Notifications
Clear all
அவன் திட்டி விட்டு போன பிறகும் இவள் சாரி சாரி என்று சொல்லிக் கொண்டே நின்று இருந்தாள்.
மேலேறி வந்தவன் கீழே பார்க்க அதன் கண்கள் மூடி சாரி சாரி என்று கேட்டுக்கொண்டு நிற்பதை பார்த்தவர்களுக்கு எரிச்சல் வந்தது விவசாயிகள் என்று தான் தோன்றியது அவனுக்கு.
பைத்தியத்தை கூட்டிட்டு வந்து வித்த கத்து கொடுக்க சொல்றான் பாரு அந்த தடிமண்டு திட்டியவன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
ஆயிரம் முறை சாரி கேட்ட பிறகு கண்களை திறந்து பார்த்தால் எதிரில் வெற்றிடமாக இருக்க அங்கே இருந்த அந்த ஆளை காணவில்லை.
அப்பாடா எப்படியோ தப்பிச்சுட்டோம் அந்த முரடன் கிட்ட இருந்து நெஞ்சை நீவி கொண்டது வேகமாய் தன் அறைக்குள் உள்ளே நுழைந்து கதவை சாற்று விட்டு சாப்பாட்டை பட்டணத்தை பிரித்தாள்.
அவள் பசி அவளுக்கு தானே தெரியும். பயணத்தில் பெரிதாக அவள் எதுவும் சாப்பிடவில்லை இங்கு வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று என்னை அறிந்தால் ஆனால் இங்கு ஆரம்பமே மிக அமர்க்களமாக இருக்கு எங்கிருந்து சாப்பிடுவது இப்பொழுது சாப்பாடு கையில் இருக்க அதை அமிர்தமாக எண்ணி உண்டாள்.
ஒவ்வொரு வாய் உணவையும் ரசித்து சாப்பிட்டாள்.
உண்டு எழுந்தவள் இடத்தை சுத்தம் செய்துவிட்டு, செய்வதற்கு எதுவும் இல்லை. மாலை கவிழ்ந்து இருந்தது வீட்டில் விளக்கு ஏற்றலாம் என்றால் ஒன்றுக்கு கூட வழியில்லாத காரணத்தால் உடம்பெல்லாம் வேறு வலிக்கவும் போய் படுத்து விட்டாள்.
நிம்மதியாக தூங்கினாள். கடுமையாக வேலை செய்த காரணத்தால் தூக்கம் நன்றாகவே இருந்தது எதற்கும் ஒரு முறை கதவை நன்றாக தாலிட்டு பார்த்துவிட்டு அதன் பிறகு வந்து படுத்து தூங்கினால் ஏனெனில் வீட்டில் அவனும் அவளும் மட்டும் தானே. ஒருவேளை அவன் அறைக்குள் அத்துமீறி வந்து விட்டால் என்ன செய்வது என்கிற பயம் கொஞ்சமே கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் அவன் நடந்து கொண்ட நடவடிக்கையை மீது நம்பிக்கை இருந்த காரணத்தால் அவளுக்கு தூக்கம் நன்றாகவே வந்தது.
நன்றாக 4 மணி நேரம் உறங்கி இருப்பாள் மணி 10 ஆக இருந்த கதவு படபடப்படுவென்று தட்டும் சத்தம் கேட்டது.
இந்த நேரத்துல யாரு என்று அசதியில் முணகினாளே தவிர எழுந்து கதவை திறக்கவில்லை.
அட போங்கப்பா உங்களுக்கு வேற வேலை இல்ல அப்படின்னு கவிழ்ந்து அடித்து படுத்துக் கொண்டாள்.
ஏய் கதவை திற என்று உருமல் சத்தம் கேட்க அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள் படுக்கையில்.
எதுக்கு நேரத்துக்கு இவர் கதவு திட்டுறாரு பயந்து கொண்டே எதுக்குங்க சார் அவரிடம் கேள்வி கேட்டாள்.
இப்ப கதவை திறக்க முடியுமா முடியாதா ஆத்திரமாக வைத்திருக்க பட்சியோடது வேகமாய் போய் கதவை திறந்து விட்டாள்.
அவன் அறைக்குள்ளே உள்ளே நுழையாமல் சீக்கிரம் கிளம்பி வா. இன்னும் பத்து நிமிஷம் தான் உனக்கு டைம் என்று சொல்லிவிட்டு அவன் விறுவிறுவென்று போக இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை
எங்க கிளம்பணும்? எதுக்கு சார் இந்த நேரத்துல கிளம்ப சொல்றீங்க.. என்று அவனின் பின்னோடு ஓடி போய் கேட்டாள் .
நிதானமாய் திரும்பி பார்த்தவன்,
நான் சொன்னா ஏன் எதுக்குன்னு கேட்காம அதை அப்படியே ஃபாலோ பண்றது தான் உனக்கு நல்லது. என்னை திருப்பி கொஸ்டின் கேட்கிற வேலை வச்சுக்கிட்ட உன்னை இப்பவே இந்த வீட்டை விட்டு வெளியில துரத்திடுவேன்.. என்று சொல்லிவிட்டு தன்ன அறைக்குள் நுழைந்து கொண்டான்.
ஒரு கேள்வி கேட்டது குற்றமா டா நொந்துக் கொண்டவள் அரைகுறை தூக்கத்தில் தூக்கம் முற்றிலும் கலையாமல் கிளம்பி வெளியே வந்தாள்.
அவனும் அதே நேரம் வந்து விட்டான். எல்லாம் பயம்தான் அவளுக்கு எங்க விட்டுவிட்டு போய்விட்டால் என்ன செய்வது என்று அவசர அவசரமாக கிளம்பினாள். அவள் கிளம்பி நிற்பதை படிகளில் இருந்து இறங்கி வந்தவன் மேலிருந்து கீழாக அவளை பார்க்க உதட்டை ஒரு மாதிரி சுளித்துக் கொண்டு பின் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.
அவனைத் தொடர்ந்து அவளும் சென்றாள். பிறகு கதவை பூட்டிவிட்டு அங்கு ஓரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த புல்லட் அருகில் போய் நின்றான்.
புல்லட்டை உசுப்பி விட்டவன் ஹேண்டிலை முறுக்கு அந்த சத்தத்திற்கு வேகமா அவனுக்கு பின்னாடி வந்து அமர்ந்து கொண்டாள்.
இரவு 10 மணி என்பதால் அந்த ஊரே அடங்கிப் போயிருந்தது. தெருவிளக்கு மட்டும் அங்கு இங்குமாக எரிந்துக் கொண்டு இருந்தது. அந்த வெளிச்சத்தில் இவர்களது பயணம் தொடங்கியது.
எங்க போகிறோம்.. என்று அவள் கேட்க அவன் வாயை திறக்கவில்லை. அதோடு அவன் ஏற்கனவே எச்சரித்து இருந்த காரணத்தால் அதன் பிறகு அவனிடம் எந்த கேள்வியும் அவள் கேட்கவில்லை.
அமைதியாக அமர்ந்திருந்தாள். அதுவும் அவன் போன வழிகளை பார்த்து பயந்து போனாள் ஊரை ஒட்டி இருந்த அடர்ந்த காட்டுக்குள் அவனது வண்டி புக இன்னும் அதிர்ந்து போனாள்.
ஐயோ ஒருவேளை காட்டுக்குள்ள கூட்டிட்டு போயி இந்த மான்ஸ்டர் நம்மல கடிச்சு தின்னுடுவாரோ… ஆனாலும் அசோக் மீது இருந்த நம்பிக்கையில் இவன் மனிதன் தான் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.
கருப்பு நிற சட்டை கருப்பு நிற பான்ட் வெட்டாத தலைமுடி நீளமாக நீண்டிருந்தது. மீசையும் தாடியும் ஏகத்துக்கும் வளர்ந்து இருந்தது. முழுக்க முழுக்க கருப்பு மட்டுமே அவனை ஆக்கிரமித்து இருந்தது. லேசாக தெரியும் மூக்கும் கண்களும் மட்டும்தான் அவன் மனிதன் என்பதையே காட்டிக் கொடுத்தது. அதோடு அவன் கைகளில் கூட அடர்ந்த முடி இருந்தது. அப்படி ஒரு தோற்றத்தில் இவனை கண்டால் யாருக்கும் பயந்து தான் வரும். இவளுக்கு பயம் வராமல் இருந்தால் ஆச்சரியம் தான் அந்த அளவு கரடு முரடாக இருந்தால் ஏகப்பன்.
ஒரு மணி நேர பயணத்துக்கு பிறகு வண்டி நின்றது. சுற்றிலும் அடர்ந்த காடு தான். மிகுந்த இருள் சூழ்ந்து இருந்தது.
குழலி எந்த கேள்வியும் கேட்காமல் அவனோடு பின் வந்தால் வண்டி ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கியவன் அவள் பின்னாடி வருகிறார் இல்லையா என்று கொடுப்பார்கள் விறுவிறுவென்று நடக்க அவனது வேகமாக நடத்தி ஈடு கொடுக்க முடியாமல் சற்று திணறிப் போனாள்.
அவனது வேக நடைக்கு இவள் ஓடி தான் வர வேண்டி இருந்தது. இதுவும் ஒரு ட்ரைனிங் போல என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டே அவன் பின்னாடி இவளும் ஓடி வந்தாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் அவன் நடக்காமல் அப்படியே நின்று விட.. அதை எதிர்ப்பாராது வேகமாய் ஓடி வந்தவள் அவன் மீது மோதி விட்டாள்.
அதில் அவனுக்கு ஏகத்துக்கும் எரிச்சல் வர ஏய்… என்று கர்ஜித்தான்.
சாரி சார் நீங்க நடந்துக்கிட்டே இருப்பீங்க என்று நான் ஓடி வந்தேன். நீ இப்படி சடனா நிற்கவும் எதிர்பாராமல் நான் மோதிட்டேன். சாரி சார் இனிமேல இப்படி பண்ண மாட்டேன்.. என்று நகர்ந்து நின்று கொண்டாள்.
வந்த நேரத்தில் இருந்து இவனிடம் அவள் சாரி மட்டுமே கேட்டுக் கொண்டு இருக்கிறாள்.. அதை உணர்ந்து தன்னைத்தானே கொட்டிக் கொண்டவள் இனி இவனிடம் சாரி கேட்கும்படி நடந்து கொள்ள கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
அங்கு இருந்த மறைப்பை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தவன் அவனை தொடர்ந்து அவளும் உள்ளே நுழைந்தாள். பிறகு கதவை தாழிட்டவன் விறுவிறுவென்று முன்னே நடந்தான். கையில் ஒரு சின்ன டார்ச் லைட் இருந்தது. அந்த வெளிச்சத்தின் உதவியுடன் அவன் நகர அவளும் முன்னே நகர்ந்தாள்.
சிறிது நேர நடை பயணத்துக்கு பிறகு வெட்ட வெளி ஒன்று கிடைத்தது.
அந்த இடம் முழுக்க முழுக்க வெறும் தரையாகவே அதுவும் சமன்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த தரையாக இருந்தது. காட்டுக்குரிய கரடு முரடான இடமாக அந்த இடம் தெரியவில்லை. நன்கு பயன்படுத்தப்பட்டு பதப்படுத்தப்பட்ட இடமாகவே அது இருந்தது.
சுற்றிலும் இரும்பு வெளி அமைத்து இருந்தது. அந்த வேலையை சுற்றிலும் அடர்ந்த மரங்கள் இருந்தன.
நெட்ட நடு காட்டுக்கு நடுவே இப்படி ஒரு இடத்தை தயார் செய்து இருக்கிறான் என்று பார்த்த உடனே புரிந்து கொண்டாள்.
ஆனா ஏன் எதுக்கு அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அதைக் கேட்டு நாம் என்ன செய்யப் போகிறோம். நாம் வந்த வேலை மட்டும் பார்ப்போம்.. என்று அவனது முகத்தை பார்த்தாள்.
போட்டிருந்த கருப்பு சட்டையை கழட்டி ஒரு மரத்தின் கிளையில் தூக்கிப் போட்டவன் அந்த பகுதியை முழுவதுமாக ஒரு சுற்று சுற்றி வந்தான். அவன் எதுவும் சொல்லாமல் ஓட ஆரம்பிக்க இவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவனுடன் பின்னாடி நானும் ஓடணுமா.. இல்ல நிக்கணுமா.. ஒன்னும் புரியவில்லை அவளுக்கு.
நிலா வெளிச்சம் நன்றாகவே இருந்தது அதனால் இருளை பற்றிய பயம் அதிகம் இல்லை. பார்வை தெளிவாகவே இருந்தது.
அறை மைதானம் ஓடியிருந்தவன் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான். அந்தப் பார்வையில் இருந்த உஷ்ணம் கண்டு,
ஓட சொல்கிறான் போலயே…
என்று முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு அவனோடு ஓட ஆரம்பித்தாள் குழலி.
அவனது வேகத்துக்கு ஓட முடியாமல் சற்று மெதுவாகவே ஓடினாள். அவன் காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாக ஓடினான்.
வெறும் பிரட்ட சாப்பிட்டு எப்படித்தான் இந்த மனுஷனுக்கு எவ்ளோ தெம்பு இருக்கோ தெரியலையே.. நாம முழுசா சிக்கன் பிரியாணி சிக்கன் பீஸ் எல்லாமே சாப்பிட்டுட்டு வந்தாலும் நமக்கு உடம்புல கொஞ்சம் கூட தெம்பு வரமாட்டேங்குதே… முணங்கிக் கொண்டே அவள் ஓட, அவனோ ஒரு சுற்று சுற்றிவிட்டு அவள் ஓடும் அருகே இவன் அடுத்த சுற்றுக்கு வந்திருந்தான்.
அடுத்த நொடியிலே அவளை கடந்து அவன் இன்னும் வேகமாக ஓட இவள் திகைத்துப் போனாள்.
சாமி அரக்கனா இருப்பான் போலையே.. இவ்ளோ வேகமா ஓடுறானே எண்ணிக்கொண்டு அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போனாலும் சற்று பின் தங்கியே ஓடினாள். அவளது வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி கொண்ட போதும் அவனை தொட அவளால் முடியவில்லை.
அவன் நான்காவது சுற்று போகும்போது தான் இவள் இரண்டாவது சுற்றறையே முடித்து இருந்தாள். அதன் பிறகு அவளால் ஓட முடியவில்லை மூச்சு வாங்கியது மரத்தில் சாய்ந்து மூச்சு வாங்க தொடங்கினாள்.
அவள் ஓடாமல் நிற்பதை பார்த்து பல்லைக் கடித்தவன் ஏய்.. என்று உறுமினான்.
சாரி சார் மூச்சு வாங்குது. என்னால முடியல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன் சார்.. பாவமாக மொழிந்தாள்.
அவளை உறுத்து ஒரே ஒரு பார்வை தான் பார்த்தான். அந்தப் பார்வையில் பயந்துபோனவள் மூச்சு அடைக்க அடைக்க வேகமாக ஓட ஆரம்பித்தாள்.
Topic starter
Posted : April 10, 2025 7:27 am
இவன் athelete போலவே இல்ல போலீஸ் ஆ????
அசோக், போலீஸ் போல....இவன் இப்படி இருக்க காரணம் அவ குடும்பத்தை அழித்த culprit தானோ?????
Posted : April 12, 2025 3:18 pm