“பணத்தை பத்தி நீ கவலை படாதா.. எவ்வளவு ஆனாலும் நான் கட்டிடுறேன். ஆனா எனக்கு உன் கிட்னி” என்று அவர் கேட்க,
“நிச்சயமா குடுக்குறேன் மேடம்” என்றவள் அன்றைக்கே டெஸ்ட் எடுத்து மேட்ச் ஆக, அடுத்த நாள் ஆபரேஷன் வச்சுக்கலாம் என்று முடிவெடுக்கப் பட்டது.
அவளுக்கு அங்கே ஆபரேஷன் செஞ்சு கிட்னி எடுக்கும் நேரம் இங்கே தாய் மகன் இருவருக்கும் மேஜர் ஆபரேஷன் நடந்தது.
ஆபரேஷன் ஆகி மூன்று நாள் கூட படுக்கையில் இருக்கவில்லை சங்கவை. இருவரின் அறை முன்பு கிடையாக கிடந்தாள். அவ்வளவு சோர்வு. ஆனாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவளின் மொத்த வேண்டுதலும் செஞ்சனும் அவனின் தாய் வாசுகியின் மீது மட்டும் தான் இருந்தது.
சொன்னது போல அந்த பெண் இருவரின் மருத்துவ செலவையும் ஏற்றுக் கொண்டார். அதோடு கிட்னி குடுக்கும் பொழுது எழுந்த ஆவண சிக்கல்களை எல்லாம் அவரே பார்த்துக் கொண்டார். மருத்துவ நிர்வாகத்துக்கு பணத்தை குடுத்து சமாளித்து இருந்தார்.
சங்கவையின் இந்த தியாகம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டாள். ஆனால் அவளின் காதலனிடம் இருந்து மறைக்க முடியுமா? எல்லாவற்றையும் தோண்டி துறுவி பார்த்த பிறகு உண்மை உணர்ந்தவனுக்கு சங்கவையின் காதலில் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
மருத்துவமனையில் செஞ்சனும் அவனது தாயும் இருந்த நேரம் இருவரையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டது சங்கவை தான். ஆனால் செஞ்சனின் தாய் மாமன் குடும்பம் வந்து விட அவளை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விட்டு சூழ்நிலையை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்.
செஞ்சனுக்கு விரைவிலே மூன்றாம் நாளே சுயநினைவு வர தன்னருகிலே எப்பொழுதும் குடி இருக்கும் காதலியின் காதலில் மெய்யுருகி உயிர் கரைந்துப் போனான் செஞ்சன்.
ஆனால் தாய் மாமான் வந்த பிறகு அவளை முற்றிலுமாக ஒதுக்கப்படுவதை கண்டு மனதுக்குள் நொந்துப் போனவன், அவளை வீட்டுக்கு போக சொன்னான். ஆனால் அவள் போகவே இல்லை. அவனின் தாய் கண் முழிக்காமல் அவளுக்கு போக மனதே வரவில்லை.
அதனால் அவர்கள் எவ்வளவு உதாசீனப் படுத்தினாலும் அவள் எதையும் கண்டுக் கொள்ளவில்லை. அதுவே செஞ்சனுக்கு பெரும் வேதனையை கொடுத்தது. அனைத்துக்கும் உரிமை பட்டவள் தனித்து யாரோ போல ஒதுக்கி விட்டதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அவனின் மாமாவிடம் எவ்வளவோ சொல்லி விட்டான். ஆனால் அவர் எதையும் காது கொடுத்து கேட்கவே இல்லை.
“நண்பி தானே.. அதுக்குன்னு ஒரு எல்லை இருக்கு தம்பி. அந்த பொண்ணு ஒன்னும் நம்ம குடும்பம் கிடையாது...” முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விட்டார்.
படுக்கையில் இருந்தவனுக்கு அதிகமாக கத்தவும் முடியவில்லை. உடம்பையே அசைக்க முடியாமல் கிடந்தவனால் வேறு என்ன செய்து இருக்க முடியும்.
அவளை ஒதுக்கி வைப்பதை கண் கொண்டு பார்க்கவே முடியவில்லை அவனால். ஒரு வழியாக அவனின் அம்மா வாசுகி கண் திறந்து விட்டார். இனி பயப்படும் படி ஒன்றும் இல்லை என்று தெரிந்த பிறகே அவள் ஆசுவாசம் ஆனாள்.
“இப்பவாவது கிளம்புடி” என்று அவளை கிளப்பி விட்டான். ஏனெனில் அவள் அவ்வளவு சோர்ந்து போய் இருந்தாள்.
“ஏன்டி சோர்ந்து போய் இருக்க?” நலம் விசாரித்த பொழுது கூட அவள் வாயை திறக்கவே இல்லை.
ரொம்ப அழுத்தியும் அவன் கேட்கவில்லை. அதன் பிறகு அவள் தன்னை விட்டு தள்ளி இருப்பதை தாங்க முடியாமல் ஊருக்கு அனுப்பி வைத்தான்.
“நான் நல்லா ஆனதுக்கு பிறகு உன்னை வந்து பார்க்கிறேன்டி... இப்போ கிளம்பு.. உன்னை இப்படி பார்க்க முடியல...” என்று கெஞ்சி கேட்ட பிறகே அவள் ஊருக்கு சென்றாள். இவனும் தாயுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
அது வரை மருத்துவ செலவு எல்லாம் சங்கவையின் அப்பாவும் தன் தாய் மாமனும் தான் பார்த்துக் கொண்டார்கள் என்று எண்ணிக் கொண்டு இருந்தான்.
ஆனால் அடுத்த பரிசோதனைக்கு வரும் பொழுது இவர்களுக்காக பணம் கட்டிய பெண்மணி இவர்கள் இருவரையும் பார்த்து நலம் விசாரித்தார். அதோடு சங்கவையின் உடல் நலத்தையும் பற்றி விசாரித்துக் கொண்டார்.
செஞ்சனின் புருவம் இடுங்கியது.
“அவளை எப்படி உங்களுக்கு தெரியும்...?” ஏனெனில் அவள் சம்மந்தப்பட்ட எல்லாமும் அவனுக்கு அத்துபடி. அப்படி இருக்கும் பொழுது இந்தா பெண்மணி புதிதாக இருந்தார்.
“என்ன தம்பி என்னை தெரியலையா? உங்க மனைவி உங்கக்கிட்ட எதுவும் சொல்லையா?” அதிர்ந்துப் போனார்.
“இல்லயே..” என்றவனுக்கு ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் அவர் சொல்ல, செஞ்சனின் இரத்த நாளங்கள் எல்லாம் வெடித்து சிதறும் நிலையில் இருந்தது.
நெஞ்சை வந்து அடைத்தது அவளது காதல்.. இப்படியும் ஒருத்தியால் காதலிக்க முடியுமா? என்று அதிர வைத்தாள். தன் உறுப்பை விற்று தான் என்னையும் என் தாயையும் காப்பாற்றி இருக்கிறாள் என்று எண்ணும் பொழுதே விக்கிக்கொண்டு வந்தது அவனுக்கு.
இப்படி ஒரு காதல் ராட்ச்ஸியை யாரும் பார்த்திருக்க முடியாது... இனி இந்த அளவுக்கு யாரும் காதலிக்கவும் முடியாது என்று எண்ண வைத்து இருந்தாள்.
அவனது விழிகளில் கண்ணீர் இறங்கியது. தொண்டை எல்லாம் வலி எடுத்தது. அவனால் சங்கவையின் செயலை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நெஞ்சமெல்லாம் தாங்க முடியாத அளவுக்கு சுமையாகிப் போனது.
இந்த விபத்தில் அவன் மொண்டியாகவோ முடமாகவோ மாறி இருந்தால் கூட சற்று நிம்மதியாக இருந்து இருக்கும். காலம் முழுதும் தன்னை இப்படி குற்ற உணர்வுக்கு ஆளாக்கி விட்டுட்டாளே என்று அவளின் செயல் மீது அத்தனை கோவம் வந்தது.
“வெறும் காதலியாக இருக்கும் பொழுதே அவளின் உடற்கூறை தனக்காக கொடுத்தவள், நாளைக்கு இன்னும் வேறு ஏதாவது அபத்தம் ஏற்பட்டால் தனக்காக அவளின் உயிரை கூட விட்டு விட்டுவாள்...” என்ற எண்ணம் அவனை சிந்திக்க வைத்தது.
அந்த எண்ணம் இருக்க இருக்க வலுவடைய தனக்குள் தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்தான். அது தான் பிரிவு...
இனி சங்கவை தனக்கு வேண்டாம். தன் சுயநலத்துக்காக அவளை பலியாடு ஆக்குவது காதல் இல்லையே... அவள் தன்னோடு இல்லை என்றாலும் எங்காவது சென்று எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்தாலே போதும் என்ற காரணத்துக்காகவே தன் உயிர் நேசத்தை, ஆளை கொள்ளும் காதலை கை விட்டு அவளிடம் போய் நின்றான்.
தன் சொல்லுக்கு அவள் பெரிதும் கட்டுப்பட்டு நிற்பாள் என்ற உண்மை தான் அவனுக்கு தெரியுமே. அதனால் பிரிவை கையில் எடுத்தான்.
அவளும் ஏன் என்ற காரணம் எதுவும் கேட்காமல் அவன் சொன்ன ஒரே காரணத்துக்காக தன் காதலை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு அவனை விட்டு விலகி நின்று விட்டாள்.
இடைப்பட்ட வருடங்களில் அவளை அவளுக்கு தெரியாமலே பின் தொடர்ந்தான் செஞ்சன். அவளை காணாமல் அவனுக்கு ஒரு பொழுதும் நகராது. பிரிவு தான். ஆனால் காதலிக்க கூடாது என்று சட்டம் யாரும் இட விடவில்லையே... முன்பை விட அவளை அதிகம் நேசித்தான்.
ஆனால் அதை அவளிடம் கிஞ்சித்தும் காட்டிக் கொள்ளவில்லை. அவனை பார்க்கவில்லையே தவிர அவளுக்கு செஞ்சனின் மீது இருந்த காதல் துளி அளவு கூட குறையவில்லை. நாளுக்கு நாள் கூடி கொண்டு தான் சென்றது.
சேராத காதல் கதையை இருவரின் வீட்டிலும் இருக்கும் பெரியவர்கள் அப்படியே விடாமல் திருமண பந்தத்தில் இணைத்து விட்டார்கள்.
ஆனால் திருமணம் செய்வதற்கு முன் அவளிடம் ஒப்பந்த பத்திரம் ஒன்றை நீட்டினான் செஞ்சன்.
அந்த ஒப்பந்த பத்திரம் என்வென்றால்,
“அவளை போலவே அவனும் அவனது ஆர்கான் ஒன்றை தானம் செய்யணும். அதற்கு அவள் மனப்பூர்வமாக சம்மதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் டைவேர்ஸ் க்கு சம்மதிக்கணும்” என்று கண்டிஷன் போட்டான்.
சங்கவைக்கு அவன் போட்ட கண்டிஷன் பிடிக்கவில்லை. ஆனால் அவனை எப்படியும் மாற்றி விடலாம் என்று எண்ணியே திருமணத்துக்கு சம்மதித்து இருந்தாள். ஆனால் அவனோ மூன்று மாதம் கழித்து இதோ ஆர்கான் டொனேட் பண்றதுக்கு அவளிடம் ஒப்புதல் கையெழுத்து கேட்டு நிற்கிறான். அதற்கு சம்மதிக்காத பட்சத்தில் டைவேர்ஸ் பேப்பரையும் நீட்டினான்.
அதை வாங்கியவள் டைவேர்ஸ் பேப்பரில் கை எழுத்து போட்டாளே தவிர அவனது ஆர்கான் டொனேட் க்கு கை எழுத்து போடவில்லை.
அதற்கு தான் செஞ்சன் அவளிடம் எகிறினான். அவள் இல்லாமல் அவனால் இருக்கவே முடியாது... அது தெரிந்தும் அவள் ஆர்கான் டோநேஷனுக்கு ஒப்புதல் குடுக்காதது அவனை அதிகம் கோவமுற வைத்தது.
அதனாலே இன்று காலையில் அவளிடம் எகிறினான். அவன் என்ன செய்தாலும் சங்கவையை அசைக்க முடியாது என்று எண்ணியவனுக்கு அத்தனை ஆத்திரம். அவனது கணிப்பு எல்லாம் அவளை போலவே தானும் ஒரு ஆர்கானை தானம் செய்து சங்கவையுடன் காலம் முழுவதும் காதலுடன் வாழலாம் என்று எண்ணி இருந்தான்.
ஆனால் அவள் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் விவாகரத்தை தேர்ந்தெடுக்க ஏகத்துக்கும் கோவம் பெருகியது.
இடையில் வாசுகிக்கு இருவரின் ஆர்கியூமென்டும் தெரியவர, இதுவரை யாருக்கும் தெரியாத பல விசயங்களை தெரிந்துக் கொண்டார் அவர்.
இனி என்ன நடக்குமோ... யார் என்ன முடிவு எடுப்பார்களோ...
இவனை என்ன தான் சொல்றது????
இது என்ன ரொம்ப புத்திசாலித்தனமான முடிவுனு நினைக்கரானா என்ன????
விட்டுக்கொடுப்பது அல்ல காதல்
விடாமல் பிடித்துக் கொள்வதே காதல்...
உடலை வருத்தி காத்த காதல் அவளுடையது...
அவளை வருத்தி காதல் கொள்கிறான்
இவன் காதல் தவிப்பு....
காக்க நினைக்கிறேன் காயங்கள் தருகிறேன் காயத்தின் மருந்தாய் காதலையே தருகிறேன்
இங்க பிரச்சனையே அதீத காதல் தான் 🤷♀️
அவ உயிரை காப்பாற்ற பண்ணினதும் இவன் பண்றதும் எப்படி ஒன்னாகும்......