அதிர்ந்துப் போனாள்.

“செஞ்சா” என்று அவள் திகைக்க,

“நானும் மனுசன் தான்டி” என்று முறைக்க, வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள். இனி இவனிடம் பேச முடியாது என்பது தெளிவாக புரிந்தது.

என்னவோ செய்துக் கொள் என்று விட்டு விட்டாள். ஆனால் அவளை அவன் சீண்டி சிலிர்க்க வைக்க என்கிருந்து அமைதியாகப் போவது. அவனுக்கும் பதிலடி கொடுக்க வைத்தான் கணவன்.

அமைதி பிள்ளையை அதிரடியாக மாற்ற முனைந்தான். “ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சிய கெஞ்சல்களை எல்லாம் காதிலே வாங்கிக் கொள்ளாமல் தன் விருப்பப்படி அவளை ஆட்டு வித்தான் செஞ்சன்.

ஆதில் பயந்து போய் கண்களை மூடிக் கொண்டவளை பார்த்து மனம் விட்டு இவன் சிரிக்க, தன்னை கேலி செய்து சிரித்தவனின் நெஞ்சிலே சிணுங்கிக் கொண்டு குத்தினாள்.

அவனது மார்பில் வந்து விழுந்த அடிகளை சுகமாக வாங்கிக் கொண்டவன்,

“இப்போ என்னோட டேர்ன்” என்று விஷமமாக அவன் கண்ணடிக்க, அதிர்ந்துப் போனாள்.

“நோ” என்று அவள் அலறும் முன்பே அவளின் மார்பில் தன் முகத்தை பதித்தான் செஞ்சன். அவனது அதிரடியில் திகைத்துப் போனவள் செங்கொழுந்தாய் மாறிப் போனாள்.

அவனின் இடைவிடாத தேடலுக்கும் கூடலுக்கும் சாட்சியாய் மாறிப்போனது அவள் அணிந்த வளையல்களும் கொலுசுகளும்... அவைகளை இணைந்து சுக ராகம் மீட்ட பெண்ணவளின் மோகம் கூடிப் போனது.

அவளின் மோகனங்களை தூண்டி துலங்க விட்டவன் அவளின் மேனியில் தன் இதழ்களை புதைத்து வன்மையாக காதல் செய்ய ஆரம்பிடத்தான்.

அவனது காதலில் மிரண்டு தான் போனாள் சங்கவை. சுக ராகங்கள் ஓயாமல் எழுந்த வண்ணமாகவே இருந்தது விடியும் வரை.

லேசாக வெளிச்சம் பரவியதில் இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்து விழிகளை நன்கு மலர்த்தி பார்த்தாள். மணி எட்டு என்று காட்ட பதறியடித்துப் போனாள்.

“அச்சச்சோ...” என்று வேகமாக குளிக்க செல்ல, அவளோடு இவனும் பின்னே வர பயந்துப் போனாள்.

“செஞ்சா நீங்க என்ன பண்றீங்க?”

“எனக்கும் நேரமாச்சுடி” சிறு பிள்ளையாய் அடம் பிடித்தவன் அவளோடு இணைந்து குளித்து கிளம்பி வெளியே வர நேரம் இன்னும் கடந்து போய் இருந்தது.

“இது தான் நேரமாகுறதா?” கேட்டுக் கொண்டே அவள் கிளம்ப,

“ஆமாம்” என்று கண்னடித்தவன் அவளை மேலும் சீண்டி விட,

“இன்னைக்கு ஒரு மீட் இருக்கு செஞ்சா ப்ளீஸ்” என்று கெஞ்சி அவனிடம் இருந்து விடை பெற்று வருவதற்குள் அவளுக்கு போதும் போதும் என்று ஆனது.

அறையில் இருந்து வெளியே வருவதற்குள்ளே பத்து மணி ஆகி இருந்தது. எப்படியும் இன்னைக்கு மருமகள் வர தாமதம் ஆகும் என்று வாசுகியே காலை உணவை செய்து இருந்தார்.

“சாரி அத்தை” என்று வாசுகியின் கையை பிடித்துக் கொள்ள,

“அதனால என்ன கண்ணா இருக்கு... அங்க ஒருத்திக்கு ஏனோ தானான்னு செய்தேன்... இங்க நம்ம மூணு பேருக்கு மனம் நிறைவா செய்யுறேன்.. நீ வெசன படாம சாபிட்டுட்டு கிளம்பு” என்று அவளை உட்கார வைத்து பரிமாறினார்.

“இங்க நானும் ஒருத்தன் இருக்கேன்” என்று செஞ்சன் முறைத்துக் கொண்டே வர,

“என் மருமகளுக்கு டைவேர்ஸ் குடுத்தவனுக்கு எல்லாம் என்னால சோறு போட முடியாது.. ஆக்கி தான் வைக்க முடியும். வேணும்ன்றவங்க அவங்களே போட்டு தின்னுக்கிட்டும்” என்று சிலுப்பிக் கொண்டு அவர் சொல்ல, செஞ்சன் பல்லை கடித்தான்.

“ம்மா ரொம்ப தான் பண்றீங்க”

“யாருடா ரொம்ப பண்றது.. நீ தான் ரொம்ப பண்ற.. உன் பொண்டாட்டி உனக்கு செல்லம் குடுத்து ரொம்ப கெடுத்து வச்சு இருக்கா.. அதனால தான் நீ இந்த ஆட்டம் ஆடுற... நானா இருந்தா இந்நேரம் நீ ஆடுற ஆட்டத்துக்கு காலை ஓடிச்சு அடுப்புல வச்சு இருப்பேன்” என்ற நேரமே பரவாசு உள்ளே வந்தான்.

“நல்லா சொல்லுங்க ம்மா” என்று அவனும் வந்து உண்ண அமர, அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார் வாசுகி.

அதில் இன்னும் காண்டாகினான் செஞ்சன்.

“ம்மா” என்று அவன் பல்லைக் கடித்தான். சங்கவை பாவமாய் தன் அத்தையை பார்த்தாள். விழிகளாலே அவள் கெஞ்ச,

“எல்லாம் நீ குடுக்குற இடம் அதனால தான் இவன் இந்த ஆட்டம் ஆடுறான்” மருமகளை திட்டினார்.

“நீ எனக்கு சோறே போட வேண்டாம்... அதுக்காக என் பொண்டாட்டியை திட்டுற வேலை எல்லாம் வேணாம்..” மிரட்டியவன் தானே போட்டு உண்ண, தன் அத்தையை கெஞ்சலாக பார்த்தாள் சங்கவை.

“உன் மூஞ்சிக்காக தான் இவனை சும்மா விடுறேன்” என்றவர் செஞ்சனுக்கு பரிமாறினார்.

மூவரும் உண்டுவிட்டு கிளம்ப, அவளை தன் காரில் ஏற்றிக் கொண்டு போனான்.

“நானே போய்க்குவேங்க”

“அந்த பக்கம் தான்டி வேலை.. அதனால உன்னை விட்டுட்டு நான் போய்க்கிறேன்” என்று அவளுக்கு சொல்லி விட்டு காரை எடுத்தான். அவனுக்கு அருகில் சங்கவையை அமரவைத்து விட்டு, வாசுகி பரவாசுவை பின்னுக்கு அமரவைத்தார்.

“ஆனாலும் மம்மி நீங்க ரொம்பா தான் பண்றீங்க” முறைத்தான் பரசு.

“போடா எல்லாம் எனக்கு தெரியும்... நீ உன் வேலையை பாரு” என்று சொன்னார்.

அவருக்கு கையை ஆட்டிவிட்டு மூவரும் கிளம்ப, அடுத்த நிறுத்தத்திலே வண்டி நின்றது.

“என்னடா ஆச்சு?” பரவாசு முன்னால் எட்டி பார்க்க, அங்கே ஒரு அழகான பெண் இவர்களின் காரை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாள்.

அந்த பெண்ணை பார்த்து திகைத்தவன்,

“முதல்ல வண்டியயை எடுடா” செஞ்சனை பார்த்து பல்லைக் கடித்தான்.

“வொய் ப்ரோ... இவ்வளவு பதட்டம்?” நக்கலாக கேட்டான் செஞ்சன்.

“டேய் நேரம் காலம் தெரியாம படுத்தாதடா” என்றான் இறங்கிப் போன குரலில்.

“எனக்கு மட்டும் எவ்வளவு கிறுத்துருவமான வேலை எல்லாம் பார்த்த... இப்போ என் டேர்ன்.. நல்லா அனுபவி மச்சான்” என்று அவனை பார்த்து கண்ணடித்தவன், அந்த பெண்ணை பார்த்து கையை ஆட்டினான் செஞ்சன்.

சங்கவை திரும்பி தன்னவனை பார்க்க,

“பரவாசுவோட காதலி” என்றான்.

“சூப்பர் செலெக்ஷன் அண்ணா” என்றாள்.

“அட நீ வேறம்மா.. நான் அவளை காதலிக்கவே இல்ல..” தலையை பிடித்துக் கொண்டான்.

“ஹாங்” என்று சங்கவை அதிர்ந்து செஞ்சனை பார்த்தாள்.

“உன் அண்ணனை ஒன்சைடா லவ் பண்ணிட்டு இருக்கு அந்த பொண்ணு.. என்கிட்டே உதவி கேட்டுச்சு... அது தான் போற போக்குல ஒரு உதவியை செய்து வச்சுட்டு போகலாமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல செய்யிறேன்” என்றவனின் பேச்சில் சிரிப்பு வர, பரவாசுவை திரும்பி பார்த்தாள்.

“உன் புருசன் சொல்றதை எல்லாம் நம்பணும்னு எந்த அவசியமும் இல்லம்மா..” பரவாசு அவசரமாய் சொல்லும் பொழுதே,

“அவரு எப்பொழுதுமே உண்மை தான் சொல்லுவாரு ண்ணா” என்றாள் சங்கவை.

வாயை இறுக மூடிக் கொண்டான் பரவாசு. செஞ்சன் வாய் விட்டு சிரித்தான்.

“திசிஸ் மை சோல் டா... என்னை மட்டுமே நம்புவா” என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டான் செஞ்சன்.

“போடா டேய் நீ ஒரு அப்பாவி பொண்ணை ஏமாத்திட்டு இருக்க... நீ என்ன சொன்னாலும் அதுவும் நம்புது பாரு.. என் தங்கச்சியை ரொம்ப நாள் ஏமாத்த முடியாது பார்த்துக்க” காண்டில் வெதும்பி போனான்.

பின்ன இப்படி காதலிக்கும் பெண் எல்லாம் இப்போ மலை ஏறிவிட்டார்களே... அரிதினும் அரிதாக அவன் பார்த்த பெண் சங்கவை.

அவளை மாதிரி குணம் கொண்ட பெண்ணவளை கண்டதே இல்லை. சும்மா பேச்சு வார்த்தைக்கு கூட செஞ்சனை அவள் விட்டுக் குடுக்கத்தை கண்டு மனம் நிறைந்துப் போனான் தான். ஆனாலும் சின்னதாய் ஒரு சில்மிஷம் செய்தான் இரு காதலர்களுக்குள்ளும்.

“இதுக்கு தான்டா... உனக்கு பஜாரியான காதலி கிடைச்சு இருக்கா” என்று செஞ்சன் அவனை வாரி விட்டான்.

அதற்குள் அந்த பெண் பின்னாடி கதவை திறந்துக் கொண்டு காரினுள் ஏறி அமர்ந்தாள்.

வந்த உடனே பரவாசுவை முறைத்துப் பார்த்தாள் அவள். அவளின் கோப பார்வையை கண்டுக் கொள்ளாமல், சங்கவையிடம் மும்மரமாக ஏதோ பேசுவது போல அவன் சீனை போட, ஒரு நிமிடம் பொறுத்துப் போனவள் அதற்கு மேல் தாங்க மாட்டாமல் அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டாள்.

“என் காதல் உனக்கு விளையாட்டா போயிடுச்சா டா... தடிமாடு... நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ அதெல்லாம் எனக்கு தெரியாது. இந்த சனிக்கிழமை என்னை பொண்ணு பார்க்க வராங்க. நீ என்ன பண்ற உன் வீட்டு ஆளுங்களை எல்லாம் கூட்டிக்கிட்டு அதற்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை காலையிலையே என் வீட்டுக்கு வந்து என்னை பெண் கேட்கிற.. அப்படி இல்லன்னா சரியா வெள்ளிக்கிழமை பன்னிரண்டு மணிக்கு...” அவள் முடிக்கும் முன்பே,

மிகுந்த ஆர்வத்துடன் “தூக்கு போட்டுக்குவியா?” கேட்டான் பரசு. அவனை முறைத்துப் பார்த்தவள்,

“ச்சச்ச.. தூக்கெல்லாம் போட்டுக்க மாட்டேன்...” என்றாள்.

“அப்புறம்?” அவன் ஆர்வமாக கேட்க,

செஞ்சனோ “கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல போலையே” நக்கல் செய்ய, சங்கவை சிரிப்புடன் அங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டு வந்தாள்.

“அப்புறம் என்ன...?” என்றவள் செஞ்சனை ஒரு பார்வை பார்க்க அவன் சென்ரல் லாக்கை எடுத்து விட்டான். அடுத்த நிமிடம், “என்னை வேணான்னு சொல்றாவனை இப்படி கார்ல இருந்து தள்ளி விட்டுடுவேன்” முடிக்கும் முன்பே அவனை காரில் இருந்து உருட்டி விட்டு இருந்தாள் அந்த பெண்.

“அடிப்பாவி கொலை காரி” என்று திட்டிக் கொண்டே சாலையின் ஓரமாக உருண்டான் பரவாசு.

“அடப்பாவி உன்னை நம்பி கார்ல வந்தேன் பத்தியா என்னை சொல்லணும்டா..” கத்திக் கொண்டே இன்னும் உருண்டான் சாலையில்.

சங்கவை திகைத்துப் போய் பார்த்தாள் இருவரையும்.

“அவனுக்கு அவ்வளவு சீன எல்லாம் இல்ல... வந்திடுவான். நீ கவலை படாத” மனைவியை தேற்றினான். அங்கும் இங்குமாய் சின்ன சின்னதாய் சிராய்ப்புடன் எழுந்து வந்தான் பரவாசு.

அவன் சட்டை எல்லாம் புழுதி.. தலை, முகம் கை கால் எல்லாம் மண்ணு... அடிபட்டு எழுந்த பிச்சைக்காரன் போல வந்து நின்றவனை யாரும் கண்டுக் கொள்ளவில்லை.

Loading spinner
Quote
Topic starter Posted : April 29, 2025 10:21 am
(@mrsbeena-loganathan)
Trusted Member

மௌனம் கூட மெல்லினமாக காதலை மொழிகிறது....

பார்வைகளும்

புயலாக சூழ

பூவையின் புன்னகையில்

புதைந்து போகிறது மனது...

விரும்பும் மனது வெறுக்கும் நடப்பு பருகும் தாகம்

உருகும் உள்ளம்

தடுமாறி விழாத காதல் இழுத்துப் பிடித்து வைக்கிறது நம்பிக்கை....

 

 

Loading spinner
ReplyQuote
Posted : April 29, 2025 1:30 pm
(@mathy)
Eminent Member

செஞ்சன் எந்த கிறுக்குத்தனமும் பண்ணாம இருக்கான் இந்த எபில 🤭🤭🤭

பரசு உனக்கு வாய்ச்சது இவ தான் போல ஓகே சொல்லி உயிரை காப்பாத்திக்கோடா 🤣🤣🤣🤣🤣

Loading spinner
This post was modified 11 hours ago by Mathy
ReplyQuote
Posted : April 30, 2025 10:44 pm
(@gowri)
Estimable Member

வர வர இவனை எனக்கு பிடிக்கவே மாட்டிங்குது....

அவளை தள்ளி வைக்க ஏதும் valid reason இருக்குனு தான் நினைச்சிட்டு இருந்தேன்....

ஆன இவன் லூசுத்தனாம செய்துட்டு இருக்கான்....

பரசு....சங்கு போல பெண்ணை கொண்டு வருவாங்கனு நீ நினைச்சி ஏமாந்துட்ட🤭🤭🤭🤭

இந்நேரம், உனக்கு சங்கு ஊதி இருப்பாங்க....அப்படி பட்ட பெண்ணா பார்த்து இருக்காங்க🤣🤣🤣🤣

காதல் அரக்கியா இருக்கா டா....be careless😂😂😂😂😂😂😂

Loading spinner
ReplyQuote
Posted : April 30, 2025 11:01 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top