வெட்ட வெளியில் அங்கும் இங்கும் புல்தரையில் மட்டமாகவே தரையோடு தரையாக பதித்து இருந்த விளக்குகள் ஒளியை உமிழ்ந்துக் கொண்டு இருக்க அதற்கு தோதாய் மழை வேறு லேசாக தூர அந்த இதமான கால சூழலை அனைத்து மனங்களும் வசிகரித்துக் கொண்டது.
மிருதனின் இறுகிய பிடி பெண்ணவளை உணர்வு குவியலுக்குள் தள்ளி விட, அவனது நெருக்கமும் மூச்சுக் காற்றும் அவளை பெரிதாக தடுமாற செய்தது. போதாதற்கு அவனது மீசை முடி கூட அவளை அவ்வப்பொழுது உரசி விட்டு செல்ல மூச்சை அடைக்காதது ஒன்று தான் குறை.
போதாதற்கு “பதில் சொல்லு...” என்று பார்வையாலே கட்டளை இட்டான் அவளிடம்.
உன்னை பார்த்தால் தானே என்னிடம் பதிலை பிடுங்குவாய்... போ பார்க்கமாட்டேன் என்று அவனிடம் முரண்டிய மிரு அடுத்து அவன் செய்த செயலில் பொதுவெளி என்று தன்னை தானே அடக்கிக்கொண்டு அவனுடன் சிறிது நேரம் நடனமாடினாள். அதன் பிறகு நடனத்தின் உச்சமாய் அவன் செய்த ஒரு செயல் அவனுடன் ஒன்ற முடியாமல் விட்டு விலகியவளின் கண்களில் கண்ணீர் நிறைந்துப் போனது..!
அதன் பிறகு உணவு உண்ணும் நேரம் நெருங்கி வர, அனைவரும் உண்டுவிட்டு பாடல் நேரத்தை ஆரம்பிக்க சொல்ல பாட ஆரம்பித்தார்கள் பாடகர்கள். எல்லாமே எயிடிஸ் சாங்க்ஸ் தான்...!
மனதை கொள்ளை கொள்ளும் பாடல்களை அனைவரும் தேர்ந்தேடுத்து பாட ஆரம்பிக்க மிருவாள் அவ்விடத்தை விட்டு அசைய முடியாமல் போனது. அனைவரும் அவளை பிடித்து வைத்துக் கொள்ள வேறு வழியில்லாமல் ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.
அவளின் அருகில் இரு பக்கமும் அரணாக சுதிரும் சக்தியும் அமர்ந்துக் கொண்டார்கள். ஏனோ மிருதனின் பார்வை சரியில்லை என்று உன்ர்ந்தார்களோ என்னவோ. அந்த நடனத்துக்கு பிறகு ஓடிப் போய் தனியாக நின்றவளிடம் இவர்களும் போய் நின்றுக் கொண்டார்கள்.
அதன் பிறகு அவளை விட்டு இருவரும் அசையவே இல்லை. அதற்கு முக்கிய காரணம் அவளின் விழிகளில் தேங்கி இருந்த கண்ணீர்... அவளை அழ வைத்து தான் இந்த காதல் கைக்கூட வேண்டுமா என்ற எண்ணம் எழ அவளை விட்டு இம்மி கூட நகரவில்லை.
அதை ஒரு ஏளன புன்னகையுடன் பார்த்த மிருதன் எதற்காகவும் அலட்டிக் கொள்ளாமல் தனி இருக்கையில் அவர்களை விட்டு சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டான்.
இப்பொழுதும் அங்கு இருக்க விருப்பம் இல்லை தான். ஆனால் இப்பொழுது சேனலில் ஒளிபரப்புக்காக சில கிளிப்ஸ் எடுக்க வேண்டி இருப்பதால் அங்கே அமர்ந்து இருந்தான். இல்லை என்றால் மூவரும் செய்யும் அழிச்சாட்டியத்துக்கு எப்பவோ கிளம்பி போய் இருப்பான் மிருதஞ்சயன்.
பாடல் நேரம் மிக அழகாக நடை பெற்றுக் கொண்டு இருந்தது.!
அங்கும் இங்கும் சுற்றி மைக் மிருதனிடம் வந்து நின்றது. பெரிதாக அவன் மறுக்கவில்லை. வாங்கியவன் அப்படியே தலையை சாய்த்து அருகில் பாதுகாப்பு கவசத்தோடு அமர்ந்து இருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன்,
“மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்..
முதல் நீ, முடிவும் நீ
அலர் நீ, அகிலம் நீ
தொலைதூரம் சென்றாலும்
தோடு வானம் என்றாலும்
நீ விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்...!
இதழ் எனும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே கனவாகி கலைந்தாய்...
பிடிவாதம் பிடி, சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம்
மறுவார்த்தை பேசாதே...
மடி மீது நீ தூங்கிடு...” என்று அவன் பாடியபடி மிருவை அழுத்தமாக பார்த்தான்.
அந்த வார்த்தைகளில் அவனை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவளின் விழிகளில் இன்னும் நீர் நிறைந்து இருந்தது...
“இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு..
மயில் தொகை போல விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே..
பிரிந்தாலும் என் அன்பு ஒரு போதும் பொய்யில்லையே...!
மறுவார்த்தை பேசாதே..
மடி மீது நீ தூங்கிடு..!”
அவன் பாடி முடிக்க, “ம்கும் இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை... அழ வச்சிட்டு அழக்கூடாதுன்னு பாட்டு வேற பாடுறான்... இவனை என்ன தான்டா செய்யிறது” என்று சக்தி பல்லைக் கடிக்க,
“நீ செஞ்சாலும் அவன் எதுக்கும் அசைய மாட்டான்டா. அவன் என்ன நினைக்கிறானோ அதை தான் செய்வான்...” என்று மிருதனை பார்த்து முறைத்தான் சுதிர்.
மிருவுக்கு அவன் பாடிய பாடலில் உள்ள கருத்து போய் சேர்ந்ததோ இல்லையோ ஆனால் அவனின் முகமும் குரலும் எதையோ உணர்த்த விழிகளை அழுந்த துடைத்துக் கொண்டாள்.
அதுவரை எந்த சலசலப்பும் இல்லாத இந்த அணியில் முதல் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தான் மிருதன். மிருதனின் ஒழுக்கத்தில் எந்த குறையும் சொல்லாத அளவுக்கு தான் எப்பொழுதும் இருப்பான். ஆனால் இங்கு வந்த உடனே அவனது கையும் பார்வையும் மிருவிடம் எல்லை மீறியதை அவளுக்கு உணர்த்தினான்.
அதோடு இன்றைக்கு ஆடிய நடனம் மூலம் அங்கு சுற்றி இருந்த அவர்கள் டீம் முழுவதற்கும் தெரிவித்து விட்டான்.
நடனம் வெகு சிறப்பாக போய் கொண்டு இருந்தது... அவர்களோடு மற்றவர்களும் பிடித்தவர்களோடு இணை சேர்ந்து ஆட ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் எல்லோரும் முடியாமல் விலகி போக, மிருதன் மட்டும் ஆடிக்கொண்டே இருந்தான் மிருதியோடு.
அவனின் காதோரம் “ப்ளீஸ் கால் வலிக்கிது விடுங்க... போதும்” என்று சொல்ல அவளின் விழிகளை கூர்ந்து ஒரு கணம் பார்த்தவன் அடுத்த நொடி அவளை ஒரு சுற்று சுற்றி தனக்கு நேராக கொண்டு வந்து அவளின் இடையை இறுக்கிப் பிடித்தவன், “லைட்ஸ் ஆப்” என்று சொன்னான்.
அவன் சொன்ன அடுத்த கணம் சுற்றி இருந்த அத்தனை விளக்குகளும் அணைந்து காரிருள் சூழ்ந்துக் கொண்டது...
மிருதன் தன் இதழ்களை தீண்டுவானோ என்று பயந்து இருந்தவள், நேரம் ஆனதே தவிர அவனது இதழ்கள் அவளது இதழ்களை கொஞ்சம் கூட தீண்டவே இல்லை. ஆனால் சுற்றி இருந்தவர்களுக்கு அதை அனுமானிக்க முடியாதே...!
லைட்ஸ் ஆப் பண்ணுவதே டீப் கிஸ் பண்ணுவதர்க்காக தானே... அதனால் அதை செய்யாமல் சுற்றி இருப்பவர்களுக்கு அது நடந்தது போல ஒரு பிம்பத்தை கொடுத்தவன், அவளின் இடையை நன்கு அழுத்தி பிடித்து தன்னோடு இன்னும் நெருக்கிக் கொண்டவன்,
“என்னோட ஆசைக்கு ஒத்துப் போயிடு பேபி... இந்த ரெட் சேரில ரொம்ப டெம்ப்ட் பண்ற...” என்று அவளின் காதில் தன் மீசை உரச சொன்னவன் பட்டென்று அவளிடம் இருந்து விலகிக் கொண்டான். அந்த நேரம் சரியாக விளக்கு ஒளிர, அனைவரும் எதற்கு கரம் தட்டுகிறார்கள் என்று தெரியாமல் கை தட்ட ஆரம்பித்தார்கள்.
மிருதனின் இந்த செயலை எதிர் பார்க்கதவளுக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும் பெரும் அவமானமாக தெரிய விழிகளில் கண்ணீர் ஊற்று சுரக்க ஆரம்பித்தது. அதை அத்தனை பேரின் முன்னிலும் காண்பிக்க இயலாமல் விருட்டென்று அவ்விடத்தை விட்டு அவள் விலகி ஓட, அதற்கும் சுற்றி இருந்த கும்பல் “மேடம்க்கு வெட்கத்தை பாரேன்...” என்று அதற்கும் ஆராவாரம் செய்ய முற்றும் முழுதாக மடிந்துப் போனாள் மிருதி.
மிருதான் தானா இவன் என்று சுதிரும் சக்தியும் திகைத்துப் போனார்கள். நம்ம கூட தானே இருந்தான். எப்போ எலக்ட்ரீஷியன் கிட்ட பேசி இந்த ஏற்பாடு எல்லாம் செய்து இருப்பான் என்று தலையை உடைத்துக் கொண்டார்கள்.
ஆனால் அதை விட மிருவின் மனநிலை முக்கியம் என்பதால் அவளிடம் சென்று அமர்ந்துக் கொண்டார்கள். அவளை எந்த சமாதானமும் செய்ய முடியவில்லை. என்ன வார்த்தை கொண்டு அவளை சமாதனம் செய்வது. அதோடு மிருதனின் செயலை அவர்களாலே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தோழியை விட அடுத்த படியில் தான் முறுதன் மிருவை வைத்து இருக்கிறான் என்று தெரியும். ஆனால் இப்படி ஒரே நாளில் எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாய் போட்டு உடைப்பான் என்று அறிந்திருக்கவில்லை.
அவனிடம் கேள்வி கேட்கவும் முடியாது. அப்படியே கேட்டாலும் வெறும் முறைப்பு மட்டும் தான் பதிலாய் வரும். எனவே அவனிடம் கேட்பது வீண் என்று இருவரும் அமைதியாக இருந்து விட்டார்கள்.
மிருதியிடம் மைக் வர, அவள் இருக்கும் நிலையில் சுத்தமாக பாட முடியாது என்று அறிந்து, சுதிர் அதை வாங்கிக் கொண்டான்.
அதன் பிறகு சுதிரும் சக்தியும் நண்பன் பட பாடலை பாடி அசத்தினார்கள். பொழுது நகர்ந்து நடுஇரவை கொண்டு வர அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அனைவரும் அவரவர் இடங்களுக்கு சென்றார்கள். அடுத்த நாள் காலையில் உதகையிலிருந்து கிளம்ப வேண்டும். அந்த எண்ணமே அனைவருக்கும் ஒரு சுனக்கத்தை கொடுத்தாலும் இயல்பு வாழ்க்கைக்குள் நுழைய வேண்டும் என்கிற கடப்பாடு இருக்க அதை எதிர் நோக்க சென்றார்கள்.
இந்த பக்கம் கெஸ்ட்ஹவுஸ்க்கு வந்த நால்வரும் ஒவ்வொரு அறையில் போய் நுழைந்துக் கொள்ள, மிருதிக்கு முதல் நாள் போல தூக்கமே வரவில்லை.
எதை எதிர்நோக்கி மிருதன் தன்னிடம் இப்படி நடந்துக் கொள்கிறான் என்றே புரியவில்லை. ஏன் திடிர்னு இவரிடம் இவ்வளவு மாற்றம்... முதல் எல்லாம் பேசவே மாட்டான். பேசினாலும் கடுகடு என்று எரிந்து விழுவான். ஆனால் இன்று முற்றிலும் வேறாய்... தலையை வலித்துக் கொண்டு வந்தது...!
அறைக்குள் அடைந்து கிடப்பது என்னவோ மூச்சை அடைப்பது போல இருக்க கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள். வெளியே வந்தவளின் கண்களில் விழுந்தான் மிருதன். அதுவும் ஜின்னோடு...
பார்த்த உடனே கோவம் கோவமாய் வந்தது... ஆனால் அதை அவனிடம் காண்பிக்க கூட அவனை நெருங்க வேண்டுமே என்று எண்ணி வேறொரு வழியில் சென்று வெளியே போய் நின்றுக் கொண்டாள்.
கொட்டும் மழையை வெறித்துக் கொண்டு அதன் சாரலில் தன் மனக்கொதிப்பை அடக்கிக்கொள்ள முயன்று தவித்து தடுமாறினாள் மிருதி. கண்களில் ஏனோ கண்ணீரின் பெருக்கம். சாய்ந்துக்கொள்ள தாய் மடி தேடியது மனம். ஆனால் தற்போது கிட்டாதே... என்று சுவரோரம் சாய்ந்துக் கொண்டாள்.
“ப்ச்... இந்த ஜின் கூட உன்னளவு போதையை ஏற்றவில்லை...” என்று காதோரம் ஒரு குரல் வர இன்னும் சுவரோடு தன் முதுகு அழுந்த சாய்ந்துக் கொண்டாள். கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டாள்.
அவனை பார்க்கவே முடியாது என்று அவளின் மனம் மத்தளம் கொட்ட இறுக கவ்விக் கொண்டது மேலிமையும் கீழிமையும்.
தொண்டை குழியில் உருவமில்லா ஒரு உருளை அங்கும் இங்கும் நகர்ந்து போக அவளையும் அறியாமல் அவளுள் ஒரு சிறு நடுக்கம் தோன்றியது.
போதாதற்கு மழை வேறு கொட்டி தீர்த்தது... அவளை இன்னும் நெருங்கி நின்றான். எங்கே அவன் மூச்சுக் காற்று தன் மீது பட்டு விடுமோ என்று தனக்குள் தன்னை குறுக்கிக் கொண்டாள்.
அவளின் ஒவ்வொரு செயலையும் அவதனித்த படி நின்றிருந்தவனின் விழிகளில் அப்பட்டமாய் சிவந்து போய் இருந்தது.
“உன்னை சுவை பார்க்கட்டுமா?” என்று அவன் கேட்க, மிருதி பதறிப் போய் அவனை ஏறெடுத்துப் பார்த்தாள் திகைத்து...