Notifications
Clear all

அத்தியாயம் 21

 
Admin
(@ramya-devi)
Member Admin

சொட் சொட்டேன்று தன் மீது விழுந்த நீரில் நிமிர்ந்து பார்த்தான் மிருதன். மிரு தான் முகம் கசக்காமல் வேதனையின் உச்சத்தில் கலங்கிக் கொண்டு இருந்தாள்.

அவன் நிமிர்ந்து பார்க்கவும் எங்கே வெடித்து சிதறி விடுவோமோ என்று அஞ்சியவள் தன் வாயை பொத்திக் கொண்டாள்.

ஆனால் விழிகள் விடாமல் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தது. அதில் டிஸ்ட்ரப் ஆனவன்,

“ப்ச்..” என்றான் கோவமாக. அதில் சுதாரித்தவள் இன்றைக்கு மிக முக்கியமான நாள் என்பதை உணர்ந்து தன்னை சமன் படுத்த எண்ணினாள். ஆனாலும் அவளால் அதை செய்ய முடியாமல் அங்கிருந்து ஓடி விட்டாள்.

அதில் இன்னும் கடுப்பானவன்,

“சக்தி...” என்று உறுமினான். அவனது சத்தத்தில் வேகமாய் அவ்விடம் வந்தான்.

“சொல்லு மச்சான்...”

“இதை டைரெக்ட் பண்ணு” என்று எழுந்துக் கொண்டான்.

“மச்சான் நான் எப்படிடா..” அவன் தடுமாற,

“இன்னும் எத்தனை நாள் இப்படி என் பின்னாடி வால் பிடிச்சுக்கிட்டே இருக்கிறதா உத்தேசம்... ஒழுங்கா இதை டைரெக்ட் பண்ணு” என்றவன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் எழுந்துக் கொண்டான்.

சுதிர்க்கே ஒரு கணம் ஜெர்க்கானது. இருந்தாலும் இப்படி பொசுக்குன்னு பைனல்ல தூக்கி கொடுக்க எப்படி இவனுக்கு மனது வந்தது என்று எண்ணி வியந்து தான் போனான்.

தன் மச்சானுக்கு கைகாட்டி வாழ்த்துகள் சொன்னான் சுதிர். அதை தலை அசைத்து ஏற்றுக் கொண்டவன் முதல் முறையாக டைரெக்டர் என்று போட்டு இருந்த இருக்கையில் அமர்ந்தான் சக்தி.

நெஞ்சுக்குள் நடுக்கம் இருந்தாலும் அத்தனை பெரிய ஷோவை சரியாக முன்னெடுத்து சென்றான். எங்கெங்கு எப்படி எப்படி பேச வேண்டும், எவ்விடத்தில் நிறுத்த சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் சரியாக செய்துக் கொண்டு இருந்தான்.

சரியாக வராததை எல்லாம் மீண்டும் ஒரு முறை எடுத்து மனதுக்கு திருப்தி ஆன பிறகே விட்டான். அதோடு மிருதன் இயக்கி இருந்தால் இதை எப்படி எடுத்து இருப்பன் என்று அவன் வழியாக அவன் சிந்தித்து எடுக்க சிறப்பாகவே வந்து இருந்தது இரண்டாம் கட்ட சுற்று...!

அதன் பிறகு உணவு இடைவெளி மிருதனை நோக்கி ஓடினார்கள் சக்தியும் சுதிரும்.

மிருதியின் அறையில் தான் இருவரும் இருந்தார்கள்.

“என்ன மச்சான் இப்படி பாதியில வந்துட்ட...?” சுதிர் கேட்க, அவன் முறைத்தான்.

“ஏன்டா கேள்வி கேட்டா கூடா தப்பா...?” சக்தியிடம் புலம்பினான்.

சக்தி விவரமாய் “மிரு என்ன ஆச்சு? ஏன் பாதியில வந்துட்ட?” மிருதியிடம் கேட்டான்.

கேட்டவனிடம் ஒன்றும் சொல்லாமல் சில டாக்குமெண்ட்சை தூக்கிப் போட்டாள். இப்பொழுதும் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் நின்ற பாடில்லை. விழிகள் மொத்தமும் சிவந்து போய், மூக்கு நுனி பிங்க் கலரில் இருக்க பாவமாய் இருந்தது அவளை பார்க்க..

தூக்கி போட்ட டாக்குமென்ட்சை கேட்ச் பிடித்த இருவரும் அதை மாற்றி மாற்றி படிக்க அதிர்ந்து போனார்கள். அந்த அதிர்ச்சியோடு மிருதனை பார்த்தார்கள் இருவரும்.

“மச்சான் என்னாடா இது...?” என்று அவனை உலுக்கி எடுக்க,

“எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... ஜஸ்ட் லீவிட்...” என்று அவர்களிடம் இருந்து சட்டையை விலக்கிக் கொண்டவன் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றான்.

“மிரு... என்ன இது?” என்று இருவரும் பரிதவித்துப் போய் அவளிடம் கேட்டனர்.

“எனக்கு மட்டும் என்ன தெரியும். இவரோட அப்பா மிஸ்டர் மகேந்திரன் என்னை வரச் சொல்லி சொன்னாரு. நான் இந்த ஷூட் முடிச்சுட்டு போகலாம்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள ஆயிரத்தெட்டு போன் கால்ஸ். அதுல மிருதன் ஓவரா டிஸ்ட்ரப் ஆகவும் சரி என்னன்னு தான் போய் பார்த்துட்டு வரலாம்னு போனேன்...” என்றாள்.

“எதுக்கு அவ்வளவு அவசரமா வர சொல்லணும்” சுதிர் கேட்க,

“வேறென்ன மிருதன் எடுக்கிற பைனல் ஷூட் சொதப்பி அவருக்கு கெட்ட பெயர் வர வைக்க தான்..” என்றாள் கடுப்பாக.

“நீ என்ன சொல்ற மிரு...?”

“இன்னும் கூடவா சக்தி உனக்கு புரியல...” என்றாள் கடுப்பாக.

“அவன் மேல கோவம் இருக்குன்னு தெரியும். ஆனா இப்படி அவனோட கெரியரையே ஒண்ணும் இல்லாம செய்ய துணிவார்னு நான் நினைக்கல...” என்றான் சக்தி.

ஆம் எவ்வளவு மோசமாக கீழிறங்க முடியுமோ அந்த அளவுக்கு கீழிறங்கி விட்டார் மகேந்திரன். மிருதனின் முதல் ஸ்க்ரிப்ட்..

பார்த்து பார்த்து ஆசை ஆசையாக ஒவ்வொரு சீனையும் எழுதி இருந்தான். அதன் டெலிவரி டைலாக் எல்லாம் அவன் தான். எந்த இடம் கேமரா சூம் வரணும், எந்த இடம் டாப் ஆங்கில், சைட் ஆங்கில்ல எது வரணும் என இஞ்ச் பை இஞ்சாக செதுக்கி இருந்தான் அந்த திரை கதையை.

அனுபவம் இல்லாத ஆள் கூட இந்த ஸ்க்ரிப்ட்டை வைத்து வெற்றி கரமாக படத்தை எடுத்து நூறு நாள் ஓட விட்டு விடுவான். அந்த அளவுக்கு பக்கா காமர்ஷியலோடு எழுதி இருந்தான்.

வார்த்தை கோர்ப்பு பக்காவாக இருந்தது... அதை விட எங்கும் ப்ளோ மிஸ் ஆகவே இல்லை. முதல் பார்ட் காமெடி, காதல், சீண்டல் என இருக்க, இடைவேளைக்கு பிறகு வருகிற பார்ட் காமெடி கலந்து செண்டிமெண்ட் பேமிலி என்டர்டைமென்ட் கேட்டகரியில் எழுதி இருந்தான்.

அதை மட்டுமா எழுதி இருந்தான், இந்த படம் எடுக்க ஆக கூடிய மொத்த செலவு, எந்தெந்த இடத்தில் ஷூட்டிங் எடுக்கணும். எத்தனை ரீல்ஸ், என்ன லென்ஸ், யார் யார் காஸ்டிங், என்ன காஸ்டியும் யூஸ் பண்ணனும் என ஒவ்வொரு சீனையும் எழுதி ஒரு ப்ரொட்யூசராக ஆக கூடிய செலவுகள் என எல்லாமே பக்காவாக திட்டம் போட்டு இருந்தான் மிருதன்.

பாடல்களின் வரிகள் கூட அவனே எழுதி இருந்தான். அப்படியாப்பட்ட ஸ்க்ரிப்ட்டை தான் மிருதியிடம் தூக்கி கொடுத்து இருந்தார் மகேந்திரன்.

“நீ இந்த கம்பெனில வந்து ஜாயின் பண்ணி கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு மேல ஆகிடுச்சு. சோ ப்ரோமோஷனுக்கு செலக்ட் ஆகி இருக்க...” என்றவரின் பேச்சில் மகிழ்ந்தவள்,

அடுத்து சொன்னதை கேட்டு உள்ளம் நொறுங்கிப் போனாள்.

“சக்தி சுதிர் எல்லோரும் இருக்காங்க சார்...” என்று அவர்களையும் அவள் நினைவு படுத்த,

“கண்டிப்பா எல்லோருக்கும் ப்ரோமோஷன் தான். அவங்க உன்னை விட சீனியர் இல்லையா... அவங்களுக்கு இல்லமால..?” என்றவர் அவர்களுக்கு உரிய ஆர்டரையும் அவளிடம் காண்பித்தார். அதில் மகிழ்ந்துப் போனாள்.

“இந்தா இது உன்னோட காண்ரேக்ட் பேப்பர்ஸ்...” என்று அவர் நீட்ட, அதை வாங்கி படித்து பார்த்தாள்.

அவர்களது பேனரில் இயக்குனராக வேலை செய்ய இரண்டு வருடத்துக்கான அக்ரிமென்ட் போடப்பட்டு இருந்தது. அதில் மகிழ்ந்துப் போனவள் கண்டிஷன்ஸ் எல்லாம் செக் பண்ணி பார்த்தாள். எல்லாமே மனதுக்கு ஒப்புதலாய் இருந்தது. அதனால் கொஞ்சமும் தயங்காமல் அதில் கையெழுத்துப் போட்டவள், அவர் கொடுத்த ஆர்டரை வாங்கிக் கொண்டவள்,

“சக்தியையும் சுதிரையும் வர சொல்லவா சார்..” என்று அவரிடம் அனுமதி கேட்க,

“ஷுயர்... அதுக்கு முன்னாடி நாம ப்ராஜெக்ட் பத்தி பேசணுமே...” என்றார்.

“ப்ராஜெக்டா... அதுக்குள்ளையா சார்...” என்று அவள் இனிமையாக அதிர்ந்தாள்.

“எஸ்... நமக்கு கொஞ்ச நாள் தான் இருக்கு.. இந்த உழைப்பாளர்கள் தினத்துக்கு நாம படத்தை ரிலீஸ் பண்ணி இருக்கணும். இன்னும் அம்பது நாள் தான் இருக்கு... சோ நீ என்ன பண்ற நாளையில இருந்து உன் சைட்ல் யார் யார் வேணும் அப்படின்னு ஒரு லிஸ்ட் போட்டு எடுத்துட்டு வா... அதோட எந்த மியூசிக் டைரெக்டர்னு நீயே டிசைட் பண்ணிடு” என அவர் அடுக்கிக் கொண்டே போக,

“சார் இன்னும் ஸ்க்ரிப்ட் ரெடி இல்லையே...” மெயின் ஸ்க்ரிப்ட் தானே. அது இல்லாம மத்ததை எல்லாம் ப்ளான் பண்ணா எப்படி என்று அவள் கேட்க,

அப்பொழுது தான் மிருதன் முதல் முதல் எழுதிய ஸ்க்ரிப்ட் பண்டில்லை தூக்கிப் போட்டார். என்ன புக் இது என்று முதல் பக்கம் படிக்க ஆரம்பிக்கும் பொழுதே அது மிருதனுடையது என்று புரிய அதிர்ந்து போய் எழுந்தே விட்டாள் மிருதி.

“சார் இது மிருதன் சாரோடது... இதை எப்படி நான் டைரெக்ட் பண்ண முடியும்?” என்றவளை புன்னகையுடன் எதிர்கொண்டவர்,

“அவன் கிட்ட கேட்டேன் மா... அவன் தான் இப்போதைக்கு பெரிய திரையில நாட்டம் இல்லன்னு சொல்லிட்டான். அது தான் உனக்கும் சக்திக்கும் அவனோட கதையையே கொடுக்க நினைச்சேன்.” என்றார் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.

“என்ன... சக்திக்கும் மிருதனோட கதையா...?” அதிர்ந்தவளுக்கு பேச்சே மறந்துப் போனது.

“கை எழுத்து போடுட்ட இல்லையா.. நாளையில இருந்து ஷூட்டிங்க்கு தேவையான முன் ஏற்பாட்டு வேலையை கவனி... இன்னும் ஒரு வாரத்துல ஷூட்டிங் ஆரம்பம் ஆனா தான் இருபது நாள்ல ஷூட்டிங்கை முடிச்சுட்டு அடுத்த கட்டமான எடிட்டிங், டப்பிங் போக முடியும்..” என்றார் அதிகாரமாய்.

மிருதியால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மிருதனின் கனவை பற்றி அவளுக்கு தான் மிக நன்றாகவே தெரியுமே... அவனுடைய அப்பாவே அவன் ஆசையாக எழுதிய ஸ்கிரிப்ட்டை தூக்கி கொடுக்கிறார் என்றால் கண்டிப்பாக இருவருக்குள்ளும் எதுவோ சரி இல்லை என்று தோன்றியது.

அதை விட மிருதனுக்கு சினிமா இயக்க ஆர்வம் இருப்பதால் தான் ஒரு ஸ்க்ரிப்ட்டை இவ்வளவு துல்லியமாக எழுத முடிந்தது... இல்லை என்றால் நிச்சயம் எங்காவது ஒரு பிழையாவது ஏற்பட்டு இருக்கும். அவனது எழுத்திலே அந்த நேர்த்தி தெரிய மிருதனை பழிவாங்க நினைக்கிறாரோ என்று அவரை ஆராய்ந்து பார்த்தாள்.

ஏனெனில் அவன் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் இவர் எவ்வளவு முறியடிக்க முடியுமோ அந்த அளவுக்கு முறியடித்துக் கொண்டு இருந்தாரே. அத்தனையிலும் அவரை தோற்கடித்து விட்டு மிருதன் தானே வென்று இருந்தான்.

இன்று இதிலும் மிருதன் வெற்றிக் கொள்ள வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டவள்,

“எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் சார்...” என்று எழுந்துக் கொண்டாள்.

“எவ்வளவு நேரம் வேணாலும் எடுத்துக்கோ நோ ப்ராப்ளம்... ஆனா நீ இந்த ஸ்க்ரிப்ட்டை இயக்கலன்னா உன் இடத்துல இன்னொரு டேரைக்டரை போட எனக்கு ரொம்ப நேரம் ஆகாது... அதனால அதையும் சேர்த்தே யோசிச்சுக்கோ” என்றவரின் சொல்லில் மிருதனின் கனவை ஒட்டு மொத்தமாய் அழித்து போடும் வேகம் இருக்க கண்டு கலங்கிப் போனாள்.

ஏனோ அவ்விடத்தில் அவளால் மூச்சு விடவே முடியவில்லை. ஏதோ வந்து அடைப்பது போல உணர்ந்தாள்.

மனம் கொண்ட காதலனின் கனவை அவளது கையாலே கசக்கிப் போட வைக்கும் விதியை எண்ணி கண்கள் கலங்கிக் கொண்டு வர அதை அடக்கிக்கொண்டு அவ்விடம் விட்டு விலக,

“அவ்வளவு காதலா அவன் மேல...” என்று ஏளனம் பொங்க மகேந்திரன் கேட்டார்.

அது வரை ஒன்றும் நினைக்கதவள் சட்டென்று திரும்பி அவரை கூர்மையாக பார்த்தாள். அவளின் பார்வையில் லேசாக உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவளை அதே ஏளனத்துடன் பார்த்தார்.

“இந்த கேள்விக்கு பதில் சொல்லி தான் ஆகணுமா சார்?” என்று நிதானமாக அவள் கேட்டாள்.

“அவனை விட விவரம் தான்...” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவர் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல், “அது உன் விருப்பம்...” என்றார்.

“அப்போ சரி...” என்று விட்டு அவள் எந்த பதிலும் சொல்லாமல் அவ்விடத்தை விட்டு வெளியேறி விட்டாள். ஆனால் அடைத்துக் கொண்டு வந்த நெஞ்சை சரி செய்ய முடியாமல் தடுமாற கண்களில் இருந்து கண்ணீர் வந்த வண்ணமாகவே இருந்தது.

எதுவும் சொல்லாமல் போனவளின் மீது ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. நான் எண்ணியதை விட உனக்கு அழுத்தம் அதிகம் தான் என்று எண்ணியவர் இன்னும் சில திட்டங்களை தீட்டிக் கொண்டார்.

நிதானிக்க முடியாமல் மகேந்திரன் மீது அவ்வளவு கோவம் வந்தது. அங்கே இருந்தால் எங்கே அவரை மரியாதை இல்லாமல் பேசி விடுவமோ என்று பயந்து வேகமாய் வெளியே வந்து இருந்தாள். ஆனால் மனம் விரும்பிய காதலனின் எதிர்கால கனவை தன் கையாலே கசக்கி அவனது முதுகில் குத்த போகும் நிலையை எண்ணி எண்ணி வருந்தினாள்.

அவனுக்கு தெரியாமலே அவனுக்கு பின்னாடி அவனது எதிர்காலத்தை சூனியமாக்கி குழி தோண்டிக்கொண்டு இருக்கும் தகப்பனை அடையலாம் காண முடியாமல் இருக்கிறாரே இவர் என்று அவனுக்கும் சேர்த்து இவள் கலங்கினாள்.

அடைத்த தொண்டையை சரி செய்துக் கொண்டு ஷூட்டிங் நடந்த இடத்துக்கு ஒருவாறு வந்து சேர்ந்தாள். வந்தவளுக்கு மிருதனை பார்க்க பார்க்க இன்னும் கலங்கிக் கொண்டு வர அவன் மீதே அவளது கண்ணீர் துளிகள் விழுந்து அவனின் மன்னிப்பை யாசித்தது...

Loading spinner

Quote
Topic starter Posted : September 2, 2025 10:00 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top