அத்தியாயம் 29

 
Admin
(@ramya-devi)
Member Admin

மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை செய்துவிட்டு முகிலை ஊருக்கு அழைக்க

“இன்னும் நான் ரிலிவிங் லெட்டர் குடுக்கல அத்த..” என்றவளை முறைத்து பார்த்தான் பழமலை.

அவனது பார்வையில் பயந்தவள் “நான் வேணா ஒரு வாரம் லீவ் போட்டுட்டு ஊருக்கு வரேன்.. எப்படியும் கல்யாணத்திக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கு தானே.. அதுக்குள்ள முறையா ரிலிவிங் பண்ணிட்டு வரேன் மாமா.. ப்ளீஸ் உங்க பைய்யன் கிட்ட கொஞ்சம் சொல்லுங்க அத்தை முறைக்கிறாரு...” என்றவளை

“என்னடி ரெக்கமண்டேசனுக்கு ஆள புடிக்கிறியா.. நீ ஒரு ஆணியும் கலட்ட வேணாம்.. மரியாதையா ஊரு வந்து சேறு சொல்லிட்டேன்..”

“பாருங்க மாமா எப்படி மிரடுராருன்னு..”

“அடேய் நானுமே நிச்சயம் முடிஞ்சி வேலைக்கு போக போறேன்.. அப்படி இருக்கும் போது எதுக்குடா முகிலை மிரட்டுற.. கொஞ்ச நாள் வேளைக்கு போகட்டும் டா.. இவ்வளவு நாள் தான் வேளைக்கு போகாம வீட்டுலையே வச்சு இருந்த.. ஒரு ரெண்டு மாசம் பொறுத்துக்க மாட்டியா..” என்று நாதனும் முகிலுக்கு பரிந்து பேச அவனை முறைத்த படி

“அங்க என்ன சிணுங்கள்.. ஒழுங்கா பெட்டிய கட்டுடி..” என்றான் அதட்டலாய்..

“அடேய் அதான் புள்ள இவ்வளவு தூரம் சொல்லுதுள்ள பொறவு நீயும் வேணா அவளோட துணைக்கு வந்துட்டு போ..” கிழவி சந்தில் சிந்து பாட, தன் மாமியாரை முறைத்து பார்த்தார் பருவதம்..

நாதனுக்கு அவன் முகில் மேல் வைத்திருந்த அன்பை கண்டு சந்தோசமாய் இருந்தது.. முன்பு சலன பட்ட மனம் இன்று அமைதியில் மிதந்தது.. அவளை தன் மகளை போல பார்க்க ஆரம்பித்தான்.. அதானல் அவனால் பழமலையின் சேட்டையை ரசிக்க முடிந்தது..

அவரது யோசனையில் கண்கள் மின்ன “அப்போ நோ ப்ராப்ளம்..” ரொம்ப பெரிய மனதுடன் சொன்னவனை எல்லாரும் முறைத்து பார்த்தார்கள்.

நாதனும் சாந்தியும் இதழ் பிரிக்காமல் சிரிக்க கொழுந்துக்கு அவனின் ஆர்வம் கண்டு சிரிப்பு வந்துவிட முகத்தை வேறெங்கோ திருப்பிக்கொண்டு கமுக்கமாய் சிரித்தார்.

முகில் கிழவியை முறைத்து பார்த்தாள். “அதானே நீ எப்பவும் உன் பேரனுக்கு தோதாதானே செயல் படுவ” முனகியவள் தன் மேலாளருக்கு அழைத்து விஷயத்தை சொல்லி விடுப்பு வாங்கிக்கொண்டு விவேக்கிடமும் சொல்லிவிட்டு அன்றே அவர்களோடு ஊருக்கு சென்றுவிட்டாள்.

ஊருக்கு சென்று நிச்சயத்தை முடித்துக்கொண்டு பழமலையோடு மீண்டும் மதராஸ் வந்தாள். அலுவலகம் சென்று ரிலிவிங் லெட்டர் எழுதி கொடுக்க அதை வாங்கியவர்கள் இன்னும் ஒரு வாரம் மட்டும் வேலைக்கு வருமாறு கேட்டுக்குக்கொள்ள வேறு வழியில்லாமல் அதை பழமலையிடம் சொல்ல அவன் நெற்றிக்கண்ணை திறந்தான்..

“என்னடி நினைச்சுக்கிட்டு இருக்குற.. இங்க உன்னோட ஒரு வாரம் இருந்தா அங்கன யாரு கல்யாண வேலையை பாக்குறது.. நாதனும் வேலைக்கு போய்ட்டான்.. ஐயாறு மட்டும் இழுத்து போட்டுக்கிட்டு செய்வாகா.. வேலையும் வேணாம் ஒன்னும் வேணாம்.. நீ முதல்ல ஊருக்கு கிளம்பு..” என்று சொன்னவனை பரிதாபமாக பார்த்தாள்.

“இல்லங்க செஞ்சுகிட்டு இருக்குற வேலை அப்படியே பாதியில நிக்குது.. அதை ரன் பண்ணி குடுத்தா தான் அந்த ப்ராஜெக்ட் அடுத்த கட்டத்துக்கு போகும்.. ப்ளீஸ்...”

“ஏன் அதை வேற யாரும் செய்ய மாட்டாங்களா.. நீங்க தான் செய்யனுமா” நக்கல் பண்ண

“இல்ல மாமா எல்லாரும் இப்போ புது ப்ராஜெக்ட்ல பிசியா இருக்காங்க.. அப்படி இருக்கும் போது இதை எப்படி நா செய்ய முடியாதுன்னு சொல்றது.. அதோட இல்லாம இது ரொம்ப முக்கியமான செக்சன்.. இதுல இருந்து தான் அடுத்த ஸ்டெப்பை டெவலப் பண்ண முடியும்..”

“எந்த ஈர வெங்காயமும் எனக்கு தெரியாது.. இன்னைக்கு நாம கிளம்பனும்.. மரியாதையா வீட்டுக்கு வந்து சேரு..” என்றவன் போனை வைத்து விட நொந்து போனாள்.

அதற்கு மேல் போட்டுக்கொண்டு இருந்த ப்ரோக்ராம் ரன் ஆகாமல் சதி செய்ய, “கொடுமைடா சாமி.. எல்லாம் ஒண்ணா வந்து உயிரை வாங்குது..” முனகியபடி எப்படி செய்வது என்று கணினியை போட்டு தட்டிக்கொண்டு இருந்தாள்.

அவளது மேலாளர் அழைக்க என்ன என்று கேட்க சென்றாள் அங்கே நாதன் அமர்ந்து இருக்க யோசனையுடன் அவனை பார்த்தாள்.

அதற்குள் மேலாளர் “இவங்க மிஸ்டர் நாதன்.. நம்ம வொர்க்குக்கு ஹெல்ப் பண்ண வந்து இருக்காங்க..” என்று அறிமுகம் செய்து வைத்தார்.

“ஹலோ..” என்று அவனுக்கு கைகொடுத்தாள்.

அவனும். “ஹலோ..” என்று வேலை எந்த அளவுல இருக்கு என்று வேலை பத்திய பேச்சை எடுக்க அவளும் சற்று சுதாரித்து தன்னுடைய வேலையை அவனுக்கு விளக்கம் வைக்க “ம்ம் நோ ப்ராப்ளம்.. வாங்க நாம செக் பண்ணிட்டு மேற்கொண்டு எப்படி ரன் பண்றதுன்னு பாக்கலாம்..” என்று அவளது கேபினுக்கு வந்து அவள் செய்துவைத்தவைகளை ஒரு பார்வை பார்த்தவன் எந்த இடம் மிஸ்டேக் என்பதையும் கண்டுக்கொண்டு அதை சரி செய்ய ஆரம்பித்தான்.

“மாமா நீங்க எங்க இங்க..”

“இது மாதிரி அவ்வப்போது எனக்கு விசிட் இருக்கும் டா.. கம்பெனி வைஸ் ப்ராப்ளம் இருக்கும் போது இப்படி ஹெல்ப் பண்ணிக்குவோம்..” என்றவன் அவர்களோடு தான் இவனும் மதராஸ் வந்து இருந்தான்..

“என்ன சொல்றான்” என்று தம்பியை விசாரிக்க

“ஒன்னும் முடியல எனக்கு.. இப்போவே வரனும்னு ஒத்த காலுல நின்னுக்கிட்டு இருக்காரு.. இங்கயா இன்னும் ஒரு வாரம் இருன்னு சொல்றாங்க.. நான் யாரு பேச்சை தான் கேக்குறதுன்னு எனக்கு புரியல மாமா” என்றாள் பாவமாய்.

“ம்ஹும்.. புரியுது.. ஆனா இது கொஞ்சம் முக்கியமான ப்ராஜெக்ட் ஆச்சே.. எப்படி ரெலிவ் பண்ணுன்வாங்க.. நான் வேணா அவன் கிட்ட பேசவா..”

“வேணாம் மாமா அப்புறம் அவரு இன்னும் சாமியாட ஆரம்பிச்சுடுவாரு..” என்றாள் சோகமாய்..

அந்த நேரம் யாரோ வந்து கதவை தட்ட திரும்பி பார்தார்கள் இருவரும்.. அவளுடைய மேலாளர் தான்..

“பினிஷா மிஸ்டர் நாதன்...”

“யா மிஸ்டர் பென்னி.. ஓவரால் ஓவர்..” என்று அவள் செய்தவற்றை ரன் பண்ணி காமிக்க அவருக்கு சந்தோசமாய் இருந்தது..

“வெல்டன் மிஸ்டர் நாதன்.. சோ அடுத்த லெவலுக்கு போகலாமா..” என்று அடுத்த வேலையை அவன் விளக்க இருவரும் முனைப்புடன் கேட்டுக்கொண்டார்கள்.

அதன் படி அடுத்த கட்ட வேலையை இருவரும் பிரித்துக்கொண்டு அவளது இருக்கையின் அருகே அவனுக்கு ஒரு மடி கணினி தர நாதனும் வேலை செய்ய ஆரம்பித்தான்.

தெரியாததை அவன் முகிலுக்கு விளக்க முகிலும் சரியாகவே செய்ய ஆரம்பித்தாள்.

மத்திய இடைவேளை வர இருவரும் கேண்டினுக்கு சென்று உணவை வாங்கிக்கொண்டு வந்து சாப்பிட தொடங்கினர்.. இதனிடையே பழமலைக்கு இருவரும் போன் பண்ணி பார்க்க போன் ஸ்விட்ச் ஆப் என்று வர சோர்ந்து போனாள். அவளின் வருத்தம் கண்டு அவனும் பழமலைக்கு அழைத்தான்.

“சரி விடு சாயங்காலம் போய் அவன் கிட்ட எடுத்து சொல்லிக்கலாம்.. நீ சாப்பிடு”

“அவரு சாப்பிட்டாரா இல்லையான்னு கூட தெரியல மாமா..” அவளது வருத்தம் கண்டு அவனும் சோர்ந்து போனான்.

“நான் வேணா அய்யாவ விட்டு அவன் கிட்ட பேச சொல்லவாடா..”

“அவரு யார் பேச்சையும் கேக்க மாட்டாரு மாமா..” என்ற போதே அவளது தோழமைகள் வர கூடவே விவேக்கும் வந்தான்.

அதன் பிறகு தன் கவலையை ஒத்தி வைத்து விட்டு அவர்களோடு ஐக்கியமானாள்.. நாதனை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

நாதன் லேசாய் அவளது கரத்தை சுரண்ட “என்ன மாமா” ரகசியமாய் கேட்டாள். அவன் ஒரு விரலை நீட்டி சுட்டி காட்ட அவன் காட்டிய இடத்தை பார்த்தவளுக்கு மயக்கமே வருவது போல இருந்தது..

அழகா டக் இன் பண்ணிய புல் ஸ்லீவ் சேர்ட் பேண்டில் சிஸ்டம் யூஸ் பண்ணும் போது கண்கள் பாதிக்காமல் இருக்க போடும் ச்பெக்சை அழகாய் தன் சர்டில் மாட்டிக்கொண்டு கைகளில் தங்கத்தில் அவன் எப்போதும் அணிந்து இருக்கும் காப்பு பட்டும் படாமலும் தெரிய ஒரு வித ஆளுமையுடனும் கம்பீரத்துடனும் அவளுடைய மேலாரின் மேலாளருடன் பேசிக்கொண்டு வந்தவனை காணுகையில் மயக்கம் போடாத குறை தான் முகிலுக்கு..

பேசிக்கொண்டே அவனுக்கு மேலாளர் பணிவிடை செய்ய அதை லேசான தலை அசைப்புடன் ஏற்று சாப்பிட தொடங்கினான் பழமலை..

அவனது ஆளுமையை கண்டு வாய்க்குள் ஈஈ போகாதது ஒன்னு தான் பாக்கி.. மத்தபடி வாயை பிளந்துக்கொண்டு பார்த்தாள் அவனை.. அவளை போல தான் அனைவரும் அவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

எதார்த்தமாக பழமலை திரும்ப முகில் பிளந்த வாயுடன் அவனையே பார்த்துக்கொண்டு இருப்பதை கண்டு பட்டென்று சிரிப்பு வந்தது.. நாகரீகம் கருதி இதழ்களை தன் பல்லில் கடித்து சிரிப்பை அடக்கிக்கொண்டவன் அவளை பார்த்து கண்ணடித்தான்..

அதில் “ஹாங்” என்று பேந்த பேந்த முளித்தாள் முகில்.

“மாமா இது நிஜமா பழமலை மாமா தானா..”

“ஆமா போல தான் தெரியுது..” என்றான் நாதன் சிரிப்பை அடக்கியபடி..

“எதுக்கு மாமா சிரிக்கிற. சிருச்சு என் கடுப்பாய் இன்னும் அதிக மாக்காத சொல்லிட்டேன்” அவனை எச்சரித்தவள் “என் கிட்ட ஒரு வார்த்தை சொன்னானா மாமா நான் இங்க தான் வர போறேன்னு.. இதுல அம்புட்டு கோவம் வருது அந்த மனுஷனுக்கு. ஆனா பண்றது எல்லாம் சரியான மொள்ள மாறி தனம்.. பொருக்கி பிராடு.” அவள் பாட்டுக்கு திட்ட தொடங்க அங்க அவனுக்கு புரை ஏறியது.

“ப்ச் பாப்பா என்ன இது.. நீ இங்க திட்ட திட்ட அங்க அவனுக்கு புரை ஏறுது.. எதா இருந்தாலும் வீட்டுல போய் வச்சுக்கோ..”

“நீ கூட உன் தொம்பிக்கு தான் சப்போட்டு இல்ல..” பாவமாய் கேட்டவளை கண்டு சிரிப்பு தான் வந்தது நாதனுக்கு..

“ப்ச் அப்படி இல்லடா.. பாரு அவன் நம்மள கொஞ்ச மாச்சும் கண்டுக்கிட்டானான்னு.. நீ தான் அவனை பாத்தது ரொம்ப ஏக்க பட்டுக்கிட்டு இருக்க.. முதல்ல உன் ரியாக்சனை மாத்து.. உன்னை கதறடிக்கிரவனை நீ கதறடிக்க வேணாமா.. வசமா ஆடு மாட்டி இருக்கு.. பொலி போடுறத விட்டுட்டு கண்ண கசக்கிக்கிட்டு இருக்க..” அவன் சொல்ல

“ஆமால்ல.. மாமா இப்போ இருந்து நீ புது முகில பாப்ப” என்று நாதனிடம் சொன்னவள் பழமலையை பார்த்து கறுவினாள்..

ஒருவழியாய் உண்டுவிட்டு அவரவர் இடத்துக்கு சென்று வேலையை ஆரம்பித்தனர்..

“காலையில என்னை அப்படி கதற வச்சுட்டு பத்தாததுக்கு போனை வேற ஆப் பண்ணி வச்சுட்டு இங்க வந்து நீ குசாலாவா இருக்க வாடி வா.. வீட்டுக்கு தானே வருவ.. வந்து வச்சுக்குறேன்..” கருவிக்கொண்டே வேலையை பார்த்தாள்.

இருவரும் சேர்ந்து வேலையய் செய்து முடிக்க ரன் மட்டும் ஆகவில்லை.. நாதனும் எவ்வளவோ முயன்றும் ரன் ஆகவில்லை..

வேற ஒரு புது ப்ராஜெக்ட்டை பத்தி கைட் பண்ணிக்கொண்டு இருந்த பழமலையை அழைத்து அவர்களுக்கு உதவு மாறு பென்னி சொல்ல, பழமலை இருவரையும் நக்கலாய் பார்த்த படி அவர்கள் செய்து வைத்திருந்த வேலையை பார்வை இட்டான்.

நாதனும் முகிலும் அவனை கொலை வெறியோடு பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

பென்னி அவர்கள் அருகிலே இருக்க அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.. அதனால் பல்லை கடித்துக்கொண்டு அமைதி காத்தார்கள்.. ஆனால் அவர்களது பொறுமையை ரொம்பவே சோதித்தான் பழமலை..

“என்ன மிஸ்டர் நாதன் இது.. இந்த சின்ன கரெக்சன் கூட உங்களால கண்டு பிடிக்க முடியலையா.. மிஸ் முகில் தான் ஜூனியர்.. கூடவே கத்து குட்டி.. அவங்க கிட்ட முழு பெர்பெக்சனை எதிர் பார்க்க முடியாது ஓகே.. பட் உங்களுக்கு என்ன ஆச்சு.. இந்த லெவெல்ல வேலை செஞ்சா எப்படி...” என்று இருவரையும் எவ்வளவு டேமேஜ் பண்ண முடியுமோ அந்த அளவு டேமேஜ் பண்ண இருவருக்கும் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது..

ஆனால் சூழ் நிலையை கண்டு அமைதி காத்தனர்.. நிமிர்ந்து நாதனை பார்த்தாள் முகில்.. “கொஞ்ச நேரம்.. ஆடு ஆடட்டும்.. பொறவு கசாப்பு போட்டுடலாம்..” என்று கண்ணை காண்பித்தான் நாதன்..

“நீங்க சொல்றீங்களேன்னு தான் நான் இவ்வளவு நேரம் அமைதியா இருக்கேன் மாமா” என்று அவள் சொல்ல

“இன்னும் கொஞ்ச நேரம் டா பாப்பு..” அவளை பொறுமையாகவே இருக்க சொன்னவன் பழமலையின் திறமையை கண்டு வியந்து தான் போனான். நாதனின் இத்தனை வருட எக்ஸ்பிரியன்ஸ் இருந்தும் அவனால் இந்த தவறை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் பழமலை வந்து சில நொடிகளிலே டிடெக்ட் பண்ணி அதை ரன் பண்ண செய்தவன் மேலும் சில குறிப்புகளை கொடுக்க வியந்து போய் நின்றான் நாதன்..

முகிலுக்குமே அவளுடைய மாமனின் திறமையை கண்டு அவ்வளவு பெருமையாய் இருந்தது..

போகும் போது சும்மா இல்லாமல் யாருக்கும் தெரியாமல் அவளின் இடுப்பில் கிள்ளிவிட்டு செல்ல ‘ஹக்’ என்று துள்ளிவிட்டாள்.

நாதன் இவருடைய சேட்டையை கண்டவுடன் தன்னை போலவே சாந்தியின் நினைவு வந்தது..

 

Loading spinner
Quote
Topic starter Posted : April 24, 2025 9:18 pm
(@gowri)
Estimable Member

டேய் ரைட்டர்! ஏமி ரா இதி?????

ஒரு நியாயம் வேணாமா டா.....

ஆன நல்லா தான் இருக்கு 

Loading spinner
ReplyQuote
Posted : April 27, 2025 9:09 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top