அத்தியாயம் 27

 
Admin
(@ramya-devi)
Member Admin

குளித்துவிட்டு வந்தவனை ஹோட்டலுக்கு கிளம்ப சொன்னார் பருவதம்.. “இதுக்கு மேல என்னால அலைய முடியாது ஆத்தா.. நானும் இங்க தான் தூங்க போறேன்..” என்று அவருக்கு முன்னாடியே அவன் அவளது அறைக்குள் சென்று படுத்துவிட

“அது என்னோட ரூம்” என்று கத்தினாள். அதெல்லாம் அவன் காதில் வாங்கினால் தானே.. அவன் போய் படுத்துவிட வேறு வழியில்லாமல் கூடத்தில் படுக்கை விரித்து மாமியார் மருமகள் இருவரும் தூங்கினார்கள்.

படுத்து கொஞ்ச நேரத்திலே “பால் வேணும்” என்று பழமலை கேக்க

“அடேய் நேரம் காலம் தெரியாதாடா உனக்கு.. இப்போ போய் பால் கேக்குற..” பருவதம் சத்தம் போட

“எனக்கு பசிக்குது” முறைத்தான்.

பருவதம் ஏதோ பேச வர “பால் பிரிஜ் ல வச்சு இருக்கேன் அத்தை நான் காய்ச்சி குடுக்குறேன்..” என்று எழுந்து காய்ச்ச செல்ல “அவன் தான் வேலை இல்லாதவன் கேக்குறான்னா நீ அதுக்கு செஞ்சு குடுக்குரியாக்கும்.. எப்படியோ போங்க” என்று அலுத்த படி அவர் பருவதம் தூங்கி போனார்.

இவள் பால் காய்ச்சிக்கொண்டு இருக்க பின்னிருந்து அவளின் இடையில் கைவிட்டு முதுகில் முகம் புரட்டினான் பழமலை.. அவனது தொடுகையில் உள்ளம் குழைந்தவள் கண்களை மூடிக்கொண்டு அவனது தொடுகையை வெளிப்படையாகவே ரசிக்க தொடங்கினாள். அதில் அவனுக்கு மோகம் இன்னும் அதிகரிக்க வன்மையுடன் அவளை இறுக்கினான்..

அவனது இறுக்கம் இன்னும் வேணும் போல இருந்தது முகிலுக்கு..

பின்னோடு கரம் கொண்டு சென்று அவனின் தலை முடியை பற்றி நெரிக்க அவள் காட்டும் நெருக்கம் அவனை இன்னும் சூடு ஏத்தியது..

அதில் அவன் இன்னும் மோகம் கொள்ள அவனது இறுக்கம் இன்னும் இன்னும் அதிகமாகியது.. நெரிபட்ட அவளது இடுப்பு கன்னி போனது..

இடையில் ஊர்ந்த விரல்கள் அவளது அடியிற்றில் கோலம் போட, அவனது கரம் காட்டும் உணர்வில் மீள முடியாமல் 

சட்டென்று அவனது கரத்தை பிடித்தவள் அவன் வெற்று மார்பில் தோய்ந்து சரிந்தாள். சரிந்தவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் தன் மீசை கொண்டு கோலம் போட்டு வாயை குவித்து ‘ப்பூ’ என்று ஊத, அவனது மீசையும் மூச்சு காற்றும் அவளுக்கு பெரும் அவஸ்தையை கூட்டியது..

அவள் மயங்கி இருந்த வேளையில் அவளது கரத்தை ஏமாற்றி விட்டு மீண்டும் அவன் பயணத்தை தொடங்க நெகிழ்ந்து குலைந்து போனாள்.

புடவை எதுக்காக கட்ட வேண்டும் என்ற அவனது விளக்கத்துக்கு இப்போது செயல் முறையில் விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தான்..

அதை ஏற்க்க முடியாமல் கிறங்கி நின்ற பொது பால் பொங்கி அடுப்பை நனைக்க அது கூட இருவரையும் கலைக்கவில்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் அவனால் அவனையே கட்டு படுத்த முடியாமல் அவளை தோள் மீது தூக்கிக்கொண்டவன் அடுப்பை அணைத்துவிட்டு  அறையில் இருந்த கட்டிலில் அவளை கிடத்தி அவள் மீது அவனும் படர்ந்து மேற்கொண்டு செல்ல தொடங்க அவன் செல்லும் திசியில் அவளும் உடன்பட்டு பின் சென்றாள்.

அவ்வளவு மோகத்தையும் அவன் அவளிடம் கொட்டி கவிழ்க்க அவளால் தான் அவனது வேகத்தை தாள முடியாமல் அவனுக்கு முதுகு காட்டி படுத்தாள்.

அதில் சின்ன கோவம் வர பெற்றவன் அவளை புரட்டி அவள் மீது தன் மொத்த பாரத்தையும் படு மாறு பரவி படர அவள் மூச்சுக்கு திண்டாடி தவித்து போனாள். அதோடு அவன் அவளின் இதழில் தன் இதழை சேர்த்து முத்த கவிதை படிக்க இன்னும் திணறி திண்டாடி போனாள்.

கன்னி மான் கண்ணி போனது தன் மனம் கவர்ந்தவனின் செயல்களில்..

விடியும் வரை அவனது லீலைகள் தொடர கண்கள் தூக்கத்துக்கு கெஞ்சியது.. சத்தம் வராமல் இருவரும் ஒருவரை ஒருவர் நாடி, தேடி, போக்கு காட்டி, தூண்டிவிட்டு, தூண்டில் போட்டு என்று அந்த இரவையும் மஞ்சத்டையும் அதகளம் ஆக்கிக்கொண்டு இருந்தார்கள்.

அத்தனையும் மோக விளையாட்டுகளாகவே இருந்தனவே தவிர கூடல் மட்டும் அவ்விடத்தில் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள் இருவரும்..

ஒருவரின் அணைப்பில் ஒருவர் சுகமாய் அந்த ஏகாந்த பொழுதை ரசித்துக்கொண்டு இருந்தார்கள்.

அவனை சீண்டிவிட்டு தன்னிடம் வர வைப்பவள் அவனது மூர்கத்தில் தொலைந்து போய் அவனையும் தொலைய வைத்துக்கொண்டு அவனது செயல்களில் சிவந்து போய்க்கொண்டு இருந்தாள்.

விடியலின் போது அவள் எழுந்துக்கொள்ள அவன் அதற்க்கு அனுமதி கொடுக்கவில்லை..

“நேரம் ஆகுது மாமா... விடுங்க” என்றவள் எழ பார்க்க

அவளை வன்மையுடன் அணைத்தவன் இதழில் இதழ் பதித்து “ம்ம் போ” என்றவன் தூங்க ஆரம்பித்தான்.

இவள் குளித்துவிட்டு அடுப்படிக்கு சென்று காலை வேலையை பார்க்க பருவதமும் எழுந்து வந்தார். அவரும் கூட மாட உதவி செய்ய அனைவருக்கும் சமையல் செய்து முடித்தாள்.

கொழுந்து போன் பண்ண, பழமலையை எழுந்து அவர்களையும் கூட்டிட்டு வந்தான் முகில் இருந்த வீட்டுக்கு. வேண்டா வெறுப்பாய் சாந்தியும் அன்னமும் அவரின் கணவரும் வர நாதன் அமைதியாய் இருந்தான்.. அவனுள் இன்னும் முகிலுக்கான இடம் இருக்க அதை அறிந்த பழமலை பல்லை கடித்தான்.

முகில் அலுவலகம் கிளம்ப அவளை முறைத்து பார்த்தான். “ப்ளீஸ்” கண்களிலே கெஞ்சியவள் “பாதி நேரம் தான் வந்துடுவேன்..” என்று எப்பொழுதும் அணியும் ஜீன்ஸ் மற்றும் காட்டன் சட்டையில் அழகான மாடன் ஹேர் ஸ்டைய்ளில் கிளம்பியவளை கண்டு சாந்திக்கும் அன்னத்துக்கும் வயிறு காந்தியது..

நாதன் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.. தம்பி பொண்டாட்டி என்று ஆனா பின் அவளை பார்ப்பது தர்மம் இல்லை என்பது அறிந்தாலும்.. அவனின் மனம் சற்று அலைப்பாய்ந்து கொண்டு தான் இருந்தது..

பழமலை அவளை கொண்டு போய் விட்டுட்டு வரேன் என்று சொல்லியவனை முறைத்து பார்த்தாள். 

“மரியாதையா வாடி..” என்று வாயசைத்து விட்டு அவளுக்கு முன்னே செல்ல தலையில் அடித்துக்கொண்டு அவன் பின்னே சென்றாள்.

“எல்லாத்துலயும் நல்லவ தான் ஆனா யாருக்கு குடுத்து வச்சு இருக்கோ..” பருவதம் லேசாய் கலங்கிய குரலில் வறுத்த பட பொன்னி தன் மகனை பார்த்து தலை அசைக்க கொழுந்து பருவதத்திடம் நடந்தவற்றை சொல்ல தொடங்கினார்.

அதை கேட்டு மகிழ்ந்த பருவதம் கொழுந்தை முறைத்து பார்த்தார்.

“வாய் வச்சுக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டீங்களா.. என் கிட்ட அப்பவே சொல்லி இருந்தீங்கன்னா என் மருமகளை அன்னைக்கே பழமலைக்கு கல்யாணம் செஞ்சு வச்சி மருமகளா ஆக்கி இருப்பேன்.. இப்போ பாருங்க ஒன்னு ஒன்னரை வருஷம் வீணா போச்சு.. என் புள்ள தனியா என்னென்ன சிரமம் பட்டுச்சோ..” வறுத்த பட

“விடு ஆத்தா.. என்ன நடக்கணுமோ அது தானே நடக்கும்.. உன் மருமவள அப்படியோ அம்போன்னு யாரும் விடல.. அவ என்ன செய்யிறா எங்க இருக்கான்னு உன் புள்ள கண்கானிச்சுக்கிட்டு தான் இருந்தான்.. அதனால தான் நேத்தைக்கு அவ எங்க இருக்கான்னு தெருஞ்சு என் பேராண்டி அந்த கடைக்கே நம்மளை எல்லாத்தையும் கூட்டிக்கிட்டு போனான். இல்லன்னா நீ எப்படி உன் மருமவள பார்த்து இருக்க முடியும்..” என்று தன் பேரனின் சாதுரியத்தை சொல்லவும் கேட்டுக்கொண்டு இருந்த கொழுந்து மீசையை முறுக்கிய படி பருவதத்தை பார்த்தார்.

“ம்கும் ரொம்ப பெருமை தான்..” சிலாகித்தவர் அவரின் பார்வையில் வெட்கப்பட்டு அவ்விடத்தை விட்டு சென்றார்.

அவளின் பின்னாடியே வந்தவன் “என்னடி இது உடுப்பு..” கடுப்படிக்க

“இங்க இருக்குற வரை மட்டும் தானே.. ப்ளீஸ்..”

“எதாச்சும் பண்ணு...” என்றவன் அவளோடு பேருந்தில் ஏற

“ப்ச் நீங்க போங்க மாமா நான் பாத்துக்குறேன்..”

“ஒன்னும் பிரச்சன இல்ல.. வீட்டுல சும்மா தானே இருக்கேன்” என்றவன் அவளை ட்ராப் பண்ணிவிட்டு அங்கேயே பொழுதை களித்தவன் மத்திய நேரம் ஆனவுடன் அவளுக்கு போன் போட்டான்.

“ம்ம் வந்துட்டேன்..” என்றவள் அவனுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

வீட்டில் நாதனும் அன்னம் குடும்பத்தினரும் வெளியே சென்று இருக்க மற்ற மூவரும் விச்சாந்திரையாக அமர்ந்து இருந்தார்கள். இவர்கள் வரவும் கலகலப்பாக நேரம் சென்றது.. வந்து குளித்துவிட்டு அவனது விருப்ப படி புடவை அணிந்தவள் தன் அத்தையின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்.

பழமலையும் பொன்னியின் மடியில் படுத்துக்கொள்ள கொழுந்து சோபாவில் அமர்ந்து இருவரையும் பார்த்தார் மன நிறைவுடன்..

“ஏன் ஆத்தா என் கிட்ட சொல்லல.. என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இப்போ இப்படி தனியா நின்று இருந்திருக்க வேனாமுள்ள” வறுத்த பட்டு அவளது தலையை கோதி விட

அவரது கையை எடுத்து கன்னத்துக்கு அடியில் வைத்துக்கொண்டவள் அவரை நிமிர்ந்து பார்த்து “மாமா என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கணும் இல்லையா அத்தை.. அதான் அவர் கிட்ட சொன்னேன்” என்றபோது கொழுந்து வந்து அவள் அருகில் அமர வேகமாய் எழுந்து அமர்ந்தாள் முகில்.

“ஆத்தா.. எனக்கு உன் மனசு புரியுது த்தா.. ஆனா கொஞ்சம் யோசிச்சு பாரு. உன் அத்தை மாமா வந்து உன் குடிக்கார பயலுக்கு என் வீட்டு புள்ளைய கட்டி வச்சுட்டியேன்னு ஒரு வார்த்தை நாக்கு மேல பல்லு போட்டு பேசிட்டா நான் என்ன சாமி செய்யிறது.. உன் அப்பன் ஆத்தா இருந்து இருந்தா நான் அவிங்க கிட்ட கூட உன் பொண்ணை தான்னு அனுமதி கேட்டு இருந்துருக்க மாட்டேன்.. உன்னை தோள்ள தூக்கி போட்டுட்டு வந்து என்ற மவனுக்கு கலியாணம் செஞ்சு வச்சு இருப்பேன்.. ஆனா..” என்று அவர் மேற்கொண்டு சொல்ல

“அவரது கையை பிடித்தவள் “எனக்கு உங்களை தெரியாதா மாமா.. அந்த நேர கோவம்.. எனக்கு நிஜமா என்ன செய்யிறதுன்னு தெரியல.. அதான் இப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன்.. சாரி மாமா..” என்று என்றவளை தன்

தோளோடு அணைத்தவர்

“ஜாரி எல்லாம் எதுக்கு மா.. நீ என்னை புருஞ்சுக்கிட்டா அதுவே போதும் எனக்கு” என்றார் அன்புடன் அவளின் தலையை தடவி விட்டு..

அவளுக்கு சாதம் போட்டு பிசைந்து ஊட்டி விட “கிழவி நீயா..” என்று சிரிப்புடன் கேட்டவளின் தலையில் கொட்டியவர் “அவனோட சேர்ந்து நீயும் கிழவின்னு சொல்றியா..” முறைத்த படி அனைவருக்கும் அவர் சாதத்தை உருண்டை பிடித்து குடுத்து விட்டு முகிலுக்கு மட்டும் ஊட்டி விட்டார்.

“பின்ன புருஷன் எவ்வழியோ பொண்டாட்டியும் அவ்வழி தான்..” என்று அவர் ஊட்டிய சாதத்தை ரசித்து உண்டாள்.

கலகலப்புடனும் மன நிறைவுடனும் சாப்பிட்டனர் அனைவரும்..

Loading spinner
Quote
Topic starter Posted : April 24, 2025 9:15 pm
(@gowri)
Estimable Member

எப்பா எல்லாம் ஒரு வழியா செட் ஆகிட்டாங்க 🤩🤩🤩🤩

Loading spinner
ReplyQuote
Posted : April 27, 2025 8:34 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top