Notifications
Clear all

அத்தியாயம் 46

 
Admin
(@ramya-devi)
Member Admin

உயிரை கொடுத்து அவனை நேசிக்கத் தொடங்கினாள் பெண்ணவள். அந்த நாள் இரவும் தொடங்க, ஏனோ அவளிடம் ஒரு அமைதி. நாளைக்கு விடிந்தாள் இந்த ஏகாந்தமும் அமைதியும் அன்பும் கிடைக்காதே.. ஏன் இதோ இப்பொழுது தன்னவனின் நெஞ்சில் சாய்ந்து இருக்கும் தருணம் கூட இனி கிடைக்காதே.. எட்டா கனியாகி விடுமே... எண்ணியவள் அவனை விட்டு நீங்கவே இல்லை.

அவளின் உணர்வுகளை புரிந்தவனாய் தன் நெஞ்சோடு அவளை அணைத்துக் கொண்டான். அந்த இரவு பொழுதும் வெகு வேகமாக ஓடிப்போய் விடியலை கொண்டு வர,

தூக்கத்தில் இருந்து எழுந்தாள். அருகில் நேற்றைக்கு போலவே அவன் இல்லை. அதுக்குள்ள எழுந்துட்டாரா? கேட்டுக் கொண்டே எழுந்தவள், முடியை உதறி கொண்டை போட்டு கழுத்தை தடவ, அங்கே அவளின் கணவன் கட்டிய தாலி இல்லாமல் போக, பதறிப்போய் அங்கும் இங்கும் தேட, எங்கும் தென்படவே இல்லை.

அடித்து பிடித்துக் கொண்டு வெளியே வர, அங்கு அவளின்  கணவனுக்கு பதிலாக அவனின் தம்பிகள் இருவரும் இருந்தார்கள் அவளை அழைத்துக் கொண்டு போக.

இவர்கள் இருவரையும்  கொஞ்சமும் அவ்விடத்தில் எதிர்பாராதவள் திகைத்துப் போனாள்.

“குணா, பிரபா.. நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க? அவர் எங்க.. இந்த காலை நேரத்துல எங்க போனாரு.. குளிக்க போயிருக்காரா” என்று கேட்டுக் கொண்டே கடலுக்கு சென்றவள், போகும் இடமெல்லாம் அவளின் கரு விழிகளை அழைப்பாய விட்டு அவனை தேடினாள். எவ்விடத்திலும் அவன் அகப்படவே இல்லை. இறுதியாக கடலுக்கும் வந்து அவனை தேடினாள்.

ஆனால் அவளின் அவன் அங்கும் இல்லாமல் போக, சட்டென்று நின்று விட்டாள். கழுத்தில் தாலி இல்லை. அவனும் எங்கும் இல்லை. இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும். தன்னை நீங்கி சென்று விட்டான் என்று அறிய. ஒரேடியாக சென்று விட்டான்.

ஸ்தம்பித்து நின்று விட்டாள் தயாழினி. ஒரு கணம் அவளின் உலகம் அசையவே இல்லை. மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது. இழுத்து மூச்சு விட மறந்தவள் விரக்தியாய் திரும்பினாள். அங்கே குணவும் பிரபாவும் வந்து நின்றாகள்.

“அண்ணி” என்று அவர்கள் அழைக்க,

“கழுத்துல தாலி இல்லையே.. இன்னுமா நான் உங்களுக்கு அண்ணி” என்று வலியும் விரக்தியுமாக கேட்டவள், வேகமாய் குடிசைக்குள் நுழைந்துக் கொண்டாள். துக்கம் கங்கை நதியாய் பொங்கிப் பெருகியது.

“கழுத்துல தாலி இருந்தாலும் இல்லன்னாலும் நீங்க எங்க அண்ணனோட மனைவி” என்றான் குணா மிக அழுத்தமாக.

“ப்ச்” என்றவளுக்கு சொல்லொண்ணாத பாரம் நெஞ்சில் ஏறியது.

“நாம எப்போ கிளம்பனும்” என்று மட்டும் கேட்டாள்.

“அண்ணி” என்றான் பிரபா தயக்கமாக..

“ஹ்ம்” என்று அவனை பார்த்தாள்.

“நாம இந்தியா போறோம்” என்றான்.

“ஏன்? வேற நாடுன்னு தானே உங்க அண்ணன் சொன்னாரு.. இப்ப இந்தியாவுக்கே திரும்பலாம்னு சொல்றீங்க. ஏன் என்ன ஆச்சு?” புரியாமல் கேட்டவளிடம் என்னவென்று சொல்வது.

“உங்களை வச்சு செய்ய வேண்டிய ஆப்ரேஷனை அண்ணன் சோலோவா பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாரு அண்ணி. அதனால நாம வீட்டுக்கு போகலாம்” என்று சொன்ன குணாவை அதிர்ந்துப் போய் பார்த்தாள்.

“அதெப்படி என்னை விட்டுட்டு அவரால அந்த ஆப்ரேஷனை செய்ய முடியும். அவனுங்க கிட்ட இவர் மாட்டிக்கிட்டா. எதுக்கு இந்த ரிஸ்க். எதை சாதிக்க நினைக்கிறார் உங்க அண்ணன்” என்று கேட்டவளின் குரலை இந்த பக்கம் அலைபேசி வழியாக கேட்டுக் கொண்டு இருந்த தயாகரன்,

“எதை சாதிக்கன்னு வந்து காண்பிக்கிறேன்டி” என்று முணகிக் கொண்டான்.

“உங்க கிட்ட தான் கேட்கிறேன் குணா.. அவர் எதை சாதிக்க இந்த ப்ளான் போட்டாரு...” ஆத்திரமாக கேட்டாள்.

“இல்ல அண்ணி.. அது அண்ணன் தான்..” என்றான்.

“எனக்கு தெரியாது. இப்பவே உங்க அண்ணன் கிட்ட என்னை கூட்டிட்டு போங்க.. இவ்வளவு நாளா என்னை போதைக்கு பழக்கி, இல்லாத கொடுமை எல்லாம் படுத்தி, எவ்வளவு சித்ரவதை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு எல்லாம் படுத்தி சித்ரவதை செய்துட்டு இப்போ இப்படி விட்டுட்டு போனா எப்படி.. என்னால முடியாது. நானும் இந்த ஆப்ரேஷன்ல இருப்பேன்” என்றவளின் குரலை கேட்ட தயாகரன்,

“அவ மட்டும் இங்க வந்துடவே கூடாதுடா. என்ன பண்ணுவீங்கலோ ஏது பண்ணுவீங்களோ அவளுக்கு நான் இருக்கிற இடமே தெரியக்கூடாது. அவளை எப்படியாவது சமாளிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்கடா” என்றவனின் பேச்சை கேட்ட குணாவுக்கு நாக்கு தள்ளியது.

“இல்ல அண்ணி அண்ணன் உங்களை அந்த இடத்துக்கு  வரக் கூடாதுன்னு தான் இங்க எங்களை வரச்சொல்லி உங்களை கூட்டிட்டு போக சொல்லி சொல்லி இருக்காங்க. அண்ணன் பேச்சை எங்களால மீற முடியாது” என்று என்ற பிரபாவை முறைத்தவள்,

“குணா” என்றாள்.

“பிரபா சொன்னது தான் அண்ணி. எங்க வீட்டு மருமகளுக்கு எந்த தீங்கும் நேர நாங்க விட மாட்டோம்” என்றவனின் பேச்சில் ஏகத்துக்கும் கடுப்பு ஏறியது.

“ஐயோ உங்களுக்கு புரியுதா இல்லையா? நான் இல்லன்னா அந்த அந்த இண்டேர்ன்ஷ்னால் ரவுடி உங்க அண்ணனை கொன்னு போட்டுடுவான். அதோட என் அண்ணனும் இன்னும் அவனுங்க கஸ்ட்டடியில தான் இருக்காரு. அவரோட உயிரும் ஆபத்து நேரம். இவங்க ரெண்டு பேரையும் காப்பாத்த நான் போய் தான் ஆகனும்” என்றவளின் குரலில் இருந்த பரிதவிப்பில் இந்த பக்கம் தயாகரனின் இதழ்களில் மென்னகை உதித்தது.

அவன் கடலில் பயணம் பண்ணிக் கொண்டு இருந்தான். இங்கிருந்து கிளம்பி ஒரு மணி நேரம் தான் ஆகி இருக்கும். விடியற்காலையில் தான் எழுந்து கிளம்பினான்.

இரவெல்லாம் அவளுடன் கணக்கில்லாமல் கூடி களித்தவன், மனமே இல்லாமல் அவளின் கழுத்தில் இருந்த தாலியை கழற்றி கையோடு எடுத்துக் கொண்டு அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்து விட்டு கிளம்பி விட்டான்.

“உனக்குன்னு ஒரு புது வாழ்க்கையை அமைச்சுக்கோடி.. நான் வேணாம்.. என் கையாள நீ வாங்கின இந்த தாலியும் வேணாம். இனி நானும் இந்த தாலியும் உன் வாழ்கையில கிடையாது. அதே போல இன்னும் நான்கு நாட்களின் முழு சுதந்திரமும் குடுத்து விடுவேன். அவனுங்களை கூண்டோட அழிச்சு, இனி எந்த காலமும் உனக்கு எந்த தீங்கும் நேராமல் பார்த்துக் கொள்வேன் எட்டி இருந்தபடியே” தனக்குள் சூளுரைத்துக் கொண்டான். அதன் படி தானே அந்த எதிரியை எதிக்கொள்ள சென்றான்.

அடைந்த மீசையை தாடியை எல்லாவற்றையும் மழித்து உடலில் எங்கும் ரோமம் இல்லாமல் பார்த்துக் கொண்டவன், அவனின் கைவசம் எப்பொழுதும் இருக்கும் உருவம் மாறும் பொருள்களை வைத்து அழகாக புடவை கட்டி, நீண்ட முடியை பின்னல் போட்டு, அச்சு அசல் தயாழினி போல இருக்கும் மாஸ்க்கை எடுத்து அணிந்துக் கொண்டவன், அந்த மாஸ்க் மீதே கொஞ்சமாக டச் அப் செய்து, ஐ லைனர், ஐ சேடோ, இமைகளில் வைக்கும் முடி வைத்துக்கொண்டு வெளியே வர, அவனின் மொத்த குழுவினரும் வியந்துப் போய் பார்த்தார்கள்.

“சார்” என்று கண்களை விரித்தான் செந்தமிழ்.

“உங்களை இந்த கெட்டப்ல பார்க்கும் பொழுது உண்மையாவே தயாழினி மேடம் போலவே இருக்கீங்க சார்..” என்று வியந்துப் போய் பாராட்டினான்.

ஹரிணிக்கு திறந்த வாய் மூடவே இல்லை. அங்கு இருந்த அத்தனை பேரும் அப்படி தான் இருந்தார்கள்.

“கைஸ்.. நீங்களே இப்படி பார்த்து அவனுங்களுக்கு காட்டி குடுத்துடாதீங்க..” என்று அவர்களை இயல்புக்கு கொண்டவந்தவன்,

“நாம அவனுங்களை அங்க அட்டாக் பண்ணும் நேரம், இந்த நம்ம நாட்டில் இருக்கும் சில கல்ப்ரிட்களையும் கைது செய்து இருக்கணும்.. அதுக்குரிய எல்லா ஏற்பாட்டையும் செந்தமிழ், விஜய், ஜனா நீங்க மூணு பேரும் பார்க்குறீங்க” என்றான்.

“எஸ் சார்... ஆல்ரெடி ஐ இன்பார்ம்டு டு சிபிஐ ஹெட். அவர் நமக்கு எல்லா டீட்டையிலும் உடனுக்கு உடன் அப்டேட் பண்றேன்னு சொல்லி இருக்காரு..” என்றான் செந்தமிழ்.

“ஹரிணி” என்று அவளை அழைத்தான்.

“சார்.. நான் நம்ம கம்ண்டேர்ஸ்க்கு டீட்டையில் சொல்லி அவர்களை ரெடியா இருக்க சொல்லிட்டேன். அதுல குறிப்பிட்ட பெர்சன் மேடமோட செகேன்ட் ப்ரதரும் இன்க்ளூடிங். இங்க அட்டாக் பண்ணும் நேரம் ரெய்டும் அதை தொடர்ந்து அரெஸ்ட்வாரண்டும் கிடைச்சுடும். குணா சார் அதை ஹேண்டில் பண்றேன்னு சொல்லி இருக்காங்க சார்” என்றாள்.

“விஜய்” என்றான்.

“சார்.. அவங்க போற வழியி எல்லா பக்கமும் செக்யூரிட்டி பக்காவா இருக்கும். அதோட இது பல நாட்டு பிரச்சனைன்றதுனால மேக்சிமம் எல்லா நாட்டோட தலையீடும் இருக்கும். சோ ஆக்சிடென்ட் மாதிரி எல்லோரையும் போட்டு தள்ள கண்டெயினர் லாரியும் ரெடியா இருக்கு.. நம்ம ஆட்களுக்கு முன்னாடியே இன்பார்ம் பண்ணா வண்டியில இருந்து குதிச்சுடுவாங்க.. சோ அக்யூஸ்ட் மட்டும் டேட் ஆவாங்க” என்று அவன் விளக்கமாக சொல்ல, அனைத்தையும் கேட்டுக் கொண்டான்.

அவனின் டீம் எல்லாம் எள் என்று சொல்லும் முன்பே எண்ணையாக இருக்க, அவனுக்கு வேலை வெகு சுலபம் ஆனது.

ஆனால் அவனின் மனைவியை தான் அவனால் சமாளிக்க முடியவில்லை.

“டேய் அவக்கிட்ட போனை குடு” என்று சொல்ல, குணா போனை எடுத்து அவனின் அண்ணியிடம் நீட்டினான்.
“யாரு?” என்று கேட்டுக் கொண்டே காதில் வைக்க,

“நான் தான்டி” என்றான் தயாகரன்.

“எதுக்கு இப்படி பண்ணீங்க? இதுக்காக தான் இவ்வளவு வேதனையும் பட்டனா?” என்று கேட்டுக் கொண்டே கடலுக்கு சென்றாள்.

“கொஞ்ச நேரம் வாயை மூடுடி” என்று சொன்னவன், வீடியோ கால் வா.. என்று ஆடியோ காலை கட் பண்ணி விட்டுட்டு வீடியோ கால் வந்தான்.

இவள் எடுக்க, அங்கு அச்சு அசலாக அவளையே உரித்து வைத்தது போல நின்று இருந்த உருவத்தை பார்த்து திகைத்துப் போனாள்.

“இது..” என்று அவள் தடுமாற,

“நான் தான்” என்றான்.

“எதுக்கு தேவை இல்லாத இந்த ரிஸ்க்.. எதை நிரூபிக்க, எதை சாதிக்க இந்த ரிஸ்க்” அத்தனை கோவமாக கேட்டாள்.

“நீ எதை சாதிக்க இவ்வளவு அடமா இருக்க?” என்று கேட்டான். பார்வை அவளை குத்தி கிழித்தது.

“நா..ன் நா..ன் எதையும் சாதிக்கப் பார்க்கல” என்றாள் மிகவும் தடுமாறிப் போய்.

“பொய்.. இந்த ஆப்ரேஷன் முடிஞ்ச உடனே உன் அண்ணனுங்களை உன் குடும்பத்தோட சேர்த்து வச்சுட்டு நீ சாகப் போற ரைட்டா” என்று கேட்டான்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல” என்றவள், அவன் விடாமல் பார்த்த பார்வையில் தலையை குனிந்துக் கொண்டவள்,

“ஏன் அதுல என்ன தப்பு.. அவனுங்க கை என் மேல பட்டதுக்கு பிறகு என்னால எப்படி உயிரோட இருக்க முடியும்? அதனால தான் என் குடும்பத்தை சேர்த்து வச்சுட்டு போகலாம்னு இருந்தேன். என்னை பொறுத்த வரை இதுல எந்த தப்பும் இருக்கிற மாதிரி தெரியல” என்றவளை ஏளனமாக பார்த்தவன்,

“இதோ இப்போ சொன்னியே இந்த ரீசன். அதுவும் தற்கொலை அது இதுன்னு... எதையும் எதிர் கொள்ள தைரியம் இல்லாமல் சாக துணிஞ்ச இவ்வளவு கோழையை வச்சுக்கிட்டு என்னால இந்த ஆப்ரேஷனை லீட் பண்ண முடியாது. சோ ஸ்டே அவே.. எதுவா இருந்தாலும் நான் ஒருவனே பார்த்துக்குறேன். என் படைக்கு சிலரே போதும். நான் ஒருவன் மட்டுமே போதும்..” என்றவன் போனை வைத்து விட்டான்.

அவனின் பேச்சை கேட்டு சிலையாகி போய் விட்டாள். அவன் ஒருவன் மட்டும் போதுமா? என்று அவளின் உள்ளம் பதறியது.

பட்டென்று மீண்டும் அவனுக்கு போனை போட, அவன் எடுக்கவே இல்லை. டக்கென்று வாய்ஸ் மெசேஜ் போட்டாள்.

“நான் சாக துணியலன்னா என்னை இந்த ஆப்ரேஷன்ல இன்வால்வ் பண்ணுவீங்களா?” கேட்டு அனுப்பினாள். அவன் உடனே பார்த்தான். ஆனால் எந்த பதிலும் அனுப்பவில்லை.

“ப்ளீஸ்” என்று அவள் மேலும் மெசேஜ் பண்ண, அனைத்தையும் பார்த்தானே தவிர, எந்த பதிலும் அனுப்பவில்லை தயாகரன்.

அவளிடம் அவன் எதிர்பார்த்த திடமும் உறுதியும் இல்லாமல் போக, அவனின் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் ஒதுக்கி வைக்க எண்ணியே அவளை விட்டு நிரந்தரமாக செல்ல முடிவெடுத்து விட்டான்.

அதை புரிந்துக் கொண்டவளுக்கு பக்கென்று இருந்தது. ஆனால் எல்லாம் கை மீறிப் போன பிறகு அவளால் என்ன செய்ய முடியும்.. நேற்று இரவு கூடல் முடிந்த பிறகு இருவரும் அயர்ந்து உறங்கின பிறகு படக்கென்று முழிப்பு வந்து விட்டது அவளுக்கு.

முழிப்பு வரவும் தன் அருகில் படுத்து இருந்தவனை கண்டு காதலில் அவனின் முடியை கலைத்து விட்டு நெற்றியில் முத்தம் வைத்தவள் தன் மனதில் உள்ள திட்டத்தை கொட்டி விட்டாள். ஆனால் அவன் முழித்து தான் இருக்கிறான் என்று தெரியாமல் அவள் சொல்லி விட, இதோ இப்பொழுது அவளை விடுத்துவிட்டு அவன் மட்டும் தனியே...

Loading spinner

Quote
Topic starter Posted : September 3, 2025 11:33 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top