மக்களே பொறுத்துக்கோங்க... பாப்பாவுக்கு விடுமுறை விட்டாச்சு...
அதோட ஊருக்கும் கிளம்புறோம். சோ மூன்று நாளைக்கு கதை வராது... இடையில் முடிஞ்சா கதை போடுகிறேன். அப்படி இல்லன்னா செவ்வாய் கிழமையில் இருந்து தொடர்ந்து இராண்டு கதைகளும் வரும்... ரீரன் கதை எப்பொழுதும் போல தினமும் 2 எபிசொட் வரும்..
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைகளே...
எல்லாவற்றையும் மறந்து கடந்துப் போன கசப்புகளை எல்லாம் துறந்து இருவரும் ஒருவரில் ஒருவர் உருகி கரைந்து கலந்துப் போனார்கள். காதல் கணவனின் மார்பில் துயில் கொண்டு இருந்த சங்கவைக்கு விழிப்பு தட்ட மெல்ல எழுந்துக் கொண்டாள். உடலில் மெல்லிய போர்வை மட்டுமே இருந்தது.
இரவு எழுந்து உடைமாற்ற செஞ்சன் அவளை அனுமதிக்கவே இல்லை. வெட்கத்துடன் தன் உடலை விட்டு நழுவிய போர்வையை இழுத்து மார்போடு அனைத்துக் கொண்டவள், எழ பார்க்க, அவளது அசைவில் கண் விழித்து விட்டான் செஞ்சன்.
“என்னடி அவசரம்... ஏன் எழுந்துக்கிட்ட... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கேன்” என்றவன் அவளை தன் மீது மீண்டும் இழுத்து போட்டுக் கொண்டான்.
“விடிஞ்சி போயிடுச்சுங்க...” என்று சிணுங்கினாள்.
“அதனால என்ன.. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போய்க்கலாமே..”
“அத்தை கோயிலுக்கு போகலாம்னு சொன்னாங்க”
“சரி.. வா குளிச்சுட்டு கிளம்புவோம்” என்று அவன் அசால்ட்டாக சொல்ல, மிரண்டு போனாள் சங்கவை.
“விளையாடாதீங்க செஞ்சா... ரெண்டு பேரும் தனி தனியா குளிக்கலாம்”
“தனியா குளிக்கவா கல்யாணம் பண்ணுனேன்” முறைத்தான்.
“ப்ளீஸ்.. செஞ்சா” என்றவளின் நாணம் அவனுக்கு புரிய, சரி போ என்று அனுமதித்தான்.
இவள் குளித்து விட்டு வர, அரைகுறை உடையுடன் வந்தவளை கண் எடுக்காது பார்த்தவன்,
“நைஸ்” என்றான்.
“ப்ச்.. கேலி பண்ணாம போய் குளிங்க... ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்” என்று அவள் கிளம்ப ஆரம்பித்தாள்.
அதோடு படுக்கையை சுத்தம் செய்ய ஆரம்பிக்க,குளித்து விட்டு வந்தவன் அவளுக்கு உதவி செய்தான்.
“நான் பார்த்துக்குறேன் செஞ்சா”
“நானும் உதவி பண்றேண்டி” என்றவன் படுக்கையில் இருந்த அவளின் உடைந்துப் போன வளையல்களை எடுத்து மேசை மீது வைக்க,
“குப்பையில போடாம எதுக்கு அதை எடுத்து அங்க வைக்கிறீங்க”
“இது போக்கசம்டி” என்றவன் அதை பத்திராப்படுத்தினான்.
அவனது காதலில் எப்பொழுதும் போல நெகிழ்ந்தவள் அவனின் முதுகோடு வந்து சாய்ந்துக் கொண்டாள். சாய்ந்தவளை கண்ணாடி வழியாக பார்த்தவன் பின்னாடி கை விட்டு முன்புறமாக இழுத்துக் கொண்டவன், அவளின் நெற்றியில் நெற்றி முட்டி இதழ்களில் தன் இதழ்களை உரசினான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், மென்மையாக அவனின் இதழ்களை சிறை செய்துக் கொண்டாள். தடுமாறிய அவனது கைகளை எடுத்து தன் இடையில் கொடுத்தவள் அவனிடம் இன்னும் ஒன்றிப்போனாள்.
அவளது ஒன்றுதலில் மனம் நிறைந்தவன் தன் கைகளில் அப்படியே தூக்கிக்கொண்டான்.
இப்பொழுது இன்னும் வாகாக அவள் முத்தம் கொடுக்க மயங்கிப் போனான் செஞ்சன்.
“மயக்குறடி” என்றவன் அவளை தூக்கி படுக்கையில் போட பார்க்க,
“நோ செஞ்சா.. அத்தை நமக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க” என்றாள்.
“சரி தப்பிச்ச” என்றவன் அவளின் இதழ்களில் சற்றே அலுத்தமாக முத்தம் வைத்தான்.
அவனது வன்மையான இதழ் முத்தத்தில் அவளின் இதழ்கள் ஏகத்துக்கும் சிவந்துப் போனது. அவளின் முகமும் கூடவே சிவந்துப் போக, அதை இரசித்தபடி அவளுடன் கை கோர்த்து கீழே இறங்கினான்.
இருவரும் ஒன்றாக வருவதை பார்த்த வாசுகிக்கு மனம் குளிர்ந்துப் போனது...
“இந்த கண் கொள்ளா காட்சியை காண தானே இவ்வளவு நாளும் உயிரை கையில பிடிச்சுட்டு இருந்தேன்”
என்று கண்களை துடைத்துக் கொண்டார்.
அவரை ஆறுதலாக பற்றிக் கொண்டான் பரவாசு... தாயிடம் வந்த செஞ்சன் அவர் கலங்கி நிற்பதை பார்த்து தோளோடு அனைத்துக் கொண்டவன்,
“என்ன ம்மா இது? இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்கீங்க” கண்டித்தான்.
“அட போடா உனக்கு ஒரு நல்லதை செய்து வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்” என்றவர், அவனின் கையை தட்டி விட்டுட்டு சங்கவையின் கைகளை பற்றிக் கொண்டு,
“நீ எங்க துயரத்தை போக்க வந்த தேவதை கண்ணா” என்று ஆதுரமாக அவளை கொஞ்ச, இங்கே ஒருவனின் வயிறு காந்தியது.
“ம்மா” என்று பொறாமையில் பொங்கினான்.
“போடா டேய் போடா” என்றவர் மகனை கண்டுக் கொள்ளாமல் தன் மருமகளை கொஞ்ச,
“என்ன மச்சான் காதுல இருந்து புகை வருது” நக்கல் பண்ணினான் பரவாசு.
திரும்பி அவனை முறைத்தான் செஞ்சன்.
“இல்ல மச்சான் உன் அம்மாவுக்கே சங்கவையை விட்டு தர மாடிக்கிறியே...” என்றான் அசடு வழிந்து.
“அவ அம்மாவுக்கே விட்டு தர மாட்டேன். ஏன் அவளுக்கே அவளை விட்டு தர மாட்டேன்... எங்க அம்மாவுக்கா விட்டு தருவேன்” என்றவன் தன் தாயிடம் இருந்து சங்கவையை கை பிடித்து இழுத்து தன் கையணைவில் வைத்துக் கொண்டான்.
“டேய் அவக்கிட்ட பேச விடுடா”
“எதா இருந்தாலும் இப்படியே பேசுங்க” என்றவனை முறைத்து பார்த்தார்.
“டேய் அவ என் மருமக..”
“ஆனா அவ என் பொண்டாட்டி. சோ எனக்கு தான் உரிமை அதிகம்”
“மண்ணாங்கட்டி... நான் இல்லன்னா நீ இந்நேரம் சிங்கிளா மரத்தை சுத்தி தான் டுயட் பாட்டிட்டு இருந்து இருப்ப”
“அதுக்காக எல்லாம் இவளை நீங்க கொஞ்ச அனுமதிக்க மாட்டேன். இவளை தரவும் மாட்டேன்” என்றான்.
“மானத்தை வாங்காதீங்க செஞ்சா” என்றாள் சங்கவை.
“ஏய் என் உரிமைக்கு போராடுறேன்டி” என்றவனை மூவரும் முறைத்துப் பார்த்தார்கள்.