Notifications
Clear all

அத்தியாயம் 45

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவன் தீண்டலில் உணர்ச்சி வராது என்று சொன்னவளுக்கு ஆழ்கடலின் ஆர்பரிப்பாய் உணர்வுகள் பொங்கி பிரவாகம் எடுக்க தொடங்கியது.

இதழ்களை கடித்து தன்னை அடக்கப் பார்த்தவளுக்கு, அவன் இன்னும் முரட்டுத்தனமாகவே தன்னை தீண்ட, ஒரு கட்டத்தில் அவனை தன் மீது இருந்து தள்ளி விட்டு, அவனின் வெற்று மார்பில் இவள் படர்ந்து, கற்றை மீசைக்கு அடியில் இருந்த அவனின் முரட்டு இதழ்களை மிக மிக மென்மையாக கவ்விக் கொண்டாள் தயாழினி.

அவளின் பூப்போன்ற இதழ் தீண்டலில் ஆணவனுக்குள் மின்சாரம் பாய, அவளின் மின்சார முத்தங்களை தனதாக்கிக் கொண்டு, தான் உணர்ந்த மின்சாரத்தை அவளுக்கு கொடுக்க, கணவனின் மின்சார முத்தங்களில் எப்பொழுதும் போல இப்பொழுதும் விரும்பியே கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பித்து முற்றிலும் தொலைந்துப் போனாள் பெண்ணவள். 

மிக மென்மையான தீண்டலில் பெண்ணவளை உருக்கி எடுத்தான். அவனின் ஒவ்வொரு தொடுகையிலும் தயாழினி நெகிழ்ந்து உருகி கரைந்து தன்னை மறந்துப் போனாள். எங்கோ பறந்துப் போகும் உணர்வை அவளுக்கு கொடுத்து தானும் உடன் சென்றான் தயாகரன்.

யார் அதிகம் கொடுத்தது, யார் அதிகம் எடுத்தது என்கிற கணக்கு அங்கே அர்த்தமில்லாமல் போனது. அவளுக்கு கொஞ்சமும் நோகாமல், மனம் சுணங்காமல் அவளின் தேவையை அறிந்து மனம் கோணாமல் தன் முரட்டு தனத்தை எல்லாம் கட்டுக்குள் கொண்டு வந்து, அவளை மிரட்சி அடைய விடாமல், பூப்போல அவளை கையாண்டான்.

வன்மையாளனுக்குள் இப்படி ஒரு மென்மையையும் பொறுமையையும் கொஞ்சமும் அவள் எதிர் பார்க்கவில்லை. அதிசயமாய் அவனை பிரம்மித்துப் பார்த்தாள். அவளின் பார்வையில் தன்னை தொலைத்தாவன் அவளின் விழிகளில் முத்தம் வைத்தான். அவனின் மீசை முடி உரசிச் சென்றதில் அவளுக்கு மொத்த தேகமும் சிலிர்த்து அடங்க, அவனின் நெஞ்சோடு தன்னை சேர்த்து இறுக்கிக் கொண்டாள்.

விழியோரம் நீரும் கசிந்தது. அதை துடைத்து விட்டவன்,

“இந்த நிமிடம் என்னை மட்டும் தான் யோசிக்கணும் நீ யாழி.. அதை தாண்டி நீ வேற எதையும் யோசிக்கக் கூடாது.. இந்த இரண்டு நாளும் உனக்கும் எனக்கும் மட்டுமே உரியது. அதில் கண்டதையும் யோசிச்சா நீ டவுனா பீல் பண்ண ஆரம்பிச்சுடுவ.. ஆட்டோமேட்டிக்கா நானும் டவுன் ஆகிடுவேன்.. சோ இப்போதைக்கு எதையும் யோசிக்காத..” என்றான்.

“என்னை யோசிக்க விடாம செய்யிறது உங்க வேலை” என்றாள் சலுகையாக.

“ம்ஹும்.. இந்த தயாகரனுக்கே சவாலா?” கேட்டவன் அடுத்த இரண்டு நாட்களும் அவளை வேறு எந்த சிந்தனையிலும் விழ விடாமல், தன்னை மட்டுமே உலகமாக பார்க்க வைத்தான்.

உண்மையாக அவளுக்கு அவனை தவிர வேறு எந்த சிந்தனையுமே இல்லை. முழு மூச்சாக அவனது ஊடலிலும், சீண்டலிலும், கூடலிலும் மனம் கரைந்துப் போனாள்.

குடிசையின் உள்ளே மிக மெல்லிய வெளிச்சம் மட்டுமே பரவி இருந்தது. அந்த வெளிச்சத்தில் தேவதையாக இருந்த தன் மனைவியை இரசனையுடன் பார்த்தவன் அவளின் கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து வெளியே விட்டான்.

அவன் அப்படி தாலியில் கை வைக்கவும் விக்கித்துப் போனாள்.

“தாலியை கேட்பானோ? அது தானே அவன் போட்ட கண்டிஷன்” உள்ளுக்குள் பயம் எழுந்தது. ஆனால் தயாகரன் அதை கேட்கவே இல்லை. அவன் கட்டிய தாலி அவளுக்கு குடுத்து இருக்கும் புது மெருகை இரசித்தவன் குனிந்து அவன் கட்டிய தாலிக்கு முத்தம் வேறு வைக்க, அவனது செயலில் வாயடைத்துப் போனாள்.

இந்த தயாகரன் முற்றிலும் வேறுபட்டு இருக்கிறான் என்று உணர்ந்தவள், அவனின் உச்சந்தலையில் முத்தம் வைத்தாள். அதில் அவனது இதழ்களில் இரகசிய புன்னகை வந்தது.

மெல்ல மெல்ல அவளின் உடைகளை கலைத்து அவளை மெல்ல ஆட்கொள்ள, பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.

 “ரிலாக்ஸ்டி...” என்றவன் மெல்ல மெல்ல அவளை இயல்புக்கு கொண்டு வந்து அவளை முழுமையாக ஆராய பார்க்க பட்டென்று அவனுக்கு முதுகு காட்டினாள். அவனை அவளால் அப்படி எதிர்க்கொல்லவே முடியவில்லை. வெட்கம் வந்து பெண்ணவளை கண் மூட வைத்தது. அவளின் வெற்று முதுகில் தன் இதழ்களை புதைத்தவன், மெல்ல மெல்ல அவளை திருப்பி அவளின் தேன் சிந்தும் இதழ்களை தனக்கு உணவாக எடுத்துக் கொண்டான்.

மிக மின்மையாக தன்னை முத்தமிடுபவனின் தீரத்தில் உருகிப் போனவள் அவனின் பிடரியை பற்று கோலாக பற்றிக் கொண்டாள்.

மெல்ல மெல்ல அவனின் உதடுகள் இடமாற விக்கித்துப் போனாள். விழிகளை அழுத்தமாக மூடிக் கொண்டவளுக்குள் பெரும் பிரளயம் எழுந்தது. மூச்சு தாறுமாறாக வாங்க, தன்னிடமிருந்து அவனை விலக்கப் போராடிய மனதை கண்டு கொள்ளாமல் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டது அவளின் கைகள்.

அவளின் தேகத்தில் ஓடிய அவனது கைகளையும் இதழ்களையும் தடுக்க முடியாமல் உயிருள்ள சிலையாய் நெகிழ்ந்து தவித்துப் போனாள்.

அவளின் நாணம் சுமந்த முகத்தை பார்த்து பார்த்தே அவன் தன் சேவையை தொடர, சிறகு முளைத்து காற்றில் பறக்கும் உணர்வு வந்தது பெண்ணவளுக்கு. எல்லை இல்லாத இன்பத்தை வாரிக் கொடுத்தவனின் இதழ்களில் தன் உயிரை கொடுத்து இதழ் முத்தம் பதித்தாள் தயாழினி.

முதல் கூடல் எவ்வளவுக்கு எவ்வளவு மிக மென்மையாக நடந்ததோ அடுத்த கூடல் அவனது விருப்பம் போல அதிரடியாக, வன்மையாக நடத்திக் கொண்டான். அதில் பெண்ணவளுக்கு அதிக நாணம் வந்து தொலைத்தது.

விடாமல் அவன் அவளை நாட, சோர்ந்துப் போனாலும் அவனுக்கு மறுக்கவில்லை. இரவு மூன்று மணி போல தான் இருவரும் தூங்கினார்கள். இருவருக்கும் உடல் அவ்வளவு களைத்துப் போனது. ஒருவரை ஒருவர் அணைத்தபடி அப்படி ஒரு தூக்கம்.

காலை நன்றாக விடிந்த பிறகே எழுந்தான் தயாகரன். அவனின் அணைப்பில் உலகை மறந்து உறங்கிக்கொண்டு இருந்த பெண்ணவளின் நெற்றியில் முத்தம் கொடுத்தவன்,

எழுந்து கடலுக்கு சென்றான். குளித்துவிட்டு அடுப்பை பற்ற வைக்க, மிக சோம்பலாய் விழிகளை சுழற்றினாள் தயாழினி.

எங்க இருக்கிறோம் என்று ஒன்றும் புரியவில்லை சில நிமிடங்களுக்கு. அதன் பிறகு தான் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர, கூடவே நேற்று நடந்த கூடல்கள் நினைவுக்கு வர, “ஐயோ” என்று முகத்தை மூடிக் கொண்டாள்.

போர்வை கூட எடுத்து வந்து இருந்தான். அதை தான் இருவரும் போர்த்தி இருந்தார்கள் இரவு. ஏனெனில் இந்த பக்கம் குளிர் அதிகம் இருக்கும் என்று.

அதே போல இரவெல்லாம் கொஞ்சம் குளிர் கூடுதல் தான். ஆனாலும் குடிசை வீடும், கீழே விரித்து இருந்த இலை தழைகளும், அதன் மீது காய்ந்த புற்களை பரப்பி இருந்ததால் குளிரை தாக்கு பிடிக்க முடிந்தது.

“இந்த சூப்பை கொஞ்சம் குடிடி..” என்று உள்ளே நுழைந்தான் தயாகரன்.

நழுவிய போர்வையை மார்போடு போட்டு இறுக்கிக் கொண்டவள்,

“குளிச்சுட்டு வந்திடுறனேங்க”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். இதை குடிச்சுட்டு பிறகு தெம்பா போய் குளி” என்றவன் அவளோடு தானும் அமர்ந்து சேர்ந்து குடிக்க வர, அவனது கையில் இருந்து வாங்கிக் கொண்டவள், அருகில் அமர்ந்தவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

“பெயினா இருக்காடி” ஆறுதலாக கேட்டவனின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டவள், இல்லை என்று தலையை ஆட்டினாள்.

“சுயர்”

“ம்ம்” என்று சொன்னவளுக்கு அவனின் தோளிலே இப்படியே வாழ்நாள் முழுக்க இருந்துவிட தோன்றியது. அவளின் தலையை வருடி விட்டவன் அவளை சுற்றி கைகளை போட்டுக் கொண்டு, தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“தேங்க்ஸ்” என்றாள்.

“நானும் அப்போ தேங்க்ஸ் சொல்லவா?” அழுத்தமாக கேட்டான்.

“வாபஸ்” என்றவள், அவனின் கைப்பிடியில் இருந்தே சூப்பை குடித்தவள்,

“இப்போ குளிக்க போகட்டா?” அவன் முகம் பார்த்து கேட்டாள். கூச்சத்தை மீறி அவனின் மீது அதித அன்பு அவளுக்கு பொங்கி பெருகியது. அதனால் வெட்கம் கூச்சம் எல்லாம் ஓடி போய் இருந்தது.

தன் விழிகளை பார்த்து கேட்டவளின் விழிகளில் இருந்த அளப்பரிய நேசம் அவனையும் வந்து சேர்ந்தது போல,

“இருடி நானும் வரேன்” என்று சொன்னவன், ரெடிமேடாக இருந்த உணவில் கொஞ்சம் சுடுதண்ணீர் மட்டும் போட்டு மூடி வைத்து விட்டு வர, அதற்குள் இவள் உடையை மாற்றி இருந்தாள்.

அவளின் சேலையோடு அவனின் உடைகளையும் எடுத்துக் கொண்டு வெளியே வர, அவனும் வர சரியாக இருந்தது. தூக்கிப் போட்ட கொண்டையயோடு வெறும் பாவாடையோடு நின்றவளை பார்த்து கண்னடித்தவன்,

“என்னடி காலையிலையே இப்படி சுண்டி இழுக்குற?” என்றவன் அவளை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டான்.

“ஐயோ என்ன பண்றீங்க” என்று அலறியவளை கண்டுக் கொள்ளாமல் அவளை தூக்கிக்கொண்டு வந்தவன், கடல் நீரில் அவளை போட்டு, அவளோடு இவனும் குதித்து ஜலதராங்கம் பாட ஆரம்பிக்க, நேரம் வெகு சுவாரஸ்யமாக கழிந்தது இருவருக்கும்.

துணிகளை காயப்போட்டவள் வேறு புடவைக்கு மாற, அவளை புடவை கட்ட விடாமல் அவளின் புடவையை போட்டு இழுத்துக் கொண்டே இருக்க, இவள் சிணுங்க, அவன் மிஞ்ச என இருவரின் பொழுதும் இடைவிடாமல் இணைந்தே இருந்தது.

ஒருவழியாக இருவரும் உடைமாற்றி வெளியே வந்து உணவை உண்ண, அவளை இழுத்துக் கொண்டு அந்த குன்றை சுற்றிப் பார்க்க கிளம்பினான்.

“பயமா இல்லையாங்க? இங்க ஏதாவது ஆபத்து விளைவிக்கக் கூடிய மிருகங்கள் இருந்தா என்ன பண்றது”

“இது ரொம்ப சின்ன குன்று. சோ பயம் தரும் விலங்குகள் எல்லாம் கிடையாதுடி” என்று அவளை அழைத்துச் சென்ற நேரம், மெல்லிய தூறல் போட ஆரம்பிக்க, அவர்களின் நிலை இன்னும் சுவாரஸ்யம் ஆகியது.

“கிளைமேட் ரொம்ப சூப்பரா இருக்கு” என்று பன்னீராய் தூவும் மழையில் அவள் இரு கரம் நீட்டி நனைய ஆரம்பிக்க, அவளோடு அவனும் இணைந்துக் கொண்டான். அவளை முன்னுக்கு நிறுத்தி அவளை இடையோடு அணைத்து பின்னாடி நின்றுக் கொண்டவனின் உலகம் முதல் முறை வண்ணங்களால் நிரம்பிப் போனது.

இதற்கு முன்பு வரை இருந்த கட்டு பெட்டி, கெடுபிடி என எதுவும் இல்லாமல் தனக்கென வாழ ஆரம்பித்தான் அவளுடன். மழையோடு சேர்ந்த மண் போல இருவரும் பின்னி பிணைந்து இருந்தார்கள்.

அங்கிருக்கும் சில பழங்களை அவன் பறித்துக் கொடுக்க, இருவரும் சேர்ந்து உண்டார்கள். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே இருந்த கோவம், வெறுப்பு, பழிவாங்கும் படலம், என எந்த உணர்வும் இல்லாமல் அன்பு மட்டுமே நிரம்பி இருந்தது. அவனிடம் தனக்கான காதலை தேடியவள் அது கிடைக்காமல் போனது. ஆனால் அவளிடம் அவனுக்கு உண்டான காதல் கொட்டிக் கிடக்கிறதே. அதோடு அவளிடம் அவன் காட்டும் அன்பு அது ஒன்று போதுமே, அவனை நேசிக்க..

உயிரை கொடுத்து அவனை நேசிக்கத் தொடங்கினாள் பெண்ணவள். அந்த நாள் இரவும் தொடங்க, ஏனோ அவளிடம் ஒரு அமைதி. நாளைக்கு விடிந்தாள் இந்த ஏகாந்தமும் அமைதியும் அன்பும் கிடைக்காதே.. ஏன் இதோ இப்பொழுது தன்னவனின் நெஞ்சில் சாய்ந்து இருக்கும் தருணம் கூட இனி கிடைக்காதே.. எட்டா கனியாகி விடுமே... எண்ணியவள் அவனை விட்டு நீங்கவே இல்லை.

அவளின் உணர்வுகளை புரிந்தவனாய் தன் நெஞ்சோடு அவளை அணைத்துக் கொண்டான். அந்த இரவு பொழுதும் வெகு வேகமாக ஓடிப்போய் விடியலை கொண்டு வர,

தூக்கத்தில் இருந்து எழுந்தாள். அருகில் நேற்றைக்கு போலவே அவன் இல்லை. அதுக்குள்ள எழுந்துட்டாரா? கேட்டுக் கொண்டே எழுந்தவள், முடியை உதறி கொண்டை போட்டு கழுத்தை தடவ, அங்கே அவளின் கணவன் கட்டிய தாலி இல்லாமல் போக, பதறிப்போய் அங்கும் இங்கும் தேட, எங்கும் தென்படவே இல்லை.

அடித்து பிடித்துக் கொண்டு வெளியே வர, அங்கு அவளின்  கணவனுக்கு பதிலாக அவனின் தம்பிகள் இருவரும் இருந்தார்கள் அவளை அழைத்துக் கொண்டு போக.

Loading spinner

Quote
Topic starter Posted : September 2, 2025 9:53 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top