“என்னை பத்தி அப்படி என்ன கேள்வி பட்டாரு... அதுவும் அவ்வளவு கேவலமா நினைக்கிற அளவுக்கு..” யோசித்து யோசித்து பார்த்தாள். ஆனால் அவளுக்கு ஒன்று கூட அகப்படவில்லை. ஏதாவது தவறு செய்து இருந்தால் அதுவா இருக்குமா இதுவா இருக்குமா என்று வரிசை கட்டி வரும்.
ஆனால் இங்கு இவள் தான் எந்த தவறும் செய்ய வில்லையே. பிறகு எங்கிருந்து வரிசை கட்டி வரும். எதுவுமே புரியாமல் புரியாத புதிராய் அவளது திருமண வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது.
அன்றிரவு தமிழை நெருங்கிய அகத்தியன்,
“ஆமா என் தொடுகையை உன்னால உணர முடியுதா?” என்று கேட்டான்.
அவள் தலையை மட்டும் ஆட்டினாள். அதை பார்த்தவன் ஏளனமாக உதட்டை பிதுக்கி, “அதிசயம் தான்... இல்ல உன் வீட்டு ஆளுங்களுக்கு பயந்துக்கிட்டு என் தொடுகைக்கு கட்டு பட்டு இருக்கியா?” என்று கேட்டான்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. எதுக்காக இவன் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று.
“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?”
“ஆமால்ல பேசக்கூடதுல்ல” என்று சொன்னவன் அவள் மீது வன்மையாக கவிழ்ந்துக் கொண்டான். அவன் கொடுக்கும் வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் அழுகை வந்து விட்டது.
அவள் அழுவதை பார்த்து,
“என் தொடுகை பிடிக்கல தானே?” என்று அழுத்தமாக கேட்டான்.
“இல்ல ரொம்ப போர்சா நடந்துக்குறீங்க.. அது தான் எனக்கு வலிக்கிது” என்று உண்மையை கூறினாள்.
“ஆனா உன்ன மாதிரி ஆளுங்களுக்கு இப்படி முரட்டு தனமா இருந்தா தானே பிடிக்கும்... இல்லன்னா எவனையாவது அடிமையாக்கி உங்க விருப்பத்துக்கு வளைச்சு போட்டுக்குவீங்க தானே” அவன் மிகவும் நாராசமாக பேச தேகம் எங்கும் அருவெறுப்பு பட்டு போனாள்.
“ஏங்க இந்த மாதிரி எல்லாம் பேசுறீங்க? நீங்க பேசுறது எனக்கு ரொம்ப வலிக்கிது” என்று அவனது முகத்தை பார்த்து சொன்னாள். ஆனால் அகத்தியன் அவளது கண்ணீரை எல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவளை தனக்கு ஏற்றார் போல வளைத்துக் கொண்டவன் அன்றைக்கு மிகவும் மோசமாக நடந்துக் கொண்டான்.
வலி வலி உடலெங்கும் வலி எடுத்தது தமிழுக்கு. அவளால் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் ஆழ்ந்த மயக்கத்துக்கு போய் விட்டாள்.
அவள் மயங்கியதை பார்த்து அவள் மீது இருந்து எழுந்துக் கொண்டவன் வேகமாய் போய் குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
அவளை தொட்ட தன் உடலை சுடுநீரில் தேய்த்து தேய்த்து கழுவி சுத்தம்செய்துக் கொண்டவனுக்கு தமிழோடு கட்டிலில் கூடுவது பெரும் சித்திரவதையாக போனது.
ஏனெனில் தமிழை பற்றி இன்னைக்கு கேட்ட தகவல்கள் எல்லாம் அப்படி. அதனாலே தமிழின் மீது அப்படி ஒரு அருவெறுப்பு வந்தது.
“ச்சீ” என்று ஆகிப்போனாள் அவனுக்கு. தன்னை சுத்தி நடக்கும் சதி வளை எதுவும் அறியாமல் மயக்கத்தில் இருந்தாள் தமிழ்.
தானாகவே மயக்கம் தெளிந்து எழுந்தவள் அறை முழுவதும் இருளாக இருப்பதை பார்த்தாள். உடலெல்லாம் ஏதோ யானை ஏறி மிதித்தது போல இருந்தது. கடினப்பட்டு எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்து தன்னை சுத்தம் செய்துக் கொண்டு மென்மையான உடலை உறுத்தாத இரவு உடையை எடுத்து போட்டுக் கொண்டவளுக்கு மிகவும் அசதியாக இருந்தது.
விளக்கை போட கூட மனம் வரவில்லை. பழகிய அறை தானே. அதனால் எல்லாவற்றையும் இருளிலே செய்துக் கொண்டாள்.
இலக்கின்றி அவளது வாழ்க்கை தடம் புரண்டு போனதை நன்கு உணர்ந்துக் கொண்டவளுக்கு கன்னத்தில் கண்ணீர் சூடாக இறங்கியது.
அதன் பிறகு அவளிடம் பெரும் அமைதி நிலவியது. யாருடனும் பேசாமல் தன்னை தனிமை படுத்திக் கொண்டாள்.
நேரம் சென்று வந்த அகத்தியன் அவளை தொட வர,
“குழந்தை தானே வேணும்... அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன். ஆனா உங்க நிழல் கூட என் மீது படக்கூடாது. என்னை நீங்க நெருங்க நினைச்சா சத்தியாமா செத்துட்டுவேன்..” தீர்க்கமாக சொன்னவளை தோள் குலுக்களுடன் தள்ளி போய் படுத்துக் கொண்டான் அகத்தியன்.
அதன் பிறகு வீட்டு ஆட்களிடம் மட்டும் ஆதர்சன தம்பதிகளாக காட்டிக் கொள்ள பேசிக் கொண்டார்களே தவிர இருவருக்குள்ளும் பெரிய தடுப்பு சுவர் எழுந்தது.
குலதெய்வ கோயிலுக்கு போய்ட்டு வந்ததோடு சரி அதன் பிறகு வேறு எங்கும் ஒன்றாய் செல்லவில்லை இருவரும்.
அடுத்த பதினைஞ்சு நாளில் தமிழுக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்பட,
இரண்டாம் நாளே கைனோவை பார்க்க அப்பாயிண்டேம்ன்ட் போட்டு விட்டாள்.
“இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகனும். இந்த ஒரு முறை மட்டும் வாங்க. அதுக்கு பிறகு தொல்லை பண்ண மாட்டேன்” என்றாள்.
“நீ ஹாஸ்பிட்டல் போ... இல்ல எங்கயாச்சும் போ. என்னை எதுக்கு கூப்பிடுற?” எரிந்து விழுந்தவன் தன் லேப்டாப்புடன் மல்லு கட்ட,
“குழந்தை வேண்டும்னு கேட்டீங்களே”
“அதுக்கு?” தலையை தூக்கி அவளை பார்த்தான் அகத்தியன்.
“பிசிக்கலா குழந்தை பெத்துக்க என்னால முடியாது... சோ ஐவிஎப் மூலமா பெத்துக்கலாம்” என்றாள்.
அதை கேட்டவன், ஏளனமாக சிரித்தான்.
“ஐ எக்ஸ்பெக்ட் திஸ்...” நக்கலுடன் சொன்னவன் அவளுடன் மருத்துவமனைக்கு சென்றான்.
“ஏன் அவசரப்படுறீங்க.. நேச்சுரலாவே குழந்தை பெத்துக்கலாம். அதை விட உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை வருடமாச்சு?” மருத்துவர் கேள்வி கேட்டார்.
அகத்தியன் “இருபது நா..” என்று ஆரம்பிக்கும் பொழுதே,
“இருபது மாசம் ஆச்சு டாக்டர். இவரு பாரின் போறாரு... போயிட்டு திரும்ப வர மூணு வருசம் ஆகிடும். அது தான் இந்த சர்க்கில்ல இருந்தே ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம்னு வந்தோம்” என்றாள் தமிழ்.
அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் அகத்தியன்.
அவனை கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை அவள். அவளே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள். அவனது செமனை டெஸ்ட்க்கு குடுத்து அது வேல்யூவா இருக்கா என்று ரிப்போர்ட் எடுக்க சொன்னார்கள்.
இதெல்லாம் தேவையா என்று அவளை முறைத்தாலும் அவன் ஒத்துழைத்தான். அவனது ரிப்போர்ட் வேல்யூவா இருக்க முதல் சர்கிள் ஆரம்பம் ஆனது. செமன் டெஸ்ட்க்கு மட்டும் தான் வந்தான் அகத்தியன். அதன் பிறகு எதற்கும் அவன் வரவில்லை. அதை பற்றி தமிழ் கண்டு கொள்ளவும் இல்லை.
தமிழுக்கும் எந்த குறையும் இல்லை. அவளுக்கு இருபத்தி எட்டு நாள் சுழற்ச்சி. கருமுட்டை எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல் இயற்கையாகவே வளர்ந்தது. ஆரோக்கியமாகவும் இருந்தது.
வீட்டில் கேட்பவர்களுக்கு நண்பர்களை பார்க்க போகிறேன் என்று சொல்லி சமாளித்தாள்.
பதினோராவது நாளில் அவளின் கருமுட்டை உறுதியாக இருப்பதை கணித்து சொன்ன மருத்துவர்,
“இனி வர்ற நாட்கள்ல நீங்க பிசிக்கல் டச்சுல இருந்தா இந்த மாசமே கண்பார்ம் ஆனாலும் ஆகிடும்” என்றார்.
தமிழுக்கு அதை கேட்டு கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. ஆனாலும் தைரியத்தை வர வைத்துக் கொண்டு, தயக்கத்துடன் சில விசயங்களை சொன்னாள்.
அவள் சொல்ல சொல்ல தலைய ஆட்டி கேட்டுக் கொண்ட மருத்துவர்,
“சரி அப்போ நாளைக்கு உங்க ஹஸ்பெண்டை வர சொல்லிடுங்க.. நாம அடுத்த ப்ராசஸ் பண்ணிடலாம்” என்றார்.
“ஓகே டாக்டர் தேங்க்ஸ்” என்று சொன்னவள் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்.
அகத்தியனோடு அடுத்த நாள் மருத்துவமனைக்கு வந்தாள். அவனை ஒரு அறைக்குள் சென்று செமன் எடுத்து வர சொல்ல, அவனும் போனான்.
ஆனால் போவதற்கு முன்பு அங்கு நின்ற புது நர்ஸ் அவனை கேலியாக பார்த்து சிரிப்பது போல இருக்க, டென்ஷன் ஆகிப் போனான். அதுவும் இவன் அறைக்குள் உள்ளே வந்த பிறகு அந்த கதவுக்கு வெளியே அந்த பெண் அருகில் நின்ற பெண்ணோடு ஏதோ சொல்லி சிரிக்க அதை முற்றிலும் கேட்டவனுக்கு கண்கள் ஆத்திரத்தில் சிவந்துப் போனாது.
கையில் இருந்த டப்பாவை விட்டு எறிந்தவன் மருத்துவரிடம் பேசிக்கொண்டு இருந்த தமிழின் பிடரியை பற்றி தூக்கியவன் அவளை தன் முகம் நோக்கி திருப்பி,
“என்ன பத்தி என்னடி சொல்லி வச்சு இருக்க?” அடங்காத ஆத்திரத்துடனும் கோவத்துடனும் கேட்டவனை மிரண்டு போய் பார்த்தாள் தமிழ்.
“ஏனிப்படி...” அவள் மிரளும் பொழுதே,
“என்ன மிஸ்டர் அகத்தியன் இவ்வளவு ஹார்ஷா வொய்பை ட்ரீட் பண்றீங்க? நீங்க எல்லாம் மனுசன் தானா?” அவர் சத்தம் போட,
மருத்துவரை ஒரு பார்வை பார்த்தவன் தமிழை தர தரவென்று இழுத்துக் கொண்டு போய் காரில் தள்ளியவன் நேராக அவனது கெஸ்ட் ஹவுஸில் கொண்டு போய் நிறுத்தினான்.
அவனது முகத்தில் ரெளத்திரம் தாண்டவம் ஆடியது. தமிழுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஏன் இப்படி காட்டுமிராண்டி மாதிரி நடந்துக்குறீங்க?” கேட்டு முடிக்கும் முன்பே அவளை சோபாவில் தள்ளி விட்டான் வேகமாக.
“அப்படி தான்டி நடந்துக்குவேன்... டாக்டர் கிட்டயும் நர்ஸ் கிட்டயும் என்னை பத்தி என்ன சொன்ன?” ஆக்ரோஷமாய் கேட்டான். அவனது கண்களில் நெருப்பு பறக்காத குறை ஒன்று தான். மத்தபடி அனல் அதிகப்படி வீசியது.
இது தான் விசயமா என்று ஒழுங்காக எழுந்து அமர்ந்தவள்,
“கரு முட்டை ஸ்டேஜ் கரெக்டா இருக்கு. பிசிக்கல் டச் ல இருக்க சொன்னாங்க. எனக்கு அது பிடிக்கலன்னு தானே ஐவிஎப் ட்ரீட் பண்ண நினைச்சேன். மறுபடியும் டாக்டர் அதையே பண்ண சொன்னா எப்படி... அது தான் உங்களால அது செய்ய முடியாதுன்னு சொன்னேன்” என்றாள்.
“ஏய்..” என்று அவனை அடிக்க கையை ஓங்க,
“உங்களுக்கு தானே குழந்தை வேண்டும். எனக்கு இல்லையே.. அதனால உங்க மேல குறையை சொன்னேன்... இல்லன்னா ஒன்னும் பிரச்சனை இல்லை... அப்படியே இருந்துக்கலாம்” என்றாள்.
“ஏன் உன் குறையை சொல்ல வேண்டியது தானே... என்னை எதுக்குடி சொன்ன... என் ஆண்மையை நீ கேவலப்படுத்தி இருக்க” பல்லைக் கடித்தான்.
“எனக்கு என்ன குறை?” புருவம் உயர்த்தினாள். இப்பொழுது கொஞ்சம் நன்றாகவே எதிர்த்து நிற்க ஆரம்பித்து விட்டாள் தமிழ்.
“ஏன் நீ ஒரு ஹோமோ செ...ஸ் அடிக்ட்டர்னு சொல்ல வேண்டியது தானேடி” என்றான் உச்ச பட்ச கடுப்புடன்.
“வாட்?” என்று அதிர்ந்துப் போனாள் தமிழ்.
“எ... என்ன சொல்றீங்க நீங்க?” அவள் நெஞ்சை பிடித்துக் கொண்டாள் அகத்தியன் சொல்வதை கேட்டு.