வணக்கம் தோழமைகளே...
"இளமை தீயே...!" எனும் புது கதையோடு வந்து இருக்கிறேன்.
தலைவன் - அகன் (அசோகன்)
தலைவி - அக்னி
மின்சார முத்தங்கள் கதையில் வரும் தயாழினியின் அண்ணன் தான் இந்த அகன்.
இவன் ரா அமைப்பில் வேலை பார்க்கும் ஒருவன்.
இவனுக்கு குடும்பம் உறவு எல்லாம் இரண்டாம் பட்சம் தான். முதல் அவனுக்கு அவனது வேலை தான்.
ஆனால் அந்த வேலையை தன் குடும்பத்துக்காக விட்டுட்டு அவர்களோடு இருக்க நினைக்கிறான். அப்பொழுது தான் அவனுக்கு ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது.
நாடகத்துக்காக ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியதே.
தயாகரனின் இடைவிடாத நச்சரிப்பில் புது கல்யாணம் பண்ண மனமில்லாமல் ஏற்கனவே தாலி கட்டிய பெண்ணை தேடி போகிறான். அந்த பெண் தான் அக்னி.
இவனோடு இவனது தம்பி அதர்வனும் உடன் வருவான்.. அவனது இணையோடு..
இது தான் கதை..
பார்ப்போம் அந்த இளமை ததும்பும் தீயிடம் நம்ம அகன் அகமாகிறானா என்று..
எப்பொழுதும் போல என் எல்லா கதைகளுக்கும் ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தரும் தோழமைகளுக்கு எனது நன்றி. அந்த வரிசையில் இந்த புது கதைக்கும் உங்களது ஆதரவும் அன்பும் ஊக்கமும் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..
என்றும் அன்புடன்
ரம்யா ராஜ்