Notifications
Clear all

அத்தியாயம் 12

 
Admin
(@ramya-devi)
Member Admin

நின் பாரங்களின் இடைவெளியில்

சுவாசக்காற்றாய் நேசயிழை கோர்த்துப் பிரிகிறது...!

 

உதகை போகும் சாலை எங்கும் மிதமான சாரல் வீச, அனைவரையும் இரசிக்க வைத்தபடியே பயணம் சென்றது..! லேசாக பனி சிந்தியும், உதயன் இன்னும் எட்டிப் பார்க்கா காலை நேரத்தில், மழைச்சாரலோ மிதமாக வீசியடிக்க மனதில் உள்ள அத்தனை சோகங்களையும் வழித்து போட இதை விட யாரால் முடியும்...!

தாங்க முடியாத பாரம் கூட இந்த இயற்கை காரணிகளால் ஒன்றுமில்லாமல் செய்து சிறிது நேரம் நின்று இரசிக்க வைத்து விட முடிகிறது...! இயற்கையை மிஞ்ச யாரால் இயலும்...

அந்த அதிகாலை பொழுதில் தன்னவன் மறைமுகமாக தன்னை வம்பிழுத்துக் கொண்டு வருவதில் இன்னும் கொஞ்சம் உற்சாகமானாள் மிருதி...

அந்த உற்சாக மற்ற இருவரையும் தொற்றிக் கொள்ள சுதிரும் சக்தியும் அவளுடன் வலவலத்துக் கொண்டே வந்தார்கள். மூவரும் பேசியபடி வர, ஒருத்தன் மட்டும் எதிலும் கலந்துக் கொள்ளாமல் தனி பிறவியாக வந்துக் கொண்டு இருந்தான்.

இதோ அதோ என்று இரண்டு மணி நேரத்தில் வர வேண்டிய இடத்துக்கு நான்கு மணி நேரம் கழித்து வந்து சேர்ந்தார்கள். இடையில் இருந்த சின்ன சின்ன அருவிகள் மலை பள்ளத்தாக்குகள், சூடான ஒரு தேநீர்... என அதா பயணத்தை திட்டமிட்டது போல இரசித்து வந்தார்கள்.

இடையில் அவர்களது டீம்மையும் ஆர்கனைஸ் பண்ணிக் கொண்டார்கள். என்னென்ன ப்ளான், எங்கு முதலில் என்பது எல்லாம் பக்கா லிஸ்ட் போட்டு வைத்திருக்க அதன் படி நேரத்துக்கு அவ்விடங்களுக்கு செல்ல போனிலே அனைவரையும் விரட்டிக் கொண்டார்கள்.

இவர்களுக்கு உரிய கெஸ்ட்ஹவுசில் போய் இறங்க,

“இன்னும் ஹாப்பனவர் டைம்... பிரெஷ் ஆகிட்டு சட்டுன்னு வரணும்... நாம தொட்டபெட்டா போறோம்...” என்று சொல்லியவன் அவனுக்கு என்று ஒரு அறையை எடுத்துக் கொண்டு போய் விட்டான் மிருதன்.

“எல்லாம் இவர் வச்சது தான் சட்டம்... என்னால அரைமணி நேரத்துல கிளம்ப முடியாது.. நான் முதல்ல பர்ச்சேஸ் பண்ணனும்...” என்று அவள் காரை எடுக்க வெளியே போனாள்.

அங்கே காரில் சாவி இல்லாமல் போக,

காரை மாறி மாறி ஓட்டிக் கொண்டு வந்த சுதிர், சக்தி இருவரிடமும் கேட்டாள்.

“அப்பவே மிருதன் வாங்கிக்கிட்டு போயிட்டானே..” என்று சொல்ல,

மிருதனின் திட்டம் நன்றாகவே புரிந்துப் போனது மிருதிக்கு. பல்லைக் கடித்தாள். போட்டு வந்த உடையை துவைத்து போட கூட நேரம் இருக்கவில்லை. அதோடு அடிக்கும் மழையில் அது எங்கிருந்து காயும்... கடவுளே என்று தலையை பிடித்துக் கொண்டாள்.

அவளுக்கு நன்றாகவே புரிந்துப் போனது மிருதனின் திட்டம்... அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்... என்று எண்ணிக் கொண்டவள்,

“சாரி சுதிர்... எனக்கு ஹில்ஸ்ல ட்ரவல் பண்ணது சிக்கா இருக்கு. சோ நான் தொட்டபெட்டா வரல... நீங்க மூணு பேரும் போயிட்டு வாங்க..” என்று தனக்கு ஒரு அறையை பார்த்து உள்ளே போய் கதவை பூட்டிக் கொண்டாள்.

வந்த உடனே தன் பையை வீசி எறிந்தவள், வேகமாக தன் அம்மாவுக்கு போனை போட்டாள். அங்கு அவர் பேச ஆரம்பிக்கும் முன்பே காச் மூச் என்று கத்த ஆரம்பித்தாள்.

அந்த பக்கம் போனை காதை விட்டு அரையடி தள்ளி வைத்துக்கொண்டார் சுதா. ஆனாலும் முகம் முழுக்க புன்னகை தான். அதை பார்த்துக் கொண்டு இருந்த பரவாசுக்கும் சிரிப்பு தான்.

அழகா தென்றல் காத்து போல இருந்தவளை இப்படி சூறாவளி மாதிரி கிளப்பி விட்டு வேடிக்கையா பார்க்கிற, இப்போ புயல் போன்ல தான் வந்து இருக்கு. இன்னும் நாலு நாள்ல நேர்ல வரும்.. எதிர் கொள்ள தயாரா இரு...” என்றார் நக்கலாக.

“ஆஹா... எனகென்ன பயமாம்... என் கிட்ட கேட்டா நான் உங்க பக்கம் கையை காட்டி விடுவேனாக்கும்... அவ்வளவு ஆசை நான் மாட்டுவேன்னு..” என்று முறைத்தவர் நொடித்துக் கொண்டு போய் விட,

“அடிப் பாவி நான் என்ன பண்ணேன்...” என்று அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டார்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. என்னை மாட்டி விடணும்னு ஆசை படீங்கள்ள... அப்போ அனுபவிங்க” என்று அடுப்படிக்கு போய் விட போனவரை பாவமாக பார்த்தார் பரவாசு..

எதுவும் செய்ய முடியாமல் அப்படியே நீட்டி நிமிர்ந்து படுத்து விட்டாள் மிருதி... அவளின் மனமெங்கும் மிருதனின் வார்த்தை தான் நிறைந்து இருந்தது...

முதல் முறை மிருதி புடவை கட்டிட்டு அவன் எதிரில் வந்து நின்ற பொழுது அவன் பார்த்த பார்வை இது வரை அவளை அப்படி அவன் பார்த்ததே இல்லை. உடனடியாக பிரித்து பார்த்து விட வேண்டும் என்று சிறு பிள்ளைகள் ஆசை படும் பரிசு பொருளாய் அவள் உணர அதன் பிறகு மிருதனின் எதிரில் அவள் புடவையோடு வரவே மாட்டாள்.

இன்று சந்தர்ப்ப சுழலில் இப்படி புடவையோடு வர மிருதன் அவளை பார்வையோடு நிறுத்தாமல் லேசாக பிரித்தும் பார்த்து விட்டானே நேற்றிரவு... முகம் வெட்கத்தில் சிவந்துப் போனது என்றாலும் இன்னும் அவளின் காதல் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே... பிறகு எப்பாடி அவனிடம் முழு உரிமையாக இழைவது..

இயலாதே...! இன்று தொட்ட பேட்டா இவனோடு சென்றால் கண்டிப்பாக ஏதோ ஒரு சந்தர்ப்பதில் தானே அவனிடம் சென்று விழ வேண்டியது வரும் என்று பயந்து அவள் போக மறுத்து விட்டாள்.

நெற்றியில் கை வைத்து படுத்து இருந்தாள். மிருதனிடம் மறுப்பு கூறினால் அவன் எந்த நிலைக்கு போவான் என்று தெரியாதே. அது ஒரு பக்கம் பயத்தை கிளப்பி இருக்க, உள்ளம் இரு பக்கமும் அல்லாடிக் கொண்டு இருந்தது.

கிளம்பி விடலாமா என்று மனம் ஒரு பக்கம் பரபரத்தது. ஆனால் அங்கு போனால் ஏற்படும் விளைவுகளை எண்ணி அது வேறு அடி வயிற்றில் ஒரு வித பயம் எழ படுக்க கூட முடியாமல் அறைக்குள்ளே நடை பழகினாள்.

கால்மணி நேரம் சென்று இருந்த நேரம் கதவு படீர் படீர் என்று தட்ட அந்த சத்தத்திலே யார் தட்டுகிறார்கள் என்று புரிய நெஞ்சம் தடதடத்தது...

வாயை திறந்து வார்த்தை வர மறுக்க அப்படியே சுவரோரம் சாய்ந்து நின்றாள் நெஞ்சை பிடித்துக் கொண்டு.. எவ்வளவு நேரம் அப்படியே நிற்க முடியும். கதவை ஒரு கட்டத்தில் திறந்து தானே ஆக வேண்டும். எனவே மனதை திடப் படுத்திக் கொண்டு கதவை திறந்தாள் மிருதி.

அவன் பேச ஆரம்பிக்கும் முன்பே,

“இல்ல தலை வலிக்குது. அது தான் கதவை திறக்க நேரமாயிடுச்சு...” என்றாள். அவன் எதுவுமே பேசவில்லை. கிளம்பி வா என்பது போல பார்த்தான். அவனது பார்வையின் பொருளை உணர்ந்தவள்,

“அது தான் தலை வலிக்குதுன்னு சொன்னனே... வெளியே வந்தா இன்னும் தலை வலிக்கும். நான் வரல... நீங்க மட்டும் போயிட்டு வாங்க..” என்றாள் குரலே வராமல்.

அதற்கும் ஒரு பார்வை பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் அங்கு இருந்த கூடத்தில் போய் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு தொலைகாட்சியை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

சுதிரும் சக்தியும் இன்னும் கிளம்பி வரவில்லை. மிருதனை பார்த்தவளுக்கு தொண்டையில் நீர் வற்றிப் போனது போல ஆனது.

அவன் அமர்ந்து விதத்திலே அவனது பிடிவாதம் தெரிய, அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். ‘ஸ்டெடி மிரு... அவன் இழுத்த இழுப்பு போகாத...’ புலம்பியவள் போய் கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள்.

சிறிது நேரத்திலே கூடத்தில் சந்தடி கேட்க அதை ஒட்டி அவளை பார்க்க இருவரும் வந்தார்கள்.

“உண்மையாவே உனக்கு தலைவலி தானா...? இல்ல மிருதனை ஏமாத்த பொய் சொல்றியா மிரு?” சக்தி கேட்க,

“டேய் படுத்தாதீங்கடா... நான் யாருக்காவும் பொய் சொல்லல.. நீங்க பாருங்க எப்படி கிளம்பி இருக்கீங்க...” என்று அவனுங்களின் தோற்றத்தை சுட்டிக் காட்டினாள். இருவரும் நார்மல் டீ-செர்டில், குட்டி ஷாட்சில், கையில் கழுத்தில் கேமராவோடு, தலையில் பெரிய தொப்பியோடு இருந்தார்கள். “நான் பாரு ஆறு முழம் புடவையை சுத்திக்கிட்டு... நோ சான்ஸ். நான் வரல. அது தான் வேற எந்த ரீசனும் இல்லை” என்றாள் கோவமாக.

“நான் வேணா என்னோட ட்ரெசை தரவா மிரு” சுதிர் வம்பு இழுக்க, “ஒழுங்கா ஓடிப் போயிடுங்கடா. சும்மா கடுப்பை கிளப்பிக்கிட்டு... நானே இவ்வளவு தூரம் வந்துட்டு தொட்ட பெட்டாவை பார்க்கம போறனேன்னு கடுப்புல இருக்கேன். சும்மா சும்மா இரிடேட் பண்ணிக்கிட்டு” என்று முறுக்கியவள் திரும்பிக் கொண்டாள்.

“ஏன் புடவையில வந்தா என்ன பண்ணுது...?” என்று அழுத்தமாக கேள்வி வர,

“என்ன பண்ணுதா? உங்களுக்கென்ன நீங்க நல்லா ஜாலியா தாவி தாவி ஏறுவீங்க பாறையில. நான் மட்டும் புடவையை இழுத்து பிடித்து தூக்கிக்கிட்டு வரணும்... எவ்வளவு கட்டல்(கஷ்டம்) தெரியுமா?” என்றபடி திரும்ப அங்கே சுதிர் சக்திக்கு பதிலாக மிருதன் நின்றிருந்தான்.

சட்டென்று எழுந்துக் கொண்டாள்.

“நான் கை பிடித்து கூட்டிட்டு போறேன். கிளம்பு...” என்றுவிட்டு வெளியே போக,

“இல்ல நான் வரல...” என்று அவள் தடுமாற, போனவன் மீண்டும் வந்து அவளுக்கு நேரெதிர் நின்று அவளது கண்களை ஆழ்ந்து பார்த்து,

“அப்போ அவங்க ரெண்டு பேர் மட்டும் போகட்டும்...” என்று சொல்ல, அந்த பார்வையின் உள்ளே இருந்த மறைப்பொருளை உணர்ந்துக் கொண்டவளுக்கு முதுகு தண்டில் ஆயிரம் கோடி மின்னல் பாய்ந்துப் போனது போல இருந்தது...

“இல்ல...” என்று பேச்சே தடுமாறி வந்தது அவளுக்கு.

“டேஷிஷன் இஸ் யுயர்ஸ்...” என்று தோளைக் குலுக்கிக் கொண்டு அவன் மீண்டும் வெளியே போய் அமர்ந்துக் கொண்டான்,

அவனோடு ஒரே இடத்தில் அதுவும் யாரும் இல்லாமலா...? கண்டிப்பாக முடியாது... மூச்சு முட்டியே செத்துப் போயிடுவேன்... அதுவும் அவன் பார்க்கும் பார்வையில் தானாகவே வழிக்க அவன் அருகில் சென்று விடுவோம் என்று அறிந்துக் கொண்டவள், சட்டென்று கிளம்ப ஆரம்பித்து விட்டாள்.

கிளம்பி வந்தவளை ஒரு பார்வை பார்த்து விட்டு காரில் போய் ஏறினான் மிருதன். அவனுக்கு அருகில் தான் ஒரு இடம் இருக்க வேறு வழியின்றி அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள் மிரு.

வண்டி நேராக பெரிய உணவு விடுதிக்கு செல்ல, நால்வரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அருகில் இருந்த குட்டி பார்க்குக்கு சென்று விட்டு அடுத்து தொட்டபெட்டா சிகரத்துக்கு சென்றது...!

பேசி வளவளத்தபடியே வந்து சேர்ந்தார்கள். காரை அங்கு இருந்த பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி விட்டு நால்வரும் படி ஏறினார்கள். முதலில் தொலைநோக்கி உதவியுடன் உதகையை பார்த்து விட்டு அங்கு இருந்த புல்வெளியில் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கொண்டு மீண்டும் படி ஏறினார்கள்.

படிகள் எங்கும் இணை இணையாக கரங்கள் கோர்த்து சென்ற மனிதர்களை பார்க்கும் பொழுது தானாகவே உள்ளுக்குள் ஒரு பரவசம் எழுந்தது. அவர்களின் முகத்தில் தென்பட்ட நிறைவும் சிரிப்பும் மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது.

படி ஏறும் வரை ஒன்றும் தெரியவில்லை. சிக்கென்று ஏறிவிட்டாள் மிரு... ஆனால் படிகள் கொஞ்சத்துக்கு மேல் நின்று போய் விட பாறைகள் வந்தவுடன் தான் அவளுக்கு சிரமம் ஆனது...! கால் சற்றே தடுமாற ஆரம்பிக்க சக்தி அவளின் கரத்தை பிடிக்க வருவதற்குள் அவளின் கரம் அருகில் இருந்த மிருதனின் கரத்தை பட்டென்று பிடித்துக் கொண்டது.

சக்தி சின்ன சிரிப்புடன் சுதிருக்கு அதை காண்பிக்க, அவனும் சிரித்து கண்ணடித்தான். இருவரும் கைக்கோர்த்து வர ஆரம்பிக்க அப்படியே சக்தியும் சுதிரும் வேகமாக அவர்களை விட்டு முன்னே நகர்ந்து விட்டார்கள்.

பின்னாடி வந்த மிரு சற்றே பொறுமையாக வர, மிருதனின் இடக்கரம் அவளின் இடப்பக்க இடையை இறுக்கிப் பிடித்தது.. அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

மனிதன் அவளை பார்த்தால் தானே... இடையில் இன்னும் இறுக்கத்தை கொடுத்தவன் தூரத்தில் தெரிந்த மலையை பார்த்தான். அதில் தழுவி நழுவி செல்லும் மேக கூட்டங்களின் அவனது கவனம் இருந்தது. அப்படிக் காட்டிக் கொண்டான் மிருவிடம்.

மிருவிற்கு தான் உள்ளுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தாள். வெட்ட வெளியில் இப்படி இடையை இலையை கசக்குவது போல கசக்கிக்கொண்டு இருந்தவனின் பிடியில் இடை சிறுக்கி சிவந்துப் போனது.. குளிருக்காக மேலே போட்டு இருந்த முந்தானை அவனது கரத்திர்க்கு வாகு செய்துக் கொடுத்ததோ என்னவோ... யாரின் கண்களுக்கும் மிருதனின் பிடி தெரியாமல் போனது.

கிளம்பும் பொழுதே சால்வையை எடுத்து போத்தியபடி வர, சுதிர் எருமை வாங்கி வெளியே வீசிவிட்டான்.

“நீ என்ன கிழவியா என்று கேட்டு...” ஆனால் போக போக சற்றே குளிர் எடுக்க வேறு வழியில்லாமல் முந்தானையை எடுத்து போர்த்தி இருந்தாள் மிரு. ஆனால் அது மிருதனுக்கு இப்படி சாதகம் ஆகும் என்று எண்ணி இருக்கவில்லை.

போக போக இறுக்கமான பிடி சற்றே நெகிழ்ந்து மென்மையாக ஆனது. பின் லேசான வருடலாக மாறி விட கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் இடையை சுற்றி வர ஆரம்பிக்க அதற்கு மேல் தாங்க முடியாமல் அவனின் கரத்தை தன் கரத்தால் பற்றிக் கொண்டாள் மிரு..

Loading spinner

Quote
Topic starter Posted : August 30, 2025 9:03 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top