இருவரும் வீடு வந்து சேர அதை ஆத்திரத்துடன் பார்த்தான் நாதன்.. அவனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை இருவரும்.. பழமலைக்கு பிடித்த நாட்டு கோழி வறுத்து ரொட்டி போட அதை ஒரு வித குரோதத்தோடு பார்த்தான் நாதன்.
எல்லாரும் சாப்பிட அமர பழமலைக்கு ஒரு போன் ஒன்னு வர எழுந்து சென்று பேசினான்..
நாதன் வெளியூருக்கு போய் அங்கு தங்கி இருப்பதால் அங்கே ஒழுங்கா சாப்பிட மாட்டான் என்று அவனுக்கு பருவதம் அள்ளி வைக்க அவனுக்கு உதவுவது போல அன்னமும் சாந்தியும் கரி குழம்பை தீர்த்து கட்டினார்கள்.
பருவதத்தையும் பாட்டியையும் அவர்களுடனே உணவு உன்ன சொல்லி முகில் ரொட்டி போட்டுகொண்டு இருந்தாள். இங்கு நடக்கும் கூத்து அவளுக்கு தெரியாமல் போனது..
போன் பேசிவிட்டு வந்தவனோ சாப்பிட போகாமல் பின் கட்டில் வந்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு அவளை பின்னோடு அணைக்க அவனது தொடுகையில் தன் மன்னவன் என்று அறிந்தவள்
“ப்ச் போய் சாப்பிடுங்க..” என்றபடி அவனுக்கு வாகை செய்த படியே ரொட்டியை திருப்பி போட்டுக்கொண்டு இருந்தாள்.
“நீ தான் சாப்பிட விட மாட்டிக்கிறியே” அவளது இதழ்களை பார்த்தபடி கூறியவனின் கைகள் அவளது இடுப்பில் ஊற பட்டென்று அவனது கைகளிலே ஒன்று வைத்தாள்.
“யாராவது வந்துட போறாங்க.. மாமா.. போய் சாப்பிடுங்க”
“நீயும் வா..”
“நீங்க போங்க இன்னும் நாலு தான் போட்டு எடுத்துட்டு வரேன்..”
“ஆபோ உன்னோடு நானும் சாப்பிடுறேன்..” என்றவன் அவளது பின்னங்கழுத்தில் முகம் வைத்து புரட்டியபடி கைகள் அவளது வயிற்றில் கோலம் போட பெரும் அவஸ்த்தையாய் போனது அவளுக்கு..
“மாமா” பல்லைக்கடித்தாள்.
“ப்ச் கொஞ்ச நேரம் டி..” என்றவன் அவளின் கழுத்தில் மோகத்தில் பித்தம் கொண்டவன் சட்டென்று பின்பக்கம் நறுக்கென கடித்துவைத்தான். அதில் கோவம் வர
“என்ன பண்றீங்க நீங்க.. எப்படி தெரியுமா வலிக்குது.. இதென்ன பழக்கம் கடிக்கிறது..” முறைக்க
“ப்ச் போடி” என்றவன் மீண்டும் அவளிடமே இழைந்து நிற்க அவள் தலையிலே அடித்துக்கொண்டாள். உங்களையெல்லாம் அப்படியே விட்டு இருக்கணும்.. போனா போகுதேன்னு காதலிச்சேன் பத்திங்களா என்னை சொல்லணும்..” அவனை திட்டியபடியே மீதம் இருந்த ரொட்டியை போட்டு எடுத்தாள்.
“சரி வாங்க சாப்பிடலாம்..”
“வரேன்.. வரேன்” என்றவன் “ஆமா கொழம்பு சுருக்குன்னு வச்சியா இல்லையா..”
“ஒரு அண்டா மொளாகாவ அறைச்சி வச்சி கொழம்பு வச்சு இருக்கேன்...” கடுப்படித்தாள்.
“ஏய் என்னடி ரொம்ப தான் பண்ற..”
“பின்ன இப்படியா வாய் வெந்து போற அளவுக்கு காரத்தை சாப்பிடுவாங்க.. நானும் குறைச்சி குறைச்சி போட்டா சப்புன்னு இருக்கு.. என்னடி குழம்பு வச்சு இருக்கன்னு திட்ட வேண்டியது..” முறைத்தாள்.
“ஏய் அதெல்லாம் பழகி போச்சுடி..”
“ம்கும் எது தான் பழகல நீங்க..” கடுப்படித்தவள் “ஒழுங்கா இனிமே காரத்தை குறைச்சி சாப்பிடுங்க சொல்லிட்டேன்..” என்றபடி அவனிடமிருந்து விலகி அடுப்படியை விட்டு வெளியே போக அவளை சுண்டி இழுத்தவன்
“சரி நான் காரத்தை குறைச்சுக்குறேன்.. ஆனா” என்று இழுத்தான்.
“ஆனா என்ன..”
“எனக்கு தினமும் இது வேணும்..” என்றான் அவளது இதழ்களை சுட்டி காட்டி. அவன் சுட்டி காட்டிய பொது முகம் சட்டென்று சிவந்து விட்டது அவளுக்கு..
“அதெல்லாம் தான் தானா நடந்துக்கிட்டு இருக்கே..” உள்ளே போன குரலில் சொன்னவளை ஆசையுடன் பார்த்தான்.
“ம்ம் இப்படி முகம் சிவந்து நிக்கிறது கூட அழகா இருக்குடி..” என்றபடி அவளது முகம் நோக்கி குனிய அவனை மறுப்பு சொல்லாமல் தாங்கி கொண்டாள்.
அவனது இதழ் ஒற்று முற்று பெறாமல் போய் கொண்டு இருக்க
“போதும் மாமா போய் சாப்பிடுங்க..”
“சரி வா..” என்றவன் முன்னே போக, போட்ட ரொட்டிகளை எடுத்துக்கொண்டு பின்னே வந்தாள் முகில்.
இருவரும் ஒருசேர வருவதை கண்ட நாதனுக்கு நெருப்பில் இருப்பது தகித்துக்கொண்டு வந்தது..
அதுவும் அவனது முகத்தில் இருந்த புன்னகை அவனை வெட்டி போட்டது.
“இருக்குடா உனக்கு..” கருவியவன் கைகழுவிக்கொண்டு எழுந்து கூடத்தின் இருக்கையில் அமர்ந்து பழமலை சாப்பிடும் அழகை காணும்படி அமர்ந்துக்கொண்டான்.
அதற்குள் பெரும்பாலானோர் உணவு உண்டுவிட்டு எழ பழமலையை உக்கார வைத்து முகில் தட்டை வைத்து ரொட்டியை வைத்து குழம்பு ஊற்றலாம் என்று சட்டியை எடுக்கும் பொது வெறும் சட்டி தான் இருந்தது..
அவ்வளவு குழம்பு வைத்து இருந்தும் இவன் சாப்பிட ஒன்றும் இல்லாமல் போனதை கண்டு சட்டென்று கலங்கி போனது முகிலுக்கு..
இதெப்படி ஒரு நாளும் இப்படி சட்டி கழுவி விட்டது போல இருக்காதே.. என்று எதார்த்தமாக நிமிரும்போது நாதன் ஏளனமாய் பழமலையை பார்ப்பது புரிய
“ச்ச போயும் போயும் சாப்பிடுற சாப்பாட்டுலையா காட்டுவான் இவனது கோவத்தை.. இழிந்தவன் என்பதை மற்றும் ஒருமுறை நிருபிக்கிறான்” எண்ணியவள் பார்வையை விலக்க அன்னமும் சாந்தியும் அவளை அதே போல பார்க்க
“எல்லா கழிசடையும் ஒன்னு சேந்து இருக்குங்க..” முணுமுணுத்தவளுக்கு இப்போ இவனுக்கு சாப்பிட என்ன குடுப்பது என்று கலங்கி போனாள்.
அவளது கலக்கம் கண்டு என்ன என்பதை புரிந்துக்கொண்டவனுக்கு மனம் பாரமாய் போனது.. “ஒன்னும் இல்லடி நீ போய் பாலை காய்ச்சி சக்கரையை எடுத்துட்டு வா.. எனக்கு அது போதுமம்” என்று சொல்ல அப்போது தான் பருவதத்துக்கும் பாட்டிக்குமே குழம்பு இல்லை என்கிற விசயமே தெரிந்தது..
“நீ தனியா எடுத்து வச்சு இருக்குறதா அன்னம் சொன்னாலே முகிலு நீ எடுத்து வைக்கலையா...” பருவதம் கேக்க
பழமலை அவளை என்ன என்பது போல பார்த்தான்..
“எடுத்து வச்சேன்.. ஆனா அவங்க மறுபடியும் எடுத்து சட்டியிலே ஊத்திட்டு “அதென்ன அவனுக்கும் மட்டும் தனியா எடுத்து வைக்கிற.. எல்லாரும் ஒண்ணா தானே உக்காந்து சாப்பிட போறாங்க.. அதுலயே ஊத்து” என்று அவங்களே எடுத்து ஊத்திட்டு போய்ட்டாங்க..” அவனுக்கு கேட்குமாறு சொல்லியவள்
“இல்ல அத்த எல்லாரும் ஒண்ணா தானே உக்கார்ந்து சாப்பிட போறோம் அதுக்கெதுக்கு தனியா எடுத்து வச்சுக்கிட்டுன்னு நான் தான் அதுலையே ஊத்திட்டேன்..” என்று சொன்னாள்.
“இப்போ நீங்க ரெண்டு பெரும் எப்படி சாப்பிடுவீங்க..” பாட்டி விசன பட
“ஒரு நாள் தானே பாத்துக்கலாம் பாட்டி..” என்றவள் எழ சாப்பிட்டுக்கொண்டு இருந்த கொழுந்து தன் தட்டில் இருந்த கறியை எடுத்து பழமலையின் தட்டில் வைத்து சாப்பிடுயா..” என்று சொல்ல முகிலுக்கு கண்கள் கலங்கியது.. பழமலையை பார்த்தாள். அவன் அவனது தந்தையை பார்த்துக்கொண்டு இருந்தான்..
“ஆத்தா முகிலு...”
“மாமா”
“இந்தா நீயும் சாப்பிடு..” என்று இருவரது தட்டிலும் கறியை வைத்துவிட்டு எழுந்து கைகழுவ செல்ல
“நீங்க சாப்பிடுங்க மாமா நான் தனியா பிரிஜ்ல கறி எடுத்து வச்சு இருக்கேன்.. நிமிசத்துல செஞ்சுடுவேன்..” என்றவள் தன் தட்டில் இருந்ததை எடுத்து பெரிய மாமனுக்கு வைத்தவள்
ஏற்க்கனவே வேக வைத்து எடுத்து வைத்து இருந்த கறியை எடுத்து கிரேவி மாதிரி செய்து பத்து நிமிடத்தில் எடுத்து வந்து இருவருக்கும் பரிமாற நாதனின் முகம் விழுந்துவிட்டது..
மன நிறைவுடன் இருவருக்கும் பரிமாற
“ஆத்தா நீயும் சாப்பிடு..” என்று முகிலையும் சாப்பிட சொன்னார் கொழுந்து..
“நீங்க ரெண்டு பெரும் சாப்பிடுங்க மாமா.. பொறவு நான் சாப்பிட்டுக்கிறேன்..” என்று பரிமாற பொன்னியும் பருவதமும் அந்த காட்சியை நிறைவுடன் பார்த்தார்..
“ஆத்தா நீ போய் உக்காரு நான் போடுறேன் உங்க மூணு பேத்துக்கும்..” கிழவி வந்து பரிமாற பருவதம் தண்ணி எடுத்துக்கொண்டு வந்து அவர்களை அருகிலே அமர்ந்துக்கொள்ள அவருக்கு ஊட்டிவிட்டாள் முகில்..
“ஏய் நீ மட்டும் தான் ஊட்டுவியா நானும் தான் ஊட்டுவேன்” என்று சொல்லி “ஆஆஆ காட்டு கிழவி..” என்று பொன்னிக்கு பழமலை ஊட்டிவிட நாதன் தான் தனி பட்டு போனான்..
சிவக்கொழுந்துக்கு மனம் அமைதி அடைந்தது... என்ன பேசினாலும் மகனுக்கு இல்லன்னு வரும்போது அவரால் தங்கிக்கொள்ள முடியவில்லை..
அன்றைய பொழுது அப்படி போக அடுத்த நாள் வேறு மாதிரி விடிந்தது..
சிவகொழுந்துக்கு முன்னாடி நாதன் போனில் ஆங்கிலத்தில் பேச அதை பார்த்துக்கொண்டு இருந்த கொழுந்து திரும்பி பழமலையை பார்த்தார்.. அவரது பார்வையில் இருந்த வலி பழமலைக்கு நன்கு புரிய நிமிர்ந்து பார்க்கவில்லை அவன்.. டீ எடுத்துக்கொண்டு வந்த முகில் இந்த காட்சியை கண்டு நாதனை தான் முறைத்தாள்.
எப்போதும் நாதன்ஒரு படி மேல் என்பது போல காட்டிக்கொண்டு இருக்க, அதை கண்டு பழமலை விசன படுவதும், அவன் கீழ் நிலையில் இருக்கிறான் என்று சிவக்கொழுந்துக்கு காட்ட முயற்சி செய்வதும் எப்போதும் நடப்பது தான். ஆனால், அதை எப்போது உண்ர்ந்துக்கொண்டாளோ முகில் அப்போதிருந்து நாதனின் மீது பொல்லா கோவம் வந்தது..
நாதன் பேசிக்கொண்டே இருக்க பழமலை எழுந்து சென்றுவிட்டான். அவன் பின் பக்கம் போக வேகமாய் இருவருக்கும் டீயை கொடுத்தவள் அவனிடம் விரைந்தாள்.
அங்கு கயித்து கட்டிலில் படுத்தவன் தென்னை மரத்தை வெறித்துக்கொண்டு இருந்தான்.
“எதுக்கு காலையிலேயே இவ்வளவு சோகம்..”
“ப்ச் அதெல்லாம் ஒன்னும் இல்லடி... அப்பாவ பாத்தனா அதான் கொஞ்சம் கஷ்டமா போச்சு..”
“உடனே எப்படி மாத்த முடியும் மாமா.. கொஞ்ச நாள் ஆகும் இல்லையா..”
“ஆகும் தான் ஆனா அவரு கஷ்ட படுறத பாக்கும் போது மனசு வலிக்குதுடி”
“ஏன் மாமா நீ ப்ரைவேட்டா படிக்கிற மாதிரி ஏதாவது ஏற்பாடு செய்யவா..”
“பண்ணலாம் தான்...” என்றவன் கண்கள் பளிச்சிட “அப்ளிகேசன் போடுடி..” சொல்ல
“எதுக்கு பாடம் படிக்கவா இல்ல பாடம் சொல்லி தரவா..” நக்கலாய் கேட்டாள்.
“ப்ச் அதான் தெருஞ்சுகுட்டீள்ள” என்றான் புன்னகையுடன்..
“சரி ஓகே எந்த காலேஜ் போடட்டும்..”
“நம்ம ஊற ஓட்டுன பக்கத்துலையே ஒரு அக்ரி காலேஜ் இருக்கு.. அதுல போடு..”
“அப்போ ஐடி பீல்டு ஜாப்..”
“அது எப்போதும் போல நைட் ல பாத்துக்குறேன்..”
“ம்ம்ம் சரி..” என்றவள் மகிழ்வுடனே அவன் பிடுங்கி வைத்திருந்த தன் மடி கணினியை எடுத்து அவனுடைய ரெஸ்யுமை அனுப்பி வைத்தவள் அவனிடம் தம் சிம்பிள் காண்பித்தாள்.
“என்ன விட நீ ரொம்ப ஆரவமா இருக்குற போல..” அவளை வம்பிழுத்தான்.
“என் புருசனும் நாலு பேரு மதிக்கிற மாதிரி வாழுறத நான் பார்க்க வேணாமா..” என்று கேட்டவளை இருக்க கட்டிக்கொண்டவன்
“கண்டிப்பா உன்னை பாக்க வைப்பேண்டி.. எனக்கு அதை விட வேற வேலை என்ன சொல்லு... ஆனா நீ தான் உன் மாமன் வீட்டுக்கு போறியே..” நெகிழ்வாய் ஆரம்பித்து கடுப்புடன் மொழிய..
“அடங்க மாட்டீங்களா.. இப்போ தான் ஓரளவு மலை இறங்கி வந்தீங்க.. அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா.. ஒழுங்கா வேலைய பாருங்க.. மறுபடியும் ஆரம்பிக்காதீங்க சொல்லிட்டேன்..”
“ஏய் என்னடி ரொம்ப தான் பண்ற.. நீ எப்படி இந்த வீட்டை விட்டு போறன்னு நானும் பாக்குறேன்.. நீ வாச படிய தாண்டி பாரு காலை ஒடச்சி கைல குடுக்குறேன்..” கோவமாய் கத்த
“எப்படி போறேன்னு பொறுத்து இருந்து பாருங்க.. எப்போ பாரு இதையே சொல்லிக்கிட்டு.. நான் மட்டும் என்ன விருப்பபட்டா போறேன்.. வர சொல்லி சொல்லும் பொது மரியாதைக்காகவாது போறது இல்லையா..” அவளும் பதிலுக்கு கடுப்படித்துவிட்டு செல்ல, போகும் அவளை முறைத்து பார்த்தான் பழமலை.
ஏதே ஐடி ஜாப் ஆ????
இவன் வேலை பார்க்கரனா என்ன????