பழமலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வர அங்கே முகிலின் அத்தை மாமா அமர்ந்து இருந்தார்கள்.
“இவங்க எதுக்கு இப்போ வீட்டுக்கு வந்து இருக்காங்க..” யோசனையுடன் அவர்களை வா என்று கூட கேட்காமல் நேரே சமையல் அறைக்கு சென்றான்.
அங்கே மத்திய நேர சமையல் தடபுடலாய் நடந்துக்கொண்டு இருக்க பருவதமும் சிவகொழுந்தும் வயலில் இருந்து இவர்கள் வந்த செய்தியை கேட்டு வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
முகில் பரபரப்புடன் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளது பரபரப்பு எரிச்சலை கொடுத்து.. வந்த என்னை திரும்பி கூட பார்க்காம அப்படி என்ன அவங்களுக்கு சமைச்சிக்கிட்டு இருக்கா என்று காண்டானான்..
“ஓய் குளிக்கணும் தண்ணி எடுத்து ஊத்து..” என்று அவளிடம் சத்தமாய் கேட்டான். அவனது சத்தத்தில் திரும்பி அவனை பார்த்தவள் பின் பருவதத்தை பார்க்க
“நான் இங்க பாத்துக்குறேன்.. நீ போய் அவனை கவனி.. இல்லன்னா கூட கொஞ்சம் சாமி ஆடுவான். வந்தவங்க முன்னாடி கண்டிப்பா நம்ம மானத்தை வாங்கி புடுவான்.. நீ போ முகிலு நான் பாத்துக்குறேன்” என்று அவளை பின் பக்கம் அனுப்பி விட
தொட்டியிலிருந்து நீரை எடுத்து குளியல் அறைக்கு ஊற்ற போக, பின்னோடு பழமலையும் உள்ளே நுழைந்து கதவை அடைத்தான்.
அவன் இதை தான் செய்வான் என்று எண்ணியவள்
“விளையாட இது நேரம் இல்ல.. எனக்கு வேலை இருக்கு நான் போகணும்.” என்றாள்.
“போகலாம் ஒன்னும் அவசரம் இல்ல.. என் கைல அடிபட்டு இருக்கு.. சட்டை பட்டனை அவுத்து விடு..” என்று அவளை நெருங்கி நின்றான்..
“காமிங்க..” என்றவள் அவன் நீட்டிய விரலை பிடித்து பார்க்க லேசாய் ஒரு தோள் சிராய்ப்பு.. அதும் ரொம்ப ரொம்ப சின்னதாய்.. அதுக்கு இவன் கொடுத்த பில்டப்பை கண்டு முறைத்து பார்த்தாள் அவனை.
“என்ன இது..”
“அது கிடக்கட்டும்.. எனக்கு கசகசன்னு இருக்கு.. நான் குளிக்கணும். உதவி பண்ணு” என்றவன் அவளின் கைகளை பிடித்து தன் கழுத்தில் வைத்து டையை கலட்ட சொல்ல அவளும் ஒரு முடிவுடன் அவனுக்கு உதவி செய்ய அவனுக்கு குசியாய் போனது..
ஆனால் அவன் அதோடு நிறுத்தாமல் அவளை தன்னோடு குளிக்க வைக்க முயற்ச்சிக்க
“வேணாம் மாமா ப்ளீஸ் எல்லாரும் இருக்காகங்க.. புடவை நனஞ்சா சங்கடமா இருக்கும்..” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்
“எனக்கு அது தான் வேணும்..” என்றவன் தன் ஈர உடலோடு அவளை கட்டி அணைக்க அவனின் ஈரம் முழுவதும் அவளிடம் இடம் பெயர்ந்தது..
வன்மையுடன் அவளிடம் நெருங்க எங்கே தான் அழுது காரியத்தை கெடுத்து விடுவமோ என்று பயந்து அவனுடன் அவளும் ஒன்றினாள்.
அவளது புடவையை லேசாக விலக்கி அவளிடம் கவி பாட தொடங்க அவள் சுவரில் சாய்ந்து கண்களை அழுந்த மூடிக்கொண்டாள். அவளது உணர்வுகள் அவனுள்ளும் புக அங்கே அந்தரங்கத்தின் முதல் அடியை எடுத்து வைத்தார்கள். ஆனாலும் அவன் எல்லை மீறாமல் அவளை ஆள, அவன் கொடுத்த வலிகள் அத்தனையும் சத்தமின்றி தன்னுள் உள்வாங்கி கொண்டாள்.
அதில் அவனுக்கு இன்னும் பித்தம் அதிகமாக இன்னும் அவளை நொறுக்கினான்..
மெல்ல மெல்ல சுயத்துக்கு திரும்பியவனை இழுத்து அவனின் இதழில் தன் இதழை புதைத்து மீண்டும் ஒரு கூடல் இல்லா மோக களியாட்டத்துக்கு அவனை அழைத்தாள்.
அவளது ஒத்துழைப்பை கண்டு மனம் மயங்கியவன் முன்பை விட அதிக வன்மையுடன் அவளது உடலில் ஆங்காங்கே காயம் செய்ய அப்போதும் அவள் சின்ன முனகல் கூட இல்லாமல் தன் உதட்டை கடித்து வலியை பொறுத்துக்கொண்டாள்.
அது கூட அவனுக்கு இன்னும் மோகத்தை கூட்ட அவளிடமிருந்து பிரியவே மனம் இல்லாமல் அவளுடனே கட்டுண்டு இருந்தான்..
மீண்டும் மீண்டும் அவன் அவளை நாட அவனுக்கு வசதி பண்ணி கொடுத்து தன்னுள் அவனை தாங்கியவளின் மனம் கனத்து போய் இருந்தது..
ஒரு வழியாய் அவளை விட்டவன் குளிக்க தொடங்க அவள் வெளியே போக பார்த்தாள். ஆனால் அவன் சம்மதிக்க வில்லை. அவனுக்கு முதுகு தேய்க்க சொல்லி சோப்பு போட சொல்லி என்று அவளை பாதி நனைத்து இருந்தான். அவளுக்கும் அவனது இருப்பு அவசியமாக பட அவள் விருப்பப்பட்டே தான் அந்த வேலைகளை செய்தாள்.
இருவரும் வெளியே வந்து வீட்டுக்குள் செல்ல இருவரையும் ஒரு சேர பார்த்தவர்கள் அதிர்ந்து தான் போனார்கள்..
அதுவும் அவளது ஈர புடவையை கண்டு இன்னுமே அதிர்ந்து தான் போனார்கள். பழமலைக்கு இது தானே வேணும்.. ஆனால் அனைவரது பார்வையிலும் முகில் தான் சங்கடப்பட்டு கூசி குறுகி நின்றாள்.
நாதனுக்கு அந்த காட்சி கடுப்பாய் இருந்தது. கொளுந்துக்கு இருவரும் இவ்வளவு அன்யோன்யமா இருக்காகளா என்று இருந்தது..
பெருமாளுக்கும் புவனாவுக்கும் முகில் கை விட்டு போய்ட்டாளோ என்று இருந்தது..
பருவதத்துக்கு முகிலின் முகத்தில் இருந்த சோகம் கண்டு பழமலை இவளை ரொம்பவும் கஷ்ட படுத்துரானோ என்று இருந்தது.. ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாய் இருக்க இவர்கள் எல்லாருக்கும் ஒரே நேரத்தில் இவள் என்னவள் என்று புரிய வைக்கும் விதத்தில் தான் இவன் இப்படி செய்தான் என்று முகிலுக்கு நன்றாகவே புரிந்து இருந்தது..
கிழவியோ “சாக்க கொற சாக்க கொற” என்று அனைவரையும் பார்த்து சொல்வது போல பாவனையுடன் இருந்தார்.
ஆனால் முகிலுக்கு இனி இவனின் அருகாமை கிடைக்கதே என்று எண்ணி அவனுடன் இந்த கொஞ்ச நேரத்தை செலவிட்டாள். அது பழமலைக்கு தெரியாது..
“பசிக்குது போய் சாப்பாடு எடுத்து வை.. அப்படியே புடவை மாத்திக்க” என்றவன் யாரயும் மதிக்காமல் அவன் அறைக்கு செல்ல முகிலும் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலையை கீழே குனிந்துக்கொண்டு விடுவிடுவென்று அங்கிருந்து போய்விட்டாள்.
பெருமாள் புவனாவை பார்க்க “நம்ம வீட்டுக்கு போய் அவளை பாத்துக்கலாம். இங்க எந்த ராசா பாசமும் வேணாம்.” என்று கண்களிலே சொல்லிவிட்டு எதையும் கண்டுக்கொள்ளாத பாவனையுடன் அம்ர்ந்துக்கொண்டார்கள்.
அனைவரும் சாப்பிட்டுவிட்டு கூடத்தில் அமர்ந்தார்கள்.
அப்போது பெருமாள் நாங்க கிளம்புறோம் என்று சொல்லி “முகில் வாமா போகலாம்” என்று சொல்ல பழமலை வெடுக்கென்று அவளை பார்த்தான்.
“ம்ம் இதோ வரேன் மாமா..” என்றவள் உள்ளே செல்ல
“கிழவி இங்க என்ன நடக்குது..” அவரிடம் காய
“இந்த முகிலு புள்ளைக்கு என்ன ஆச்சுன்னே தெரியல திடிர்னு அவங்க மாமனுக்கு பொன் பண்ணி நான் வரேன் மாமா.. என்னை கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டா.. இதை உனக்கு சொல்லலாம்னு பாத்தா நீ போனை ஆப் பண்ணி வச்சுட்ட காலேஜுக்கு உள்ள யுசு பண்ண கூடாதுன்னு. சரி நீயும் தான் வர நேரேமேன்னு நானும்விட்டுட்டேன்..” என்றவரை கொலை வெறியுடன் பார்த்தவன்
“வந்த உடனே என் கிட்ட சொல் வேண்டியது தானே கிழவி..”
“ஏலேய் நீ வந்தவுடனே தான் அவளை கூட்டிக்கிட்டு குளிக்க போய்ட்ட பொறவு நான் என்ன சொல்றது..”
“சரி திங்கும் போதாவது சொல்ல வேண்டியது தானே..”
“டேய் மீனு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன் டா.. இடையில பேசுனா மீனு முள்ளு தொண்டையில மாட்டிக்கிச்சுன்னா என்ன பண்றது.. அதான் நிதானாமா சொல்லலாம்னு..”
“இந்த விஷயத்தை நிதானமா சொல்ற அளவுக்கு அவ்வளவு முக்கியம் இல்ல இல்லையா..” பல்லைக்கடித்தான்.
“அது இல்லடா ராசா..”
“பேசாத கிழவி.. இரு உன்னை வந்து வச்சுக்குறேன்..” என்றவன் அவளை தேடி போக அங்கே அவள் கிளம்பிக்கொண்டு இருந்தாள்.
“ஏய் எவ்வளவு தைரியம்டி உனக்கு. என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லனும்னு தோணலையா உனக்கு.. நீ பாட்டுக்கு கிளம்பி போறேன்னு இருக்குறவ.. அவ்வளவு தைரியம் வந்துச்சா.. வீட்டை விட்டு ஒரு அடி எடுத்து வச்சு பாரு இந்த பழமலை யாருன்னு தெரியும்.” கர்ஜிக்க
அவனை ஏறெடுத்து பார்த்தவள்
அவனை தன்னருகில் இழுத்தவள் அவனை மேற்கொண்டு பேச விடாமல் செய்தவள்
“நான் போய் தான் ஆகணும் மாமா.. என்னை தடுக்காத..” என்றவளின் உறுதியில் அவளை அப்படியே உதறி விட்டு
“அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டியா... அப்போ நீயும் என் முடிவை கேட்டுட்டு போ.. நீயா போணினா நீயா தான் இந்த வீட்டுக்கு வரணும் முகில். நானா உன்னை தேடி ஒரு போதும் வர மாட்டேன் என்பதை மனசுல வச்சுக்கிட்டு இந்த வீட்டு வாச படியை தாண்டு..” என்றவனை பாத்து
‘அப்படி ஒரு நாள் என் வாழ் நாளில் வரவே வராது.. வரவும் கூடாது..’ என்று எண்ணியபடி அவளை பார்த்து மென்மையாய் சிரித்தவள் அவனிடமிருந்து விலகி கூடத்துக்கு சென்றுவிட்டாள்.
போகும் அவளை கண்கள் சிவக்க மித மிஞ்சிய கோவத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் இருந்தவன் அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் அதித கோவத்துடன் வெளியே சென்றுவிட்டான்.
அதுவரை இருந்த கலக்கம் போய் பெரும் கலக்கம் மனதை சூழ்ந்தது. ஏனோ அங்கிருந்து செல்லவே முகிலுக்கு மனம் வரவில்லை.
அதுவரை பாதுகாப்பாய் இருந்த வலையம் உடைந்து போனது போல இருந்தது. பழமலையை அவளது மனம் தேடியது. இவர்கள் இருவரும் வந்த அந்த நாளையை எண்ணி பார்த்தது. அன்று அவன் செய்த சேட்டையை எண்ணி இன்று அவனை தேடினாள்.
ஆனால் எவ்வளவு தேடியும் பழமலை அங்கு வரவில்லை. அவளது கண்களில் நீர் துளி உருண்டு வழிந்தோடியது.
தன் பையை எடுப்பதற்கு உள்ளே வந்தவளின் கழுத்தில் தன் இரட்டவடை சங்கிலியை போட்டு
“கவனமா இரு தாயி... உனக்கு எங்களை பிடிக்கலைனாலும் எங்க எல்லாருக்கும் நீ மட்டும் தான் உறவு... எந்த நல்லது கேட்டதுக்கும் நீ வராம இருந்துடாத சாமி..” என்று கூறியவரின் தோளில் சாய்ந்து அழுதாள்.
“எனக்கும் உங்களை விட்டா வேற யாரு இருக்கா அத்த..” என்றவள் மனதுக்குள் “நான் ஏதோ ஒரு வேகத்துல இந்த முடிவை எடுத்துட்டேன். ஆனா அதுக்காக நான் ஒவ்வொரு நொடியும் வறுத்த பட்டுக்கிட்டு தான் இருப்பேன்.. இது தான் என் தலை எழுத்து.” என்று தேம்பியவள்
“இனி அவரா வந்து கூப்பிட்டா தான் இந்த வீட்டுக்குள்ள வருவேன் அத்தை இதை அவருகிட்டவே சொல்லிடுங்க” கண்ணீர் வழிய சொன்னவளை இழுத்து அணைத்துக்கொண்டார்.
“ஏங்கண்ணு இப்படியெல்லாம் பேசுற.. அவனுக்கு இருக்குற உரிமை போல தான் உனக்கும்”
“இருக்கட்டும் அத்தை... நான் வரேன்” என்றவள் கிளம்பி சென்றுவிட்டாள். கொழுந்தை பார்த்து அவர் காலில் விழுந்து வணங்கியவளை பார்த்து
“இதெல்லாம் தேவையா மா...” பரிதவிப்புடன் கேட்டவரை கண்டு எதுவும் சொல்லாமல் சிரித்தவள் பாட்டியின் காலில் விழுந்து வணங்கியவளின் கண்களில் கண்ணீர் சிந்தியது... அவளது கண்ணீரை கண்டு கிழவிக்கும் கண்ணீர் வந்தது.
“ஆத்தா... முகிலு..” என்று அவர் பேச வர அவரை பார்த்து வேணாம் என்பது போல தலை அசைத்தவள் அவரை கட்டிக்கொண்டு அழுதாள்.. பின் சுதாரித்து சட்டென்று அவரிடமிருந்து விலகி யாரையும் பார்க்காமல் தன் அத்தை மாமாவோடு கிளம்பி சென்றுவிட்டாள்.
கிட்டத்தட்ட முகிலாம்பிகை சென்று ஒரு வருடம் முழுவதும் முடிவடைந்து இருந்தது.. கிராமத்தில் எதுவும் மாறவில்லை... ஆனால் விலகி வந்தவள் நிறைய மாறி இருந்தாள்.
அட போ மா....ஏன் இப்படி ஒரு முடிவு....
அவன் பாவம் இல்லையா????