அத்தியாயம் 4

 
Admin
(@ramya-devi)
Member Admin

 

மூச்சு அடைக்க அடைக்க ஓடியவளுக்கு அதிகமாக மூச்சிரைக்க ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் ஓடவே முடியவில்லை. அப்படியே குப்புற விழுவது போல ஆனது.

“இதுக்கு மேல முடியாது சாமி” என்றவள் ஓரமாக அமர்ந்து விட்டாள். பத்து வட்டம் சுற்றியவன் திரும்பி அவளை பார்த்தான்.

அவள் ஓரமாக உட்கார்ந்து மூச்சு வாங்குவதை பார்த்தவன் வேகமாய் அசோக்குக்கு போனை போட்டு காச்சு மூச்சு என்று கத்தினான்.

அர்த்த ராத்திரியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவன் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தவன் மூச்சு விடாமல்  கத்தியவனின் கத்தலில் அவனது இதயமே வெளியே வந்து துடிக்க ஆராம்பித்தது. அவனுக்கே அப்படி என்றால் இங்கு அமர்ந்து இருந்தவளுக்கு சொல்லவும் வேண்டுமா? எச்சிலை கூட்டி முழுங்கிக் கொண்டவள் எழுந்து ஓட ஆரம்பித்தாள்.

அவள் இப்பொழுது தான் ஐந்தாவது சுற்றிலே இருந்தாள். அவனை போல  இன்னும் பத்து சுற்று சுற்றனுமா? நொந்துக் கொண்டவள் ஓட ஆரம்பித்தாள். அவள் கட்டி இருந்த புடவை வேறு ஓடுவதற்கு தடையாக இருந்தது.

தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு அவள் ஓட ஆரம்பித்த பிறகே போனை கீழே வைத்தான் ஏகப்பன்.

‘என்னடா இது அவனா கூப்பிட்டு கத்தினான்... என்ன எதுன்னு கேட்கிறதுக்கு முன்னாடி அவனே போனை கட் பண்ணிட்டான்...’ என்று புலம்பினான் அசோக்.

எழு சுற்று சுற்றியவளுக்கு தொண்டை வறண்டுப் போனது. அவனிடம் நெருங்கி தண்ணீர் கேட்கவும் பயமாய் வந்தது. ஆனாலும் அடைத்த தொண்டைக்கு நீர் வார்க்கவில்லை என்றால் உயிரே போய் விடும் போல இருந்தது. அதனால் அங்கு புஷ்ஷப் எடுத்துக் கொண்டு இருந்தவனை நெருங்கி,

“சார்... குடிக்க தண்ணீர் வேணும்” என்றாள் தயக்கமாய்.

“இந்த அத்துவான காட்டுல தண்ணிக்கு எங்க போறது?” முறைத்தான்.

“அய்யய்யோ தண்ணி இல்லையா...? தொண்டை எல்லாம் அடைச்சுக்கிட்டு வருது சார்.. இந்த காட்டுக்கு தான் வர்றோம்னு ஒரு சொல் சொல்லி இருந்தா நான் வரும் பொழுதே தண்ணி எடுத்துட்டு வந்து இருப்பனே...” என்றவளுக்கு தண்ணீர் தாகத்தில் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.

தண்ணீர் மட்டும் இப்பொழுது அவளுக்கு கிடைக்கவில்லை எனில் உயிர் போய் விடும் என்று வந்தது.

சுற்றிலும் தேடினாள். எங்குமே தண்ணீர் தட்டுப் படவே இல்லை. கண்கள் கலங்கி கண்ணீர் அவளின் கன்னத்தை நனைக்க, நிலவு ஒளியில் அதை பார்த்தவன்,

“ப்ச்..” என்று அலுத்துக் கொண்டு தன் புஷ்ஷப்பை கை விட்டு,

“இங்க வா” என்று இருள் நிறைந்த ஒரு இடத்துக்கு அழைத்து சென்றான்.

அந்த மைதானத்தை ஒட்டி இருந்த இருளின் மறைவுக்கு போனவன் காட்டு கொடிகள் அடர்ந்து படர்ந்து இருந்த ஒரு கதவை தள்ளினான்.

அதன் வழியாக உள்ளே நுழைந்தவனை ஒட்டி இவளும் உள்ளே நுழைந்தாள்.

மைதானத்தில் இருந்த வெளிச்சம் இங்கு சற்றே மட்டு பட்டு இருந்தது. அதனால் கவனமாக காலடி எடுத்து வைக்க வேண்டி இருந்தது.

“இருட்டுல எனக்கு ஒண்ணுமே தெரியல.. ஆனா இவரு மட்டும் எப்படி இவ்வளவு சுலபமா வேகமா போறாரு...” புலம்பியபடி அவனுக்கு பின்னாடி போனாள்.

அந்த நேரம் ஒரு இடத்தில் மினுமினுக்க தன் விழிகளை நம்பவே முடியவில்லை. ஏகனின் பாதையை விட்டுட்டு அந்த மினுக்கும் வெளிச்சத்தை நோக்கி போக,

தன் பின்னாடி காலடி சத்தம் மாறி போனதை திரும்பி பார்த்தவன், அவள் மின்மினி பூச்சியை தேடி போகிறாள் என்று புரிய, வேகமாய் அவளை நோக்கி சென்றவன் பட்டென்று அவளின் கையை பிடித்து இழுத்தான்.

அவள் அதை எதிர்பாராமல் போக அவனின் மீதே நிதானம் இன்றி விழுந்தாள்.

“ஏய் அறிவு இல்ல...?” அவன் கோவமாக கேட்கும் பொழுதே அவனின் நெஞ்சோடு ஒட்டி நின்றவளுக்கு,

“இவரு தானே என்  கையை பிடித்து இழுத்தாரு. நான் தானே கொவப்படனும். இவரு கோவப்படுறாரு... எல்லாமே தலைகீழா நடக்குது” மனதுக்குள் திட்டியவள்,

“ஹலோ சார்... இப்போ எதுக்கு என் கையை பிடித்து இழுத்தீங்க.. கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாதா.. இப்படி தான் ஒரு பொம்பளை பிள்ளை கிட்ட நடந்துக்குவீங்களா? உங்களுக்கு எல்லாம் அக்கா தங்கச்சி இல்லையா?” என்று ஆவேசத்துடன் கேட்டாள்.

முதல் முறையான ஒரு ஆணின் நெருக்கம் அவளை சீற்றமுற வைத்தது.

“ஆமான்டி நான் அக்கா தங்கச்சியோட பிறக்கல.. அதனால இதை விட இன்னும் மோசமா நடந்துக்குவேன்” என்றவன் அவள் எதிர் பாரா சமயம் அவளின் இடையை இறுக்கி பிடித்துக் கொண்டு அவளின் கழுத்தில் தன் முரட்டு முகத்தை புதைத்தான்.

“யூ இடியட்...” என்று தன் மீது இருந்து அவனை நகர்த்த பார்த்தாள். ஆனால் அவளால் அவனை இம்மி அளவு கூட நகர்த்த முடியவில்லை.

அதோடு அவன் முடி அடர்ந்த முகத்தை வைத்து அவளின் கழுத்தையும் கன்னத்தையும் சேதாரம் செய்ய, அவன் முடி அவளின் மென்மையான தேகத்தை குத்தி கிழித்தது.

“கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா? இப்படி தான் காட்டு மிராண்டி மாதிரி நடந்துக்குறதா.. உங்களை எல்லாம் வீட்டுல வச்சி வளர்த்தாங்களா இல்லை ஜூ ல வச்சு வளர்த்தாங்களா?” கேட்டபடியே அவனை நகர்த்த பார்த்தாள். ஆனால் அவன் நகரவே இல்லை.

அதோடு அவள் தன்னை மிருகம் என்று கூரியதை கேட்டு உண்மையாகவே மிருகம் ஆனான் ஏகப்பான்.

“என்னடி சொன்ன? மிருகமா.. மிருகம் என்ன பண்ணும் தெரியுமா?” என்று  கேட்டவன் அவளை மிருகமாய் தொட ஆரம்பிக்க, கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.

“உங்ககிட்ட தற்காப்பு கலை கத்துக்க தான் வந்தேன். ஆனா இப்போ உங்கக்கிட்ட இருந்தே என்னை காப்பாத்திக்கன்னும் போல” என்று கலங்கிய குரலில் சொன்னவளை சட்டென்று விடுவித்தான்.

அதன் பிறகே மூச்சு வந்தது அவளுக்கு. ஆசுவாசம் ஆகி தன்னை நிதானப் படுத்திக் கொண்டவள் விழிகளால் ஏகப்பனை முறைத்து பார்த்தாள். அவன் தலையை அழுந்த கோதிக் கொண்டு நின்றான்.

“மனுசனே இல்ல...” புலம்பியவளை முறைத்துப் பார்த்தவன்,

“ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு நான் சொல்றதை மட்டும் செய். அதை விட்டு அதிக பிரசங்கி தனமா எதாவது செஞ்சான்னா இப்படி தான் ஆகும்” என்றவனை கொலை வெறியோடு முறைத்தாள்.

“இப்ப என்ன உங்க பேச்சை நான் கேட்காம போயிட்டேன்” மூக்கை உரிந்தாள்.

“என் பின்னாடி தானே வர சொன்னேன்.. நீ எதுக்குடி அங்க போன”  

“அந்த இடம் மின்னிக்கிட்டு இருக்கவும் போனேன். இதுல என்ன தப்பு இருக்கு”

“உன் தலை... அந்த மின்மினி பூச்சிக்கு ஆசை பட்டு போனா அந்த புதர்ல பாம்புக்கு வாக்கப்பட்டு போயிடுவடி” என்றான்.

“ஹாங்...” என்று அவள் விழிக்க,

“இங்க புதர் அதிகம்... ஒழுங்கா எந்த புதருக்கும் போய் காலை விடாம தண்ணி குடிச்சுட்டு கிளம்பு” என்று எரிந்து விழுந்தான்.

“எது பாம்பா...?” என்று பயந்துப் போனவளுக்கு நெஞ்சே ஒரு கணம் பயத்தில் குலுங்கியது.

சுற்றிலும் பார்த்தவள், “இங்க எங்க தண்ணி இருக்கு? குடிக்க சொல்றீங்க” அவனை பார்த்து கேட்டாள்.

“இந்த செடியை தாண்டி பாரு..” என்றான் இறுக்கமான குரலில்.

அவன் சுட்டி காட்டிய செடியை விலக்கி விட்டு பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. அங்கே சின்னதாய் ஒரு குளம் இருந்தது. அதை ஒட்டி தொட்டி போல குட்டியாய் கட்டி இருந்தது. அதில் சுத்திகரிப்பு தண்ணீர் இயற்கை முறையில் ஏற்பாடு செய்து இருந்தது. அதுவும் பைப் வசதியுடன்.

கூடவே மண் குவளைகளும் சில மண் பாத்திரங்களும் கல்லால் உருவாக்கி இருந்த அடுப்பும் இருந்தது.

அடிக்கடி சமைப்பான் போல... எண்ணிக் கொண்டவள் ஓடிப்போய் தன் தாகம் தீர நீரை பருகினாள். அதன் பிறகே அவளால்  இயல்புக்கு வர முடிந்தது. வயிறு முட்ட நீரை குடித்து இருந்தாள். அந்த நீர் பாகாய் இனித்தது.

இதென்ன அதிசயம்... செயற்கையாய் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடித்து குடித்து அவளின் நாக்கு எல்லாம் செத்து போய் இருந்தது. ஆனால் இங்கே அமிர்தமாய் இருந்த நீர் அவளுக்கு மிகவும் பிடித்து போய் இருந்தது.

அதனால் அதை வயிறு நிறைய குடித்தாள். அவள் ஆசையாக குடிப்பதை பார்த்தவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவளை பார்க்கும் பொழுது எரிச்சல் தான் வந்தது. சரியான இம்சை... என்று எண்ணிக் கொண்டான்.

ட்ரைனிங் எடுக்கும் போது எந்த லூசாவது இப்படி வயிறு முட்ட தண்ணி குடிக்குமா? தலையை பிடிக்க வைத்தாள்.

அதோடு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவளை இழுத்து அணைத்தது வேற அவனை சற்றே அவனது உணர்வுகளை தூண்டி விட்டு இருக்க அதற்கும் அவள் மீது கோவப்பட்டான்.

“ஏய் அறிவு இல்ல... இப்ப பயிற்சி எடுக்கணும்.. அந்த நினைப்பு இல்லாம இப்படி வயிறு நிறைய தண்ணி குடிக்கிற?”

“சாரி சார்... தண்ணி அமிர்தமா இருந்ததா அது தான்” என்றவள் முன் மேனி நனைந்து போகும் அளவுக்கு குடித்து இருந்தாள். தன் முந்தானையை வைத்து வாயை துடைத்துக் கொண்டவள் அப்படியே அவளின் நெஞ்சையும் துடைத்துக் கொள்ள ஆணவனின் பார்வை அவளின் மார்பின் மீது படிந்தது.

அவன் பார்வை தன் மார்பின் மீது இருப்பதை பார்த்து கடுப்பாக வந்தது.

“சரியான பொறுக்கியா இருப்பான் போல” எண்ணிக் கொண்டவள் அவனுக்கு முதுகு காட்டி நின்று தன் ஈரத்தை துடைத்துக் கொண்டவள், அங்கிருந்த மண் பார்த்திரத்தை கழுவி அதில் நீரை பிடித்துக் கொண்டாள்.

மறுபடியும் தாகம் என்றாள் அவன் இவளோடு வர மாட்டான் என்று புரிந்துக் கொண்டவள் முன்னெச்சரிக்கையாக தண்ணீர் பிடித்து எடுத்துக் கொண்டாள்.

இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை... என்றவன் மைதனத்துக்கு போக, அவளும் அவனோடு சென்றாள்.

வந்த பிறகு புஷ்ஷப் எடுக்க சொன்னான்.

“எப்படி சார்..?” என்று அவள் தடுமாற..

அவன் செய்து காண்பித்தான். அவளும் அதே போல செய்ய கட்டி இருந்த புடவை தடுத்து குப்புற அப்படியே நிலத்தில் விழுந்தாள். மூக்கு அடிபட்டு போனது.

அவளை பார்த்தானே தவிர கை கொடுத்து எழுப்பிவிடலாம் இல்லை. மரம் மாதிரி அசையாமல் அப்படியே நின்றான்.

“கொஞ்சமாச்சும் ஹெல்ப்பிங் சென்ஸ் இருக்கா பாரேன்... அப்படியே மரம் மாதிரி நிக்கிறதை” முனுமுனுத்துக் கொண்டவள் மூக்கில் இருந்த மண்ணை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

“புடவையை முதல்ல இடுப்புல சொருகுடி” என்றான் கடுப்பாக.

“சரிங்க சார்” என்றவள் முந்தானையை இடுப்பில் சொருகி கொண்டவள் மீண்டும் புஷப் எடுக்க ஆரம்பிக்க, அவளின் முந்தானை இடுப்பில் இருந்து மீண்டும் நழுவியது.

அவள் கட்டி இருந்த புடவை எல்லாம் மிக உயர் தரம் வாய்ந்த புடவைகள். கொஞ்சமும் உறுத்தாத வகையில் மிக மென்மையாக அதே சமயம் வழுவழுப்பாக இருக்கும். அதனால் அவள் எப்படி அழுத்தமாக சொருகினாலும் மீண்டும் மீண்டும் இடுப்பில் இருந்து நழுவியது.

அதை பார்த்தவன் கடுப்பாக அவளிடம் நெருங்கியவன், அவளின் முந்தானையை பிடித்து இழுத்து இடுப்பில் இருந்த சேலையை நகர்த்தி விட்டு முந்தானையை சற்றே ஆழமாக சொருகினான். அவன் அப்படி செய்வான் என்று எதிர் பாராதவள் விக்கித்துப் போனாள்.

அவளின் இரண்டு பெரிய கண்களும் அதிர்ச்சியில் இயல்பான அளவை விட இன்னும் பெரிதாகியது.

Loading spinner
Quote
Topic starter Posted : April 12, 2025 10:25 am
(@gowri)
Estimable Member

இந்தா ஆரமிச்சிட்டான் அவனோட அழிச்சியாட்டத்தை😂😂😂😂😂

Loading spinner
ReplyQuote
Posted : April 12, 2025 3:39 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top