உதகையின் பெரிய சிகரம்.. பார் போற்றும் உச்சிமலை... பாறையால் நிறைந்து இருக்க, பாதி வழியிலியே மறிக்கப்பட்டு திடகாத்திரமான வேலி எதுவும் இல்லாமல் சும்மாக இரண்டு அடுக்கு இரும்பு வேலி போடப்பட்டு இருந்த இடத்தில் மேகங்கள் தவழ்ந்து போக அதை இரசித்த படி நின்றிருந்தார்கள் அங்கும் இங்குமாய் சிலர்..
மெல்லிய தூறல் அந்த நேரம் போட ஆரம்பிக்க நின்றிருந்த சிலரும் அவ்விடம் விட்டு ஓட ஆரம்பித்தார்கள். இவர்கள் நால்வர் மட்டும் அவ்விடத்தை விட்டு கொஞ்சம் கூட அசையவில்லை. தங்களை தொட்டு தடவி விலகி போகும் மேகக் கூட்டத்தை கைகளில் அள்ளிக் கொள்ள பரபரத்தாள் மிரு...
அதென்னவோ எவ்வளவு இடங்களை பார்த்து இரசித்து வந்தாலும் இந்த தொட்டபெட்டா மலைச்சிகரமும் இந்த மேகக் கூட்டங்களும் அவளுள் என்றும் சொல்லொண்ணாத புது உணர்வுகளை பரப்பிக் கொண்டே இருக்கிறது ஒவ்வொரு முறையும்.
இதோடு நிறைய முறை வந்து இருந்திறாள் ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக அனுபவிப்பது போலவே ஒரு உணர்வு... மழையும் சாரலும் விடாது வீசியது என்றாலும் மேகங்களின் அணிவகுப்பு மட்டும் ஓயவே இல்லை... பள்ளத்தாக்கை எட்டி பார்த்தால் அவ்விடமும் மேகக்கூட்டம் தான்.
கண்ணுக்கு எட்டியவரை மேகங்கள் தான்... அதன் இடைவெளியில் அங்கும் இங்குமாய் தெரிந்த நீலநிற மலையை ஆசையுடன் பார்த்தாள். பார்த்தவளின் தோளில் இரு பக்கமும் சுதிரும் சக்தியும் கை போட்ட படி நின்று பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
மிருதன் ஒரு சற்று பெரிய பாறையில் அமர்ந்து விட்டான். மறந்தபடி அவர்களின் அட்டகாசங்களை பார்த்தான். மிருதி முந்தானையை இடுப்பில் இறுக்கி சொறுகிக் கொண்டு, ஒவ்வொரு பாறையின் மீதும் ஏறி தடுப்பு வேலி போட்டு இருந்த இடத்தை நோக்கி சென்றாள்.
அவளின் இரு பக்கமும் இருவரும் துணை வர அவர்களின் கரங்களை பற்றிக் கொண்டு நெருங்கிப் போனாள். கிட்டத்தட்ட அவர்கள் இருந்த இடத்துக்கு கீழ் வாக்கில் வேலி போட்டு இருந்தார்கள். அதை நெருங்க மிருதன் விடவே மாட்டான்.
இன்று அவன் முறைப்பை சட்டை செய்யாமல் மூவரும் நெருங்கிப் போக, இருந்த இடத்தில் இருந்தபடியே ஒரு பெரிய கல்லை மூவரின் மீதும் வீசினான்.
அதில் பாவமாய் மூவரும் திரும்பி பார்க்க, ஒற்றை விரல் அசைத்து மூவரையும் முறைத்துப் பார்த்து எச்சரிக்கை செய்தான். அவனது எச்சரிக்கையை அதற்கு மேல் மீற முடியாமல் பின் வாங்கினார்கள் சின்ன கடுப்புடன்.
அவர்கள் மேற்கொள்ள இருக்கும் ஆபத்து புரிந்து தான் இருந்தது என்றாலும் ஆசை யாரையும் விடவில்லை. கிட்ட போக முடியாமல் பண்ணிய மிருதனை பகைக்கவும் முடியாமல் அவனை நோக்கி வந்தவர்கள் அவனை சுற்றி இருந்த பாறைகளில் அமர்ந்துக் கொண்டார்கள்.
“இந்த க்ளைமேட்ல கொஞ்சம் ஜின் உள்ள போனா நல்லா இருக்கும்ல...” என்று கொண்டு வந்த மது வகைகளை கடை பரப்பி அடிக்க ஆரம்பிக்க,
“டேய் பன்னிங்களா.. இங்க வந்தும் உங்க அக்கப்போரு தாங்கள... மரியாதையா மூட்டி கட்டி வைங்க..” என்று மிரட்டியவள் அவர்களை தண்ணி அடிக்காமல் பார்த்துக் கொண்டாள். ஆனால் அவள் மிருதனுடன் பின்னுக்கு வர அவள் கண் மறைத்து இருவரும் குடிக்க அவர்களின் மீது கற்களை வீசி எறிந்தான் மிருதன் மிரு அறியாமல்.
“போடா...” என்று விட்டு இருவரும் அதிகம் பிசகாமல் சஸ்ட் ஒரு சிப் மட்டும் எடுத்துக் கொண்டார்கள். இடுப்பில் சொருகி இருந்த முந்தானை தோற்றத்தில் வேறு மாதிரி தெரிந்தாள் மிருதி.
அந்த தோற்றம் மிருதனின் நெஞ்சில் ஏதோ ஒன்றை அசைக்க அவளிடம் சற்று நெருக்கம் காட்டினான். அந்த நெருக்கத்தில் மிருதி தான் கலவரம் பூண்டாள். ஏற்கனவே அவன் எப்பொழுது அவளை கிப்ட் பாக்ஸை போல பிரித்து பார்க்கலாம் என்று காத்திருக்க, இவளோ அதன் மீது இன்னும் இன்னும் ஆர்வத்தை தூண்டுவது போல ஏதாவது செய்து வைத்துக் கொண்டு இருந்தாள்.
அவளின் அருகில் முன்பை விட இன்னும் சற்று நெருங்கி நின்றான். அவனின் நெருக்கம் காதல் கொண்ட பெண்ணவளை தகிக்க செய்ய அவனை விட்டு விலக பார்த்தாள். ஆனால் அதற்குள் மிருதனின் கரம் அவளின் இடையோடு ஊர்ந்து இறுக்கிக்கொண்டது.
அதில் ஜெர்க்காகி அவனை அதிர்ந்து பார்த்தாள். “இனி புடவை கட்டுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு கட்டுடி” என்றவன் அவளை இன்னும் இறுக்கி பிடித்துக் கொண்டான்.
அவனிடமிருந்து விடுபட முடியாமல் தவித்தவள்,
“இதென்ன இப்படி பண்றீங்க... விடுங்க முதல்ல...” என்று அவனிடமிருந்து விலக பார்த்தாள்.
“காதலிக்கிறல்ல கொஞ்சம் கம்பெனி குடு...” என்று அவளின் விலகளை முறியடித்தான். அவள் பல்லைக் கடித்து அவனை முறைக்க,
“செம்மையா குளிருது...” என்று அவளிடம் இருக்கும் கதகதப்பை வாங்க முயன்றான் ஒட்டி நின்று. ஒன்று பேசவே மாட்டான். அப்படியே பேசினால் இப்படி வம்புக்கு வருவது போலவே பேசினால் மிருவும் என்ன தான் செய்வாள்.
அப்படியே ஒவ்வொரு இடமாக சுற்றி பார்த்து விட்டு இரவு வீடு திரும்பினார்கள். கடைசி ஒரு நாள் மட்டும் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தான் மிருதன்.
இடைபட்ட நாளில் அந்த நிகழ்ச்சியின் ஆங்கர்ஸ் மற்றும் இவர்களது அசிஸ்டென்டான வசந்த், பரதன், சிமி மூவரையும் வைத்து அங்கு நடக்கும் கலகலப்பான சில நிகழ்ச்சிகளை தொகுப்பாக எடுக்கப்பட்டது.
அதை இவர்கள் நால்வரும் ஒரு முறை செக் பண்ணி பார்த்து விட்டு எடிட்டருக்கு அனுப்பி சில பல கிளிப்ஸாக வெளியே விட்டிருந்தார்கள்.
அதன் மூலம் மிருதனின் திட்டபடி பார்வையாளரிடம் இன்னும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். முழு தொகுப்பையும் போடுங்க என்று வேறு பல கமெண்ட்ஸ் வந்துக் கொண்டே இருந்தது...!
அதை மகேந்திரனும் உணர்ந்தார் என்றாலும் ஒரு அலட்சியத்துடன் கடந்துப் போனார். ஆனால் தாய் சம்பூர்ணவதியால் இயலாதே...!
அடுத்து நடந்த கான்பரன்ஸில் அதை சொல்லி தன் மகனை பெருமை படுத்தினார். அதை பெருவுடையாரும் ஆமோதித்து மகிழ்ந்தார்.
சரியாக நான்காவது நாள் பார்ட்டி ஆரம்பம் ஆனது...! இடைப்பட்ட நாளில் மிருதியை வேறு உடை வாங்க விடாமல் பார்த்துக் கொண்ட பெருமை மிருதனையே சேரும்.
அவளும் எவ்வளவோ குட்டி கரணம் அடித்தும் ஒன்றும் கூட அவனிடம் எடுபடவே இல்லை. சக்தி சுதிரிடம் கூட சொல்லிப் பார்த்தாள்.
ஆனால் மிருதனை தாண்டி அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. புடவை கட்டுவது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் அந்த புடவையை கட்டிக்கொண்டு அவனின் எதிரில் நடமாடுவது தான் பெரிய விசயமாய் இருந்து அவளுக்கு.
உண்பது போல பார்த்து வைத்தாள் இவளும் என்ன தான் பண்ணுவாள். துகிலுரித்து பார்க்கும் கண்களை விட உன் கண் கொண்டு பார்க்கும் பார்வைக்கு உணர்வை தூண்டும் சக்தி இருக்கிறதே.. அந்த உணர்வுகளில் இருந்து தப்பிக்க எண்ணி தான் அவள் அலைமோதினாள். எங்கே அதற்கு மிருதன் விட வேண்டுமே...!
இதோ இன்று கடைசி நாள். பார்ட்டி நாள். ஷூட் ஒரு பக்கம் சென்றுக் கொண்டு இருந்தது என்றாலும் யாருடைய தனிப்பட்ட நேரங்களில் கேமராவை உள்ளே கொண்டு வர அனுமதிக்கப் பட வில்லை மிருதன். அதில் கண்டிப்பாக இருந்தான். சுதிரும் வசந்தும் இந்த நிகழ்வை எடுக்கவில்லை. அதற்கு என தனிப்பட்ட ஒரு ஆளை நியமித்து இருந்தான்.
அவ்வப்பொழுது அவன் எடுக்கும் அனைத்து தொகுப்புகளையும் பார்வையிட்டுக் கொண்டே இருந்தான். மிருதன் மட்டும் இல்லாமல், சக்தி, சுதிர், மிரு, பரதன், வசந்த் மற்றும் சிமி என ஏழு பேரும் கவனித்துக் கொண்டார்கள்.
அதே போல தனிப்பட்ட முறையில் அங்கு கேமராவை அலவ்ட் பண்ணவும் இல்லை. விழா சின்ன சின்ன நிகழ்ச்சிகள் மூலம் களை கட்டியது...! அந்த விழாவுக்கு சிவப்பு வர்ண பேன்சி டிசைனர் சேரியில் கொண்டை போட்டு ஒரு பக்கம் மட்டும் சின்ன சின்ன ரோஜாக்கள் அணிவகுத்து வருவது போல தலையில் சூடி இருந்தாள் மிரு.
அதோடு அங்கும் இங்கும் திரும்பும் போது டாலடிக்கும் ஒன் கிராம் பேன்சி கோல்ட் நகைகளை அணிந்து இருந்தாள். அவளின் மெல்லிய சரீரத்துக்கு அவளின் அலங்காரம் இன்னும் அழகாய் பொருந்தி வர எல்லோரின் கண்களும் அவள் மீதே... முக்கியமாய் அந்த குழுவினருக்கு...
அவளை பார்த்த நாளில் இருந்து இதுவரை அவள் ஒரு முறை கூட புடவை கட்டியதே இல்லை. எப்பவும் தூக்கி போட்ட ஒரு கொண்டை, அப்படி இல்லை என்றால் ஒரு போனி டெயில்... காலையில் மடிப்பு கலையாமல் சட்டை அணிந்து வருபவள், வந்து ஒரு மணி நேரத்துக்குள் அந்த கசங்கி போய்விடும். அந்த அளவுக்கு வெளியில் ஈடுபாடு அதிகம்.
முடிகள் அங்கும் இங்கும் கலைந்து ஒரு நேர்த்தி இராமல் ஒரு பரபரப்புடனே அவளை பார்த்து இருந்தார்கள். மிக முக்கியமான மீட்டிங் என்றால் கூட, தலையை சற்று வாரி போனி டெயில் போட்டுவிட்டு கசங்கி இருந்த சட்டையை நீவி விட்டுட்டு போய் அட்டென் பண்ணுவாள் மிரு.
அப்படி பட்டவள் முதல் முறை சர்வ அலங்காரத்தோடு பெண்மையின் தோற்றத்துக்கு இலக்கணம் எழுத வைப்பவள் போல வந்து இருப்பவளின் தோற்றத்தில் அனைவருமே ஒரு கணம் அவள் மீது வைத்த விழிகளை மீட்க முடியாமல் தடுமாறி தான் போனார்கள்.
“மேம் உண்மையாவே இது நீங்க தானா...? இல்ல உங்க கசின் சிஸ்டேர்ஸ் யாராச்சுமா?” என்று பெண்களே அவளை கேள்வி கேட்க,
“இதெல்லாம் ரொம்ப ஓவர்...” என்று சிரிப்புடன் அவர்களை விட்டு நகர்ந்து சென்றாள். பெண்களுக்கே இந்த நிலை என்றால் அந்த விழாவில் கலந்துக்கொள்ள வந்த ஆண்களின் நிலை...
பலர் வளிடம் பேச முயல,
“மேடம் நீங்க இந்த பக்கம் வாங்க..” என்று அவளை பாதுகாப்பாக அழைத்து வந்தார்கள் மிருதனின் பவுன்சஸ்ர்ஸ்.
அவர்களிடம் ஒரு நன்றியை சொல்லிவிட்டு சுற்றிமுற்றி பார்த்தாள். இப்பொழுது தான் கையில் இருந்தது போல இருந்தார்க சக்தியி, சுதிரும். ஆனால் இருவரையும் காணவில்லை.
விழிகளை ஓடவிட்டு தேடவிட்ட நேரம் அவளின் காதோரம் செருமும் சத்தம் ஒன்று கேட்டது... அது யார் என்று நன்கு புரிய, அவன் நெருங்கும் முன்பே காது மடல் கூசி சிலிர்த்தது.
கழுத்தோரம் இருக்கும் சிறு சிறு முடிகள் கூட சிலிர்த்துக் கொள்ள,’
”என்ன வேண்டும்?” என்று கேட்டாள். அவன் தரும் குறுகுறுப்பு உணர்வுகளை தாங்க முடியாமல்.
“நீ தான் வேண்டும்...” என்றான் இரு தோள்களையும் குலுக்கி..
“ப்ச்...” என்று திரும்பிக் கொண்டவளின் காதோரம்,
“உன் காதலை நீ இப்படி கூட ப்ரூப் பண்ணலாம்... ஒரே ஒரு சான்ஸ் தான்” என்று அவன் பேரம் பேச பார்க்க,
“என்ன மச்சான் ஒரு சான்ஸ்...?” சுதிர் என்ட்ரி ஆக,
“அது ஒண்ணும் இல்ல மச்சான் பாட்டு கச்சேரி ஆரம்பிக்க போகுது அதுக்கு தானா இருக்கும்.. வா மிரு” என்று பாட்டு பாட இருக்கும் இடத்துக்கு கூட்டிட்டு போனான்.
அவனை தொடர்ந்து சக்தியும் வர, இவர்களுக்கு முன்பே பலர் அங்கே கூடி இருக்க அதன் பிறகு சொல்லவும் வேண்டுமா அங்கு எழும் மகிழ்ச்சி அலைகளை...
வாய் ஓயாமல் ஒருவருக்கு ஒருவர் ஸ்ட்ரெஸ் மறந்து நாளைக்குரிய ஓட்டத்தை மறந்து இன்றைக்கு இங்க நடப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்கள்.
மிருதனை கம்பெல் பண்ணி ஒரு ஒரு முறை மட்டும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள செய்ய அனைவரும் முயன்றார்கள்... அவர்களுக்காக அதிகம் பிகு இல்லாமல் ஒத்துக் கொண்டவன் அவனுக்கு வந்ததன் படி செயல் படுத்தினான் மிருவோடு சேர்ந்து.
எஸ் அவனுக்கு வந்தது டான்ஸ்... பட் இணையோடு தான் ஆடவேண்டும் என்று வந்து இருக்க எந்த முன்னேச்சரிகையும் மிருவுக்கு கொடுக்காமல் அவளின் கரத்தை பிடித்து இழுத்து தன்னை பார்க்கும் படி நிற்க வைத்தவன், அவளின் இடையில் தன் அழுத்தமான கரத்தை பதித்து,
“லவ் வேண்டாம் ஒன்லி லஸ்ட்... இன்னைக்கு என் படுக்கையை அழகாக்குறியா?” என்று கேட்டான். அவனது கேள்வியில் கொஞ்சம் கோவம் வந்தது என்றாலும் சபை நாகரீகம் கருதி அவனுடன் இழைந்து ஆட ஆரம்பித்தாள்.