அத்தியாயம் 30

 
Admin
(@ramya-devi)
Member Admin

நாதன் அலுவலகத்தில் இருந்த படியே அவனது இருப்பிடத்துக்கு செல்ல வீட்டுக்கு வந்த முகிலுக்கு பயங்கரமாய் கோவம் வந்தது.. சரியாய் இவள் வெளியே கிளம்பி வர பழமலை பெண்களுடன் கும்பலாய் நின்று பேசிக்கொண்டு இருக்க பத்திக்கொண்டு வந்தது..

அதும் இவளை பார்த்த உடன் இன்னும் மும்மராமாய் பேசுவது போல செய்தவனை கண்டு காண்டானது..

பல்லக்கடித்துக்கொண்டே அவனை தாண்டி போய் கேட்டில் நிற்க அப்போதும் அவளுடன் வரமால் இவளின் பக்கம் பார்வையை கூட திருப்பாமல் பேசிக்கொண்டு இருந்தவனை கண்டு ஆத்திரம் இன்னும் அதிகமாகியது..

பேருந்து நிறுத்தத்திற்க்கு கூட வரவில்லை.. தனியே இவள் மட்டும் வீடு வந்து சேர்ந்தாள்.

“ச்ச இவனுக்காக போய் நானு புடவை வேற கட்டிக்கிட்டு போனேன்.. இவன் சொன்னதை எல்லாம் நாம் செய்யணும்.. ஆனா நாம சொல்றதையோ நமக்காகவோ இவுக எதுவும் செய்ய மாட்டாக.. அவ்வளவு பெரிய அப்பா டக்கரு.. எனக்குன்னு வந்து வச்சு இருக்கே.. ச்ச.. அததுங்க காதல் பண்ணி லைப்ப ஜாலியா என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்குங்க.. ஆனா இங்க எதுவும் கிடையாது..

எப்படா அவள வம்பிளுக்கலாம்னு சந்தர்ப்பத்தை எதிர் பாத்து காத்துக்கிட்டு இருக்குறதே வேலையா போச்சு... இனி புடவை கட்டு பூ வையி அப்படி இப்படி ஏதாவது சொல்லட்டும்.. இதெல்லாம் நீயே பண்ணிக்கோடான்னு அவன் தலையிலேயே கட்டனும்..” முனுமுனுத்தவளை பின்னிருந்து இருக்க அணைத்தான் பழமலை.

“என்ன அய்யாக்கு அதுக்குள்ள ஆவலகம் விட்டுடுச்சு.. இன்னும் நீங்க அந்த ஸ்லீப்பர் கேர்ளையும் வழி அனுப்பி வச்சுட்டு வர வேண்டியது தானே.. அதுக்குள்ள என் வந்தீங்க.. இன்னைக்குன்னு பாத்து என் பிரான்ட் ஒருத்தி நைட் டூட்டி பாத்துக்கிட்டு இருக்கா... அவளுக்கு நீங்க கம்பெனி குடுத்து இருக்கலாமே..” என்று மேற்கொண்டு பேசிக்கொண்டே போனவளை இழுத்து அனைத்து அவளது இதழ்களை பேசவிடாமல் செய்தான்.

“ஹப்பா என்ன வாயி..” என்று அலுத்தவன்

“ப்ச் இதெல்லாம் சும்மா டி மாமன் உன்னை சீண்டி விட்டேன்.. நீ வந்த பேருந்துல தான் நானும் வந்தேன் நீ தான் என்னை திரும்பி கூட பாக்கல..”

“நிஜமா..”

“சத்தியமா.. பின்பக்கமா ஏறுநேண்டி” என்றவன் அவளது கழுத்தில் முகம் புதைத்துக்கொள்ள

வேகமாய் தன்னிடமிர்ந்து அவனை பிரித்து தள்ளி விட்டாள்.

“ப்ச் என்னடி..”

“எதுக்கு என் கிட்ட இருந்து மறைச்சிங்க.. அதோட இல்லாம எதுக்கு போனை ஆப் பண்ணி வச்சீங்க.. எத்தனை முறை பண்ணுனேன் தெரியுமா..”

“சும்மாடி உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரலாம்னு தான்..” என்றவன் மறுபடியும் அவளை அவன் கை வளைவுக்குள் கொண்டு வந்தான்..

“அதோட மட்டும் இல்லாம எனக்கு உன் அலுவலகத்துலையே ஒரு வாரம் வேலை இருக்கு.. அதான் உன் வேலையையும் ஒரு வாரம் எச்டேன் பண்ணிட்டேன்..”

“பொருக்கி பிராடு.. பொறவெதுக்கு இன்னிக்கே ஊருக்கு போகணும்.. இப்பவே கிளம்பி வான்னு என்னை டார்ச்சர் பண்ணீங்க” அவனை மொத்த

“ஹஹஹா ஹஹா இதெல்லாம் காதல் விளையாட்டு டி..” என்றவன் மேலும் அவளை நொறுக்க

“அதெல்லாத்தையும் கூட மன்னிச்சுடுவேன்.. ஆனா நீங்க என்னை பாத்து கத்துக்குட்டின்னு சொன்னதை தான் என்னால தாங்க முடியல.. எப்படி அப்படி என்னை பாத்து சொல்லலாம்..” அவனிடம் மல்லுக்கு நின்றாள்.

“ஹேய் வாயாடி.. உன்னை சீண்டி சிவக்க வைக்கிற சுகத்துக்கு விலையே கிடையாதுடி.. அப்போ உன் முகத்தை பார்க்கணுமே.. ப்பா செம்ம பீல் டி.. கடிக்கவும் முடியாம மெல்லவும் முடியாம... ப்ச் அதை வார்த்தையால எல்லாம் விளக்க முடியாது.. அந்த நோடி அனுபவிச்சு பாக்கணும்..” என்றவன் அவளின் முகத்தை நெருங்கி அவளின் முகம் காட்டும் பாவனைய படித்தவன்

“ம்ம் இதோ இப்படி நான் நெருங்கி வரும்போது நீ படபடக்குறீயே இந்த படபடப்பு எனக்கு ரொம்ப பிடுச்சி இருக்கு.. அதோட அடுத்தது இவன் என்ன செய்ய போறானோன்னு ஒரு வித மயக்கத்தோடும் பயத்தோடும் பார்ப்பியே அந்த பார்வை எனக்கு ரொம்ப பிடுச்சி இருக்கு..” என்று அவளை சிவக்க வைத்தவன்

“உனக்கு இன்னொரு கைண்ட் இன்பார்மேசன்... நீ சொன்னியே உன் காதலன்னு அவன் என்னோட உயிர் தோழன் விவேகானந்தன்..” என்று சொல்ல

“ப்ச் அது எனக்கு எப்பவோ தெரியும்” என்று அவன் ஒரு குண்டை தூக்கி போட, அவளோ அதை வாங்கி சிக்சர் போட்டாள்.

“எப்படி டி தெரியும்..”

“ம்ம் அவன் சிஸ்டத்தை ஒரு நாள் அக்டிவேட் பண்ண வேண்டிய சூழல்.. சோ ஓபென் பண்ணேன்.. அதுல கேலரின்னு ஒன்னு இருக்க சும்மா ஆர்வத்துல உள்ள புகுந்து பார்த்தேன்.

“நீங்க ரெண்டு பெரும் கட்டி புடுச்சுக்கிட்டு இருக்குற பல படம் அங்கே இருந்தது.. அப்போது இருந்து விவேக்கை நோட்டம் விட்டேன்.. அதோட சரியா நான் மத்தியம் சாப்பிட்டு விட்டு கை கழுவும் போது அவனுக்கு பொன் வரும்.. அதுல என்னை பத்தி தான் அவன் ஜாடை மாடையா சொல்லுவான். அதோட நான் பேசிக்கிட்டு இருக்கும் போது எனக்கே தெரியாம என் குரலை நீங்க கேக்கனும்னு போன் பண்ணி ஸ்பீக்கர்ல போட்டுட்டு அவன் பாட்டுக்கு சட்டை பையில போட்டுக்குவான்.. அதுலயே நீங்க ரெண்டு பெரும் செம்ம பிராடுன்னு புருஞ்சுக்கிட்டேன்..” என்று சொல்லி அவனுக்கு பெரிய பல்ப்பை கொடுத்தாள்..

“ம்ம் நீயும் கொஞ்சம் ஸ்மார்ட் தான்..” பாராட்ட

“தோடா உங்க பாராட்டு ஒன்னும் எனக்கு வேணாம்.. போய் முதல்ல குளிச்சுட்டு வாங்க... பொறவு நானா போறேன்..”

“எதுக்கு நேரத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு ரெண்டு பேருமே..”

“ஆமா இது கூட நல்ல யோசனை தான்.. ஆனா நீங்க இருக்குற வேகத்துக்கு கண்டிப்பா உங்க அண்ணன் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு வளைகாப்பு பங்சன் நடந்துடும்..” நொடித்தவள் அவனை குளியல் அறையில் விட்டுட்டு இரவு உணவு தயார் செய்ய ஆரம்பித்தாள்.

இப்படியே ஒரு வாரம் மகிழ்வுடனும் செல்ல சீண்டல்களுடனும் நகர்ந்து சென்றது.. ஒரு வாரம் முடிந்த உடன் முகிலை கூட்டிக்கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தான்.. நாதனுக்கு இன்னும் வேலை இருக்க அவன் திருமணம் நடக்க ஐந்து நாளுக்கு முன் வருவதாக ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. ஊருக்கு வந்த பழமலைக்கு கல்யாண வேலை இருக்க எல்லா வேலையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்தான்.. கூடவே அவனது கல்லூரி பணியும் விவசாய பணியும் இந்த வேலையும் முகிலை வம்பிழுக்கும் வேலையும் இருக்க எல்லாவற்றையும் சிறப்புடன் பார்த்துக்கொண்டான்.

முகிலுக்கு தனியாக நகைகள் வாங்கி கொடுக்க

“எதுக்கு மாமா இதெல்லாம்..”

“என் பொண்டாட்டி டி நீ.. உனக்காக நான் இதெல்லாம் செய்யனும் அதுல தான் எனக்கு சந்தோசமே..” என்றவன் அவளுக்கு அவன் எடுத்த பட்டு புடவையை காட்டி அதுக்கு ப்ளவுசும் தைத்து வைத்து இருக்க அவனது அன்பில் அவள் நெக்குருகி நின்றாள்.

முன்பை விட அதிக தீவிரமாக அவனை காதலிக்க ஆரம்பித்து இருந்தாள். அவனோ அவளை அனு அளவும் பிரியாமல் தன் மூச்சு காற்றிலே பதுக்கி வைத்து இருந்தான்..

ஒவ்வொரு நாளும் இனிமையாக கழிய அடுத்த நாதனுடைய கல்யாணம் சிறப்பாக நடந்து முடிந்தது...

அன்னமும் அவர்களை ஓரளவு புரிந்துக்கொள்ள எந்த ராசாபாசமும் இன்றி அமைதியாகவே காதல் கலாட்டாக்களுடன் நடந்து முடிந்தது..

நாதன் சாந்தியோடு பட்டணம் போக, எப்பவும் போல கிராமத்தில் பாட்டியும் பேரனும் முகிலை வம்பிழுத்துக்கொண்டு அவளை சீண்டிய படியே இருந்தார்கள்.

ஒரு நாள் அனைவரும் வயலில் வேலை செய்துக்கொண்டு இருக்க பழமலை கல்லூரி நேரம் முடிய நேராக வயலுக்கு வந்து சேர்ந்தான்..

அவன் வரவும் அவனுக்கு சாதம் போட்டு குடுக்க சொல்லி பருவதம் சொல்ல, முகிலும் கைகளை கழுவிக்கொண்டு அவனுக்கு அருகில் அமர்ந்து புளித்த தயிரில் கம்மஞ்சோற்றை கரைத்து சிறு வெங்காயத்தை பச்சையாக வயலில் இருந்து பிடுங்கி தோள் உரித்து வைத்து இருந்தாள் பாத்தாதற்கு சிறிய வகை பச்சை மிளகாயையும் கூடவே கடலைபருப்பையும் உரித்து வைத்து இருந்தாள்.

கம்மஞ்சோறும் அதற்கு கூடவே இருந்த தொட்டு காயையும் பார்த்து தடுக்கி விழுந்தவன் அவளது கை ருசியில் மயங்கி சொட்டு மிச்சம் வைக்காமல் அனைத்தையும் குடித்து முடித்தான்.. கூடவே அவன் சாப்பிட்ட பச்சை மிளகாய் சற்றே உரைக்க சுற்றிலும் ஒரு பார்வையை செலுத்தி நோட்டம் விட அவன் எதற்கு நோட்டம் விடுகிறான் புரிந்துக்கொண்ட முகில் வேகமாய் அவ்விடம் விட்டு விலகி பருவதத்தோடு நின்ருக்கொள்ள ஏமாற்றமாய் அவளை பார்த்தான்.

“ப்ளீஸ் வாடி.. ஒன்னே ஒன்னு தான்..”

“ம்ஹும்” என்று தலை அசைத்து அவன் புறம் திரும்பாமல் வேலையை பார்க்க அவளது மறுப்பில் கோவம் வந்தது அவனுக்கு..

“இன்னைக்கு இருக்கு வா..” என்று கருவியபடி அவனும் வயலில் இருங்கி வேலை பார்க்க ஆரம்பித்தான்..

“என்னடா பேராண்டி முகம் எல்லாம் சோர்ந்து போய் கிடக்கு.. அந்த கருவாச்சி உன்னை சரியா கவனிக்கலையாக்கும்..”

“ப்ச் போ கிழவி நீ வேற கருவாச்சின்னு இன்னும் உசுப்பேத்திக்கிட்டு..” ஜொல்லியவன் அவளை ரசனையுடன் பார்வை இட்டான். அவனது பார்வையில் அவளால் குனிந்து வேலை செய்ய முடியாமல் தடுமாற அவனை முறைத்து பார்த்தாள்..

அவனோ அவளது முறைப்பை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அவளையே பார்க்க அவனது பார்வையில் அவள் தான் தலை குனிய வேண்டி வந்தது..

அன்று மாலை யார் கண்ணும் உருத்தாமல் அவளை கிணற்றிலே பிடித்து வைக்க அவளுக்கு மூச்சு முட்டி போனது..

“நான் அன்னைக்கு கேட்ட கோரிக்கை..” என்று மீசை முடி உரச அவளின் காதோரம் முணக, வெறும் பாவாடையோடு குளித்துக்கொண்டு இருந்தவளுக்கு நடுக்கம் வெளிப்படையாகவே பிறக்க அவனை சற்றே பயத்துடன் பார்த்தாள்.

“ப்ச் அந்த அளவுக்கெல்லாம் போக மாட்டேண்டி..” என்றவன் அவனுக்கு என்ன வேணுமோ அதை மட்டும் கோடு தாண்டாமல் வாங்கி கொள்ள அவளின் முகம் அந்தி வானமாய் சிவந்து போனது..

“ஒத்த துணி உடுத்தி குளிப்போமா.. வெக்கம் தள்ளி வை வை..” அவன் பாட அந்த பாட்டின் அர்த்தம் புரிந்தவள் அவனை தண்ணீரிலே தள்ளி விட்டாள்..

“வரவர ரொம்ப மோசமா நடந்துக்குறீங்க மாமா..”

“ம்ஹும்.. அப்போ எப்போ என்னோட சிலம்பம் ஆட வருவ.. அதும் எனக்கு இந்த கிணத்து தண்ணில இப்படி ஒரு உடுப்போட” என்று அவள் கட்டி இருந்த பாவடையை சுட்டி காண்பிக்க அவளுக்கு பெரும் அவஸ்த்தையாய் போனது..

“ப்ச் போங்க மாமா..”

“போங்கன்னு சொல்ல கூடாது பேபி.. வாங்கன்னு தான் சொல்லணும்.. சொல்லு” என்றவன் மோட்டார் பம்பின் பின் கயிற்றில் கட்டி வைத்திருந்த சிலம்பை எடுத்து அவள் மீது ஒன்றை எறிந்துவிட்டு தானும் ஒன்றை எடுத்து முதல் தாக்குதலை அவன் ஆரம்பிக்க முகிலுக்கு ஜன்னி வந்தது போல உடலெல்லாம் சட்டென்று குளிர்ந்து போனது...

 

Loading spinner
Quote
Topic starter Posted : April 24, 2025 9:20 pm
(@gowri)
Estimable Member

அச்சோ அச்சோ🙈🙈🙈🙈🙈

Loading spinner
ReplyQuote
Posted : April 27, 2025 9:15 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top