Notifications
Clear all

அத்தியாயம் 44

 
Admin
(@ramya-devi)
Member Admin

“எ... என்ன இதெல்லாம்?” என்று அவள் பெரிதும் தடுமாறிப் போனாள். அவன் செய்து இருந்த ஏற்பாடு அப்படி இருந்தது.

“என்ன?” என்று அவனும் அவளை போல கேட்க, சன்னமாக முறைத்தாள் அவனை.

“என்னடி முறைப்பு எல்லாம் பலமா இருக்கு?” கேட்டவன் அவளை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு, அவளின் காதோரம் “நீ கேட்டியே உன்னோட முதல் அனுபவம் என்னோட இருக்கணும்னு.. அதுக்கு தான்” என்றான்.

திகைத்துப் போனாள்.

“என்னடி மிரண்டு போற.. நீ கேட்டதுக்கு தான் இங்க வந்து இருக்கோம். எனக்கும் இது தான் முதல் அனுபவம். அது தான் இவ்வளவு ஏற்பாடும்” என்றவன், அவளை முன்னாடி வழிநடத்திச் சென்றான்.

அவனின் வழியில் சென்றவளுக்கு அடிவயிற்றில் ஆயிரம் பிரளையம் எழுந்தது. முதுகு தண்டில் பல கோடி மின்னல்கள் வெட்டி சென்றது.

“உன் கூட இருக்கிற முதல் அனுபவம் என்னால மறக்க முடியாத அளவுக்கு இருக்கணும்னு தான் இவ்வளவு ஏற்பாடு” என்றான் தயாகரன்.

அதில் உச்சு கொட்டியவள்,

“முதல் அனுபவம் உங்க கூட கேட்டனே தவிர அது மறக்க முடியாத அளவுக்கு எல்லாம் கோரிக்கை வைக்கல” என்றாள் கடுப்பாக.

“என்னடி திமிரா?”

“இதுல திமிரு எங்க இருந்து வந்தது.. பத்து நிமிடம் டேஷுக்கு இவ்வளவு ஏற்பாடு எல்லாம் தேவையான்னு தான் கேட்கிறேன்” என்றாள்.

“என்னடி கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாம சொல்ற.. நீ என்ன மரமா?”

“ஆமா இதுல என்ன உணர்ச்சி வரப்போகுது பெருசா.. விளக்கை அமர்த்தினா விளக்கமாறும் டேசும் ஒன்னு தானே.. இதுல உணர்வுகள் வேற கொப்பளிக்கனுமாக்கும்” என்றவளை கடுப்புடன் பார்த்தவன்,

“ரைட்டு.. நீ மரக்கட்டை தான்.. ஒத்துக்குறேன்” என்றவன் மேற்கொண்டு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளை அதன் பிறகு சட்டையும் செய்யவில்லை.

அவனின் செயலில் கோவம் வந்திடுச்சோ சாருக்கு என்று எண்ணினாலும் அவனை சட்டை செய்யவில்லை. இவனும் அவளை கண்டு கொள்ளாமல் தான் போட்டு இருந்த உடைகளை எல்லாம் கலைந்து விட்டு வெறும் ஷாட்ஷோடு கடலுக்குள் நீந்த போய் விட்டான்.

சிறிது நேரம் அங்கும் இங்குமாய் உலாத்தியவளுக்கு அவனை காணாமல் மனம் தேட ஆரம்பிக்க, அவன் சென்ற பாதையில் இவளும் சென்றாள்.

அவனிடம் அப்படி பேசியதை எண்ணி இவளுக்கு கொஞ்சம் வருத்தம் தான். தான் கேட்கும் போதெல்லாம் அவாயிட் பண்ணி விட்டு இன்றைக்கு இந்த குன்றில் அழகான சிறு குடிசை போட்டு இரு தென்னை மரங்களுக்கு இடையில் கட்டிய ஊஞ்சல் என எல்லாமே புதிதாக ஏற்பாடு ஆகி இருந்ததை பறை சாற்ற மனம் கணத்துப் போனாள்.

ஏனெனில் குடிசை இருந்த ஈர மணல் இன்னும் காயாமல் அப்படியே இருந்தது. அதை வைத்தே இவள் கண்டு கொண்டாள். இன்றைக்கு தான் இதெல்லாம் ஏற்பாடு செய்து இருக்கிறான் என்று.

சுல்லென்ற கோவம் வந்தது அவளையும் மீறி. இத்தனை நாட்கள் தன்னை அலைக்கழித்து படாத பாடு எல்லாம் படுத்தி எடுத்தவனை ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவனோடு அவளால் எப்படி அவ்வளவு இயல்பாக கூடி குலாவிட இயலும்.

அவளை பேச வைத்தது அவள் கொண்ட காயங்கள். ஆனாலும் அவனின் மீது இருந்த காதல் அவனை தேட வைக்க, அவனை தேடி போனாள்.

கடலில் நீரோடு நீராக அவனும் விளையாட, கரையில் அமர்ந்த படி அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அலைகள் பெரிதாக வரவில்லை. சன்னமான அலைகள் மட்டும் தான் எழுந்தது. கடல் நீர் அவ்வளவு தெளிவாக இருந்தது.

மண் அலையோடு எழாமல் கீழேயே படிந்து இருக்க, நீரில் விளையாட இன்னுமே நன்றாக இருந்தது. கடலை பார்த்தவளுக்கு தானும் சென்று நீரில் நீந்த ஆசை வர, முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டவள் கணவன் நீரில் நீந்தும் இடத்துக்கு வந்தாள்.

வந்தவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அவன் பாட்டுக்க நீச்சல் அடிக்க, அவனுக்கு அருகில் தொப்பென்று குதித்து இவளும் நீச்சல் அடிக்க, அவன் திரும்பவே இல்லை இவள் புறம். அதில் கடுப்பு வந்தாலும் அவனை விட்டு நீங்கவே இல்லை. அவனுக்கு அருகிலே நீந்தினாள். நேரம் தான் ஆனதே தவிர அவன் அசைவேனா என்று இருக்க,

“இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே இருக்க போறீங்க?” என்று கேட்டாள்.

அவன் வாயையே திறக்கவில்லை. ஆரம்ப கோவம் வடிந்து போய் இருக்க, தனக்காக அவன் பார்த்து பார்த்து இவ்வளவு ஏற்பாடு செய்து இருப்பதில் முற்றிலும் நெகிழ்ந்து போய் இருந்தாள். பட்டென்று அவன் மீது விழுந்தவள், அவனது பிடரியில் கைக்கொடுத்து தன் முகத்துக்கு நேராக அவனை பிடித்து இழுத்தவள்,

“அவாயிட் பண்ணாதீங்க” என்றாள் லேசாக குரல் கமறியது.

“நான் தொட்டா தான் உங்களுக்கு எந்த உணர்வும் வராதே மேடம்.. மரம் மாதிரி இல்லை நிற்பீங்க” என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தவள்,

“என்னைக்கு அப்படி மரம் மாதிரி நின்று இருக்கேன்.. ஏதோ கோவத்துல பேசிட்டேன்.. நீங்க செய்யாத டார்ச்சர்னு ஏதாவது இருக்கா. அத்தனையையும் பொறுத்துக்கிட்டு, தாங்கிக்கிட்டு உங்க கிட்ட நான் மயங்கி நிக்கல.. நீங்க மட்டும் ஒரு சொல்லை கூட பொறுத்துக்க மாட்டிக்கிறீங்க” என்றவளின் விழிகள் கலங்கி விட,

“எனக்கு இப்போ மூட் இல்ல” என்று அவளின் கையை தன் மீது இருந்து எடுத்து விட்டவன், கடலில் இருந்து எழுந்துக் கொண்டான்.

வேகமாக குடிசைக்கு உள்ளே நுழைந்தவன் ஈர உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்து சுள்ளிகளை பொருக்கி நெருப்பை மூட்டியவன், வானத்தை பார்த்தான். கொஞ்சம் கொஞ்சமாக இருள ஆரம்பித்தது.

ரெடிமேடாக எடுத்து வந்த உணவுகளை பிரித்து வைத்தவன் கொண்டு வந்த பிளாஸ்க்கில் இருந்து சுடுநீரை எடுத்து இரண்டு டின் நூடில்சில் போட்டு மூடி வைத்து விட்டு, சூப் பவுடர் இருந்த இரு கப்பிலும் அதே போல சுடுநீரை ஊற்றி வைத்து மூடி வைத்தவன், பிரட்டை எடுத்து பட்டர் தடவி நெருப்பில் வாட்டி இலையில் வைத்தவன், சாப்பிட ஆரம்பிக்க,

தயாழினியும் வந்தாள். அவன் செய்து இருந்த உணவை ஒரு பார்வை பார்த்து விட்டு குடிசைக்குள் நுழைந்துக் கொண்டவள், அவன் எடுத்து வந்த பையில் அவளின் மாற்று உடை இருக்க எடுத்து அணிந்துக் கொண்டாள். மூன்றே செட் தான். போட்டு இருந்த உடையோடு. அதனால் மீண்டும் கடலுக்கு சென்று தான் அணிந்து இருந்த உடைகளோடு, அவன் அவிழ்த்து போட்டு இருந்த உடைகளையும் எடுத்துக் கொண்டு துவைத்து நனைத்து எடுத்துக் கொண்டு வந்தவள், எங்கே காயப்போட என்று பார்த்தாள்.

அவள் துணிகளை எடுத்துப் போகவுமே இங்கு காட்டு கொடிகளை வைத்து மரங்களுக்கு இடையில் கயிறு போல கட்டி விட்டான்.

கொடியை வளைத்து கட்டி இருக்க, அதில் போய் துணிகளை காயப் போட்டாள். எப்படியும் அடிக்கிற காத்துக்கு துணிகளை அப்படியே போட்டால் பறந்து விடும் என்று சுற்றி முற்றி பார்க்க,

“கிளிப்” என்றான். சின்ன சின்னதாய் ஒரு டப்பாவில் இருந்தது. அதை எடுத்து குத்தியவள் குடிசைக்குள் நுழைய,

“சாப்பிட வா” என்றான்.

“இல்ல பசிக்கல” என்று விட்டு அங்கு எல்லா இடங்களையும் விட சற்றே மேடாக மண் போட்டு பரவலாக சமதளமாக திண்ணை போல போட்டு, அதில் இலை தழைகளைக் கொண்டு படுக்கை விரித்து இருந்தது. அதன் மீது தன் இன்னொரு புடவையை எடுத்து விரித்து விட்டு படுத்துக் கொண்டாள்.

அவள் சாப்பிடாமல் போக, செய்து வைத்து இருந்த உணவுகளை எல்லாம் எடுத்து உள்ளே வைத்தவள் சின்ன சோலார் லைட்டை போட்டு விட்டு, இருவரின் போனுக்கும் சார்ஜ் போட்டு விட்டு வெளியே எரிந்துக் கொண்டு இருந்த சுள்ளிகளையும் அனைத்து விட்டு உள்ளே வந்தான் தயாகரன்.

அவள் ஒருக்கழித்து படுத்து இருப்பதை பார்த்து இவனும் எரிந்துக் கொண்டு இருந்த சின்ன விளக்கையும் அணைத்து விட்டு அவளிடம் வந்து படுத்துக் கொண்டான்.

அவன் தன் அருகே வரும் அரவம் கேட்டும் அவள் திரும்பவே இல்லை. வந்தவன் அவளை நாடாமல் அவளை உரசாமல் தள்ளியே படுத்துக் கொண்டான்.

விழிகளின் ஓரம் இவளுக்கு நீர் கசிந்தது. அவன் தொடுகைக்கு ஏங்கினாளா? அல்லது அவனது இந்த பாராமுகம் கண்டு ஏங்கினாளா? அல்லது தன்னை மேலும் மேலும் கெஞ்ச வைக்கிறானே என்று அழுகிறாளா? இனி அவனுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் போவதை எண்ணி அழுகிறாளா? என்று அவளுக்கே ஒன்றும் தெரியவில்லை.

லேசாக விசும்பலுடன் அவன் புறம் திரும்பியவள் அவன் அசையாமல் படுத்து இருப்பதை கண்டு பத்திக் கொண்டு வர, வேகமாய் அவன் மீது விழுந்து வைத்தாள்.

“ஏன்டா என்னை இப்படி போட்டு பாடா படுத்துற? கொஞ்சம் கொஞ்சமா என்னை இப்படி சாக வைக்கிறதுக்கு ஒரேடியா சாகடிச்சுடு...” என்று கூறி பட்டென்று அவனின் நெஞ்சிலே அடித்து தன் கோவத்தை போக்கிக் கொள்ள பார்க்க, அவளின் இரு கையையும் பற்றி அவளின் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டவன், அடுத்த நிமிடம் ஆவேசமாக அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.

“நான் தொட்டா உணர்ச்சியே வரலன்னு இனி சொல்லுவியாடி” என்று கேட்டு கேட்டே அவளை சித்ரவதை செய்ய ஆரம்பித்தான் தயாகரன்.

அவனது அதிரடியிலும் ஆர்பாட்டத்திலும் கொஞ்சம் பயந்துப் போனவள்,

“ப்ளீஸ் மெதுவா” என்று கெஞ்ச, எங்கே அவளின் பேச்சை எல்லாம் அவன் கேட்டான். பூனைக்கு ஒரே நோக்கம் என்பது விட்டத்துல பாஞ்ச கணக்கா அவள் மீது பிரண்டு உழுது வைத்தான்.

“வேணாம்” என்று அவள் கெஞ்ச, கெஞ்ச அவளின் இதழ்களை உக்கிரமாக கவ்விக் கொண்டான். அவனின் ஆரம்ப கோவம் எல்லாம் அவள் மீது மொத்தமாக காட்ட அவளின் பொன்மேனி அங்கும் இங்குமாய் ஊமை காயங்கள் கண்டது.

உடைகளுக்கு மேலே அவளை வன்மையாக தீண்ட, பெரிதும் தவித்துப் போனாள். அவனின் முரட்டுத்தனமும் கோவமும் அவளை பெரிதாக சுழற்றி எடுத்தது.

அவன் தீண்டலில் உணர்ச்சி வராது என்று சொன்னவளுக்கு ஆழ்கடலின் ஆர்பரிப்பாய் உணர்வுகள் பொங்கி பிரவாகம் எடுக்க தொடங்கியது.

இதழ்களை கடித்து தன்னை அடக்கப் பார்த்தவளுக்கு, அவன் இன்னும் முரட்டுத்தனமாகவே தன்னை தீண்ட, ஒரு கட்டத்தில் அவனை தன் மீது இருந்து தள்ளி விட்டு, அவனின் வெற்று மார்பில் இவள் படர்ந்து, கற்றை மீசைக்கு அடியில் இருந்த அவனின் முரட்டு இதழ்களை மிக மிக மென்மையாக கவ்விக் கொண்டாள் தயாழினி.

அவளின் பூப்போன்ற இதழ் தீண்டலில் ஆணவனுக்குள் மின்சாரம் பாய, அவளின் மின்சார முத்தங்களை தனதாக்கிக் கொண்டு, தான் உணர்ந்த மின்சாரத்தை அவளுக்கு கொடுக்க, கணவனின் மின்சார முத்தங்களில் எப்பொழுதும் போல இப்பொழுதும் விரும்பியே கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பித்து முற்றிலும் தொலைந்துப் போனாள் பெண்ணவள்.  

Loading spinner

Quote
Topic starter Posted : September 1, 2025 10:03 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top