மிருதஞ்சயன் சொன்னதை கேட்டு சொக்கிக்கொண்டு வந்த தூக்கம் கூட அடித்து பிடித்து ஓடி விட தன்னவனை திகைத்துப் போய் பார்த்தாள்.
“எப்படி...?” என்று விழிகளை விரித்துக் கேட்டாள்.
“அதெல்லாம் அப்படி தான்...” என்றவன் அவளது நெஞ்சில் தலையை சாய்த்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தான். அவனை தூங்க விடாமல் உலுக்கி எடுத்தவள்,
“எப்போ கண்டு பிடிச்சீங்க...?” தன் சந்தேகம் தீர கேட்டவளை நக்கலாக பார்த்தவன்,
“கண்டிப்பா சொல்லியே ஆகணுமா?”
“ஆமாம் எனக்கு தெரியணும்...” என்றவளின் பிடிவாதத்தில் தோள்களை குலுக்கியவன்,
“முதல் முறை இருட்டுக்குள்ள நடந்ததால கண்டு பிடிக்க முடியல. பட் இரண்டாவது முறை லைட் போட்டு கொஞ்சம் புயல் வேகத்துல பண்ணும் பொழுது நீ கண்ணை மூடிக்கிட்ட. அப்போ உன் கையை தலையணைக்கு மேல பிடிச்சு வச்சு செக் பண்ணிட்டேன்... என்ன கணக்கு சரியா இருக்கா?” என்று கேட்டான்.
அவளையும் அறியாமல் அவளது தலை சரி என்று ஆடியது. ஆனால் இப்படி ஒரு நிலையில் அவன் தன் கையில் அவனது பெயரை தேடி அதை சொல்லி இருக்க வேணாம் என்று முகம் சிவந்துப் போனாள்.
ஆனாலும் உள்ளுக்குள் பெரிதாக மகிழ்ந்துப் போனாள். அச்சோ... என்று சிவந்துப் போனவள் அவனை விட்டு இன்னும் கொஞ்சம் கீழே போய் அவனது மார்பில் தன்னை மறைத்துக் கொண்டாள்.
அவன் அதற்கு விட்டால் தானே...! அவளை மேலே ஏற்றிப் போட்டவன் அவளது நெஞ்சில் வாகாக முகம் புதைத்துக் கொண்டான். அவனது சேட்டையில் உதடுக் கடித்தவளுக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்துப் போனது போல ஒரு உணர்வு. அப்படி ஒரு உணர்வை மிருதன் கொடுத்து இருந்தான்.
அப்படியே இருவரும் உறங்கிப் போனார்கள். அதிகாலையில் எழும்ப முடியவில்லை இருவராலும். மன உளைச்சலோடு சேர்ந்து உடலும் அலுத்துப் போய் இருக்க காலை எட்டு மணிக்கு தான் விழிப்பு தட்டியது பெண்ணவளுக்கு.
எழும்பலாம் என்று பார்க்க அவளின் மீது முழு பாரத்தையும் போட்டு மிருதன் தூங்கிக் கொண்டு இருந்தான். ஒரு காலத்தில் லஸ்ட் லஸ்ட் என்று சொல்லிக் கொண்டு இருந்தவன் நேற்றைக்கு அவன் கட்டிய தாலியை மட்டும் கழட்டவே விடவில்லை.
“வெளியே பேசுறது ஒண்ணு. ஆனா உள்ளுக்குள்ள அத்தனையையும் வச்சுக்கிட்டு மருகுறது. கேட்டா நான் இரும்பு மனிதன்னு பீலா விட வேண்டியது...” என்று பெருமூச்சு விட்டவள் அவனை கீழே படுக்க வைத்தவள் எழுந்து குளிக்க சென்றாள்.
இரவு முழுவதும் அதிக குளிரில் இருந்ததால் தேகம் எல்லாம் என்னவோ உறைந்துப் போனது போல இருந்தது. போர்த்தி இருந்த போர்வையையும் மீறி குளிர் அவளை வாட்டியது. அதற்கு தோதாக மிருதன் அவள் மீது படுத்துக் கொண்டதால் குளிர் அதிகம் உரைக்க வில்லை தான்.
ஆனாலும் அந்த மிதமான குளிர் வெற்று தேகத்தில் தாக்கத்தை கொடுத்து இருக்கவே செய்தது..! குளித்து விட்டு வெளியே வர மிருதன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். எவ்வளவு நாள் தூக்கமோ நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான். எந்த சத்தமும் போடாமல் நேற்று எடுத்து வைத்த அவனது உடைகளை எடுத்து அணிந்துக் கொண்டு இருந்த நேரம் காலிங் பெல் சத்தம் கேட்டது.
அச்சோ சத்தம் கேட்டா இவரு எழுந்து விடுவாரே என்று எண்ணியவள் வேகமாய் கதவை திறந்தாள். சம்பூர்ணவதி தான் நின்றுக் கொண்டு இருந்தார்.
தாமதம் ஆனதுனால இவரே வந்து விட்டாரோ.. என்று
“மேடம் அது...” அவள் தடுமாற, அவளிடம் அவளது பையை கொடுத்தவர்,
“கிளம்பி வாம்மா...” என்றார் அவளை கண்களால் ஆராய்ந்துக் கொண்டே.
“ம்ம்... சரிங்க மேடம்...” என்று சொல்லி வாங்கிக் கொண்டவளுக்கு அவரின் எதிரில் இப்படி மிருதனின் உடையோடு நிற்க சங்கடமாக இருந்தது.
அவளின் சங்கடத்தை புரிந்துக் கொண்டவர் மெல்லிய புன்னகையுடன்,
“கோயிலுக்கு போகணும், மிருதனையும் எழுந்து கிளம்பி கீழே வர சொல்லு” என்றவர் நிற்காமல் போய் விட அப்பாடா என்று அதன் பிறகு தான் மூச்சு வந்தது. மிருதன் நன்றாக தூங்குவதை உறுதி செய்தவள் அவனுக்கு முதுகு காட்டி உடைகளை மாற்ற ஆரம்பித்தாள்.
சரியாக உடைகளை கலைந்து ஒவொன்றாக அணியும் நேரம் அவளின் முதுகின் பின்னால் மீண்டும் மிருதனின் மூச்சுக் காற்று பட்டது. அதில் முதுகு தண்டில் மின்னல் வந்து வெட்டிப் போக திகைப்புடன் பின்னால் திரும்பி பார்த்தாள்.
மிருதஞ்சயன் தான் நின்றிருந்தான். தன்னை இந்த கோலத்தில் பார்ப்பதே இவருக்கு வேலையாகிப் போய் விட்டது போல என்று நொந்துக் கொண்டவள், வேகமாய் புடவையை எடுத்து தன் மீது போட்டுக் கொள்ள முனைய அதற்கு மிருதன் விட்டு இருக்க வேண்டுமே...
“அச்சோ கோயிலுக்கு போகணும்னு அத்தை சொன்னாங்க ங்க... ப்ளீஸ்.. இந்த நேரம் இப்படி பண்றீங்களே” என்ற அவளின் கெஞ்சல்கள் எல்லாம் வீணாய் காற்றில் தான் கரைந்தது... அதோடு சில நொடிகள் அவனின் இதழ்களுக் குள்ளும் கரைந்துப் போனது.
அவ்வளவு பெரிய படுக்கை இருந்தும் தரையில் அவளை கிடத்தி படுக்கைக்கு போகும் நேரம் கூட பொறுமை இல்லாமல் போனவனின் அடாவடி செயலில் எல்லாம் மனம் மயங்க தான் செய்தது பெண்ணவளுக்கு...
அழகான அவசரமான ஒரு கூடல்... அவளின் முகம் அந்திவானமாய் சிவந்து இருந்தது. அதை பார்த்துக் கொண்டே அவன் குளிக்கப் போக,
“நான் முதல்ல குளிச்சுட்டு வந்துடுறேன்...” என்று அவள் முன்னால் போக, அவளின் பின்னோடு மிருதனும் சென்றுவிட்டான். அதன் பிறகு இருவரும் ஒன்றாக குளித்து வெளியே வர மணி ஒன்பது மேலே ஆகி இருந்தது.
வெளியே வந்தவள் படுக்கையை சுத்தம் செய்ய மிருதன் போனை எடுத்துக் கொண்டு உப்பரிகைக்கு போய் விட்டான். பிறகு அந்த வேலையை முடித்து விட்டு தன்னை கொஞ்சமாக அலங்காரம் செய்து விட்டு அவனை பார்க்க அவனும் உள்ளே வந்தான்.
இருவரும் ஒன்றாக கீழே இறங்கி வந்தார்கள். வந்தவர்களின் இணைப் பொருத்தம் கண்டு எல்லோருமே வியந்து தான் போனார்கள். ஆளுமையான மிருதஞ்சயனுக்கு மான் போல அவனுள் ஒடுக்கமான பெண்ணவளின் தோற்றம் கண்டு மனம் நிறைந்து தான் போனது.
பாந்தமாய் இருவரின் தோற்றமும் இருக்க அவர்களை சாப்பிட வைத்தார்கள். மிருதியின் அப்பா அம்மாவும் இங்கே தான் இருந்தார்கள். அம்மாவை கட்டிக் கொண்டவள் அவருடன் சிறிது நேரம் பேசியவள் “சாப்பிட்டீங்களா ம்மா?” விசாரித்துக் கொண்டாள். அதன் பிறகு மறுவீட்டு விசேசம் என்று நாட்கள் பறந்தது.
மிருதி இயக்கிய படம் ரிலீஸ் ஆகி தியேட்டரில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து இன்னும் சில தயாரிப்பு நிறுவனம் அவளை அப்ரோச் பண்ண இல்லை என்று மறுத்து விட்டாள்.
காரணம் மகேந்திரன் இரண்டு வருடம் ஒப்பந்தம் போட்டு இருக்கிறாரே. எனவே அவளால் வேறு எங்கும் படம் பண்ண முடியவில்லை. இரண்டு படத்தையும் ஒழுங்காக முடித்து நல்ல வசூலை குவித்த மிருதிக்கு அடுத்த பட வாய்ப்பை மகேந்திரன் தர மறுத்தார்.
வெளியே எங்கேயும் படம் இயக்க விடாமல் கண்ணுக்கு தெரியாமல் மிரட்டிக் கொண்டு இருந்தார். அதனால் வேலை இல்லாமல் வீட்டில் தான் இருந்தாள் மிருதி.
மிருதனும் எந்த ப்ராஜெக்டும் செய்யவில்லை. அவர்கள் இருவரும் சும்மாக இருப்பதை கண்டு சாடை பேச்சு பேசினார் மகேந்திரன். அதை காதில் வாங்கிய சம்பூர்ணவதி இருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசினார்.
“கொஞ்ச நாள் போகட்டும்...” என்று இருவருமே சொல்லி விட புதிதாக திருமணம் ஆனவர்கள் என்ற எண்ணம் வர சிரிப்புடன் அங்கிருந்து போய் விட்டார். ஆனால் மிருதிக்கும் மிருதனுக்கும் அந்த புன்னகை இருக்கவில்லை.
இருவருமே ஒருவரிடம் ஒருவர் மனம் விட்டு நடந்த சம்பவங்களை பேசிக் கொள்ளவில்லை. ஏன் மகேந்திரன் எந்த பட வாய்ப்பையும் கொடுக்காமல் இழுத்தடிப்பதை கூட சொல்லிக் கொள்ளவில்லை.
“தேன்நிலவு போகலாமே?” என்று பாட்டி ஆரம்பித்து வைக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை பாட்டி...” என்று முடித்துக் கொண்டான் மிருதன். இரவு பொழுது எப்பொழுதும் இருவரிடமும் மௌனமாகவே கழிந்தது. பேச்சு வார்த்தையே குறைந்துப் போனது. ஆனால் விளக்கை அனைத்து விட்டால் இருவரின் தேடலும் தொடங்கி விடும்.
இருவருக்கும் அது மட்டுமே ஆறுதலாக இருக்க அதை தவிர்க்க இருவருமே முனையவில்லை. எல்லாம் முடிந்தும் வெகு நேரம் தூங்காமல் இரவை கழித்தார்கள். ஒருவரை விட்டு ஒருவர் விலகாமல் பின்னிக்கொண்டு தான் படுத்து இருப்பார்கள்.
ஆனால் பேச்சுக்கள் என்பது மருந்துக்கும் இருக்காது... என்ன பேசுவது எதை பேசுவது என்கிற தயக்கம். இருக்கும் நிலையில் பேச்சே மறந்துப் போனது மிருதிக்கு.
மிருதனை பற்றி சொல்லவே வேண்டாம்... அவன் எப்பொழுதுமே வாயை திறக்கவே மாட்டான். இப்பொழுது சுத்தம்...! ஆனால் அவனது கரங்கள் பெண்ணவளின் முதுகையும் தலையையும் நீவி விட்டுக் கொண்டே இருக்கும்.
மிருதி அவனின் நெஞ்சில் இருக்கும் முடிகளை வருடி விட்டுக்கொண்டு இருப்பாள். ஒவ்வொரு நாளும் இப்படி தான் அவர்களுக்கு கழிந்தது அந்த நாள் வரும் வரை.
ஆமாம் மிருதனின் மௌனம் உடையும் நாளும் வந்தது...! செய்ய வேலைகள் எதுவும் இல்லை என்பதால் தன் உடைகளை கொஞ்சம் மாற்றி வைக்கலாம் என்று கபோர்டை திறந்து அவன் உடைகளை எல்லாம் இடம் மாற்றி வைத்தவள், தன் உடைகளையும் இடம் மாற்றி வைத்தாள்.
அப்படியே ஒன்று தொட்டு ஒன்று என வேலை இழுத்துக் கொண்டு இருக்க எல்லாவற்றையும் செய்து முடிப்பதற்குள் ஒரு வழியாகினாள். இதற்கு முன்னாடி எல்லாம் இந்த வேலையெல்லாம் அவள் செய்து பழக்கப் பட்டதே இல்லை. பெரும்பாலும் சுதாவே இதை எல்லாம் செய்து விடுவதால் முதலில் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது.
அதன் பிறகு போக போக ஒரு பிடிமானம் கிடைக்க அலமாரியை ஒழுங்காக அடுக்கி முடித்து இருந்தாள். அந்த நேரம் மேலே ஒரு லாக்கர் இருப்பதை பார்த்து,
“என்னோட நகை எல்லாம் அங்க தானே இருக்கு... இந்த சங்கிலியை மாற்றி விட்டு வேற ஒன்றை போடுவோம்” என்று போட்டு இருந்த பெரிய சங்கிலியை கழட்டி விட்டு சின்னதாக இருக்கும் சங்கிலியை எடுக்க நினைத்து அதை திறந்து உள்ளே தேடினாள்.
தேடிய பொருள் கிடைத்து விட கையில் இருந்ததை வைத்து விட்டு அதை எடுத்துப் போட்டுக் கொண்டவள் அலமாரியை பூட்டலாம் என்று எண்ணியவளின் கண்களுக்கு அங்கே ஏதோ ஒரு காகிதம் தென் பட என்ன என்று எடுத்துப் பார்த்தாள்.
எடுத்துப் பார்த்தவளின் கண்கள் நிலைக் குத்தி நின்றது அந்த காகிதத் தொகுப்பில்...