தான் செய்தவற்றை கிழவியின் மடியில் படுத்துக்கொண்டு அவரது சங்கிலியை ஆட்டியபடி சொல்லிக்கொண்டு இருந்தவனை கண்டு மனம் கனத்து போனது அவருக்கு..
“என்ன ராசா இதெல்லாம்..” வருத்தபட்டவரை கண்டு
“வேற என்னை என்ன பண்ண சொல்ற கிழவி.. எனக்கு வேற யோசனை தெரியல.. ஏற்க்கனவே என் பேரு கெட்டு போய் தானே இருக்கு. அவ கிட்ட இப்போ என்ன புதுசாவா கெட்டு போகுது..” என்றவனை வேதனையுடன் பார்த்தார்.
“ராசா..”
“உனக்கு மட்டும் தான் கிழவி நான் ராசா.. என்னை பெத்தவங்களுக்கு கூட நான் குடிகாரன் தான்..” என்றவன் எழுந்து வெளியே செல்ல பொன்னியம்மாவின் கண்கள் கலங்கி போனது.. மாலை நேர தேனீரை எடுத்துக்கொண்டு முகில் அவரிடம் வர அவரது கலங்கிய கண்கள் கண்டு உள்ளம் சுருக்கென்றது..
ஒன்றும் சொல்லாமல் அவரிடம் தேனீரை நீட்டினாள்.
நிமிர்ந்து அவளை பார்த்தவர் “எனக்கு வேணாம் எடுத்துட்டு போ” என்று ஆயாசமாய் தூணில் சாய்ந்துக்கொள்ள, கொழுந்து உள்ளே வரவும் சட்டென்று தன் தளர்ந்த மனதை மாற்றிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவர்
“ஏட்டி இன்னைக்கு ராவு என்ன சமைக்க போறவ.. என்ற மக, மக வீட்டு பேத்தி என்ற மூத்த பேரன் எல்லாம் வந்து இருக்காக ஒழுங்கா நீயும் உன் அத்தை காரியும் சமைங்க.. ரெண்டு பேரும் வெட்டி அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்காதீங்க.. போங்க போய் வேலைய பாருங்க..” என்றவர் அவளின் கையிலிருந்த தேநீரை வாங்கிக்கொண்டார்..
கொஞ்ச நேரம் முன் அவரிடம் இருந்த தளர்வு.. சொட்டு நீர் கூட குடிக்காமல் விரதம் காப்பது போல இருந்த தோற்றம் நொடியில் மாற்றிக்கொண்டு தன் மகனுக்காக மாறி போன அந்த பெரியவரை கண்டு உள்ளுக்குள் அவ்வளவு யோசனையும் கூடவே ஒரு நெகிழ்வும் வந்தது..
அன்னமும் சாந்தியும் எந்த வேலையும் செய்யாமல் ஒப்பேத்திக்கொண்டு இருக்க அதை பார்த்துக்கொண்டு இருந்த பருவதத்துக்கு பத்திக்கொண்டு வந்தது..
“ம்கும் இவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா தான் இருக்கும்.. வயலுக்கு வந்த போது கூட இருவரும் செருப்பை கூட கழட்டாமல் ஏதோ வானத்திலிருந்து வந்தது போல சீன் போட்டு வயலில் இறங்க கூட யோசித்ததை கண்டு காண்டாகி போனார்.
மெல்ல திரும்பி தன் மருமகளை பார்த்தார். நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்த படி சப்பாத்தி போட்டுக்கொண்டு இருந்தவளை கண்டு நிறைவாய் இருந்தது..
அந்த நேரம் பழமலையின் சத்தம் கேட்க இருவரும் வெளியே வந்து எட்டி பார்த்தார்கள்..
அங்கே தண்ணி போட்டுக்கொண்டு வந்து அலப்பறை செய்துக்கொண்டு இருந்தான். கொழுந்துக்கு வேதனையாய் இருந்தது... அவர் எழுந்து உள்ளே சென்றுவிட
“ஏண்டா தம்பி இப்படி குடிச்சு உடம்பை கெடுத்துக்குற.. அப்பா பாருடா மனசு சங்கட பட்டுக்கிட்டு உள்ளே போறாரு.. இந்த கருமத்தை விட்டு தொலைனா ஏண்டா கேக்க மாட்டிக்கிற..” கேட்டவனை கண்டு “உஷ்..” இப்படி பேசுநீனா எனக்கு போதை இறங்கிடும் அதனால இப்படி அட்வைஸ் பண்றத விடு.. அப்படியே கை தாங்களா கூட்டிட்டு போய் அந்த ஈஸி சேர்ல படுக்க வை..” என்றவன் அவனது தோளில் தொங்க அன்னமும் பூந்தியும் முகத்தை சுழித்துக்கொண்டு அவ்விடம் விட்டு செல்ல அதை பார்த்துக்கொண்டு இருந்த முகிலுக்கு கண்கள் கலங்கியது.. வேகமாய் திரும்பி பருவதத்தை பார்க்க அவருக்கும் கண்கள் கலங்கி இருந்தது..
“எதுக்குடா எரும இப்படி பண்ணி வைக்கிற..” புலம்பிய நேரம் பருவதம் திரும்பி சமையல் அறைக்கு செல்ல முகிலும் உள்ளே சென்றாள்.
குருமா வைத்துக்கொண்டு இருக்க “டேய் அண்ணா கை தாங்களா என்னை புடிடா..” பழமலை எழுந்து உள்ளே வந்தான்..
“ஆத்தா வயிறெல்லாம் எரியுது ஏதாவது சோத்தை போடு..” என்று தட்டை வைத்து கத்தி அதில் தாளம் போட, இருந்த ஆத்திரத்தில் நேற்று காலையில் ஊறி போய் இருந்த பழைய சோத்தை அள்ளி அவனது தட்டில் போட்டார் பருவதம்..
அந்த பானையை திறக்கும் போதே அப்படி ஒரு புளிச்ச வாசம் அடிக்க அதை அவனுக்கு போட்ட போது முகிலுக்கு வேதனையாய் இருந்தது.. அதைவிட அந்த சோற்றை அள்ளி அவன் வாயில் வைத்து சாப்பிட்ட போது கண்களெல்லாம் கலங்கி போய் விம்மல் வெடித்து கிளம்ப பார்த்தது முகிலாம்பிகைக்கு. பருவதமும் நாதனும் இருக்க அவளால் எதையும் செய்யமுடியாமல் போக, வேகமாய் வெளியே போய் கிழவியை அழைத்து வந்து அந்த சோற்றை சுட்டி காட்டிவிட்டு தன் வேலை முடிந்தது போல திரும்பி நின்று குருமாவை இறக்கி வைத்தாள். பொன்னி வேகமாய் வந்து அந்த தட்டை வீசி எறிந்தார்.
“என்னடி ஆத்தா நினைச்சுக்கிட்டு இருக்குற.. அவனுக்கு ஒரு வாய் சோறு கூட நல்லாதா போட மாட்டியா.. அந்த அளவு என் பேரன் தரம் இறங்கி போயிட்டானா இந்த வீட்டுல.. அவனுக்கு இல்லாத சோறு இந்த வீட்டுல வேற எவளும் எவனும் சாப்பிட கூடாது.. ஏட்டி சோலை இங்கன வாடி எல்லாத்தையும் கீழே கொட்டுடி..” அவர் ஆட அதன் பின்பே முகிலுக்கு ஆசுவாசமாய் இருந்தது..
கூடவே அவளுக்கும் திட்டு கிடைத்தது..
“ஏட்டி உனக்கு எவ்வளவு ஏத்தம் இருந்தா என் பேரன் பழைய சோறு திம்பான் நீ அதை பாத்துக்கிட்டு இருக்குறவ... என்ன உன் அத்தையோடு சேந்து உனக்கும் பகுமானம் கூடி போச்சா.. இப்பவே கிளம்புடி உன் மாமன் வீட்டுக்கு.. யாரு வீட்டுல வந்து யாரு அதிகாரம் பண்றது..” என்று அவர் பேச, அதை கேட்டுக்கொண்டு இருந்த அன்னத்திற்கும் சாந்திக்கும் மகிழ்வாய் இருந்தது..
“நீ வந்ததுல இருந்து தான் இவ இப்படி மாறி போனா.. நீ இல்லாம போன அவ எப்படி ஆடுறான்னு நான் பாக்குறேன்..” என்று பருவதத்தையும் திட்ட அவர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவர் பாட்டுக்கு வேலை பார்த்தார்.
“ஒழுங்கா என் பேரனை கவனிங்கடி அவன் சாப்பிட்டதுக்கு பொறவு தான் இங்க மத்தவங்க சாப்பிடனும்..” ஒரு போடு போட, கிழவியை முறைத்த படியே முகில் மன நிறைவுடன் அவனுக்கு பரிமாற அவனோ “ஏண்டி முழுசா போட்டா நான் எப்படி சாப்பிடுறது.. பிச்சு போடுடி..” என்று அவன் சந்தில் சிந்து பாட, பருவதத்துக்கு சிரிப்பு வந்தது..
“அடேய் உனக்கு இங்க சோறே கிடையாதுன்னு சொல்லி வம்படியா நின்னு உனக்கு ரொட்டி வாங்கி குடுத்தா நீ உன் அலப்பறையா காட்டிக்கிட்டு திரியிறவன்..” கிழவி பொறும
“கிழவி நீ எனக்கு ரொட்டி வாங்கி குடுத்தியா.. எந்த கடையில வாங்கி குடுத்த.. இன்னும் ரெண்டு சொல்லு காரமே இல்ல.” முழு போதையில் அவன் உளற
அவர் தலையிலே அடித்துக்கொண்டார்.
அவனுக்கு கர்ம சிரத்தையாய் முகில் பிச்சு போட்டு அதில் குருமாவை ஊற்ற, அவன் அதை ஒரே அள்ளில் வாயில் போட்டு குதப்பிக்கொண்டு சாப்பிட்டான். பார்த்துக்கொண்டு இருந்த சாந்திக்கு அருவெருப்பாய் இருந்தது..
அவளது முகத்தை பார்த்த நாதனுக்கு கஷ்டமாய் போனது..
“பழமலை ஏண்டா இப்படி சாப்பிடுற..” அவனை சரி செய்ய முயல அவனது கையை தட்டி விட்டவன் “எல்லாம் எனக்கு தெரியும்” என்றவன் போதையிலே கை நிறைய அள்ளி வாய் கொள்ளாமல் அவன் மேலும் உண்ண எல்லோரும் அவ்விடம் விட்டு விலகி சென்றார்கள். கிழவி அவனருகில் அமர்ந்து அவனை கவனிக்க, முகிலும் பருவதமும் மட்டும் அங்கே நின்று மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
சாப்பிட்டுவிட்டு அவன் அப்படியே மல்லாக பின் புறம் சாய்ந்து படுத்து விட பருவதத்திற்க்கு சங்கடமாய் போனது.. இவனுக்கு போய் முகிலை கேட்டோமே என்று.. நிமிர்ந்து அவளை பார்க்க அவளோ அவன் சாப்பிட்ட தட்டை எடுத்து கழுவி வைக்க மனம் கனத்து போனது அவருக்கு..
முகிலை பெரியவனுக்கு கேக்கலாமா என்று ஆசையாய் இருந்தது.. ஆனால் என்னவோ மனசு வரவில்லை அவருக்கு.. நாதன் படிச்சவன் அவனுக்கு பொண்ணு வரிசை கட்டி நிக்கும். ஆனா பழமலைக்கு... பத்தாவது கூட தாண்டல அவன் அப்படியிருக்க எப்படி பொண்ணு வரும்.. அதும் இப்போ இருக்குற பொண்ணுங்க எல்லாம் ரொம்ப விவரமா இருக்குதுங்க.. இவனை எப்படி கரை சேர்ப்பது என்று பெரும் கவலையாய் போனது அவருக்கு..
எல்லோரும் சாப்பிட்டு எழ “அய்யன் சாப்பிட்டாகளா” மெதுவாய் பருவதத்திடம் கேட்டார் கொழுந்து..
“ம்ம் அதெல்லாம் ஆச்சு.. நீங்க கவலை படாதீங்க அவன் சீக்கிரமா மாறிடுவான்” ஆறுதல் சொல்ல அவர் எதுவும் சொல்லாமல் எழுந்து வெளி திண்ணையில் படுத்துக்கொண்டார்.
அதென்னவோ பழமலையை பேர் விட்டு அவ்வளவா அழைக்க மாட்டார்.. அவனை பார்க்கும் போதெல்லாம் அவரின் அப்பா தான் நினைவுக்கு வருவார். அவரை அப்படியே தன் அச்சில் கொண்டு வந்து பிறந்து இருந்தான் அவன்..
“இவன் எப்போது திருந்துவானோ...” என்று கவலையுடன் தூக்கத்தை துரத்தினார்.
சமையல் அறையில் படுத்து இருந்தவனை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. கிழவி மட்டும் தன் பேரனுக்கு தலையணை கொண்டு வந்து தலையில் வைத்துவிட்டு போர்வை ஒன்றை போத்திவிட்டு சென்றார்.
ஆழ்ந்த நித்திரையில் இருந்தவனை ஒரு கரம் உலுக்கி எழுப்ப அவன் தூக்கத்தில் புரள்வது போல புரள
“டேய் போதும்டா பிராடு.. எழுந்திரு..” என்ற குரல் கேட்க வேகமாய் சுருட்டிக்கொண்டு எழுந்தான்.
“ஏய் யாரடி பாத்து பிராடுன்னு சொன்ன..” சண்டைக்கு வந்தான்.
“ப்ச்..” சலித்தவள் அவன் அருகில் அமர்ந்து சுவரில் சாய்ந்துக்கொண்டாள் முகில்.
“என்னடி..” கடுக்காய் பொரிய “ஒன்னும் இல்ல” என்றவள் அவனின் இதழில் இதழ் புதைத்து தன்னோடு அணைக்க ஜெர்க்கானான்.
“ஏய்” என்று கூட அவனை முணக விடவில்லை அவள். அவனது கையை எடுத்து தன் இடையில் வைக்க அவனாலும் அவனை கட்டு படுத்த முடியாமல் தன்னோடு அணைத்தவன் அவளை அப்படியே தரையில் சரித்து அவள் மீது படர்ந்தவன் அவளது இதழில் வன்மையாக கவி படிக்க ஆரம்பித்தான். கூடவே அவனது கரம் அவளது இடையில் அழுத்தமாக பதிய யாரோ வரும் அரவம் கேட்டது.. அதை உணர்ந்தவள் அதை கண்டு கொள்ளாமல் அவனோடு இளைய அவனுக்கு தான் படபடப்பாய் வந்தது.
“கொஞ்ச நேரம் டி” என்றவன் அவளை விலக்கி விட பார்க்க
“கொன்னுடுவேண்டா உன்னை.. மரியாதையா இதைவிட இன்னும் அழுத்தமா என்னை ஹக் பண்ணு..” என்றவள் அவனிடம் இன்னும் இளைய அவனுக்கு மூச்சு முட்டி போனது அவளது ஒத்துழைப்பில்...
“வேணாண்டி..”
“இப்போ எனக்கு வேணும்.. உன்னால தர முடியுமா தர முடியாதா அதை மட்டும் சொல்லு..”
“ஏய் யாரோ வராங்காடி..”
“வரட்டும்.. அதுக்கென்ன” என்றவள் அவனின் வேற்று மார்பில் முகம் புதைக்க அவளோடு சேர்த்து போர்வையை போத்தியவன்
“கொஞ்ச நேரம் அசையாம இருடி.. அவங்க போனதுக்கு பிறகு தரேன்..” என்று டீல் பேசியவன் அவளை ஒரே அமுக்காய் அமுக்கி தன்னோடு புதைத்துக்கொண்டு அசையாமல் படுத்து கொண்டான்.
யார் என்று பார்க்க பருவதம் தான் வந்து இருந்தார்.. வந்து தண்ணீர் குடித்துவிட்டு நகர, கண்களை தேய்த்த படி நாதன் வந்தான்.
“என்னமா நீ தண்ணி எடுத்து வச்சு இருக்கலாம் ல” என்று கேட்க “சின்னவன் பண்ணிய அலப்பறையில எல்லாம் மறந்து போச்சுடா நாதா” என்றவர் மறுபடியும் உள்ளே போய் தண்ணி எடுத்துக்கொண்டு வந்து “இந்தா” என்று நீட்டினார்..
“இந்த தடி மாட்டுக்கு எப்போ போதை தெளிந்து எழுந்து போகுமோ..” அவனை திட்ட
“ம்மா அவனை ஒரு கை பிடி. அவனோட அறையில விட்டுட்டு வந்துடலாம். கொசுக்கடியில பாவம் ஒழுங்காவே தூங்கி இருக்க மாட்டான்..” என்று தம்பிக்காக பரிந்து வர
“அடேய் அவன் பண்ணிய அலப்பறைக்கு நீ ஒத்து ஊதுறியா.. கழுத அப்படியே கிடக்கட்டும் நீ போய் தூங்கு அவனுக்காக நீ ஏன் தூக்கத்தை கெடுத்துக்குற..” அவனை அனுப்பி வைத்து விட்டு அவரும் விட்ட தூக்கத்தை தொடர்ந்தார்.
சந்தடி எல்லாம் அடங்கிய பின் மெல்ல அவளிடமிர்ந்து விலக பார்த்தான் பழமலை.. ஆனால் அவள் விடவில்லை.
“ஏண்டி..” பாவமாய் பார்த்தான் அவளை..
“நச்சுன்னு ஒரு முத்தம் குடு..” என்று அவளது உதட்டை காண்பித்தாள் முகில்..
“சரக்கு அடிச்சு இருக்கேண்டி.. இப்போ குடுத்தா கசக்கும்..”
“ம்ஹும்.. அப்படியா.. அப்போ இவ்வளவு நேரமா குடுத்த முத்தம் கசக்கலையே ஏன் மாமா..” கொக்கி போட்டு நிறுத்தியவளை ஏறெடுத்து பார்க்கவில்லை அவன்..
அவனது முகத்தை தன் ஒற்றை விரலில் தூக்கி தன்னை பார்க்க செய்தவள்
“நீ எதுக்கு மாமா இப்படி நடிக்கிற”
“ப்ச் நான் எதுக்கு நடிக்கணும்.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல”
“எனக்கு நல்லா தெரியும் ஏதோ ஒண்ணுக்காக தான் இப்படி நடிக்கிற.. என்னன்னு சொல்லு.. இல்ல நானே கண்டு புடுச்சேன் நீ செத்தடா.”
“என்னடி மிரட்டுறியா..”
“ம்ஹும் மிரட்டல.. ரெக்வெஸ்ட் பண்ணி கேக்குறேன்..”
“நீ ரெக்வெஸ்ட் பண்ணி கேக்குற அளவுக்கு இதுல எதுவுமே இல்லடி..”
“அப்படின்னு உன் வாய் தான் சொல்லுது.. உன் கண்ணும் மனசும் வேற ஒன்னு சொல்லுது மாமா..” நொடிக்கு நொடி மாமா போட்டுக்கொண்டு இருந்தவளை கண்டு ஆசையாய் இருந்தது பழமலைக்கு..
“ப்ச் என்னடி இப்படி நடந்துக்குற அப்புறம் கற்பு போச்சுன்னு அழுதீனா நான் பொறுப்பு இல்ல...”
“முடுஞ்சா எடுத்துக்கோடா..” என்றவள் அவன் மீது இன்னும் இளைய அவளை இறுக்கி அணைத்தவன் “என்னமோ ஆகிப்போச்சுடி உனக்கு..”
“மாமா..”
“என்னடி..” என்றபடியே அவளது தலை மீது தன் தலையை வைத்துகொண்டான்.
“என்னன்னு சொல்லு மாமா.. நிஜமா மண்டை காயுது.. அதோட இன்னைக்கு நீ அந்த பழைய சோறை திங்கும் போது அவ்வளவு கஷ்டமா போச்சு.. எதுக்கு இதெல்லாம்”
“நான் சாப்பிட்டா நீ எதுக்குடி அழுத. கூடவே போய் கிளவிய கூட்டிட்டு வந்த.. மாமன் மேல அம்புட்டு ஆசையா..” கண்கள் மின்ன கேட்டவனை வாரி அணைத்தவள்
“ஏன் உனக்கு தெரியாதா உன் மேல ஆசையா இல்லையான்னு..”
“தெரியும் தான் ஆனா..”
“ஆனா என்ன..”
“இப்போதைக்கு என்னை விட்டு தள்ளி இருடி..”
“முடியாது டா மாமா..”
“ப்ச் நல்ல பிள்ளை தானே நீ சொன்னா கேளுடி.. எல்லாம் கொஞ்ச காலம் தாண்டி..”
“எனக்கு நீ வேணும்.. அவ்வளவு தான்..”
“இன்னும் பெரியவனுக்கு கல்யாணம் பண்ணல ஞாயபகம் இருக்க இல்லையா..”
“யாருக்கு கல்யாணம் ஆனா என்ன ஆவாட்டி என்ன.. எனக்கு நீ வேணும் அவ்வளவு தான்..”
“படுத்தாதடி..”
“யாரு நான் படுத்துரனா.. சின்ன வயசுல இருந்து சுத்தி சுத்தி வந்து மனசை கெடுத்துட்டு இப்போ வேணான்னு சொல்றியே நியாயமா..”
“ஏய் நான் எப்போடி உன்னை வேணான்னு சொன்னேன்.. நீ தான் மாமானோட உலகமே.. தெரியும் தானே உனக்கு..” அவளது மூக்கை பிடித்து ஆட்டி கேட்க
“ம்கும் ஆனா நீங்க செஞ்சு வச்ச காரியத்தை நினைக்கும் போது” என்று சொல்லிக்கொண்டே அவனது முதுகில் நாலு போடு போட்டாள்.
“வலிக்குதுடி..”
“சரி அடிக்கல.. ஆனா எவ்வளவு திமுரு இருந்தா எனக்கு முன்னாடியே அவளை பார்த்து மெர்சல் ஆயிட்டேன்னு சொல்றீங்க..” அவளுக்கு விழிகள் கலங்க சட்டென்று அவளை தோளோடு அணைத்து
“உன்னைய தாண்டி சொன்னேன்.. ஆனா என்ன அதை அவளை பார்த்து சொல்லவேண்டியதா போச்சு..”
“போனது போகட்டும் இனியும் ஏதாவது சேட்டை பண்ணுனீங்க நிஜமா நான் காண்டாயிடுவேன்.. இது தான் லாஸ்ட் அண்ட் பாஸ்ட் ஓகே”
“ஏய் அப்படியெல்லாம் சொல்லாதடி..”
“நோ வே மாமா.. நான் சொன்னா சொன்னது தான்.. உன்னோட நடிப்பு பட்டரைய தூக்கி ஏற கட்டு”
“எப்படிடி கண்டு புடுச்ச”
“ம்கும் நீயும் கிழவியும் ரகசியம் பேசுறேன்னு அடிக்கடி தனியா ஒதுங்குவீங்களே அதுலயே கண்டு புடுச்சுட்டேன்.. குறிப்பா நீ நான் கிழவி மூணு பெரும் ஒண்ணா செத்து போறதா பத்தி பேசுனத கேட்டுட்டேன்.. அப்பவே இதுங்க ஏதோ கிறுக்கு வேலை பண்ணுதுங்கன்னு புருஞ்சுக்கிட்டேன்”
“ஏய் என்னடி நக்கலா..”
“நக்கல் தண்டா மாமா..” என்ற நேரம் மறுபடியும் யாரோ வருவது போல இருந்தது...
எப்பா....இவ ஒரு வழியா கரெக்ட்டா புறிஞ்சிகிட்டா.....
எனக்கும் அதே டவுட் தான் ....ஏன் நடிகனும்?????