அது எல்லாம் ஒரு நிமிடம் தான் “கலுசடைன்களா முதல்ல என்னை விடுங்க.. ஏண்டி அங்க என்ன ரெண்டு பேரும் பல்ல காமுச்சுக்கிட்டு இருக்கீங்க.. உள்ள போய் வேலைய பாருங்கடி..” பெண்கள் இருவரையும் துரத்திவிட்டவர்
“ஏலேய் கொழுந்து போய் குளுச்சுட்டு வாலே எப்போ பாரு என்னுகிட்ட உறண்ட இழுத்துக்கிட்டு..” தன் மகனை தன்னிடமிருந்து விளக்கி தள்ளிவிட்டுட்டு
“டேய் எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்லடா என்னை விடுடா..” என்று பேரனிடமிருந்து விளக் பார்க்க
“இப்போ நீ போய் என்ன பண்ண போற.. அதான் அவுக சமைக்கிராங்கள்ள நீ கொஞ்ச நேரம் என் தலைய புடுச்சு விடு..” சட்டமாய் படுத்துக்கொள்ள
“அதுக்கு தான் என் பேத்தி சாந்தி இருக்காளே.. நீ ஒரு கடுதாசி போட்டா உடனே வந்து நிக்க போறா.. கூப்பிட்டு அவ மடியில படுத்துக்க வேண்டியது தானேடா.. வயசான கிழவி மடியில படுத்துக்கிட்டு படுத்தாதடா... பயண களைப்பு கூடவே பேருந்துல காலை தொங்க போட்டு வந்தது வலிக்குது..” என்று சொல்ல
“என்ன இருந்தாலும் உன் மடி மாதிரி வருமா..” என்றவன் இன்னும் வசதியாக படுத்துக்கொள்ள அவன் தலையிலே கொட்டினார். அதெல்லாம் சட்டை செய்யாமல் படுத்து இருந்த படி அவரது ரெட்டை சங்கிலியை பிடித்து ஆட்டிக்கொண்டு இருந்தான்.
“யம்மாடி மருமவளே...” கொழுந்து ஒரு பக்கம் உளறிக்கொண்டு இருக்க
“வந்துட்டேன் மாமா..” என்றவள் கைகளில் அவருக்கு பிடித்த முறுக்கு மற்றும் கார வகை தீனியை கொண்டு வந்து கொடுத்தவள் இன்னொரு பாத்திரத்தில் சுடு தண்ணியை கொண்டு வந்து துணியால் நனைத்து பொன்னிக்கு ஒத்தடம் குடுக்க நொடித்துக்கொண்டார் அவர்.
“கிழவி பிடிக்காட்டியும் என்ஜாய் பண்ணு” பேரன் சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்த முகில் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் தன் வேளையிலே கவனமாய் இருந்தாள்.
“ஹும் இதே என் பேத்தி இந்த வேலையை செஞ்சி இருந்தா இந்நேரத்துக்கு என் கால் வலி எல்லாம் பறந்து போய் இருக்கும்.. நீயும் தான் இருக்கியே ஒரு வேலை செய்ய தெரியுதா..” என்று திட்ட தொடங்க
வேகமாய் வந்த பருவதம் அவளிடமிருந்து துணியை வாங்கியவர் “நீ போய் சமையலை பாரு” என்று பொன்னிக்கு ஒத்தடம் குடுக்க
“பரவால அத்தை நான் செய்யிறேன்” என்று நிற்க
“சொன்னா சொன்ன பேச்ச கேக்க மாட்டியா.. போன்னு சொல்றேன்ல போ கண்ணு” என்க
சமையல் அறைக்கு சென்று அங்கு அவர் விட்ட வேலைகளை பார்க்க தொடங்க
“ஏண்டி இன்னும் எத்தனை நாள் என்கிட்டே இருந்து உன்ற மருமகளை காப்பாத்துவ” நக்கலாய் கிழவி கேட்க
“எவ்வளவு நாள் என்னால முடியுமோ அவ்வளவு நாள் பாத்துக்குவேன்..” என்று அலட்டாமல் அவர் சொல்ல
“அதையும் பார்க்கலாம்டி.. உன்னையும் உன் மருமவளையும் இந்த வீட்டை விட்டு துரத்தல என்ற பேரு பொன்னியாத்தா இல்லடி” அவர் கொக்கரிக்க
“நான் கல்யாணம் ஆகி வந்த நாள்ல இருந்து நீயும் இதே பாட்டை தான் படிக்கிற, நானும் இதே பதிலை தான் சொல்றேன்.. வேற வேலை இருந்தா போய் பாரு த்த” என்று அசால்ட்டாய் பருவதம் தன் மாமியாரை வார
“அச்சச்சோ இப்படி அசிங்க படுத்துறாலே..” நினைத்துக்கொண்டவர் “ஏதோ போனா போவுதே வாழவேண்டிய புள்ளையாச்சேன்னு விட்டு வச்சேண்டி.. ஆனா நீ என்னையே போட்டு தாக்குறீயே இருடி என் மகனை விட்டு உன்னை இந்த வீட்டை விட்டு துரத்தி அடிக்கிறேன்” சவால் விட
“முடிஞ்சா செஞ்சுக்கோ அத்த..” என்றவர் “சூடா ரொட்டி போட்டு வச்சு இருக்கேன்.. வா வந்து சாப்பிடு.. ஏலேய் நீயும் தாண்டா.. வா” என்று இருவரையும் சாப்பிட அழைக்க
“செம்ம பல்ப்பு அப்பத்தா.. தேவையா உனக்கு இது..” பழமலை கிண்டல் பண்ண
“ஏலே என்னையவா கிண்டல் பண்றீக.. என் மவளும் என் பேத்தியும் இந்த ஆடி மாச திருவிழாவுக்கு வரட்டும் டி.. அப்புறம் இருக்கு உனக்கு.. அவிங்களோட சேர்த்து உனக்கும் ஆப்பு வைக்கிறேன்..” சொல்ல
“அதை அப்புறம் பார்த்துக்கலாம் இப்ப வா போய் சாப்பிடலாம்..” என்ற படி அவரை அழைத்துக்கொண்டு சாப்பிட போக கொழுந்து அவர்களுக்கு முன்பே பந்தியில் அமர்ந்து இருக்க
“எந்த வேலை ஆகுதோ இல்லையோ இந்த வேலைய மட்டும் உன் புள்ள தவறாம செஞ்சிடுராறு..” பழமலை நக்கல் பண்ண
“போடா டேய் எப்படி இருந்தாலும் என் மகன் ஆம்பளை சிங்கம் டா..” பெருமை பேச
“ம்கும்” என்று நொடித்துக்கொண்டார் பருவதம்.. அன்றிரவு முகில் சாப்பிட்டு விட்டு பாட்டியின் காலுக்கு தையிலத்தை தேய்த்து அழுத்தி அமுக்கி விட பொன்னிக்கு ஆஹா என்று இருந்தது..
“ம்ம் அப்படியே முதுகையும் அழுத்திவிடு..” என்று குப்புறக்க படுத்துக்கொள்ள சின்ன சிரிப்புடன் அவரது தேவையை செய்தாள்.
“ஆனாலும் உனக்கு கை பக்குவம் வரல..” என்று தன் பேரனின் குணத்தை போலவே அவனோடு ஒத்து பாட முகில் எதுவும் பதில் பேசவில்லை.
“என்னடி மனசுக்குள்ளே என்னை திட்டிக்கிட்டு இருக்கியா..”
“அய்யய்யோ அப்படியெல்லாம் இல்ல பாட்டி..” பதறி போனாள்.
“இங்க பாரு நீ என்ன சேவகம் செஞ்சாலும் என் மனசு மாறாது.. என் பேரன் சாந்திக்கு தான்.. உன் மனசுல அவனை நினைச்சி இருந்தீன்னா அடியோட அழிச்சுடு.. உன் மாமான் பையன்கள்ள எவனையாவது கட்டிக்க..” என்று சொல்ல
“நீங்க சும்மா குடுத்தா கூட எனக்கு வேணாம் உங்க பேரன்” என்று அவள் பட்டென்று பேசிவிட அதுவரை படுத்து இருந்தவர் விரட்டென்று எழுந்து
“என்ன ஏத்தமடி உனக்கு எவ்வளவு திமுரு இருந்தா என் முன்னாடியே என் பேரனை வேணாம்ன்னு சொல்லுவ.. அவன் குணம் தெரியுமாடி உனக்கு.. அவன் கால் தூசிக்கு பொற மாட்ட.. போடி நீ தான் பெரிய இந்த படிப்பு படுச்சி இருக்குற.. என் பேரன் படிக்காத மேதை டி.. அவன் அருமை உனக்கு இப்போ தெரியாது.. போவ போவ நீ அவனை தேடல என் பேரு பொன்னி இல்லடி.. எனக்கு வேணாம் உன் சவரட்டனை” என்று அவளது கைகளை தட்டிவிட
“நீங்க தான் உங்க பேரனை எனக்கு தரமாட்டேன்னு சொன்னீங்க.. இப்போ நீங்களே அவரை எனக்கு தருவதா அதுவும் அவர் நினைப்புல வாழ போரென்ற மாதிரி பேசுறீங்க.. எனக்கு ஒரு சந்தேகம் உங்க பேரனை யாருக்கு தர போறீங்கன்னு முதல்ல யோசிங்க. அப்புறம் என் கிட்ட வந்து உறுதியா பேசுங்க..” என்றவள் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அவரை படுக்கையில் தள்ளிவிட்டு மீண்டும் கை கால்களை ரத்த ஓட்டம் சீராக பாய்வதற்கு அழுத்தி விட பொன்னியும் தான் பேசிய பேச்சை கண்டு “ச்சை.. இவ கிட்ட இப்படி கோட்டை விட்டுட்டமே..” என்று புலம்பியபடி அவளது கை செய்யும் மாயத்தில் அசந்து தூங்கி போனார்.
தன் வேலைகளை முடித்துக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு தூங்க சென்றவளை இடை மறித்தான் பழமலை..
“என்ன” என்பது போல அவனை பார்க்க “நேத்திக்கு பூரா கொசுக்கடியில என்னால தூங்க முடியல.. அதனால என்னையும் தூங்க வை” என்று சொன்னவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“என்ன முழிக்கிற.. உன்னால தானே எனக்கு தூக்கம் போச்சு.. அதனால நீ தான் என்னை தூங்க வைக்கணும்..” என்று அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு அவனது அறைக்கு போக கத்த கூட முடியாத நிலையில் அவனுடன் சென்றாள்.
“இதோ பாருங்க என் கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்குறது கொஞ்சம் கூட சரி இல்லை பார்த்துக்கோங்க..”
“எது சரி எது தப்புன்னு இப்ப பார்க்க எனக்கு நேரம் இல்ல நீ வா..” என்று அவளை கை பிடித்து இழுத்து தன் படுக்கையில் தள்ள பதறி போனாள்.
“இது ரொம்ப தப்பு.. சாந்திக்கு தெருஞ்சா அவ்வளவு தான்”
“ஏய் யாரை எப்படி சமாளிக்கனும்னு எனக்கு தெரியும் டி.. நீ வா” என்று அவளை இழுத்து தன் தலையை கோதிவிட வைக்க தலையிலே அடித்துக்கொண்டவள் அவன் செயலுக்கு உடன் பட்டாள்.
“அவ வரட்டும்.. அவ வந்தா தான் உங்க கோட்டம் அடங்கும்..” கருவியவள் அவன் தூங்கும் வரை அவனுக்கு தலை கோதிவிட்டாள்.
அவன் ஆழ்ந்த உறக்கத்துக்கு போன பிறகே அவள் எழுந்து தூங்க போனாள். அதை எல்லாம் பாராமல் பார்த்துக்கொண்டு இருந்த பருவதத்துக்கு உள்ளுக்குள் நம்பிக்கை ஊர்ந்தது.. ஆனாலும் காலம் அதை எப்படி நடத்தும் என்பதை அறியாமல் இருந்தார்..
அடுத்த நாள் எப்பொழுதும் போல விடிந்தது.. இரண்டு நாட்கள் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியாக இருந்த முகில் அன்று இருதலை கொள்ளியாய் மாறி போனாள். பாட்டி ஒரு புறம் என்றால் பேரன் ஒரு புறம் இருந்து அவளை வதைக்க நொந்து தான் போனாள்.
முகிலின் மீது இருந்த கோவத்தில் இன்னொரு வேலையாளை போட்டு இருந்த செய்தி கேட்டு பாட்டி தாம் தூம் என்று குதித்து அந்த வேலை எல்லாத்தையும் முகில் தான் செய்யணும் என்று கட்டன் ரைட்டாக பேரனும் பாட்டியும் சொல்ல அவளுக்கு வேலை நெட்டி முறித்தது.. அவளும் வேலைக்கெல்லாம் அலுத்துக்கொள்ளாமல் விருப்பட்டு தான் செய்துக்கொண்டு இருந்தாள். ஆனால் இருவரும் செய்த அட்டகாசத்தை தான் அவளால் தாங்க முடியவில்லை.
கொழுந்தும் பருவதமும் வயற்காட்டு மஞ்சள் கிழங்கு ஊன போய் இருந்தார்கள்.
காலையில் பதினோரு மணிக்கு எழுந்த பழமலை “ஏட்டி சூப் எங்கடி..” பல்லு கூட விலகாமல் அவளிடம் வம்புக்கு நின்றான். இன்னொரு பக்கம் வெத்தலை பாக்கை போட்டு கொதப்பிய படி
“ஏட்டி முகிலு இங்கனவா என்ன வீட்டை கூட்டி வச்சு இருக்க அங்கேயும் இங்கேயும் மண்ணா இருக்கு.. ஒரு வேலையை ஒழுங்கா செய்யிற” அதட்ட
“நான் இன்னும் வீட்டை கூட்டவே இல்ல பாட்டி.. வெளி வாசல் தான் கூட்டி விட்டேன்” என்க
“வெளி வாசல்னு சொல்ல வந்து தான் வீடுன்னு சொல்லிட்டேன்.. போ போய் ஒழுங்கா வெளி வாசலை கூட்டு அதுக்குள்ள பதில் பேச வந்துட்டா” என்று சமாளித்தார்.
பதில் எதுவும் சொல்லாமல் கூட்டி விட போக பழமலையோ “ஏய் முதல்ல எனக்கு சூப்ப குடுடி..” என்று மல்லுக்கு நின்றான்.
சரி இவனுக்கு எடுத்து குடுத்துவிட்டு கூட்டிவிட போகலாம் என்று பார்த்தால் “ஏலேய் போய் முதல்ல பல்லவிளக்குல பொறவு வந்து குடி..” என்று அவனை விரட்டி விட்டார் பொன்னி..
“அதெல்லாம் எனக்கு தெரியும் நீ போய் உன் வேலையை பாரு..” என்று அவரிடமும் மல்லுக்கு நின்றான். அவரும் சும்மா இல்லாமல் “ஏலேய் போடா குளிச்சுட்டு சுத்த பத்தமா வா. சொன்னா சொன்ன பேச்சை கேளு.” என்றார்.
“ஏன் என்னை பொண்ணு கின்னு பாக்க கூட்டிட்டு போறியா கிழவி..” அவன் நக்கல் பண்ண
“ம்கும் நீ கெட்ட கேட்டுக்கு பொண்ணு பாக்குறது தான் டா குறைச்சல்.. எதோ பழமொழி சொல்லுவாங்களே.. ம்ம் என்னது..” யோசித்தவர் “ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே வக்கு இல்லையாம்.. அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம்..” என்று வம்பு பண்ணினார் அவனிடம் சூசகமாக. அதை புரிந்துக்கொண்டவன் பல்லை கடித்து
“ஏய் கிழவி யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற.. இப்பவே எனக்கு கல்யாணத்தை பண்ணி வை..” என்றவன் பின் யோசித்து “ச்சீ ச்சீ கல்யாணம் கூட வேணாம் இதோ நிக்கிறாலே இவளை இப்பவே என்னோட ரூமுக்கு அனுப்பி வை பொறவு பாரு ஒன்பதாவது மாசமே உன்னை கொள்ளு பாட்டி ஆக்கி காமிக்கிறேன்” என்று மீசையை முறுக்கி சொல்ல
“தில்லு இருந்தா இந்நேரம் என்கிட்டே இப்படி பேசிக்கிட்டு இருக்க மாட்ட டோய்.. இந்நேரத்துக்கு அவளை தூக்கிட்டு போய் என்னை கொள்ளு பாட்டி ஆக்கி இருக்கனும்டா.. பெருசா பேச வந்துட்ட போடா போக்கத்தவனே..” என்று அவனை சீண்டி விட முகிலுக்கு கண்ணை கட்டிகொண்டு வந்தது..
“இப்பவே செய்யிறனா இல்லையான்னு பாரு கிழவி..” என்றவன் முகிலை நெருங்கி அவளின் இடுப்பில் கை வைத்து அலேக்காக தூக்கி தன் தோள் மேல் போட்டுக்கொண்டு அவனது அரை பக்கம் போக முகிலுக்கு தான் மூச்சு முட்டி போனது.
“அடேய் உங்க வாய் தகராறில் நான் எங்க இருந்து டா வந்தேன்..” என்று அவள் மனதுக்குள் அலறி அவனிடமிருந்து கீழே இறங்க முயன்றாள்..
அவளை தோள் மேல் தூக்கிக்கொண்டவன் திரும்பி தன் கிழவியை ஒரு பார்வை பார்க்க அவர் அவனை பார்த்து கண்ணடித்தார்..
இவனும் பதிலுக்கு கண்ணடித்தான்.. கூடவே உதட்டை குவித்து முத்தம் ஒன்றையும் அவருக்கு குடுக்க அவர் அதை மன நிறைவுடன் வாங்கிக்கொண்டார்.
அட என்ன மானங்கெட்ட குடும்பம் டா இது🤦🤦🤦
ஒரு பாட்டி செய்யர வேலையா இது😤😤😤😤