தன் சேலையை கிழித்து கட்டு போட்டவள், சிறிது நேரத்திலே அசந்து அவனது மார்பின் மீதே படுத்து விட்டாள். அவள் ஆழ்ந்து தூங்குவதை பார்த்த ஏகன் கொஞ்ச நேரம் கழித்து அவளை கீழே இறக்கி தூங்க வைத்தவன் மெல்ல அந்த குழியை விட்டு மேலே வந்தான்.
இந்த இடம் முழுக்க அவனது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. வெளி ஆளை விட எது எங்கே இருக்கிறது இவனுக்கு தான் அதிகம் தெரியும். சர்வ சாதரணமாக அவன் இந்த காட்டை கையாள்வான்.
யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்று கூர்ந்த விழிகளால் அங்கு நடமாடும் ஆட்களை அசையாது சில நிமிடங்கள் அவதானித்தான்.
மொத்தம் இருபது பேர். இருபது பெரும் வெல் ட்ரைனர் என்று அவர்களது துப்பாக்கி சுடுதலிலே கண்டு கொண்டான். ஆனாலும் இடம் அவனது ஆச்சே... இடமறிந்து களமாடுபவனை எவராலும் வெற்றி கொள்ள முடியாது அல்லவா?
ஏகனும் அது போல தான். அவனை வெற்றி கொள்ள எந்த படையாலும் முடியாது. ஏனெனில் இது அவனுடைய இடம். தன் வலிமையை நம்பி களமாட காத்திருப்பவன்.
அவனிடம் வைத்துக் கொண்டால் எதிர்க்கு தான் ஆபத்து அதிகம். அது தெரியாமல் எதிரி இவனுக்கு வலை விரித்து வைத்து இருக்கிறான்.
எல்லோரையும் கூர்ந்து கவனித்துக் கொண்டவன் தன் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்துக்கு பதுங்கி சென்றான். எந்த ஆராவாரமும் இல்லாமல் ஒரு அரவத்தை போல.
ஆயுதங்களை எடுத்துக் கொண்டவன் அடர்ந்த மரத்தின் மீது ஏறியவன் அதன் தடிமனான கிளையில் இடம் பார்த்து தன் கால்களை அகலமாக ஊன்றி தன்னை நிலை நிறுத்திக் கொண்டு அங்கு டார்ச் அடித்து இவனையும் குழலியையும் தேடிக்கொண்டு இருந்தவர்களின் மீது மயக்க மருந்து தடவிய அம்பை குறி தவறாது எறிந்தான்.
விர் விர் என்று வந்த அம்பில் சுதாரிக்கும் முன்பே பத்து பேர் தலை கவிழ்ந்து குப்புற விழுந்தார்கள்.
அதை பார்த்த மற்றவர்களுக்கு கொஞ்சம் பயம் தோன்றியது. இருந்தாலும் துப்பாக்கியை இறுக்கிப் பிடித்துக் கொண்டவர்கள் எல்லா பக்கமும் சுட ஆரம்பித்தார்கள். நான்கு திசைகளும் துப்பாக்கி சத்தத்தால் நிறைந்துப் போனது.
ஆனாலும் ஒரு குண்டு கூட அவர்கள் எய்தவனின் மீது படவில்லை. தன்னை இடம் மாற்றிக் கொண்டே இருந்தான் ஏகன். முன்பு அமைதியாய் போனது குழலி அவனுடன் இருந்ததால் தான். எப்படியாவது அவளது உயிரை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே. அதனால் தான் குண்டடி பட்டான். இல்லை என்றால் நின்று களமாடி இருப்பான்.
அவனது திணவுக்கு நல்ல வேட்டை... சும்மா விடுவானா? புகுந்து விளையாண்டான். ஒருவரையும் மிச்சம் வைக்கவில்லை. எல்லோரையும் ஒரு கயிறு கொண்டு கட்டியவன் ,
அசோக்குக்கு போனை போட்டான். அவன் சடுதியில் வண்டியோடு வந்து அத்தனை பேரையும் அள்ளி போட்டுக் கொண்டு போனான்.
“என்னால உனக்கு ரொம்ப இடைஞ்சலா போயிடுச்சு ஏகா” என்று அவனின் தோளில் கையை வைத்தான்.
“இதெல்லாம் ஒரு இடைஞ்சலாடா? எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். கேஸ் எந்த லெவெல்ல இருக்கு?” கேட்டான்.
“எங்க ஒன்னும் மூவ் ஆகவே இல்ல.. அப்படியே தான் இருக்கு.. குழலியோட அப்பா பவர் ஆப் பட்டானிய அவரோட மச்சானுக்கு கொடுத்து இருக்கவும் வில்லங்கம் இன்னும் அதிகமா தான் இருக்கு. நடந்த அந்த கோர விபத்துல குழலியும் இறந்து போயிட்டதா நம்பவச்சி, அவளுக்கு போலி டெத் செர்டிபிகேட்டும் வாங்கி இருக்கானுங்க.. அடுத்த ஹியரிங்க்கு குழலி நேர்ல வரணும். அப்படி இல்லன்னா அந்த செர்டிபிகேட் படி மொத்த சொத்தும் அவனுங்க கைக்கு போயிடும்.. இதுக்கு இடையில இவளை கொன்னு போடணும்னு நாளா பக்கம் இருந்ததும் ஆளுங்கல ஏவி விட்டு இருக்காணுங்க” என்றான் அசோக்.
அமைதியாக கேட்டுக் கொண்டான் ஏகன்.
“அடுத்த ஹியரிங்ல குழலி உயிரோட தான் இருக்கா... அவளோட உயிருக்கு பாதுகாப்பு இல்ல. அதனால தான் கோர்ட்டுக்கு வர பயப்படுறா.. அப்படின்னு சொல்லி அவளோட உயிருக்கு பாதுகாப்பு கேளு” என்றான்.
“ஆனா ஜட்ஜ் நம்ப மாட்டாரேடா...” என்றான் அசோக்.
“எந்த கோர்ட்?” கேட்டான்.
அவன் சொல்ல,
“அங்கயா?” என்று தாடையை தேய்த்துக் கொண்டவன் சிறு யோசனைக்கு பிறகு,
“நீ கோர்ட் போயிட்டு சொல்லு... லைவ் விடியோ அனுப்புறேன். அப்படி இல்லன்னா வீடியோ கால் பண்ணு. ஜட்ஜ் அவளை நேரிலே பார்க்கட்டும்” என்றான்.
“ஆனா இதெல்லாம் சாத்தியமாடா?” அசோக்குக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை.
“நீ கோர்ட் போயிட்டு எனக்கு போன் பண்ணு” என்றான் அழுத்தமாய்.
“ஏதோ நீ சொல்ற... நான் செய்யிறேன்” என்றவன் அத்தனை அடியாட்களையும் ஏற்றிக் கொண்டு கிளம்பி விட்டான்.
“இவனுங்களை என்ன செய்ய போற?”
“அதுக்கும் நீயே ஐடியா வச்சு இருப்பியே... நீயே சொல்லுடா” என்றான் அசோக்.
ஒரு முகவரியை சொல்லி “இந்த இடத்துல இந்த தடிமாடுங்களை போட்டுட்டு வந்திடு.. என்ன செய்யனுமோ அவங்க பார்த்துக்குவாங்க..” என்றான்.
“சரிடா அப்போ நான் கிளம்புறேன்” என்று கிளம்பி விட்டான். மெல்ல விடிய தொடங்கி இருந்தது. அந்த பதுங்கு குழிக்கு சென்றான்.
அங்கு இன்னும் நல்ல தூக்கத்தில் இருந்தாள் குழலி. அவளை எழுப்ப அவள் அசையவே இல்லை. ஆழ்ந்த தூக்கம்.
“ப்ச்... இவளை” என்று கடுப்படித்தவன் அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு வெளியே வந்தான். மேலே வந்த பிறகு அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் அருகில் இருந்த குளத்தில் போட,
அடித்து பிடித்துக் கொண்டு தண்ணீரில் தள்ளாடினாள். மூச்சடைத்துப் போனது அவளுக்கு.
“மனுசனா நீங்க?” என்று கத்தினாள்.
“ஏன்டி இங்க எவ்வளவு பெரிய விசயம் போயிட்டு இருக்கு... அதை பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாம நீ பாட்டுக்க தூங்குற? இந்த லட்ச்சனத்துல உன்னை நம்பி அத்தனை சொத்தையும் ஒப்படைக்க காத்திருக்கான் பாரு அசோக் அவனை சொல்லணும். கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா? உன்னை நம்பி ஆயிரம் குடும்பங்கள் இருக்கு.. அவங்களோட வாழ்வாதாரமே நீ தான்.. அந்த அறிவு இருக்கா இல்லையா? பொறுப்பை ஏத்துக்குறதுக்கு ஒரு பக்குவம் இருக்கு. ஆனா உனக்கு சுட்டு போட்டா கூட உனக்கு அந்த பொறுப்பு வராது...” எரிச்சலுடன் சொன்னான்.
“சின்னதா ஒரு தூக்கம் வந்தது... தூங்கிட்டேன் அது தப்பா... அதுக்கு போய் இவ்வளவு பேச்சா?” மனதுக்குள் முணகிக் கொண்டவள்... தண்ணீரில் இருந்து எழ பார்த்தாள். அதற்குள் அவளுக்கு நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தாள்.
அதை பார்த்தவனுக்கு இன்னும் இன்னும் கோவம் தான் வந்தது..
“சரியானா தத்தியாடி நீ.. உனக்கு ஒண்ணுமே தெரியாதா? இவ்வளவு நாள் என்னத்தை தான் புடுங்குன...?” கண் மண் தெரியாமல் அவ்வளவு கோவம் வந்தது ஏகனுக்கு.
பின்ன பெரிய ராஜ பரம்பரையில் இருந்து வந்தவன்னு சொன்னா மட்டும் ஆச்சா? அதற்குரிய தகுதி கொஞ்சம் கூட அவளிடம் இல்லை. அடிப்படையான தற்காப்பு கலைகள் ஒன்று கூட தெரியவில்லை. கூடவே ஒரு நீச்சல் கூட தெரியாமல் இருந்தால் அவனுக்கும் கோவம் வருமா வராதா? நீரிலே தத்தளிக்கட்டும் என்று கடுப்புடன் எண்ணி அசையாமல் கரையிலே நின்றான்.
“ப்ளீஸ்.. கா.. கா...ப்பாத்து....ங்க... சா...ர்” ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் அவள் தண்ணீரை குடித்துக் கொண்டு இருந்தாள்.
“ச்சீ ஒரு தத்தியே என் தலையில கட்டிட்டு போயிட்டான் அந்த அசோக்” என்று காலை தரையில் உதைத்து தன் கோவத்தை போக்கிக்கொண்டவன் தானும் அந்த குளத்தில் குதித்தான்.
மூழ்கும் தருவாயில் இருந்தவளை முடியை பிடித்து இழுத்து தூக்கி கரையில் போட்டவன், மயங்கி போய் கிடப்பதை பார்த்து இன்னமும் கோவம் வந்தது.. ஒரு சூழ்நிலையை கூட சமாளிக்க தெரியல.. இதெப்படி ஆயிரம் குடும்பத்தை பார்க்கும்... அவளை மனதுள் திட்டிக் கொண்டே அவளின் வயிற்றில் கையை வைத்து அழுத்தி அவள் குடித்து இருந்த நீரை எல்லாம் வெளியேற்றிவன் அவள் இன்னும் கண் விழிக்காமல் இருப்பதை பார்த்து அதிக எரிச்சல் கொண்டான்.
பேசாம இவளை இப்படியே விட்டுட்டு போயிடலாமா? எந்த தொல்லையும் இருக்காது... எண்ணியவன் அவளின் மூக்கருகில் வந்து அவளது மூச்சை சோதனை செய்தான். அது அடிச்சு போய் இருப்பதை பார்த்து அவளின் நெஞ்சில் கையை வைத்து அழுத்தினான்.
அப்பொழுதும் அவள் விழிக்காமல் போக, அவளின் வாயோடு வாய் வைத்து தன் மூச்சுக் காற்றை அவளுக்கு கொடுத்து அவளை எழுப்பினான்.
பெரிய மூச்சோடு கண்விழித்தாள் குழலி. எழுந்தவளை கடுப்புடன் பார்த்தவன், இன்னும் வண்ணம் வண்ணமாக திட்டினான்.
அவளுக்கு காதே கழண்டு கீழே விழுந்துவிடும் போல இருந்தது. ஆனாலும் அவனிடம் அதை காட்டிக் கொள்ளமால் உடல் நடுங்க அவனுக்கு முன்னாடி தலையை குனிந்துக் கொண்டு நின்றாள்.
அவளின் மீது கொஞ்சம் கூட இரக்கமே வரவில்லை அவனுக்கு. எரிச்சல் தான் வந்தது. எது கேட்டாலும் தெரியாது என்பவளின் மீது வேறு என்ன வரும்.
அவளிடம எரிந்து விழுந்தவன் அவளை வீட்டில் தள்ளி விட்டு தன் அறைக்கு போக, இவள் தவித்துப் போய் நின்றாள்.
இரண்டு படி ஏறியவான் அவள் அப்படியே நிற்காவும் “என்னடி?” என்று கேட்டான். அதை கேட்ட தோரணையில் அவ்வளவு எரிச்சல் மண்டி இருந்தது.
“இல்ல உங்க கைல காயம் பட்டு இருக்கு... மருத்துவமனைக்கு போகலாமா? இப்படியே இவ்வளவு பெரிய காயத்தோட எப்படி இருக்கிறது.. வாங்க போயிட்டு வரலாம்” என்று தயக்கத்துடன சொன்னவளை கூர்ந்து பார்த்தவன்,
“உங்க அக்கறை மூட்டையை ஓரமா கட்டி வச்சுட்டு நான் சொல்றதுல மட்டும் கவனத்தை வைங்க. இந்த தேவை இல்லாத வேலையில எல்லாம் மூக்கை நுழைக்காதீங்க. இல்லன்னா மொத்தமா வெட்டி விட்டுடுட்டு துரத்தி விட்டுடுடுவேன்” எச்சரித்தவன் தன் அறைக்கு போய் விட்டான்.
அவள் போட்டு இருந்த கட்டை விட்டு உதிரம் இன்னும் கசிந்துக் கொண்டு தான் இருந்தது. அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை போல... அடுத்து வந்த பொழுதுகள் எல்லாம் அவளிடம் எரிந்து விழுந்துக் கொண்டு தான் இருந்தான்.
குழலிக்கு பெரும் தலை இரக்கமாய் இருந்தது. ஆனால் அவனிடத்தில் ஒரு முறையாவது நல்ல பெயர் எடுத்து விட வேண்டும் என்று குறியாக முனைப்பாக இருந்தாள். அவன் சொல்வதை செய்யும் கிளிபிள்ளையாக இருந்தாள்.
அதற்கும் அவன் குற்றம் கண்டு பிடித்து அவளை ஏகத்துக்கும் வாட்டி வதைத்தான்... இப்படி இருக்கும் பொழுது தான் கேஸ் ஹியரிங் விசயமாக அசோக் அவனை அழைத்து இருந்தான்.
“மச்சான் கோர்ட்ல இருக்கேன்... ஜட்ஜ் கிட்ட பேசுறியா? அவரு நம்ப மாட்டேங்குறாருடா.. போனை கூட அக்சப்ட் பண்ணல” என்றான்.
“ஏகப்பன்னு சொல்லி போனை கொண்டு போய் குடு” என்றான்.
“ம்ம்” என்றவன் போனை கொண்டு போய் கொடுக்க, அதை முதலில் வாங்கவில்லை அவர்.
“ஏகப்பன் லைன்ல இருக்கார் சார்” என்று சொல்ல, ஜட்ஜ் விழிகளில் பெரிய ஆச்சரியம்.. கூடவே ஒரு பரபரப்பு...
வேகமாய் எடுத்து காதில் வைத்தார்... அவருக்கு கண்கள் எல்லாம் கலங்கி விடுமோ என்று இருந்தது.
அட ஜட்ஜ் லெவல்லா பெரிய ஆளா இருக்கான் பா....
அப்படி என்னவா இருந்து இருப்பான்.....நம்ம தொல்ஸ் போல போலீஸ்சா????
இல்ல, விக்ரம் போல strict ஆபீசரா இருந்தானா ????