தன் மனதில் உள்ளவற்றை மொத்தமாக கொட்டி தீர்த்தவள் அமைதியாகிப் போனாள். வேற எதுவும் பேசவில்லை. பேச தோன்றவும் இல்லை மிருதனின் அமைதியில்.
பாலை வாங்கி இரசித்துக் குடித்தவன் அவளை ஒரு பார்வை பார்த்தான் பாலை குடிக்க சொல்லி. ஆனால் அவனது பார்வையை அலட்சியம் செய்தவள் அவனது படுக்கையில் அமராமல் நீள் இருக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
அவளின் அந்த செயலில் அவளை ஆழமாகப் பார்த்தவன் அலட்டிக் கொள்ளாமல் பாலை குடித்து விட்டு, உப்பரிகை கதவை திறந்துக் கொண்டு சென்றுவிட்டான். அவன் இதை தான் செய்வான் என்று எதிர் பார்த்தவள் உதட்டை ஏளனமாக வளைத்தவளுக்கு உள்ளம் குமுறிக் கொண்டு வந்தது...
காரணம் அவன் போகும் பொழுது சொன்ன வார்த்தை...
“ஏன் இப்போ டெஸ்ட் வச்சி செக் பண்ணலையா?” கேட்டு இருந்தான்.
அந்த கேள்வியில் அப்படி நான் எத்தனை முறை இவரை டெஸ்ட் பண்ணி இருக்கேன். ஏதோ ஒரு கோவம் அதனால் காலையில் அப்படி செய்து விட்டேன். அதை அப்பொழுதே விடாமல் இதென்ன இழுத்துக் கொண்டே போகிறார் என்று உள்ளம் நொந்தாள்.
தலையை பிடித்தபடி அமர்ந்துக் கொண்டாள். தலையில் வைத்த பூக்காடு வேறு பாரமாக இருக்க எடுத்து வீசிவிடலாமா என்று இருந்தது.
ஆனால் பூக்கள் கசங்காமல் அப்படியே போட்டால் இரவு நடந்ததா இல்லை ஒன்றுமே நடக்கவில்லையா என்று சூழ்ந்து இருந்த உறவு கூட்டங்கள் எல்லாம் வேவு பார்க்குமே என்று அமைதியாக இருந்துக் கொண்டாள்.
கட்டி இருந்த புடவை வேறு நழுவிக் கொண்டு இருக்க இன்னும் எரிச்சல் வந்தது...! சுற்றி முற்றி பார்த்தாள் அவளது திங்க்ஸ் இன்னும் எதுவும் வரவில்லை..!
மாற்றிக் கொள்ள கூட ஆடையில்லாமல் இதென்ன இப்படி செய்கிறார்கள் என்று கடுப்பானவள் அங்கிருந்த அலமாரியை நோக்கி சென்றாள். கதவை திறந்து பார்க்க அங்கு மிருதஞ்சயனின் ஆடைகள் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப் பட்டு இருக்க, இன்னொரு பக்கம் முழுதாக காலியாக இருந்தது.
ஓ...! பங்கீடாக்கும்... நொடித்துக் கொண்டவள் அவனது டீசெர்ட் மற்றும் சார்ட்ஸ் இரண்டையும் எடுத்து கட்டில் மேல் போட்டாள். அவன் கட்டிய தாலியை தவிர மற்ற அனைத்தையும் கழட்டி மேசை மீது வைத்து விட்டு புடவையை கலைக்கலாம் என்று புடவையில் கை வைத்த நேரம் அவளுக்கு பின்னால் உப்பரிகையின் கதவை அழுந்த மூடும் சத்தம் கேட்க நடு முதுகில் ஒரு கூச்ச உணர்வு ஊறியது...
இதென்ன அவஸ்த்தை.. என்று திணறியவள் தோளில் குத்தி இருந்த ஊக்கை மட்டும் கழட்டி விட்டு அவன் புறம் திரும்பி,
“கொஞ்ச நேரம் வெளியே இருங்க... நான் ட்ரஸ் சேன்ஞ் பண்ணனும்” என்றாள். அவளை அழுத்தமாக பார்த்தவன்,
“முடியாது...” என்றான் அதை விட அழுத்தமாய். அதில் திகைத்து அவனை பார்க்க, அவன் கட்டிலில் ஏறி அமர்ந்து பின்னாடி சாய்ந்துக் கால் மேல் கால் போட்டு நீட்டிக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
அதை எதிர் பார்க்காதவள் அவனை திகைத்துப் பார்த்தாள். அவளது பார்வையை சட்டை செய்யாமல் இன்னும் குளிரை கூட்டி வைக்க இப்பொழுதே அவளுக்கு குளிர் எடுத்தது.
“நான் இத்தனை ஆடை போட்டும் எனக்கு குளிருது. ஆனா இவரும் வெற்று உடம்போட இருக்காரு. இவருக்கு குளிர் எடுக்கலையா?” வியந்துப் போய் அவனை பார்த்தாள்.
அவன் கொஞ்சமும் நடுங்கவில்லை. அவளை தான் நடுங்க வைத்துக் கொண்டு இருந்தான். இதென்ன அவஸ்த்தை என்று தனக்குள் முணகிக் கொண்டவள் அவனிடம் மல்லுக்கட்ட முடியாது என்று உணர்ந்து அறையின் அனைத்து விளக்குகளையும் அணைத்தாள்.
“வாட் ஆர் யூ டூயிங்...?” அவன் பல்லைக் கடிக்க,
“நான் ட்ரெஸ் மாத்தணும்” என்றாள் அவளும் மிடுக்காக.
“தட்ஸ் இரிட்டேட்டிங்..”
“ம்ம்ம்... இப்படி முழுங்குற மாதிரி பார்த்தா நான் எப்படி இவரு முன்னாடி ட்ரெஸ் மாத்த முடியும். அது தான்..” என்று அவனுக்கு கேட்காமல் முணகியவள் தன் உடைகளை கலைந்து விட்டு மாற்று உடைக்காக கட்டிலின் அருகில் சென்று அங்கு இருக்கும் உடையை தொட அங்கு எதுவும் இல்லை...
பக்கென்று ஆனது இதயம்... நிலைக் கொள்ளாமல் அவளது இதயம் துடிக்க வேகமாய் தான் கழட்டி போட்ட புடவையை தன் மேனி எங்கும் சுற்றிக் கொண்டவள்,
“விளையாடாதீங்க மிருதன். எங்க இங்க எடுத்துப் போட்ட ட்ரெஸ்...” என்று குரலில் கடுமையை கூட்ட முயன்று முடியாமல் தவிப்பான குரலில் அவனிடம் கேட்டாள்.
“அது உன்னோடது இல்லையே...” என்றான் தன் கம்பீரமான குரலில்.
“ப்ச்... சாரி..உங்க உடையை உங்க அனுமதி கேட்காம எடுத்ததுக்கு” என்று உடனடியாக சரண்டர் ஆனாள்.
“தட்ஸ் ஓகே...” என்றான் பெருந்தன்மையாக.
“சரி அது தான் சாரி கேட்டுட்டனே... இப்பவாச்சும் குடுங்க...” என்றாள் தன்மையாக.
“முடியாது” என்று உறுதியாக மறுத்தான்.
“ப்ளீஸ் விளையாடாதீங்க மிருதன்... இரவு முழுக்க புடவை எல்லாம் கட்டிட்டு இருக்க முடியாது...”
“கட்டாத...” என்றான் அவளின் காதோரம்... அதில் சிலிர்த்துப் போனவளுக்கு அவனின் அருகாமை ஏதேதோ செய்ய பட்டென்று அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
அவளை விலக விடாமல் தன் கை வளைவுக்குள் நிறுத்தினான். அவனது சிறையை உணர்ந்தவளுக்கு நெஞ்சு கூடு காலியாகிப் போனது ஆனது. மூச்சுகள் எல்லாம் அதி வேகமாய் வெளிவர வெளிப்படையாகவே அவளது தேகம் நடுங்க ஆரம்பித்தது..!
அவளது நடுக்கத்தை அவனது கரங்கள் உணர, மெல்ல அவள் சுற்றி இருந்த புடவையை உருவ ஆரம்பிக்க,
“ஏற்கனவே குளிருதுங்க... ப்ளீஸ்...” என்று அவனிடம் மெல்ல முணுமுணுக்க, அவன் காதில் சொன்ன விசயத்தைக் கேட்டு குப்பென்று சிவந்துப் போனவள் அவனது மார்பில் தன்னை மறைத்துக் கொண்டாள்.
மெல்ல மிருதனின் உதடுகள் பெண்ணவளின் உதடுகளை சிறை எடுக்க ஆரம்பிக்க ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்கிற நிலையில் இருந்தாள் மிருதி... எல்லாமே கை மீறிப் போவது போல ஒரு உணர்வு... மிருதனின் உதடுகள் மெல்ல மெல்ல இடம் மாற ஆரம்பிக்க பெண்ணவளுக்கு நாணம் என்னும் உடை போர்த்திக் கொள்ள முயல அதை களைத்துப் போடும் வேலையில் இருந்தான் மிருதன்.
உதடுகள் மெல்ல அவனது பெயரை உச்சரித்து அவனை தடுக்கப் பார்க்க, அவனது கரம் சற்றே உயர்ந்து அறையின் விடி விளக்கை போட்டான். அதில் கூச்சம் கொண்டு அவனை விட்டு பிரிந்தவள் தோளில் இருந்து நழுவும் புடவையை இழுத்து சரி செய்துக் கொண்டாள்.
முழுமையாக புடவையில் இருந்தாள். அவசரத்துக்கு அள்ளி தெளித்த கோலம் தான். ஆனால் அந்த கோலம் தான் ஆணவனின் ஆசையை இன்னும் தூண்டி விட காரணம் என்றால் மிகையில்லை.
கோயில் சிற்பம் போல அவன் எதிரில் நின்றவளை கண்டு விழிகளை அவளை விட்டு அகற்ற முடியவில்லை. கண்கள் முழுக்க அவளின் தோற்றத்தையே அள்ளி நிறைத்து வைத்திருந்தான்.
அவனது கண்களில் தெரிந்த ஆசையில் இவளுக்கு பக்கென்று ஆனது என்னவோ உண்மை தான். உள்ளுக்குள் ஆயிரம் பிணக்கு இருந்தாலும் ஆணவனின் ஆசையை மறுக்க அவளால் முடியாதே...!
அவன் கேட்டதை கொடுப்பதை விட அவளுக்கு வேறு என்ன வேலை. அவன் கேட்க நினைக்கும் ஒன்றை அவனிடமே கொடுக்க விளைந்தவள் தன் வெட்கத்தை சற்றே விலக்கி வைக்க முனைந்தாள்.
ஆனாலும் இந்த வெளிச்சம் அவளின் வெட்கத்தை போக விடாமல் நிறுத்தி வைக்க அவளால் அவள் கொண்ட நாணத்தில் இருந்து வெளியே வரவே முடியவில்லை. முதல் முறையே இப்படி என்பதால் கொஞ்சம் மிரண்டு தான் போனாள்.
ஆனாலும் அவனிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்ள இயலாமல் அவனது கண்களுக்கு விருந்தாகி முகச்சிவப்புடன் நின்று இருந்தாள்.
அவளின் வெட்கத்தை இரசித்தவன் அவளை விட்டு முழுமையாக நகர்ந்து மேசை அருகே சென்றான். அவனது விலகலில் முகம் சற்றே சுருங்கியது அவளுக்கு. ஆனால் அவன் அடுத்து செய்த செயலில் அவனை முறைத்துப் பார்த்தாள் தன் வெட்கத்தையும் மறந்து.
மிருவின் பங்கு பால் அப்படியே இருக்க அதை எடுத்து அவளிடம் நீட்டினான். அதை குடிக்காமல் அவனையே பார்க்க,
“மறுபடியும் டெஸ்ட் வச்சி பாரு...” என்றான் அழுத்தமாய்... அதில் கோவம் கொண்டவள்,
“ப்ளீஸ் நான் அது ஏதோ ஒரு வேகத்துல அப்படி பண்ணிட்டேன்... ஆனா நீங்க அதை இப்படி இவ்வளவு சீரியஸா எடுத்துக்குவீங்கன்னு நான் நினைக்கல...” என்று அவள் சொல்ல, அதை எல்லாம அவன் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை.
நீ குடித்தே ஆகணும் என்று நின்றான். அவனது பிடிவாதத்தில் இவளுக்கு இன்னும் கோவம் வர அவனை முறைத்துக் கொண்டே மிச்சம் வச்சா தானே நீ டெஸ்ட் அது இதுன்னு என்னை வம்பு இழுப்ப என்று மொத்த பாலையும் தன் வாயில் சரித்துக் கொண்டாள்.
அதை பார்த்தவனுக்கு மீசையின் அடியில் மெல்லிய ஒரு புன்னகை எழுந்தது.
“மக்கு...” என்று அழுத்தமாக சொன்னவனின் கூற்று புரியாமல் அண்ணாந்து இருந்தவள் தலையை தாழ்த்தி அவனை நேராக பார்த்தாள் வாய் நிறைய பாலுடன்.
அவள் கையில் இருந்த காலி சொம்ப வாங்கி தூக்கி எறிந்தவன் இரு கையாளும் அவளது கழுத்தை வளைத்துப் பிடித்தவன் அவளின் வாய்க்குள் இருந்த பாலை தன் வாய்க்குள் எடுத்துக் கொண்டான்.
அப்பொழுது தான் அவன் சொன்ன மக்கு என்கிற சொல்லுக்கு பொருள் புரிந்தது. சொம்பில் இருந்தால் என்ன இல்லை என்றால் தான் என்ன... அது தான் உன் வாயில் இருக்கிறதே...! என்று அவன் சொல்லாமல் சொல்லியதன் பொருளை உணர்ந்தவளுக்கு மொத்த தேகமும் நொடியில் தீப்பற்றிய உணர்வைக் கொடுத்தது...!
அடுத்த நொடியே குளிர் பனியில் போட்டு துவட்டி எடுத்தது போல உணர்ந்தாள்.. மாறி மாறி வந்த உணர்வுகளை சமாளிக்க முடியாமல் அவள் தடுமாறி அவனது கரத்தினிலே தோய்ந்து விழுந்தாள்.
விழுந்தவளை அள்ளி எடுத்துக் கொண்டவன் அவளின் காதோரம், “டெஸ்ட்ல பாஸ் ஆனேனா...?” என்றான் அழுத்தமாய்.
“இதை விடவே மாட்டீங்களா?” கண்ணாலே அவனிடம் கேட்டாள்.
மாட்டேன் என்பது போல அவளை பார்த்தான். அதில் கோவம் வரப் பெற்றவள் அவனை உதறி விட்டுப் போக பார்க்க அவளின் முந்தானையின் நுனி அவனிடம் சிக்கியது. அதை அறியாமல் அவள் அவனை விட்டு விலகிட தோளை விட்டு புடவை நழுவ, பக்கென்று ஆனது அவளுக்கு. வேகமாய் நெஞ்சோடு புடவையை பிடித்துக் கொண்டவள் அவனை திரும்பி பார்த்தாள்.
அவளின் புடவையை கரத்தில் சுற்றிக் கொண்டு சுருட்டி இழுக்க ஒரே இழுப்பில் அவனது கைக்கு அடக்கமாய் வந்து நின்றாள் மிருதி. வந்தவளின் கழுத்தில் முகம் புதைத்தவன்,
“புடவை கட்ட அவ்வளவு கட்டலா (கஷ்டமா) இருந்தா அவிழ்த்திடலாம். நோ ப்ராப்ளம்..” என்றவன் அந்த வேலையில் இறங்க,
“மிருதன் நோ..” என்று அவனை விட்டு விலகப் பார்த்தாள். ஆணவனின் ஆளுகையில் பெண்ணவளின் எதிர்ப்புகள் எல்லாம் தவிடு பொடியாய் போய் விட அவனை தடுக்க முடியாமல் சிவந்துப் போனவள் எட்டி விளக்கை அனைத்து விட்டாள் வேறு வழியில்லாமல்.
மனம் பரப்பும் பூவில் தேனெடுக்கும் இதமாய் ஒரு கூடல், மென் பூவை வன் புயல் சிக்கி சிதறவிடும் அளவுக்கு ஒரு வன் கூடல். இரண்டையும் பெண்ணவள் இரசித்தாள் என்றால் மிகையில்லை.
ஒவ்வொரு தொடுகையிலும் மிருதஞ்சயன் பெண்ணவளை மலரச் செய்தான். அவனோடு கூடல் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே கற்பனை செய்து வைத்திருந்தவளுக்கு அதில் கொஞ்சம் கூட அவளை ஏமாற்றவே இல்லை அவன்.
அந்த கற்பனையை விட அதிகமாக அவளை மலரச் செய்து இருந்தான் என்பதே உண்மை. எல்லாம் முடிந்து முத்தாய்ப்பாய் அவன் நெற்றியில் வைத்த ஒற்றை முத்தம் பெண்ணவளை வேரோடு வெட்டி சாய்த்து இருந்தது...!
அந்த ஒற்றை முத்தத்தில் அவளின் ஒட்டு மொத்த வலிகளும் காணமல் போனது. விலகிப் படுத்தவனின் நெஞ்சோடு வந்து ஒட்டிக் கொண்டவள் அவனை காதலுடன் பார்த்தாள்.
இப்பொழுது எந்த தடையும் அவளுக்கு இல்லை போல... முழுமையாக அவளது கண்களில் காதல் மட்டுமே நிரம்பி இருந்தது. அதை உணர்ந்தவன் அவளை கேள்வியாகப் பார்த்தான்.
அவனது கேள்வியை கண்டுக் கொள்ளாமல் அவனை பார்த்தவள், அவனை கீழே இறங்கிப் படுக்க சொன்னாள். ஏன் என்பது போல பார்த்துக் கொண்டே அவளை விட்டு கொஞ்சம் கீழே இறங்கி படுத்தான்.
அவன் அப்படி படுக்கவும் அவனது நெற்றியில் முட்டியவள், அவனது நெற்றியில் தன் இதழ்களை அழுத்தமாக புதைத்து நெற்றி முத்தம் கொடுத்தவளின் விழிகள் கலங்கி இருந்தது.
“உங்க நேசத்துக்கு நான் தகுதியான்னு எனக்கு தெரியாது... ஆனா என் நேசம் முழுக்க உங்க மேல மட்டும் தான் குவிந்து கிடக்கு... அதை எப்படி சொல்லன்னு எனக்கு தெரியல... என்னை பாதியா வெட்டி பார்த்தா அதுல மொத்தமும் நீங்க தான் இருப்பீங்க... என்னை மிஸ் பண்ணாம என்னை உங்க வாழ்க்கையோட இணைத்துக் கொண்டதுக்கு உண்மையா நீங்க தான் எனக்கு நன்றி சொல்லணும். இல்லன்னா இப்படி ஒரு பெண்ணை உங்க வாழ்க்கையில நீங்க மிஸ் பண்ணி இருப்பீங்க...” என்று அழுத்தமாக தன் காதலை கர்வத்துடன் அவனிடம் சொன்னாள்.
அதை கேட்டு மிருதனின் விழிகளில் மெல்லிய மெச்சல் தன்மை இருந்தது. காதலை கம்பீரமாக சொன்னவளின் தன்மை அவனை வெகுவாக கவர்ந்தது என்றாலும் அவளை முறைத்துப் பார்த்தான்.
“நீங்க முறைத்து பார்த்தாலும் அது தான் உண்மை..” என்றவள் தன் மார்போடு அவனை அணைத்துக் கொண்டு சொக்கிய விழிகளை மூடிக் கொண்டு தூங்க ஆரம்பிக்க அவளின் காதோரம் தன் மீசை முடி உரச ஒரு வாக்கியம் சொன்னான்.
அயர்ந்து வந்த தூக்கம் மிருதன் சொன்ன வார்த்தையில் பின்னங்கால் பிடரியில் பட எங்கோ ஓடிப் போய் ஒழிய விழிகளை மலர்த்தி தன்னவனை திகைத்துப் போய் பார்த்தாள் மிருதி.