அவன் கர்ஜனையில் மிரண்டுப் போனவள் அழுகையுடன் கதவை திறந்து வைத்து விட்டு போய் படுக்கையில் அமர்ந்துக் கொண்டாள். அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
“ஏய்...” என்றான்.
அவள் நிமிர மாட்டேன் என்று வீம்பு பிடித்துக் கொண்டு அமார்ந்து இருக்க,
“கொஞ்சம் கூட அறிவே இல்லையா...? நீ எதுக்குடி என் கிட்ட வந்த?”
“சாமி தெரியாம வந்துட்டேன்.. இனி இங்க வரவே மாட்டேன் போதுமா.. ஊரு உலகத்துல ஆளு இல்லன்னு இந்த ஆளை தேடி வந்த மாதிரி ரொம்ப தான் விரட்டிக்கிட்டே இருக்காரு” அவனுக்கு கேட்கிற மாதிரியே பேசினாள்.
அதில் சுல்லேன்று கோவம் வந்தது ஏகனுக்கு.
“ஏய்... வர்ற கோவத்துக்கு கன்னம் கன்னமா அறைஞ்சிடுவேன்” என்று கையை ஓங்கியவன் அசோக்குக்கு போன் போட்டு கத்தினான்.
“என்ன மச்சான் ஆச்சு? எதுக்குடா இவ்வளவு டென்ஷன் ஆகுற?” பதறிப்போய் கேட்டான் அசோக்.
“நீ வடிகட்டுன ஒரு முட்டாளை அனுப்பி வச்சு இருக்கியே அவளால வர்ற டென்ஷன் தான்”
“இங்க பாருங்க... என்னை திட்டுங்க.. ஆனா அறிவு இல்ல, முட்டாள் அது இதுன்னு திட்டுனீங்க அப்புறம் கடிச்சு வச்சிடுவேன்” சீறினாள் குழலி.
“பின்ன உன்னை அடி முட்டாள்னு சொல்லாம வேற என்ன சொல்றது?” அசோக்கிடம் இருந்து இவளிடம் தாவினான் ஏகன்.
“முட்டாள்னு சொல்ற அளவுக்கு அப்படி என்ன நடந்துக்கிட்டேன்.. பசிக்கிதுன்னு சோறு வாங்கினேன். அது தவறா...?” விழிகளில் கண்ணீர் இறங்க பேசியவளை கடுப்புடன் பார்த்தவன்,
“ஏய் முதல்ல அழறதை நிறுத்துடி.. சும்மா அழுது சீன போட்ட முகத்தை திருப்பி விடுவேன்” மிரட்டினான்.
“அப்படி தான் அழுவேன்... என் உணவை குப்பையில போட சொன்ன உங்க பேச்சை நான் ஏன் கேட்கணும். கேட்க மாட்டேன்” இன்னும் வீம்பு பண்ணினாள்.
“கேட்காதா... கேட்காம அப்படியே செத்து போயிடு... எனக்கு தலைவலி மிச்சம்.. உன்னை பாதுகாக்கிற வேலையில இருந்து நானும் ரிலிஸ் ஆகிடுவேன்” அவளிடம் எரிந்து விழுந்தான்.
“அது தானே நான் எப்படா சாவேன்னு பார்த்துக்கிட்டு இருக்கே ஆளு தானே” அவள் பேசி முடிக்க, ஏகப்பனுக்கு கடும் கோவம் வர, ஓங்கி அவளது கன்னத்திலே ஒன்று விட்டான்.
“ஆமான்டி உன்னை சாவ குடுக்க தான் என்கிட்டே தள்ளினான் பாரு அசோக்” கோவத்தில் முகம் சிவுசிவுத்தது.
அடி வாங்கியும் கொஞ்சமும் தளராமல், “இப்படியே சாப்பிட விடாம செய்ங்க. ஒரு நாள் அது நடக்க தான் போகுது” மல்லுக்கு நின்றாள்.
“உன் தலை... நீ இப்படியே வெளில வாங்கி தின்னு. உன்னை கொலை பண்ண நினைக்கிறவனுக்கு இந்த என்னை கொன்னுக்கோன்னு நீயே வாய்ப்பு குடுக்குற மாதிரி ஆகாதாடி...” முறைத்தான்.
ஏகன் சொல்லிய பிறகே குழலி அந்த வகையில் யோசித்துப் பார்த்தாள். அதுவும் நடக்க வாய்ப்பு இருக்கு தானே... தன்னை கொள்ள நினைக்கிறவனுக்கு தானே வாய்ப்பை வழங்கியது போல ஆகிவிடுமே...
அது தெரியாமல் ஏகனை முறைத்துக் கொண்டு திட்டிக் கொண்டும் அல்லவா இருந்தாள். அவன் சுட்டிக் கட்டியதில் முகம் சிறுத்துப் போக,
“சாரி” என்றாள்.
“போடி நீயும் உன் சாரியும்” என்றவன் லைனில் இருந்த அசோக்கை கூட சட்டை செய்யாமல் அவளின் படுக்கையிலே தன் போனை விட்டு எரிந்து விட்டு தன் அறைக்கு போய் விட்டான்.
குழலிக்கு பெரும் மன வருத்தமாய் போய் விட்டது. ச்ச.. தன் நல்லதுக்கு தானே அவன் இவ்வளவு தூரம் போராடினான். அதை புரிஞ்சுக்காம அவனை திட்டிட்டனே... என்று வருத்தப் பட்டவள்,
கன்னத்தில் சுரீர் என்று வலி எடுக்க,
“இருந்தாலும் இவ்வளவு முரட்டு தனமா நடந்துக்க கூடாது...” முணகியவள் தன் அருகில் இருந்த அவனது போனை எடுத்து பார்த்தாள். அதில் அசோக் ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டு இருந்தான்.
அவனது அழைப்பை துண்டித்தவள் அவனது போன் திறந்து இருக்க எடுத்து அதை பார்த்தாள். ஸ்க்ரீன் சேவரில் இருந்த புகைப்படத்தை பார்த்தாள்.
நான்கு ஐந்து பேர் அதில் இருந்தார்கள். பார்த்த உடனே தெரிந்தது அது அவனின் குடும்ப புகைப்படம் என்று. அப்பா அம்மா, தாத்தா, தங்கை மற்றும் இவன் என ஐவரும் இருந்தார்கள்.
அழாகான குடும்பம் என்று பார்த்த உடனே தோன்றியது.
இவ்வளவு அழகான குடும்பம் இருக்க ஏன் இவன் மட்டும் இங்கு தனித்து இருக்க வேண்டும்... என்ற யோசனை எழுந்தது. என்ன காரணமாக இருக்கும்...? அவளின் பார்வை மீண்டும் அலைபேசிக்கு சென்றது.
கெளரிக்கு போய் மற்ற புகைப்படங்களை எல்லாம் பார்வை இட்டாள். அதில் ஏகன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான், எவ்வளவு வசதியாக இருந்தான் என்று நன்றாக புரிந்துப் போனது. அதை விட அவன் எவ்வளவு பேரழகனாக இருந்தான் என்பதும் புரிந்துப் போனது.
தாடி எதுவும் இல்லாமல், ஓட்ட நறுக்கிய தலை முடியோடு, கத்தரி மீசையில் இருந்த அவன் நிச்சையம் ஆணழகன் தான். அவளையும் அறியாமல் அவளது விரல்கள் அவனது முகத்தை வருடி விட்டது...
இவ்வளவு அழகான முகம் கொண்டவன் ஏன் இப்போ இப்படி தாடி அடர்ந்து, முடியை ஒழுங்காக வெட்டாமல், எதையோ இழந்தது போல இருக்கிறான்... அவளுள் பல கேள்விகள் எழுந்தது. அதை அவனிடம் கேட்டால் இன்னும் ஒன்று கன்னத்திலே விடுவான் என்று எண்ணியவளுக்கு அவனின் இறுக்கத்தின் மீது கூட ஒரு அபிமானம் வந்தது.
அவன் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை வருடி விட்டவளுக்கு அவளின் குடும்பத்தினர் நினைவுக்கு வர கண்கள் கலங்கியது.
“என் பெற்றவர்களும் உடன் பிறந்தவர்களும் உயிருடன் இருந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும்” என்று கலங்கியவள் சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டவள், கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு அவனது போனை எடுத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்றாள்.
வெளியே இருந்தே கதவை தட்டினாள்.
உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. கதவு திறந்து இருந்த படியால் அந்த அறைக்குள் உள்ளே நுழைந்தாள். அங்கே கட்டிலில் தலைக்கு கையை வைத்து படுத்து இருந்தான் ஏகப்பன்.
“நான் கதவை தட்டும் சத்தம் கேட்டும் அழுத்தமா படுத்து இருக்கிறதை பாரு..” முணகியவள் அவனுக்கு அருகில் வந்து நின்றாள். அவன் கண்டுக் கொள்ளவே இல்லை.
அவள் வரும் அரவம் அவனுக்கு கேட்டது தான். ஆனால் அவன் அசையவே இல்லை.
“சாரி சார்” என்றாள். அவனிடம் எந்த அசைவும் இல்லை.
அவனிடம் அசைவு இல்லாததை பார்த்தவள், அவனுக்கு அருகில் கீழே மண்டியிட்டு அமர்ந்தவள்,
“உண்மையாவே சாரி சார்.. நீங்க யோசித்த ஆங்கிள்ள நான் யோசிக்கல.. இனி வெளியே உணவு வாங்கி சாப்பிடவே மாட்டேன். ப்ளீஸ் பேசுங்க சார்...” என்றாள்.
அவன் அப்பொழுதும் எதுவும் பேசாமல் போக,
“அது தான் கன்னம் வீங்குற அளவுக்கு அடிச்சுட்டீங்களே... இன்னும் என்ன சார்... ப்ளீஸ் பேசுங்களேன்” என்று அவனிடம் சொல்ல,
முகத்தில் இருந்து கையை எடுத்தவன் அவளை முறைத்துப் பார்த்தான்.
அவனது பார்வையில் தலை குனிந்தவள்,
“அது தான் அடிச்கிட்டீங்களே சார்...” குரல் உள்ளே போக சொன்னவளை இன்னும் முறைத்துப் பார்த்தான்.
“ப்ளீஸ் பேசுங்க சார்” கெஞ்சினாள்.
“அசோக்கை வர வச்சு நீ கிளம்பு” என்றான்.
“மாட்டேன்... மாட்டவே மாட்டேன்” என்றாள்.
“உன்னை எல்லாம் வச்சு சமாளிக்கவே முடியாது. இங்க இருந்தா நான் இப்படி தான் நடந்துக்குவேன். ஏன் இதை விட அதிகமாகவும் நடந்துக்குவேன். உனக்கு அதெல்லாம் சரி பட்டு வராது. உன்னை பொன்னே பூவேன்னு தாங்குற ட்ரைனரா பார்த்து போ” என்றான்.
“எனக்கு யாரும் வேணாம்... நான் இந்த ட்ரைனர் கிட்ட தான் கத்துக்குவேன்” என்றாள்.
“ஒன்னும் வேணாம் போடி” என்றான்.
“மாட்டேன்... உங்க கிட்ட தான் கத்துக்குவேன். எனக்கு நீங்க தான் வேணும்” என்றாள்.
“நான் எதுக்கு உனக்கு... அது தான் உன்னை பட்டினியா போட்டு கொல்றேன்னு சொன்னியே... இங்க இருந்தா நான் உன்னை கொன்னுடுவேன். அதனால நீ கிளம்பு” என்றான்.
“அது பசியில சொன்னேன். ஆனா இப்ப கொஞ்சமே கொஞ்சம் தெளிஞ்சுட்டேன். சோ எனக்கு இந்த ஏகா தான் வேணும்” என்றாள் அடமாய்.
“பேரு சொன்னா கொன்னுடுவேன்டி”
“நான் அப்படி தான் பேர் சொல்லுவேன்” என்று அவனிடம் வம்பு வளர்க்க,
“இன்னொரு கன்னமும் வீங்கிடும்”
“பரவாயில்ல.. நான் மருந்து போட்டுக்குவேன்” என்றவள்,
“பசிக்கிதுங்க சார்” பாவமாக கேட்டாள்.
“அங்க பண்ணு இருக்கு” என்றான் படுத்துக் கொண்டே.
“எது அந்த எக்ஸ்பைரி ஆன பன்னா?”
அதில் அவன் முறைக்க,
“உண்மையாவே டேட் முடிஞ்சி போயிடுச்சு சார்” என்றாள் பாவமாக.
“சரி போய் கிளம்பு... கடைக்கு போயிட்டு வரலாம்” என்றான்.
“ஐ சூப்பர்” என்றவள் கீழிறங்கி ஓடினாள். ஓடும் அவளை நெடுமூச்சு விட்டு பார்த்தவன் அவள் வைத்து விட்டு போன பேசியை எடுத்து பார்த்தான். அதில் இருந்த தன் குடும்ப புகைப்படத்தை தொட்டு வருடி விட்டான். அவனது நெஞ்சினோரம் சொல்லோன்னத துயரம் எழுந்தது. இந்த கணமே அவர்களுடன் தானும் ஒன்று சேர்ந்து வாழ ஆசை வந்தது.
முயன்று அடக்கிக் கொண்டு எழுந்து சட்டையை போட்டுக் கொண்டவன் வெளியே செல்ல கிளம்பி கீழே வந்தான். குழலியும் வேறு புடவை கட்டிக் கொண்டு வந்து நின்றாள்.
அப்ப இவன் ஃபேமிலி இருக்காங்க ...
ஆன ஏன் பிரிஞ்சி வந்து இப்படி இருக்கான்????
அப்ப இவன் ஃபேமிலி இருக்காங்க ...
ஆன ஏன் பிரிஞ்சி வந்து இப்படி இருக்கான்????
ஆமா இருக்காங்க டா அதுதான் கதை டிவிஸ்ட்😍