அவனுக்கு தன்னுடைய இடுப்பு தெரியக் கூடாது என்பதற்காக இடுப்பில் இருந்த புடவையை ரவிக்கையோடு சேர்த்து ஊக்கு போட்டு இருந்தாள். அதிலே முந்தானையை சொருக அது மீண்டும் மீண்டும் இடுப்பில் இருந்து நழுவியது.
அதை பார்த்தவனுக்கு கடுப்பாய் போனது. இப்படி நேரத்தை வீண் செய்கிறாளே என்று. வேகமாய் அவளை நெருங்கியவன், அவளின் இடுப்பில் இருந்த புடவையை வெடுக்கென்று கீழே இழுத்து விட்டான்.
அவன் இப்படி செய்வான் என்று எண்ணாதவள் திகைத்துப் போனாள். நழுவிய முந்தானையை பிடித்து அவளின் இடுப்பில் சற்று ஆழமாக சொருகினான். அப்படி அவன் சொருகும் பொழுது அவனது முரட்டு கை அவளின் வெற்று இடுப்பை தொட்டு உரசி நகர்ந்தது செல்ல விக்கித்துப் போனாள்.
முதல் முறையாக ஒரு ஆணின் கை அவளின் இடுப்பை தொட்டதில் சில நொடிகள் செயலற்று போனாள். அவளின் திகைப்பை பார்த்து இன்னும் கடுப்பானவன்,
“ஏய்...” என்று ஒரு அதட்டல் போட்டான்.
அவன் போட்ட அதட்டலில் சுயத்துக்கு வந்தவள்,
“இந்த மாதிரி எல்லாம் டச் பண்ணாதீங்க சார்” குரலை முயன்று கடுமையாக மாற்றினாள்.
“உன்னை தொடணும்னு எனக்கு ஒன்னும் ஆசை கிடையாது... இப்படி தேவை இல்லாம நேரத்தை வீண் பண்ணாதா.. எனக்கு சுத்தமா பிடிக்காது. நாளையில இருந்து ஒழுங்கா பேன்ட் சேர்ட் போட்டுட்டு வா... இல்லன்னா அப்படியே திரும்ப போயிடு” கடுப்படித்தவன் அவளை பார்த்து முறைத்தான்.
“சாரி சார்” என்று கேட்டவள், அவன் சொல்படி புஷ்ஷப் எடுக்க ஆரம்பித்தாள்.
புஷ்ஷப் போட்டே ஓய்ந்துப் போனாள். அவளுக்கு தோலெல்லாம் கலந்து வருவது போல ஆனது.
“ப்ளீஸ் சார்... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குறேன்” கெஞ்சி கூத்தாடி அவனிடம் அனுமதி வாங்கியவள் மரத்தில் சாய்ந்துக் கொண்டாள்.
ஒரே நாளில் கண்ணை கட்டியது அவளுக்கு. தன் பாதுகாப்பு ரொம்ப முக்கியமா... பேசாம எல்லாவற்றையும் பார்த்துக்க சொல்லி கோர்ட் மூலமாக ஸ்டே வாங்கி வைத்து விட்டு எங்காவது போய் விடலாம் போல என்று ஒரே நாளில் அவளை எண்ண வைத்து விட்டான்.
“போதும் நீ ரெஸ்ட் எடுத்தது.. வா” என்றவன் அவளுக்கு இன்னும் சில பல உடலை வலுவாக்கும் பயிற்சியை சொல்லி தர, இவளும் செய்தாள். ஆனால் செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுத்தது போல அவள் செய்ய, அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.
அதை எதிர்பாராதவளுக்கு விழிகளில் கண்ணீர் தேங்கியது. அவன் அறைந்த முரட்டு அறையில் கன்னத்தை பற்றிக் கொண்டாள். கன்னம் சிவந்து போய் வீங்க ஆரம்பித்தது நொடியில்.
“உன்னை வச்சு மேய்க்கிறது என்னோட வேலை கிடையாது. ஒழுங்கு மரியாதையா நான் சொல்றத செய்யிரதுன்னா இங்க இரு... இல்லன்னா இப்பவே இந்த இடத்தை விட்டு போயிடு..” காடே அதிரும் அளவுக்கு கத்தியவன் அவளை சட்டை செய்யாமல் அடுத்து அடுத்து என்று அவன் பயிற்சி கொடுக்க ஆரம்பித்து விட, இவளுக்கு அடி வாங்கியதில் ரோஷம் பீரிட்டு கிளம்ப, அதன் பிறகு அவன் எந்த குறையும் சொல்லாத அளவுக்கு தன் உடலை வருத்தி செய்ய ஆரம்பித்தாள்.
அப்பொழுதும் அவனது பார்வையில் எந்த வித பாராட்டும் தென்படவில்லை. மாறாக இன்னும் ஒழுங்கா வரலன்ற குற்ற சாட்டு மட்டுமே தென்பட்டது.
இவனை எல்லாம் திருப்தி படுத்தவே முடியாது சாமி எண்ணிக் கொண்டவளுக்கு அதிக தண்ணீர் குடித்ததின் விளைவு தெரிய தொடங்க, அவனின் முன்னாடி சிறு பிள்ளையாய் சுண்டு விரலை தூக்கி காட்ட வேண்டுமே என்று நொந்துப் போனாள்.
ஆனாலும் அவளால் சிறிது நேரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. வேறு வழியில்லாது அவனிடம் தன் சுண்டு விரலை மட்டும் தூக்கி காட்டினாள்.
பயிற்சி குடுத்துக் கொண்டு இருந்தவன் அவள் செய்யாமல் ஒரு விரலை மட்டும் தூக்கி காட்டவும் கடுப்பாகி விட்டான்.
அவளது செவில்லையே ஒன்று விட வர,
“சாரி சார்.. எனக்கு ரெஸ்ட்ரூம் போகணும்... அர்ஜென்ட்” கண்களை மூடிக்கொண்டு பயந்த படி வேகமாக சொன்னாள்.
தூக்கிய அவனது கை சற்றே நிதானித்தது.
“ப்ச்...” என்று உச்சு கொட்டியவன்,
“போயிட்டு சீக்கிரம் வா” என்று மைதானத்தை சுற்றி வர ஆரம்பித்தான். அவளுக்கு எங்கே போக வேண்டும் என்று தெரியவில்லை. சுற்றிலும் அடர்ந்த இருளை பூசிக்கொண்டு நின்றிருந்த மரங்களை கண்டு பயந்து வந்தது.
ஆபத்துக்கு பாவம் இல்லை.. அவனிடமே கேட்டு விடலாம் என்று அவனுக்கு எதிரில் வந்து நின்றாள்.
“இன்னும் என்னடி?” கடுப்படித்தான்.
“இல்ல எங்க இடம்னு தெரியல”
“அதுக்கு?”
“காட்டி குடுக்குறீங்களா?”
“ப்ச்” சளித்தவன்,
“சரியான இம்சையை என் தலையில கட்டி இருக்கான் அந்த அசோக் எருமை” வாய்க்குள் திட்டினான். ஆனாலும் அது அவளுக்கும் கேட்டது. அதில் அவளுக்கு குற்ற உணர்வு வந்தது.
ஆனாலும் அவளின் சூழ்நிலை மௌனமாக இருக்க வைத்தது.
“அங்க போ” என்று ஒரு இடத்தை காட்டினான். குளத்துக்கு எதிர் புறமாக ஒரு இடம் இருந்தது. அங்கே கொடிகளால் ஆன மறைவிடமும், கூடவே நீர் வசதியுடன் கூடிய வெஸ்டர்ன் டாய்லட்டும் இருந்தது.
“பார்ரா... ஒரு வனத்துக்குள்ள இவ்வளவு வசதியும் செஞ்சு வச்சு இருக்காரு” என்று அவனை பாராட்டியவள் தன் தேவையை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள். அவன் அதுவரை அவளுக்கு துணையாக சற்று தள்ளி நின்று இருந்தான்.
“பரவாயில்லை கேட்காமலே துணைக்கு எல்லாம் நிக்கிறீங்க?” வாயை விட்டாள் அவனிடம்.
அவளது கேலியில் முறைத்து பார்த்தவன்,
“இந்த பக்கமா ஒரு பாம்பு போச்சு... போனா போகுதேன்னு நின்னேன் பத்தியா என்னை சொல்லணும்டி” என்று அவன் முடிக்கும் பொழுதே அவனின் மீது பாய்ந்து இருந்தாள் பயத்தில்.
“ஏய்... என்னடி பண்ற? ப்ச்... கீழே இறங்குடி முதல்ல” தன் இடுப்பை கட்டிக் கொண்டு காலில் காலால் கட்டிக் கொண்டு நின்றவளை கண்டு எரிச்சல் மண்டியது அவனுக்கு.
“பாம்புன்னு சொன்னீங்களே”
“அதுக்குன்னு இப்படி தான் மேல வந்து விழுவியா?”
“இல்ல அது பயம்” என்று அவள் தலையை குனிந்துக் கொண்டாள்.
“முதல்ல கீழ இறங்கி பேசுடி” என்றான்.
“ஆனா பாம்பு இருக்கே”
“அது இந்நேரம் இந்த எல்லையை விட்டே போய் இருக்கும்” என்றான் கடுப்பாக.
அதன் பிறகே அவனை விட்டு விலகினாள்.
“போ போய் ட்ரைனிங்கை கண்டினியூ பண்ணு” எரிந்து விழுந்தான். அவனது வெற்று மார்பில் அவள் வந்து விழுந்த நெருக்கம் அந்த ஆறடி காட்டு மனிதனை என்னவோ செய்தது. அவளுக்கு பயத்தில் அந்த உணர்வுகள் எல்லாம் எதுவும் வரவில்லை போல...
தொடரும் 💞 💞
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைகளே.. இந்த நல்ல நாளில் அனைவரும் எல்லாம் சந்தோஷமும் எல்லா மகிழ்ச்சியும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கறேன்🥰