மாமா” பெரும் அவ்ஸ்த்தையுடன் முனகியவளின் ஒரு தட்டு தட்டி வா என்பது போல சைகை செய்ய அவன் இருந்த இருப்பில் கண்டிப்பாக இது சிலம்ப போட்டி போல தெரியவில்லை அவளுக்கு.
வேறு வழியில்லை.. அவள் அவனுக்கு உடன் பட்டு தான் போகணும்.. இல்லை என்றால் கிணற்றையே மஞ்சம் ஆக்கி விட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பான்.. எண்ணியபடி அவனுடன் சண்டைக்கு சென்றாள். ஆனால் அங்கு நடந்தது என்னவோ களிஆட்டம் தான்.. ஓரளவு அவனுக்கு இசைந்தவள் நேரம் ஆவதை அவனுக்கு உணர்த்த அவன் அதை எல்லாம் காதிலே வாங்கி கொள்ளாமல் அவள் மேனி மீதே கண்ணாய் இருந்தான்..
ஒரு கட்டத்துக்கு மேல் அவன் சற்றே எல்லை மீற வேகமாய் அவனிடமிருந்து விலகி
“கொன்னுடுவேன் உங்களை.. இனி கல்யாணம் முடியற வரை கிட்டக்க வாங்க வச்சுக்குறேன்..” என்றவள் துவைத்து போட்ட இருவரது உடுப்புகளையும் எடுத்துக்கொண்டு மேலேற வேகமாய் அவளை பற்றி இழுத்தவன் மத்தியம் நான் கேட்டது இன்னும் மேடம் அப்ருவ் பண்ணவே இல்ல.. அதை பண்ணிட்டு போகலாம்..” என்றவன் அவளின் இதழ் நோக்கி குனிய
“அப்போ இவ்வளவு நேரம் என் வாயை புன்னாக்கியது எந்த கணக்கு மிஸ்டர்..” இடுப்பில் கைவைத்து அவனை முறைத்து பார்த்தாள்.
“ஹஹஹா அது பழமலை கணக்கு..”
“அப்போ இது..”
“இது என் கருவாச்சி கணக்கு..” என்றவன் இன்னும் சற்று முன்னேற
“யோவ் யாருயா கருவாச்சி.. நீ தான் கருவாயன்..” சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கு வந்தவளை கோழி அமுக்குவது போல தனக்குள் அமுக்கியவன் வாகாய் அவளின் மேனி மீது கவி படித்த படி அவளது இதழை தன்னுள் சுருட்டிக்கொண்டான்..
நேரம் சற்றே கடக்க வெற்று தோள்கள் ஈர காற்றை உணர மழை வருவது போல இருந்தது..
“மாமா மழை வரும் போல..”
“ஆமா” என்றவன் அவளை விடவே மனம் இல்லாதவன் போல தன்னுள் பிணைத்து வைத்து இருக்க
“வீட்டுக்கு போகலாம் மாமா.. தேடுவாங்க..”
“ம்ம் கொஞ்ச நேரம் டி..” என்றவன் அந்த ஏகாந்த பொழுதில் தண்ணிரில் தன் காதலியுடன் அப்படியே மிதந்துக்கொண்டு இருந்தான்.. எந்த தடைகளும் இன்றி..
மழையும் சற்று வலுத்து பேய குளிர் உடலை வாட்டியது..
“மாமா” சற்றே அழுத்தமாய் அவனை அழைக்க அவனோ ஏகாந்தத்தை கலைத்து தொந்தரவு பேசும் அவளது உதடுகளை சிறை செய்தான்..
“போச்சு முத்தி போச்சு போல..” எண்ணி அவனது விருப்பத்துக்கே விட்டுவிட்டாள்.
அவனுக்கு தானே தெரியும் ஒரு வருடம் முழுவதும் அவளை பிரிந்த வேதனை.. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை வதைத்துக்கொண்டு இருந்தான்.. அதில் அவளுக்குரிய தேடல் மட்டுமே இருந்தது.. அதை உன்ர்ந்துக்கொண்டவள் அவனை தன்னுள் முழுமையாக வாங்கிக்கொண்டாள்.
இப்போதும் அது போல தான்.. எவ்வளவு ஆர்பாட்டமாய் அவளை சீண்டினாலும் கடைசியாய் அவளது அணைப்பில் கட்டுண்டு எதுவும் செய்யாமல் அவளை மட்டுமே தன்னுள் நிறைத்துக்கொண்டு இருப்பான்.. அது தான் பழமலை..
ஆர்பாட்டம் எல்லாம் வெளிய தான்.. உள்ளுக்குள் முகிலின் அடங்கும் சிறுவன் அவன்..
அதன் பிறகு தன் தவத்திலிருந்து வெளிவந்து அவளை தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு கிணற்றில் இருந்து மேலேறி வண்டியில் அவளை அமரவைத்து வீட்டுக்கு அழைத்து வந்தான்..
அதன் பிறகு சில நாட்கள் கழிய பழமலைக்கு தான் கடுப்பாய் வந்தது.. யாரும் அவனது திருமணத்தை பற்றி பேசுவது போலவே தெரியவில்லை..
கிழவி கூட வாயை திறக்கவில்லை.. கடுப்பாகி அனைவரும் இருக்கும் சமயம்
“எப்போ தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறதா முடிவு பண்ணி இருக்கீங்க..” சத்தமாய் கேட்டான்.. பருவதம் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் திருகையில் உளுந்து உடைத்துக்கொண்டு இருக்க கிழவி அதை புடைத்து பருப்பு தனியாக போட்டு தனியாக எடுத்துக்கொண்டு இருந்தார்.
நாதன் தன் கணினியில் பிசியாக இருக்க முகிலும் சாந்தியும் கூடத்தில் அமர்ந்து முறுக்கு சுட்டுக்கொண்டு இருக்க கொழுந்து இருவருக்கும் சின்ன சின்ன உதவி செய்துக்கொண்டு இருந்தார். கூடவே முறுக்கையும் ஒரு கை பார்த்துக்கொண்டு இருந்தார்..
அத்தனை பேர் இருந்தாலும் பழமலைக்கு யாரும் பதில் அளிக்கவில்லை.. அவரவர் அவர்களது வேலையை பார்த்துக்கொண்டு இருக்க இன்னும் காண்டாகி போனது அவனுக்கு..
கொழுந்து கிழவி இவங்க ரெண்டு பேருக்கிட்ட பேசுறதும் வேஸ்ட்.. இவங்க எல்லாம் கை பாவை.. ஆட்டு விக்கிறது பருவதம் என்று நேரே அவரிடம் சென்றான்.
“ஆத்தா எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைப்ப” கடுப்புடனே கேட்டான்.
“ராசா உனக்கு இன்னும் நான் பொண்ணே பாக்கலையே டா பொறவு கல்யாணம் எப்படி..” அவர் திருகையை சுத்திக்கொண்டே கேக்க அவனை தவிர அனைவரும் இதழ்களுக்குள் சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.. அதை பாத்து அவனுக்கு இன்னும் காந்தியது..
சாந்தி நிமிர்ந்து முகிலை பாத்து கேலியாக சிரிக்க “ச்ச்சு சும்மா இரு சாந்தி பொறவு அவரை கிண்டல் பண்றோம்னு உன் மாமன் நம்மளை வச்சு செஞ்சுடுவாறு” தலையை குனிந்தே பதில் அளித்தவளின் நேசத்தை கண்டு வியந்து தான் போனாள்.
ரொம்பவும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் இது போல ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வரும் போது இருவரும் கேலி கிண்டல் பண்ணி பார்ஹ்த்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள். அதிலே முகிலின் வெள்ளை மனது புரிய சகதோரியாகவே மாற்றிக்கொண்டாள் சாந்தி..
“வேணாம் பருவதம் நீ என்னை ரொம்ப சீண்டுற, பொறவு நீ வேற ஒரு பழமலையை பார்க்க வேண்டியது வரும்..”
“அடேய் என்ன என் மருமவ பெற சொல்லி கூப்பிடுறவன்.. ஒழுங்கா மரியாதையா அழைக்க தெரியாதா..” கிழவி சத்தம் போட
“கிழவி இப்போ அதுவா பிரச்சனை..”
“எனக்கு அதுவும் தான் பிரச்சனை..” என்றவர் “நீ தான் பருவதத்துக்கிட்ட ரொம்ப பேசுனியாம்.. அதான் அவ மருமவளை உனக்கு கட்டி குடுக்க யோசிக்கிறா..”
“கிழவி அது அப்போ..”
“எப்பவா இருந்தா என்ன அத்தை.. என் மருமவள இவன் தான் வேணாம்னு சொன்னா.. இப்போ வந்து கட்டி குடுன்னா நான் எப்படி கட்டி குடுப்பேன்.. என் மருமவளுக்கு நான் பட்டணத்துல பைய்யன் பாத்து இருக்கேன்.. டேய் நாதா அந்த போட்டோவை காட்டு இவன் கிட்ட” என்று பெரியவனிடம் சொல்ல
“நீயும் இதுல கூட்டாடா..” கடுப்புடன் நாதனை வஞ்சினான்..
“அடேய் எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... எல்லாம் உன் ஆளாள தான்..” என்றான் வேகமாய்.. சட்டடென்று திரும்பி முகிலை பார்த்தான். அவள் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை..
“ஏய் என்னடி பண்ணி வச்சு இருக்க..”
“ஐயோ எனக்கு எதுவும் தெரியாதுங்க..” என்ற போதே விவேக் உள்ளே நுழைந்தான்..
“ஹாய் மச்சி எப்படி இருக்குற..” என்று பழமலையை நலம் விசாரிக்க இவனுக்கு பத்திக்கொண்டு வந்தது.
“அடேய் நீ தானா இந்த எட்டப்பன் வேலை செய்தது..”
“கூல் மச்சி... என் பேரன்ட்ஸ் வராங்க.. சம்மதம் பேச..” என்றவனை கொலை வெறியுடன் நோக்கியவன் கொஞ்சமும் யோசிக்காமல் அருகில் இருந்த அருவாளை எடுத்து அவனது கழுத்தில் வைக்க
“அட பாவி எடுடா அருவாள..” பதறிக்கொண்டு பருவதம் வர
“அப்போ உண்மைய சொல்லு.. என்ன பண்ணி வச்சு இருக்க” தன் தாயிடம் கேட்டான்.
“நீ ரொம்ப ஒழுங்கா.. என் மருமவள கட்டிக்க சொன்னா நீ ரொம்ப ஓவரா பேசுன இல்லையா அதான்” என்று முடிக்கும் முன்பே பட்டென்று அவரது காலில் விழுந்து
“உன் மருமவள கட்டிக்க மாட்டேன்னு சொன்னது ரொம்ப பெரிய தப்பு தான்.. அதுக்காக என் வாழ்க்கையில கும்மி அடுச்சுடாத தாயே.. எனக்கு உன் மருமவ தான் வேணும்.. அதுக்கு நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்குறேன்.. அதுக்காக நீ இந்த பரதேசிய எல்லாம் உள்ள நுழைக்காத..” என்றவன் தலையை மட்டும் நிமிர்த்தி அவரை வணங்க பார்த்துக்கொண்டு இருந்த அத்தனை பேருக்கும் சிரிப்பு வந்தது.
“அடேய் உன் வீரம் இவ்வளவு தானாடா..” கிழவி கேட்க
“கிழவி வேணாம் இவ்வளவு நாள் நீ உசுப்பேத்தி விட்டதுக்கு தான் இப்போ நான் அனுபவிக்கிறேன்.. என்னையும் உசுப்பேத்தி விட்டுட்டு நீ ஜோரா உன் மருமவ கூட சேந்துக்குவ.. பொறவு நான் மட்டும் தனியா போராடனும்.. அந்த அளவுக்கு என் உடம்புல தெம்பு இல்ல.. அதனால என் கல்யாணம் முடியிற வரை நீ மவுன விரதம் இருக்கணும். அதுக்கு பொறவு நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்..” என்று அவரிடம் டீல் பேசியவனை கண்டு
“சரி தான் போடா.. ரொம்ப தான் பண்ற.. நீ இல்லன்னா என்ன எனக்கு முகிலு இருக்குறா... ஆத்தா முகிலு...” என்று அவளை அழைக்க
“தயவு செஞ்சு அவளுக்கு எதாவது சொல்லிக்குடுத்த கிழவின்னு கூட பாக்க மாட்டேன்.. செவலை கிட்ட சொல்லி குடுத்துடுவேன் பாத்துக்க..”
“ஹ அந்த சின்ன மாடு என்னை என்னடா பண்ணும்..” என்றபோதே செவலையின் உறுமல் சத்தம் கேக்க அவருக்கு உடம்பு தூக்கி வாரி போட்டது..
அதில் நக்கலாய் அவரை ஒரு பார்வை பார்த்தான் பழமலை.
“ப்ச் இதென்னங்க சின்ன பிள்ளைய மிரட்டுற மாதிரி பாட்டியை மிரட்டிக்கிட்டு போங்க அந்த பக்கம்..” என்று முகில் அவனை அங்கிருந்து விரட்ட அவளையும் கையேடு பற்றிக்கொண்டு வெளியே வந்தான்.
“என்னங்க..”
“இல்லடி ஆத்தா கிட்ட இதுக்கு முன்னாடி உன்னை கட்டிக்க...” அவனது வாயை பொத்தியவள்
“எனக்கு உங்களை பத்தி நல்லாவே தெரியும் மாமா. அதனால எனக்கு எந்த விளக்கமும் தேவை இல்லை..” என்றவள் அன்று மூவரும் ஒன்றாய் செத்து போகலாம்னு சொன்ன போதே உங்க அன்ப நான் புருஞ்சுக்கிட்டேன்... அதை விட எனக்கு வேற என வேணும் சொல்லுங்க. காலம் பூரா உங்க அன்புலயே நான் இருக்கணும் அது ஒன்னு தான் ஆசை..” என்றவள் அவனை தான் அருகில் இழுத்து அவனை கட்டிக்கொள்ள அவளது அணைப்பில் அவனும் மனபூர்வமான காதலுடன் அடங்கினான்..
அடுத்து வந்த மாதத்தில் முகுர்த்த நாள் குறிக்க பட்டு இருவருக்கும் விமரிசையாக கல்யாணம் செய்து வைத்தார்கள் சிவகொழுந்தும் நாதனும்..
சாந்தியும் கருவுற்று இருக்க அங்கே இன்னும் மகிழ்வு அதிகமானது... திருமணம் முடிந்த அடுத்த நாளே பழமலை பாக்கிய ராஜ் படத்துக்கு கூட்டி செல்ல கிழவி தலயிலே அடித்துக்கொண்டார்.
“அடேய் ஏண்டா உன் ரசனை இப்படி இருக்கு.. நிஜமா நீ பெரிய படிப்பு படிச்சு இருக்கியா.. இல்ல உன் அப்பன் ஆத்தாவை ஏமாத்துற மாதிரி என்னையும் ஏமாத்துறியா” கேட்க முகில் கிலுக்கென்று சிரித்து விட்டாள்.
“கிழவி நீ என்னை ரொம்ப பங்கம் பண்ற..”
“பின்ன என்னடா இப்ப எவ்வளவோ லேட்டஸ்டான படமெல்லாம் வந்து இருக்கு.. இப்போ கூட பாக்கிய ராஜ் படத்துக்கு கூட்டிட்டு போற..”
“கிழவி அதுல சில சமாச்சாரமெல்லாம் இருக்கு.. அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது.. நீ வாடி நாமா போலாம்..” என்று தனது வண்டியில் அவளை அமர்த்தி கூட்டி செல்ல
“இன்னும் கிட்டக்க வாடி..” என்று சொல்லி அவளை கட்டி பிடிக்க வைக்காத குறையாய் அவளை படுத்தி எடுத்துக்கொண்டே வந்தான்..
படம் பார்க்கும் முன்னவே இப்படின்னா படம் பாத்துட்டு வந்து சொல்லவா வேணும்..
படம் பாத்துட்டு திரும்பி வரும் போது எல்லாருக்கும் இனிப்பு பழம் வாங்கிட்டு வந்து குடுத்துட்டு பல சரங்கள் மல்லி பூவோடு முகிலை தூக்கிக்கொண்டு வயகாட்டு பக்கம் சென்றான்..
அன்றிரவு இருவருக்கும் விடியாத முடியாத கூடல் பொழுதாய் அமைந்தது..
அன்று நகை கடையில் அவளுக்கு என்று வாங்கி இருந்த மெட்டியோடு கொலுசும் இணைந்து போல இருக்கும் நகையை அவளது காலில் போட்டுவிட்டு தன் மோகத்தை அதிலிருந்து ஆரம்பித்து அவளின் நெற்றியில் முத்தமிட்டு முடித்து வைத்தான் தன் முதல் கூடலை. அதன் பிறகு அவ்விரவு வேளையில் கிணற்றில் அவளை தூக்கி போட்டு தானும் மேலிருந்து குதித்து அவளை தன்னருகே இழுத்து ஜலகிரீடையை செய்ய ஆரம்பிக்க அவனது தேவையின் நீளம் கண்டு அவள் தான் மயங்கி கிறங்கி சோர்ந்து களிப்படைந்து வெட்கம் கொண்டு என்று எல்லாவுமாய் மாறி போனாள்...
இவன் வெக்க பட வைக்காம விட மாட்டான் போலவே🙈🙈🙈🙈🥰