அன்று மாலை வீட்டுக்கு வந்த பொன்னி தன் பேரனை காணாமல் மாமியார் மருமகள் இருவரையும் கரித்துக்கொட்டினார்.
“எவ்வளவு ஏத்தமடி உங்களுக்கு... ரெண்டு சிறுக்கிகளும் சேர்ந்து என் பேரனை வீட்டை விட்டு துரத்திட்டீங்களே நல்லா இருப்பீங்களா.. அவன் மட்டும் இன்னைக்கு வராமா இருக்கட்டும் இந்த பொன்னி யாருன்னு காட்டுறேன்...” என்று வந்தவுடனே ஒப்பாரி வைத்து இருவரையும் திட்ட பருவதம் எதையும் கண்டுக்கொள்ளாமல் கூடத்தில் அமர்ந்து வெங்காயம் உரித்துக்கொண்டு இருக்க முகிலுக்கு தான் பதக்கு பதக்குன்னு இருந்தது..
“எல்லாமே என்னால தான்.. இவன் வீட்டை விட்டு போனதோட இப்போ அத்தைக்கும் என்னால திட்டு விழுது.. இவனை யாரு வீட்டை விட்டு போக சொன்னது.. நான் ஏதோ ஒரு கோவத்துல சொன்னேன்னா உடனே வீட்டை விட்டு போயடுறதா.. இவன் வேணும்னு தான் போய் இருப்பான். எங்க ரெண்டு பேருக்கும் திட்டு வாங்கி வைக்க தான் இவன் இப்படி எல்லாம் பண்றான்.. ப்ராடு..” மனதிலே அவனை திட்டிக்கொண்டு இருந்தாள்.
“ஏய் வெளியே வாடி..” என்று பொன்னி அவளை அழைக்க
“அய்யய்யோ கிழவி என்னை கூப்பிடுதே.. இப்போ என்ன பண்றது.. அது கண்ணுல மாட்டுனேன்.. செத்தேன்..” என்று அலறினாள்.
“என் பேரனை வீட்டை விட்டு துரத்திட்டு நீ என்னடி எஜமானி மாதிரி வீட்டுக்குள்ள ஜம்பமா படுத்து இருக்குற வாடி வெளியில..” தன் வெண்கல குரலில் முகிலை அழைக்க பயம் வந்து வயிற்ரை(மனதை) கவ்வியது..
“பாட்டி..” தயங்கி தயங்கி அவள் வெளியே வர
“வாடி மவராசி.. வா..”
“பாட்டி..”
“என் பேரன் அப்படி என்ன பண்ணான்னு நீயும் உன் அத்தை காரியும் அவனை துரத்திவிட்டீங்க...”
“அப்படியெல்லாம் இல்ல பாட்டி..” தயங்கி தயங்கி பேசினாள். அவரிடம் அவ்வளவு பயம் அவளுக்கு.. முகிலை அவருக்கு பிடிக்காது தான் காரணம். அவளை எதாவது ஏசிக்கொண்டே தான் இருப்பார் அவர்..
இப்படி இருக்கும் போது அவரின் செல்ல பேரனை வீட்டை விட்டு துரத்தினால் சும்மா இருப்பாரா அவர்..
வைத்து செய்துவிட்டார் அவளை.. “ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுன கணக்கா இதென்னடி கூத்தா இருக்கு... இங்க பாரு ஒழுங்கா இருந்தா இந்த வீட்டுல இரு இல்லையா உங்க மாமான் காரன் தான் வந்து உன்னை கூட்டிட்டு போக வந்தானே கூட போய் தொலைஞ்சு இருக்க வேண்டியது தானே.. எதுக்கு டி என் பேரனை ஒளிச்சு கட்ட பாக்குற...” அவர் பாட்டுக்கு பேச முகிலுக்கு கண்கள் கலங்கியது..
“சும்மா எனக்கு முன்னாடி இந்த நீலி கண்ணீர் வடிக்கிறத நிறுத்திட்டு போ போய் உன் மாமன எங்க இருக்கான்னு கூட்டிட்டு வா..” என்று கட்டளை இட
“ஐயோ” என்று வந்தது. “
‘அவனை எங்கன்னு தேடுறது.. நேரம் வேற மங்கிக்கிட்டு இருக்கே..’ முனகியபடி அவள் வெளியே செல்ல
“அவ எங்கேயும் போக மாட்டா உங்களுக்கு வேண்ணா நீங்க போய் உங்க பேரனை தேடிக்கோங்க” என்று பருவதம் சொல்ல
“வாடி எங் கப்ப கிழங்கு.. பெத்த மகன்னு கொஞ்சமாச்சும் அவன் மேல பாசம் வச்சு இருக்கியாடி.. எப்போ பாரு இவளையே தூக்கிவச்சு கிட்டு பேசுற..”
“ம்கும் அவளை இடுப்புல தூக்கி வச்சு பேசிக்கிட்டு இருக்கனாக்கும்..” பருவதம் தன் முகத்தை தோல் பட்டையில் இடித்துக்கொண்டார்.
“என் பேரன் இவளால தான் வீட்டை வெளியே போய் இருக்கான். ஒரு நா ரா பூரா என் பேரனை காங்கல ஆருக்காச்சும் பதறுது.. அவன் பசி கூட தாங்க மாட்டான்.. அதனால இவ தான் போய் தேடனும்..” என்றவருக்கு மறுத்து பேச வந்த பருவதத்தை தடுத்து
“இல்ல அத்த நான் போய் தேடுறேன்” என்றவள் செல்ல கூடவே கிழவி சோலையை துணைக்கு அனுப்பினார்.
அவன் செல்லும் இடமெல்லாம் தேடி சென்றாள் முகிலாம்பிகை.. ஆனால் அவன் இருக்கும் இடம் மட்டும் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
“எங்க தான் போய் தொலைஞ்சானா இம்சை..” வெறுத்து போய் வந்தது அவளுக்கு..
“ம்மா ஒரு வேலை பாம்பு செட்டுல இருப்பாகளோ..” என்ற போதே இவளுக்கு ஜெர்க்கானது.. வேகமாய் அங்கே போய் பார்க்க அவன் இல்லை. அப்பாடா என்று இருந்தது.. பின்னே அவனது லீலைகள் எல்லாம் அரங்கேறும் இடம் அல்லவா அது..
“எங்கடா இருக்க பழமலை” கடுப்பானாள் இவள்.
“சரி நீ போ சோலை நான் பார்த்துக்குறேன்” என்று அவளை அனுப்பிவிட்டு அவன் வயக்காட்டுக்கு மத்தியில் அவனுக்கென்று கம்பு சுத்தும் இடம் ஒன்று இருக்க வேக வேகமாய் அங்கே சென்று பார்த்தாள்.
சுற்றிலும் மரத்தாலே அரண் அமைக்க பட்டு நடுவில் நன்கு பழக்கமாகி தேய்ந்து போன மண் தரை இருக்க அதில் வேற்று உடம்போடு வியர்வை வழிய வேட்டியை மட்டும் இடுப்பில் இருக்கமாக கட்டிக்கொண்டு கம்பு சுழற்றிக்கொண்டு இருந்தான் பழமலை..
அங்கே அவனை கண்ட பின்பே மனம் நிம்மதியில் ஆழ்ந்தது.. அவன் பாட்டுக்கு கம்பு சுத்திக்கொண்டு இருக்க இவள் அவன் முன் வந்து நின்றாள். அவனோ அவளை கண்டுக்கொள்ளாமல் சுத்திக்கொண்டு இருக்க
“வீட்டுக்கு வாங்க” என்றாள். அவனோ அதை காதிலே வாங்கிக்கொள்ளவில்லை..
“உங்க கிட்ட தான்..” என்ற போதே “பெருசா சொன்ன என் மூஞ்சியில முழிக்க கூடாதுன்னு.. இப்போ என்ன ஆச்சு..” என்று சுத்துவதை விடாமல் சுழற்றிக்கொண்டே பேச அவள் தான் இறங்கி போக வேண்டியதாய் போனது..
“தெரியாம சொல்லிட்டேன்.. வாங்க வீட்டுக்கு..” என்றாள் அவனை பார்த்து..
“ம்ஹும்..” என்றவன் “நீ மறுபடியும் அப்படி சொல்ல மாட்டன்னு என்ன நிச்சயம்..” அவன் உறுதி வாங்க தலையிலே அடித்துக்கொண்டவள் “கண்டிப்பா இன்னொருமுறை அப்படியெல்லாம் பேச மாட்டேன் ப்ளீஸ் வாங்க வீட்டுக்கு..”
“அப்போ உங்க மாமன் காரன் வீட்டுக்கு போறேன்னு துணியெல்லாம் மடுச்சி வச்சது...” கேள்வியாக நிறுத்த ‘கிழவியும் பேரனும் வீட்டில் இல்லை தான் ஆனா வீட்டுல நடக்குற எல்லாத்தையும் தெருஞ்சு வச்சு உசுரை எடுக்குதுங்க’ முணுமுணுத்தவள்
“அதெல்லாம் ஏதோ ஒரு கோவத்துல பண்ணது.. நிஜமா போக மாட்டேன் வாங்க..” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன் ஒரே சுழற்றில் அவனுக்கும் கம்புக்கும் இடையில் அவளை நெருக்கமாக கொண்டு வந்தவன் ஒரு ஜான் இடைவெளியில் அவளை நிறுத்தி அவள் திகைத்து நிற்கும் பொழுதே அந்த இடைவெளியையும் குறைக்க அதிர்ந்து போய் பார்த்தாள் அவனை.
அவன் மூச்சுகாற்று அவளது கழுத்தில் படுமாறு சற்றே குனிந்து தன் மூக்கை வைத்து உரச அவளது உடல் சிலிர்த்தது.. அதில் சட்டென்று தன் முகத்தை பக்கவாட்டில் திருப்பினாள்.
“என்ன செம்ம மாத்தா..” என்று நக்கல் பண்ணினான். அதில் அவளுக்கு எரிச்சல் சூழ
ஆமாம் என்பது போல தலை அசைத்தாள். “கிழவி திட்டலன்னா அப்போ நீ என்னை தேடி வந்து இருக்க மாட்ட தானே..”
அதற்க்கு பதில் சொல்லாமல் அமைதியாய் நின்றாள். “இப்போ நீ சொல்லலன்னா” என்று குனிந்து அவளது இடுப்பை பார்க்க வேகமாய் அவளும் குந்து பார்த்தாள். அங்கே புடவை விலகி அவளது இடை தெரிய கலவரமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இப்போ அதை சரி செய்தா வேணும் என்றே அவன் அழுத்தம் திருத்தமாய் அங்கே தொடுவான். இல்லை என்றாலும் அவன் தொடுவான். என்ன செய்வது” என்று தவித்து போய் நின்றாள்.
அவன் பார்வை கள்ளை ஆசையுடன் பார்க்கும் நரி போல இருக்க இவள் படபடத்து போனாள். அவனது உரம் ஏறிய முரட்டு உடம்பும் அதிலிருந்து வெளிவரும் அவனுடைய வியர்வையும் அவளை எதோ செய்தது.. கூடவே
ஒரு கையை மட்டும் இறக்கி அவளது இடையை தொட வந்தவனின் நெருக்கத்தில் எக்கிக்கொண்டு மூச்சடக்கி நின்றாள். எப்படி இருந்தும் அவன் தோட வருவது உறுதி என்று தெரியவர கண்களை மூடிக்கொண்டு படபடக்கும் தன் இதயத்தை சமன் செய்ய முயன்றாள். ஆனால் அது அடங்காமல் பன் மடங்கு துடிக்க அதை இன்னும் அதிகரித்தான் பழமலை நாதன்..
அவனது கை மெல்ல அவளது இடையை தொட்டு வருடி விட விக்கித்து நின்றாள்.
வருடிய கை மெல்ல மெல்ல அழுத்தம் குடுக்க அவனது இறுகிய பிடி அவளை இம்சித்தது.. கூடவே அவனது முகம் அவளது கழுத்தில் பதிந்து சூடான இதழ் முத்தமும் குடுக்க தளர்ந்து போனாள்.
அடக்கி வைத்து இருந்த மூச்சு காற்றை வெளியே விட்டவள் தன்னிடமிருந்து அவனை விளக்க பார்த்தாள். ஆனால் அவனிடம் இருந்து இம்மி கூட விலக முடியவில்லை அவளால்..
“நேரமாச்சு வீட்டுக்கு போகலாம்..” என்று முணக
“போகலாம்..” என்றபடியே சிலம்பத்தை கீழே போட்டவன் முழுவதும் இருட்டிவிட்ட அந்த ஏகாந்த பொழுதில் ஒரு கையால் அவளை அனைத்து தன்னோடு இன்னும் இருக்கியவன் ஒரு கையால் அவளது இடையை ஆராய அவளாலும் அதற்கு மேலும் முடியாமல் ஆராயும் அவனது கையை பிடித்துக்கொண்டாள்.
அதில் எரிச்சல் மூல ஒரே உதரில் அவளது கையிலிருந்து விடுபட்டு அவளது கையை வன்மையாக இறுக்கி பிடித்து வலிக்க செய்தவன் பின் அதை விட்டுவிட்டு மீண்டும் அவளின் இடுப்பை ஆராய வழியில் கலங்கிய கண்களை அடக்கிக்கொண்டு நின்றவளை சடுதியில் அப்படியே விட்டுட்டு தன் பைக்கில் ஏறி செல்ல அவன் எந்த நிலையில் விட்டானோ அதிலிருந்து சில கணங்கள் வரை அவளால் வெளிவர முடியாமல் அப்படியே நின்றாள். அதன் பின்பே சுயம் திரும்ப கண்களில் இருந்து கண்ணீர் வந்தது..
தன் நிலையை எண்ணி.. சுற்றிலும் கண்களை ஓட்டியவளுக்கு சூழ்ந்திருந்த இருள் பயத்தை கொடுக்க நிலவின் ஒளியோடு மெல்ல நடக்க தொடங்கிய போது அவளை இருகரம் பின்னிருந்து தூக்கிக்கொள்ள பயத்தில் வீறிட்டாள்.
“ஏய் நான் தாண்டி..” என்று பழமலை சத்தம் கொடுக்க அவள் எதுவும் பேசாமல் அப்படியே இருந்துக்கொண்டாள். அவன் தூக்கிட்டு வந்து வண்டியின் பின் இருக்கையில் அமரவைக்க ஒன்றும் பேசாமல் அமர்ந்துக்கொண்டாள்.
அதன் பின் அவன் வண்டியை கிளப்பிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். வந்தவனை ஆர்ப்பாட்டமாய் வரவேற்றார் பொன்னி..
“எல கண்ணு எப்படியா இருக்குற.. உன்ன கண்டு மாமாங்கம் ஆனா மாதிரி இருக்கு சாமி..” என்று அவனது முகத்தை வழித்து திருஷ்ட்டி கழிக்க அவரது மடியில் படுத்துக்கொண்டு
“உனக்கே இது ஓவரா இல்ல கிழவி.. ஆனா நானும் உன்னை தேடுனேன்.. இதுங்க ரெண்டும் என்னை வீட்டை விட்டு வெளியே துரத்திடுச்சுங்க.. நீ இருந்தா என்னை அனுப்ப விட்டு இருப்பியா..” என்று அவர் போட்டு இருக்கும் ரெட்டைவடை சங்கிலியை இழுத்துக்கொண்டே வெடியை கொளுத்தி போட்டான் பழமலை..
“அதாங்குறேன் அவளுக சொன்னா நீ ஏன் சாமி போற அவளுங்களை போக சொல்லவேண்டியது தானே..” என்று கேட்ட படி ஊரிலிருந்து அவனுக்கு பிடிக்குமே என்று கத்தரிப்பு மிட்டாய் வாங்கிட்டு வந்ததை ஊட்டி விட்டார்.
இன்னொரு கையால் அவனது தலையை வருடிவிட அதை கூடத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த பருவதம் “ம்கும் அவனுக்கு ஒண்ணுமே தெரியாது பச்ச மண்ண பாவம்.. நீ இன்னும் நல்லா ஏத்தி விடு.. கிழவிக்கு இருக்கு ஊருபுட்ட நக்கலு” முனங்கினார்.
சமையல் அறையின் வாசலில் நின்று இந்த கூத்தை பார்த்துக்கொண்டு இருந்த முகிலுக்கு கடுப்பானது..
“இத பாக்குறதுக்கு கையை அடுப்புல சுட்டுக்கலாம்..” என்று எண்ணி சமைக்க சென்றாள்.
அந்த நேரம் தள்ளாட்டத்துடன் வீடு வந்து சேர்ந்தார் பழமலையின் தந்தை சிவாகொழுந்து.
“அம்மாடி மருமவளே.. கண்ணு” என்று அழைத்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தார்.
“வாடா எடுபட்ட பயலே.. உன்னோட தானே நானும் வந்தேன். நான் எப்போ வந்தேன் நீ எப்போ வந்து இருக்குற” தாயாய் அவரை கண்டிக்க
“ஆத்தா நீயும் சரக்கு போட்டுட்டு தான் வீட்டுக்கு வந்தியா.. நான் வரிசையில நின்னு வாங்கிட்டு வந்தேன் அதான் லேட்டா ஆயிடுச்சு.. உன்னை மாதிரி கடைக்குள்ள ஆளு வச்சு இருந்தா நானும் சீக்கிரமா வந்து இருப்பேன்” என்று கண்கள் சிவந்து தள்ளாட்டத்துடன் அவரின் அருகில் உட்கார்ந்து அவரின் தோளில் தொங்க பார்த்துக்கொண்டு இருந்த முகிலுக்கும் பருவதத்துக்கும் சிரிப்பு வந்தது.
போதாதற்கு “கிழவி என்னை விட்டுட்டு நீ மட்டும் என்ன தனியா கச்சேரி பண்ணிருக்க” என்ற படி பழமலை அவரின் மடியிலிருந்து லேசாய் தலையை உயர்த்தி அவரின் வாயை மோந்து பார்த்தான்.
“அடேய் ஏண்டா இப்படி பண்றீங்க..” இருவரின் அலப்பரையிலும் காண்டானார் அவர்.
“கிழவி இனி நீ தனியா போக வேணாம் என்னையும் கூட கூட்டிட்டு போ” பேரன் சொல்ல
“அவன் வேணாம் ஆத்தா என்னை கூட்டிட்டு போ அப்படியே உன் ரெட்டை வடை சங்கிலியை என் கிட்ட குடுத்துடு..” என்று அவருடைய மகன் கேட்க
இருவரையும் என்ன செய்வது என்று பாவமாய் பார்த்தார் அவர்.
நல்ல குடும்பம் டா டேய்🤦🤦🤦🤦🤦
முகி இவன் கண்டிப்பா உனக்கு வேணாம் டா....