தயாகரன் பெண்ணவளை சுழற்றி எடுக்க திகைத்துப் போனாள். பட்டென்று அவனின் கைப்பிடியில் இருந்து வெளியே வரப்பார்க்க, புருவம் சுறுக்கியவன்,
“ப்ளீஸ்.. வேண்டாம்” என்று அவனிடம் சொல்லி விட்டு அவள் விலக,
“நில்லு யாழி” என்றான் முதல் முறையாக. அவனது குரலில் அவளின் பெயர் கேட்க சிலிர்த்துப் போனாள். விழிகளில் நீர் நெகிழ்ந்தது.
“ப்ளீஸ்... இப்படி கூப்பிடாதீங்க” என்றாள் குரல் கரகரக்க,
“இப்படி தான்டி கூப்பிடுவேன்” என்றவன், “எதுக்கு விட்டு போற?”
“எனக்கும் உணர்வுகள் இருக்கு” என்றாள் மொட்டையாக.
“சோ” என்றான் அமர்த்தலாக.
“அதனால தான் போறேன்” என்றவள் அவனின் கையில் இருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள பார்க்க, தன் பிடியை இன்னும் இருக்கியவன்,
“ஏன் தீண்டி, தூண்டி, துலங்க...” என்று அவன் சொல்ல வர, பட்டென்று கண்கள் கலங்கிப் போனாள்.
ஒவ்வொரு முறையும் அவளை அப்படி தானே தீண்டி, தூண்டி, துலங்க வைத்து விட்டு இறுதியில் தீயில் தள்ளி விடுகிறான் ஒவ்வொரு முறையும். அதை அவனே சொல்ல முணுக்கென்று கண்ணீர் நிரம்பி விட்டது.
அவளின் உணர்வுகளை நன்கு புரிந்துக் கொண்டவன், தன் வார்த்தையாலே அவளை கோர்த்து நிறுத்தினான். அவனுக்கு அவளை வம்பிழுக்க தோன்றவில்லை தான். ஆனால் சீண்டி விட தோன்றியது. ஆனால் அவளின் கண்ணீரை பார்த்து தன்னை அடக்கிக் கொண்டவனின் கண் முன் அவள் கோரிக்கை வந்தது.
பெருமூச்சு விட்டவன் அவளின் கையை சுண்டி இழுக்க, அவனின் மீது வந்து விழுந்தாள் பெண்ணவள்.
அப்படி வந்து விழுந்தவளை தனக்குள் மீண்டும் சுருட்டிக் கொண்டான்.
“ப்ளீஸ்.. நீங்க ஒவ்வொரு முறையும் நெருங்கி வந்து, ஏதேதோ செய்து விட்டு, கடைசியா தீயில தள்ளி விடுறீங்க.. இது வேண்டாம். அதுக்கு பேசாம என்னை தொடாமலே இருங்க” என்று அவள் சொல்ல, அவளின் ஒவ்வொரு சொற்களும் அவனின் இதழ்களுக்குள் போய் தான் முடிந்தது.
அவள் சொன்ன எதையும் அவன் காது குடுத்து கேட்கவில்லை. மாறாக அவளை தன் விருப்பம் போல வளைத்துக் கொண்டான்.
“சொன்னா புரியாதா? ப்ளீஸ் என்னை விடுங்க” கண்ணீருடன் அவனிடம் கெஞ்சினாள். அவளது கண்ணீர் அவனை கொஞ்சமும் அசைக்கவில்லை. மாறாக அவளின் கோரிக்கை மட்டுமே அவனின் நெஞ்சில் இருக்க, அவளின் கொர்ரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்ய தொடங்கினான் போல..
மிக தீவிரமாய் அவளின் இதழ்களில் அவன் முத்தம் வைக்க, எப்பொழுதும் தாக்கும் மின்சாரம் இந்த முறையும் இருவரையும் ஒருங்கே தாக்கியது. அவனது இந்த மின்சார முத்தங்கள் அனைத்தும் அவளை அடியோடு வீழ்த்த செய்ய அவளால் நிற்க கூட முடியவில்லை. பலமிழந்தவள் போல தள்ளாட, அவளை தடுமாற விடாமல் தன்னோடு சேர்த்து அணைத்தவன் அவளை அப்படியே தரையில் சரித்தான்.
அவளின் மீது வன்மையாக பரவி படர அழுத்தமாக கண்களை மூடிக் கொண்டாள் தயாழினி.
--
கையில் புடவையோடு நடுங்கும் உள்ளத்தோடும் உடலோடும் திகைத்து நின்று இருந்தார்கள் குறிஞ்சியும் பிறையும்.
“என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். நேரமாகுதுல்ல. போய் குளிச்சுட்டு சட்டு புட்டுன்னு கிளம்புங்க.. ஒன்னு ஒன்னையும் சொல்லிட்டே இருக்கணுமா மருமவளுங்களே. உங்களுக்கே தெரியவேணாமா? என்ன மலரு நீயும் திகைச்சு போய் நின்னுட்டு இருக்க.. கல்யாணம் ஆனா அடுத்த கட்டும் இது தானே.. மலைச்சு போய் நிக்காம ஆக வேண்டிய காரியத்தை பாரு” என்று மலருக்கு மட்டும் அல்லாது அவரின் இரு மகள்களுக்கும் சேர்த்தே குட்டு வைத்தார் பொன்மாரி.
அவர் அப்படி சொல்லவும் சுதாரித்த மலர்,
“இதோ அண்ணி பிள்ளைங்களை தயார் செய்யிறேன்” என்று சுதாரித்தவர், மளமளவென்று இரு பெண்களையும் குளிக்க அனுப்பி புடவை கட்டி வந்த பிறகு அவர்களை மிதமாக அலங்கரித்தார் மலர்.
பொன்மாரி கை நிறைய பூவோடு வார, அதை வாங்கி மகள்கள் இருவருக்கும் நான்கு நான்கு சரம் வைத்து விட்டு தள்ளி நின்று பார்த்தார். இரு பெண்களும் அவ்வளவு அம்சமாக இருந்தார்கள்.
“சும்மா சொல்லக்கூடாது மலர் உன் மூணு பொண்ணுங்களும் விளக்கி வச்ச பித்தல சிலை தான்” நெட்டி முறித்தார் பொன்மாரி.
குறிஞ்சிக்கும் பிறைக்கும் அடிவயிற்றில் சொல்ல முடியாத பயம் எழுந்தது. காலையில் ஏற்பாடு செய்த திருமணத்தையே அவர்களால் இன்னும் நம்ப முடியவில்லை. ஏன் ஏற்கவே முடியவில்லை. இதில் இன்றைக்கு சடங்குக்கு வேறு ஏற்பாடு செய்ய தளர்ந்துப் போனார்கள் வெகுவாக.
அடிவயிற்றிலும் நெஞ்சிலும் அப்படி ஒரு பயம் அப்பிக் கொண்டது. கண்களில் இருந்து கண்ணீர் இப்ப விழவா அப்புறம் விழவா என்று வேறு பயமுறுத்த, இரு பெண்களாலும் சுத்தமாக முடியவில்லை.
பால் சோம்பு வேறு அவர்களிடம் நீட்ட, அச்சத்தின் அளவு நீண்டுக் கொண்டே போனது.
பொன்மாரி மற்றும் மலர் இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு அவரவர் கணவன்மார்கள் இருக்கும் அறைக்கு கிளம்பினார்கள்.
தயாகரன் தயாழினியை அழைத்துக் கொண்டு சென்ற பிறகு தங்களின் பொருள்களை எடுத்துக் கொண்டு பொன்மாரி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்று விட்டார் எல்லோரையும். அங்கு வைத்து தான் இந்த சடங்குகள் எல்லாம் நடைபெற ஏற்பாடு ஆனது.
மலரும் சந்தானமும் கிளம்புறோம் என்று சொல்ல, அவர்களை போக விடாமல்,
“எனக்கு மட்டும் யாரு இருக்கா? மூணு பிள்ளைங்களையும் கட்டி குடுத்துட்டு இப்படி ஒண்டியா உங்களால எப்படி இருக்க முடியும். அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நீங்க ரெண்டு பேரும் இங்கனயே இருங்க” என்று சொல்லி விட்டார்.
மலருக்கும் போக விருப்பம் இல்லை தான். ஏனெனில் மகள்களை இப்படி முன்ன பின்ன தெரியாதவர்களுக்கு கட்டி குடுத்து விட்டு அவர்கள் எப்படி இருப்பார்களோ என்ன செய்வார்களோ என்று வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருப்பதற்கு பதிலாக பிள்ளைகளோடே இருந்து விட்டால் நலமாக இருக்கும் என்று எண்ணி இருந்ந்தர்.
என்ன இருந்தாலும் இந்ந்த கொஞ்ச நாட்களில் பொன்மாரி குடும்பத்தை பற்றி மலருக்கு என்ன தெரிஞ்சு இருக்கும். ஒன்றுமே இல்லையே. அதனால் தயக்கமாக இருந்தது.
பெரிய மகள் திருமணம் தான் அவசர அவசரமாக நடந்து முடிந்தது என்றால், மற்ற இரு மகள்களின் திருமணமும் அவ்வாறே நடக்க உள்ளுக்குள் பெரிதும் கலங்கிப் போனார்.
“எதுக்கு இவ்வளவு அவசரம்.. பொறுத்து செய்துக்கலாமே..” என்றவரின் பேச்சை கேட்க அங்கு யாருமே இல்லை. அதோடு தயாகரன் முடிவென்றால் அதை மற்ற அந்த வீட்டில் யாருக்கும் துணிவு இல்லை. அவனின் விருப்பம் போல பொன்மாரி நடந்துக் கொண்டார்.
கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு, மலர் இரு பெண்களுக்கும் அறிவுரை சொல்ல,
“அதெல்லாம் அவளுங்க பார்த்துக்குவாங்க.. நீ போய் செத்த நேரம் படுத்தா.. காலையில இருந்து ஓடிக்கிட்டே இருக்க..” என்று மலருக்கும் அவளது கணவனுக்கும் தூக்கா மாத்திரை கலந்த பாலை கொடுத்து விட்டார்.
இருவரும் அதை குடித்து விட்டு ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றார்கள்.
“இன்னைக்கும் தூக்க மாத்திரை குடுக்கணுமா பொன்னு?” என்று ஆதங்கமாய் சிவலிங்கம் கேட்க, பெருமூச்சு விட்டவர்,
“அவ மனசு அலை பாய்ஞ்சுக்கிட்டே இருக்குங்க.. நிம்மதியா தூங்கி எழுந்தாலே பாதி குழப்பம் தீரும். அதுக்காக தான்..” என்றார்.
“சரி நீ வா.. காலெல்லாம் வீங்கி இருக்கு பாரு.. நான் அழுத்தி விடுறேன்” என்று பொன்மாரிக்கு சிவலிங்கம் கால் அழுத்தி விட தொடங்கினர்.
இந்த வீடு சிவலிங்கத்தின் பாரம்பரியமான வீடு.. இந்த வீடு மூன்று அடுக்கை கொண்டது. கீழ்த்தளம் பொன்மாரிக்கும், முதல் தளம் குணா மற்றும் பிரபாவுக்கும், மேல்தளம் மொத்தமும் தயாகரனுக்கும் ஒதுக்கி இருந்தார்கள்.
அதில் குணாவுக்கு ஒதுக்கி இருந்த பகுதியில் அவனுக்குரிய அறையில் நடுங்கிய தேகத்தோடு காலடி எடுத்து வைத்தாள் குறிஞ்சி.
படுக்கையில் அமர்ந்து இருந்த குணா உள்ளே வந்தவளை விழி அகலாது பார்த்து பெருமூச்சு விட்டான். அவசர கல்யாணம் என்றாலும் அவனுக்கு அவளை பிடிக்குமே. என்ன தான் அண்ணன்காரன் அவளை விட்டு தள்ளி நிற்க சொன்னாலும் மனதால் அவளை மிகவும் நெருங்கி இருந்தான்.
லேசான அலங்காரத்தோடு வந்து நின்றவளை இரசனையுடன் பார்த்தவன், தானே எழுந்து போய் கதவை அழுத்தி தாழிட்டு வந்து அவளிடம் நின்றான்.
அவனது கையில் பால் சொம்பை நீட்டியவள், எடுத்த உடனே “எனக்கு கொஞ்சம் நேரம் வேணும்.. என்னால உங்களை இப்படி திடுதிப்பென்று அக்சப்ட் பண்ண முடியல.. சோ ப்ளீஸ்” என்று சொல்லி மெத்தையில் இருந்ந்த ஒரு போர்வையையும் தலையணையையும் எடுத்து தரையில் விரித்தவள் படுத்துக் கொண்டாள். படுத்த நிமிடம் கண்களையும் மூடிக் கொண்டாள்.
மூடிய கண்களில் வழியே கண்ணீரும் கசிய, பெருமூச்சு விட்டவன் ஒன்றும் சொல்லாமல் அறையின் விளக்கை அனைத்து விட்டு, தானும் ஒரு தலையணையை எடுத்து அவளுக்கு அருகில் போட்டவன் அவளை ஒட்டி படுத்துக் கொண்டான்.
அவன் இப்படி தன்னை நெருங்கிப் படுப்பான் என்று அறியாதவள் திகைத்துப் போனாள்.
“என்ன பண்றீங்க?” அதிர்ந்து எழுந்தே அமர்ந்து விட்டாள்.
சொகுசாக இரு கையையும் தலைக்கு மேல் வைத்து படுத்து இருந்தவன் விழிகளை மட்டும் அவள் புறம் நகர்த்தி,
“கல்யாணம் பண்ணிட்டு தனியா படுக்க நான் ஒன்னும் துறவி கிடையாது... உன்னால முடியலைன்னாலும் என்னை அக்சப்ட் பண்ணி தான் ஆகணும்.. உனக்கு வேற வழி கிடையாது. ரொம்ப முரண்டு பண்ணாம வா...” என்றவன் தலைக்கு அடியில் இருந்த ஒரு கையை எடுத்து அவளின் கையை பிடித்து சுண்டி இழுக்க, ஏனோ தானோ வென்று அமர்ந்து இருந்தவள் மொத்தமாக அவன் மீது விழுந்து வைத்தாள்.
விழுந்தவளை அப்படியே வளைத்துப் பிடித்துக் கொண்டவன் அதன் பிறகு அவளுக்கு நடத்திய பாடம் எல்லாம் இதுவரை அவள் அறியாத பாடங்கள் தான்.
திகைத்துப் போனவள் சுதாரிக்கும் முன்பே அவளை மொத்தமாக தன் ஆளுகைக்குள் கொண்டு வந்து இருந்தான்.
“ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சிய கெஞ்சல்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் போனது. மெதுவாகவே அவன் குறிஞ்சியை வழிநடத்தி சென்றான். அவனது தொடர் முத்தங்களில் அவள் தான் நிலை குலைந்துப் போனாள்.
“வேணாமே” என்றவளின் எதிர்ப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது. விழிகளை அழுத்தமாக மூடிக் கொண்டவளின் இமைகளில் மீசை உரச முத்தம் வைத்தவன், கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் உடைகளை கலைத்து தன்னை மட்டுமே அவளின் உடையாக உடுத்த வைத்தான்.