கிழவியை பொழச்சு போன்னு விட்டுட்டு வயலுக்கு சென்றான் முகிலை தேடி.. அங்கு தன் மாமா அத்தைக்கு சாப்பாடு பரிமாறிக்கொண்டு இருந்தாள் அவள். அப்பனுக்கு முன்னாடி அவளிடம் வார்த்தையாட முடியாது என்ன செய்வது என்று வேலி ஓரமாவே நின்றான்.
கொழுந்து சாப்பிட்டுவிட்டு கைகழுவ மோட்டாருக்கு போக வேகமாய் அவ்விடம் விரைந்தான்.
“ஏண்டி நான் மத்தியம் சாப்பிட வருவேன்னு தெரியும் ல அப்படியிருந்தும் எதுக்குடி வயலுக்கு வந்த.. நேத்திக்கும் அப்படி தான் உன்னை தேடி வரவச்ச.. எங்கப்பேன் என்னை போக விடாம கொத்தா போட்டு புளிஞ்சி எடுத்துட்டாரு.. நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா.. உன்னை தேடி ஒருத்தன் வந்துக்கிட்டே இருக்கனுமா..” வந்ததும் வராததுமா அவளிடம் சண்டைக்கு நின்றான்.
“ஏலேய் ஏன்டா எப்போ பாரு அவ கிட்டயே மல்லுக்கு நிக்கிற.. சோறு தானே நீயே போட்டு சாப்பிட வேண்டியது தானே,, இல்லன்னா உன் அப்பத்தா தான் வீட்டுல இருக்கே அதுக்கிட்ட போட்டு தர சொல்லி சாப்பிட வேண்டியது தானே.. இதுக்குன்னு மெனக்கெட்டு இவ்வளவு தூரம் வந்தியாக்கும்..”பருவதம் அதட்டல் போடா அதை எல்லாம் கொஞ்சமும் காதிலே வாங்கிக்கொள்ளாமல்
“ஏண்டி இன்னும் என்ன சட்டமா உக்காந்து இருக்க.. மரியாதையா எழுந்து வா..” என்று அவளின் கை பிடித்து இழுக்க
“எரும போட்ட புள்ள கையா புடுச்சு இப்படி மொரட்டு தனமா இழுக்குற.. ஒன்னு கிடக்க ஒன்னு ஆயி போச்சுன்னா அம்மான்னாலும் வராது.. ஆட்டு குட்டின்னாலும் வராது.. அவளை விடு அவ வருவா..” என்றார்.
“ஆத்தா நீ கொஞ்சம் நேரம் சும்மான்னு இரேன்.. எப்போ பாரு அவளுக்கே பரிஞ்சி பேசிக்கிட்டு..” என்றவன் அவளை இழுத்துக்கொண்டு தன் தந்தை வருவதற்கு முன் கிளம்பி விட்டான். அவனது வண்டியிலே அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தவன்
“ஏட்டி கருவாடு செய்யி.. காலையில மாதிரி சாம்பர போட்ட உன்னை கொன்னுடுவேன்.. நான் போய் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள ரெடியா இருக்கணும்” என்றவன் குளிக்க போக அவனுக்கு தண்ணி எடுத்து ஊத்திவிட்டு சோலையிடம் வெங்காயத்தை உரித்து நறுக்க சொல்லியவள் கருவாடை கழுவி வைத்தாள்.
அவன் வருவதற்குள் கருவாடை வெங்காயம் தக்காளி போடு வதக்கி இறக்கி அவனுக்கு பரிமாற எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு தட்டை வைக்க அவன் குளித்து விட்டு வந்தான்.
கருவாட்டு வாசம் மூக்கை துளைக்க “ம்ம்ம் வாசமா இருக்குடி..” என்றவன் சோலையை ஒரு பார்வை பார்க்க
“சோலை மாட்டுக்கு கழனி தண்ணி ஊத்தி வைய்யி.. தட்டைய கொஞ்சம் நறுக்கி போடு மேய்ச்சலுக்கு போன மாடு வந்து சாப்பிட போடலாம்..” என்று அவளுக்கு வேலையை சொல்லி அனுப்பி விட்டாள் முகில்.. அதன் பிறகே சோற்றில் கைவைத்தான்.
வெறும் கருவாட்டை வாசம் பிடத்த படி அப்படியே சாப்பிட காரம் அவனது நாக்கை தொட்டது..
“ப்பா செம்மடி... இதுக்கே உன்னை கட்டிக்கலாம்..” என்றவனை முறைத்தாள்.
“ஆமாண்டா புருட்டி பயலே...” என்றபடி வந்த அப்பத்தா அவன் அருகில் அமர்ந்து அவனது தட்டிலிருந்த கருவாட்டை எடுத்து சாப்பிட கையிலிருந்த கருவாட்டை அப்படியே போட்டவன்
“கிழவி காலையில யாரும் ஒழுங்காவே என்னை சாப்பிட விடல... இப்போ நீ போட்டிக்கு வந்தன்னு வை கிழவின்னு கூட பார்க்க மாட்டேன்.. அப்படியே நம்ம கிணத்துல குண்டு கட்டா கட்டி போட்டுட்டு வந்துடுவேன் பாத்துக்க..” என்றவன் அவர் கையில் அள்ளிய கருவாட்டை பிடுங்கி தன் வாயில் வைத்துக்கொண்டான்.
“அடேய் இப்படி புடுங்கி சாப்பிடாதடா.. உடம்புலேயே ஒட்டாது..”
“ஒட்டாட்டி போகுது அதுக்காக நீ ஒன்னும் கவலை படவேணாம்..” என்றவன் மேலும் சாப்பாட்டை வாயில் திணிக்க பார்த்துக்கொண்டு இருந்த பொன்னிக்கு வாயில் எச்சில் ஊறியது..
“ஏட்டி செய்யிரவ எனக்கும் சேத்து செஞ்சா என்ன கொறைஞ்சி போக போகுது.. இப்ப பாரு அவன் என்னைய பாக்க வச்சி சாப்பிடுறான்..”
“உங்களுக்கும் சேர்த்து தான் பாட்டி செஞ்சேன்..” என்று சொல்ல
“ஏய் நான் எனக்கு மட்டும் தாண்டி செய்ய சொன்னேன்.. நீ எதுக்குடி கிழவிக்கும் சேத்து செஞ்ச.. கிழவி கருவாட்டுல கைய்ய வச்ச உன் சாவு கிணத்து தண்ணில தான் பாத்துக்க”
“சவுரதுன்னு முடிவு பண்ணியாச்சு கிரகத்துல அது கருவாட்டுலையே போகட்டும் டா..” என்றவர் கிண்ணத்தோடு எடுத்துக்கொள்ள முகிலை முறைத்து பார்த்தான்.
‘ஏண்டா உன் பாட்டி பண்ணதுக்கெல்லாம் ஏண்டா என்னை முறைக்கிற’ முனகியவள்
“பாட்டி உங்களுக்கு தனியா எடுத்து வச்சு இருக்கேன். இருங்க கொண்டு வந்து தரேன்..” என்றவள் எழுந்து போய் அவருக்கு என்று தனியாக எடுத்து வைத்ததை கொண்டு வந்து தர பழமலைக்கு பலிப்பு காண்பித்தார் பொன்னி..
“கிழவி உனக்கு குசும்பு கூடி போச்சு இரு குறைக்கிறேன்..”
“போடா நான் மூணு தலை முறைய பாத்தவடா நீயெல்லாம் எனக்கு ஜுஜுபி..” என்றவர் கருவாட்டில் கவனமாக, அவரை முறைத்தவன் தானும் சாப்பாட்டில் கவனாமானான்..
அன்றிரவு கொழுந்து தன் மூத்த மகனுக்கு போன் செய்ய
“சொல்லுங்க அப்பா.. எப்படி இருக்கீங்க. வீட்டுல எல்லாரும் எப்படி இருக்கீங்க”
“நாங்க நல்லா இருக்கோம் நாதன்.. நீ எப்போ வர.. இந்த வாரம் விடுப்பு தானே..”
“ஆமா ப்பா இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு வந்துடுவேன்.. எப்படியும் நாலு நாள் இருப்பேன்னு நினைக்கிறேன்” என்றான் பத்மநாதன்.
“சரி பா அப்போ நான் தம்பிய அனுப்பி வைக்கிறேன்.. காலையில வண்டி ஏதும் இருக்காது.. எப்பவும் போல அவனோட வந்துடு..” என்று வைத்துவிட்டார்.
“எப்போ வரானாம்” பருவதம் கேட்க
“இப்ன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவானாம். வந்தா அய்யன கொஞ்சம் போயி அவனை கூட்டிட்டு வர சொல்லிடு..” என்று சொல்லிவிட்டு வெளியே போக.
“சரிங்க” என்றவள் திரும்பி பழமலையை பார்க்க அவனோ பவ்யமாய் நின்றுக்கொண்டு இருந்தான்.
“அதெப்படி டா எல்லா கேடி தனமும் செஞ்சுட்டு நான் தான் பண்ணன்னான்னு ஒரு பார்வை பாக்குற.. முடியலடா சாமி உங்கிட்ட.. உங்க அப்பாரு சொன்னது காதுல வாங்குன தானே.. பெரியவன கூட்டிட்டு வந்துடு..” என்றார்.
“அதெல்லாம் அய்யாவோட டெக்னிக்..” என்றவன் முகிலுக்கு கம்பு சுத்த பயிற்சி கொடுக்க வயலுக்கு கூட்டி செல்ல
“இங்கனவே சுத்துடா.. நானும் பாக்குறேன்” என்று கிழவி சொல்ல அவரின் முன்னே இருவரும் சண்டை போட்டார்கள்.
அவனது ஒவ்வொரு தாக்குதலும் அவளுக்கு ஒரு பாடத்தை கத்து கொடுக்க அதை தப்பாமல் புரிந்துக்கொண்டாள்.
தினமும் அவளுக்கு வீட்டிலோ இல்லை வயலிலோ பயிற்சி சொல்லிக்கொடுத்தான்.
இரண்டு நாள் கழித்து அதிகாலை நாதனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான் பழமலை.
“எப்படி டா இருக்குற நல்லா இருக்கியா.. முன்னை பாத்ததுக்கு இப்போ இன்னும் கருத்து போய் இருக்குற.. வெயில்ல அதிகமா அலையாத டா” என்று அவனது தலையை தடவி விட்டான் நாதன்.
அந்த நேரம் “வாங்க மாமா..” முகில் அவனை விளிம்ப
“வரேன் முகில் எப்படி இருக்குற..”
“நல்ல இருக்கேன் மாமா.. நீங்க எப்படி இருக்கீங்க” அவளின் சத்தம் கேட்டு எல்லோரும் கூடத்துக்கு வர
“வா நாதா..” வரவேற்ற கொழுந்து அவனை பரிவுடன் பார்த்தார். அவனின் முகத்தில் ஓய்வுக்கான தேடல் இருக்க
“பருவதம் புள்ளைய கவனி” என்றுவிட்டு வயலுக்கு செல்ல
நாதனை தடபுடலாக கவனித்தார்கள் பருவதமும் பொன்னியும்.
பயண களைப்பில் சோர்வாக தெரிந்தவன் தூங்கி வழிந்தான். அவனை தூங்க சொல்லிவிட்டு மற்ற அனைவரும் அவரவர் வேலைகளை செய்ய முகிலை எப்பவும் போல அவன் வம்பிழுத்துக்கொண்டு இருந்தான்..
“என்னடி உன் படுச்ச மாமன் காரன் வந்து இருக்குறான்.. தனியா எதவும் கவனிக்கல...”
அதற்கு பதில் சொல்லாமல் அவள் கைவேலையை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“என்னடி கேட்ட கேள்விக்கு பதிலை காணாம்..” என்று அவள் செய்கிற வேலையை எட்டி பார்த்தான். அங்கு பத்மநாதனுக்கு பிடிக்கும் என்று மசாலா கடலை போட்டுக்கொண்டு இருந்தாள் முகில்.
அதை கண்டவுடன் மூக்குக்கு மேல கோவம் வந்தது.. “ஏய்...” என்று அவளை திட்ட ஆரம்பிக்கும் முன்பே அவனது வாயில் கத்தரிப்பு மிட்டாயை வைத்து திணித்தாள். அந்த இனிப்பில் அவனது மனம் குளிர அவளை மோகத்துடன் பார்த்தான்.
அவனது மோகனமான பார்வையை ஏறெடுத்து கூட பார்க்காமல் அடுப்பில் இருந்த கடலையை கருகாமல் எடுத்துக்கொண்டு இருந்தாள். அதில் அவனுக்கு இன்னுமே மோகம் கூட சுற்றி முற்றி பார்த்தான்.
அங்கு யாரும் இல்லாமல் போக சந்தில் சிந்து பாட தொடங்க அவனது நோக்கம் புரிய அவன் ஆரம்பிக்கும் முன்பே வேகமாய் இங்கிருந்து வெளியேரி பாட்டியிடம் கொண்டு போய் கொடுத்தாள் கடலையை..
“அதுக்குள்ள போயிட்டாளே...” சுவற்றிலே குத்திக்கொண்டவன் அவள் பின்னே சென்றான். அவளோ ஒரு இடத்தில் நிற்காமல் அலைந்துக்கொண்டே இருக்க இவனுக்கு பத்திக்கொண்டு வந்தது..
சோலையிடம் சொல்லி சேவலை அடிக்க சொல்லி றெக்கையை பிச்சி சின்ன சின்ன துண்டா வெட்ட சொல்லிக்கொண்டு இருந்தவளை
“ஏய் இங்க வாடி...” என்றான் அதிகாரமாய்.
“இவன் தோள்ள எப்போ தான் அடங்குமோ..” எண்ணியபடி
“ம்ம்” என்றாள்.
“ஏண்டி அண்ணன மட்டும் மூச்சுக்கு முன்னூறு முறை மாமான்னு கூப்பிடுற.. நான் மட்டும் என்ன இளிச்ச வாயா.. என்னையும் மாமான்னு கூப்பிட்டா உங்க கவுரவம் கொறைஞ்சி போய்டுமா.. ஒழுங்கா மாமான்னு கூப்பிடுடி..”
“இதுக்கு தான் கூப்பிட்டீங்களா..”
“இன்னொன்னுக்கும் கூப்பிட்டேன்.. முதல்ல நீ மாமான்னு கூப்பிடு பொறவு நான் அந்த வேலையை சொல்றேன்..” என்றான்.
அவனது சேட்டையில் காண்டனவள் “மா...மா....” என்று ராகம் பாடி அவனை அழைக்க “இதுல ஒரு கிக் இருக்குடி..” என்று கண்ணடித்தவன் “சரி போய் நான் குளிக்க தண்ணி எடுத்து ஊத்து..” என்றான் அவளது அழைப்பை மனதுக்குள் ரசித்தபடி.
அவள் தண்ணி எடுத்து ஊத்த சரியாய் பின்னாடி வந்து நின்றான் பழமலை...
“அதானே என்ன இன்னும் ஆளை காணமேன்னு நினைச்சேன்..” முனகியவள் “இப்போ என்ன வேணும்” பல்லக்கடித்துக்கொண்டு கேட்டவளை ரசனையுடன் பார்த்தான். வேலை செய்வதால் தூக்கி சொருகிய சேலையுடன் கூந்தலை அள்ளி கொண்டை இட்டிருந்தாலும் ஆங்காங்கே முடி சிலும்பிக்கொண்டு இருந்தது.. கூடவே அவள் வைத்திந்த செண்டு மல்லிகை அவனை இன்னும் மயக்க அவளை அப்படியே சுவற்றில் சாய்த்தான்.
அவனது நோக்கம் புரிய சட்டென்று விலகி ஓட முயன்றாள். ஆனால் அவனை உதறமுடியாமல் சிறை பட்டு நின்றாள். மயக்கத்துடன் அவளை நெருங்க
“என் கிட்ட இப்படி நடந்துக்கிறது உங்க பூந்திக்கு தெரியுமா.. இல்ல உங்க பின்னாடி சுத்துற பெண்களுக்கும் தெரியுமா.. தெரிஞ்சா என்ன ஆகும்” என்று அவனை புறக்கணிக்க
“அது தெரியும் போது பார்த்துக்கலாம்.. இப்போ நீ வா..” என்று அவளை இன்னும் இழுக்க வெளியே பாட்டியின் குரல் கேட்டது. யோசனையுடன் அவளை விலக்கி நிறுத்தியவன்
“பாட்டி நான் குளிச்சுக்கிட்டு இருக்கேன்..” என்று கத்தி சொன்னான்..
முகில் கலவரத்துடன் அவனை பார்த்தாள்.. “என்ன” என்று ஆரம்பிக்கும் போதே அவளது வாயை பொத்தி இருந்தான்..
விழிகளிலே என்ன என்று கேட்க “எனக்கும் தெரியாது.. ஆனா ஏதோ வில்லங்கம் வர போவுது” என்றான்.
“உங்களை விட ஒரு வில்லங்கம் தானியா வேற வருதாக்கும்..” பார்வையிலே சொல்ல அவளது பார்வையை படித்தவன் “ஏத்தம்டி உனக்கு.. வசமா சிக்கி இருக்குற இரு வத்தல் போடுறேன்..” என்று அவள் முகம் நோக்கி குனிந்தான்.
பாட்டி தான் இதில் அல்டி🤩🤩🤩🤩🤩
அதும், அவங்களோட புருட்டி பயலே தான் ரொம்ப பிடிச்சி இருக்கு🤣🤣🤣🤣🤣