அவள் கோவ பட எதுக்கு என்று தெரிந்தாலும் அவளை அதற்க்கு மேல் நோண்டாமல் வேலை செய்தான்.. கொழுந்து இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக சென்றுவிட்டார்.
பருவதம் என்னடி உன் மாமன் உன்னை சுத்தி வரான் அங்குட்டு போக சொல்லவா என்று கேட்க
“அதெல்லாம் வேணாம் அத்தை..” என்றவள் அடிக்கடி அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துக்கொண்டாள்.
அவளது பார்வையை தாங்கி நின்றவன் கிழவி காதில் குசுகுசுத்தான்..
“கிழவி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உன் பேத்திக்கிட்ட இருந்து என்னை காப்பாத்து” என்றான்.
“நீ செஞ்சு வச்ச வேலைக்கு நல்லா அனுபவி.. எப்படியெல்லாம் அவளை படுத்தி வச்ச..”
“நீ மட்டும் யோக்கியம் மாதிரி பேசுற.. நீயும் தான் அவள போட்டு படுத்தி இருக்குற ஞாபகம் வச்சுக்க..”
“வயசானவன்னு என்னை விட்டாலும் விட்டுடுவா டா..”
“ம்கும் அவள நீ ரொம்ப குறைச்சி எடை போடுற.. சிலம்பத்தை எடுத்து விலாசுனா தெரியும்..” என்று இருவரும் வம்படித்துக்கொண்டே இருந்தார்கள்..
வீட்டிலோ நாதன் அதிர்ச்சியாய் அமர்ந்து இருந்தான்.. சாந்தி இப்படியெல்லாம் பேசுவான்னு அவன் நினைத்தது கூட பார்த்து இருக்கவில்லை..
சாந்தி பேசிவிட்டு இது தான் என் முடிவு.. என்பது போல போய் விட அன்னம் தான் நாதனிடம் பேசினார்.
“நாதா.. என் பொண்ணு விருப்பம் தான் என்னோட விருப்பமும்.. எப்படியும் பழமலையை மீறி உன்னால முகிலை நெருங்க முடியாது.. அதே போல முகில் இருக்குற இருப்புக்கு அவ உன் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டா.. அப்படியிருக்கும் போது நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவங்க முன்னாடி வாழ்ந்து காமிங்களேன்..” என்று தந்திரமாக பேச
“முகிலை என்னால மறக்க முடியாது அத்தை..” என்றான் உறுதியாக..
“ப்ச் அவல மனசுல நினைச்சிக்கிட்டே இருந்தா எந்த பிரயோசனமும் இல்லை.. ஒழுங்கா என் மகளை கட்டிக்கோ.. அப்படி கட்டிக்கிட்டா என் சொத்து பூரா உனக்கு தான் வரும்.. இப்போ உங்க அப்பா வச்சு இருக்குறது மாதிரி அதே அளவு என்கிட்டே இருக்கு.. சொத்துக்கு சொத்தும் ஆச்சு.. அவங்களை பலிவாங்கி ஒன்னும் இல்லாம ஆக்கி ரொம்ப சுழுவா ரெண்டு தோக்க வச்சுடலாம்..”
“நல்லா யோசி இன்னும் ஆறு மாசத்துல கலியாணத்தை வச்சுக்கலாம்..” என்று ஒரே போடாக போட நாதன் குழம்பி போனான்.
என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்து இருந்தான்..
வயலில் பொழுது போகும் வரை வேலை செய்தவர்கள் கிணற்றில் இறங்கி பெண்கள் மூவரும் குளித்துவிட்டு வெளியேற ஆண்கள் குளிக்க சென்றார்கள்.
“நீங்க வீட்டுக்கு போங்க அத்தை.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..” என்றவள் சிலம்பு சுத்தும் இடத்துக்கு சென்று காத்திருந்தாள்.
பழமலையும் குளித்துவிட்டு அவ்விடம் வர அவனை முறைத்து பார்த்தாள்.
“ப்ச் இப்போ எதுக்குடி முறைச்சுக்கிட்டு இருக்குற..”
“பின்ன முறைக்காம என்னை என்ன பண்ண சொல்றீங்க.. இவ்வளவு முட்டாளா இருக்கீங்களே... உங்களை வச்சு நான் எப்படி குடும்பம் நடத்துறது..”
“ப்ச் இதுக்கும் அதுக்கும் என்னடி சம்மந்தம்..”
“எவனோ சொன்னான்னு படிச்ச படிப்பை விட்டுட்டு குடுச்சுக்கிட்டு பொண்ணுங்களை வம்பிழுத்துக்கிட்டு பெரியவங்களை மதிக்காம இப்படி வளர்ந்து இருக்கீங்களே நான் கோவ படாம எப்படி இருக்கிறது..”
“முகி” என்றான்.
“சரி அதையெல்லாம் விடுங்க.. இத்தனை வருசமா மாமா மனச எவ்வளவு வேதனை படுத்தி இருப்பீங்க.. அதுக்கெல்லாம் என்ன செய்ய போறீங்க.. அவங்களை எப்படி சகசமா மாத்த போறீங்க... நம்ம வீட்டுல மட்டும் இல்ல ஊர்ல உங்களை குடிக்கிறவன் ன்னு தான் சொல்றாங்க.. அப்படி இருக்குற பேரை மாத்த முடியுமா..
சொல்லுங்க..
உங்களுக்கும் எனக்கும் தெரியும் நீங்க உத்தமமானவன் என்று ஆனா.. ஊரு உலகம் ஏன் உங்களை பெத்தவங்க கூட நீங்க பொறுக்கின்னு தானே நினைச்சி இருக்காங்க.. எங்க அப்பா அம்மா இல்ல.. இதே இது எங்க அப்பா அம்மா உயிரோட இருந்து இருந்தா உங்களுக்கு என்னை கட்டி குடுத்து இருப்பாங்களா சொல்லுங்கங்க..
அதுவும் இல்லாம ஏதோ உங்களை நான் புருஞ்சுக்கிட்டேன் அப்படின்றதுனால எனக்கு உங்களை என்னால ஏத்துக்க முடியுது.. எனக்கு உண்மை தெரியலனா நீங்க என்ன பண்ணி இருப்பீங்க.. சொல்லுங்க” வேதனையுடன் கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன்
“உன் நினைப்புல இப்படியே இருந்து செத்து போய் இருப்பேண்டி..” என்றவனை கண்டு அழுகை தான் வந்தது முகிலுக்கு..
“மாமா” என்றாள் தவிப்பாக..
“நிஜமா தான் கண்ணம்மா நீ எனக்கு கிடைக்கலன்ன நான் இப்படியே தானிருந்து இருப்பேன்.. நாதன் நல்லவன் தாண்டி.. அவன் உனக்காக தான் இப்படி எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கான்”
“நானும் அவங்களை குறை சொல்லல.. ஆனா அவங்க பண்ண ஒவ்வொரு செயல்லயும் உங்க வாழ்க்கை பட்டு போய் நிக்குதேன்னு தான் வறுத்த படுறேன்.. அந்த வகையில என்னால நாதனை மன்னிக்கவே முடியாது.. உங்களையும் தான்.. அவன் சொன்னான்னு இத்தனையும் செஞ்சிங்க பாருங்க.. உங்களை மாதிரி ஒரு முட்டாளை நான் பார்த்ததே இல்லை.. அதே மாதிரி உங்களை என்னால மன்னிக்கவும் முடியாது..
நான் நாளைக்கே என் மாமா வீட்டுக்கு போறேன்..” என்றாள்.
“நிஜமாவே உன்னை கொன்னுடுவேண்டி..”
“கொல்ல வேண்டியது நான் தான்” முறைத்தாள்.
“என்னை விட்டு போகாதடி...”
“இல்ல நான் கண்டிப்பா போய் தான் தீருவேன்,.”
“நீ எப்படி என்னை மீறி போறேன்னு பாத்தர்றேண்டி..”
“எனக்கொண்ணும் உங்க மேல பயம் கிடையாது.. மாமா கிட்ட சொன்னான்னா அவரு உங்களை டீல் பண்ணிக்குவாரு”
“ஏய் இந்த விசயத்துல நீயும் நானும் மட்டும் தான்.. எதுக்கு தேவை இல்லாம அவரை இழுக்குற.. என்னை ஜெயிச்சுட்டு நீ உன் மாமன் வீட்டுக்கு போடி..” என்று கம்பை எடுத்து அவளிடம் வீசிவிட்டு அவன் ஒன்றை எடுத்துக்கொண்டான்.
அவளும் அவனது பந்தையத்துக்கு தலை அசைத்தவள் லாவகமாக கம்பை சுழற்றினாள்.
அவனும் கை தேர்ந்த வித்தையை அவளிடம் காண்பிக்க போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்தது.. அவனை ஜெயிக்கணும் என்று இவள் ஆக்ரோசமாக சண்டை போட, அவனோ அவளை தோற்கடிக்க வேண்டும் என்று சண்டை போட, இருவரது காலடியின் நகர்விலும் புழுதி பறக்க ஆரம்பித்தது..
இலக்கு ஒன்றே என்பது போல இருவரும் சண்டை போட, புடவை கட்டிக்கொண்டு அழகாய் சண்டை போட்டுக்கொண்டு இருந்தவளை கண்டு மனம் சற்றே கிறங்கி போனது.. அதோடு இன்று காலை அவனுக்காக நாதனிடம் சண்டை போட்டது கண் முன் வர அவளை அதித காதலோடு பார்த்தான். அவனது கண்களை கண்டால் தானே அவனது உணர்வு புரியும்.. அவளது கவனம் முழுவதும் அவன் சுழற்றும் கம்பிலே இருக்க மிக எளிதாக அவனை தடுத்துக்கொண்டே வந்தாள்.
அவளை தன் கைக்குள் கொண்டு வர மனம் துடிக்க தன் கம்பை ஒரு சுழற்று சுழற்றி அவளின் சேலை விலகிய இடையில் சொருகி குறுகுறுப்பு ஊட்ட சட்டென்று திகைத்து பார்த்தாள் அவனை..
பின் அவள் சுதாரிக்கும் முன் மீண்டும் கம்பை அவளது மார்புக்கருகே கொண்டு வந்து வயிற்றில் நிலை நிறுத்த அந்த தொடுகையில் அவளுக்கு ஆத்திரம் வந்தது..
வேகமாய் அவனது கம்பை தட்டி விட பார்த்தாள். அனால் அதற்குள் அவளின் பின் புறம் தன் கம்பி கொண்டு சென்று தன்னோடு அவளை இழுக்க ஒரே இழுவையில் அவன் மார்போடு முட்டினாள் முகில்..
“ப்ச் இவனை விளையாட சொன்னா இப்போ தான் சரசம் பண்ணிக்கிட்டு இருக்கான்..” கடுப்புடன் அவனை முறைத்து பார்த்தாள்.
அவளை காதலோடு பார்த்து கண் சிமிட்டியவன் தன் உதடுகளை குவித்து அவளுக்கு காற்றிலே முத்தம் குடுக்க அதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த நாதனுக்கு பத்திக்கொண்டு வந்தது.
எல்லோரும் வீடு வந்து சேர்ந்த பின்னும் இவர்கள் இருவரும் வராமல் போக என்ன தான் செய்கிறார்கள் என்று வேவு பார்க்க வந்தான் நாதன்.
வந்தவனுக்கு இருவரும் சண்டை போடும் காட்சி தெரிய சற்றே குதுகலாமாக தான் இருந்தான். ஆனால் பழமலை அவளை சீண்டி விட்டு முத்தம் கொடுப்பதை கண்டு காண்டாகி போனது..
அவனது வருகையை கண்ட முகிலுக்கு எரிச்சலாய் போனது. அவளது முகத்தில் தெரிந்த எரிச்சலை கண்டு “என்ன ஆச்சுடி..” மெல்ல கேட்க
“அவன் வந்து இருக்குறான்..” என்று கடுப்படிக்க
“அவனை விடு.. நீ என்னை பாரு..”
“நீங்க முதல்ல அவனை போக சொல்லுங்க.. எரிச்சலா இருக்கு”
“அப்போ நீ மாமா வீட்டுக்கு போக மாட்டேன்னு சொல்லு..”
“யோவ் எதுக்கும் எதுக்கும் யா முடுச்சு போடுற.. ஒழுங்கா அவனை போக சொல்லு..”
“முடியாதுன்னு நீ சொல்லு.. நான் இப்பவே அவனை விரட்டி அடிக்கிறேன்..”
“ப்ச்.. படுத்தாதீங்க மாமா..”
“சரி அப்போ என்னோட போட்டி போடுறத நிறுத்தி தோல்வியை ஒத்துக்கோ..”
“அடேய் ரெண்டுமே ஒண்ணுதாண்டா மாமா..”
“அதா தான் சொல்றேன்.. நீ ஒத்துக்கோ..”
“ஒன்னும் தேவை இல்லை. அவனை விரட்ட எனக்கு தெரியும்.. கூடவே நான் என் மாமா வீட்டுக்கு போறதும் உறுதி..” என்றவள் பழமலையை இழுத்து தன்னோடு நெருக்கியவள் அவனது முகம் நோக்கி நிமிர்ந்து அவனின் இதழில் தன் இதழை புதைத்து முத்த கவி படிக்க அதை பார்க்க நாதனுக்கு மனம் வன்மத்துடன் கொதித்தது.. தன் காதலி இன்னொருவனுடன் இளைவது கண்டு போருக்க முடியாமல் விலகி சென்றுவிட்டான்.
அவன் போவதை உறுதி செய்த இருவரும் அந்த முத்தத்தில் ஆழ்ந்து போனார்கள்..
பழமலை இன்னும் ஒரு படி முன்னேறி அவளிடம் அத்து மீற அவனது தொடுகையை தன்னுள் உள் வாங்கியவள் அவனுக்கு ஒத்துழைப்பது போல அவனது தலையை பற்றி தன்னுள் அவனை அடக்க பழமலை கிறங்கி போனான்..
தன் முகத்தை அவளது மென்மையை புதைஹ்த்து உணர தொடங்க ஆரம்பித்தவனை சட்டென்று தள்ளிவிட்டு அவனது சிலம்பத்தையும் தன் சிலம்பத்தால் தள்ளிவிட்டு அவனை ஒரு பார்வை பார்க்க அவன் தன்னையே நொந்துக்கொண்டான்.
“ச்ச இப்படி சருக்கிட்டியேடா” பல்லைக்கடித்தான் தன்னை எண்ணி.
“இப்போ நான் போகலாமா மிஸ்டர் பழமலை..”
“ஏய் இதெல்லாம் போங்காட்டம் டி..”
“ப்ச் எனக்கு அதெல்லாம் தேவை இல்லை.. நான் தான் வின் பண்ணேன்.. சோ நான் நாளைக்கு கிளம்புறேன்.. பின்னோடு அங்க வந்து நின்னுநீங்க தொலைச்சுடுவேன்” எச்சரித்துவிட்டு அவள் செல்ல
“அதான் போறதுன்னு முடிவு பண்ணிட்டீள்ள பொறவென்ன.. என்னை கவனிச்சுட்டு போடி..” என்றவன் அவளை இலுத்துக்கொண்டு மறைவான இடத்துக்கு செல்ல அவனோடு வர முரண்டு பிடித்தாள்.
திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் அப்படியே தோளில் தூக்கி போட்டுக்கொண்டு போக அவனது முதுகிலே அடித்தாள்.
“விடுங்க..”
“முடியாதுடி.. என் காதலை நீ உணர்ந்த பொறவு என்னை என் காதலை நீ இன்னும் அங்கிகரிக்கவே இல்லை.. அதனால எனக்கு நீ வேணும்” என்றவன் அந்த அழகான புதரில் கிடத்தி அவள் மீது படர
அவனது தேவையை உணர்ந்து அவனை தன்னுள் தாங்கியவள் மென்மையாய் அவனது தலையை தடவி கோதி விட அவனுக்கு மூச்சு முட்டியது அவளது ஒத்துழைப்பில்..
“முகி...”
“சொல்லுங்க மாமா..”
“போகாதடி..”
“இல்ல மாமா நான் கொஞ்ச நாள் அங்க போய் இருந்துட்டு பொறவு வந்துடுவேன்.. அதோட நாதனை இங்க பார்த்துக்கிட்டு இருக்குறது கடுப்பா இருக்கு.. உங்க பூந்திக்கும் அவருக்கும் கல்யாணம் ஆகட்டும்.. நானும் கொஞ்ச நாள் வேலை பாக்குறேன்.. கூடவே” என்று இழுத்து நிறுத்த
“என்னடி..” என்று அவளிடமிருந்து நிமிராமலே கேட்க
“நீங்களும் உங்க அப்பா அம்மாக்கிட்ட நல்ல பேரு எண்டுங்க மாமா..”
“இது இப்போ அவசியமா டி..”
“கண்டிப்பா மாமா.. என் புருஷன் யாருக்கும் சளைச்சவன் இல்லன்னு தெரியனும்.. கூடவே உங்களை பத்தி பெரிய மாமா நல்லதா நினைக்கணும்.. அவருக்கும் அவோரடா சந்தோசத்தை திருப்பி குடுக்கலாமே...”
“புரியலாடி..”
“ப்ச் இத்தனை நாள் எத்தனை பேர் உங்க அப்பா கிட்ட உங்களை தவறா பேசி இருப்பாங்க.. அதெல்லாம் உங்க அப்பாவுக்கு அவமானம் தானே.. அதுல அவர் மனசு எவ்வளவு கஷ்ட பட்டு இருக்கும்.. அதை நாம் தானே சரி செய்யணும்.. அந்த கடமை நமக்கு இருக்கு.. நாதனை பத்தி நான் சொல்ல சொல்லல.. ஆனா உங்க மதிப்பு எனக்கு முக்கியம் மாமா.. அவர் மனசுல நீங்க இடம் பிடிக்கணும்.. அவருக்கு அந்த சந்தோசத்தை குடுக்கலாமே..” என்றவளை காதலுடன் பார்த்தான்.
“யாருக்காக இல்லாட்டியும் உனக்காக பண்ணுவேண்டி..” என்றவனின் கன்னத்தை பிடித்து கொஞ்சியவள்
“எனக்கு தெரியும் மாமா நீ கண்டிப்பா செய்வன்னு..” அவனது முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியவள் அவனது மார்பில் முகம் புதைத்து சிறிது நேரம் ஆழமான மௌனத்தில் இருந்தவர்கள் ரொம்பவும் இருட்ட ஆரம்பிக்க கிளம்பி சென்றார்கள்.. நாதன் அங்கு வீட்டில் ஆத்திரத்துடன் காத்திருந்தான்..
இந்த நார பைய நாதன் எல்லாம் என்ன ஜென்மமோ😤😤😤😤😤
இவன் அவ சொல்லற மாதிரி, சரியான லூசு தான்....
அந்த கொரங்கு சொன்ன இவன் அப்படியே கேட்கணும்னு என்ன அவசியம் இருக்கு....
என்ன தான் காதல் அப்படினு சொன்னாலும்....இப்படியா அவன் வாழ்க்கையை கெடுத்துப்பான்