Notifications
Clear all

அத்தியாயம் 22

 
Admin
(@ramya-devi)
Member Admin

தன் கரம் கொண்டே தன் கண்களை குத்திய மகேந்திரனை மிருதியால் மன்னிக்கவே முடியவில்லை. அவரின் மீது ஆத்திரம் தான் வந்தது. ஆனால் தன் ஆத்திரத்தை காட்ட முடியா நிலையில் அவரது உயரம் இருக்க அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எழுந்து வந்துவிட்டாள்.

காதலனின் முதுகில் குத்தும் காதலி நானாக தான் இருப்பேன். எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம், அவரின் எதிகாலத்தையே இல்லாமல் பண்ணி விட்டேன்... என்று பெரிதும் கலங்கிப் போனாள்.

அவளின் அழுகையை உணர்ந்த மிருதன் கடுப்படித்தான். அவனது கடுப்பை எல்லாம் உணராதவள் அவளது எண்ணத்திலே இருந்தாள். அவளின் நெஞ்சே அவளை விடாது கேள்வி கேட்டுக் கொண்டு குற்ற உணர்வில் தவித்துக் கொண்டு இருக்க ஒரு கட்டத்துக்கு மேல் அவனை எதிர் கொள்ள முடியாமல் அங்கிருந்து விலகி ஓடிவிட்டாள்.

ஓடியவளை பெரு மூச்சுடன் பார்த்தவன் சக்தியிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தவன் அவளின் அறைக்குள் நுழைந்தான்.

அங்கு முகம் சிவக்க ஆற்றாமையால் அழுதுக் கொண்டு இருந்தாள். உள்ளே வந்தவன் ஒன்றும் சொல்லாமல் அப்படியே அமர்ந்து இருந்தான். அறையில் அரவம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தாள்.

மிருதன் அமர்ந்து இருந்தான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல். அவன் அப்படி அமர்ந்து இருக்கவும் பொல்லாத கோவம் வந்தது அவளுக்கு.

வேகமாய் தன் கையில் மகேந்திரன் கொடுத்த பேப்பரை அவனுக்கு எதிரில் இருந்த மேசை மீது பொத்தென்று வைத்தாள்.

அதை படிக்காமலே அதில் என்ன இருக்கும் என்று அறிந்தவன் கால் மேல் கால் போட்டு நிதானமாக அவளை ஏறிட்டான். அவனது நிதானத்திலே இவளுக்கு கொஞ்சம் சந்தேகம் வர,

“அப்போ உங்களுக்கு எல்லாமே தெரியும் இல்லையா?” அடக்கப்பட்ட கோவமும் ஆத்திரமும் அவளது குரலில் நன்கு வெளிப்பட்டது.

“ப்ச்...” என்று சலித்தான்.

“உங்களால மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுது...?” வேதனையுடன் கேட்டாள். அப்பொழுதும் மிருதன் வாயை திறக்கவே இல்லை.

“அப்பன் மகன் இரண்டு பேரும் சேர்ந்து ஆடுற கேம்ல என் காதலை பனையமா வைச்சி ஆடுறீங்கள்ள...?” அவளது குரலில் அடிபட்ட வலி அப்பட்டமாய் தெரிந்தது.

“அப்படி தான்னு வச்சுக்கோ” என்றான் திமிராய்.

“இதை உங்க கிட்ட இருந்து கொஞ்சம் கூட எதிர் பார்க்கல... என் காதல் ஒண்ணும் அவ்வளவு கேவலமா போயிடல...” என்றவளின் விழிகளில் தன் காதலின் நிலையை எண்ணி கண்ணீர் சுரந்தது. அவளது கண்ணீரை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்தான் மிருதன்.

தொண்டை குழியில் தாங்க முடியாத வேதனை வந்து அடைத்துக் கொள்ள, அதை விழுங்கி சீரணம் செய்ய முடியாமல் அவன் முன் தன் கண்ணீரை காட்டவும் முடியாமல் துடித்துக் கொண்டு இருக்க,

“அவ்வளவு சீன் எல்லாம் இங்க தேவை இல்லை. இந்த ப்ராஜெக்ட்டை நீ செய்யலன்னா உனக்கு பதிலா வேற யாரவது செய்துட்டு போய் கிட்டே இருப்பாங்க. அப்புறம் உன் டைரெக்டர் கனவு கனவா தான் இருக்கும்.” என்றவன் நக்கலாக,

“மேடமுக்கு தான் பெரிய திரையில சாதிக்கணும்னு வெறி இருக்கே... அதுக்கான ஓபன் டிக்கெட்டா இந்த ஸ்க்ரிப்ட்டை வச்சுக்கோ” என்றான்.

அவனது நக்கலில் இன்னும் கோவம் தான் வந்தது.

“சோ என் காதல் பத்திய அக்கறை கொஞ்சம் கூட இல்லை இல்லையா?”

“ப்ச்...” என்றான் அசூசையாக.

அவன் அவ்வளவு அலட்ச்சியம் காட்டிட, தன் காதல் மீதே அவளுக்கு கோவம் வந்தது.

“இவ்வளவு நாள் ‘அவ்வளவு தான் உன் காதலா?ன்னு’ நீங்க கேட்கும் போதெல்லாம் உங்க மேல தான் கோவம் வந்தது. ஆனா இப்போ என் மேலையே கோவம் வருது...” அவன் மீது எழுந்த கோவத்தை அப்படியே வார்த்தையில் கொட்டியவள் மேற்கொண்டு பேச முடியாமல் தவித்துப் போனாள்.

அவளின் போராட்டத்தை உணர்ந்தானோ என்னவோ,

“இங்க பாரு. இது ஜஸ்ட் ஒரு பார்ட். இதை கடந்து போய் கிட்டே இருக்கணும்...” என்றவனின் சட்டையை கோர்த்து பிடித்தவள்,

“எது உங்களுக்கு சின்ன விசயம். என் காதல் உங்களுக்கு சின்ன விசயமா போச்சா. உங்களுக்கு படிக்கலன்னு ஆரம்பத்துலையே சொல்லி இருந்து இருக்கணும். அதை விட்டுட்டு ஒவ்வொரு முறையும் என் காதலை நிரூபிக்க சொல்ற மாதிரி என்னை உசுப்பேத்தி விட்டு உங்களுக்கு சாதகமா செய்ய சொல்லி என் காதலை இன்னும் உங்க மேல ஒரு படி காதலை உயர்த்தி விட்டுட்டு இன்னைக்கு மொத்தமும் ஊத்தி மூட சொல்ல உங்களுக்கு எப்படி மனது வந்தது...!”

“ஏன் ஊட்டிக்கு போனப்ப கூட என் மேல காதல் இல்லன்னு சொன்னீங்க... சரி உங்களுக்கு என் மேல விருப்பம் இல்லன்னு நினைச்சி தான் இத்தனை மாசமும் அமைதியா இருந்தேன். ஆனா உங்க முதல் முதல் ஸ்கிரிப்ட்ட எந்த தயக்கமும் இல்லாம என்கிட்டே தூக்கி குடுக்குறீங்கன்னா கண்டிப்பா என் மேல உங்களுக்கு காதல் இருக்கு. இல்லன்னு மட்டும் சொல்லாதீங்க... இதே என் இடத்துல வேறு யாராவது இருந்து இருந்தா கண்டிப்பா உங்க அப்பாக்கிட்ட நீங்க வாக்கு வாதம் பண்ணி இந்த ப்ராஜெக்ட்டை உங்க கைக்கு கொண்டு வந்து இருப்பீங்க... அப்படி இல்லையா லாஸ்ட் முயற்சியா அட்லீஸ்ட் இதை ஸ்டாப் பண்ணவாவது முயற்சி செய்து  இருப்பீங்க..” என்றவளின் வார்த்தையில் மிருதன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது தெரியாமல் அவன் மீது மொத்த பழியையும் சுமத்தினாள்.

“ஆனா நீங்க இப்போ வரை இந்த ப்ராஜெக்ட்டை தடுக்க எந்த முயற்சியும் செய்யல... அப்படின்னா என்ன அர்த்தம். நீங்க எனக்காக விட்டு குடுக்குறீங்க... அதாவது உங்க அப்பாக்கிட்ட என்னை முன் நிறுத்தி உங்க கனவை இழக்க முன் வந்துட்டீங்க இல்லையா?” என்று தொண்டை அடைக்க கேட்டவளை இன்னும் ஆழ்ந்து பார்த்தானே தவிர வாயையே திறக்கவில்லை.

வழிந்த கண்ணீரை துடைக்க கூட இல்லாமல், அவனது சட்டை காலரை பிடித்து தன் கோவத்தை முழுதாக அவனிடம் கொட்டிக்கொண்டு இருந்தாள்.

“என்னை சுயநலவாதியா மாத்திட்டீங்க... என் காதலின் அடிப்படையே சுயநலம்னு காட்ட பார்க்குறீங்க இல்லையா?” என்று மேலும் கேட்டவளின் உள்ள கேள்வியின் பொருளை உணர்ந்தவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

அதில் வெளிப்படையாக அவனது இதழ்கள் நெளிய பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு பத்திக் கொண்டு வந்தது...!

“மிஸ்டர் மிருதன்..” என்று அவள் குரலை உயர்த்த, அது வரை அவளை பேச விட்டு வேடிக்கை பார்த்தவன், அவளது கரங்களில் இருந்து தன் சட்டையை விடுவித்துக் கொண்டவன்,

“இங்க பாரு... நீ இந்த ப்ராஜெக்ட்டை செய்தாலும் சரி, இல்ல வேற யார் செய்தாலும் சரி... எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை... ஏன்னா நான் வேற வேலையில கமிட் ஆகிட்டேன்... அந்த வேலைக்கு முன்னாடி இதெல்லாம் ஜுஜுப்பி... சோ உன் காதல் கத்திரிக்கையை எல்லாம் இங்க யாரும் பகடை காயா மாத்தல. அதோட அந்த அளவுக்கு ஒண்ணும் உன் காதல் பெருசு இல்லை...” என்று அவளை ஆழ்ந்து பார்த்து சொன்னான்.

அதில் நெருப்பு பட்டது போல துடி துடித்தவள் அவனை அந்த வலியோடு பார்த்தாள்.

“என் காதல் அவ்வளவு தானா...? என் காதலின் மகத்துவம் புரியலையா? இல்லை நான் புரியவைக்கலையா இவருக்கு?” என்று அவள் கேள்வியை தாங்கி நிற்க, அதை கண்டு கொள்ளாமல்,

“அப்போ நான் எதுவுமே இல்லையா உங்களுக்கு...?” உயிர் துடிக்க கேட்டாள். இதை அவனிடம் கேட்க கூடாது என்று தான் எண்ணினாள். ஆனால் சந்தர்ப்பம் அவளை அவனிடமே கேட்க வைத்து வேடிக்கை பார்க்கிறது. என்ன செய்வாள் பாவம் பெண்ணவள்.

“உன்னை தோழியா கூட பார்க்கல போதுமா..?” என்றான் அழுத்தமாய்.

“அப்போ அப்போ நமக்குள்ள எதுவுமே இல்லையா...?” என்று மீண்டும் அவனிடமே கேட்டு தெளிவு பெற வழியில்லாமல் அவன் கொடுக்கும் வலிகளை தன் வாய் வார்த்தையாலே கேட்டு கேட்டு வாங்கிக் கொண்டாள்.

“கண்டிப்பா... நமக்குள்ள எதுவுமே இல்ல... உன் கற்பனைகளை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு அன்னைக்கு சொன்னியே ஏதோ வெள்ளி திரைக்கு போய் எதையோ சாதிக்க போறேன்னு... உன்னோட சேர்ந்த எல்லோரையும் கூட்டிட்டு போய் சாதிச்கிக்கோ... என்கிட்டே இருந்து உனக்கு முற்றும் முழுதா விடுதலை கொடுத்துட்டேன். கோ ஹேட்...” என்றான் அலட்சியமாய்.

அவனது இந்த அலட்சியத்தில் கண்ணீரும் ஆத்திரமும் ஒருங்கே வர அந்த நேரம் தான் சக்தியும் சுதிரும் உள்ளே வந்தார்கள்.

வந்தவர்களிடம் இதை காண்பித்து கேட்க, மிருதன் எழுந்து போய் விட்டான் அதற்கு மேல் தனக்கு அங்கு வேலை இல்லை என்று.

அவனது இந்த அலட்சியமே அவனது மனதில் மிருதி இல்லை என்பதை பறைசாற்ற மிருதியை தான் இருவரும் தேற்ற வேண்டி இருந்தது..!

ஒருவழியாக எல்லாம் முடிந்து அடுத்த கட்ட சுற்று ஆரம்பம் ஆனது. இதோடு அவ்வளவு தான். தன் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று எண்ணி மிருதி முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு மீண்டும் மிருதனிடம் வந்து நின்றாள்.

அவன் சொன்ன வேலைகளை எல்லாம் முகத்தில் எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் சரிவர செய்தாள். ஆனால் உள்ளுக்குள் பல எரிமலைகள் ஒன்றாய் வெடித்துக் கொண்டு இருந்தது.

அதை வெளிப்படுத்த அவளுக்கு காலம் வாய்க்கவில்லையே... எனவே தனக்குள் எல்லாவற்றையும் போட்டு அழுத்தி வைத்துக் கொண்டாள்.

சக்தி மிருதன் வந்தவுடன் அவனிடம் இயக்கத்தை கொடுத்து விட, அவனை ஒரு பார்வை பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் வேலையை பார்த்தான். நல்லபடியாக அனைத்தும் வந்து இருந்தது...!

மகேந்திரன் சொன்ன ஆளை விடுத்து விட்டு நேர்மையாக போட்டி நடத்தி அதில் வந்த முதல் வெற்றியாளருக்கு பிரபலம் வந்து, அவரின் பெயரை சொல்லி அறிவித்து முதல் பரிசை வழங்கினார்.

அதை தொடர்ந்து ரன்னர் மூன்றாவது வெற்றியாளர் என அனைவருக்கும் பரிசளிப்பு நடத்தி அன்றிரவு வந்த கேஸ்ட்டுக்கு சிறியதாய் பார்டி கொடுத்து என சிறப்பாக சென்றது அன்றைய நாள்..

அந்த டீம் மெம்பர்ஸ் அனைவருக்கும் இதோடு இந்த கூட்டணி பிரிய போகிறதே என்கிற வருத்தம். ஆம் அதற்குள் மிருதி, சுதிர் மற்றும் சக்திக்கு கிடைத்த பதவி உயர்வை வதந்தியாக்கி விட்டார்.

அதோடு அந்த டீமில் இருக்கும் அனைவருக்கும் வெள்ளி திரை பக்கம் போக வாய்ப்பு ஏற்பாடு செய்து இருப்பதாக தகவல் வர ஒரு பக்கம் மகிழ்ந்தாலும் இந்த டீம் இனி ஒன்று கூடாதே என்கிற கவலை வேறு அனைவரிடமும் இருந்தது...!

பிரிவென்பது நிரந்தரம் இல்லையே... தொடர்பில் இருக்க இப்பொழுது தான் ஆயிரம் வழிகள் இருக்கிறதே...! அதனால் மனதை இலகுவாக வைத்துக் கொண்டு அனைவரும் அந்த விழாவை சிறப்புடன் நடத்தி முடித்தார்கள்.

செய்தி கேள்வி பட்ட சம்பூர்ணவதிக்கு கண்கள் எல்லாம் கலங்கி விட்டது. வெடித்துக் கொண்டு வந்த அழுகையை கட்டுப் படுத்த முடியாமல் “அப்பா...” என்று பெருவுடையாரின் தோளில் சாய்ந்துக் கொண்டார்.

பெருவுடையாருக்குமே இந்த செய்தி அதிர்ச்சி தான். மகேந்திரனிடம் முன்பே சொல்லி இருந்தார். இந்த ஒரு நிகழ்ச்சி முடிந்த பிறகு வெள்ளி திரையில் மிருதன் கால் பதிக்க வேண்டும் என்று.

ஆனால் மகேந்திரன் மிருதனின் வாயாலே எனக்கு இப்போதைக்கு அதுல விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டான். ஆனால் தன் நண்பர்களை எல்லாம் வெள்ளி திரைக்கு அனுப்பி வைத்ததை எண்ணி பெற்றவளாய் கலங்கிப் போனார் சம்பூர்ணவதி.

பெருவுடையாருக்கும் மிருதனின் இந்த முடிவில் உடன்பாடு இல்லை. ஆனால் தன் பேரன் எது செய்தாலும் அதில் கண்டிப்பாக ஏதோ ஒரு காரணம் இருக்கும்.. என்று எண்ணியவர் தன் மகளை தேற்றினார்.

“என் பேரன் மேல நிச்சியம் எனக்கு நம்பிக்கை இருக்கு சம்பூர்ணா.. அவன யார் தடுத்தாலும் முட்டி முளைச்சி அவனோட வெற்றி கொடியை நாட்டுவான். மாப்பிள்ளை கிட்ட எதையும் கேட்டு வைக்காத... நம்ம பேனர்ல தான் அவன் இயக்குனரா வரணும்னு எந்த அவசியமும் இல்ல. அவனோட திறமைக்கு அவன் எப்படி முன்னேருவான்னு மட்டும் பாரு.”

“அந்த நாள் வெகு தூரத்துல இல்ல. அவன் இந்த சினிமாவை அதிகமா நேசிக்கிறான். அதனால அப்படி எல்லாம் விட்டுட்டு போயிட மாட்டன். நமக்காவது ப்ரொட்யூஸ் மட்டும் தான் பண்ண தெரியும். ஆனா என் பேரன் அப்படி இல்ல... இதனோட ஆணி வேர் முதற்கொண்டு அனைத்தையும் கற்று வச்சு இருக்கிறான். சுவாசமா இதை நேசிக்கிறான்... அவனே விட்டு போனாலும் இந்த சினிமா அவனை விடாது...” என்று பெருமையாக சொன்னவர்,

“இன்னொன்னு சொல்லட்டா” என்று அவர் கேட்க, சம்பூர்ணவதி தலையை ஆட்டினார் ஒப்புதலாய்.

“நாம் எதை தேடுறமோ அதுவும் நம்மளை தான் தேடிக்கிட்டு இருக்கும். இது சத்தியமான வார்த்தை. என் பேரனோட தேடல் அது வேற... அவனோட இலக்கு வேற.. அதை நோக்கி பொறுமையா பயணம் செய்துக்கிட்டு இருக்கான்... அதனால தான் அவன் அவங்க அப்பாவை ஆட விட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கான். அவனோட தேடலும் அவனை தேடிக்கிட்டே இருக்கு. சீக்கிரம் வருவான் என் பேரன் இந்த உலகையே திரும்பி பார்க்க வைக்க” என்றார் பெருமையாக.

அதை பாதி கேட்டுக்கொண்டு வந்த மகேந்திரனுக்கு ஏளனத்தில் சிரிப்பு தான் வந்தது...

“அதையும் தான் பார்க்கிறேனே..” என்று எண்ணிக் கொண்டவர் அவருடைய அறைக்கு போய்விட்டார். அப்பாவும் மகளும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்கள்.

அடுத்த ஒரு வாரத்தில் “பாடாத பாட்டெல்லாம்...” நிகழ்ச்சி பெரிய சக்சஸ் ஆனதுக்கு பெரிய பார்ட்டி ஒன்று அரேஞ் செய்து இருந்தான் மிருதன். எல்லோரும் வந்து இருந்தார்கள். மிருதணும் இரவு ஏழு மணிக்கு வந்தான். அவனோடு சக்தி, சுதிர் இருவரும் வந்தார்கள்.

ஆனால் மிரு மட்டும் வரவில்லை...! அனைவரும் அவளை தேட,

“மேடம் பட வேலையில ரொம்ப பிசியா இருக்காங்க... சோ வரல” என்று அவளின் அசிஸ்டேன்ட் பரதன் சொன்னான் கேட்பவர்களுக்கு. காற்று வாக்கில் அது மிருதனின் காதிலும் வந்து விழுந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : September 2, 2025 10:02 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top