Notifications
Clear all

அத்தியாயம் 52

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அதுல உனக்கு என்ன பிரச்சனை” என்று கடுப்படித்தவன், அசோகன் பக்கம் திரும்பி,

“இப்படி நீ பேசுறதுக்கே என் கிட்ட வாங்கி கட்டுவடா..” என்று கறுவியவன், தன் கைப்பிடியில் இருந்த தயாகரனை தள்ளி வைத்து விட்டு,

“வெளிய இவனை இழுங்கடா.. இவன் வாயிலையே எட்டி மிதிச்சு கொன்னு கடல்ல வீசலாம்.. என் கிட்டையே எவ்வளவு திமிரா பேசுறான். கூடவே இவனோட தங்கச்சியை எல்லோரும் சேர்ந்து அனுபவிங்க.. இவன் கண் முன்னாடியே இவன் தங்கச்சி சீரழியிறதை பார்த்து இரசிக்கட்டும்” என்று கட்டளை போட,

“சரிங்க பாஸ்” என்று திமு திமுவெண்று எங்கிருந்தோ ஆட்கள் வர, வந்த வேகத்தில் அசோகனை இழுத்து வெளியே விட்டவர்கள், தயாகரன் உடுத்தி இருந்த சேலையில் கை வைத்து இழுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அடுத்த வந்த நிமிடங்கள் எல்லாம் அங்கே போர் அபாயம் சூழ்ந்தது.

அசோகனை வெளியே இழுத்த அடுத்த நிமிடமே கூனி குறுகி இருந்த உடலை முன்னுக்கும் பின்னுக்குமாய் வளைத்து அசைத்து நீட்டி நிமிர்ந்து கை கால்களை அசைத்து உதறி நெட்டி முறித்து சோம்பல் விட்டு இயல்புக்கு கொண்டு வருவதற்குள் இரும்பின் முள் கம்பிகள் அவனது உடலை துளைத்தது.

அதை எல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஒரு புலி எப்படி தன் உடலை வளைத்து நெளித்து பாய தயாராக இருக்குமோ அந்த மாதிரி சோம்பல் விட்டு முதுகை நிமிர்த்தினான்.

தன் நண்பனின் செயலை கண்கள் சிமிட்டி பார்த்துக் கொண்டு இருந்த தயாகரனின் புடவை உருவப்பட,

“ஐயோ என் புடவை.. என் மானம் போச்சு.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க...” பெண் குரலிலே அலறினான். அதை பார்த்த அசோகனுக்கு உடம்பை துளைத்து சதையை பிய்த்துக் கொண்டு வந்த ரணங்களை காட்டிலும் புன்னகை பீறிக் கொண்டு வந்தது.

“டேய் மாப்பிள்ளை.. ப்ளீஸ் டா.. சிரிச்சு வயிறு வலிக்குது.. முடிச்சு விடு” என்றான் சத்தமாய்.

“நீ சொல்லி நான் கேட்காம இருப்பனா மச்சான்.. இதோ நிமிஷத்துல முடிச்சு விடுறேன்” என்று தன் குரலில் சொன்ன தயாகரன் எல்லோரும் சுதாரிக்கும் முன்பு தன் உடைகளை கலைந்து நீல சவுரி கூந்தலை பிடுங்கி எறிந்து விட்டு தன் முழு முதற் கம்பீரமான தோற்றத்துக்கு மாறியவன், மற்றவர்கள் அதிர்ந்து சுதாரித்து செயலாற்றும் முன்பு அத்தனை பேரையும் துவம்சம் செய்ய தொடங்கி விட்டான்.

அவனுக்கு முழுதாக கைக் கொடுத்தான் அசோகன்.

ஷின் ஒரு கணம் தான் அதிர்ந்து நின்றான். அடுத்த கணம் சுதாரித்து துப்பாக்கியை எடுக்க, அவனின் ஒரு கண தடுமாற்றமே போதுமானதாய் இருந்தது மாப்பிள்ளைக்கும் மச்சானுக்கும்.

இருவரும் கைக்கோர்த்து ஷின்னை சிறை செய்து செயல்பட விடாமல் பார்த்துக் கொண்டவர்கள், சுற்றிலும் இருந்த அடியாட்களை தங்களின் கால்களின் உதவியுடன் அடித்து எட்டி உதைத்து தங்களை அவர்கள் தாக்காதவாறு பார்த்துக் கொண்ட நேரமே அதர்வன் தலைமையில் உளவு படை பிறிவும், தயாகரனின் குழுவும் இணைந்து உள்ளே வந்து சண்டையில் ஈடுபட,

அடுத்த கொஞ்ச நேரமும் ஒரே கலவரம் தான் அங்கு சூழ்ந்து இருந்தது. இந்த படையே இவர்களை அடக்கி ஒடுக்க போதும் என்ற பொழுதும் ராணுவ மேஜர் தன் பங்குக்கு தேர்ந்தெடுத்த ராணுவ அதிகாரிகளை அனுப்பி வைத்தார். அதனால் வெற்றி முழுக்க முழுக்க தயாகரன் மற்றும் அசோகனுக்கு மட்டுமே...

அங்கு இருந்த அத்தனை பேரையும் சிறை செய்ததோடு, அந்த நாட்டு அரசாங்கத்திடம் முழு அனுமதி பெற்று இருந்ததால் தங்களின் நாட்டுக்கு அத்தனை பேரையும் கூட்டிட்டு வந்ததோடு, ஷின்னை தங்களின் கஸ்டடிக்கு எடுத்துக் கொண்ட மாப்பிள்ளையும் மச்சானும் அவனை செய்யாத சித்தரவதை எல்லாம் செய்து அவனின் வாயில் இருந்தே பல உண்மைகளை கொண்டு வந்து இருந்தார்கள்.

அவன் தானே இந்த உலக நாட்டையே உலுக்கி எடுக்கும் தீவிரவாத கும்பலின் தலைவன். ஆனால் அவனின் உருவமும் புகைப்படமும் எங்கும் கசிந்ததே இல்லை. அது இவர்களுக்கு மிகவும் தோதாக போய் விட, சாதாரண ஒரு ஆளை கைது செய்வது போலவே கைது செய்து தங்களின் நாட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.

அதோடு பிரபாகரன் எடுத்து வைத்த புள்ளி விவரமும் ஷின் சொன்ன தகவலும் சரியாக இருக்க, தயாகரன் தன் தம்பியை மெச்சினான் பார்வையாலே.

“இதுல இருந்து நம்ம நாட்டுல இருந்து யார் யார் இவனோட சமந்தப்பட்டு இருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் எடுத்துடு பிரபா.. அதே போல மற்ற நாடுகளுக்கு அவர்களின் ஆட்களை அடையாளம் காட்டி லிஸ்ட் குடுத்துடு..” என்றான் தயாகரன்.

“சரிண்ணா” என்றவன் அதே போல மிக சீக்ரெட்டாக அத்தனை வேலையையும் செய்து முடித்தான் பிரபா. தான் இதுவரை எடுத்து இருந்த லிஸ்ட் படி எல்லாவற்றையும் ஒரு முறை செக் செய்தவன் அதை அண்ணனின் பார்வைக்கும் பெரிய மச்சானின் பார்வைக்கும் வைத்தான்.

இருவரும் எல்லாவற்றையும் ஒரு முறைக்கு இருமுறை சோதித்தவர்கள், மேஜரின் உதவியுடன் நாட்டின் பிரதமரை உடனடியாக சந்தித்து இந்த நாட்டின் பல மாநிலத்தின் அமைச்சர்களின் போர்வையில் இருக்கும் சில தேச துரோகிகளை தோலுரித்து காட்டி உடனடியாக எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் கைது செய்ய ஏற்பாடு செய்தார்கள். கூடவே ஷின் தான் உலக மாபியா ஹெட் என்று சொல்லி, அவனை கைது செய்த விசயம் வெளியே தெரிய வேண்டாம் என்றும், அப்படி செய்யவில்லை என்றால் என்ன விபரீதம் நடக்கும் என்பதையும் அவருக்கு தெளிவாக புரியவைத்து விட, அவரும் முழு மூச்சாக ஷின்னை அவர்களிடம் ஒப்படைக்க சொல்லி விட்டு, ஆட்சியில் இருக்கும் அத்தனை சமூக விரோதிகளையும் ஒரே நேரத்தில் கைது செய்து, அடுத்த தேர்தலில் தங்களின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இதை பூரணமாக அவரும் பயன்படுத்திக் கொண்டார்.

அதன் பிறகு ஷின்னை வெளி உலகுக்கு காட்டாமலே அவனுக்கு கொடூரமான மரணத்தை வழங்கியவர்கள், நாட்டில் அமைதியையும், போதை பொருளையும் ஒழித்து விட்டதோடு அங்கும் இங்கும் இங்குமாய் ஊடுருவி இருக்கும் பல சமூக விரோதிகளையும் களை எடுத்து அவர்களையும் தூக்கில் தொங்க விட்ட ரா அமைப்பாளர்கள், சட்டத்துக்கு விரோதமாக ஆயுதம் கடத்தும் கும்பலையும் கூண்டோடு பிடித்து அவர்களுக்கும் மரணத்தை வழங்கி விட்டே ஓய்ந்தார்கள்.

முழு மூச்சாக அத்தனை வேலையையும் சோறு தூக்கம் மறந்து போய் வேலை பார்த்தார்கள். இத்தனை செயல் ஆற்றிய பொழுதும் தங்களின் முகங்களை வெளி உலகத்துக்கு காண்பித்துக் கொள்ளவில்லை ஒருவரும். ராணுவ அதிகாரிகள் மட்டுமே அனைத்தியும் செய்து முடித்ததாக காட்டிக் கொண்டார்கள். அப்பொழுதும் கூட இவர் தான் செய்தார் என்று குறிப்பிட்டு யாரையும் சொல்லாமல் மொத்தமாக ராணுவம் என்று முடித்து விட்டது.

ரா அமைப்பில் உள்ளவர்களின் மிஷன் அவர்களின் உயிர் உள்ளவரை தொடரும் அல்லாவா.. அதனால் வெளி உலகின் வெளிச்சம் தங்களின் மீது படாமல் அனைத்து சாதனைகளையும் செய்து முடித்தார்கள். கிட்டத்தட்ட இது அத்தனையும் முடிய ஒரு மாத காலம் ஆகியது.

ஷின்னை கைது பண்ணும் வரை மட்டுமே தயாழினியை தூக்கத்திலும் மயக்கத்திலும் வைத்து இருந்தார்கள். அதன் பிறகு அவளுக்கு எந்த தூக்க மருந்தும் கொடுக்கவில்லை. ஆனால் அவளிடம் மிகப் பெரிய அமைதி தான்.

அவளை சுற்றி எப்பொழுதும் குடும்பத்து ஆட்கள் இருப்பது போல பார்த்துக் கொண்டார்கள். தங்கைகள் ஒரு நிமிடம் கூட நீங்காமல் அவளுடனே உடன் இருந்தார்கள்.

அவளின் இறுக்கத்தை பார்த்து,

“அண்ணி இதுல கோவப்பட எதுவும் இல்ல. ஆனா உங்களை வச்சு இந்த ப்ளானை செய்ய அண்ணனால முடியவே முடியாது. உங்க மேல அந்த அளவுக்கு காதல் வச்சு இருக்காரு.. அவரோட அன்பை புருஞ்சுக்கோங்க” என்றான்.

“அப்போ எனக்கு அவர் மேல அன்பு இல்லன்னு சொல்றீங்களா?” வெடுக்கென்று கேட்டவளை என்ன சொல்லி சமாதனம் செய்வது என்று முழித்தான் குணா.

அவன் வீட்டையும் பார்த்துக் கொண்டு நாட்டையும் பார்த்துக் கொண்டு மிகவும் சோர்ந்து தான் போனான். அதுவும் இரவு எல்லாம் ஒரு பொட்டு தூக்கம் இல்லாமல் ராப்பகலாக வீட்டை சுற்றி வந்துக் கொண்டே இருந்தான்.

ஒரு நிமிடம் கண் மூடவில்லை. எப்பொழுது வேணாலும் ஆபத்து நேரலாம் என்கிற சூழ்நிலை. அதுவும் தயாழினி வீட்டுக்கு வந்த பிறகு இன்னும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல். கயவர்கள் எல்லோரையும் கைது பண்ணும் வரை ஒற்றை ஆளாக அத்தனையையும் அவன் மட்டுமே தோளில் தாங்கி சுமந்தான்.

அதில் இவள் வேறு இப்படி படுத்த, முயன்ற அளவு அவளை சமாதனம் செய்தான் கொழுந்தன்.

அதோடு தொலைக் காட்சியிலும் சமூக வளை தளங்களிலும் பரவிய செய்தியில் கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள். இண்டேர்நெஷ்னல் கிரிமினல் என்று தெரிந்தாலும் அதில் நம் நாட்டிலே இத்தனை கயவர்கள் ஒளிந்து இருக்கிறார்களே என்று மாய்ந்துப் போனாள்.

இருந்தாலும் உள்ளுக்குள் அவளின் கணவன் மீது கோவம் இருக்க தான் செய்தது. “எதற்கு எடுத்தாலும் மயக்க மருந்தும் தூக்க மருந்தும் குடுத்து ஆளை பிளாட் ஆக்கிடுறது.. என்ன பழக்கம் இது. வரட்டும் அந்த ஆளா நானான்னு ஒரு கை பார்க்கிறேன்” என்று உள்ளுக்குள் கனன்றுக் கொண்டு இருந்தாள் தயாழினி.

ஷின்னை கொலை செய்வதற்கு முன்பு தங்களின் மகிழ்ச்சியான குடும்பத்தை அவனிடம் காட்டிய பிறகே கொன்றான் அசோகன்.

“நீ சொன்னியே என் குடும்பத்தை நிர்மூலம் ஆக்குவேன்னு.. நானும் என் மாப்பிள்ளை இருக்கும் வரை அவங்க மயிரை கூட உன்னால தொட முடியாதுடா...” என்றவன்,

“என்ன பார்க்கிற என் மாப்பிள்ளை வெறும் வட்டி பிசினெஸ் பண்றவன் இல்லடா.. என்ன அடிச்சு மிதுச்சு கேட்பியே உன் கூட இன்னொருத்தன் இருந்தானே அவன் யாருன்னு.. அவன் இவன் தான்... ரா உளவாளி.. உன்னை சுளுக்கு எடுக்க தான் இந்த பிளானே...”

“நீ என்னை பிடிக்கல.. நானா தான் உன் கிட்ட சிக்கினேன்.. நாங்க வலை விரிச்சது உனக்கு. ஆனா நீ என் குடும்பத்துக்கு வளை  விரிச்சு காத்துக்கிட்டு இருந்த.. பட் என் மாப்பிள்ளை ரொம்ப க்லவர். ஒரு பக்கம் என் குடும்பத்தை காப்பாத்திக்கிட்டே, அவனோட நண்பனையும் காப்பாத்திட்டான்..” என்றான் தயாகரனின் தோளில் பெருமையாக கையை போட்டுக் கொண்டு.

“அவன் நண்பனையே தூக்கிட்ட.. புது மாப்பிள்ளை வேற... அவன் பொண்டாட்டியையே நீ விலை பேசி வர வச்சு இருக்க... அவன் வேற ரொம்ப காண்டாயிட்டான்..” என்று அசோகன் நிறுத்த,

அதிலிருந்து தயாகரன் தொடர்ந்தான்.

“ஆமா நான் காண்டாகிட்டா நான் நானாவே இருக்க மாட்டேன். இவன் என் ஹனிமூன கூட முழுசா கொண்டாட விடல மச்சான்... அதனால நான் ரொம்ப சூடாயிட்டேன்” என்று துப்பாக்கியை எடுத்து டப்பு டப்பு என்று சுட ஆரம்பித்து விட்டான்.

அசோகன் கர்வமான புன்னகையுடன் அதை பார்த்து இருந்தான்.

--

Loading spinner

Quote
Topic starter Posted : September 12, 2025 12:28 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top