கமிட்டட்ணா என்னன்னு தெரியாதுல சாரி...” என்று அவனை விட இவள் அதிகம் நக்கல் பண்ணி “நான் விவேக்குன்னு ஒருத்தரை காதலிக்கிறேன்.. அவரு உங்களை மாதிரி உங்க அளவுக்கு அழகா இல்லன்னாலும் ஏதோ கொஞ்சம் வெள்ளையா இருக்காரு.. அதோட இல்லாம உங்களை விட கொஞ்சம் கம்மியா ரெண்டு மூணு டிகிரி முடுச்சு சாதாரணமா யூஸ்காரன் இங்க வச்சு இருக்க ஐடி கம்பெனில ஹச்ஆரா இருக்காரு... எதுல பார்த்தாலும் உங்க அளவை விட கம்மி தான்.. ஆனா பாருங்க அவரே என்னை பிடுச்சு இருக்குன்னு வந்து பூ குடுத்து இம்ப்ரெஸ் பண்ணிட்டாரு... எனக்கும் அவரை ரொம்ப பிடிச்சு போச்சு... என் மனசு அலை பாயாது. அதனால நீங்க உங்க அண்ணன் கல்யாணத்தை பத்திய பயம் இல்லாம ஜாலியா என்ஜாய் பண்ணுங்க...
உங்க இல்வாழ்க்கைக்கு நான் குறுக்க நிக்க மாட்டேன்” என்று நக்கலுடன் சொன்னவளை கொலைவெறியுடன் பார்த்தான்.
“என்னடி நக்கலா”
“ஆமான்னா சாரு என்ன செய்ய போறாரு” ஒற்றை புருவத்தை தூக்கி திரும்பி நின்று அவனை பார்த்து கேட்டவளை அடித்து துவம்சம் செய்யும் ஆசை எழுந்தது. ஆனால் அவளை முறைத்து கூட பார்க்க கூடாது என்று பருவதம் எச்சரிக்கை செய்து இருக்க கடுப்பாகி போனான்.
“என்ன கொல்லம்னு போல இருக்கா” அவனை தூண்டி விட்டாள்.
“நீ ஊருக்கு வாடி அங்க வச்சுக்கிறேன் உன்னை” பல்லை கடித்தான்.
“அதை அங்க போயி பேசிக்கலாம் மிஸ்டர் பழமலை” என்று சிலிர்த்துக்கொண்டவள் மேலும் இரண்டு புடவைகளை எடுத்துக்கொண்டாள்.
“ம்மா என் கிட்ட காசு இல்ல” என்று முறைத்தான்.
“என்ன மாமா எவ்வளவு நாள் கழிச்சு உன் கல்யாணம் நடக்குது... உன் ஒவ்வொரு சடங்குக்கும் நான் புது புடவை கட்டுறது இல்லையா” என்று நாதனிடம் பழமலையை பார்த்தபடி வம்பிழுக்க
அவனுக்கு உள்ளுக்குள் தகித்துக்கொண்டு வந்தது.. அவளை கொலை வெறியுடன் பார்த்தவன் தன் சட்டை பையிலிருந்த மொத்த பணத்தையும் எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு “இந்த மொத்த கடையையும் வேணாலும் வாங்கிக்கடி” என்றவன்
அவளின் காதோரம் குனிந்து “அப்படியே அவனுக்கு முதலிரவு சடங்கும் நடக்கும்.. அதுக்கும் ஒரு புது புடவை எடுத்துக்க... எப்படியும் நான் அன்னைக்கு ப்ரீயா தான் இருப்பேன் அப்போ உன் கிட்ட வரேன். நீ என்ன பண்ற உன் கதவை தாள் போடமா வை அப்போ தான் எல்லாத்துக்கும் சவுகாரியமா இருக்கும்” என்று சொன்னவனை ஆத்திரத்தோடு முறைத்தாள்.
“என்னடி முறைக்கிற நீ தானே கேட்ட..” என்று நக்கல் பண்ணினான்.
“ப்ச்.. போடா” என்று அவனை விட்டு விலகி அத்தை பக்கம் ஒட்டிக்கொண்டாள். இருவரது நெருக்கம் கண்டு மற்றவர்கள் முழி பிதுங்கி நின்றார்கள்.
நாதனுக்கு இவர்கள் சண்டை போட்டு பிரிந்தது சந்தோஷமாய் இருந்தது.. அவள் சென்ற அன்றே அவளை பாலோ செய்ய ஆரம்பித்தான்.. ஆனால் முகில் அவனுக்கு போக்கு காட்டிவிட்டு அவன் கண்ணிலே படாமல் இருந்தாள் இத்தனை நாளும்.
முகிலுக்கு பழமலையை பிடிக்காமல் தான் இங்கிருந்து சென்றாள் என்று பருவதம் நினைத்துக்கொண்டு இருந்தார்.
அதனால் பழமலையை முகிலிடம் பேச அவர் அனுமதிக்கவில்லை..
சிவகொழுந்துக்கோ குற்ற உணர்வாய் இருந்தது.. அதோட பழமலையும் அவரிடம் பேசி இருந்தான்.
“அய்யா அவளை விடுங்க.. எங்க போனாலும் அவ எனக்காக தான் காத்துக்கிட்டு இருப்பா.. அதோட இல்லாம உங்களை கொஞ்சமும் மதிக்காம போனால்ல.. அதனால அவ தான் திரும்பி வரணும்.. அவளுக்காக நீங்க வருத்த பட்டுக்கிட்டு இருக்காதீங்க.. அவ எங்க இருக்கான்னு எனக்கு தெரியும்.
நாதனுக்கு கல்யாணம் முடியட்டும். பொறவு அவளை போய் கூட்டிட்டு வந்துடலாம்.” என்று சிவக்கொழுந்துக்கு முட்டுக்கட்டை போட்டு இருந்தான்.
“அய்யா.. புள்ள உன் மேல அம்புட்டு பாசம் வச்சு இருக்குய்யா.. நீ ஒண்ணுமே இல்லாம இருக்குறப்ப கூட உனக்காக என் கிட்ட பேசுனுச்சு.. அதை போய் குறை சொல்லிக்கிட்டு இருக்குற.. அதுக்கு நம்மள விட்டா வேற யாருயா இருக்கா.. போ ராசா போய் என் மருமவள கூட்டிட்டு வாய்யா..” என்றவரை அன்புடன் பார்த்தவன்
“அவ எனக்காக பாத்துக்கிட்டு உங்க மேல கோவபட்டுக்கிட்டு பிரிஞ்சி போய்ட்டா.. அவளுக்காக அவ மேல உள்ள பாசத்துல என்கிட்டே நீங்க கெஞ்சிகிட்டு இருக்கீங்க.. நான் உங்களுக்காக உங்களை முறைச்சுக்கிட்டு போய்ட்டான்னு அவ மேல கோவத்துல இருக்கேன்.. ஆக மொத்தம் நல்ல குடும்பம் பல்கலைகலக்கம்” என்றவனை
“யய்யா ராசா அது தான் யா குடும்பம்.. அது தான் யா பாசம்..” புன்னகையுடன் சொன்னார்.
கிழவியோ “ஏலேய் அவ தான் கோவத்துல போயிட்டான்னா உனக்கு என்ன பவுசு கூடி போச்சாக்கும்.. பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு போனா புருஷன் காரன் மான ரோசத்தை விட்டுட்டு அவ போரவாடி போய் வூட்டுக்கு கூட்டிட்டு வரணும் டா.. அது தான் புருஷ லட்ச்சணம்.. அதுவும் உனக்காக தான் அவ போய் இருக்கா.. மரியாதையா என் பேத்திய கூட்டிட்டு வாடா..” அதட்ட
“எனக்கும் தெரியும் கிழவி.. முதல்ல நாதனுக்கு கல்யாணம் கூடி வரட்டும். அவ இங்க இருந்தா தேவை இல்லாத பிரச்சனையை கிளப்பிக்கிட்டு இருப்பான்... அதனால அவன் வேலை முடியட்டும்.. பொறவு உடனே இழுத்துட்டு வந்துட மாட்டேன்” என்று மீசையை முறுக்கினான்.
“ஓ நீ அப்படி சொல்றியா அதும் சரி தான்.. ஆனா என்ன உன் ஆத்தா காரி சமைக்கிறத தாண்டா என்னால தாங்கிக்கவே முடியல.. சீக்கிரம் முகில கூட்டிட்டு வா.. அவ வர்றதுக்குள்ள என் நாக்கு செத்து போய்டும் போல..” என்றவரை முறைத்து பார்த்தான்.
“என்ன முறைக்கிற அங்கேயும் நாக்கு செத்து போய் தான் கிடக்கு..” என்று அவனின் நிலையை சொல்ல
“ஆமா தான் ஆனா அதுக்காக அவள சமையல் கட்டுல போட்டே என் காலத்தை முடுச்சுடுவ போல..” முறைத்தான்.
“அடேய் பகல்ல சமையல் கட்டுல நம்மக்கு சோறாக்கி போடட்டும்.. போறவு ரவைக்கு வேணா நீ உன் தோட்டத்துக்கு கூட்டிட்டு போ இல்ல நம்ம கம்மங்கொல்லைக்கு கூட்டிட்டு போ நான் வேணான்னா சொல்லறேன்” என்று அவர் யோசனை சொல்ல
“அதுக்கு முதல்ல அவ வேணுமே.. நீ இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என்னை ரணகளமா ஆக்கு.. அவ வேற பக்கத்துல இல்ல.. நீ வேற கம்மங்கொள்ள, சோளக்கொள்ளன்னு சொல்லிக்கிட்டு போ கிழவி” என்று விரக தாபத்தில் இருந்தது நினைவுக்கு வந்தது பழமலைக்கு.
ஒரு வழியாய் துணி எடுக்கும் வைபவம் முடிய அடுத்து நல்ல உணவகத்துக்கு சென்று சாப்பிட அமர்ந்தார்கள். பொண்ணையும் மாப்பிள்ளையையும் தனியாக அமர சொல்லி விட்டு மற்ற அனைவரும் ஒன்றாய் அமர்ந்தார்கள். பழமலையோ தாயோடு அமர்ந்து இருந்தவளின் அருகில் உட்கார்ந்துக்கொண்டான்.
“ஏன் அய்யாரு அவங்க கிழவியோட உக்காராம இங்க உக்காறீங்க.. கிழவி எப்படி விட்டுச்சு” முகில் அவனை வம்பிழுக்க
“ம்ம் நீ எங்க சோடி பொருத்தத்த பார்த்து கண்ணு வச்சிட்டா என்ன பண்றதுன்னு தான்...” நொடித்தான்.
“தோடா...”
“ஏய் முன்னே புடுச்சு பார்த்துக்கிட்டு இருக்கேன் என்னடி மரியாதை இல்லாம பேசிக்கிட்டு இருக்குரவ... ஒரு வருசத்துல துளிர் விட்டு போச்சா... நறுக்கிடுவேன் பார்த்துக்க” காய்ந்தான்.
“போடா..” என்று தனக்குள்ளே முனகியவன் சாப்பாட்டில் என்ன ஆர்டர் குடுக்க என்று பார்க்க அவனது கையில் இருந்த மெனு கார்டை வாங்கி என்ன என்ன இருக்கிறது என்று பார்த்தாள் முகில். அப்போது உணவு பரிமாறுபவர் வர
“எனக்கு பிரியாணி” என்றான்.
“அடேய் தேதி வச்சுட்டா கல்யாணத்துக்கு முன்னால அசைவம் சாப்பிட கூடாது டா” அத்தை பாவமாய் சொல்ல
“அதெல்லாம் எனக்கு தெரியாது... ஏட்டி எனக்கு ரெண்டு பிரியாணியும் வறுத்த கோழி கறியும் சொல்லு” என்றான். அவனது பேச்சை கேட்ட சாந்தி அவளது அம்மாவை முறைக்க ஏதோ சரியில்லை என்பதை புரிந்துக்கொண்டாள் முகில்.
அதுவும் பழமலை சாப்பிடுவதை கண்டு முகம் சுழித்தவளை கண்டு ஏனோ கோவம் வந்தது முகிலுக்கு.
இவன் இப்படி காட்டான் என்று தெரிந்து தானே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாள். இப்போ என்ன இப்படி ஓவரா சீன போடுரா... அப்படி சீன் போடுற அளவுக்கு கூட இவ ஒன்னும் அந்த அளவு படிக்கல போலே.. ஏதோ பன்னிரண்டாவது தான் முடித்திருகிறாள்.. உனக்கு இவ்வளவு சீனா.. கொடுமை.. நீ உனக்கு பாத்தா மாப்பிள்ளையை கவனிக்க வேண்டியது தானே.. எதுக்கு என் புருஷனை பாக்குறா.. கண்ணை நோண்டி கைல குடுக்கணும்” என்று எண்ணியவள் பழமலை சாப்பிடுவதை பார்த்தாள். அவன் எப்பொழுதும் போல வயிறுக்கு வஞ்சகமில்லாமல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
தன் இலையில் இருந்த வடையை எடுத்து அவனிடம் கொடுக்க ஒன்றும் சொல்லாமல் வாங்கி உண்டான்.
“ப்ச் நீயும் காடை கவுதாரின்னு ஏதாவது சொல்லி இருக்கலாம்ல” என்றான்.
“எதுக்கு அதையும் புடுங்கி திங்கவா” என்றாள்.
“விடுடி ரொம்ப தான் பண்ணாத. என் பொண்டாட்டிட்ட சொல்லி நான் வகை தொகையா சாப்பிடுவேண்டி.” முறைத்தான்.
“அதையும் தான் நான் பார்க்குறேன்.. இன்னும் பொண்டாட்டியே வரல அதுக்குள்ள செஞ்சு தருவான்னு ரொம்ப தான் நம்பிக்கை...” நொடித்துக்கொண்டாள்.
“கண்டிப்பா செஞ்சு தருவா” என்று அவளை ஆழ்ந்து பார்க்க
“என்ன” என்றாள்.
“நடக்கும் போது என்ன தருவ எனக்கு” என்றான் மோகத்துடன்.
“என்ன வேண்டும்” என்றாள் உள்ளே போன குரலோடு.
“ம்ம் அதை அப்போ கேக்குறேன்” என்றவன் அவளது இலையில் இருந்த தயிர் சாதத்தை ஒரே அல்லில் தன் இலைக்கு கொண்டு வந்து உண்ண
“அடேய் அவளை சாப்பிட விடுடா” பருவதம் சொல்ல
“ம்ம் போதும் உன் மருமவ தின்னது” என்றவன் மீண்டும் அவளது இலையில் இருப்பதை எடுக்க வர முறைத்து பார்த்தாள் முகில்.
“என்னடி” அதிகாரமாய் அவளை மிரட்ட
“தின்னு தொலைங்க” என்றவள் அவனது இலையில் இருந்த பிரியாணியை சாப்பிட போக அத்தை தடுத்தார். “அவன் தான் சொல் பேச்சு கேக்கல நீயாவது கேளேண்டி..”
“எனக்கா கல்யாணம்.. உன் மகனே சாப்பிடும் போது நான் மட்டும் சாப்பிடக்கூடாத... நானும் சாப்பிடுவேன்.” என்று அவள் எடுத்து சாப்பிட
“ம்கும் எதுல ஒத்துமை இருக்கோ இல்லையோ இதுல இருக்கு” என்று இருவரையும் திட்டியபடி அவர் உண்டு முடித்தார்.
இருவரும் கலந்து உண்டு முடித்து எழும்போது நாதன் இருவரையும் முறைத்து பார்த்தான்.
நீ பார்த்தா பார்த்துக்க என்ற படி இருவரும் எப்போதும் போல அடித்து பிடித்துக்கொண்டு மிச்ச பொழுதை பர்ச்சேசிலே கழித்தார்கள்.
நாதனை வெறுப்பு ஏத்து போது ரொம்ப இன்பமா இருக்குது🤣🤣🤣🤣