“அது சரி” என்றவன், “முன் அனுபவம் இருக்கா?” கேட்டான். இதை கேட்டவன் மாபியா தலைவன். அவன் புறம் திரும்பி பார்த்தவன்,
“ம்ம்.. தயாகரனே பலமுறை என்னை கண்டம் பண்ணிட்டான்...” என்று குமுறினான்.
“அப்போ நீ அணில் கடிச்ச பழமா?” இப்பொழுது அல்லக்கை அவனிடம் நெருங்கினான்.
அதை மாபியா தலைவன் விரும்பவில்லை. பார்வையாலே அவனை எச்சரிக்க, சட்டென்று விலகிக் கொண்டான் அல்லக்கை.
“அடச்சீ ஒரு ஆம்பளைக்கு இத்தனை போட்டியா?” மனதுக்குள் கேட்டுக் கொண்டவன்,
“டேய் மச்சான் உன்னை பார்ப்பதற்குள்ள நான் கண்டம் ஆகிடுவேன் போலடா இவனுங்க கிட்ட” மனதுக்குள் புலம்பிக் கொண்டவன் சுற்றி இருப்பதை எல்லாம் அவதானித்தபடியே அவர்களின் பேச்சுக்கு ஈடு கொடுத்துக் கொண்டு இருந்தான் ரா ஆபிசெர் மிஸ்டர் தயாகரன்.
உள்ளே சிக்கி இருக்கும் தங்களின் ஆபிசருக்கு எப்படி உதவி செய்வது என்று மண்டையை உடைத்துக் கொண்டு இருந்தார்கள் தயாகரனின் ஆட்கள்.
ஆனால் உள்ளே இருந்த தயாகரனுக்கு அந்த மாதிரி எந்த கவலையும் இல்லாமல் சுற்றிலும் பார்வையை சுழட்டிக் கொண்டே மாபியா தலைவனுடன் நடந்தான்.
சாதாரணமாக பார்த்தால் அங்கு எதுவும் தென்படவில்லை தான். ஆனால் கூர்மை வாய்ந்த பார்வையில் எதுவும் தப்பாதே.. மறைந்து இருக்கும் சுவர்கள், அதன் பின்னாடி தயாராக இருக்கும் அரக்க மனிதர்கள், அங்காங்கே சில மெல்லிய அலறல்கள் என அனைத்தும் அவதானித்துக் கொண்டே வந்தான் தயாகரன்.
அவன் நினைத்தது போல இது அவ்வளவு இலகுவான இடம் கிடையாது. உள்ளே நுழைவது மட்டுமே எளிதாக இருக்கும் போல.. ஆனால் இங்கிருந்து தப்பிப்பது மிக மிக கடினம் என்று உணர்ந்துக் கொண்டவன், மிக மிக சீக்ரெட்டாக நீண்ட சடையில் வைத்து இருந்த மைக்ரோ போன் உதவியுடன் சடையை பின்னுவதுமா, தடவி விடுவதுமாக இருந்த படியே தகவல்களை தன் ஆட்களுக்கு அனுப்பியவன், கூடவே தயாழினியின் சின்ன அண்ணனான அதர்வனுக்கும் தகவல் தெரிவித்து விட்டான்.
இந்த இடத்துக்கு வரும் பொழுது எல்லோரையும் கண்ணை கட்டி தான் கூட்டிட்டு வந்தார்கள். இது நிலமா இல்லை கடலா என்ற சந்தேகம் இருந்தது ஆரம்பத்தில்.
ஆனால் போக போக இது கடலில் பெரிய கப்பலில் பயணம் செய்துக் கொண்டு இருக்கிறோம் என்று மிக ஈசியாக கணித்து விட்டான்.
அந்த தகவலையும் சேர்த்தே அனுப்பி வைத்தான். ஏற்கனவே அத்ரவன் தயாகரனின் உடம்பில் பொருத்தி இருந்த ஜீபீஸ் உதவியுடன் அந்த இடத்தை ரீச் ஆகிவிட்டான் தன் படையுடன்.
ஆனால் அந்த கப்பலில் எப்படி உள் நுழைவது என்று தான் சிந்தனை. இது மிகப்பெரிய சரக்கு கப்பல். எந்த கண்டெயினரில் இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பது மிகவும் கடினம்.
ஜீபிஎஸும் தயாகரன் உள்ளே நுழைந்த நுழைந்த உடனே செயல் இழந்து விட்டது.. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே தயாகரனிடம் இருந்து ஆப்ரேஷன் ஒன் என்று வர, மிஷனை ஸ்டார்ட் செய்ய தொடங்கி விட்டான் அதர்வன்.
அதோடு தயாழினியின் பெரிய அண்ணனான அசோகனுக்கும் மெசேஜ் பறந்தது தயாகரனிடம் இருந்து.
“ஆர் யூ ரெடி மச்சான்? ஐ ஆம் ரீச் இன் யோவேர் ப்ளேஸ்” என்று கோட் வேர்ட் மூலமாக அனுப்பி இருந்தான். அதை இங்கே பார்த்துக் கொண்டு இருந்த அசோகனுக்கு இதழ்களில் சிரிப்பு வந்தது.
பல நாட்கள் மழிக்கப் படாத தாடியுடன் இருந்தவனின் உருவம் மங்கிப் போய் இருந்தாலும் திடம் மட்டும் கொஞ்சமும் குறைவில்லை.
மிக சின்ன இடத்தில் அவனது ஆறடிக்கு மேல் இருந்த உருவத்தை அடைத்து வைத்த பொழுதும் இடைவிடாத உடற்பயிர்ச்சியின் விளைவாக இன்னும் திடகாத்திரமான உருவத்துடனும் சோம்பாத வலுவுடனும் இருந்தான் அசோகன்.
நாட்டுக்காக சேவை செய்வதில் அலாதி ஆர்வம் கொண்டவன். தன் உயிரை குடுத்து நாட்டை காப்பாற்ற வெறி கொண்டவன்.
அவனுக்கு கொஞ்சமும் சளைத்தவன் இல்லை அதர்வன். இருவரையும் ஒரே தட்டில் வைக்கலாம். அவ்வளவு நாட்டு பற்று கொண்டவர்கள்.
தயாகரனிடம் இருந்து வந்த தகவல்களை கொண்டு எல்லோரும் தயாராக இருந்தார்கள் எதிரிகளை தாக்க. அதன் படி அதர்வன் தன் ஆட்களோடு அந்த கப்பலை முற்றுகை இட்டதோடு, கப்பலில் ஏற ஆணவம் செய்து அதன் படி அந்த கப்பலில் தொங்கி கொண்டு இருக்கும் ஏணியில் யாருக்கும் அரவம் செய்யாமல் ஒவ்வொருவராய் கப்பலின் கீழ் தளத்திலே குதித்து உள்ளே வந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்தது செந்தமிழும் விஜயும் தான்.
ஒரு பக்க ஜன்னலை மட்டும் திறந்து வைத்து விட, வெகு சுலபமாக உளவு படை பிரிவு கப்பலின் உள்ளே குதித்து விட்டார்கள்.
வெளியே இந்த நிலை என்றால், உள்ளே தயாழினியின் அண்ணன் இருக்கும் இடத்துக்கு தயாகரனை அழைத்து வந்து இருந்தான் ஷின்.
அங்க வந்த உடனே தன் நண்பன் இருக்கும் நிலையை கண்டு மனம் துடித்துப் போனான் தயாகரன். மடங்கி உட்காரும் அளவே இருந்தது அந்த இடம்.
ஆறடிக்கு மேல் உருவம் கொண்டவன் ஷின்னிடம் மாட்டிய நாளில் இருந்து இதோ இப்படோ மடங்கியே தான் இருக்கிறான். நீட்டி நிமிர வழியே இல்லை. ஆனாலும் மடங்கி இருந்த நிலையிலும் அவன் விடாமல் அந்த குறுகிய இடத்தில் பயிற்சி மேற்கொள்வதை பார்த்து ஷின்னுக்கு அவ்வளவு வெறி வரும்.
இரும்பு முட்கள் பதித்து இருக்கும் சாட்டையை கொண்டு விளாசி தள்ளுவான். ஆன பொழுதும் அவனிடம் இருந்து ஒரு முனகல் கூட வராது. அடிக்கிறியா அடிச்சுக்கோ.. என்று அவ்வளவு திடமாக நிற்பான்.
ஏனெனில் அவனை அடிக்க வரும் பொழுது மட்டும் அவன் நீட்டி நிமிர்ந்து நிற்க முடியும். அந்த குறுகிய இடத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். மற்ற நேரம் எல்லாம் குறுகி தானே இருக்க முடியும். அதனால் அவனுக்கு கொடுக்கும் நேரத்தை அவன் வீண் பண்ணவே மாட்டான். ஷின்னிடம் சாட்டை அடியை வாங்கிக் கொண்டே உடலை நெளித்து வளைத்து நீட்டி நிமிர்ந்து தன் குறுகளை நிமிர்த்திக் கொள்வான்.
அவனது நெஞ்சுக்கு உரம் அதிகம். அதனால் மட்டும் தான் அவனால் இத்தனை நாட்கள் இந்த ஷின்னிடம் உயிர் வாழ முடிந்தது. இல்லை என்றால் மற்றவர்கள் போல எப்பொழுதோ உயிரை விட்டு இருப்பான்.
தன் முன் இருந்த நண்பனை கண்டவனுக்கு கண்ணுக்குள் அத்தனை பரவசம். ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் தயாகரன் அமைதியாக நின்றான். நிற்க வேண்டி வந்தது.
தன் நண்பன் தன் தங்கையின் வேடத்தில் தன் முன் வந்து நிற்பதை உணர்ந்து ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் இன்னொரு பக்கம் தனக்காக அவன் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கிறான் என்று புரிந்து நெகிழ்ந்துப் போனான்.
ஷின் தயாகரனின் கையில் முற்கள் நிறைந்த சாட்டையை குடுத்து, “இப்ப இவனை ரிலீஸ் பண்ண போறேன். அவன் வெளியே வந்த உடனே உன் கையாள இவனை எவ்வளவு தூரம் அடிக்க முடியுமோ அந்த அளவுக்கு அடிக்கிற.. இல்லன்னா உன் அண்ணனுக்கு முன்னாடியே உன் ஆடைகளை எல்லாம் கிழிச்சு எரிஞ்சு உன்னை அக்கு வேறா ஆணி வேற ஆக்கிடுவோம்” என்றான் அதுவரை அமைதியாக இருந்த ஷின்.
“அதுக்கென்ன இவனை எப்படி அடிக்கிறேன் மட்டும் நீங்க பாருங்க சார்...” என்று தன் மச்சானை பார்த்து கண்ணடித்தான். அசோகனுக்கு இதழ்களில் புன்னகை படர துடிக்க, அதை முயன்று அடக்கிக் கொண்டு,
“நீ அடிச்சே வலிக்கல. இவ அடிச்சா எனக்கு வலிக்கப் போகுது? இது எவ்வளவு வேணாலும் தாங்கும் கட்டை. இந்த பூச்சாண்டி காடுற வேலையெல்லாம் இங்க வேணாம்” என்று அப்பொழுதும் தன் கெத்தை கொஞ்சமும் விடாமல் சொன்னவனை கதவை திறந்து எட்டி உடைத்தான் ஷின்.
அதை பார்த்த தயாவுக்கு கண்கள் சிவந்துப் போனது. “என் கண் முன்னாடியே என் மச்சானை எட்டி உதைக்கிறியாடா.. உன் சாவு இனி என் கையில தான்” கறுவிக் கொண்டவன், தன் மச்சானை அந்த சின்ன சிறையில் இருந்து வெளியே வர காத்து இருந்தான். இதோ இன்னும் சில நொடிகளில் அவனின் மச்சான் வெளியே வந்து விடுவான். அதுவரை பொறுத்து தான் ஆகனும். என்று பொறுமையாக காத்து இருந்தான் தயா.
ஆனால் ஷின் டக்கென்று தயாவை பிடித்து தன் அருகில் நிற்க வைத்து அவனின் இடையோடு தன் கையை வைத்து அழுத்திப் பிடித்து, சில்மிஷம் செய்துக் கொண்டே, எகத்தாளமாக அசோகனை பார்த்தான்.
“என்னவோ சொன்னியே.. உன் குடும்பத்தை என்னால நெருங்கவே முடியாதுன்னு. இப்போ பார்த்தியா உன் தங்கமான தங்கச்சி என் கை பிடியில.. ஹஹஹஹா.. உன் ஒட்டு மொத்த குடும்பமும் இப்போ படுற அவஸ்த்தையை பார்க்குறியா?” என்று கேட்டுக் கொண்டே முதல் நாள் அக்கா தங்கச்சி மூவரும் தயாகரன் மற்றும் அவனின் தம்பிகளிடம் மாட்டி அடிவாங்கி, இரத்தம் ஒழுக மயக்கத்தில் கிடந்த காட்சி, கூடவே அவனின் பெற்றவர்கள் இருவரும் பிரபாகரன் வீட்டில் சாணி அள்ளுவதும், கூட்டி பெருக்குவதுமாக தள்ளாமையில் இடுப்பு ஓடிய வேலை செய்வதை எல்லாம் திரைப்படமாக ஓட, அசைவில்லாது அதை பார்த்தான் அசோகன்.
போதாதற்கு பெண்கள் மூவருக்கும் போதை மருந்து குடுத்து அவர்கள் உருண்டு புரண்டுக் கொண்டு இருக்கும் காட்சியும் ஓடியது.
“என்னடா பெரிய குடும்பம்னு சொன்ன.. உன் கண்ணு முன்னாடியே உன் குடும்பத்தை சிதைச்கிட்டேன் பார்த்தியா? இப்போ சொல்லு யார் ஜெயிச்சா?” நக்கலாக கேட்டான் ஷின்.
அவனை நக்கலாக பார்த்த அசோகன்,
“என் குடும்பத்தை நிர்மூலம் ஆக்கிட்டா நீ செயிச்கிட்டன்னு அர்த்தமா?” கேலியாக கேட்டவன்,
“என் குடும்பம் என்ன ஆனாலும் சரின்னு என் தேசத்துக்காக இப்போ வரை உயிர் குடுத்துட்டு இருக்க நான் தான் இப்பவும் செயிச்சேன்.. நீ நம்ம தேசத்துக்கு மட்டும் துரோகம் பண்ணாம ஒட்டு மொத்த உலகத்துக்கும் துரோகம் பண்ணிட்டு இருக்கியே.. நீ எப்படி ஜெயிச்சவன் ஆவ... உன்னை எப்பவோ நான் ஜெயிச்சுட்டேன் ஷின்” என்றான் அவ்வளவு திமிராக.
“அப்போ நீங்க தான் ஹெட்டா” என்று ஷின்னிடம் கேள்வி கேட்டான் தயாகரன் பெண் குரலில் மிகவும் அதிர்ந்து போனது போல.
“அதுல உனக்கு என்ன பிரச்சனை” என்று கடுப்படித்தவன், அசோகன் பக்கம் திரும்பி,
“இப்படி நீ பேசுறதுக்கே என் கிட்ட வாங்கி கட்டுவடா..” என்று கறுவியவன், தன் கைப்பிடியில் இருந்த தயாகரனை தள்ளி வைத்து விட்டு,
“வெளிய இவனை இழுங்கடா.. இவன் வாயிலையே எட்டி மிதிச்சு கொன்னு கடல்ல வீசலாம்.. என் கிட்டையே எவ்வளவு திமிரா பேசுறான். கூடவே இவனோட தங்கச்சியை எல்லோரும் சேர்ந்து அனுபவிங்க.. இவன் கண் முன்னாடியே இவன் தங்கச்சி சீரழியிறதை பார்த்து இரசிக்கட்டும்” என்று கட்டளை போட,
“சரிங்க பாஸ்” என்று திமு திமுவெண்று எங்கிருந்தோ ஆட்கள் வர, வந்த வேகத்தில் அசோகனை இழுத்து வெளியே விட்டவர்கள், தயாகரன் உடுத்தி இருந்த சேலையில் கை வைத்து இழுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அடுத்த வந்த நிமிடங்கள் எல்லாம் அங்கே போர் அபாயம் சூழ்ந்தது.