மிருதஞ்சயன் எப்பொழுதும் போல எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை. மிரு வரவில்லை என்று கேள்வி பட்டும் அவனது முகத்தில் எந்த ரியாக்ஷனும் வரவில்லையே என்று நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“மிரு அப்படியெல்லாம் பண்ண மாட்டா... எனக்கு தெரிஞ்சி இவன் அவளை கூப்பிட்டு இருக்க மாட்டான்டா..” என்றான் சுதிர்.
“அதுக்கும் வாய்ப்புகள் இருக்குடா... இவன் அதை எல்லாம் செய்ய கூடய ஆளு தான்” என்றான் கடுப்பாக சக்தி.
“ப்ச்... நான் ஒண்ணு நினைச்சேன்டா..” என்றான் சோகமாக.
“நீ என்ன நினைச்சன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ வாயை மூடிக்கிட்டு கொஞ்ச நேரம் இரு. மிருதன் இங்க தான் பார்த்துக்கிட்டு இருக்கான்...” என்றான் சக்தி.
“ப்ச் போடா எனக்கு இவனுங்களை பார்க்க பார்க்க கடுப்பா இருக்கு”
“மியூசிக் டைரக்டரை தயவு செய்து இவனோட சேர்க்காதடா... இவனாவது கொஞ்சமே கொஞ்சம் வளைஞ்சி குடுப்பான். அந்த எருமை இவனுக்கும் மேல... பிடிச்சா பிடிச்சது தான். அவ்வளவு பிடிவாதம் ஆகாது அவனுக்கு.” என்று சக்தி கடுப்படித்தான்.
“என்னவோ போடா... இவனுங்களோட பிரெண்டா இருந்துக்கிட்டு நமக்கு தான் தலை வேதனையா போகுது...”
“ஏன் அவ்வளவு கடினப் பட்டு எங்க கூட பிரெண்டா இருக்க... இப்பவே போக வேண்டியது தானே..” என்று அழுத்தமான குரல் பின்னாடி இருந்து வர, சுதிர் பாவமாய் சக்தியை பார்த்தான். அவன் வாய்க்குள்ளே சிரித்தான் கமுக்கமாக..
“பதில் சொல்லுடா...” என்று உறும,
“இல்ல மச்சான்... நான் உன்னை சொல்லல. மிருதி ஒரு கதை சொன்னா அதை தான் இவன் கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். டைலாக் எல்லாம் எப்படின்னு கேட்டுக்கிட்டு இருந்தேன்” என்றான் அப்பட்ட பொய்யாய்.
“இத நான் நம்புவேன்னு எப்படிடா உன்னால நினைக்க முடியுது...” பல்லைக் கடித்தான் மிருதன்.
“ஹிஹிஹி சாரி மச்சான்...” என்று வழிந்து வைத்தான். மிருதன் எதுவும் சொல்லாமல் அவனை முறைத்து விட்டு போய் விட்டான்.
“ஏன்டா பின்னாடி தான் நிக்கிறான்னு சொல்ல வேண்டியது தானே... ஏன்டா இப்படி அவன் கிட்ட கோத்து விடுற...” அழாத குறையாய் கேட்டான்.
“ஒரு என்டேர்டைமென்ட் வேணுமேடா அதுக்கு தான்” சிரித்தான் சக்தி.
“கொன்னுடுவேன்டா உன்னை...” என்று அவனது வயிற்றிலே ஒரு பன்ஞ் விட்டான் சுதிர். எல்லோருக்கும் நன்றி உரை, சிறப்பு உரை, நல்ல பெர்பாம் பண்ணவர்களுக்கு சிறப்பு கிபிட், இந்த நிகழ்ச்சியில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் அவரவர் பெயர் போட்டு ஷீல்டு என அந்த விழா நீண்டுக் கொண்டே சென்றது...
நிகழ்ச்சியை சிறிய மேடை போட்டு திறந்த புல்வெளியில் வைத்திருந்தார்கள். ஜட்ஜஸ்க்கும் நினைவு பரிசுகள் வழங்கப் பட்டது. அதை தொடர்ந்து டெக்னிக்கல் டீமின் பெயர் மைக்கில் சொல்ல ஒவ்வொருவராய் சென்று வாங்கி வந்துக் கொண்டு இருந்தார்கள்.
அதன் படி சுதிர் மற்றும் அவனுடைய அசிஸ்டென்ட், சக்தி மற்றும் அவனுடைய அசிஸ்டென்ட் என் பெயர் பட்டியல் வர இவர்களும் மேடை ஏறி வாங்கிக்கொண்டு வந்தார்கள்.
அடுத்து மிருதன் மற்றும் மிருதியை மேடைக்கு அழைக்க பெருமூச்சு விட்ட மிருதன் மேடை ஏற பின்னாடி ஒரு அரவம் கேட்டது. கூட்டத்தில் சின்னதாய் ஒரு சலசலப்பு. என்ன என்பது போல பின்னால் திரும்பி பார்த்தான்.
கூட்டத்தின் மத்தியில் வேக நடையுடன் மிருதி வந்துக் கொண்டு இருந்தாள். யாரும் காணா தோற்றம்.. இவ்வளவு நாள் தூக்கி போட்ட கொண்டை, ஜீன்ஸ், சர்ட்டில் பார்த்தவளை மீண்டும் புடவையில் பார்த்தார்கள்.
ஊட்டியில் பார்த்த அழகை விட இன்று இன்னும் பேரழகாய் தெரிந்தாள். முடியை ஒரு பக்கமாய் தோளில் போட்டு காதோரம் சின்ன சின்ன ரோசாக்களை வரிசையாக வைத்து பாதி ஆர்ச் மாதிரி வைத்திருந்தாள்.
காதிலும் கழுத்திலும் கரத்திலும் வைரம் மின்ன, நெற்றியில் அளவாய் ஒற்றைக் கல் வைத்த டிசைன் பொட்டு, ஒற்றையாய் விட்டு இருந்த மாராப்பு, கரத்தில் சின்னதாய் வேலைபாடு உள்ள பேர்ஸ்... மெல்லிதாக மேக்கப்... போட்டும் போடததுமாய்... இதழ்களில் மெல்லிய பிங்க் வண்ண லிப்ஸ்டிக், அதற்கு மேல் லிப்க்லாஸ், விழிகளில் மையிட்டு அவளின் பார்வையே தூண்டில் போடுவதாய் அவ்வளவு பேரழகியாய் வந்துக் கொண்டு இருந்தாள்.
அவளை பார்த்தவனுக்கு பார்வையை அவளிடம் திருப்ப முடியவில்லை. ஆனால் சுதாரித்துக் கொண்டவன் அலட்சிய போக்குடன் மேடையில் நின்றான். அவனை தொடர்ந்து வேக நடையில் மிருதியும் மேடை ஏறி அவனருகில் நிற்காமல் இடைவெளி விட்டு நின்றாள். அவளை தொடர்ந்து பரதனையும் வர சொல்லி சொல்ல,
மிருதிக்கு மிருதன் கையால் ஷீல்டு வழங்கப் பட்டது. அதே போல மிருதி கரத்தால் பரதனுக்கு ஷீல்டு வழங்கப் பட்டது.
பரதன் கீழே இறங்கி விட, மிருதனையும் மிருதியையும் மேடையில் நிற்க வைத்தவர்கள், ஓரிரு வார்த்தைகள் பேச சொல்லி சொன்னார்கள். அதோடு மிருதிக்கு வெள்ளி திரையில் இயக்குனர் வேலை கிடைத்து இருப்பதையும் பற்றி பேசி அவளுக்கு உற்ச்சாக வரவேற்ப்பு கொடுத்தார்கள்.
நன்றியுடன் அதை ஏற்றுக் கொண்டவள் மிருதனை ஒரு கணம் கூட பார்க்கவில்லை. அவளது இயல்பிலே அவள் இருந்தாள்.
மிருதியை பாராட்டி மிருதனை பேச சொல்ல மிருதிக்கு உள்ளுக்குள் ஒரு படபடப்பு. அத்தனை பேரின் மத்தியிலும் எதாவது சொல்லி விடுவானோ என்று பயம். அதே பயம் தான் கீழே நின்றுக் கொண்டு இருந்த சக்திக்கும், சுதிருக்கும்.
மைக்கை வாங்கிய மிருதன்,
“இதுல நான் சொல்ல இருக்கு... உங்க எல்லோருக்கும் நான் சொல்லி தான் மிருதியை பற்றி தெரிஞ்சுக்கணும்னு இல்லை இல்லையா?” என்று ஆரம்பமே அவன் குதர்க்கமாக ஆரம்பிக்க மிருதிக்கு முகம் விழுந்து விட்டது.
“இப்போ கூட என்னை பற்றி உயர்வாவே எதுவும் சொல்ல மனது வரல இல்லையா?” அவளின் இளமனது அவனிடம் துடித்துப் போய் கேள்வி கேட்டது. அதற்கு அவனிடம் இருந்து பதில் வருமா என்ன... அவனை விழிகளில் நீர் மின்ன பார்த்தாள்.
அவளது பார்வையை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல்,
“திறமை இருக்கு.. அடுத்த கட்டத்துக்கு முன்னேறிட்டாங்க... பாராட்டப் பட வேண்டிய விசயம்... அதோட செம்ம ஹார்ட் ஒர்கர். அதை நீங்களே கண்ணார பார்த்து இருக்கீங்க இல்லையா.. சோ ஷி ஹெஸ் டிசெர்வ்ட் இட். நீங்களும் உங்க திறமையை வளர்த்துக்கோங்க மிருதியை மாதிரி முன்னேறிக் கிட்டே இருங்க. உங்க கண்ணு முன்னாடியே இருக்கிற நல்ல உதாரணம் அவங்க” என்று சொல்ல சட்டென்று மிருதனை ஆச்சரியம் கலந்து பார்த்தாள்.
அப்பொழுதும் அவளை பார்க்கவில்லை அவன். தன்னுடைய பேச்சிலே முழு கவனத்தையும் வைத்தான். அவன் பேச பேச இங்கே இவளுக்கு காற்றில் பறக்கும் உணர்வு வர சத்தாமாக அவளால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் மிருதியை கொஞ்சம் பாராட்டவும் செய்தான். அவன் யாரையும் பாராட்டியதே இல்லை. அப்படி பட்டவன் அவ்வளவு சண்டை தங்களுக்குள் நடந்த பிறகும் தன்னை பற்றி பேசுகிறான் என்றால் அவளால் நம்பவே முடியவில்லை. அதனாலே அந்த உணர்வு பெருக்கு அவளிடம்.
அவன் பேசி முடித்ததும் அவளிடம் மைக்கை நீட்ட, அவள் இருந்த உணர்ச்சி குவியலில் ஒரு வார்த்தை கூட பேச முடியாது என்பது நன்கு புரிய எப்படி சமாளிப்பது என்று தடுமாறினாள்.
ஆனால் பேசி தானே ஆக முடியும்... எனவே மைக்கை வாங்கி, “உங்கக்கூட இவ்வளவு நாள் ஒன்றாக பணியாற்றியது மனதுக்கு அவ்வளவு இதமாக இருந்தது. இந்த இதமும் நெகிழ்வும் மற்ற டீம் கூடும் பொழுது வருமா என்று தெரியவில்லை... அதே போல இந்த டீம் மொத்தமும் மறுபடியும் இப்படியே சேர்ந்து பணி செய்யணும்னு ஆசை. பார்ப்போம் அந்த சந்தர்ப்பம் வாய்க்குமா என்று.. இந்த டீம் மொத்தத்துக்கும் என் நன்றிகள். குறிப்பா” என்று கொஞ்சம் இடை வெளி விட்டு நிறுத்தியவள்,
“நம்ம டைரக்டருக்கு...” என்று சொல்லவும் மொத்த பேரும் விசில் அடிக்க ஆரம்பித்தார்கள். ஏனெனில் மிருதனால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியம் அல்லவா...? எனவே அவனை பாராட்டி பேசவும் அங்கு இருந்த அத்தனை பேருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள, விசிலும் கைத்தட்டலும் பிறந்தது...
அங்கு எழுந்த ஆராவாரம் அடங்க சில மணி துளிகள் தேவைப் பட்டது... தி கிங் ஆல்வேஸ் கிங் தான்... என்று எண்ணி பெருமூச்சு விட்டான் மகேந்திரன்.
எஸ் மகேந்திரனும் அவ்விடத்தில் தான் இருந்தார். மிருதனுக்கு கிடைத்த ஆராவரத்தில் மனம் சுனங்கியவர் அவ்விடத்தை விட்டு போய் விட்டார்.
அவர் போவதை பார்த்த சுதிர் சக்தியிடம் காண்பிக்க “அவரை விடுடா இங்க கவனி” என்று மேடையை கை காட்டினான்.
இருவரும் சற்று அருகருகே நின்று இருந்தார்கள். புகைப்படங்களும் வீடியோவும் எடுத்துக் கொண்டு இருந்தார்கள் ஒரு பக்கம். இருவரும் சேர்ந்து நின்றது அங்கு இருந்த அத்தனை பேரின் கண்களையும் நிறைத்தது.
அதன் பிறகு அந்த அழகான மொமன்ட் முடிய சோசியல் ட்ரிங்க்ஸ் எடுத்துக் கொண்டார்கள் ஆண்கள்...! இன்னொரு பக்கம் பஃபே முறையில் உணவு நடை பெற்றுக் கொண்டு இருக்க அவரவர்கள் தங்களுக்குள் குழுக்களாக பிரிந்துக் கொண்டு உற்ச்சாகமாக உரையாடிக் கொண்டு இருக்க,
சக்தி மற்றும் சுதிரிடம் வந்து நின்றாள் மிருதி. அவர்களோடு பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே அவ்விடத்துக்கு மிருதனும் வர ஒருவித மௌனம் நிலவியது.
அதில் என்ன நினைத்தானோ வந்த வழியிலே மிருதன் போய் விட,
“ப்ச் நீங்க போய் அவரோட இருங்க.. நான் ஒரு போன் கால் பேசிட்டு வரேன்” என்றவள் ஒதுங்கிப் போனாள்.
இவர்கள் மிருதனை தேட, அவன் கண்ணில் அகப்படவே இல்லை.
இந்த பக்கம் வராத போனை பிடித்துக் கொண்டு கொஞ்சம் ஆர்பாட்டம் இல்லாத இடத்துக்கு வந்து நின்றாள். விழிகளில் ஏனோ கண்ணீர் சரம் தொடுத்தது...!
எப்படியும் தினமும் மிருதனை பார்த்து விடுவாள். ஆனால் இந்த இடைபட்ட நாளில் மிருதனை பார்க்க முடியாமல் அவள் தவித்த தவிப்பு அவளுக்கு மட்டுமே தெரியும்.
எவ்வளவு தான் அவனிடம் கோவப்பட்டாலும் மானம் கெட்ட மனம் அவனை தான் தேடுகிறது... அவளும் என்ன தான் செய்வாள்...! விழிகளை மீறும் கண்ணீரை துடைத்த நேரம் அவளின் மெல்லிய இடையில் சில்லென்ற ஒரு கரம் படிந்தது...!
திகைத்து திரும்பி பார்க்க முனைந்தாள். ஆனால் அந்த கரம் யாருடையது என்று அறிந்தவலுக்கு திரும்ப மனம் வரவில்லை. எங்கே திரும்பினால் அவன் போய் விடுவானோ என்று பாய்ந்தாள்.
அவள் திரும்பவே இல்லை. பின்னல் நின்றிருந்தவன் சற்றே இறுக்கமாக அவளின் இடுப்பு சேலையில் கை நுழைத்து வெற்றிடையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.
அவனது அந்த தொடுகையில் உடலும் உள்ளமும் ஒருங்கே சிலிர்த்தவள் தன் யாக்கையை அவனது மெய்யோடு சாய்க்க ஆசை பட்டாள். ஆனால் நாணம் அவளை தடுக்க கால்கள் தடுமாற அப்படியே நின்றாள்.
பின் கழுத்தில் சூடான மூச்சுக் காற்று பட அடி வயிற்றில் ஆயிரம் வண்ணத்துப் பூச்சி சிறகடிக்க ஆரம்பித்தது. மூச்சுக் காற்றை தொடர்ந்து மீசையின் உரசலும் தொடங்க அவளால் நிலையாக நிற்க முடியவில்லை.
அவனை விட்டு விலக பார்த்தவளை இன்னொரு கரத்தால் அவளின் வயிற்றை பிடித்து தன் நெஞ்சோடு அவளை இழுத்து அழுத்தினான் மிருதன்.
அவனது அந்த செயலில் அவள் இன்னும் தடுமாறிப் போக மிருதனுக்கு ஆசையில் கண்கள் சிவந்தது.
மெல்ல மெல்ல அவளின் கழுத்தில் தன் முகத்தை புதைத்தவன் அப்படியே முன் பக்கமாய் கீழே இறங்க, அவனின் தலையை தன் கழுத்துக்கு கீழே புதைத்துக் கொண்டாள் அவனை நகர விடாமல்.
ஆனால் மிருதன் அவளின் கட்டுகளில் அடங்குபவனா என்ன... அவளது கரத்தை தன் ஒற்றை கரத்தால் பற்றிக் கொண்டவன் தன் முகத்தை இன்னும் கீழே எடுத்து செல்ல பார்க்க நின்றிருந்த நிலை அதற்கு இடைஞ்சலாய் இருக்க பட்டென்று அவள் எதிர்பாரா நேரம் அவளை தனக்கு முன்பாக கொண்டு வந்து அவளின் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.
எப்பொழுதும் போல அவளின் வாசமும் நெருக்கமும் அவனை மயக்க, தன் போல அவனின் முகம் அங்கும் இங்குமாய் நகர்ந்து அவளுக்கு அவஸ்தையை கூட்ட இரு கரத்தால் அவனை அசையாமல் பற்றிக் கொண்டாள் மிருதி.
அவளது சிறையில் இருந்தால் என்ன என்று அவனின் பற்கள் அவளது ஆடை மறைக்கா இடத்தில் கழுத்துக்கும் நெஞ்சுக்கும் இடையிலான இடத்தில் கடித்து வைக்க அவன் செய்யும் வேலையில் முகம் சிவந்துப் போனாள்.
தன்னை விட்டு அவன் முகத்தை நகர்த்த பார்க்க, அவன் அவளோடு பசைப்போட்டு ஒட்டிக் கொண்டதை போல ஒட்டிக் கொண்டான்.
அவனது கரங்கள் அவளின் இடையை சோதித்து பார்த்ததுடன் மெல்ல மெல்ல இடம் மாற ஆரம்பிக்க வேகமாய் அவனது கரத்தை தட்டி விட்டாள். மீண்டும் முயற்சிக்க,
“ப்ளீஸ்...” என்றாள். அவளது இதழ்கள் அழகாய் வடிவாய் இருக்க அவனது கவனம் மெல்ல மெல்ல அவளின் இதழ்களில் படிய, உள்ளுக்குள் ஜெர்க் ஆனாள்.
“லிப்ஸ்டிக் போடாதன்னு சொன்னா கேட்க மாட்டியாடி...” என்றவன் அவளின் இதழ்களைமுரட்டு தனமாக ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கினான்.
அவனது இதழ் வன்மையில் அவள் போட்டிருந்த உதட்டு சாயம் மொத்தமும் அவனின் இதழ்களுக்கும் வாய்க்குள்ளும் அவளின் வாய்க்குள்ளும் சென்றது.. அதோடு அவனின் கரங்கள் மெல்ல மெல்ல அவளை சோதனை செய்ய ஆரம்பிக்க முற்றும் முழுதாய் தளர்ந்துப் போனாள்.
தன் மீது அத்து மீறும் அவனது கரங்களை தட்டி விட்டு பார்த்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை... மிருதனின் முரட்டு பிடியில் உயிர் தேய அப்படியே நின்றிருந்தாள் மிருதி... மிருதஞ்சயனின் மிருதி.