அத்தியாயம் 18

 
Admin
(@ramya-devi)
Member Admin

எங்கே அவன் அறைக்குள் வந்து விட்டால் என்ன செய்வது என்று கதவை சாற்றிக் கொண்டாள். அவள் எதிர் பார்த்தாள். வந்து கதவை தட்டுவான் என்று. ஆனால் கதவு தட்டும் சத்தம் மட்டும் கேட்கவே இல்லை.

உள்ளுக்குள் ஏமாற்றம் சிறிதே பரவியது.. அதில் தன்னை தானே குட்டிக் கொண்டவள் ஆழ்ந்து தூங்கிப் போனாள். நடு சாமத்தில் அவளின் வெற்று இடையில் ஒரு கை பட தட்டி விட்டுட்டு மீண்டும் தூங்கிப் போனாள்.

அந்த கை மீண்டும் அவளின் இடையில் அழுத்தமாக வந்து விழ திடுக்கிட்டுப் போனவள் பதறி பக்கத்தில் பார்க்க அகத்தியன் தான் அவளின் பின்னாடி கட்டிக்கொண்டு படுத்து இருந்தான். அவனது முரட்டு கை அவளின் இடையை இறுக்கிப் பிடித்து இருந்தது.

“கதவு தாழ் போட்டு இருந்தனே... எப்படி இவரு வந்தாரு?” திகைத்துப் போனாள்.

“உப்பரிகை பக்கமா வந்தேன்” என்றவன் அவளை புரட்டி போட்டு அவள் மீது படர்ந்தான்.

“ஹலோ மிஸ்டர் என்ன பழக்கம் இது... இப்படி தான் தனியா இருக்க ஒரு பெண்ணோட அறைக்குள்ள அத்து மீறி உள்ளே நுழைவதா? நுழைஞ்சதோட இல்லாம என்கிட்டயும் தவறா நடந்துக்குறீங்க.. இதெல்லாம் ரொம்ப தவறு” என்று தமிழ் தன் மீது படர்ந்தவனை தள்ளி விட்டாள்.

அவனோ கொஞ்சமும் அசையாமல் அவனுக்கு மிக இடைஞ்சலாக இருந்த அவளின் முந்தானையை எடுத்து கீழே போட்டவன் அவளின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டான்.

“என்ன பண்றீங்க?” அவளுக்கு குரலே வெளியே வரவில்லை.

“சத்தம் போடாம இருந்தா வெறுமன தூங்கிட்டு போயிடுவேன்... இல்ல பிரிச்சு மேஞ்சிட்டு தான் போவேன். சாய்ஸ் இஸ் யோவர்” அதிரடியாக அவன் சொல்ல வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“பார்த்தாலும் பார்த்தேன்.. ஆனா இந்த மாதிரி ஒரு மனுசனை பார்த்ததே இல்லை” ஏகத்துக்கும் கடுப்பு வந்தது. ஏனெனில் அவன் வந்து தொட்டவுடன் இவளின் உடல் மெல்ட் ஆகிறதே.. அவளும் என்ன தான் செய்வாள்.

அவனிடம் இருந்து அதை மறைக்க மிகவும் போராடினாள். ஆனால் அவள் என்ன மறைத்தும் அவளின் நெகிழ்வும் தளர்வும் அவனுக்கு காட்டி கொடுத்து விட்டது என்பதை அவள் அறியாமல் போனாள்.

அதன் பிறகு ஒவ்வொரு இரவும் இதே போல தான் கழிந்தது அவளுக்கு. கதவை இறுக சாத்தினாலும் நடு இரவில் அவளின் மார்பில் வந்து படுத்துக்கொள்வான் அகத்தியன்.

அவனது வெற்று மார்பு அவளை நிலைக்குலைய வைக்கும். பள்ளிகூடத்தில் வேண்டாத வேலை பார்த்து வைப்பான். முக்கியமான் கிராமர் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவசரமாக கரஸ் கூப்பிடுகிறார் என்று தகவல் வரும். இவளும் அடித்து பிடித்துக் கொண்டு போவாள்.

ஆனால் அவன் அங்கு பார்த்து வைக்கும் வேலையே வேறு. வேகமாய் வந்தவளை கதவிலே சாய்த்து அவளின் இதழ்களை ஆவேசமாக கவ்விக் கொள்வான். பின் குத்தி இருப்பதால் மட்டுமே அவளின் முந்தானை தப்பித்தது. இல்லை என்றால் பள்ளிக்கூடம் என்று பாராது அவளை போட்டு படுத்தி எடுத்திருப்பான்.

ஆன பொழுதும் அவளை விட்டு வைக்காவன் ஒன்றும் அவ்வளவு நல்லவன் இல்லையே... அவளின் இதழ்களை சிறை செய்து, கழுத்தில் முகம் புதைத்து, இடையை இறுக்கிப் பிடித்து, கூந்தலை ஒதுக்கிவிட்டு அவளின் வெற்று முதுகில் இதழ்களை ஓடவிட்டு என அவன் கொண்ட மோகங்களை எல்லாம் சில மணி துகள்களில் அவளிடம் கொட்டி விடுவான்.

அவனை ஒவ்வொரு நேரமும் எதிர்க் கொள்வது தான் தமிழுக்கு பெரும் பாடாய் போனது. ஆசிரியர்கள் மீட்டிங் என்று வரவைத்து விட்டு அவனது பார்வை மொத்தமும் அவளிடமே வைத்துக் கொள்வான்.

கேள்விகளால் திணறடிக்க வைத்து தன் இதழ்களை தொட்டு காட்டி லஞ்சம் கேட்பான்.

அவனை கடந்து செல்ல நேரும் பொழுதெல்லாம் போகிற போக்கில் அவளின் இடையை யாரும் காணா கணப்பொழுதில் வருடிவிட்டு செல்வான்.

எப்பொழுதும் என்ன செய்வானோ என்கிற பதட்டத்தில் வைத்து இருந்தான். ஒரு நாள் தாங்க முடியாமல் அவனிடமே வெடித்து விட்டாள் தமிழ்.

“உங்க மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க நீங்க... ஒரு ஸ்கூலோட கரஸ் நடந்துக்குற மாதிரியா நடந்துக்குறீங்க.. சீப்பான தேட்ரேட் பொறுக்கி நடந்துக்குற மாதிரி நடந்துக்குறீங்க... தட்டி கேட்க ஆளில்லாம நடந்துக்குற உங்களை என்ன செய்யிறது.. இன்னொரு முறை ஸ்கூல்ல உங்க விரல் என் மேல பட்டது அவ்வளவுதான் சொல்லிட்டேன் பார்த்துக்கோங்க” என்று சற்று அதிகப் படியாகவே அவள் பேசி விட்டாள்.

அகத்தியன் விழிகள் சிவக்க அவளை பார்த்தவன்,

“அவுட்” ஒரே ஒரு கர்ஜனை தான். தமிழுக்கு உடல் மொத்தமும் வெலவெலத்துப் போனது.

“என்னங்க” என்று அவள் தடுமாற,

“வெளியே போடின்னு சொன்னேன்” அவனது முகத்தில் இருந்த அதீத சீற்றத்தில் நாக்கு வறண்டுப் போனது அவளுக்கு..

“இல்லங்க” என்று அவனை சமாதனப்படுத்த வர, டேபிளில் இருந்த பைலை எடுத்து சுவரில் வீசி அடித்தவன்,

“போடி” என்றான்.

அவனை சமாதனப் படுத்த முடியாமல் வெளியே வந்து விட்டாள் தமிழ். ஏனோ அவனது கோவம் அவளுக்கு கண்ணீரை வரவழைத்தது.

அலுத்துக் கொண்டே வெளியே வந்தவளை மற்ற ஆசிரியர்கள் ஏளனத்துடன் பார்த்தார்கள்.

“எப்பொழுதும் உள்ள இருந்து வெளிய வந்தா முக சிவப்போட, இதழ்கள்ல சிவப்போட வருவா. இன்னைக்கு என்ன கண்ணீரோட வர்றா.. நம்ம கரஸ் அவளை கண்டுக்கலையோ...”

“வேணும் இவளுக்கு நல்லா வேண்டும்.. கரசே இவ பிடியில இருக்குற மாதிரி என்னம்மா ஆட்டம் காண்பிச்சா... இப்போ அவரே இவளுக்கு ஆப்பு வச்சுட்டாரு. அழுவட்டும் இன்னும் நல்லா அழுவட்டும்..”

“அது மட்டுமா... அவ சிலுப்புற சிலுப்பு என்ன.. பெரிய வீட்டு மருமகன்னு என்னாமா ஆட்டம் போட்டா... எப்போ இவ லட்சணம் தெரிஞ்சு துரத்தி விடுவாங்களோ தெரியல. அதுவும் சீக்கிரம் நடக்கும்” என்று சில வயிற்றெரிச்சல் பிடித்த ஆட்கள் அவளுக்கு பின்னாடி பேச இன்னும் கலங்கிப் போனாள்.

இவங்க பேசுறதை தாங்க முடியாம தான் அவளோட கணவன் கிட்ட அவ அப்படி பேசுனதே.. ஆனா இப்போ இதுக்கும் புரணி பேசி மகிழும் இவர்களை எல்லாம் என்ன செய்வது.

“ச்சீ” என்று அருவெறுத்துப் போனாள் தமிழ்.

அவளுக்கு இதெல்லாம் வரவே வராது.. யாரையும் தவறாக பேசுவதோ கீழ் தரமாக சித்தரித்து பேசுவதோ எல்லாம் அறவே பிடிக்காது. ஆனால் அவளையே இப்படி பேசுபவர்களிடம் இருந்து தள்ளி இருந்துக் கொண்டாள். அதுவும் இவர்களுக்கு தவறாக பட்டது போல.

இந்த உலகில் எந்த மனிதனும் மற்ற மனிதர்களின் விமர்சனத்துக்கு ஆளாகாமல் இருக்கவே முடியாது என்பது பாவம் அவளுக்கு தெரியவில்லை. இந்த ஊர் நாம என்ன செய்தாலும் ஏசும், பேசும்.. விமர்சிக்கும். இந்த விமர்சங்களுக்கு யாராலும் தப்பிக்கவே முடியாது. ஆளான பட்ட கடவுளே இதற்கு விதிவிலக்கு என்றால் சாதாரண மனிதன் எல்லாம் எம்மாத்திரம்.

அதை தெளிவாக அகத்தியனிடம் சொல்லி இருக்கலாம் பெண்ணவள். ஆனால் அவள் எதுவுமே சொல்லாமல் எடுத்த உடனே கோவத்தில் பேசிவிட்டாள். அகத்தியன் மலையேரிவிட்டான். எப்படி அவனை மலையிறக்க போகிறாளோ தமிழ். அவளுக்கே வெளிச்சம்.

அடுத்து வந்த நாட்களில் ஒரு பொழுது கூட அவளை தேடி வாவன் வரவே இல்லை. அவள் இருக்கிறாள் என்று அறிந்தாலே அந்த இடத்தை விட்டு ஒதுங்கிப் போனான் அகத்தியன். இரவு எப்பொழுதும் அவளை தேடி வாருவான். தமிழும் அவனுக்காக காத்துக்கொண்டு இருந்தாள். ஆனால் அவன் வரவே இல்லை.

அவன் வரமால் போன ஒவ்வொரு இரவும் அவனுக்காக அழுகையுடன் காத்திருக்க ஆரம்பித்தாள். ஆனால் அவன் வரவே இல்லை. அவள் இருக்கும் பக்கம் அவனது தலைமுடி கூட அசையவில்லை. அவனுக்கு சும்மாவே ஈகோ ரொம்ப சாஸ்த்தி. இப்போ இவள் இப்படி பொறுக்கி என்று சொல்ல அவனுக்கு சொல்லவா வேண்டும். ஒட்டு மொத்தமாக அவளை விலக்கி நிறுத்தி விட்டான்.

அவளுக்காக ஆசையாக இருந்த அவனின் மனம் சுருங்கிப் போய் விட்டது. நீ என்னை எந்த அளவிலும் பாதிக்கலடி என்று காண்பிப்பதற்காகவே அவன் ஓவராக ஆட்டிட்யூட் காண்பித்தான்.

தன்னை இப்படி ஒட்டு மொத்தமாக அகத்தியன் விலக்கி வைத்ததை அவளால் தாங்கவே முடியவில்லை. இவள் பேச வந்தாலே போனை எடுத்து காதில் வைத்துக் கொள்வான். இல்லை என்றால் எழுந்து சென்று விடுவான். அந்த இடத்தில் கூட நிற்க மாட்டான்.

மூன்று நாட்கள் இப்படியே போக நான்காவது நாள் அவளை கூப்பிட்டு கேட்டார் பூவரசி.

இவள் அழுதுக் கொண்டே எல்லாவற்றையும் சொல்ல பூவரசி யாருக்காக பார்ப்பார். இருவரின் மீதும் தவறு இருக்கிறதே. பள்ளிக்கூடத்தில் செய்கிற செயலா அவரது மகன் செய்து வைத்திருக்கிறான். அவனுக்கு சாதகமாக பேச.

அதுக்காக தமிழ் பக்கமும் பேசிவிட முடியாதே... அவளும் சொற்களை தாறுமாறாக வீசி இருக்கிறாள். பூவரசிக்கு தலை காய்ந்தது. சிறு பிள்ளையாக நடந்துக் கொள்ளும் இருவரின் செயலாலும்.

“இனி நீ பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டாம். அவனோட ஆபிஸ்க்கு போ. இப்போ அவன் முழு மூச்சா பள்ளிகூடத்துல தானே இருக்கான். அதனால இந்த பிரச்சனை ஓய்ந்த பிறகு பள்ளிக்கூடத்துக்கு வந்துக்கலாம். பிரிஞ்சி இருங்க கொஞ்ச நாளைக்கு” என்று அவர் சொல்லி விட அந்த முடிவில் தமிழுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆனால் அவரை மீறி அவளால் எதுவும் செய்ய முடியாதே.

தலையை ஆட்டிக் கொண்டவள் அடுத்த நாளில் இறுந்து அகத்தியனின் அலுவலகத்துக்கு செல்ல ஆரம்பித்தாள். அங்கே மாமனார் சிவலிங்கம் இருக்க கொஞ்சம் இலகுவாக சென்றது இரண்டு நாட்கள்.

ஆனால் மூன்றாம் நாள் அவள் அலுவலகத்தில் அமர்ந்து இருந்த சமயம் வேக நடையோடு அவனது அறைக்குள் நுழைந்தான் அகத்தியன். அவனது அறையில் அவனது இருக்கையில் கால் மேல் போட்டு அவனது சிஸ்டத்தில் காட்ஸ் விளையாண்டுக் கொண்டு இருந்தாள்.

அலுவலகம் வந்தாளே தவிர அவளுக்கு இந்த அலுவலகத்தில் எந்த வேலையும் தெரியாது. மாமனாரும் “நீ அவனோட அறையில இருந்துக்க ம்மா. எந்த வேலையும் செய்ய வேணாம்” என்று சொல்லி விட இவளுக்கு இரண்டு நாளும் அவனது கம்ப்யூட்டரோடு தான் சென்றது.

பல கேம்களை டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டு போரடிக்கும் பொழுது ஒவ்வொரு கேமாக விளையாடிக் கொண்டு இருந்தாள் எந்த தொந்தரவும் இல்லாமல்.

ஆனால் இப்படி பெரும் சத்தத்துடன் கதவை திறந்துக் கொண்டு தன் கணவன் வந்து நிற்பான் என்று தெரியாதவள் மிரண்டுப் போனாள்.

படக்கென்று அவனின் இருக்கையை விட்டு எழுந்து நின்றாள். கூர்ந்த பார்வையோடு கூடிய முறைப்புடன் அவளை பார்த்த படியே வந்தவன், தன் இருக்கையில் கோட்டை கழட்டி இருக்கையின் பின்புறம் போட்டு விட்டு  அமர்ந்தான்.

“அய்யய்யோ.. ஒத்தையா மாட்டிக்கிட்டமோ.. அப்படியே நைசா கிளம்பிடலாம்” என்று உள்ளுக்குள் முணகிக் கொண்டே கை பையை பற்றியவள் கதவை திறந்துக் கொண்டு வெளியே போக பார்க்க, கதவு பூட்டி இருந்தது.  

பக்கென்று ஆனது தமிழுக்கு. திரும்பி அவனை பார்த்தாள். அவனோ தன் கணினியில் இருந்த கேம்களை பார்த்து டென்ஷன் ஆகி விட்டான்.

“யூ இடியட்” என்று ஆரம்பித்து சில பல நல்ல வார்த்தைகளை போட்டு அவளின் கதை புண்ணாக்கி இருந்தான்.

“சாரி” என்று அவள் பம்ம,

“அறிவு இருக்கா இல்லையாடி... நீ கேம்ஸ் விளையாட என் ஆபிஸ் சிஸ்டம் தான் கிடைச்சதா... சரியான யூஸ்லெஸ்.. ஒண்ணுத்துக்கும் ஆகாத மரமண்டை” என்று அவளை சரமாரியாக திட்ட, தமிழுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.

 

 

 

Loading spinner
Quote
Topic starter Posted : March 6, 2025 11:53 am
Akila reacted
(@gowri)
Eminent Member

என்னமா நீங்க இப்படி இருக்கீங்க😂😂😂😂

பாருங்க ரைட்டர், ஏன் இப்படி அவ அதிகமா வாய் விடணும் சொல்லுங்க???

திருந்தி வந்த எங்க அக, இப்ப திருப்பிட்டு போக காரணம் உங்க தமிழ் தானே.????

எம்மா டீச்சர், இப்படியா ஆபீஸ்லா வந்து விளையாடுவது🤭🤭🤭🤭🤭

பொறுப்பு இல்லா பொட்டுகடலையா இருக்கியே மா தமிழு🤣🤣🤣🤣🤣

Loading spinner
ReplyQuote
Posted : March 6, 2025 12:37 pm
Admin
(@ramya-devi)
Member Admin

@gowri 

என்ன பண்றது எங்க தலைவியை பச்ச பிள்ளையாவே வளர்த்துட்டோம் அம்மணி 🤣 🤣

இவனுக்கு என்ன போச்சு... ஒரு கேம் கூட விளையாட விடாம அவளை கொடுமை படுத்துறான். சரியான ஸாடிஸ்ட் உங்க அக 😤 😤    

மன்னிச்சு விடுவோம்னு இல்லாம திட்டுறான்.

பொறுப்பு லாம் வர இன்னும் கொஞ்ச நாள் ஆகலாம்... வரமாலும் போகலாம் 🤣 🤣  

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : March 7, 2025 11:45 am
(@gowri)
Eminent Member

ஹூக்கும், அப்படியே பொறுப்பு வந்துட்டாலும் 😏😏😏😏

Loading spinner
ReplyQuote
Posted : March 7, 2025 12:06 pm
Admin
(@ramya-devi)
Member Admin

@gowri 

 

நாங்க தான் வராதுன்னு சொல்றோம் இல்ல அப்புறம் ஏன் எதிர்பார்க்கிறிங்க 🤣🤣 பொறுப்பு பருப்பு😁 தூக்கி போடுங்கப்பா அந்த பக்கம் 😂

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : March 7, 2025 12:12 pm
(@gowri)
Eminent Member

@ramya-devi அப்ப நாங்க மட்டும் தக்காளி சாஸ்ஸா என்ன🤣🤣🤣🤣

Loading spinner
ReplyQuote
Posted : March 7, 2025 12:17 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top