அடுத்த அடுத்த நாட்கள் மிக வேகமாக கடந்து செல்ல எதிரி இருக்கும் இடத்தை மிக லாவகமாக அடைந்தார்கள் தயாகரனின் டீம் ஆட்கள்.
படகு ஏறிய அன்றைய இரவு பொழுது முற்றி இரண்டாவது நாள் காலை புலரும் நேரம் மெல்ல இருவரும் சோம்பல் முறித்து எழுந்து அமர்ந்தார்கள். அந்த மேல் தளத்திலே இருவரும் இரவும் முழுவதும் படுத்து இருந்தார்கள்.
“செம்ம தூக்கம் போல?” என்றான் நக்கலாக. தூங்கவே நள்ளிரவுக்கு மேல் ஆகி இருந்தது. அவன் எங்கே அவளை தூங்க விட்டான். இதில் நக்கல் பண்ணியவனை முறைத்துப் பார்த்தவள், விரிந்து கலைந்து இருந்த கூந்தலை அள்ளி கொண்டையாக சுற்றிக் கொண்டவள் அப்படியே பின்னால் சாய்ந்து கால்களை கட்டிக் கொண்டு சூரியன் உதயமாவதை இரசிக்கத் தொடங்கினாள்.
அவளுக்கு மிக அருகில் நெருங்கிப் படுத்தவன் அவள் கட்டி இருந்த காலை நீட்டி விட்டு அவளின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.
அவனை தடுக்கவெல்லாம் இல்லை. ஏற்கனவே அவன் அவாளை மிகவும் நெருங்கி இருந்தானே.. அதனால் பெருமூச்சு மட்டும் தான் வந்தது அவளிடம் இருந்து. அவனின் தலையை கோத சொல்லி அவன் சொல்ல, அவளின் கைகள் தானாகவே அந்த வேலையை செய்தது. அந்த நேரம் பெண்ணவளின் மனம் மிகவும் அமைதியாக இனிமையாகவே இருந்தது.
வெயில் இன்னும் ஏறவில்லை. அதிகாலை ஐந்து மணி தான் ஆகி இருக்கும். ஆனால் அதுக்கே பளபளவென்று விடிந்த காலை பொழுது போல இருந்தது இடம்.
அந்த நேரம் “சார்” என்று ஒரு குரல் கேட்க, அந்த குரலில் குனிந்து தன்னவனை முறைத்துப் பார்த்தாள் தயாழினி. அவளின் முறைப்பை கண்டுக் கொள்ளாமல்,
“இங்க இருக்கேன் ஹரிணி” என்று குரல் குடுத்தான் தயாகரன்.
“இப்ப எதுக்கு அவ இங்க வந்து இருக்கா?” கடுப்புடன் கேட்டவளை சட்டை செய்யாமல்,
“சேப் ஜேர்னி தானே” என்று விசாரித்தவனை தன் மடியில் இருந்து தள்ளி விடப் பார்க்க, அழுத்தமாக அவளின் மடியில் படுத்துக் கொண்டவன், பேச்சு முழுக்க ஹரிணியிடம் தான் இருந்தது.
“காக்காய்க்கு மூக்கு வேர்த்த மாதிரி எங்கிருந்து தான் வந்து சேர்ந்தாளோ இந்த ஹரிணி” புலம்பியவளின் பேச்சை கேட்டு இரகசியமாக சிரித்துக் கொண்டவன் வெளியே விறைப்பாக காட்டிக் கொண்டு இவள் பக்கம் திரும்பவே இல்லை.
“நல்ல படியா வந்து சேர்ந்துட்டோம் சார். நம்ம டீம் உங்களுக்காக வெயிட்டிங்” என்றாள் அவள்.
“ஓகே நான் வரேன்” என்றவன் தயாழினியின் மடியில் இருந்து எழுந்துக் கொள்ளப்பார்க்க,
“கொஞ்ச நேரம் எனக்கு உங்க கூட தனியா இருக்கணும். அப்புறமா போய் உங்க டீமை பார்த்துக்கோங்க” என்றவள் வேணும் என்றே அவனின் கழுத்தில் கையை போட்டுக் கொண்டாள்.
அவளின் செயலில் முறைத்தவன், “ஹரிணி நீ கீழ போ நான் வரேன்” என்றவன் இன்னும் அதிகமாக தன் மனைவியை முறைத்துப் பார்த்தான்.
“என்ன முறைப்பு இப்போ எதுகாக அவ இங்க வந்து இருக்கா?” கடுப்புடன் கேட்டவளை முறைத்தவன்,
“அவ என்னோட அசிஸ்டென்ட்” என்றான்.
“அதுக்காக” என்றவளின் குரல் உள்ளே போய் விட்டது.
“உனக்கு இந்த பொசசிவ் கொஞ்சம் கூட சூட்டே ஆகவில்லை. பெட்டர் வேற வழி எதாவது இருந்தா முயற்சி பண்ணு” என்றான் நக்கலாக. அதில் முன்னுக்கேன்று கண்ணீர் வந்து விட்டது. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல்,
“பின்ன அவளை எப்படி வெறுப்பேத்துவதாம்” என்றவள் தன் மடியில் இருந்து அவனை விலக்கி விட்டு கம்பியின் பக்கம் போய் நின்றுக் கொண்டாள்.
அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன், “கீழ வரலையா?” கேட்டான்.
“இல்ல” என்று மட்டும் சொன்னவள் கொஞ்சம் கூட திரும்பவில்லை. திரும்பினால் அவளின் கண்ணீர் அவனுக்கு தெரிந்து விடுமே..
“ரொம்ப நேரம் இருக்காத.. மறுபடியும் மயக்கம் வந்திட போகுது” என்று எச்சரித்து விட்டு கீழே சென்றான் தயாகரன்.
அப்பொழுது தான் அந்த படகின் அருகில் இன்னொரு படகும் அதே சீரான வேகத்தில் உடன் வருவதை பார்த்தாள்.
அதுல இருந்து தான் ஹரிணியும் மற்ற ஆட்களும் வந்து இருப்பார்கள் என்று புரிந்துக் கொண்டாள். கீழே போகவே மனமில்லை. ஆனால் மீண்டும் மயக்கம் வாமிட் என வந்து விட்டால் என்ன செய்வது என்று கீழே வந்தாள்.
கீழே வந்தவள் யாரையும் பார்க்காமல் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
குளித்து விட்டு வேறு புடவை அணிந்துக் கொண்டவள் கிளம்பி வெளியே வர, அனைவரும் டைனிங் ஹாலில் கூடி இருந்தார்கள்.
கிட்டத்தட்ட ஏழு பேர் கொண்ட டீம் அது. வட்டமேசை மாநாடு போல அமர்ந்து இருந்தார்கள். தீவிர டிஸ்கஷன் போய் கொண்டு இருந்தது. ஆனால் இவள் யாரையும் சட்டை செய்யாமல், ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்துக் கொண்டவள், சமையல் அறையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த செப்பிடம் இருந்த இடத்தில் இருந்தே,
“ஒரு பில்ட்டர் காபி, வித் டு ஸ்லைஸ் பட்டர் டோஸ்ட்டட் ப்ரெட்.. அதுல கொஞ்சமா சில்லி பிளேக்ஸ், கார்லிக் பேஸ்ட் போட்டு எடுத்துட்டு வாங்க.. மயோனிஸ் வேணும்” என்றாள். அதை கொண்டு வந்தவரிடம், “காலைல சாப்பாட்டுக்கு சுரைக்காய் வடை, வரகரிசி நெய் பொங்கல், தேங்காய் சட்னியோட, ரெண்டு வகை பருப்பு போட்டு சாம்பாரும் வேணும்” என்றவளை தான் எல்லோரும் செய்யிற வேலையை விட்டுட்டு பார்த்தார்கள்.
“அங்க என்ன வேடிக்கை” அதட்டல் போட்ட தயாகரன்,
“ஏன்டி இங்க என்ன விருந்தாடவா வந்து இருக்க.. உன் இஷ்ட்ட டேஷுக்கு மெனு போட்டுட்டு இருக்க” கோவத்தில் கத்தினான். பின்ன அவன் இங்க எவ்வளவு பெரிய டிஷ்கஷனை நடத்திக்கிட்டு இருக்கிறான். அதை கலைப்பது போல இவள் மெனுவை அடுக்கினால் பிறகு கோவம் வருமா வராதா..
காச் மூச் என்று கத்தினான். ஆனால் தயாழினியோ அதை எல்லாம் கொஞ்சமும் காதிலே வாங்கிக் கொள்ளாமல் நீ திட்டுனா திட்டிக்க என்று பிரெட்டையும் காபியையும் இரசித்து ருசித்து உண்ண, பார்த்துக் கொண்டு இருந்த அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறியது.
“இவ அடங்க மாட்டா போலையே” நெற்றியை நீவியவனின் கோவத்தில் அனைவரும் அவளிடம் இருந்த பார்வையை திருப்பிக் கொண்டார்கள்.
எல்லோரையும் முறைத்தான்.
“சாரி சார்” என்று தலையை குனிந்துக் கொண்டவர்கள் மீண்டும் வேலையில் ஆழ்ந்தார்கள். எல்லாம் கொஞ்ச நேரம் தான்.
சமையல் அறைக்குள் அவளின் லொடலொடவென்ற பேச்சு சத்தம் கேட்டது. கூடவே நெய்யில் சீரகமும் மிளகும் பெருங்காயமும் வறுபடும் வாசமும் வர, எல்லோரின் பார்வையும் கிட்ச்சனை நோக்கி சென்றது.
அங்கே இடுப்பில் முந்தானையை சொருகிக் கொண்டு அவள் வேலை பார்ப்பதை பார்த்த தயாகரனுக்கு எங்காவது போய் முட்டிக் கொள்ளலாம் என்று வந்தது.
“இப்படி பண்ணுங்க செப்.. இதெல்லாம் எங்க ஊர் ஸ்பெஷல்.. இதை சாப்பிட்டு முடிச்ச பிறகு ஒரு தூக்கம் வரும் பாருங்க... ப்பா அடிச்சுக்கவே முடியாது” என்று அவரிடம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்ட செய்துக் கொண்டு இருந்தாள்.
அவர் ஒரு வெளிநாட்டு செப்.. வயது எப்படியும் ஐம்பது இருக்கும். சமையல் கலையில் மிகவும் கைத் தேர்ந்தவர் அவர். கடற்பயணத்தில் ஆயிரம் அனுபவங்கள் இருந்தது அவருக்கு. அவருக்கு இவள் சமையல் சொல்லி குடுக்க வெளியே இருந்தவர்களும், அவருடைய அசிஸ்டென்ட் நால்வரும் திகைத்துப் போய் தான் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
“இருங்க ப்லேட்டிங் பண்ணி தரேன்” என்று சொல்லி இரண்டு சுரைக்காய் வடையும், நெய் முந்திரி வறுத்து விட்ட கொஞ்சம் திணை பொங்கலும், கூடவே சட்னி சாம்பார் என அவருக்கு அழகாக எடுத்து வைத்து குடுத்தாள்.
அதை சாப்பிட்டவருக்கு அவளின் மீது அன்பும் பாசமும் பெருகியது.
“காட் ப்ளஸ் யூ மை சைல்ட்” என்று அவர் ஆசீர்வாதமும் செய்ய, அவருடனே அவளுக்கு மிச்ச பொழுதுகள் கழிந்தது.
டிஷ்கஷன் முடிந்து காலை உணவுக்கு வந்தவர்கள் அங்கே அமர்ந்து உண்டுக் கொண்டு இருந்த தயாழினியை தான் அனைவரும் பார்த்தார்கள். அவள் இரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க, மற்ற அனைவருக்கும் வேலையாட்கள் செய்த உணவை பரிமாறினார்கள். ஒருவருக்கும் இறங்கவே இல்லை.
தயகரனுக்கும் அவர்கள் செய்த உணவை வைக்க, கை நீட்டி தடுத்தவன், தன் அருகில் அமர்ந்து உண்டுக் கொண்டு இருந்தவளின் தட்டை டான் பக்கம் நகர்த்தி உண்ண ஆரம்பிக்க, தயாழினி அவனை பார்த்து முறைத்தாள்.
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க? எல்லோரும் நம்மளை தான் பார்க்கிறாங்க” பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னவளிடம்,
“அதுக்காக நான் என்ன பண்ண முடியும்?” கேட்டவன் உணவில் கவனமாகி இரசித்து உண்ணத் தொடங்க,
“அது நான் சாப்பிட்டது” என்றாள்.
“பரவாயில்லை”
“எனக்கு மட்டும் தான் செய்தேன்” என்றாள். அடிக்கண்களால் அவளை பார்க்க,
“இல்ல சேர்த்து தான் செய்தேன்” என்று முணுமுணுத்தவள், வேறு ப்ளேட் எடுத்து தான் செய்து வைத்த உணவுகளை எடுத்து வந்து வைத்து சாப்பிட ஆரம்பிக்க, தயாகரனும் இன்னும் எடுத்து போட்டு சாப்பிட்டான்.
இருவரும் சாப்பிடுவதை பார்த்த மற்றவர்கள் வேண்டா வெறுப்பாக தங்களின் தட்டில் இருந்த உணவை எரிச்சலுடன் முழுங்கினார்கள்.
“மேடம்..” என்றான் செந்தமிழன்.
“யா சொல்லுங்க” என்றவள் அவனை பார்த்தாள்.
“நான் சாரோட அசிஸ்டென்ட்.. பொங்கல் கிடைக்குமா?” என்று தயாகரனின் வலது கையான செந்தமிழன் கேட்க, அவனிடம் மொத்த பானையையும் தூக்கி கொடுத்து விட்டாள்.
“பொங்கல் வேணும்ன்னு சொல்ல வேண்டியது தானே.. அதுக்கான க்வாலிபிக்கேஷன உங்க சாரை இழுக்க வேணாம்” என்று சொல்ல, எல்லோரும் ஆவலுடன் அவள் நீட்டிய உணவுகளை உண்டார்கள்.
“சூப்பர் மேடம்.. எங்க சார் குடுத்து வச்சவரு” என்று பாராட்டி விட்டு போக, ஹரிணிக்கு ஒரு மாதிரி இருந்தது அவளை எல்லோரும் பாராட்டுவதை கண்டு.
“பொறாமை படாத ஹரிணி யார் யாருக்கு என்னென்ன கிடைக்குமோ அது தான் கிடைக்கும். இந்த எண்ணத்துல இருந்து வெளில வா. அது தான் எல்லோருக்கும் நல்லது” என்று செந்தமிழ் சொல்லிவிட்டு செல்ல, பெருமூச்சு விட்டவள் அங்கிருந்து போய் விட்டாள்.
“என்னடி இது இப்படி தூக்கம் தூக்கமா வருது... சாப்பாட்டுல எதுவும் தூக்க மாத்திரைய கலந்துட்டியா என்ன?” கொட்டாவி விட்டபடி தயாழினியின் அறைக்குள் நுழைந்தான் தயாகரன்.
“ரொம்ப ஏத்தம் தான். நான் சாப்பிட்டதை பிடுங்கி தின்னுட்டு இதுல புகார் வேறையா?” என்று முறைத்தவள்,
“பொங்கல் சாப்பிட்டா அப்படி தான் மந்தமா இருக்கும்” என்றாள்.
“அதுக்குன்னு இவ்வளவு மந்தமாவாடி” என்றவன் அவளின் படுக்கையில் படுத்துக் கொண்டான்.
“உங்க அறைக்கு போகலையா?” கேட்டபடி குறுங்கண் வழியாக வெளியே தெரிந்த கடலை பார்த்தாள்.
“போகல” என்றவன், “கொஞ்ச நேரம் தூங்குறேன். எழுப்பி விடு” என்றவன் தூக்கத்தில் ஆழ்ந்தான். தூங்கும் அவனை ஆழ்ந்துப் பார்த்தாள்.
“ப்ச்.. இப்படி பார்த்தா நான் எப்புடிடி தூங்குறது.. கண்ணை அந்த பக்கம் திருப்பு” என்றான்.
“முடியாது” என்று அவனை இன்னும் அவள் பார்த்து வைக்க, அவளின் கையை பிடித்து இழுத்து தன் மீது விழ வைத்தவன் அவளை கட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தான்.
அவன் ஆழ்ந்த தூக்கத்துக்கு போகும் வரை அமைதியாக இருந்தவள் அவனது உடல் மெல்ல மெல்ல தளரவும் அவன்னின் பிடியில் இருந்து எழுந்து கிட்சேனுக்கு போய் விட்டாள்.
சிறிது நேரத்திலே தயாகரன் எழும்பி விட்டான். அவளை தேட, அவள் கண்ணில் அகப்படவில்லை. இந்த போட்டில் அவள் எங்கு போய் இருப்பாள் என்று அறிந்தவன், பிரெஷப் ஆகிவிட்டு கிட்சனுக்கு சென்றான்.
அங்கே அவள் செஃபிடம் பேசி சிரித்துக் கொண்டே பரபரப்பாக வேலை செய்வதை பார்த்து வாசலின் நிலையில் அப்படியே கைகளை கட்டிக் கொண்டு நின்று விட்டான்.
அந்த நேரம் ஹரிணி சார் என்று வர, வாயின் மேல் ஒற்றை விரலை வைத்து அவளை சத்தம் போடாதே என்று தடுத்தவன் மிகவும் இரசனையாக தன்னவளை பார்வையிட்டான் தயாகரன்.
thodarum...