அத்தியாயம் 24

 
Admin
(@ramya-devi)
Member Admin

மாடன் உடைகளில் அலங்கார பொம்மையாய் தன் கைகளில் நழுவும் போனோடு மிகப்பெரிய நிறுவனத்தில் வேலையும் என்று பக்கா நாகரிக மங்கையாய் இருந்தாள். இப்போது அவளை யாருக்கும் அடையாளம் தெரியாது. முற்றும் முழுவதுமாய் மாறி போய் இருந்தாள்.

தன் முன் இருக்கும் உணவுகளை கொறித்த படி தன் தோழமைகளுடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள். அப்போது ஒருவன் அவள் முன் ஒரு பூவை நீட்டி காதலை சொல்ல

திகைத்தது ஒரு கணம் தான் என்றாலும் “சாரி” என்று சொல்லி விட்டு மீண்டும் உணவை உண்ண

“ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லாத முகில்.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்” என்றான்.

“ஆனா எனக்கு உன்னை பிடிக்காதே என்ன செய்யிறது கவின்... பிடிக்கலன்னா விட்டுடு போர்ஸ் பண்ணாத”

“கொஞ்சம் கண்சிடர் பண்ணு” என்று அவளின் கைகளை பிடிக்க வர சட்டென்று அவனிடமிருந்து விலகி

“இங்க பாரு நான் அல்ரெடி ஒருத்தனை காதலிக்கிறேன் இவன் தான் அவன்” என்று தன் அருகில் நின்றிருந்த விவேக்கை காண்பித்தான்.

“போய் சொல்லாத முகில்”

“டேய் நிஜமா நாங்க ரெண்டு பேரும் ஒன்பது மாசமா காதலிச்சுக்கிட்டு இருக்கோம்டா” என்று சொல்லியபடி விவேக் எழுந்து

“மரியாதையா சொல்லும் போதே ஓடு.. இல்லன்னா அசிங்க படுவ” என்று மிரட்டி அவனை அனுப்பியவன்

“கூல் பேபி நீ சாப்பிடு” என்று அவளுக்கு பரிமாற “ப்பா என்ன காதல் உங்க ரெண்டு பேத்துக்குள்ளையும்” என்று சுற்றி இருந்த தோழமைகள் வியக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

அதென்னவோ இருவருக்கும் பார்த்த உடனே ரொம்பவும் பிடித்து போனது.. அன்றிலிருந்து இருவரும் ஒன்னாவே தான் சுத்திக்கொண்டு இருக்கிறார்கள். விவேக் யாரிடமும் அவ்வளவாக பழக மாட்டன் அதனாலே அவனது நண்பர்கள் கூட “என்ன மச்சான் இது புதுசா” என்று கேட்க

“இல்லடா எனக்கு அவளை ரொம்ப பிடுச்சு இருக்கு” என்றானே தவிர விளக்கம் எதுவும் தரவில்லை.

அது போல தான் முகிலாம்பிகையும்... வீக் எண்ட் என்பதால் தோழமைகள் எல்லோரும் வெளியே சாப்பிட்டுவிட்டு அப்படியே மூவி போகலாம் என்று பிளான் பண்ணி இருக்க அது படியே அந்த மாலை நோக்கி பயணித்தார்கள்.

இந்த ஒரு வருடத்தில் தான் முகிலின் வாழ்வில் எவ்வளவு மாற்றம்.. அதை எண்ணிய படியே படம் பார்த்தவளுக்கு மனம் அங்கு நிலைக்கவில்லை. கடந்து போன நிகழ்வுகளிலே வளம் வந்துக்கொண்டு இருந்தது.

“என்னடா” என்று அவளது கைக்கோர்த்து கேட்ட விவேக்கை பார்த்து புன்னகைத்தவள்

“நத்திங் விக்கி” என்று அவனது தோளிலே சாய்ந்துக்கொண்டாள். ஆனாலும் மனம் நிலை கொள்ளாமல் தவித்துக்கொண்டு தான் இருந்தது. அதற்கு என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியாமல் இருந்தாள். முன்பிருந்த வாழ்க்கைக்கும் இப்போது இருக்கும் வாழ்க்கைக்கும் அவ்வளவு வித்யாசம் இருந்தது.

முன்பு எது செய்தாலும் முட்டுக்கட்டை போட ஆள் இருந்தது. இப்போது என்ன செய்தாலும் தட்டி கேட்க ஆளில்லை.. என்ன வாழ்க்கை என்று தோன்றியது. படம் முழுவதும் ஓடி முடிய, அதில் ஒரு சீன் கூட மனதில் பதியவில்லை. மாறாக பாக்கியராஜ் படம் நினைவுக்கு வர கொடுமை என்று தன்னை தானே திட்டிக்கொண்டாள்.

‘உனக்கு கொஞ்சம் கூட சூடு சுரணை எதுவுமே இல்லடி வேணாம்னு தானே ஒதுங்கி வந்த.. பொறவெதுக்கு அந்த பக்கி பயபுள்ளைய நினைக்கிற. என்ன மனமோ உன் மனம் சரியான மானங்கெட்ட மனமா இருக்கு.’

அதன் பின் அந்த நினைவுகளிலே மூழ்கி போனவளின் விழிகளில் கண்ணீர் வழிந்தது. ஆனால் மனதை இருக்கிக் கட்டியவள்

“இனி நீயே வந்து கூப்பிட்டாலும் நான் வர மாட்டேன் மாமா. நமக்குள்ள ஏன் இப்படி ஒரு பிரிவு வரணும். உன்னை பிரிந்து என்னால நிம்மதியா இருக்க முடியல மாமா.” கண்ணீருடனே அந்தைய நாளை கழித்தாள்.

கை நிறைய சம்பளம் வந்தது. பெரியதாக எந்த செலவும் செய்யாமல் வங்கி கணக்கிலே போட்டு வைத்திருந்தாள். மேலும் சிறிது நாள் கழிய

அன்றைக்கும் வார விடுமுறை ஆதலால் நண்பர்கள் பட்டாளம் அனைவரும் ஊர் சுற்ற முடிவு பண்ண முதலில் சாப்பிங் என்று முடிவெடுத்து பரிச்சயமான கடையில் துணிகளை அலசிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது யாரோ ஒருவர் முகிலாம்பிகை என்று அழைக்க சுற்றிலும் தேடி பார்த்தாள். யாரும் கண்களில் புலப்படவில்லை. “ப்ச்” என்று தோளை குலுக்கிக்கொண்டு தன் வேலைக்கு திரும்ப, மீண்டும் அவளது பேரை சொல்லி அழைக்க

“ப்ச் யாருடா இது” என்று கடுப்பாகி திரும்பி பார்த்தாள். அங்கே பருவதம் நின்றுக்கொண்டு இருக்க அவளுக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை. கிட்டத்தட்ட ஒன்னரை வருடம் கழித்து தன் அத்தையை பார்க்கிறாள். அதும் மதராசில்..

“அத்தை” என்று கூவியபடி ஓடி வந்து அணைத்துக்கொண்டாள்.

“எப்படிடி தங்கம் இருக்க.. எங்க கிட்ட கூட சொல்லாம இதென்ன கண்ணு இப்படி பண்ணி போட்டுட்ட. நீ எங்க இருக்கன்னு கூட சொல்லாம மறைச்சுட்டீள்ள” கண் கலங்கியவர் அவளை பார்த்து “அடையாளமே தெரியல கண்ணு.. இப்படி மாறிப்போய்ட்டியேடி” வேதனையுடன் கேட்டவரை ஆழமாய் பார்த்தவள் “நான் இருக்கனா செத்தனான்னு கூட தெருஞ்சுக்க விருப்பம் இல்லாதவங்க கிட்ட நான் எதுக்கு பேசணும்” என்று முடிக்கும் முன்பே அவளை பருவதம் அத்தனை பேரின் முன்னிலையிலும் அறைந்து இருந்தார்.

அவள் பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை. “உன் மாமன் வீட்டுக்கு எத்தனை முறை வந்து இருப்பேன் தெரியுமா.. ஒவ்வொரு முறையும் பார்க்க விருப்பம் இல்லைன்னு உன் அத்தைக்காரிக்கிட்ட சொல்லிவிட்ட தெல்லாம் யாருடி...” என்றவரை

“இது என்ன புது கதை” என்பது போல பார்த்தாள் முகில்.

“பதினைஞ்சு நாளுக்கு ஒருக்கா உன்னை தேடி வந்தேனே ஏண்டி இப்படி பேசுற.. ரெண்டு பேத்தை முழுசா தூக்கி கொடுத்தது பத்தாதா... வாழுற வயசுல ஏண்டி உன் வாயில இப்படிப்பட்ட வார்த்தையேல்லாம் வருது” கண்கலங்கியவரை கண்டு பரிதாபமாகி போனது.

“அப்போ நிஜமாவே என்னை தேடி வந்தியா அத்தை”

“ஏண்டி உன் அத்தை உன் கிட்ட சொல்லலையா..” ஏதோ புரிவது போல இருந்தது இருவருக்கும்.

“ம்ம் அது மட்டும் இல்லாம நான் ரொம்ப நாள் கூட அங்க இல்லத்த”

“ஏண்டி” கண்களை துடைத்த படி பதறி போனார். இவ்வளவு நாள் நல்ல பாதுகாப்போடு தான் இருக்கிறாள் என்ற நம்பிக்கையில் தான் தைரியமாக இருந்தார். இன்று அது காணமால் போக பதறி போனார். வயசு பிள்ளை. தாய் தந்தையரோடு இருக்கும் போதே போல்லாத விசயமெல்லாம் நடக்குது சமுகத்தில். இதுல யாரும் இல்லன்னு தெருஞ்சா இவளோட கதி.. கடவுளே ஏன் இப்படியெல்லாம் நடக்குது. பெரிதும் கலங்கி போனார்.

“ப்ச் அதை விடுத்த, ஆமா நீ எப்படி இருக்க.. இங்க எதுக்கு வந்து இருக்க. அதும் தனியா”

“தனியால்லாம் வரல கண்ணு. நம்ம நாதனுக்கும் சாந்திக்கும்  கல்யாணம் கூடி வந்து இருக்கு. கல்யாணத்துக்கு புடவை இங்க தான் எடுக்கனும்னு அன்னம் ஒரே புடிவாதம்.. அதான் ஊருல இருந்து படையையே வந்து இருக்கு.” என்றார்.

“கல்யாணம் நிச்சயாமாகி புடவை கூட எடுக்குற அளவுக்கு வந்தாச்சு.. ஆனா இதுல உன் தம்பி பொண்ண மட்டும்  மறந்து ஒதுக்கிவச்சிட்டல்ல” என்று கலங்கியவளை

“ஏண்டி நானா உன்னை ஒதுக்கி வச்சேன். இப்போ கூட நீ எப்படியும் கல்யாணத்துக்கு வருவன்னு பாரு உனக்கு புடவை எடுத்து வச்சு இருக்கேன்” என்று தன் கைகளில் உள்ள அரக்கு வண்ணப்புடவையை காட்டினார்.

அதற்குள் அவளது மத்த தோழமைகள் என்னவென்று விசாரிக்க அத்தை என்று அறிமுகப்படுத்திவிட்டு “கைஸ் நீங்க என்ஜாய் பண்ணுங்க. விவேக் நீயும் தான். நான் இன்னைக்கு இவங்க கூடத்தான்” என்று அவர்களை அனுப்பிவிட்டு தன் அத்தையோடு மற்றவர்கள் இருந்த இடத்திற்கு சென்றாள்.

அங்கே பழமலை கிழவியோடு நின்றுக்கொண்டு இருக்க அதை பார்த்தவளுக்கு எங்கிருந்து தான் கோவம் வந்ததோ...

“எப்போ பாரு அந்த கிழவியோடு கூட்டு சேர்ந்துக்கிட்டு என்னை படுத்தி எடுக்குறதே வேலையா போச்சு.. எல்லாம் இவனால தானே... இவன் இல்லன்னா என் வாழ்க்கை இப்படி ஆகி இருக்காது. இவனை ஏன் நினைச்சேன்..” என்று சுல்லேன்று கோவம் பிறந்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டாள்.

எதார்த்தமாக பழமலை பருவதத்தை பார்த்தவன் கூடவே முகிலாம்பிகையையும் பார்த்தான். புருவம் சுருக்கியவன் அவளை கண்டுக்கொள்ளவே இல்லை.

“போடா இருந்துக்கோ யாருக்கு வேணும் உன் வரவேற்ப்பு..” முனங்கியவள் “எனக்கு இன்னொரு புடவை வேணும் அத்தை” என்று அவள் கேட்க அதுவரை புடவையில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் தள்ளி நின்றிருந்த பருவதம் “உனக்கு இல்லாததா சாமி வா வந்து எடுத்துக்க” அவளை அழைத்துக்கொண்டு, புடவை எடுத்துக்கொண்டு இருந்த அன்னத்தையும் சாந்தியையும் கொஞ்சம் நகர சொன்னவர் முகிலை உட்கார வைத்து நல்ல புடவையாய் காட்ட சொன்னார்.

அவரது அந்த கவனிப்பு எல்லோருக்கும்  காண்டாகி போனது..

கொழுந்து அவளிடம் பேச வர “நல்ல இருக்கீங்களா மாமா..” என்றதோடு நிருத்திக்கொண்டவள் புடவை எடுக்கும் சாக்கோடு திரும்பிக்கொண்டாள். கொழுந்துக்கு மனசு கஷ்டமாய் போனது.. நாதனுக்கு இவ்வளவு நாள் எங்கே போனா இப்போ என்ன திடிர்னு வந்து இருக்கா.. என்று யோசனையுடன் அவளை பார்த்தான்.

அன்னமும் சாந்தியும் அதே எண்ணத்தோடு தான் அவளை பார்த்தார்கள். அவளோ யாரையும் கண்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த வண்ணங்களை சொல்லி அந்த புடவைகளை எடுத்து போட சொல்லி சொல்லிக்கொண்டு இருந்தாள்.

இதுவரை பருவதத்தின் முகத்தில் தென்படாத சிரிப்பு இப்போது மனம் உவந்து சிரிப்பதை கண்டு அனைவருமே அவரை முறைத்தார்கள். ஆனால் அவரும் முகிலை போல யாரையும் கண்டுக்கொள்ளவில்லை.

“என் தம்பி பொண்ணு.. சின்ன வயசுல இருந்து என் கிட்ட தான் வளர்ந்தா.. இப்போ இங்க தான் வேலை பார்த்துக்கிட்டு இருக்கா.. பெரிய உத்தியோகத்துல இருக்கா.. நல்ல புடவையா எடுத்து போடுங்க தம்பி..” என்று சேல்ஸ் மேனிடம் தன் மருமகளை உயர்த்தி பேசியவரை கண்டு மனம் நெகிழ்ந்து போனது முகிலுக்கு.. பருவதம் பேசபேச பழமலை அவளை நக்கலாய் பார்த்துக்கொண்டு இருந்தான்.

“ஆமாண்டி யம்மா இன்னும் நல்லா உபச்சாரனை பண்ணு... இவ்வளவு நாளா எங்க இருந்தான்னே தெரியாது. இப்போ உன் மருமவ வந்த வுடனே தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்சு” கிழவி முகிலை பார்த்து நொடிக்க

“இங்க பாரு கிழவி.. முன்ன மாதிரி நீ என்ன சொன்னாலும் அமைதியா போவேன்னு மட்டும் நினைச்சுக்காத.. வாய் இருக்குன்னு பேசாத சொல்லிட்டேன்.. உன் வேலை என்னவோ அதை பாத்துட்டு போ..” முகில் சொல்ல

“அடிஏய் நேத்து பேஞ்ச மழையில முளைச்ச காளான் நீ.. நீ என்னை அரட்டி வைக்கிறியா.. வாடி நீயா நான்னு ஒரு கை பாத்துடலாம்..” என்று அவளை சீண்டி விட

இருவரையும் ஸ்வாரஸ்யமாக பார்த்துக்கொண்டு இருந்தான் பழமலை..

“அதானே எங்க ரெண்டு பேத்தையும் கோத்து விட்டுட்டு நீ நல்லா வேடிக்கை பாருடா..” முனகியவள் அவனை வெட்டும் பார்வை பார்த்தாள்.

அவனோ அவளை ஆழ்ந்து பார்க்க அவனது பார்வையில் மனம் குற்றம் புரிந்தவளாய் தவித்து போனது. ஆனாலும் அதை மீறி அவனை நேர் பார்வை பார்த்தாள். அவனையும் தான் பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டதே...

ஏதாவது மாற்றம் இருக்கா என்று அவனை பார்த்தாள். ம்ஹும் எந்த மாற்றமும் இல்லை. எப்பொழுதும் பார்ப்பவன் போல தான் இருந்தான். என்ன ஒன்னு எப்பொழுதும் வெற்று மார்புடன் இருப்பவன் இன்று அரை கை வெள்ளை சட்டையில் இருந்தான் அவ்வளவு தான் மாற்றம். என்ன வேலைக்கு போகவும் கொஞ்சம் மினுமினுப்பா இருக்கான் அவ்வளவுதான்.

ஆனா நாம அப்படியா இருக்கிறோம் என்று தன்னை தானே அங்கிருந்த கண்ணாடியில் பார்த்தாள். முன்பிருந்த ஒரு கலை இப்போது தொலைந்து போனது போல அவளுக்கே தெரிந்து இருந்தது. ஒரு வேலை புடவை கட்டினால் அது மறுபடியும் வந்து ஒட்டிக்கொள்ளுமோ என்று யோசித்ததாள்.

அப்போது தான் பழமலை தன்னை ஏளனமாய் பார்த்தது நினைவுக்கு வர “அவனுக்கு சரியான பதிலடி குடுக்கணும்” திட்டமிட்டுக்கொண்டாள்.

அவள் புடவையை எடுத்துக்கொண்டு இருக்கும் போது காதோரம் “என்ன மறுபடியும் ஒட்ட பார்க்குற... இந்த கல்யாணத்தை நிறுத்தி உன் கழுத்துல என்னை தாலி கட்ட வைக்க சதி ஏதும் பண்ண போறியா என்ன” விஷமமாய் கேட்டான் பழமலை.

“இதோடா சாரு அப்படியே ஆண் அழகன்.. பெரிய மெத்த படிப்பு படுச்சு இருந்தா இவங்க அழகுல மயங்கி இந்த  கல்யாணத்தை நிறுத்தி நான் கட்டிக்கிட பார்க்குறேன்.. ரொம்ப நினைப்பு தான் மிஸ்டர் பழமலை... அப்படி ஒரு எண்ணம் இருந்தா தூர தூக்கி போட்டுட்டு வேற வேலை இருந்தா பாருங்க. ஏன்னா நான் ஆள்ரெடி கமிட்டட்” என்றாள் திமிராய்..

Loading spinner
Quote
Topic starter Posted : April 22, 2025 6:42 pm
(@gowri)
Estimable Member

இல்ல புரியல🧐🧐🧐🧐

இவ தானே, அவனுக்கு தகுதி இல்லைனு வீட்ட விட்டு வெளியில் வந்தா????

இப்ப என்ன இவலே இவளோ கோவமா இருக்க????

Loading spinner
ReplyQuote
Posted : April 24, 2025 4:37 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top